PDA

View Full Version : பெண் மெய்



நாகரா
06-01-2013, 09:50 AM
காயப் பட்டது காயம்
காமுகரின் வன்பால்.
காயத்தை ஆற்றிக்
காயத்தை மெய்யாக்கத்
துடிதுடித்த உயிரும்
விட்டுப் போனது.
பெருந்தக்காள் பெண்ணின்
கற்பென்னுந் திண்மை
காமுகரைக் காயப்படுத்தும்
மறக் கருணையாயும்
உயிர்மெய்யை உணர்த்தும்
அறக் கருணையாயும்
ஞாலத்தை உய்விக்குஞ்
ஞானாய்தமாய்
நேசாதார அச்சில்
ஓயாமல் சுழல்கிறது.