PDA

View Full Version : இது தேவதையின் காலம்



ஆதி
03-01-2013, 12:32 PM
நட்சத்திரம் மின்னும்
என் கருஞ்சாம்பல் குளத்தில்
வரைந்தேன் உன் முகம்
மஞ்சலொளி பாரித்து
சிறு பாற்கடலாய் பரிணமித்தது குளம்


***


துரித உரையாடலொன்றின் இறுதியில்
ஒரு தூசு புன்னகையை உதறி சென்றாய்
அதன் நுண்தொடுகையின் கூச்சத்தில்
சிலிர்த்தென் நிச்சலன குளம்
கலங்கி மேல்ழுந்த அடிமண்ணின்
பரப்பெங்கும் படர்ந்திருக்கிறது
உன் புன்னகையின் குளிர்ச்சி


***


நீள் நெடும்பரப்பென விரிந்திருக்கிறது
என் கருஞ்சம்பல் குளம்
அதில் தேவதையின் சிறகிலிருந்து
நழுவிய இறகாய் உதிர்கின்றன
உன் பால்மஞ்சல் நிற நினைவுகள்


***


நீ வந்து நீந்த துவங்கிய
கணத்தின் முதல்நொடியில்
அது மாறி போனது
ஒரு தேவதை குளமாய்



***


மேடுபள்ளமற்ற ஒரு கண்ணாடிவெளியென
மௌனித்திருந்தது என் குளம்
உன் பார்வையின் ஒற்றை நிழல் உதிர்ந்து
வட்ட வட்ட அலை நெளியும்
முந்தைய கணம் வரை


வட்ட அலை புரளுமென் குளத்தில்
மிதக்கவிடுகிறேன் உன் மௌனத்தை
மொட்டென குமிழ்ந்து உரக்க வெடிகிறது
நீ பேசாத வார்த்தைகளை


***


என் குளத்தில் அமிழ்ந்தெழுந்து
நடக்கும் நினைவுகள்
உகுக்கும் ஏக்கத்தின் ஈரங்களில்
குளிர்ந்து கனமாகிறது
என் மூச்சுக் காற்று


***


சினப்பேச்சுக்களின் ஊடே
ஒரு பாலையின் தனிமையை
மனதின் கரங்களில் திணிக்கும்
உன் வெளிறிய முறுவல்களை குளிர்த்தி
இக்குளத்தின் அடியில் பாதுக்காத்து வைத்திருக்கிறேன்
ஒரு பனிகாலத்தின் குளுமையுடன்
உனக்கு திருப்பி தர


தொடரும்...

கோபாலன்
03-01-2013, 06:00 PM
உங்கள் கவிதைக்குளம் அருமை :)

ஜானகி
04-01-2013, 12:54 AM
மனக் குளத்தை சலசலக்கவைத்த மாயத்திற்கு வாழ்த்துக்கள் !

jayanth
04-01-2013, 01:41 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')).....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')).....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

rema
04-01-2013, 03:13 AM
[



துரித உரையாடலொன்றின் இறுதியில்
ஒரு தூசு புன்னகையை உதறி சென்றாய்
அதன் நுண்தொடுகையின் கூச்சத்தில்
சிலிர்த்த*தென் நிச்சலன குளம்
க*ல*ங்கி மேல்ழுந்த* அடிம*ண்ணின்
ப*ர*ப்பெங்கும் ப*ட*ர்ந்திருக்கிற*து
உன் புன்ன*கையின் குளிர்ச்சி


தொடரும்...

அதிகம் கவர்ந்த வரிகள்...
அந்த புன்னகையின் குளிர்ச்சி இப் பத்தியெங்கும் வியாபிக்கிறது...

கும்பகோணத்துப்பிள்ளை
04-01-2013, 06:38 AM
பனியலையடிக்கும் குளம்
குளத்தின் நீர்பரப்பில் குமரியொருத்தி முகம்
முகம்பாரத்த ஆதியின் முக்குளிப்பு
முக்குளிப்பில் கிடைத்ததென்னவோ நிறைய *****...

maniajith007
05-03-2013, 03:30 PM
இத்தனை வசீகரம் நிறைந்த வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது எத்தனை கடினம் அழகான கவிதை மொழி ஆளுமை நன்று

சுகந்தப்ரீதன்
08-03-2013, 04:48 PM
மணிஅஜித்007 மொழிகளை வழிமொழிகிறேன்..!!

வாழ்த்துக்கள் ஆதி... ஆமாம் இதையெல்லாம் குளக்கரையில உட்காந்துதான எழுதுன..?!:)

பூமகள்
27-03-2013, 02:51 PM
ஆதி.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. உங்களின் இக்கவிதையின் சில துளிகளை வலைச்சரத்தில் நாளைய பதிவில் அறிமுகப்படுத்த உள்ளேன்.. அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்..

கவிதை சொல்லும் காதல் அருமை.. வரிகள் அசர வைக்கின்றன. பாராட்டுகள் ஆதி.

ஆதி
28-03-2013, 07:08 AM
பின்னூட்ட ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி பல*

@ பூமகள், நன்றிங்க, வலைச்சரத்தில் இப்போதுதான் வாசித்தேன், என் கவிதையை அறிமுகம் செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

வலைச்சரத்தில் வலைத்தளங்கள் மட்டுமல்ல மன்றங்களும் அறிமுகம் செய்யப்படுகின்றன, நம் மன்றத்தையும் அங்கே அறிமுகம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்

A Thainis
28-03-2013, 08:01 AM
தேவதையின் குளம் அழகு தாமரையாய் கண்ணைப் பறிக்கிறது.

ஆதி
01-04-2013, 11:00 AM
நன்றி தைனிஸ்

ஆதி
22-12-2017, 01:56 PM
இலையுதிரும் உலர் நாளொன்றில்
அறுந்த உன் பொன்பாதுகையை
எழில் சரிந்த பூஞ்செடிகளினூடே வைத்தேன்
மதுரமிகு உன் குறுநகையின் சாயலொடு
அதில் பூத்தது
குறிஞ்சி பூ

*****************************************


உன் அடிமண்துகளை அள்ளி தூவினேன்
என் நந்தவனம் முழுக்க
உன் மயிலிறகு பாதத்தின் குளுர்ச்சியின் சீந்தலில்
நிறமூறி மிளிர்கின்றன
வாடிய ரோஜாக்கள்

மீந்த அடிமண்துகளை உதறினேன்
கருஞ்சாம்பல் குளத்தில்
முட்டைகளாய் பரிணமித்து பிறப்பித்தன
வண்ண வண்ண மீன்களை

உன் மருதாணி பாதங்களின்
மயிலிறகு தொடுகையை உணர்ந்த கணத்தில்
பூக்க துவங்கிவிட்டன தாமரைகள்
என் கருஞ்சாம்பல் குளத்தில்

***************************************

பாதுகை கடையொன்றில்
நான் சுட்டிய பாதுகை
உன்னிடம் இருப்பதாய் கூறி சினம் கொப்பளிக்கிறாய்
உன் முக பூமி கடந்து காண இயலாதா
என் பார்வையின் குறைப்பாட்டை
அடி
உனக்கு எப்படி புரியவைப்பேன்

செல்வா
17-01-2018, 12:54 AM
இலையுதிரும் உலர் நாளொன்றில்
அறுந்த உன் பொன்பாதுகையை
எழில் சரிந்த பூஞ்செடிகளினூடே வைத்தேன்
மதுரமிகு உன் குறுநகையின் சாயலொடு
அதில் பூத்தது
குறிஞ்சி பூ

*****************************************


உன் அடிமண்துகளை அள்ளி தூவினேன்
என் நந்தவனம் முழுக்க
உன் மயிலிறகு பாதத்தின் குளுர்ச்சியின் சீந்தலில்
நிறமூறி மிளிர்கின்றன
வாடிய ரோஜாக்கள்

மீந்த அடிமண்துகளை உதறினேன்
கருஞ்சாம்பல் குளத்தில்
முட்டைகளாய் பரிணமித்து பிறப்பித்தன
வண்ண வண்ண மீன்களை

உன் மருதாணி பாதங்களின்
மயிலிறகு தொடுகையை உணர்ந்த கணத்தில்
பூக்க துவங்கிவிட்டன தாமரைகள்
என் கருஞ்சாம்பல் குளத்தில்

***************************************

பாதுகை கடையொன்றில்
நான் சுட்டிய பாதுகை
உன்னிடம் இருப்பதாய் கூறி சினம் கொப்பளிக்கிறாய்
உன் முக பூமி கடந்து காண இயலாதா
என் பார்வையின் குறைப்பாட்டை
அடி
உனக்கு எப்படி புரியவைப்பேன்வாங்க சார் நன்னாருக்கேளா?


Sent from my TA-1021 using Tapatalk

ஆதவா
17-01-2018, 02:08 AM
வாங்க சார் நன்னாருக்கேளா?


Sent from my TA-1021 using Tapatalk

அவர் எதுக்கு நமக்கெல்லாம் பதில் சொல்லப் போறார்????


Sent from my iPhone using Tapatalk