PDA

View Full Version : படித்தவை - 11-1-2004 காதல் தேச பாலம்



lavanya
10-01-2004, 07:13 PM
நம் மன்றத்தில் அண்ணல் கரிகாலன் பயண கட்டுரை எழுத தொடங்கி விட்ட பிறகு
நண்பன் சரித்திர காதலி என அழகாய் இன்னொரு தொடர் துவங்க தோழி நிலா கூட
மதுரை பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டார்...எல்லாமே ஒரு அழகான பயனுள்ள
பதிவுகளுக்கு அடித்தளங்கள் என்பது சந்தேகமில்லை....பயணக்கட்டுரை என்றால்
லேனா தமிழ் வாணனும் மற்றவர்களும்தான் எழுத முடியுமா என்பதையும் உடைத்தெறிந்து
விட்டார்கள். நான் கூட இரண்டு வருடங்களுக்கு முன்னால் புஷ்பா தங்கதுரை என்ற
புனை பெயரில் எழுதிவரும் வேணு கோபாலனின் அரச காதல்கள் பற்றிய ஒரு சிறுகதை
தொகுப்பு ஒன்றை படித்திருக்கிறேன்...அதன் ஒரு கதை இன்னும் நினைவில் நிற்கிறது..
மேற்சொன்ன நண்பர்களின் பதிவு பார்த்தபோது உடனே தலைமை செயலகத்தில் ஒரே
தேடுதல் வேட்டை நடந்து அந்த கதை பற்றிய விவரங்களை கலெக்ட் செய்து இதோ
இங்கு கொடுத்திருக்கிறேன்..யாரேனும் கூடுதல் விவரங்கள் தந்தால் இன்னும் சந்தோஷமாக
இருக்கும்...என்னிடமிருந்து இதை ஓஸி வாங்கிப் போன அந்த பெயர் மறந்து போன
நபர் வீட்டில் ஒரு வாரத்திற்கு கார்ப்பரேஷன் தண்ணீர் வராமல் போக ஒரு சாபம்
கொடுத்து இதை எழுதுகிறேன்.ஒரு புகழ்மிக்க ஊர் உருவான கதை இது.

ஒரு புகழ்மிக்க அரசனின் ஒரே மகன் இளவரசன் தினமும் வேட்டையாட காட்டுக்கு
போகும் வழக்கமுள்ளவன். அப்படி ஒருநாள் வேட்டைக்கு போகும்போது ஒரு பெண்ணின்
இனிமையான குரலோடு கூடிய பாட்டு சத்தம் கேட்டு அதோ நோக்கி போகிறான்...அங்கு
வனம் வாழ் பெண்ணொருத்தியை கண்டு அவள் மீது காதல் கொள்கிறான். தினமும் அவளை
சந்தித்து பேச விழைகிறான்...அவள் அவனை தினந்தோறும் சந்திக்கும் ஒரு நான்கு கால்
மண்டபம் அந்த காட்டுக்குள் ஒரு பெரிய காட்டாறு தாண்டி கரையில் இருக்கிறது...அதிக
நீர் வரத்து இல்லாத தினங்களில் அவன் அந்த ஆறைத் தாண்டி போய் அவளை சந்திப்பதை
வழக்கமாய் கொண்டிருந்தான்.

மழைக்காலம் ஆரம்பித்தது...எங்கும் நதி நீர் பெருக்கெடுத்து ஓட இளவரசன் தன்
காதலியை சந்திக்க ஆறு பெரும் இடைஞ்சலை தர ஆரம்பித்தது...காட்டாறு கரை புரண்டு
ஓட இவனால் நாலுகால் மண்டபம் போக முடியவில்லை...இளவரசன் இங்கிருந்து லுக்
விடுவதும் அந்த பெண் அங்கிருந்து லுக் விடுவதுமாய் மட்டும் சில பொழுதுகள் போகத்
தொடங்கின...ஆனால் அது இளவரசனுக்கு நிறைய வேதனையைத் தொடங்கியது.

கன்னியர் தம் கடைக்கண்ணை காட்டினால் மலையும் ஒரு மடு என்பதை வேறு விதமாக
புரிந்து வைத்திருந்த அந்த இளவரசன் கன்னியை சந்திக்க வேண்டுமானால் காட்டாறை
நீந்தித்தான் போக வேண்டும் என தீர்மானித்து ஒரு நாள் அவ்வளவு பெரிய ஆறில் குதித்து
நீந்தி சிராய்ப்புகளுடனும், வேதனைகளுடனும் அவளை சந்தித்து வந்தான்...கண்ணியமான
அவன் காதல் பார்த்து அந்த வேடுவச்சி பெண் அவனுக்காக உயிரையே தருமளவுக்கு அவன்
காதலில் நம்பிக்கை கொண்டாள்.

காதலை அப்பாவிடமும் சொல்ல முடியாது..அப்பா ஒரு பரந்த பெரிய தேசத்தின் அரசன்
சொன்னால் அவளை கொன்று விடுவான்..சொல்லாமலிருந்தால் தான் காதல் வேதனையில்
செத்துப் போய் விடுவோம் என்ற ரீதியில் தினமும் அவன் காதல் காட்டாறில் பயணித்து
நித்திய கண்டம் பூரண ஆயுசுவாய் போய் கொண்டிருந்த கால கட்டத்தில் தினமும் பையன்
தாமதித்து அரண்மனை வருவதாயும் தினம் உடைகள் நனைந்து போய் வருவதாகவும் அரண்மனை சேவகர்கள் மூலம் மன்னன் கேள்விப்படுகிறான்.சந்தேகம் கொள்கிறான்.

தினம் அடிக்கும் நீச்சலிலும் தொடர்ந்து பெய்த ஒரு மழை நாளிலும் இளவரசன் உடம்பு
சரியில்லாமல் படுத்த படுக்கையாகி கொஞ்சம் சரியான மறுநாளில் குதிரையில் கிளம்ப
சந்தேகம் அதிகமான மன்னனும்,மந்திரியும் பின் தொடர அவன் அந்த இடத்திற்கு போக
கரையில் குதிரையை நிப்பாட்டி காட்டாறில் குதித்து நீந்தி நாலுகால் மண்டபம் சேர்ந்து
காதலியுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து மன்னன் அதிர்ந்து போகிறான்.அந்த உடல்
சோர்ந்த நிலையிலும் காதலியை தேடி வந்த இளவரசன் மேல் மன்னனுக்கு கோபம் வர
வில்லை. மாறாக மந்திரியை அழைத்து 'இளவரசன் எப்போது அவன் காதலை என்னிடத்து
சொல்ல நாடுகிறானோ அப்போது சொல்லட்டும்..ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நதியோடு
போராடி எமனோடு மீண்டு அவன் காதலியை சந்திக்கப்போவது எனக்கு பயமாக
இருக்கிறது.. உடனே இங்கே ஒரு பாலம் அமையுங்கள்'என்று ஆணையிடுகிறான்.

நீர் வரத்து மிக குறைவாக வரும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து மறுநாளிலிருந்தே
பாலம் கட்ட தொடங்கி ஏராளமான செலவிலும் உழைப்பிலும் உருவான அந்த உண்மை
காதலுக்கான சின்னமாக திகழும் அந்த பாலத்தை சுற்றி நடந்த குடியிருப்புகள்,புலம்
பெயர்வுகள் எல்லாம் அங்கு ஒரு ஊர் உருவாக வழி ஏற்படுத்தியது. அவன் தன் காதலியை
திருமணம் செய்து கொண்டானா இன்னபிற வரலாறுகள் இப்போது தெளிவாக தெரியவில்லை.
ஆனால் ஒரு காதலுக்கென ஏற்படுத்தப்பட்ட அந்த சின்னம் இன்னமும் கம்பீரமாக
இருக்கிறது அந்த காற்றாறின் மையத்தில்....அந்த ஊர் ஹைதராபாத்.

இதன் முழு சாரம்சம் எனக்கு அவ்வளவாய் நினைவில்லை என்பதால் என் நடையில் இதை
எழுதியிருக்கிறேன். கட்டுக்கதையோ உண்மைகதையோ வரலாறு சொல்லும்..திருத்தப்படும் விஷயங்களை நம் மன்றம் செய்யும். ஆனால் இதைப்போன்ற நினைவு சின்னங்களுக்கு
பின்னால் சொல்லப்படும் அந்த காதலுக்கும், காதலர்க்கும் என் வந்தனங்கள் !

பின்குறிப்பு: மன்னிக்கவும் என் ஆங்கில புலமை (??!!) காரணமாக இது தொடர்பான
நிறைய விஷயங்களை இணையத்திலிருந்து தேடி கொணர முடியவில்லை.[/color]

இளசு
11-01-2004, 12:02 AM
கதையின் முடிவு என்ன என்பது ஒருபுறம் இருக்கட்டும்..
காதலுக்கு மரியாதை (மகனின் உடல்நலத்தில் அக்கறை?)
செய்த அந்த மன்னர் மேல் எனக்கு மரியாதை வந்துவிட்டது.

தடைகள் தாண்டுவது காதலின் ஆரம்ப வேக சுகம்..
மதிப்பவர் ஆசிகள் வழங்கிவிட்டால் அதுவே தேவ சுகம்..

அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்..
நல்லதே நடந்திருக்கும் என் நம்புவோம் லாவ்..
வெற்றிக்காதலும் காவியங்கள் ஆகட்டும்..

நன்றி இப்பதிவுக்கு..
(உங்க ரேஞ்சே தனி லாவ்..
கணினி பாடம், எச்சரிக்கை, காதல், பாடல், சின்னத்திரை
என ஒரு பல்சுவை விருந்து இன்று.... பாராட்டுகள் பலப்பல..)

(ஆனால் உங்ககிட்ட புத்தகம் ஓசிவாங்கி
திருப்பித்தராம இருக்கக்கூடாது சாமி..
இன்னொரு பாடம்)

karikaalan
11-01-2004, 10:49 AM
காதலை மதித்த அரசனுக்கு ஒரு சபாஷ்.
அதனை இங்கே அழகாகப் பதிந்தமைக்கு லாவண்யாஜிக்கு நன்றிகள்.

===கரிகாலன்

poo
14-01-2004, 03:20 PM
அந்த அரசனுக்கு வந்தனங்களோடு...

அக்காவிற்கு நன்றிகள்...

காதல்தேச பாலம்... காதல்தேச பாசத்தை உணர்த்துகிறது!

இளசு
15-01-2004, 10:33 PM
இதுவரை யாரும் இந்தப்பாலம் பற்றி கூடுதல் தகவல், படம், சுட்டி தரவில்லையே...

(சி.த: லாவ், ஓசிமன்னன் பெயர் ஞாபகம் வந்துடுச்சா?)

baranee
16-01-2004, 01:18 AM
அந்த பழம் பெருமை வாய்ந்த காதல் பாலத்தின் பெயர் புரானா புல், மூசி நதிக்கரையின் மீது அமைந்து உள்ளது. கோல்கொண்டா இளவரசனின் பெயர் முஹமது குலி குதுப் , அவனின் அந்த பெருமை மிக்க காதலி பாக்யமதி, ஒரு சாதரண இந்துப் பெண். மகனின் காதலுக்கு மரியாதை தந்தை கோல்கொண்டா அரசர் இப்ரஹிம் குதுப் ஷா......


http://www.indiatraveltimes.com/focus/bridge.html

சுட்டியை தட்டுங்கள்,

அன்புடன்,
பரணீ

sara
16-01-2004, 02:07 AM
பரணீ.... அசத்திவிட்டீர்கள். எப்படி இதை தேடிக்கண்டு பிடித்தீர்கள். கொஞ்சம் உங்கள் தேடும் டெக்னிக்கை அவுத்துவிடுங்களேன். ரொம்ப புண்ணியமா போகும்..:)

baranee
16-01-2004, 05:30 PM
நண்பரே எல்லாம் கூகுலின் திறமைதான்.... தகுந்த வார்த்தைகளை உபயோகித்தால் அனைத்தையும் பெறலாம்...
உதாரணத்திற்கு......
ஹைதராபத் லவ் மற்றும் பிரிட்ஜ் மூண்றையும் சேர்த்து தேடினேன்.... பல இனைய பக்கங்கள் கிடைத்தன, அதில் இருந்து வடிகட்ட பாலத்தின் பெயரான புரானா புல்லை சேர்த்து தேடியதில் கிடைத்தது விடை.
கூகுலின் தேடுதலை உபயோகிப்பதை பற்றி கணணி பகுதியில் ஒரு தனி கட்டுரையே எழுதலாம்.
அன்புடன்
பரணீ

lavanya
16-01-2004, 08:12 PM
நன்றி பரணி...இந்த பதிவுக்கு நல்ல முடிவு வேண்டுமென்று
எதிர்பார்த்து கொண்டிருந்தேன்....அருமையாக தந்தீர்கள்...
பாராட்டுக்கள்....

ஆமாம் கூகுலின் தேடுதல் உபயோகம் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதாய் சொல்லியிருக்கிறீர்கள்...உடனே தாருங்கள்
ஆவலாக இருக்கிறோம்...

baranee
16-01-2004, 08:19 PM
பாராட்டுக்களுக்கு நன்றி லாவண்யா... கூகுலின் தேடுதலை உபயோகிப்பது பற்றி விரைவில் ஒரு கட்டுரை தருகிறேன்.
அன்புடன்
பரணீ

நிலா
16-01-2004, 10:31 PM
அற்புதம் லாவ்!
மன்னருக்கு சலாம்!
சுட்டி தந்த நண்பர் பரணீக்கு சிறப்பு நன்றிகள்!
கூகுல்தேடுதல் கட்டுரை காண நானும் ஆவலாய் உள்ளேன்!

இளசு
16-01-2004, 10:36 PM
நன்றியும் பாராட்டும் பரணி அவர்களுக்கு..
சுவையான தகவல்கள் தந்து (இளவரசருக்கு அப்போது 12 வயது என்பதுவரை)..
அப்படியே தாஜ்மகாலுக்கும் அழைக்கிற சுவாரசியச் சுட்டி அது..

கூகிள் தேடல் நீங்கள் சொல்லி அறிய ஆவல்..

sara
17-01-2004, 07:05 AM
அதில் இருந்து வடிகட்ட பாலத்தின் பெயரான புரானா புல்லை சேர்த்து தேடியதில் கிடைத்தது விடை.


ஓஓ.. பாலத்தின் பெயர் உங்களுக்கு முன்னமே தெரிந்திருந்ததா? நல்லதாகப் போயிற்று. நன்றி பரணீ.

baranee
17-01-2004, 05:20 PM
பாலத்தின் பெயர் முதல் தேடுதலில் கிடைத்தது நண்பரே!!!

அன்புடன்
பரணீ

Dr. Agaththiyan
17-01-2004, 08:13 PM
நல்ல கட்டுரை. நல்ல சுட்டி. நன்றி லாவண்யா & பரணி அவர்களே.