PDA

View Full Version : எங்கும் நிறைந்திருக்கும் என் அழுகை



nandagopal.d
30-12-2012, 03:59 PM
http://3.bp.blogspot.com/-MDI_n2MHHg8/UOA3LEz8RVI/AAAAAAAAACk/vJQbUqk7BZk/s1600/301212-1759(001).jpg

மருத்துவமனையின் படுக்கையில்
அம்மாவின் இறுதிமூச்சின் ராகங்கள்
தன் சுருதியை இழக்க ஆரம்பித்தது
அம்மாவின் முகம் மிகவும் அழகானதாக
மாறி கொண்டே இருந்தது
தன் கொடுமையின் வலியெல்லாம்
கொஞ்ச கொஞ்சமாக விலக தொடங்கியது
அம்மாவின் கண்களில்
தவிப்பு மட்டும்
அனாதையாக ஆக்கப்பட்ட என்னை பார்த்து,
லேசாக துடித்து கொண்டு இருந்தது அம்மாவின் இதயம்,
சீரற்ற ரத்த ஓட்டமும் சிதைந்து போன முதுமையின் முனகலும்
அழுத்தப்பட்டும் உந்தப்பட்டும் இழுக்கப்பட்டும்
ஏப்போதும் வெடித்துவிடும் போல இருந்தது எல்லாம்
சுடுபடுத்தபட்ட கொதி நீரை போல
கொதித்து வழிந்து கொண்டு இருந்தது என் கண்ணீர்
காற்று புகுதலில் வயிற்றின் திறன் வெடிக்கும் அளவு
அது உப்பியிருந்தது திடுமென செயலற்ற திறனில்
ஒவ்வொரு உறுப்புகளும் நிரந்தர உறக்கம் கொள்ள ஆரம்பித்தன.
விழித்து கொண்ட ஆன்மாவோ
சொர்கத்தின் வாசப்படியில்
காத்து கொண்டு இருந்தது
தேவர்களின் வரவிற்கு
சிறிது நேரத்தில் தேவர்களும் வந்து
அழைத்து சென்றன அம்மாவின் ஆன்மாவை அது சிரித்து கொண்டே(ஆன்மா)
நானோ கீழ் இருந்து அழுது கொண்டே ?????????????????????

கும்பகோணத்துப்பிள்ளை
30-12-2012, 04:54 PM
உங்களின் இந்த ஆன்மாவின் (அம்மாவின்) ராகங்கள்
என் வார்த்தைகளை இழுத்துக்கொண்டு
கெக்! கெக்! என்ற கேவலைத்தான் வெளிப்படுத்துகிறது!

உங்கள் அழுகைப் பார்த்து
வானத்திலிருந்து வாஞ்சையுடன் உங்கள் தாயின்கரங்கள்
தாவித்தடவி அழாதேடா யப்பா என் மகனே!
மறுபடியும் மகளாக உன் மடி வருவேன்
அப்பொமுதும் உன் ஆனந்தகண்ணீரை
அழாதே அப்பா! ஏம்பா?! வென்றே
நானே துடைப்பேன்! என்று சொல்வதைப்பாருங்கள்!
அழுகை துடைத்து ஆறுதல் பெறுங்கள்!