PDA

View Full Version : '' கருடன்...''



tnkesaven
08-01-2013, 03:55 AM
''கருடன்...''
கருட வாகன தரிசன பலன்.......

* ஞாயிறு - பாவங்கள், பிணி நீங்கும்.
* திங்கள் - சுகம் கிடைக்கும்.
* செவ்வாய் - துணிவு, மகிழ்ச்சி கிட்டும்.
* புதன் - எதிரிகள் நீங்கிச் செல்வார்கள்.
* வியாழன் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
* வெள்ளி - செல்வ வளம் பெருகும்.
* சனி - நம்பிக்கை ஓங்கும்.

வரலாற்றில் கருடன்.......

* சமுத்திர குப்தர்கள் பொன் நாணயங்களில் கருட முத்திரையை பதித்தார்கள்.

* சந்திரகுப்த விக்கி ரமாதித்யன் டெல்லியில் ஒரு கருட கம்பத்தை ஸ்தாபித்தான்.

* தேவகிரி யாதவர்களின் சின்னமும் கொடியும் கருடன் தான்.

* அமுத கலசம் தாங்கிய கருடனை பவுத்தர்கள் வழிபட்டனர்.

* அமராவதி சிற்பத் தொகுதியில் கருட சிற்பங்களைக் காணலாம்.

கருடஆபரணங்கள்.......

கருடனை, எட்டு வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. அந்த எட்டு ஆபரணங்களும் எட்டு பாம்புகளை குறிக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* பூணூல் - வாசுகி.
* இடது கையில் - ஆதிசேஷன்
* அரையில் அணி - தட்சகன்
* மாலை - கார்கோடகன்
* வலது காதில் - பத்மன்
* இடது காதில் - மகா பத்மன்
* திருமுடியில் - சங்கபாலன்
* வலது தோள்பட்டையில் - குளிகன்

சம ஆசனம்.......

* திருவில்லியங்குடியில் கருடன் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

* ஸ்ரீவில்லிபுத்தூரில் கருடனுக்குப், பெருமாளுடன் சம ஆசனம்தரப்பட்டுள்ளது.

* திருத்தண்காலில் கருடன் கைகளில் பாம்பும், அமிர்த கலசமும் காணப்படுகிறது.

* திருக்குளந்தையில் உற்சவராகப் பெருமாள் பக்கத்தில் அமர்ந்து கருடன் அருளாசி புரிகிறார்.

* அழகர் கோவிலில் பெருமாளைச் சுமந்தபடி காட்சியளிக்கிறார் கருட பகவான்.

வாகனனுக்கு வாகனம்........

தெய்வங்கள் அனைத்துக்கும் அநேகமாக வாகனங்கள் உள்ளன. ஆனால் வாகனங்களுக்கு வாகனம் எதுவும் கிடையாது. ஆனால் கருடன் அதிலும் சிறப்பு மிக்கவராக உள்ளார். ஏனெனில் கருடனுக்கு வாகனம் உண்டு. அதாவது வாயுதான் கருடனின் வாகனமாக உள்ளதாக இதிகாச புராணங்கள் தெரிவிக்கிறது. இதற்கு சான்றாக இருப் பது விஷ்ணு சகஸ்ரநாமம். இதில் வரும் 'சுபர்ணோ வாயு 'சுபர்ணோ வாஹன!' என்ற பதம் இதனை விளக்குகிறது.

அயல்நாடுகளில் கருடன்.......

* அமெரிக்க நாட்டுச்சின்னம் கருடன்.
* இந்தோனேஷியாவில் விமான போக்குவரத்தின் பெயர் 'கருடா' என்பதாகும்.
* நேபாள நாட்டில் 'கருட நாக யுத்தம்' என்ற பெயரில் மிகப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

கும்பகோணத்துப்பிள்ளை
08-01-2013, 01:17 PM
அருமையான தகவல் தொகுப்பு!
வாகனத்துக்கே வாகனமா!
எனது தந்தையார் ஒவ்ஒரு வியாழனன்றும்
கருட தரிசனம் செய்யாமல்
இரவு உணவு எடுக்கமாட்டார்
அவரது 85 ஆண்டுகால வாழக்கையில்
சிறுவயது முதற்கொண்டு பின்பற்றிய வழமைகளில் இதுவுமொன்று
பாராட்டுகள் கேசவனாரே!