PDA

View Full Version : வீடுகட்ட லோன் உதவி தேவை



manimac
04-01-2013, 02:00 PM
நண்பர்களே... நான் புதிதாக வீடு கட்ட இருக்கிறேன். இதற்கு 10 லட்சம் வரை கடனாக பெற இந்தியன் வங்கியை அணுகலாம் என்று இருக்கிறேன். எனக்கு லோன் கட்டண விபரங்கள், ஆவணங்கள் மற்றும் இதர செலவினங்கள் பற்றி விபரமாக ஆலோசனை வழங்கவும்.

தாமரை
04-01-2013, 02:42 PM
உங்க தலைப்பைப் பார்த்து பயந்தே போய்ட்டேன்.

http://thenkoodu.in/manage_blogs.php?blogid=6467&url=veeduthirumbal.blogspot.com/2011/11/blog-post_27.html

இதைக் கொஞ்சம் படிச்சுப் பாருங்க..

தாமரை
04-01-2013, 03:18 PM
1. வீடு கட்டும் நிலம் உங்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும்
2. அந்த நிலம் அடமானத்தில் இருக்கக் கூடாது. அதன் பேரில் வேறு கடன் இருக்கக் கூடாது
3. அந்த நிலத்தின் தாய் பத்திரம் போன்றவை சரியாக இருக்க வேண்டும்
4. 30 வருட காலத்திய வில்லங்கச் சான்றிதல் வேண்டும்
5. வீடு கட்ட அனுமதி பெறப்பட்ட பிளான், எஸ்டிமேட் என அனைத்தும் இருக்க வேண்டும்
6. உங்களது வருமானச் சான்றிதழ், உங்களது வங்கிக் கணக்கு விவரங்கள், வருமான வரிச் சான்றிதழ்கள் வேண்டும்
7. நீங்கள் மாதச் சம்பளதாரர் என்றால் பிரச்சனை குறைவு. சுயதொழில் என்றால் இன்னும் என்னென்ன கேட்பார்கள் என்று தெரியவில்லை. வட்டி விகிதமும் கூட இருக்கலாம்
8. 100 சதவிகித கடன் கிடைப்பது கஷ்டம்தான். எனவே உங்கள் கையிலும் குறைந்த பட்சம் 15 சதவிகிதப் பணம் இருக்க வேண்டும். பலர் தங்களுடைய எஸ்டிமேட்டில் ஏற்றிக் காட்டி 100 சதவிகிதக் கடன் வாங்கி விடுவார்கள். ஆனால் வீடு கட்டி முடிப்பதற்குள் ஏற்படும் விலைவாசி உயர்வால் இது சரியாகப் போய்விடும். மேலும் வீடு கட்டும் பொழுது நம் தேவைக்கு பணம் உடனுக்குடன் கையில் கிடைக்கும் என்பது உறுதியில்லை. எனவே 15 சதவிகிதப் பணம் கையில் இருப்பது நல்லது.

பின்னர் வருகிறேன்

manimac
07-01-2013, 06:09 AM
மிக்க நன்றி தோழர்களே....

TamilManavan
17-05-2014, 04:36 AM
தாமரை அவர்களே, தங்களின் பதிலில் 8ஆம் எண்ணில் உள்ளது நல்ல கருத்து.