PDA

View Full Version : மழலை அழலை ..!



vasikaran.g
30-12-2012, 08:14 AM
தூங்கிய குழந்தை !
தாங்கிய தொட்டில் !
யுத்தம் ஒன்று நடத்தி
ரத்தமதை குடிக்க
அதரங்களை கடிக்க
திட்டமிட்டு வட்டமிட்டு
சத்தமிட்டு முத்தமிட
எத்தனித்த கொசு !
குழந்தையின் முகத்தில்
புன்முறுவல் !

தத்தளித்தது நம் மனசு !
உதவிக்கு எத்தனித்த
இறைவனின் மனசு
ரொம்பவும் இளசு !

அட ! அதிசயம் !
மின்சாரம் வந்துவிட்டது !
மின்விசிறியும் சுழன்றுவிட்டது !
மின்விசிறியின் மிதவேகத்தால்
கொசுவுக்கு போறாத காலம் !
தலை தெறிக்க ஓட்டம் !

இறைவனுக்கும் ஏனையோருக்கும்
வந்தது நிம்மதி !
குழந்தையின் முகத்தில்
இப்போதும் புன்முறுவல் !
எப்போதும் புன்முறுவல் !
மழலை அப்போதும்
எப்போதும் அழலை !


நண்பரின் வீட்டில் தூங்கிய குழந்தையின் கன்னத்தில் ஒரு கொசு .ஆதங்கத்தில் என் மனசு .அப்போது பிறந்தது இந்த கவிதை .லேசான மனதுடன் லேசான கரு கொண்டு எழுதிய கவிதை .

கும்பகோணத்துப்பிள்ளை
30-12-2012, 02:50 PM
எளிமையான கருவென்றாலும்
எளிய வார்த்தைகொண்டு
தெரியக்கொடுத்த ஆதங்கம்
தெளிந்ததும் ஆனந்தம்

மழலை அழலை (அழவுமில்லை)
மழலை எப்போதும் அழலை (குழந்தை எப்போதும் குழந்தை) வஞ்சகமறியாதது!
நல்ல சொல்லாடல்!

கோபாலன்
30-12-2012, 03:17 PM
நல்ல கவிதை :)

jayanth
31-12-2012, 02:28 AM
அருமையான கொசுக் கவிதை வசீ...

பாராட்டுக்கள்...

vasikaran.g
13-01-2013, 06:20 AM
எளிமையான கருவென்றாலும்
எளிய வார்த்தைகொண்டு
தெரியக்கொடுத்த ஆதங்கம்
தெளிந்ததும் ஆனந்தம்

மழலை அழலை (அழவுமில்லை)
மழலை எப்போதும் அழலை (குழந்தை எப்போதும் குழந்தை) வஞ்சகமறியாதது!
நல்ல சொல்லாடல்!

நன்றி திரு கும்பகோணத்து பிள்ளை அவர்களே ..

vasikaran.g
13-01-2013, 06:21 AM
அருமையான கொசுக் கவிதை வசீ...

பாராட்டுக்கள்...

நன்றி திரு ஜெயந்த் அவர்களே ..

vasikaran.g
13-01-2013, 06:23 AM
நல்ல கவிதை :)

நன்றி திரு கோபாலன் அவர்களே ..மனதில் தோன்றியதை அப்படியே எழுதிவிட்டேன் ..