PDA

View Full Version : கேள்வி



rema
05-01-2013, 02:14 AM
பொருட்பால் - அரசியல் - கேள்வி

குறள் 411:
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.


செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
நம் மன்றப் பன்பலைக்கு இக்குறள் பொருந்துவதாகப் பட்டதால் இங்கே பதிந்தேன்....

Mano60
23-11-2016, 04:27 AM
உண்மை பழங்காலத்தில் வேதம் செவி வழியாகவே பரவியதாக சொல்லப்படுகிறது. கற்றலின் கேட்டலே நன்று என்பது அவ்வையார் வாக்கு. நல்ல திரி பதில் இல்லாமல் வாடிக்கிடப்பது கண்டேன் இந்த பதிவை செய்கிறேன்..