PDA

View Full Version : நினைவலைகள்



Sasi Dharan
31-12-2012, 12:14 PM
தூரத்தெரிந்த நினைவலைகள்
தளும்புகின்றன
கடந்துவிட்ட கணங்களின்
நிகழ்வுகளை மெல்ல மனதில்
மோதியபடி...
http://love.catchsmile.com/wp-content/uploads/2011/06/Alone-47.jpg
கடந்து செல்வதுதான்
வாழ்க்கையென்றால்
சில கனவுகள் வற்றாது
வாஞ்சையாய் வாயில் எட்டிநின்று
பார்ப்பதேனோ??
மறந்து போவதுதான்
மனிதம் என்றால்
மனதோடு மருகி நிற்கும்
மாலையில்
மீண்டும் மழையாகி
பொழிவது ஏனோ??

ஜான்
31-12-2012, 03:26 PM
நல்ல கேள்விகள் ....நினைவும் மறதியும் இருப்பதால்தானே வாழ்க்கை இருக்கிறது..வாழ்க்கை இனிக்கிறது!!

படம் நன்று ..நல்ல ஒளிச்சேர்க்கை

கும்பகோணத்துப்பிள்ளை
31-12-2012, 03:46 PM
மறுபடியும் மறுபடியும்
மடக்கி மடக்கி
மனமரிக்கும்
நீர்த்துபோகாத நினைவலைகள்!

அலையடிக்கும் மனதைக்காட்டும்
அற்புதமாய் படம் பிடித்திருக்கிறிர்கள் வரிகளிலும்!
பாராட்டுகள்!

ஜானகி
31-12-2012, 05:08 PM
நினைவு அலைகள்தானே...எழும்புவதும், அடங்குவதும் தான் அதன் இயல்பு !
வேடிக்கை பார்ப்பதுதான் நம்மால் செய்யமுடியும் !
மனம் முழுகாமல் பார்த்துக்கொண்டால் சரி !