PDA

View Full Version : முதுமையே போ !



M.Jagadeesan
27-12-2012, 12:39 AM
எதுகை மோனை இல்லாக் கவிதைபோல்
முதுமை ஒரு விகாரமே!- அந்த
முதுமை வருவதற்குள் எனக்கு
முற்றுப்புள்ளி வைத்துவிடு இறைவா !

தந்தத்தினால் செய்த கைத்தடி என்றாலும்
சொந்தக் காலிலே நிற்பது போலாகுமா?
அந்த நிலையை அடையும் முன்பாக
ஆண்டவனே என்னை அழைத்துக் கொள்வாயே!

பல்லிழந்து சொல்லிழந்து
பார்வையில் திரை விழுந்து
கன்னத்தில் குழிவிழுந்து
காதோரம் நரை விழுந்து
கடலின் அலைபோலே
உடலெங்கும் சுருக்கங்கள்
எண்ணத்தில் தடுமாற்றம்
எழுத்திலே தடுமாற்றம்
மாத்திரையே உணவாக
மருந்தே நீராக
நோய்களின் புகலிடமாய்
பாயே இருப்பிடமாய்
கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாழுகின்ற முதுமையை
வரவேற்க விரும்பவில்லை !

" தாத்தா " என்றழைக்கும்
அழகுதமிழ் சொல்லிருக்க
" பெருசு " என்றழைத்து
பரிகாசம் செய்கின்றார்.
" பென்ஷன் பார்ட்டி " என்றே
ஏளனம் பேசுகின்றார்.
ஆதலால் முதுமையை
அடியோடு வெறுக்கின்றேன்

முதுமையால் சிறப்பு உற்றோர்
மேதினியில் சிலருண்டு
அன்னை தமிழுக்கு
அணிசெய்த காரணத்தால்
ஒளவைக்கிழவி அவள்
சாகா வரம் பெற்றாள்.
அமிழ்தினிய தமிழ்நூலைப்
பதிப்பித்த காரணத்தால்
தமிழ்த்தாத்தா உ.வே.சா.
தரணியிலே புகழ்பெற்றார்.
காந்தித் தாத்தா தன்
பொக்கைவாய் சிரிப்பினிலே
ஏந்திய அழகெல்லாம்
யார்பெர்றார் இவ்வுலகில் ?

ஆண்டுசில வாழ்ந்தாலும்
மார்க்கண் டேயனைப்போல்
குன்றா இளமையோடும்
குறைவில்லா நலத்தோடும்
என்றும் பதினாறாய்
இருந்திடவே விரும்புகிறேன்.

குணமதி
27-12-2012, 01:45 AM
***பல்லிழந்து சொல்லிழந்து
பார்வையில் திரை விழுந்து
கன்னத்தில் குழிவிழுந்து
காதோரம் நரை விழுந்து
கடலின் அலைபோலே
உடலெங்கும் சுருக்கங்கள்
எண்ணத்தில் தடுமாற்றம்
எழுத்திலே தடுமாற்றம்
மாத்திரையே உணவாக
மருந்தே நீராக
நோய்களின் புகலிடமாய்
பாயே இருப்பிடமாய்
கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாழுகின்ற முதுமை***

அருமை!

முரளி
27-12-2012, 03:00 AM
முதுமையால் சிறப்பு உற்றோர்
மேதினியில் சிலருண்டு
அன்னை தமிழுக்கு
அணிசெய்த காரணத்தால்
ஒளவைக்கிழவி அவள்
சாகா வரம் பெற்றாள்.
அமிழ்தினிய தமிழ்நூலைப்
பதிப்பித்த காரணத்தால்
தமிழ்த்தாத்தா உ.வே.சா.
தரணியிலே புகழ்பெற்றார்.
காந்தித் தாத்தாவின்
பொக்கைவாய் சிரிப்பினிலே
ஏந்திய அழகெல்லாம்
யார்பெர்றார் இவ்வுலகில் ?


மிக சிறப்பாக எழுதி உள்ளீர்கள் ஐயா. மிக அருமை.

balakmu
16-01-2013, 07:30 AM
தாங்களின் ஆதங்கத்தை கவிதை வாயிலாக வெளிபடுத்தியுள்ளீர்கள். மனம் கணக்கின்றது. இருந்தாலும், கீழுள்ள வரிகள் உங்களுக்கும், உங்களை போன்றோர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் என்று நம்புகின்றேன்.


வயதானதை அறிந்து
பயந்தேன்!! வாழ்க்கையி ல்
பண்பட்டு விட்டேன் என்று
உணரும் வரை!!


ஏளனங்களை கண்டு பயந்தேன்
எனக்குள் சிரிக்கத் தெரியாத வரை

தனிமையைக் கண்டு பயந்தேன்
நான் தனியாக இருக்கக் கற்றுக்
கொள்ளும் வரை

ஜானகி
16-01-2013, 08:34 AM
சிந்தனையில் தெளிந்த முதிர்ச்சி இருந்தால் என்றும் இளமையே !

M.Jagadeesan
16-01-2013, 02:04 PM
குணமதி, முரளி , பாலா , ஜானகி ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.