PDA

View Full Version : துண்டுச்சீட்டுகள்!



arun karthik
06-01-2013, 05:04 PM
*******************************************************************
மூக்குத்தி, மணியாரம் ,
காதணி , வளையல்கள்
இவை அனைத்தும் உன்னை அணிந்து கொண்டு
அழகாகி விட்டனவே !
*******************************************************************

தெருக்கடையில் நீ ஏதோ பழச்சாறு
சுவைப்பதாக நினைக்கிறாய் - உண்மையில்
அந்த பழச்சாறு தான் உன்னை சுவைத்துக் கொண்டிருக்கிறது!
*******************************************************************

மயில் அழகாக ஆடுகிறது,
மான் அழகாக ஓடுகிறது,
முயல் அழகாக குதிக்கிறது,
குயில் இனிமையாக பாடுகிறது,
கிளி அழகாக பேசுகிறது - என்று
நீ கூறும்போதெல்லாம் எனக்கு தோன்றுவது ஒன்றுதான்,
"உன்னையே வருணிக்கும் நீ சரியான தற்புகழ்ச்சிக்காரி" என்று.
******************************************************************

உன் புகைப்படம் போதுமே
தெருக்களில் வாகனகள் நிற்பதற்கு-
சிவப்பு மின் விளக்குகளுக்கு மாற்றாக!
******************************************************************

"நான்தான் இதை செய்தேன்" - என்று
உரைத்ததால் மட்டுமே
அழகாகிய விடயங்கள் ஆயிரம்!
******************************************************************

கும்பகோணத்துப்பிள்ளை
10-01-2013, 07:14 PM
துண்டுச்சீட்டில் தூண்டில் கவிதைகள் (தம்மாத்துண்டு) ம்! எந்த பொண்னு மாட்டுநாளோ?!


"நான்தான் இதை செய்தேன்" - என்று
உரைத்ததால் மட்டுமே
அழகாகிய விடயங்கள் ஆயிரம்!

அருமை! பாராட்டுகள்!

jayanth
13-01-2013, 02:31 AM
துண்டுச்சீட்டுகள்... மனதின் விரிவான விளக்கம்...!!!

A Thainis
13-01-2013, 08:21 AM
துண்டுச்சீட்டுக்கள், துரு துரு மீன்கள் விறு விறு வாசிப்பில் சுறு சுறு உயிரோட்டம், வாழ்த்துக்கள் அருண் கார்த்திக்.

பென்ஸ்
14-01-2013, 04:52 AM
எல்லா துண்டுசீட்டுகளும் "Queen of hearts"... மனதை கொள்ளை அடிக்கின்றன...
ஆனால் ஏல்லா துண்டு சீட்டுகளும் ஒரே போலவே..

தாமரை
15-01-2013, 09:22 AM
சீ(சி)ட்டு பிடிக்க (பிட்டுத்) துண்டு போட்டீங்களோ?

arun karthik
26-01-2013, 08:49 AM
வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்,
வாசித்த அன்பு நெஞ்சங்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள்!

கீதம்
26-01-2013, 10:10 PM
கவிதைத் துண்டுச்சீட்டுகள் யாவும் வாழ்க்கைப் பயணத்தின் முன்பதிவு சீட்டுக்கான ஆயத்தம் உணர்த்தி நிற்கின்றன. கவிதையோடு காதல் அழகு. வாழ்த்துக்கள்.

rema
27-01-2013, 02:28 AM
"நான்தான் இதை செய்தேன்" - என்று
உரைத்ததால் மட்டுமே
அழகாகிய விடயங்கள் ஆயிரம்!
காதல் அனைத்தையும் அழகாக்குகிறது !! வாழ்த்துகள் அருண் கார்த்திக் !