PDA

View Full Version : மன்றப்பண்பலையில் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி...விமர்சனம்.



Hega
25-12-2012, 01:34 PM
கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி பாடல்கள் கேட்டுககொண்டிருக்கின்றேன். ஒலி அமைப்பு மிகத்தெளிவாக இருக்கிறது. ஜார்ஜ் அவர்களால் எழுதப்பட்டு வெளியிடபட்ட இசை ஆலப்த்திலிருந்து பாடல்கள் அருமையான இசையமைப்போடும் இனிமையான குரலோடும் செவிக்குணவாய் இருக்கிறது.ஜார்ஜ் அவர்களில் பாடல்களுக்கிடையான அறிவிப்பு தெளிவாக இருக்கிறது. உச்சரிப்பும் அருமை.

செல்வா , கீதம் அக்கா கிறிஸ்மஸ் தாத்தா குறித்த செய்திகள் மூலம் நிரம்ப தகவல்கள் அறிய முடிகின்றது. கீதம் அக்கா சூப்பர். நிறுத்த வேண்டிய் இடத்தில் நிறுத்தி பேசுவது அழகு.

செல்வா உங்கள் குரல் தேர்ந்த அறிவிப்பாளருக்குரியவிதமாய் தெளிவான் உச்சரிப்போடு இருக்கிறது. பாராட்டுகள் செல்வா


கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி ஆரம்பம் முதல் கேட்க இயலவில்லை இடையில் தான் இணைய முடிந்தது.
மன்னிச்சிருங்கோப்பா..

Hega
25-12-2012, 01:37 PM
செல்வாவோடு இணைந்த இன்னொரு பெண்குரல் அறிவிப்பாளர் யார் என புரியவில்லையே.. கீதம் அக்கா குரல் புரிகிறது.

Hega
25-12-2012, 01:44 PM
ஆனந்தம் ஆனந்தம் பாடும் பாட்டை கேட்டதும் எழுந்து ஆட தோன்றியது. அரும்பாடு பட்டு பக்காவாக தெளிவாக தயார் செய்திருக்கீங்க.

பாடு பட்டோருக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள்.

எல்லோருக்கும் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துகள்.

மதி
25-12-2012, 01:44 PM
ஹேகாக்கா விரைவில் தெரியவரும்.. இன்னுமா கண்டுபிடிக்கல..

Hega
25-12-2012, 01:52 PM
ஹேகாக்கா விரைவில் தெரியவரும்.. இன்னுமா கண்டுபிடிக்கல..


ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் கண்டு பிடிக்காமல் திரியைக்கொழுத்தி போடுவார்களா:huepfen024: ஆனால் நான் யார்னு சொல்லகூடாதே... மேலிடத்து கட்டளையப்பா.. :icon_rollout:

பாண்டி
25-12-2012, 01:52 PM
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள், நீ தானே என் பொன் வசந்தம் பாடல் அருமையாக உள்ளது

Hega
25-12-2012, 02:08 PM
செல்வா கிறிஸ்மஸ் நிகழ்ச்சி பற்றி கூறியபோதே இம்முறை என் பங்களிப்பு சிறிதளவிலாவது இருக்கணும் என முயன்றேன். ஆனாலும் தீடிரென முழங்காலில் ஒரு ஆப்ரேசன் உடனடியாக செய்ய வேண்டிய சூழல் ஹாஸ்பிடல் வாசம் என திட்டங்கள் மாறுபட்டதால் எதையுமே நினைக்க செயல்படுத்த இயலவில்லை.

செல்வா மன்னிக்கவும்.


மிக மிக அருமையாக தெளிவாக ஒலித்தொகுப்பு உருவாக்கப்ட்டிருப்பதில் மகிழ்ச்சி. இம்முறை உறவுகள் பங்களிப்பு மந்தப்ட்டிருக்கிறதா அல்லது இடையில் வந்து இணைந்ததால் பல நல்ல நிகழ்ச்சிகளை தவற விட்டேனோ தெரியவில்லை. மீள் ஒலிபரப்பில் கேட்க முயற்சிக்கிறேன்.

இந்த நிகழ்ச்சி குறித்த என் கருத்து என்னவெனில் ஒவ்வொரு சிறப்பு நிகழ்ச்சிக்கும் தயாராகும் போது இடையிடையே போடும் பாடல்களை கூட அந்தந்த நிகழ்வுக்கு ஏற்ப தயார் செய்யலாம். என்பதே.. ஆரம்பத்தில் தேடல்கள் அதிகம் தேவையாயிருப்பினும் ஒரு நிலைபட்டபின் ஆரம்ப தேடல்களே மிகபெரிய உதவியாயிருக்கும்.

உதாரணமாக கிறிஸ்மஸ் நிகழ்ச்சியின் போது இயலுமானவரை கிறிஸ்தவ கீதங்களை தேடி இடையிடையே இட முயலலாம். சினிமாப்பாட்டு மெட்டிலேயே நிரம்ப பாடல்கள் அந்தந்த சூழலுக்கேற்ப இப்போதெல்லாம் கேட்க முடிகின்றதே..

இருப்பினும் செல்வாவின் தொகுப்பில் வெளிவந்த சிறப்பு நிகழ்ச்சிக்கான பாடல்கள் தேர்வும் சூப்பர. பாராட்டுகள் செல்வா.

மஞ்சுபாஷிணி
25-12-2012, 03:14 PM
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்....

ஜான்
06-01-2013, 04:25 AM
அட!மிக சிறப்பாக நடந்திருக்கிறது!!!

மறு ஒலிபரப்பு நடக்குமா அல்லது சேமிப்புக் கோப்பாக கிடைக்குமா?