PDA

View Full Version : திருந்தாத ஜென்மம்



ஆதி
26-12-2012, 09:01 AM
உடைந்து போதலின்
முன்னனுபவங்கள்
பல இருந்தும்
அது வேறொரு உடைந்து போதலின்
பொழுதின் உதவுவதே இல்லை

எப்படியப்பட்ட
வலியோடு
வதையோடு
ரணத்தோடு
அது இருக்குமென்று தெரியும்

எவ்வாறான
ஒரு வீழ்ச்சியையும்
ஒரு விரத்தியையும்
ஒரு நிர்கதியையும்
ஒரு அவநம்பிகையையும்
ஒரு சூன்யத்தையும்
அது தருமென தெரியும்

எனினும்
அது குறித்த விழிப்புணர்வு
என்னிடம் திடசித்தமானதாய்
இல்லவே இல்லை

வெவ்வேறு உடைந்து போதலின் சமயங்களிலும்
ஒரே போல் ஒடிந்தாலும்
ஒரே போல் வீழ்ந்தாலும்
ஒரே போல் ரணப்பட்டாலும்
என் புறத்தின் வண்ண ஈர்ப்புக்களால்
அதன் விழிப்பின் தருணங்கள்
மங்கி மறக்கப்படுகின்றன

சூளீரென்ற வலியோடு
வரும் ஒரு முறிவின் கணத்தில்
ஊறி பரவும் ஞாபகத்தின் குருதியில்
ஈரம்பாரிக்கின்றன
பழைய ரணங்களின் நிலங்கள்

மீண்டு தழைதோங்கி வளர்ந்து
மீள ஒரு காந்த வெயில்
பழையவைகள் காய்ந்து
ஈர்ப்பில்
நாக்கை தொங்க போட்டு
நாயென வாலிட்டி கொண்டு
அதை நோக்கி ஓட
மனதின் எங்கோ ஒரு மூலையில்
கொஞ்சம் ஈரம் மிச்சமிருக்கும் ஒன்று சொல்லும்
திருந்தாத ஜென்மமென

எனினும் அதையெல்லாம்
எப்போதும் பொருட்படுத்துவதே இல்லை
புத்தி

ஜானகி
26-12-2012, 11:51 AM
திருந்தினால் ஜன்மமேது....?

கும்பகோணத்துப்பிள்ளை
26-12-2012, 07:03 PM
சூளீரென்ற வலியோடு
வரும் ஒரு முறிவின் கணத்தில்
ஊறி பரவும் ஞாபகத்தின் குருதியில்
ஈரம்பாரிக்கின்றன
பழைய ரணங்களின் நிலங்கள்


நன்று! நன்று! நன்பரே!

ஈரம் இருக்கும்வரை
ரணங்கள் சீழ்பிடிக்கும்
மறுபடியும் மறுபடியும்
மறந்துபோங்கள் ஒரு
மன்னிப்பில் மறந்துபோங்கள்!
அட யார்யாரையோ மன்னிக்கிறோம்!
நம்மை நாமே மன்னித்தாலென்ன!
காயப்போட்ட ரணம் ஒருநாள்
மறத்துப்போகலாம்!
அதற்க்கு முன்
நம்மை நாமே மன்னித்தாலென்ன!