PDA

View Full Version : பெரிய பணக்காரன்.



M.Jagadeesan
05-01-2013, 12:42 PM
வசிப்பதற்கு சிறிய வீடுஒன்று உண்டு
பசிஎடுத்துச் சாப்பிட வயிறுண்டு
உடுப்பதற்கு எளிய ஆடை உண்டு
படுத்தவுடன் வருகின்ற தூக்கம் உண்டு
அடுத்தவனைக் கெடுக்காத மனம் உண்டு
எடுத்தவினை முடிக்கின்ற மகன் உண்டு
நோய்நொடி இல்லாத உடல் உண்டு
தாயினும் தயைபுரியும் மனைவி உண்டு
கடன்பட்டு வாழாத வாழ்க்கை உண்டு
போதுமென்ற பொன்னான மனம் உண்டு
நானே பணியாள்; நானே எஜமான்
நானே இவ்வுலகின் பெரிய பணக்காரன்.

ஜானகி
06-01-2013, 12:31 AM
போதும் என்ற மனம் ஓதுகின்ற பாடம் மிக நன்று !

M.Jagadeesan
06-01-2013, 01:21 AM
ஜானகி அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

குணமதி
06-01-2013, 02:00 AM
உண்மை!
ஒப்பற்ற செல்வர் என ஒப்புக்கொள்கிறோம்!
பாராட்டு!

M.Jagadeesan
06-01-2013, 04:26 AM
குணமதி அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

கும்பகோணத்துப்பிள்ளை
11-01-2013, 02:15 AM
எல்லாம் அமையப்பெற கொடுத்து வைத்தவாரய் இருக்கவேண்டும்