PDA

View Full Version : டெல்லி நிகழ்வு - வெர்சன் 2lenram80
08-01-2013, 11:13 PM
நீ இன்னொரு காந்தி!
=================


மலரினும் மெல்லிய மலர்விழியின் மேல்
மலர் வளையம் வைக்க வைத்த மகா பாவிகளே!

இரை தேடி வந்த கயல்விழியை
இறைவனடி சேர வைத்த கயவர்களே!


சித்திரவதை கூடாது என்று தான்
கசாப்பு கடைகளில் கூட
உயிர் போன பின்பு தான் உடல் உரிப்பார்கள்!
சித்திர தேவதையை
உயிருடன் வைத்தே சிறுகுடல் இழுத்ததை நினைத்தால்
கதறாத மனசு கூட பதறுதடா!
அவள் என்ன பாடு பட்டளோ?
நினைத்தாலே நெஞ்சமெல்லாம் உதறுதடா!

இருபத்து நான்கு மணியும் இயங்கும் இக்காலத்தில்
இரவில் நடமாட்டம் எதற்கு என்பதெல்லாம்
இயலாதவர்களின் பிரதி வாதம்!

இரவா? பகலா? என்பதில்லை இங்கே விவாதம்!
தானுண்டு என்றிருந்தவளை
களி கொண்டு பின் தான் உண்டு
பின் இரும்பு உளி கொண்டு பலி செய்ய காரணம் என்ன?

தனித் தலைத் பத்து கொண்டவன்
தனித்தவளை களவு கொண்டு
தனி வலையில் வைத்த போதும்
வன்புணர்வு கொண்டதாய்
இதிகாசம் கூட இயம்பவில்லை!

உரிமை உள்ளவனே
ஒப்புதலோடு உறவு கொள்ளும் இந்தக் காலத்தில்
எந்த உறவும் இல்லாத உனக்கு
எப்படி வந்தது உரிமை?

துணையுடன் வந்த ஒரு
இணையைக் கெடுத்த நீங்கள்
விந்துத் துளியில் பிறந்தவர்களா?
இல்லை
எவனாவது காரித்
துப்பிய சளியில் பிறந்தவர்களா?

பசி, துக்கம், கோபம் போல அதுவும் ஒரு உணர்வு!
அடக்கு என்று சொல்வது முட்டாள் தனம்!
அடக்கி ஆளக் கற்றுக் கொள்ளும் அறிவு மனம்!

தசைக்கேறிய ரத்தம் குறைக்க
தலைக்கேறிய பித்தம் கரைக்க
எத்தனையோ வழிகள் நித்தம் இருக்க
வள்ளியினத்தை வல்லினத்தோடு சிதைப்பது
பழ ரசம் இருக்க பாதரசம் குடிக்கச் சமம்!
மாங்கனி இருக்க மலம் அள்ளித் தின்கச் சமம்!

எலும்பே இல்லாமல் ஏன் சில பாகங்கள்?
என்றாவது யோசித்ததுண்டா?
பெண்மையின் மென்மையைத் தொட
இன்னொரு தசையின் விசையே மிக அதிகம்!
ஆனால் நீ,
கடப் பாரை வைத்து கடைந்து இருக்கிறாய்!

கோழி ஏறும் சேவல் பார்த்தே சிவந்த நான்
என் தோழியைத் தொட்ட செய்தியை கேட்டு
எப்படி பொறுப்பேன் என்று எதிர்ப்பார்த்தாய்?

தனி மனித ஒழுக்க வட்டமும்
எல்லை மீறாத மனக் கட்டமும்
செய்த தவறுக்கு சரியாக தண்டிக்கும் சட்டமும்
பெண்மை போற்றும் பாடத் திட்டமும்
இப்படி ஒன்றை இனியாவது தடுக்கட்டும்!

பன்னிகள் இந்த ஆறு பேரிடமும்
பன்னிரெண்டு சிறு நீரகங்கள்!
பண்ணி மாட்ட முடியாத
பன்னிரெண்டு செந்நீரகங்கள்! (இதயம்)
உள்ளுறுப்பு வேண்டுவோர்கள்
உருவி செல்ல வாருங்கள்!

தவறான இடத்தில் தவறான நேரத்தில்
சரியாக மாட்டிய எங்கள் சகோதரியே...
நீ சாகவில்லை!

திருப்பி அடிப்பவனை விட
வலி பொறுப்பவனின் மனவலிமை அதிகம் எனக் காட்டி
சுதந்திரத்திற்குப் பின்
வன்முறைக்கெதிராய் எங்களை
ஒன்றாய் வலம் வர வைத்த...

நீ இன்னொரு காந்தி!
உன் ஆத்மா அடையட்டும் சாந்தி!
அதற்காக நிற்கிறோம் விளக்கேந்தி...!

M.Jagadeesan
09-01-2013, 10:18 AM
வன்புணர்ச்சிக்கு வன்முறையே தீர்வு என்பதைச் சொல்லும் கவிதை. உறுப்புக்கு உறுப்பு கொடுத்தல் பக்தியின் முற்றிய நிலை என்றால் ( கண்ணப்பன் ), உறுப்புக்கு உறுப்பு எடுத்தல் வன்புணர்ச்சிக்குத் தீர்வாகும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டாலும், கவிதையில் ஆபாசம் சற்று தூக்கலாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

lenram80
09-01-2013, 01:59 PM
பின்னூட்டத்திற்கு நன்றி ஜெகதீசன்.

எரி தழல் கொண்டு வா தம்பி! அண்ணன் கையை எரித்திடுவோம்! ( பாஞ்சாலி சபதம்)

பாதகம் செய்பவரைக் கண்டால்...மோதி மிதித்து விடு பாப்பா! (பாப்பா பாட்டு)

இங்கே யெல்லாம் பாரதி சொல்லும் போது, அவன் வன்முறையை தூண்டவில்லை. மாறாக வன்முறையை தாங்க முடியாமல்
கொதித்து ஒரு தீர்வு வேண்டும் என்பதற்காக எழுதியவை. அதைப் போல இந்தக் கவிதையை எழுதும் போது, தோழி என்று ஆரம்பித்து முடிக்கும் போது
சகோதரி என்று போது... என் நெஞ்சத்தில் ஒரு படபடப்பு. ஒரு அதிர்ச்சி. என்ன மன நிலையில் அவர் இருந்தாளோ என்று?

என்னைப் பொறுத்த வரையில் இது வன்புணர்வு மட்டும் இல்லை. அதையும் மீறிய கொடுமையான செயல்.
வன்புணர்வுக்கு எதிராக எழுதும் போது எப்படி சொல்ல வேண்டியவற்றை சொல்லாமல் முடியும்?
நடந்ததோ ஆபாசத்தின் உச்சக் கட்டம்! அதை எதிர்த்து எழுதும் போது, கட்டுப் படாமல் வந்த வரிகளை என்ன செய்வது?

அதனால் தான் நானே இப்படி 2 வரிகளை எழுதினேன்.இதுவரை நான் எந்தக் கவியும் இப்படி
எல்லை மீறி எழுதியதில்லை!
ஏனெனில் இதுவரை எந்த நிகழ்வும் இப்படி
எல்லை மீறி நடந்ததில்லை!


நான் இதை ஆபாசம் என்று சொல்ல மாட்டேன். எல்லை மீறினேன் என்று தான் சொல்வேன். விலங்கியல்( ஜுவாலஜி) படிக்கும் போது, அத்தனை உறுப்புகளையும் படம் வரைந்து பாகம் குறித்திருப்பார்கள். இது ஆபாசமா? அதைப் போலத் தான் என் கவியும் என்று நினைக்கிறேன்.

கும்பகோணத்துப்பிள்ளை
10-01-2013, 02:03 AM
காமமும் கலவியும் கற்பியல் இயல்புகள் என்பதையுணர்ந்து அதற்க்குண்டான அங்கிகாரம் கொடுத்து அதற்க்கு காவியமே படைத்தவர்கள் நம்முன்னோர்.
இதைப்பற்றிய அறிவில்லாமல் சரியான வழிகாட்டுதலில்லாமல் எத்தனையோ இளைஞ்சர்கள் கெட்டு சீரழிந்து
வக்கிரப்பட்டு மனமுதிர்ச்சியடையாமல் பல்வேறு பாலியல் கொடுமைகளை அந்தரங்கத்திலும் நானம்கெட்டுப்போய்
நாய்களைப்போல் நடுத்தெருவிலும் அரங்கேற்றுகிறார்கள். பெரும்பாலோர் இதைப்பற்றி அரைகுறை அறிவே பெற்றிருக்கிறார்கள்
இந்த இளைஞ்சர்கள் மட்டுமல்ல அதிகாரத்திலுள்ளோரும், குறிப்பாக இராணுவம் மற்றும் காவல்துறையிலுள்ளவர்கள்
இத்தகைய பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றியுள்ளார்கள். இக்கொடுமைகளெல்லாம் சிலநேரங்களில் வெளிப்பட்டும் பலநேரங்களில் வெளிப்படுத்தப்படாமல் அமுக்கப்பட்டும் பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. தாங்கள் துங்கியெழுந்து இதுவே முதல் முறையென்பதுபோல்


இதுவரை நான் எந்தக் கவியும் இப்படி
எல்லை மீறி எழுதியதில்லை!
ஏனெனில் இதுவரை எந்த நிகழ்வும் இப்படி
எல்லை மீறி நடந்ததில்லை!

என்பதாகச்சொல்கிறீர்கள். அதுபோகட்டும்!

அதே சமயத்தில் உங்களின் நியாமன உணர்வெழுச்சியையும் மதிக்கிறேன்.

இதன்பொருட்டு நீங்கள் வீசிய வீச்சான வரிகள் சில


சித்திரவதை கூடாது என்று தான்
கசாப்பு கடைகளில் கூட
உயிர் போன பின்பு தான் உடல் உரிப்பார்கள்!


பசி, துக்கம், கோபம் போல அதுவும் ஒரு உணர்வு!
அடக்கு என்று சொல்வது முட்டாள் தனம்!
அடக்கி ஆளக் கற்றுக் கொள்ளும் அறிவு மனம்!


காடு வரை வந்தவளை களவு கொண்ட
பண் தலைமுறை உலகு கூட
வெண் வளர்பிறைச் சீதையை
பூந் தனிச்சிறை வைத்ததே தவிர
வன்புணர்வு கொண்டதாய்
இதிகாசம் கூட இயம்பவில்லை!

உரிமை உள்ளவனே
ஒப்புதலோடு உறவு கொள்ளும்போது...
எந்த உறவும் இல்லாத உனக்கு
எப்படி வந்தது உரிமை?உங்கள் கவிமன(ண)ம் காட்டுபவையாகவும் பாராட்டுக்குரியனவாகவும் உள்ளன!

அதே சமயம்


அந்தரங்க குழல்களில் அணு குண்டை வைத்தால் என்ன?

சிறு நீர் போக மட்டும் சின்ன குழாய் வைத்துவிட்டு
உயிர்நிலையை உருத் தெரியாமல் சிதைத்தால் என்ன?


கையோடு நிறுத்து! - அல்லது
.....
அடக்கவே முடியாவிட்டால் அறுத்து வீசு!

என்ற வரிகளைக்கொண்டே ஜெகதீசன் அவர்களும் ஆபாசமும் வண்முறையும் இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளாரென கருதுகிறேன்.

வன்முறை தீர்வல்ல என்பதையும் அதற்குண்டான மிகச்சரியான தீர்வென


தனி மனித ஒழுக்க வட்டமும்
எல்லை மீறாத மனக் கட்டமும்
செய்த தவறுக்கு சரியாக தண்டிக்கும் சட்டமும்
பெண்மை போற்றும் பாடத் திட்டமும்
இப்படி ஒன்றை இனியாவது தடுக்கட்டும்! என்ற வரிகள் முலமாக தாங்கள் அறிந்ததே என்றுனரமுடிகிறதுஃ


மேலும்


சிறு வயதில் நான் வளர்த்த கோழியை
தெரு முனையில் துரத்திய சேவலையே
கரு நாகத்துக்கு காவு கொடுத்த நான்


என்ற வரிகளில் இயற்கையான நிகழ்வுகளையே ஆத்திரகோணத்தில் பார்திருப்பதாகத்தான் கருதமுடிகிறது.

ஆற அமர சிந்தித்து
ஆத்திரத்தில் சிதறிய வரிகளையும்
வசப்படுத்தி எல்லைக்குள் கொண்டுவந்தால்
இன்னமும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

lenram80
10-01-2013, 03:43 PM
கும்பகோணத்துப் பிள்ளை அவர்களே... உங்களின் ஆக்க பூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி. வன்முறை வார்த்தைகளையும், ஆபாசம் என்று நீங்கள் சொல்லும் (என்னைப் பொருத்த வரையில் ஆபாசம் என்பது அது எங்கு கையாளப்படுகிறது என்பதைப் பொறுத்தே என்று ஏற்கனவே என் முதல் பின்னூட்டத்தில் சொல்லி உள்ளேன்) வரிகளையும் களைந்து விட்டு வெர்சன் 2 ஆக மாற்றி உள்ளேன்.

கும்பகோணத்துப்பிள்ளை
10-01-2013, 05:44 PM
கும்பகோணத்துப் பிள்ளை அவர்களே... உங்களின் ஆக்க பூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி. வன்முறை வார்த்தைகளையும், ஆபாசம் என்று நீங்கள் சொல்லும் (என்னைப் பொருத்த வரையில் ஆபாசம் என்பது அது எங்கு கையாளப்படுகிறது என்பதைப் பொறுத்தே என்று ஏற்கனவே என் முதல் பின்னூட்டத்தில் சொல்லி உள்ளேன்) வரிகளையும் களைந்து விட்டு வெர்சன் 2 ஆக மாற்றி உள்ளேன்.

அப்கிரேடட் வெர்சன் அசத்தல்.....


தசைக்கேறிய ரத்தம் குறைக்க
தலைக்கேறிய பித்தம் கரைக்க
எத்தனையோ வழிகள் நித்தம் இருக்க
வள்ளியினத்தை வல்லினத்தோடு சிதைப்பது
பழ ரசம் இருக்க பாதரசம் குடிக்கச் சமம்!

பன்(ண்)பட்ட வரிகள்! பாராட்டுகள்!