PDA

View Full Version : தமிழும் தமிழரும் தமிழர் நாடும் பிடிக்கும்



A Thainis
12-01-2013, 12:27 PM
தமிழும் தமிழரும் தமிழர் நாடும் பிடிக்கும் - என்ற தலைப்பில் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு தமிழ் நிலம் மற்றும் தமிழர் வரலாறு, ஆகியவற்றை உங்களோடு புதுக்கவிதை வடிவில் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழர் பெருவிழாவாம் பொங்கல் பெருவிழாவிற்கு எனது இந்த புதிய தொடர் கவிதை படைப்பை சமர்ப்பிகின்றேன்.

தமிழ் நுழை வாயில்

நாகரிகம் நாடி மனிதம் தேடி
மானிடர் மலைகளிலும் குகைகளிலும்
குடிபெயர்ந்து வாழ்ந்த போதும் காடுகளில்
கனிந்த கனிவகைகளை சேகரித்தும்
விலங்குகளை வேட்டையாடி உண்டு உளம்களிந்தபோதும்
நாவில் தமிழ் சொல்லெடுத்து உறவாடிய
முதல் மனிதன் மூத்த மனிதன் அந்த முதல் தமிழனை பிடிக்கும்

கடல் கொண்ட குமரிகண்டம்
மானிடர் தோன்றிய முதல் கண்டம் - அங்குதான்
தமிழன் முதல் நாகரிகம் கண்டான்
நாடுகள் எழுவத்திரெண்டுக் கொண்டு
வேற்றுமை இல்லா உலகம் கண்டு
ஒற்றுமை என்பதே நமது எழுச்சியென்று
அதை பண்பாடாய் பாரெங்கும் சாற்றிய
உலகின் மூத்த குடியாம் தமிழ்க்குடி பிடிக்கும்.

ஆழிபேரலையில் குமரி கண்டமே காணமல் போக
மாண்டவர் ஏராளம் மீண்டவரோ கொஞ்சம் - அவர்
புலம் பெயர்ந்த தமிழராய் பூகோலமெங்கும் திரிந்து
பல இனங்களாய் பிரிந்து கலா ஓட்டத்தில்
தமிழின் உச்சரிப்பு மறந்து சூழ்நிலைக்கு உகந்து
புதிய ஒலிவடிவில் எண்ணற்ற மொழிகள் கண்டான்
வாழ்வில் பல ஏற்றங்களை கண்டான் - இன்றும்
குமரி கண்டத்தின் எச்சமாய் மிஞ்சிய தமிழகம் மட்டுமே
முதல் மனிதனின் வழித்தோன்றலாய் தமிழ் கொடிபிடித்து
தரணியெங்கும் முதல் சொல் தமிழ் சொல் காத்திட
துடிக்கும் தன்மானத் தமிழர் யாவரையும் பிடிக்கும்

தென்கோடியில் இந்திய பெருங்கடல்
மேற்கு கரையில் அரபிக்கடல்
கிழக்கே முகம் பார்க்க வங்ககடல்
வடக்கே திருத்தணி என திசை காண்பிக்க
தமிழர் நிலம் தமிழகம், ஈழம் - என
இருதாயகங்களை கொண்டு இந்தியா, இலங்கை - என
இரு நாடுகளில் பிரிந்து இருந்தாலும் - நாம் தமிழரன்றோ
உணர்வால் இணைவது இதயம் மகிழ பிடிக்கும்.

jayanth
12-01-2013, 01:29 PM
உங்களுக்குப் பிடித்திருந்தது எனக்கும் மிகவும் பிடிக்கும்...!!!

கும்பகோணத்துப்பிள்ளை
12-01-2013, 07:02 PM
தமிழ் இதமிழ்து என்றாலே பிடிக்கும்
இதை தோழர் தைனிஸ் எழுதினாலோ
ரொம்ப பிடிக்கும் படிக்க!..

ஜான்
13-01-2013, 12:43 AM
இனிமையாய் இருக்கிறது வாசிக்க

காலம் மாறுகிறது ..

கூர்ந்து கவனித்து நம்மை ஒன்று படுத்திக் கொள்ளாமல்

ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறோம்

தண்ணீராய் இழந்துவிட்டோம் நமது இயற்கை வளங்கள் வெளியேறுகின்றன

யாரும் அக்கறையின்றி இருக்கிறோம்

திராவிடக் கட்சிகளின் மாயையில் தமிழன் என்று வெற்று மாயைப் பெருமிதத்தில் திரிகிறோம்

உலகத் தமிழர் முழுவது ஒன்று படுத்தல் அவசியம் !!

ஜானகி
13-01-2013, 01:19 AM
பிடித்தவற்றையெல்லாம் கெட்டியாகப் பிடித்துவைத்துக்கொள்ள பாடுபடுவோம் !

A Thainis
13-01-2013, 08:05 AM
அழகான தெளிவான பின்னோட்டம் இதயம் மகிழ பிடிக்க பிடிக்க பதிவு செய்த ஜெயந்த், கும்பக்கோணத்துபிள்ளை, ஜான், ஜானகி அவர்களுக்கு பாராட்டுக்கள் கலந்த நன்றிகள்.

A Thainis
13-01-2013, 08:15 PM
தமிழும் தமிழரும் தமிழர் நாடும் பிடிக்கும் -2

தமிழ்மொழி

இறைவனோடு இணைந்து தோன்றிட்டு
காலங்களை கடந்திட்ட பழமைமொழி
பன்முகம் கொண்டிட்ட பன்மைமொழி
நாளும் வீரிய நடைபோடும் கன்னிமொழி
என் தாய்மொழி செம்மொழி தமிழ்மொழி பிடிக்கும்.

இறைவனோடும் இவ்விகத்தோடும்
இணைந்து தோன்றிட்டு காலங்களை
கடந்து வாழ்ந்திடும் பண்பட்ட
பழமை மொழி தமிழ்மொழி பிடிக்கும்

அடர்காடுகளில் கரடுமலைகளில்
அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன்
இயற்கையோடு இணைந்து உறவாடி வடித்திட்ட
இயற்கை மொழி தமிழ்மொழி பிடிக்கும்

சொல்யொன்றை உயிர் ஓவியமாய்
யுகமதில் வாழும் காவியமாய்
சிந்தனையை கடைந்து படைத்து தீட்டிட்ட
தொன்மை மொழி தமிழ்மொழி பிடிக்கும்

தானே விதையுண்டு விருச்சகமாய்
வேரோடி ஆலமரமாய் தழைத்திட்டு
இலக்கண இலக்கியம் வளம் கொழுத்து
செழுத்திட்ட செம்மொழி தமிழ்மொழி பிடிக்கும்

தெலுகு கன்னடம் துளு மலையாளம்
என இருபத்தொன்பது புதுமொழி விழுதுகள்
தன்னிலே ஈன்றெடுத்து பிறமொழி கலவாது
உயர்தனி தமிழ் தாய்மை மொழி பிடிக்கும்

தமிழ் வேந்தர்களும் மாந்தர்களும்
சங்கங்கள் நிறுவிட சான்றோர்கள் இயிற்றிட்ட
வாழ்வியியல் நூற்களால் கல்வி சிறந்திட்ட
நெறியியல் மொழி தமிழ்மொழி பிடிக்கும்

திருநூற்கள் குறளும் நாலடியும் சிலம்பும்
தெய்வ புலவன் திருவள்ளுவரையும்
தேன்கவி புலவன் கம்பனையும் வரமாக பெற்றிட்ட
சிறப்பு மொழி தமிழ்மொழி பிடிக்கும்

தமிழகம் ஈழம் தன் தாயகத்தில்
மலேயா சிங்கை மொரிசு பிஜு
என புலம்பெயர்ந்த பன்னாட்டில்தலைநிமிர்ந்து
புகழ்சேர் உலக மொழி தமிழ்மொழி பிடிக்கும்

கணிணியுகத்தில் தடம் பதித்து
அறிவியியல் மொழியாய் பரிணாமித்து
இணையத்திலும் புதுமை புரட்சி செய்து
நாளும் உயரும் நம் தாய் தமிழ் மொழி பிடிக்கும்

ஜானகி
14-01-2013, 12:23 AM
நித்தம் புதுமையாய்ப் பூக்கும் அழகுத் தமிழ்க் கவிதையும் பிடிக்கும்....வளர்க தமிழ்....ஓங்குக அதன் புகழ் !

jayanth
14-01-2013, 02:08 AM
இதைப் படித்ததும் ஒரு கணம் நானும் தமிழன்,என் தாய் மொழி தமிழ் என்ற கர்வம் மனதில் தோன்றியது...!!!

வாழ்க தமிழ்...!!!

அருமையான கவிதைக்கு நன்றி தைனீஸ்...!!!

A Thainis
16-01-2013, 07:02 AM
தமிழும் தமிழரும் தமிழர் நாடும் பிடிக்கும் -3

பழந்தமிழர்

இன்றைய பலநாடுகள் அன்று
காடுகளாக இருந்த காலத்தில் - அங்கு
வசித்த மானிடரெல்லாம் காடுகளில்
கற்கால மனிதராய் சுற்றிதிரிந்தபோது
இடுகாட்டில் இருந்த தமிழன் கூட
இலக்கிய நயத்தோடு இனியதமிழ் பேசினான்
பண்பாடு பாரெங்கும் பரவிட பண்பாட்டிற்கு
வடிவம் கொடுத்து அடித்தளம் இட்டவன்
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றுரைத்து
வேற்றுமையில் ஒற்றுமை பேணிட அழைக்கும்
தமிழர் பண்பாடு பிடிக்கும்.


பழந்தமிழர் வளர்த்த பெண்ணியமும் - அதில்
அவர் காத்த கண்ணியமும் தாய்மைக்கு
மேலான போற்றுதலும் பெண்ணை கொற்றவை
தெய்வமாய் வணங்கிய பண்பாடும் பிடிக்கும்
வடிவான முகம்கொண்ட
தமிழ் கடவுள் குமரன் பிடிக்கும் - அவன்
வீற்றிக்கும் ஆறுபடை வீடுகளில்
ஒன்றான திருபரம்குன்றமும் பிடிக்கும்.

சாதி சமயங்கள்யின்றி - தமிழ்
சகோதர சமத்துவ சமூகம் படைத்து
ஏழை பணக்காரர் வேற்றுமையின்றி
எல்லோருக்கும் எல்லாம் சொந்தம்
பொதுயுடமையில் தனிமனிதம் காத்து
உண்மை உழைப்பில் நம்பிக்கை வைத்து
குடியாச்சியும் முடியாச்சியும் நாட்டி
நல்ல பண்புகளை நாளும் வளர்த்து
பாரெங்கும் பறைசாற்றிய பழந்தமிழர் பிடிக்கும்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
பாலை - என ஐந்து வகை நிலங்களில்
உழைத்து, உண்டு உறவாடி மகிழ்ந்து
இத்தரணியில் தமிழுக்கு முகாந்திரம் தந்திட்ட - எம்
முன்னோர்களான பழந்தமிழர்களையும் - அவர்தம்
ஆயிரமாய் ஆண்டுகள் பண்பாடு
பெருமைக்கொண்ட - இம்மண்ணில்
நான் பிறந்திட்ட தமிழ்நாடு பிடிக்கும்.