PDA

View Full Version : இதுக்கு பதில் சொல்ல முடியும்.. யாராச்சும் முயற்சி பண்ணுங்க!!!



தாமரை
05-01-2013, 01:03 PM
பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் அந்த பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார வைத்தியர் எந்தப் பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார வைத்தியரிடம் தன் பைத்தியத்திற்கு வைத்தியம் பார்ப்பார் ?.

குணமதி
06-01-2013, 02:12 AM
பைத்தியத்திற்கு வைத்தியம் செய்யப் பைத்தியக்காரக் கல்லூரியில் பைத்தியக்கார வைத்தியரிடம் பைத்தியக் காரத்தனய்ப் பைத்தியமாய்ப் படித்துப் பைத்தியம பிடித்ததற்குப் பைத்தியக்கார மருத்துவருக்கு வைத்தியம் செய்த பைத்தியக்கார வைத்தியராக இருக்கலாம்!

பாண்டி
06-01-2013, 03:55 AM
கேள்வியும் பதிலும் அருமை

ஜான்
06-01-2013, 04:18 AM
பைத்தியக் கேள்வியும் பைத்தியப் பதிலும் படித்தவுடன் வைத்தியம் பார்க்கமுடியாத அளவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது எனக்கு!

கலையரசி
06-01-2013, 10:22 AM
பைத்தியம் பிடித்த முதல் பைத்தியக்கார வைத்தியருக்கு இரண்டாவது பைத்தியக்கார வைத்தியர், வைத்தியம் பார்த்துக் குணமாகிவிட்டதால் தன் பைத்தியத்திற்கு முதல் பயித்தியக்கார வைத்தியரிடமே வைத்தியம் எடுத்துக்கொள்வார். தலை சுற்றிப் பைத்தியம் பிடிக்காத குறை!

தாமரை
06-01-2013, 12:48 PM
பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் அந்த பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார வைத்தியர் எந்தப் பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார வைத்தியரிடம் தன் பைத்தியத்திற்கு வைத்தியம் பார்ப்பார் ?.

இதுக்குத்தான் டீ-டெய்லா ஆராயணும்னு சொல்றது.

பைத்தியத்திற்கு வைத்தியம் செய்யற பைத்தியக்கார வைத்தியர் இருக்கார்.

அவர் கிட்ட ஒரு பைத்தியம் வைத்தியத்திற்கு வருது.

அவருக்கு அந்தப் பைத்தியம் பிடிக்குது.

அப்ப சட்டு புட்டு கல்யாணம் பண்ணிக்க புரோகிதரைத் தேடித்தானே போகணும்.. எதுக்கு வைத்தியரைத் தேடிப் போகணும்.

கல்யாணம் பண்ணிகிட்டு அந்த பைத்தியத்துக்கு அவரே வைத்தியம் பாக்கலாமே!!

உங்களுக்கு இப்ப பைத்தியம் புடிச்சிருச்சா?

கலையரசி
07-01-2013, 04:37 PM
பைத்தியம் பிடிக்குதுங்கிறதுக்கு இத்தனை அர்த்தங்களா? யாராச்சும் முயற்சி பண்ணுங்கோன்னு சொன்னவுடனே சின்சியராபண்ணுனதுக்கு எனக்கு நல்லா வேணும்! இனிமே பதில் சொல்லுவியா? சொல்லுவியா? :violent-smiley-010:

தாமரை
08-01-2013, 12:08 AM
பைத்தியம் பிடிக்குதுங்கிறதுக்கு இத்தனை அர்த்தங்களா? யாராச்சும் முயற்சி பண்ணுங்கோன்னு சொன்னவுடனே சின்சியராபண்ணுனதுக்கு எனக்கு நல்லா வேணும்! இனிமே பதில் சொல்லுவியா? சொல்லுவியா? :violent-smiley-010:

இந்தப் புடிச்சிருக்கு என்ற வார்த்தையே கொஞ்சம் விவகாரமான வார்த்தைதான்.. பாருங்களேன்..

"பொண்ணு புடிச்சிருக்கு"
"பைத்தியம் புடிச்சிருக்கு"
"பேய் பிடிச்சிருக்கு"

மூணுக்கும் எவ்வளவு ஒற்றுமை.:angel-smiley-023: அதே சமயம் எத்தனை வித்தியாசம். :sprachlos020:

இப்படித்தான் ஒரு சமயம் ஒரு தங்கை கிட்ட பேசிகிட்டு இருந்தேன்.

தாமரை : உனக்கு என்ன பிடிக்கும்?

தங்கை : (கிண்டலாக) ம்ம்ம்... சளி பிடிக்கும்

தாமரை : அப்படியா சரி மழைக்காலம் ஆரம்பிக்கட்டும் ஒரு வண்டிச் சளி அனுப்பி வைக்கிறேன்

தங்கை : அய்யய்யோ.... (ஓடிப் போயிட்டார்)

கும்பகோணத்துப்பிள்ளை
08-01-2013, 01:40 PM
புடுச்சிருக்கா!....

புடுச்சிபோச்சா!....

இரண்டையும் மொட்டையா சொன்னா ஒரு அர்தம்
வேற எதோடு சேர்த்து சொன்னா வேற அர்த்தம்
இல்ல இரண்டா பிரிச்சிசொன்னாலும் வேற வேற அர்த்தம்

என்ன புரிஞ்சுதா?!..... இல்ல மறுபடியும் ஆரம்பிக்கலாமா?!

arun
30-01-2013, 03:30 PM
இதை எல்லம் படிக்கும்போது பைத்தியம் பிடிக்கிறா போல தான் இருக்கு ! ..

Haazi
25-05-2013, 11:11 AM
"பைத்தியம்" - ஹைக்கு