PDA

View Full Version : பிரபஞ்சத்தின் விஸ்வரூபம்



கௌதமன்
29-12-2012, 06:18 AM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTcfUn2IxeOV1IcLJwUOZte6Tdn_oYJdde91MG85hJfaLI9yPLC

வேத வியாசரின் மகா பாரதத்தில் கிருஷ்ணனின் விஸ்வரூபக் காட்சி. மொத்த பிரபஞ்சத்தின் , அண்ட சராசரத்தின் (சரம் + அசரம் ) பிரம்மாண்டத்தையும் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு காட்டும் காட்சி. ஒரு கையில் சங்கும், மறு கையில் சக்கரமுமாய், கார்வண்ணனாய் காட்சியளிப்பதல்.....

இதில் என்ன இருக்கிறது? படிப்பவர் அவரவர் எண்ணத்துக்கேற்ப கற்பனைப்படுத்திக்கொள்ளும் புனைவைத் தவிர... இப்படித்தான் முதலில் இருந்தது எனக்கு...

பெரும் இருட்டான இந்தப் பிரபஞ்சத்தில் நட்சத்திரக் கூட்டமும், கோள்களும் தோன்றுவதற்கு முன்பாக பெருவெடிப்புலிருந்து உருவான காலக்ஸிக்கள் பொதுவாக இரண்டு விதமான வடிவங்களில் தான் அறியப்படுகிறது. ஒன்று ஸ்பைரல் எனப்படும் சங்கு வடிவம் (நமது milky way galaxy இந்த வடிவம் தான்) , மற்றொன்று வட்டமான சக்கர வடிவம்.

நம்பவே முடியாத சம்பவங்களையும், திருப்பங்களையும் கொண்ட ஒரு புராணக்கதையில் கிருஷ்ணன் (விஷ்ணு) என்ற பாத்திரத்தைப் படைத்ததோடு அவனது ஒரு கையில் சங்கும், மற்றொரு கையில் சக்கரமும் கொடுத்து அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அவனை பிரபஞ்சத்தோடு தொடர்புப் படுத்திப் பார்க்கும்படி ஒரு விஸ்வரூபக் காட்சியையும் கிராஃபிக்ஸ் இல்லாமல் இணைத்து, சற்று முன்பு படித்த காலக்ஸியோடு ஒப்பிட்டு ஆச்சர்யப்படும்படி செய்தது எது?

இது வெறும் ஏதேட்சையான ஒன்றா அல்லது முன்னோர் நமக்குத் தந்த ஏதாவது சமிக்ஞையா? கணக்கு, அறிவியல் என்பனவெல்லாம் குறியீடுகள், சூத்திரங்கள் மூலம் அறியப்படுத்தப்படாத, நிரூபணப்படுத்தபடாத, ஒரு காலத்தில் இது போன்றதொரு புனைக்கதைதான் விளங்கிக் கொள்ள அல்லது மேலும் தொடர்ந்து சென்று அறிய நமக்குச் சொன்ன சூத்திரம் அல்லது குறியீடா? அப்படியிருக்குமானால் அதை அவர்கள் எப்படி அறிந்து கொண்டனர் ? எண்ணும் போது என் புருவமும் ' கோ' படத்தில் வரும் கார்த்திகாவின் புருவம் போல் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக உயர்கிறது...

மின்னோட்டத்துக்கும் (current), மின்னழுத்தத்துக்கும் (voltage), மின்தடைக்கும் (resistance) இடையேயானத் தொடர்பைக் குறிக்கும் சமன்பாடான V= IR என்பதை ஞாபகம் வைக்க சிறுவயதில் யாரோ சொன்ன 'வடை= ஐயர் ' என்ற சமன்பாடு இன்னும் ஞாபகத்தில் இருக்கிது.

எளிமையாகச் சொல்லப்பட்ட வடைக்கும், ஐயருக்கும் உள்ளத்தொடர்பின் பின்னணியில் உள்ள அறிவியலாகத்தான் புராணக்கதைகளை அணுக வேண்டுமா? தெரியவில்லை ஆனால் அணுகினால் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது...

அதனால் தான் புராணக் கதைகளை ஒரு வேளை அது குப்பைகளாக இருந்தாலும் முற்றிலும் புறக்கணிக்காமல் ஒரு குறியீட்டை அல்லது ரகசியத்தை உடைக்கும் மனோபாவத்தோடு அணுகினால் ஏதாவது சிக்கக் கூடும்... அப்படிச் சிக்காவிட்டாலும் பரவாயில்லை அடுத்தத் தலைமுறையினர் புத்திசாலிகள் ..அவர்களுக்காக ஒரு ஆவணமாகவாவது விட்டு வைப்போம்... அவர்கள் புதிரை உடைக்கக் கூடும்...

கோபாலன்
29-12-2012, 01:55 PM
நமது முன்னோர்கள் அறிவியலை கலந்தே புராணத்தையும் படைத்திருப்பார் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. விஷ்ணு படுத்திருப்பது பாற்கடல் (அதாவது milkyway பால்வழி அண்டம் ) என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. :)

கும்பகோணத்துப்பிள்ளை
29-12-2012, 03:50 PM
கண்டும் கேட்டும் அனுபவித்தும் ஆராய்ந்தும்
அறிந்த உண்மைகளை கர்ணபரம்பரை கதைகளாகவும்
வம்சாவழி வாய்வழி முறையில் சந்ததியருக்கு கடத்தினர்
இதனின் அழிபட்டதெத்தனையோ
புரிதலின்றி சமுகமாற்றத்திலும் அமிழ்தும் அழிந்தும் போயின
அதனினும் அருகி மேம்பட்ட விடையங்களே நம் புரிதலுக்கும்
பகுத்தறிதலுக்கும் விடப்பட்டிருக்கின்றன.
புரிதலில்லாமையினாலே முடநம்பிக்கைகள் என்றே ஒட்டுமொத்தமாய் ஒதுக்கிவிடாமல் சாய்புமில்லாமல்
ஆராய்ந்தும் ஒப்புமிட்டு அறிவதே உண்மையான பகுத்தறிவு.
உங்கள் இந்த ஒப்பிட்டு அறிதல் மேலும் வளர்ந்து பயனடைய வாழ்த்துகள்!

விஸ்வரருபம் பற்றி : பகவத்கீதையில் ஒன்று, கந்தபுராணத்திலொன்று, தேவிபுராணத்தில் ஒன்று என முன்று மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது

ஜான்
31-12-2012, 02:15 PM
முன்னோர்கள் உள்ளுணர்வினாலும் ஆய்ந்து அறிந்தவற்றினாலும் உருவகங்களாக சொல்லி வைத்தவை இவை ...என்றே நினைக்கிறேன் ..பிரபஞ்சம்தான் கடவுள் என்பதை தீர்மானமாக சொல்லியிருக்கிறார்கள்

சூத்திரங்கள் ,நிரூபணங்கள் இவற்றை இழந்து விட்டோம் என்று தோன்றுகிறது

HEMA BALAJI
02-01-2013, 07:41 AM
சுவாரசியமான விஷயமும் ஒப்பீடும். அறிய வைத்தமைக்கு நன்றிகள்.