PDA

View Full Version : நிலவு



ஆதி
05-01-2013, 10:47 PM
எவ்வளவு முயன்றும்
துல்லியமாய் வரைய*
இயன்றதில்லை அதையும்
உன்னை போலவே

ஒரு
கவிதையின் வர்ணனையைப் போலவோ
கதையின் ஒரு காட்சியை போலவோ
அது ரசனைக்குரியதாய் இருக்கவில்லை
உன்னைவிடவும்

முழுவட்டநாளில்
வெண்மஞ்சளொளியோடு
அது மிக பிரகாசித்தாலும்
உன் குழலுதிர்த்த ஒரு மல்லிகை பூவுக்கு
ஒப்பாவதில்லை

வனாந்திரம் வனாந்திரமாய்
ஊர் ஊராய் அலைந்து தேய்ந்து
உன் காதின் ஒற்றைக் கம்மல் போலிருக்கும்
கடைசி பிறை தினத்தில்
அதை கொஞ்சம் ரசிக்காமல் இருந்ததில்லை

தன்னுடைய ஏதாவது
ஒரு ரூபத்தால் அது
உன்னை எனக்கு
ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கிறது

சட்டைப் பையில் மறையும்
நாணயமென*
அது முழுமுற்றாயாய் மறையும் நாளில்
கவியும் இருளில்
ஊற்றி வைக்கிறது
ஜீரணிபதற்கு சாத்தியமற்ற*
நீயில்லாத* வெறுமையின்
கொடுங்கசப்பை

rema
06-01-2013, 02:13 AM
ஆதி wrote:
வானந்திரம் வானந்திரமாய்
ஊர் ஊராய் அலைந்து தேய்ந்து
உன் காதின் ஒற்றை கம்மல் போலிருக்கும்
கடைசி பிறை தினத்தில்
அதை கொஞ்சம் ரசிக்காமல் இருந்ததில்லை

தன்னுடைய ஏதாவது
ஒரு ரூபத்தால் அது
உன்னை எனக்கு
ஞாபகமூட்டி கொண்டே இருக்கிறது

சட்டை பையில் மறையும்
நாணயமென*
அது முழுமுற்றையாய் மறையும் நாளில்
கவியும் இருளில்
ஊற்றி வைக்கிறது
ஜீரணிபதற்கு சாத்தியமற்ற*
நீயில்லாத* வெறுமையின்
கொடுங்கசப்பை

நிலவையே பின்னுக்கு தள்ளிவிட்ட பெண்ணழகுக்கு பெருமை சேர்ககும் கவியழகு...
என்றாலும் நிலவின் மீதும் சற்று இரக்கம் வைத்து , பிறை நாளில் சரி, நம்மவள் கம்மல் போல் உள்ளதே எனக் கொஞ்சம் ரசித்திருக்கிறீர்கள்...


சட்டை பையில் மறையும்
நாணயமென*யதார்த்தமான ஆனால் பொருந்துகிற உவமை..



ஜீரணிபதற்கு சாத்தியமற்ற*
நீயில்லாத* வெறுமையின்
கொடுங்கசப்பை

பிரிவாற்றாமையின் உச்சம் காட்டும் வலிய வரிகள்...நிலவு ஒளிர்கிறது...வாழ்த்துகள் ஆதி !!

கும்பகோணத்துப்பிள்ளை
10-01-2013, 09:15 PM
நித்தம் நிலைமாறி
நிலவுகாட்டும் முகம்போல்
அவள்காட்டிய ரசனைகளும்
அந்தியில் அம்மாவசைக்கசப்பும்
அசத்தலில் ஆதி!