PDA

View Full Version : கேட்டவை -11-1-2004 கவனம்....கம்ப்யூட்டர் கோர்ஸ்கள்.....



lavanya
10-01-2004, 07:11 PM
இன்றைய நாளில் எல்லா வயதினரும் கற்றுகொள்ள ஏதுவாய் சின்ன சென்டரிலிருந்து
பெரிய சென்டர் வரை 'காசுக்கேத்த தோசை' போல் நிறைய கோர்ஸ் வைத்து விற்கிறார்கள்
மன்னிக்கவும் நடத்துகிறார்கள்..சுமார் 300 லிருந்து 30,000 ரூபாய் வரை அவரவர்
வசதிக்கேற்ப 'சிலபஸ்' வைத்து நடத்துகிறார்கள்....இதில் பெரிய வேடிக்கை என்ன
வென்றால் முன்னெல்லாம் இந்தந்த கோர்ஸக்கு இந்தந்த தகுதி என ஒரு வரையரை
வைத்திருந்தார்கள்.இப்போதெல்லாம் அது கிடையாது ...உங்கள் தம்பி தங்கை திடீரென
ஆட்டோகேட் படிக்க ஆசைப்பட்டால் கூட சேர்த்துக்கொள்வார்கள். உங்கள் தம்பி/தங்கை
எட்டாவது படிப்பவர்களாக இருந்தால் கூட சரிதான்....

நடுவே மிகப்பெரிய புரட்சி எல்லாம் நடக்கும்...100 சதவீத கோர்ஸ் பீஸில் தள்ளுபடி...
ஆச்சரியம் 100 சதவீதம் கொடுத்துவிட்டால் எப்படி இலவசமாகவே நடத்துகிறார்களோ என
கேட்டால் பீஸ் மட்டும்தான் கிடையாது. மத்தபடி புக்ஸ்,லேப் சார்ஜ்,எக்ஸாம் பீஸ்,
கடைசியில் சர்ட்டிபிகேட் பீஸ் என்று ஒரு லிஸ்ட் போட் 'கொஞ்சமாக' பணம் வாங்கி
கொள்வார்கள்...ஆனால் எப்படி நடத்துகிறார்கள் என்பதை மட்டும் கேட்டுவிடாதீர்கள்...
அமெரிக்க அப்பாவுக்கும் ப்ரெஞ்ச் அம்மாவுக்கும் பிறந்தது போல் நுனி நாக்கு ஆங்கிலம்
தான்...For these Example...என்று அளக்கத் தொடங்கி விட்டால் எப்படா இந்த கிளாஸ்
முடியும் என்று ஏங்கி கொஞ்சம் தூங்கியும் போய் விடுகிறார்கள்....

சமீபத்தில் நம்மாழ்வார் பட்டியலில் சேர்ந்திருக்கும் ஒருவரின் கதை இது..அன்பர்
வெளிநாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கிறார்...அடுத்த பயணத்தில் அவருக்கு
ஸ்டோர் கீப்பராக பணி மாற்ற இருப்பதாக அவரது அதிகார பூர்வ வட்டாரங்கள் சொன்னதில்
பூரிப்பாகி அந்த துறைக்கு போனால் கம்ப்யூட்டர் பரிச்சயம் வேண்டுமே என எண்ணி இங்கு
ஊர்வந்த மறு நான்காம் நாளே ஒரு பிரபல மையத்தில் 5000 ரூபாய் கட்டி சேர்ந்திருக்கிறார்.
எக்ஸ்ட்ரா டைம்லாம் தந்திருக்காங்க என்று பூரிப்புடன் சொல்லிப் போய் வந்தவர்க்கு ஒரு
மாதத்தில் கோர்ஸ் முடித்து விட்டனர்....வந்தவர் தம் உறவினர் வீட்டுக்குப் போகையில்
அங்கு அவர்கள் வீட்டில் வைத்திருக்கும் கம்ப்யூட்டரை பார்த்ததும் ஆர்வ மிகுதியில்
கொஞ்சம் வொர்க் பண்ணி பார்க்கலாமா என்று கேட்டிருக்கிறார்...அந்த கம்ப்யூட்டர் அந்த
வீட்டில் உள்ள +2 பையனின் +2 வகுப்பு கம்ப்யூட்டர் பிரிவுக்காக வாங்கி கொடுக்கப்பட்டது
அவர்கள் சம்மதித்தவுடன் அவர் போய் சீட்டில் உட்கார்ந்தவுடன் சுவிட்ச் எல்லாம் போட்டு கம்ப்யூட்டன் ஆன் ஆனவுடன் கொஞ்ச நேரம் டெஸ்க்டாப்பையே பார்த்துகொண்டு
உட்கார்ந்திருந்தாரம்.பிறகு அந்த பையனை கூப்பிட்டு 'கொஞ்சம் எக்ஸெல் ஓப்பன் பண்ணி
கொடுப்பா...' என்று கேட்டிருக்கிறார்..பையன் நக்கலாய் 'அதுதான் ஸ்டார்ட் மெனுவிலே
இருக்குதே மாமா' என்றிருக்கிறார்..நம்ம மாமா வழிந்து ஹிஹி...ஸ்டார்ட் மெனுவிலே இல்லையே...அது டெஸ்க்டாப்பில்தான் இருக்கும் என பையன் வந்து எக்ஸெல் ஓப்பன் பண்ணி கொடுத்து விட்டு எட்டிப்போய் '5000 ரூபாயும் வேஸ்ட்..ஒரு மாத லீவும் வேஸ்ட்' என்றபடி போய்விட்டானாம்...நம்மாழ்வார் மீது எந்த பிழையும் இல்லை..அடிப்படை யின்றி
ஆரம்பிக்கப்பட்டு ஷார்ட்கட் வசதிக்காக டெஸ்க்டாப்பில் எக்ஸெல் ஐகான இருக்க
அங்கிருந்தபடியே இயக்கி சொல்லி கொடுக்க கற்று கொண்டிருக்கிறார். அந்த பாடம் எப்படி ஒரு மாதம் கற்று தேர்ந்தார் என்பதை இங்கு சொல்லி தெரிய வேண்டிய
அவசியமில்லை...

இருப்பினும் எந்தவித அடிப்படை தகுதியும் இன்றி கம்ப்யூட்டர் துறைக்கு போகும்
வாய்ப்பு யாருக்கேனும் உங்கள் உறவினர்க்கோ நட்புக்கோ சுற்றத்துக்கோ ஏற்பட்டு
விட்டால் கீழ்க்கண்டதை கண்டிப்பாய் பரிந்துரை செய்யுங்கள்...


1. எவ்வித உதவியும் இன்றி எந்த கணிப்பொறியையும் தானே இயக்க கூடிய திறமை...
(பச்சை லைட் எரிஞ்சா ஆன் பண்ணனும்..சிவப்பு லைட் எரிஞ்சா ஆப் பண்ணனும்
போன்ற உப ஐடியாக்களை தவிருங்கள்)

2. பெரிய அலுவலகங்களுக்கு தகவல் நுழைப்பு பணியாளராய் (Data Entry Operator)
தேர்ந்தெடுக்கப்பட்டால் கீபோர்டு,மவுஸ் இயக்க பயிற்சிகளை மட்டும் தெளிவாக
கற்று கொள்ளவும்...புதுவித படிப்புக்கான ,நுட்பத்துக்கான படிப்புகள் தேடி நேரத்தையும்
காசையும் விரயம் செய்யாதீர்கள்.ஏனெனில் அவர்கள் வைத்திருக்கும் புரோக்ராம் முற்றிலும்
வேறு வகையானதாக இருக்கும்

3. ஊருக்கேற்ற சிலபஸ்களை அறிமுகப்படுத்துவதில் நம்மூர்காரர்கள் கில்லாடிகள்.
சிங்கப்பூர் மலேசியா என்றால் ஆரக்கிள் விபி கோர்ஸ் சேருங்கள்...வளைகுடா பகுதிகள்
எனில் கல்ப் பேக்கேஜ் (?) என்று ஒன்று வைத்திருக்கிறோம்..இறங்கியவுடன் அல்-ஜசீரா
எண்ணேய் கம்பெனியில் வேலை கிடைத்துவிடும் என்று ரிஷப்ஷனில் பேச்சு ஆரம்பித்தால்
பாக்கெட்டிலிருந்து கையை வெளியே எடுக்காமல் கிடைத்த கேப்பில் வெளியே வந்து
விடுங்கள்..ஏறக்குறைய அந்த கல்ப் பேக்கேஜில் எம்.எஸ்.ஆபீஸ் மட்டும்
வைத்திருப்பார்கள்.அதை சொல்லித் தர பதினோராம் வகுப்பு கம்ப்யூட்டர் பிரிவு படிக்கும்
மாணவனால் முடியும்.

4. முடிந்தவரை தாய்மொழியில் சொல்லித் தரும் மையங்களில் சேருங்கள். அதுதான்
உங்களையும் கணிப்பொறியையும் ஒன்றிணைக்கும்...முக்கியமான தொழில்நுட்ப
வார்த்தைகளை கஷ்டப்பட்டேனும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்...

5. சின்ன சென்டர்,பெரிய சென்டர் இவை தரும் சான்றிதழ்கள் உள்ளுரில் எங்காவது
உபயோகப்படலாம்..வெளிநாடுகள் எனில் கண்டிப்பாக பெரிய சண்டியர் நிறுவன
சான்றிதழ்கள்தான் பலம். குறிப்பாய் மைக்ரோசாப்ட்,சன்,சிஸ்கோ,ஆரக்கிள்,ஆப்பிள்
நிறுவன சான்றிதழ்கள்..இவை நடத்தும் மையங்கள் பெரிய நகரங்களில் இருக்கின்றன.
அவ்வப்போ வெளியிலும் சலுகை 'விலைக்கு' அடித்து விற்கிறார்களாம்..நான்
மைக்ரோசாப்ட் MCSE எழுதும்போது எங்கள் பேட்ஜில் 14 பேர் எழுதினோம்.மூன்று பேர்
மட்டுமே பாஸானோம்.இப்போது 20 பேர் எழுதினால் குறைந்தது இரண்டு பேர் கூட
பெயிலாவதில்லை...காரணம் நிறைய நோட்ஸ்கள்..யுக்திகள்..என்று சொல்கிறார்கள்...


6. சின்ன Data Entry Operator வேலையிலிருந்து பெரிய programmer வரை தமக்குரிய
தகுதியை உணர்ந்தவர்கள் அதில் வல்லுனராக இருக்க முயற்சி செய்யுங்கள்..பல
ஆடுகளை கொண்ட மந்தைக்கு மேற்பார்வையாளராக இருப்பதை விட ஒரு தனித்த
சிங்கமாக இருப்பதே சிறப்பு...


(எங்கள் தினந்தோறும் வாழ்வில் இதுபோல் நிறைய அப்பாவி ஆழ்வார்களை சந்திக்க
நேர்வதால் இதை இங்கு எழுத தோன்றியது...மற்றபடி எந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தையும்
தனித்து குறை சொல்ல நான் வரவில்லை..ஏனெனில் அடியேனும் ஒரு பிரபல கணிப்பொறி
பயிற்சி மற்றும் தொழில்நுட்ப திட்ட நிறுவனத்தின் ஊழியைதான்...)

sara
10-01-2004, 08:43 PM
அழகாக சொன்னீர்கள் லாவண்யா. பாராட்டுகிறேன்.

இதில் மற்றுமொரு குறைபாடு, காசு சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வருவது. எந்த ஒரு கல்வியையும் கற்பதற்கு உள்ளூர தானாக எழும், அந்த துறையை பற்றி அறிந்து கொள்ளத் தூண்டும் ஆர்வம் மிக அவசியம். இவர்களை போன்றவர்கள், அதிர்ஷ்டம் போன்ற வேறு சில காரணிகளால், சரியான திறமையுள்ளவர்களுடன் வேலை பார்க்க வரும்போது, அந்த திறமையுள்ளவர்கள் படும்பாடு இருக்கே..அப்பப்பா.. இந்த மனிதர்களை அணியில் வைத்துக்கொள்ளவும் முடியாமல், விலக்கவும் முடியாமல்..ஒன்றும் சொல்லிக்கமுடியாது.

கம்யூட்டர் படித்தால், உடனே மாதம் இவ்வளவு காசு கிடைக்கும் என்பது போன்ற எண்ணங்களால் உந்தப்படுபவர்கள், நீங்கள் இன்னும் ஆயிரம் தகவல்கள் கொடுத்தாலும், ரூ.5000 கொடுத்து, உப்புமா செண்டர்களில் கும்பிட்டு விழ தயங்கவே மாட்டார்கள்.

கம்யூட்டர் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டாம் என்று கூற வரவில்லை. தாரளமாக ரூ.5000-ல் எக்செல் கற்றுக்கொள்ளுங்கள். உங்களது தினசரி வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்துங்கள். ஆனால் அந்தவகையான சிறிய அறிவைக்கொண்டு, ப்ரோக்ராமர், டிசைனர் மற்றும் அனலிஸ்ட் போன்ற வேலைகளுக்கு கனவு காணாதீர்கள். நீங்கள் ஏமாறுவதுடன், ஒரு நல்ல துறையையும் பாழ்படுத்துகிறீர்கள். எப்படி குறுக்கு வழியில் பட்டம் பெற்ற ஒரு போலி மருத்துவரை நீங்கள் விரும்ப மாட்டீர்களோ, அதேபோல்தான் இந்த துறையும். முறையான வல்லுநர்கள் அதிகம் இருந்தால், தகவல் தொழில்நுட்பத்தில் நம் நாடு இன்னும் அசுர வளர்ச்சி பெறும்.

எனவே கம்ப்யூட்டர் துறையில் உங்கள் வாழ்க்கை இருக்க வேண்டும் என நினைத்தால், ஒரு மருத்துவராவதற்கு உங்கள் வாழ்க்கையில் எந்த வயதிலிருந்து, எப்படி கற்றுக்கொள்ள துவங்குவீர்களோ, அப்படி ஆரம்பியுங்கள்.

இளசு
10-01-2004, 11:58 PM
மணி கட்டி இருக்கிறீர்கள்..
சங்கை ஊதி இருக்கிறீர்கள்..
நீங்கள் சார்ந்த துறையாய் இருப்பினும்
நேர்ப்பார்வையுடன் எழுதியமைக்கு பாராட்டுகள் லாவ்..

சந்தையில் தேவையுள்ள போது
மலிவு சரக்குகளும் தகுதியற்ற விற்பனையாளரும் புகுந்து
நாலு காசு பார்ப்பது எப்பவுமே நடப்பதுதான்..

முன்பு மருத்துவ, பொறியியல் படிப்புக்கான பயிற்சி வகுப்புகள்
(எங்கள் மாணவர்கள் அகில இந்திய டாப் -டென்னில்..
நினைத்த சீட் நிச்சயம்..)
என்றுமே டுட்டோரியல்கள்
( எட்டாவது தவறியவரா, கவலை வேண்டாம்
நேரே எம். ஏ. எழுதித் தேறலாம்)
அவ்வப்போது நடிப்புப் பயிற்சிக்கான அழைப்புகள்..
ஒயாத கரும்பு இன்ஸ்பெக்டர், வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க
அழைப்புகள்,

சந்தைகள் ஓய்வதில்லை..நுகர்வோர்தான் கவனமாய் இருக்க வேண்டும்.
இலவசம், தள்ளுபடி என்று வணிகத்தில் உண்மையில் எதுவுமில்லை..

உங்கள் நம்மாழ்வார் கதை சோகப்புன்னகை ரகம்..
MCSE - அதிர்ச்சி வருத்த ரகம்..
இப்படிப்பு முன்பு கடினமான உயர்தரம் என என் நண்பர்
சொல்லக் கேட்டிருக்கிறேன்..


சரா அவர்கள் சொல்வது போல் எஸ்,வி சேகர் ஒரு நாடகத்தில் சொல்வார்..
(நிதி நிறுவனங்கள் பாணியில்)
உங்கள் ஆறு வயது மகனை எங்களிடம் விடுங்கள்..
நாலே வருடத்தில் அவரை எம்.டி. அல்லது எம்.எஸ். மருத்துவராகத்
தருகிறோம்..

ஆம், அவசரம் நமக்கு...
துரித உணவு..
உணவு நிறுத்தம் இல்லா விரைவுப்பேருந்து..
எஸ்பிறஸ்ஸோ காபி...

நம் அவசரம் இருக்கும்வரை கல்ப் பேக்கேஜ்கள் அவசியம் இருக்கும்..

karikaalan
11-01-2004, 10:56 AM
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள். எல்லாத்துறையிலும் இப்படியே.

நன்றிகள் லாவண்யாஜி.

==கரிகாலன்

மன்மதன்
11-01-2004, 02:23 PM
இது ரொம்ப தேவையான பதிப்பு..
இப்போ பல institute .. உதா .CSC, SSI போன்றவர்கள் நல்ல படியாக நடத்துகிறார்கள் என் கேள்விபட்டேன்..

பாரதி
11-01-2004, 03:47 PM
குறைந்த பட்சம் மன்ற உறுப்பினர்களாவது தம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கண்டிப்பாக அறிவுறுத்த வேண்டிய விசயம். பாராட்டுக்கள் லாவ்.

puppy
12-01-2004, 10:43 PM
அரசாங்கமே சொல்லி தருதே இப்போ எல்லோம் small scale institute ன்னு நினைக்கிறேன்...பண கஷ்டத்தில் வர்றவங்களை அங்கே அனுப்புங்க லாவ்......

puppy
12-01-2004, 10:49 PM
இந்தாங்க லாவ்

http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=2072

poo
14-01-2004, 03:02 PM
நான்கூட ஏமாறலாமான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்...

நல்லவேலை காப்பாத்திட்டீங்க!!

lavanya
16-01-2004, 08:17 PM
[quote]இது ரொம்ப தேவையான பதிப்பு..
இப்போ பல institute .. உதா .CSC, SSI


நிஜமாவா மன்மதன்....? அடியேன் கடந்த இரண்டரை வருடங்களாக
SSI யின் ஊழியைதான்....(இப்போது இல்லை)

நிலா
16-01-2004, 10:32 PM
தேவையானத் தகவல்கள் நன்றி லாவ்!

Dr. Agaththiyan
18-01-2004, 04:47 PM
நன்றி லாவண்யா
என் தம்பி உள்பட பல நண்பர்கள் டுபாக்கூர் கோர்ஸ்களால் ஏமாந்து இருக்கிறார்கள். வழிகாட்டிய கட்டுரைக்கு பாராட்டும், மீண்டும் நன்றியும்.