PDA

View Full Version : யோவ் என் அழகு மச்சான்.......



ரௌத்திரன்
02-01-2013, 06:09 PM
உக்காந்து சமஞ்சென்ன?
====உள்மூக்கு செவந்தென்ன?
தக்காளிப் பழநெறத்து
====தேகம் இருந்தென்ன?

மனச கெடுத்துவச்சி
====மயக்கம் கொடுத்தமச்சான்
மனசு எறங்கலையே
====மேளமும் கொட்டலையே!

தாலி கட்டுமுன்ன
====தாயாக ஆசவச்சி
நூலா எளச்சமவ
====நெஞ்சுந்தான் புரியலையா?

என்சாமி குலசாமி
====எல்லாமும் நீயின்னு
கும்பிட்டு வந்தமவ
====கண்ணீரும் தெரியலையா?

மச்சான் நீவந்து
====முப்போதும் உரசாம
மச்சம்போல் என்உசுரு
====சுண்டித்தான் போகிறதே!

இறுக்கி நீயணச்சி
====இதமா முறியாம
சிறுக்கி மவஇடுப்பு
====இருந்து என்னமச்சான்?

நாக்கோட நாக்குவச்சி
====நானூறு முத்தம்வச்சி
மூக்குரச வழியில்ல
====மூச்சிருந்து என்னமச்சான்?

உன்ன மாரோட
====உன்புள்ள வயித்தோட
சொமக்க முடியாம
====சீவனும் எதுக்குமச்சான்?

வெந்நீரில் நீகுளிக்கும்
====வேளையில் தெறிச்சிவிழும்
பன்னீரில் நனையாம
====பாவிநான் எதுக்குமச்சான்?

முதுகு தேய்க்கவந்து
====முரட்டு முத்தம்வாங்கி
உதடுதேஞ்சி திரும்பாம
====உசுரிருந்து என்னமச்சான்?

மடியோட நீசாய
====மாரோட நான்சாய
விடியுமட்டும் பேசாம
====வாழ்ந்து என்னமச்சான்?

நீஇழுத்த மாராப்ப
====உன்புள்ள தான்மூடி
பால்குடிக்கும் அழகநான்
====பாக்காம எதுக்குமச்சான்?

எச்சி நான்முழுங்க
=====என்ன நீமுழுங்க
உச்சுகொட்டி ராவுந்தான்
====விடிவதுவும் எப்போமச்சான்?

கடவுளுக்குச் சொந்தக்காரி
====சாபத்த தாங்குறேன்
கடலுக்குச் சொந்தக்காரி
====கருவாட்டுக்கு ஏங்குறேன்!

தங்கத்தாலி கேட்கவில்ல
====தடபுடலும் தேவையில்ல
மஞ்சக் கயித்துக்கேப்போ
====மனசுவெப்ப சொல்லுமச்சான்?



-------------ரௌத்திரன்

கும்பகோணத்துப்பிள்ளை
03-01-2013, 12:21 PM
ஏக்கமுள்ள மச்சினியின்
எதுகமோன பாட்டு
சும்மா நீராகரமும் சுட்ட மொளகாபோல
நல்ல ஒக்குமத்து!

arun karthik
05-01-2013, 08:35 AM
மிக அருமை!