PDA

View Full Version : அழுகை ..!



vasikaran.g
13-01-2013, 06:33 AM
அழுகை ...!
விசை மாற்றத்தின்
மொழி மாற்றம் !

கண்ணின் நீர் !
பெண்ணின் ஆயுதம் !
பேயும் தோற்கும் !

தன்னம்பிக்கையின் இறப்பு ,
அல்லது தற்காலிக இழப்பு !
தண்ணீர் துளிகளின் படையெடுப்பு
கண்ணீர் என
பெயரிட்டு அழைப்பு !

உப்பு தண்ணீர் ,
உதட்டை தொடும்
முன்னர் உறைந்துவிடும்
கொல் நீர் !

உப்பு தண்ணீர் ,
தப்பு உரைக்கும் பொழுதும் வரும் !
பிறர் எடுத்து உரைக்கும்
பொழுதும் வரும்
நல உளம் இருந்தால் !

அழுகை !
கையை அழுக்காக்கும் !
மனதை இளகாக்கும் !
அழுவோரின் நோக்கத்தை
இலகுவாக்கும் !
அனுதாபப் பட்டோரின்
மனதை இலக்காக்கி
வெற்றியை தனதாக்கும் !

அழுகை ..!
மெய்யை பொய்யாக்கும் !
பொய்யை மெய்யாக்கும் !
அறிவை மழுக்கும்
தெறிவையின் தேர்ந்த உத்தி !

பெண்ணின் அழுகை !
பேராபத்தின் வருகை !
கூர் ஆயுதத்தாலும்
யாராலும் தடுக்க முடியாதது !

jayanth
14-01-2013, 02:22 AM
நன்று...நன்று...

வசீ...

பென்ஸ்
14-01-2013, 04:33 AM
ஆழுகை...
ஐந்து அடிப்படை உணர்வுகளில் ஒன்று...
அதை வேளிப்படுத்தும் இடம், பொருள் ஏவல் பொறுத்து அதன் விளைவு அமையும்...

ஆனால் கண்ணீர் அழுகையில் மட்டுமே வருமா என்ன..???

மேற்பார்வையாளர்களே: இதை குறுங்கவிதைகள் பகுதிக்கு மாற்றலாமே...

vasikaran.g
02-02-2013, 04:56 AM
நன்றி ஜெயந்த் ..

vasikaran.g
02-02-2013, 05:04 AM
நண்பர் பென்ஸ் அவர்களுக்கு ,

உங்கள் கருத்துக்கு நன்றி.

என் கவிதையில் அழுகையில் மட்டுமே கண்ணீர் வரும் என்று கூறவில்லை ஆனால் அழும்போது வரும் கண்ணீருக்குத்தான் வலிமை அதிகம் . ஆன்நந்த கண்ணீர் வரும் நேரமும் குறைவு ,அந்த உணர்வின் இருப்பு கால அளவும் குறைவு .. உண்மைதான் அழுகை என்பது ஒரு உணர்வு .உணர்ச்சியின் வடிகால் .

இது குறுங் கவிதை பகுதிக்கு மாற்ற படவேண்டியது என்பதையும் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை .

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி .தொடர்ந்து கருத்து கூறுங்கள் .