PDA

View Full Version : சந்தோஷம்!!!



தாமரை
12-01-2013, 11:29 AM
உலகில் எல்லோரும்
எப்படியாவது ஒருவகையில்
என்னைச் சந்தோஷப்படுத்தி விடுகிறார்கள்

சிலர் வருவதின் மூலம்
சிலர் வராததின் மூலம்
சிலர் இருப்பதின் மூலம்
சிலர் இல்லாததின் மூலம்
சிலர் போவதின் மூலம்
சிலர் போகாததின் மூலம்..
சிலர் பார்ப்பதின் மூலம்
சிலர் பாராததின் மூலம்
சிலர் சொல்வதின் மூலம்
சிலர் சொல்லாததின் மூலம்
சிலர் கேட்பதின் மூலம்
சிலர் கேட்காததின் மூலம்
சிலர் அருகாமையின் மூலம்
சிலர் தொலைவின் மூலம்
சிலர் சிரிப்பின் மூலம்
சிலர் கோபத்தின் மூலம்
சிலர் அன்பின் மூலம்
சிலர் வெறுப்பின் மூலம்

சிலர்......
சிலர்....
சிலர்....
சிலர்...

மிச்சத்தை நிரப்பி

சிலர் சந்தோஷப்படுத்துவார்கள்..
இன்னும் சிலர் நிரப்பாமலும்...

jayanth
12-01-2013, 01:34 PM
மொத்தத்தில் நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள்...!!!

கொடுத்து வைத்தவர்...!!!

கும்பகோணத்துப்பிள்ளை
12-01-2013, 06:09 PM
எப்படியாவது ஒரு வகையில் உங்களால்
உலகில் எல்லோரும்
சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்!!!

வந்த சிலர் வராததின் மூலம்
வாரத சிலர் வந்ததின் மூலம்
இருந்த சிலர் இல்லாததின் மூலம்
இல்லாத சிலர் இருந்ததின் மூலம்
போன சிலர் போகாதிருந்ததின் மூலம்
போகாதிருந்த சிலர் போனதின் மூலம்
பார்த்த சிலர் பார்காதிருந்ததின் மூலம்
பாராதிருந்த சிலர் பார்த்ததின் மூலம்
..... சிலர்..... மூலம்
..... சிலர்..... மூலம்

மிச்சத்தை சிலர்
நிரப்பாதிருப்பதின் மூலம்
இன்னம் சிலர் நிரப்பியதின் மூலம்

கும்பகோணத்துப்பிள்ளை
12-01-2013, 06:13 PM
மொத்தத்தில் நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள்...!!!

கொடுத்து வைத்தவர்...!!!

ஏன்னா ஏதோ தீயிற வாசனை வர்ரது மாதிரின்னா இருக்கு!:lachen001:

ஜான்
13-01-2013, 12:45 AM
அதிகாலையில் இதைப்

படித்தேன்

தாமரை என்னை சந்தோஷப் படுத்திவிட்டார் !!

ஜானகி
13-01-2013, 01:15 AM
மிகவும் கொடுத்துவைத்தவர்தான்....எதற்கும் சந்தோஷப்படத் தெரிகிறதே !

jayanth
13-01-2013, 02:08 AM
ஏன்னா ஏதோ தீயிற வாசனை வர்ரது மாதிரின்னா இருக்கு!:lachen001:

இல்லைங்க KKP...!!!

மனம் இதமாகி காற்றிலே பறந்த உணர்வுங்க...!!!