PDA

View Full Version : இரண்டு லிட்டர் பாட்டில், அதில் நிரப்பப்பட்ட நீர்- 60 வாட்ஸ் அளவுக்கு வெளிச்சம் பளிச்.



tnkesaven
26-12-2012, 06:09 AM
கென்யாவில் வாழும் சேரி மக்கள் 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு 60 வாட்ஸ் பல்பை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அணு உலை கிடையாது, சோலார் பேனல் கிடையாது, அனல் மின் அலட்டல்கள் கிடையாது. ஒரே ஒரு இரண்டு லிட்டர் பாட்டில், அதில் நிரப்பப்பட்ட நீர், கொஞ்சம் ப்ளீச்.... அவ்வளவுதான் 60 வாட்ஸ் அளவுக்கு வெளிச்சம் பளிச்.

குடிசைகளின் கூரை வழியாக நீர் நிரப்பப்பட்ட பாட்டில் தொங்கவிடப் படுகிறது. பாதி பாட்டில் கூரைக்கு மேல், மீதி கூரைக்கு உள்ளே, அதாவது வீட்டுக்கு உள்ளே. கூரைக்கு மேல் உள்ள பாட்டில் வழியாக சூரிய ஒளி உள்ளே இறங்குகிறது. அது ஒளிச் சிதறல் காரணமாக உள்ளே இறங்கியதும் வீடு முழுவதும் சிதறுகிறது. சிதறலை அதிகரிக்க, தண்ணீரில் கரைக்கப்பட்ட ப்ளீச் உதவுகிறது. வெளிச்சத்தை மேலும் அதிகப்படுத்திக் காட்ட, நைலான் துணிகள் (சினிமாவில் ரிஃப்ளடக்டர்கள்) போல பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிம்பிள் செட்டப் வழியாக அந்த பாட்டிலில் 50 முதல் 60 வாட்ஸ் பல்பை போல வெளிச்சம் பெற முடிகிறது. பைசா செலவில்லை, ஷாக் இல்லை, மின்சாரமும் இல்லை, மின்கட்டண மிரட்டலும் இல்லை. ஆனால் அறை முழுக்க வெளிச்சம்.

இரவு நேரத்தில் என்ன செய்வது? பௌர்ணமி காலங்களில் பிரச்சனை இல்லை. மற்றபடி விடியும் வரை காத்திருதான்.

தண்ணீர் பாட்டில் பல்பை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவரின் பெயர் மோஸர். 2002ல் பிரேசில் சேரிகளில் இதை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தற்போது Koch Hope என்ற இளைஞர் பட்டாளம் கென்யாவின் இருண்ட சேரிகளில் 100 வீடுகளில் இதை இலவசமாக செய்து தந்திருக்கிறார்கள். மேலும் விரிவுபடுத்த டோனர்களுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களுடைய திட்டத்திற்குப் பெயர் 'Isang Litrong Liwanag' தமிழல் கூறினால் ஒரு லிட்டர் சன்லைட்‘

http://http://www.youtube.com/watch?v=JOl4vwhwkW8

M.Jagadeesan
26-12-2012, 06:47 AM
அட ! இது புதுமையான செய்தியாக உள்ளதே! தமிழ்நாட்டின் மின்வெட்டுப் பிரச்சினையை இதன்மூலம் ஓரளவுக்குத் தீர்க்கலாம் என்று நம்புகிறேன்.

glprabhakaran
31-01-2013, 05:13 AM
நல்ல செய்தி தலைவா

arun
01-02-2013, 04:08 PM
இப்போதைய சூழலில் தமிழகத்துக்கு இது உதவ வாய்ப்பு இருக்கிறது ! ஆனால் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கும் கான்க்ரீட் வீடுகளுக்கும் இது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது