PDA

View Full Version : இந்த மணித்துளி



ஆதி
26-12-2012, 07:45 AM
எவ்வளவு விலகியிருந்தும்
மறுபடியும் என்னை
தன் வட்டத்துக்குள் இழுத்துவிட்டது
இந்த மணித்துளி

இதன் பின் புலத்தில்
ஒளிந்திருப்பது இன்னதென*
என்னால் ஊகிக்க இயலவில்லை

கைகுலுக்கல்
கை உதறல்
உதட்டு பிதுக்கல்
பெருமௌனத்தின் முடிவிலி
ஒரு திறப்பு
ஒரு சிகரம்
அனுபவம்
இனிய துவக்கம்
நிரந்தர முடிவு
எது எது அதனுள்
எனக்காக காத்திருக்கிறதென்று
முன்னுணர* இயலவில்லை

இந்த மணித்துளி
சூன்யத்தின் நிலமாய்
என்னை பேதமைக்கும்
அச்சத்துக்கும் இழுத்து செல்கிறது

அதனுள் இருந்து
திமிறி எகிறி வெளிகுதித்துவிட இயலாதபடிக்கு
அதன் பிடி இறுக்கமானதாய் உள்ளது

தேவ கரங்களா
நரக கரங்களா
எது என்னை பற்றியுள்ளன ?

இது நடந்து போகிற ஓடையா
அடித்து போகிற நதியா
உடைந்து போகிற அணையா
அமிழ்க போகிற சமுதிரமா
எது எது எது இதுவென்று யோசித்தவாறு
இதனுடன் இயந்து சுழல துவங்குகிறேன்
தப்பித்து வெளியேற வழியறியாத இயலாமையோடு

ஜானகி
26-12-2012, 11:54 AM
நேரமும் காலமும் வரும்போது ஒரே ஒரு மணித்துளியில் உண்மை புலருமாம்....காத்திருப்போம் !

கும்பகோணத்துப்பிள்ளை
26-12-2012, 06:46 PM
நிமிடங்கள்
நிற்பதில்லை!
நீங்களும் நானும் தான்
நீட்டிக்கபடுகிறோம்!
நிமிடங்கள் மணிகளாய்
நாட்களாய் வருடங்களாய்
நிற்பதில்லை இந்த
நிமிடங்களோடான பயணம்
நீங்களும் நானும் மரணிக்கும் வரை!