PDA

View Full Version : காதல் அழகடி என் காதல் அழகி!



arun karthik
05-01-2013, 08:32 AM
******************************************
உயர்ந்த மலைகள்,
இடையே அருவி,
கீச்சும் பறவைகள்,
சுற்றிலும் பசுமை,
இயற்கை நெய்த ஒற்றையடிப் பாதை,
இருண்ட முகில்கள்,
மண்ணை முத்தமிடக் காத்திருக்கும் மழை,
அதனால் எழும்பிய மண்வாசனை ,
இவை ஏதும் அழகில்லை -
அருகில் உன்னையும்,
தென்றலை விரல்களால் கோலமிட்டு அழகாக்கும்
உன் பாசாங்குகளையும் தவிர!


**************************************

கோவிலுக்குள்,
பிள்ளையார் சன்னதி முன் நின்று கொண்டு,
உன் நினைவுகளை மனதிலிருந்து அகற்றி,
மனதை ஒருநிலைப்படுத்தி,
கட்டுப்படுத்தி வேண்டுகிறேன்,
"முருகா! என்னை காப்பாற்று என!"

**************************************

ஆண் மயில் தான் அழகு என்பார்கள்,

இதுவரை என்னவளை பார்க்காதவர்கள்!

**************************************

சிவப்பு நிறம்,
நீண்ட கூந்தல் ,
மெலிந்த உடல்,
கூர்ந்த அறிவு,
தெளிந்த பார்வை ,
இனிய புன்னகை - இதில்
ஒன்று கூட இல்லாத அழகான அழகி நீ !

jayanth
05-01-2013, 10:20 AM
ஆண் மயில் தான் அழகு என்பார்கள்,

இதுவரை என்னவளை பார்க்காதவர்கள்!

**************************************

சிவப்பு நிறம்,
நீண்ட கூந்தல் ,
மெலிந்த உடல்,
கூர்ந்த அறிவு,
தெளிந்த பார்வை ,
இனிய புன்னகை - இதில்
ஒன்று கூட இல்லாத அழகான அழகி நீ !

காதலுக்கு கண்ணும் இல்லை நண்பரே...!!!

arun karthik
05-01-2013, 11:29 AM
உண்மை தான் நண்பரே! புரிதல் கூட இருவரையும் அழகாக்கும் ..!

M.Jagadeesan
05-01-2013, 11:36 AM
உண்மையான காதலில் அவலட்சணமும் கூட அழகாகத்தான் தெரியும். நன்றி நண்பரே !

arun karthik
05-01-2013, 12:04 PM
உண்மையான காதலில் அவலட்சணம் என்பதே இல்லை நண்பரே... தங்கள் கூற்று மிகச்சரியானதே!

கும்பகோணத்துப்பிள்ளை
13-01-2013, 02:10 AM
கோவிலுக்குள்,
பிள்ளையார் சன்னதி முன் நின்று கொண்டு,
உன் நினைவுகளை மனதிலிருந்து அகற்றி,
மனதை ஒருநிலைப்படுத்தி,
கட்டுப்படுத்தி வேண்டுகிறேன்,
"முருகா! என்னை காப்பாற்று என!"

அண்ணன்கிட்ட நின்னப்ப
தம்பிகிட்ட விண்ணப்பம்!
காதலில் விழுந்தா இப்படித்தானோ?!