PDA

View Full Version : பூகம்பம் வருவதற்கு முன்



tnkesaven
14-01-2013, 07:05 AM
பூகம்பம் வருவதற்கு முன்
• நில நடுக்கம் ஏற்படுவதற்கு பல நாள்களுக்கு முன்னதாகவே எறும்புகள் சாரை சாரையாகச் சென்று உணவை சேமித்து வைக்கும்.

• வளை தோண்டி பொந்துகளில் வசிக்கும் எலி, மூஞ்சூறு, பாம்பு, தவளை போன்ற விலங்குகள் வளையை விட்டு வெளியேறிவிடும்.

• மீன்கள் தண்ணீரின் மேல் மட்டத்துக்கு வந்து கண்டபடி ஓடும்; எகிறிக் குதிக்கும்.

• மூஞ்சூறுகள் மது அருந்தியதைப் போன்று தள்ளாடும், வலிப்பு வந்ததைப் போல உடலை முறுக்கிக் கொள்ளும்.

• பன்றிகள் அலையும், அடுத்த பன்றிகளின் வாலைக் கடிக்கும்.

• பூனைகள் குறுக்கு நெடுக்காக ஓடும்.

• நாய்கள் இருப்புக் கொள்ளாமல் ஊளையிடும். தரையை பரபரப்பாக சுரண்டும். ஓர் இடத்தில் நிற்காமல் முன்னும் பின்னுமாகத் திரியும். பழகியவர்களைப் பார்த்ததும் ஓடிவந்து ஒட்டிக்கொண்டு நகராமல் முரண்டு பிடிக்கும்.
(ஆண்டி மைக்கேல் } என்ற மிருக ஆராய்ச்சியாளர்
கூறுகிறார்)