PDA

View Full Version : உனதின்மை



ஆதி
08-01-2013, 06:24 AM
ஒழுங்கற்று சிதறிகிடக்கும்
இந்த வீட்டின் பொருட்களை
சீர்ப்படுத்த* தேவைப்படும்
ஒரு நாள்

பயனின்மைகளின் தூசி படிந்திருக்கும்
சமயலறை பாத்திரங்களை
துலக்கி போட வேண்டும்

மூலைநாற்காளியில் குவிந்திருக்கும்
துவைத்து போட்ட துணிகளை
மடித்து வைக்க வேண்டும்

சுருங்கிக்கிடக்கும் இந்த
படுக்கைவிரிப்பை சரிசெய்ய*
உத்தேசித்து உத்தேசித்து
மறந்து கொண்டே இருக்கிறேன்

இலைநாவு உலர்ந்த தோட்ட*
செடிகளுக்கு தண்ணீரூற்ற வேண்டும்

என*து குப்பைக*ள் நிர*ம்பி வ*ழியும்
கூடையை காலி செய்ய* வேண்டும்

ப*றாம*ரிப்பின்றி இருக்கிறது
இந்த* வீட்டின் ஒன்றொன்றும்
அவ்வனைத்திலும் நீட்டி படர்ந்து
உறுத்தி கொண்டே இருக்கிறது
உனதின்மை

தாமரை
08-01-2013, 08:07 AM
ஒரு வரி விட்டுப் போச்சே ஆதி,.... :)

கும்பகோணத்துப்பிள்ளை
08-01-2013, 12:50 PM
ஒரு வரி விட்டுப் போச்சே ஆதி,.... :)
அடடா! அது என்னவரி:mini023: ஆதி

maniajith007
05-03-2013, 03:19 PM
அற்புதமான கவிதை ஆதி

சுகந்தப்ரீதன்
08-03-2013, 04:37 PM
கவிதையும் அதன் தலைப்பும் கனக்கச்சித்தம்... கலக்குற ஆதி..!!:icon_b:

ஒரு வரி விட்டுப் போச்சே ஆதி,.... :)
உண்மையா சொல்லுங்க.. விட்டுப்போனது ஒருவரி மட்டும்தானா..?!:icon_rollout:

ஜான்
09-03-2013, 03:10 AM
ஆதி படித்திருப்பார் நிச்சயம்

இல்லையெனில் முயலுங்கள் "யாதுமாகி நின்றாய் காளி "பாலகுமாரன் சிறுகதை

கீதம்
14-03-2013, 10:39 PM
ஒழுங்கற்று சிதறிகிடக்கும்
இந்த வீட்டின் பொருட்களை
சீர்ப்படுத்த தேவைப்படும்
ஒரு நாள்

பயனின்மைகளின் தூசி படிந்திருக்கும்
சமயலறை பாத்திரங்களை
துலக்கி போட வேண்டும்

மூலைநாற்காளியில் குவிந்திருக்கும்
துவைத்து போட்ட துணிகளை
மடித்து வைக்க வேண்டும்

சுருங்கிக்கிடக்கும் இந்த
படுக்கைவிரிப்பை சரிசெய்ய வேண்டும்

இலைநாவு உலர்ந்த தோட்ட
செடிகளுக்கு தண்ணீரூற்ற வேண்டும்

உனது குப்பைகள் நிரம்பி வழியும்
கூடையை காலி செய்ய வேண்டும்

பராமரிப்பின்றி இருக்கும்
இந்த வீட்டின் ஒன்றொன்றிலும்
நீட்டி படர்ந்து
உறுத்தி கொண்டே இருக்கிறது
எனது இருப்பின்மை என்னும்
உன் சால்ஜாப்பில் அறிகிறேன்
உனது பொறுப்பின்மை!

இனி அம்மாவீடு செல்லவே
அச்சமாகிறது எனக்கு,
அலங்கோலப்படுத்தப்படும்
நம் வீட்டின் நிலையை நினைந்து!:frown:

ஜான்
16-03-2013, 01:42 AM
ஓ!

கீதம் அவர்களின் சேர்க்கை வரிகளும் நல்லாத்தான் இருக்கு!!!

rema
16-03-2013, 03:44 AM
:) :) :)

கும்பகோணத்துப்பிள்ளை
16-03-2013, 06:47 PM
பராமரிப்பின்றி இருக்கும்
இந்த வீட்டின் ஒன்றொன்றிலும்
நீட்டி படர்ந்து
உறுத்தி கொண்டே இருக்கிறது
எனது இருப்பின்மை என்னும்
உன் சால்ஜாப்பில் அறிகிறேன்
உனது பொறுப்பின்மை!

இனி அம்மாவீடு செல்லவே
அச்சமாகிறது எனக்கு,
அலங்கோலப்படுத்தப்படும்
நம் வீட்டின் நிலையை நினைந்து!

நல்ல முத்தாய்ப்பு!