PDA

View Full Version : புதிரோ புதிர் எண்-571-05-06-2015



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19

pgk53
10-01-2004, 03:53 PM
புதிரோ புதிர்

1
ஒருவன் ஒரு கண்காட்சிக்குப் போயிருந்தான். அங்கே ஓரிடத்தில் ஒருவன் நின்றுகொண்டு, அவனை அழைத்து, " இதோ பார் நண்பா!.
நான் " உனது மிகச் சரியான எடை என்ன" என்று "இந்தக் காகிதத்தில் எழுதிக் கொடுப்பேன். அப்படி எழுதிக் கொடுப்பது சரியானதாக இருந்தால், நீ எனக்கு நூறு ரூபாய் தரவேண்டும். தவறாக இருந்தால், நான் உனக்கு இருநூறு ரூபாய் கொடுக்கிறேன். சம்மதமா? என்றான்.
அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவனை எடை போட்டுப் பார்க்க எந்தவித உபகரணமும் இல்லை. சவால் விட்டவன் என்னதான் உத்தேசமாகக் கூறினாலும் மிகச் சரியான எடையை அவனால் எப்படி எழுத இயலும். அதனால் தான் வெற்றி பெறுவது உறுதி என்று நினைத்துச் சம்மதித்தான். ஆனால் அவன் மிகச் சரியான விடையை எழுதிக் கொடுத்ததினால் 100 ருபாயை , பேச்சுப்படி கொடுத்துவிட்டுப் போனான்.
கேள்வி:-
எடை பார்க்க எந்த வித உபகரணமும் இல்லாமல் அவனால் எப்படி மிகச் சரியான விடையை எழுத முடிந்தது?

2
நீங்கள் ஒரு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளீர்கள்.
அப்போது ஓட்டத்தில் இரண்டாவதாக ஓடிக்கொண்டிருந்தவனை நீங்கள் முந்திச் சென்றுவிட்டீர்கள்.
கேள்வி:-
இப்போது நீங்கள் எத்தனையாவது இடத்தில் ஓடுகிறீர்கள்?

3
ஒரு மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது...ஆனால் எந்த மனிதனுக்கும் அதில் விருப்பமில்லை.
ஒரு மனிதனால்தான் அது வாங்கப்படுகிறது. ....ஆனால் அது அவனுக்குத் தேவையில்லை.
ஒரு மனிதனுக்கு அது தேவை...ஆனால் அதை வாங்கியது அவனுக்குத் தெரியாது.
அது என்ன????

பாரதி
10-01-2004, 04:14 PM
1. முதலாவது கடியா...?

" உனது மிகச் சரியான எடை என்ன" என்று இந்தக் காகிதத்தில் எழுதிக் கொடுப்பேன் என்றுதானே சொன்னான். சொன்னவிதமே முதலில் சொன்ன வாக்கியத்தை எழுதிக்கொடுத்திருப்பான்.



2. இது கொஞ்சம் குழப்பமான கேள்வி. முந்தியவன் எத்தனையாவது இடத்தில் இருக்கும் போது இக்கேள்வி கேட்கப்பட்டது?



3. சவப்பெட்டி?

mania
10-01-2004, 04:55 PM
1) பாரதி சொன்னதுதான்
2) இரண்டாவதாக
3) சவப்பொட்டி
அன்புடன்
மணியா

இளசு
10-01-2004, 11:49 PM
சபாஷ் பாரதி& மணியா

[கொஞ்சம் தெரிஞ்சா மாதிரி இருந்ததுக்கும் முந்திக்கிடீங்களேப்பா]

pgk53
11-01-2004, 12:49 AM
ஒரு மாடிவீடு.முதல் மாடியில் உள்ள ஹாலில் மூன்று பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதற்குறிய சுவிட்சுகள் கீழேயே மாடிப்படி ஏறும் இடத்தில் உள்ளன.
நீங்கள் முதன்முறையாக அந்த வீட்டுக்குச் செல்கிறீர்கள்.
உங்கள் திறமையை பரிசோதிப்பதற்காக உங்கள் நண்பர், ஒரு பென்சிலை உங்கள் கையில் கொடுத்து, மேலே மாடியில் உள்ள மூன்று பல்புகளில், எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்று கீழே அடையாளம் செய்யும்படி கூறுகிறார்.கூடவே ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார்.
அதாவது, ஒரே ஒருமுறை மட்டுமே எந்த பல்ப் எரிகிறது என்பதைப் பார்க்க மாடிக்குப் போகலாம்.

நீங்கள் எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்????

pgk53
11-01-2004, 12:50 AM
ஒரு தகப்பனும் மகனும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளாகி, தந்தை அந்த இடத்திலேயே இறந்துபோகிறார். அந்தப் பையனுக்கு மிக பலமாக அடிபட்டு, மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறான்.அவனுக்கு உடனடியாக சிக்கலான ஆப்பரேஷன் செய்யவேண்டிய நிலை. மருத்துவரை அவசரமாக அழைத்து அந்தப் பையனுக்கு அப்பரேஷன் செய்யும்படி கூறுகிறார், தலைமை மருத்துவர்.ஆனால் மருத்துவரோ, அந்தப் பையனைப் பார்த்ததும், " ஐயோ மகனே.."...என்று அழுது தன்னால் தனது மகனுக்கு ஆப்பரேஷன் செய்ய இயலாது என்றும், வேறு மருத்துவரை அழைக்கும்படியும் வேண்டுகிறார்.
கேள்வி:-
தந்தைதான் இறந்துவிட்டாரே? இந்த மருத்துவர் ஏன் மகனே என்று அழைத்தார்?

pgk53
11-01-2004, 12:51 AM
1990ல் ஒருவருக்கு வயது 30.
ஆனால் 1995ல் அவருக்கு வயது 25.
இது எப்படிச் சாத்தியம்????

mania
11-01-2004, 01:23 AM
ஒரு தகப்பனும் மகனும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளாகி, தந்தை அந்த இடத்திலேயே இறந்துபோகிறார். அந்தப் பையனுக்கு மிக பலமாக அடிபட்டு, மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறான்.அவனுக்கு உடனடியாக சிக்கலான ஆப்பரேஷன் செய்யவேண்டிய நிலை. மருத்துவரை அவசரமாக அழைத்து அந்தப் பையனுக்கு அப்பரேஷன் செய்யும்படி கூறுகிறார், தலைமை மருத்துவர்.ஆனால் மருத்துவரோ, அந்தப் பையனைப் பார்த்ததும், " ஐயோ மகனே.."...என்று அழுது தன்னால் தனது மகனுக்கு ஆப்பரேஷன் செய்ய இயலாது என்றும், வேறு மருத்துவரை அழைக்கும்படியும் வேண்டுகிறார்.
கேள்வி:-
தந்தைதான் இறந்துவிட்டாரே? இந்த மருத்துவர் ஏன் மகனே என்று அழைத்தார்?

அவர் அந்த பையனின் தாயார்.
அன்புடன்
மணியா

sara
11-01-2004, 01:24 AM
புதிரோ புதிர்

2
நீங்கள் ஒரு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளீர்கள்.
அப்போது ஓட்டத்தில் இரண்டாவதாக ஓடிக்கொண்டிருந்தவனை நீங்கள் முந்திச் சென்றுவிட்டீர்கள்.
கேள்வி:-
இப்போது நீங்கள் எத்தனையாவது இடத்தில் ஓடுகிறீர்கள்?


இரண்டாவது இடத்தில்

mania
11-01-2004, 01:25 AM
1990ல் ஒருவருக்கு வயது 30.
ஆனால் 1995ல் அவருக்கு வயது 25.
இது எப்படிச் சாத்தியம்????

அது கி.மு வாக இருந்தால் சாத்தியமே !!
அன்புடன்
மணியா

sara
11-01-2004, 01:26 AM
1990ல் ஒருவருக்கு வயது 30.
ஆனால் 1995ல் அவருக்கு வயது 25.
இது எப்படிச் சாத்தியம்????

கி.மு 1990 மற்றும் கி.மு. 1995- ஆ ?

sara
11-01-2004, 01:27 AM
மணியன், எனது விடையை தந்துவிட்டு பார்த்தால், தாங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள்!

mania
11-01-2004, 01:27 AM
ஒரு மாடிவீடு.முதல் மாடியில் உள்ள ஹாலில் மூன்று பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதற்குறிய சுவிட்சுகள் கீழேயே மாடிப்படி ஏறும் இடத்தில் உள்ளன.
நீங்கள் முதன்முறையாக அந்த வீட்டுக்குச் செல்கிறீர்கள்.
உங்கள் திறமையை பரிசோதிப்பதற்காக உங்கள் நண்பர், ஒரு பென்சிலை உங்கள் கையில் கொடுத்து, மேலே மாடியில் உள்ள மூன்று பல்புகளில், எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்று கீழே அடையாளம் செய்யும்படி கூறுகிறார்.கூடவே ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார்.
அதாவது, ஒரே ஒருமுறை மட்டுமே எந்த பல்ப் எரிகிறது என்பதைப் பார்க்க மாடிக்குப் போகலாம்.

நீங்கள் எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்????


:roll: :roll: :roll: :idea: :idea: :idea: :?: :?: :?: :!: :!: :!:

கொஞ்சம் யோசிக்கிறேன்
அன்புடன்
மணியா

Nanban
11-01-2004, 03:18 AM
வித்தியாசப் புதிர்கள்......... சராவும் கூட்டணியில் இணைந்து கொண்டார் என்றே நினைக்கிறேன்...... வாழ்த்துகள் சரா, மணியா, பாரதி, பிஜிகே...... மற்றும் ஊக்கம் தருவதற்கு தவறாத இளாசு.....

mania
11-01-2004, 04:01 AM
முதலில் முதல் சுவிட்சை போட்டுவிட்டு (நன்பரை கீழெயே நிக்க சொல்லிவிட்டு ) மேலே போய் எந்த லைட் எரிகிறது என்று பார்த்துக்கொண்டு அவரை அடுத்த சுவிட்சை போட சொல்ல வேண்டும். அதையும் பார்த்து விட்டல் பின் கீழே வந்து மூண்றாவதையும் மார்க் பண்ணிவிடலாம்
அன்புடன்
மணியா

இளசு
11-01-2004, 08:26 AM
கிமு,கிபி.. மணியா &சரா அருமை!

மணியாஆஆஆஆஆஆஆஆஆ!
தலை தலைதான்...
(தலையின் தலைவி தலைவிதான்..)

pgk53
11-01-2004, 09:00 AM
அவரை அடுத்த சுவிட்சை போட சொல்ல வேண்டும்.என்று குறிப்பிட்டிருந்தீர்கள் நண்பர் மணியா ......அது தவறு.
நண்பர் உங்கள் திறமையைத்தானே சோதிக்கிறார்.அவரை வேலை ஏவலாமா?

mania
11-01-2004, 11:00 AM
யோசித்தேன்.....இது பென்சிலின் லெட் சம்பந்தப்பட்டது. டக் என்று தோணமாட்டேன்கிறது....மற்றவர்கள் பதில் சொல்லவில்லை என்றால் நான் கொஞ்சம் யோசிக்கிறேன்...சரியா
அன்புடன்
மணியா

இக்பால்
11-01-2004, 11:12 AM
ஒரு ஸ்விட்ச் போட்டு மேலே சென்று பார்த்தால் எரியும் ஒன்று தெரியும்.
மீதி இருக்கும் இரண்டில் ஒரு பல்பை கழற்றிக் கொண்டு வந்து விடுங்கள்.
வந்து முதல் ஸ்விட்சை குறியிட்டு அணைத்துவிட்டு இரண்டாவது ஸ்விட்ச்சைப்
போடுங்கள். மேலே இருந்து வெளிச்சம் வந்தால் நீங்கள் கழற்றிக் கொண்டு
வந்த பல்ப்பின் ஸ்விட்ச் அது அல்ல. ஆகவே இப்பொழுது மூன்றையும்
குறியிட்டு விடலாம்.

-அன்புடன் இக்பால்.

சேரன்கயல்
11-01-2004, 12:06 PM
சபாஷ்...
தலையும், சராவும் கலக்கியிருக்காங்க...
அண்ணன் இக்பால் மட்டும் சளைச்சவரா...
பல்பை பிடுங்கிட்டு வந்து அசத்திட்டார்ல...
வாழ்த்துக்கள்...மூவருக்கும், மூளையை கசக்கும் பிஜிகேவுக்கும்...

இளசு
11-01-2004, 12:50 PM
இளவல்ஸ் - கலக்கல்ஸ்!

இக்பால்
11-01-2004, 01:29 PM
சேரன்கயல் தம்பி... நீங்கள் பல்பை பிடுங்கிவிட்டு என்பதை பல்லை
பிடுங்கிவிட்டு எனப் படித்துவிட்டு சிறிது நேரம் அசந்துவிட்டேன்.
-அன்புடன் அண்ணா.

இக்பால்
11-01-2004, 01:29 PM
என் அண்ணாவுக்கு இனிமையான நன்றிகள்.

-அன்புடன் இளவல்.

மன்மதன்
11-01-2004, 01:33 PM
இக்பால் அண்ணா பதில் அருமை,, நான் பேனாவெல்லாம் எடுத்து யோசிக்க ஆரம்பித்து விட்டேன்..

இக்பால்
11-01-2004, 01:35 PM
மன்மதன் தம்பி...இருங்க தம்பி...பிஜிகே வந்து சரியா எனச் சொல்லட்டும்.

மன்மதன்
11-01-2004, 01:46 PM
அதுவும் சரிதான் அண்ணா.. மார்க்கெல்லாம் போடுவாரா?

இக்பால்
11-01-2004, 01:53 PM
மார்க் வேண்டாங்க தம்பி. அது போட்டி, பொறாமை கொண்டு வந்து விடும்.
சும்மா...சரியா...தவறா...சொன்னால் போதும். சரியான விடை கொண்டு வர
நம் மன்றத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். விடுபடாத புதிர்கள், கணக்குகள்
நம் மன்றத்தில் குறைவுதான்.-அன்புடன் அண்ணா.

மன்மதன்
11-01-2004, 01:57 PM
எனக்கு நீங்க சொன்னதுதான் தோன்றியது.. அதனால்தான் கேட்டேன்.

இக்பால்
11-01-2004, 01:59 PM
அய்யய்யோ...மதன் தம்பி...சும்மா சொன்னேன். எங்கே சிரிங்க!

மன்மதன்
11-01-2004, 02:05 PM
:lol:

இக்பால்
11-01-2004, 02:09 PM
எனக்கும் தான் தம்பி.

pgk53
11-01-2004, 02:33 PM
அன்பு இக்பால் அவர்களே...தாங்கள் அளித்த விடை தவறு என்பதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.மாடியில் லைட் எரிகிறதா? இல்லையா என்று எல்லா வீடுகளிலும் கீழே இருந்தே பார்க்க இயலாது. ஒன்று வெளியே போய் சன்னலில் வெளிச்சம் தெரிகிறதா என்று பார்க்கவேண்டும். இங்கே அதெற்கெல்லாம் வாய்ப்பு இல்லை.இதுவும் அப்படிப்பட்ட வீடு என்று வைத்துக் கொள்ளுங்கள்.
கிட்டத்தட்ட பாதிவரை வந்துவிட்டீர்கள்.

pgk53
11-01-2004, 02:35 PM
யார் குற்றவாளி ?

அன்று ஞாயிற்றுக் கிழமை.காலையில் தாமதமாக எழுந்து குளிக்கப்போனான் அந்தக் குடும்பத் தலைவன்.அவனது மனைவி சிறிது நேரம் கழித்து பாத்ரூம் போனாள்.அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக்
கிடப்பதைக்கண்ட மனைவி, உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தாள்.காவலர்கள் வந்தார்கள். ஆய்வாளர் தனது விசாரனையைத் துவக்கினார்.விசாரனையின் முடிவில் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.
1- மனைவி காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
2- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சமையல்காரன் சொன்னான்.
3- பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தோட்டக்காரன் சொன்னான்.
4- தபால்காரரிடம் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருந்ததாக வேலைக்காரன் கூறினான்.
5- காரைத் துடைத்துக்கொண்டிருந்ததாக டிரைவர் கூறினான்.
இதையெல்லாம் கேட்ட ஆய்வாளர், உடனே குற்றவாளியைக் கைது செய்தார்.
யார் குற்றவாளி???

mania
11-01-2004, 03:21 PM
வேலைக்காரன்தான் குற்றவாளியாக இருக்கவேண்டும். எந்த தபால்காரர் காலைவேளையில் தபால் கொடுக்க வருகிறார்.?
அன்புடன்
மணியா

பாரதி
11-01-2004, 03:24 PM
மணியாவின் விடை சரி. ஆனால் காரணம் அதுவல்ல. அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆகவே தபால் பட்டுவாடா கிடையாது!

mania
11-01-2004, 03:36 PM
ஆமாம் பாரதி . ஆக நீதான் சரியாக கண்டுபிடித்திருக்கிறாய். பாராட்டுக்கள்
அன்புடன்
மணியா

poo
11-01-2004, 05:30 PM
மிகவும் சுவாரஸ்யம்...

தலையில் ஆதிக்கம் தலைதூக்கிவிடாமல் இருக்க பாரதியும் இக்பால் அண்ணனும் போட்டி..

நடத்துங்கள்.. பாராட்டுக்களை வாங்கிக்கொண்டே...

இளசு
11-01-2004, 10:44 PM
போட்டுப் பின்றாங்களே நம்ம மக்கள்... அருமை..

pgk53
12-01-2004, 12:56 AM
லைட் சுவிட்ச் புதிரை நானே அவிழ்க்கிறேன்.
முதல் சுவிட்சைப் போடுங்கள்.
இரண்டு நிமிடம் கழித்து, அந்த சுவிட்சை அனைத்துவிட்டு, அடுத்த சுவிட்சைப் போடுங்கள்.
மேலே போகவும். இப்போது, ஒரு பல்ப் எரிந்துகொண்டிருக்கும். அது இரண்டாவது சுவிட்சுக்குரிய பல்ப்.
மற்ற இரு பல்புகளில் எந்த பல்ப் சூடாக இருக்கிறது என்று தொட்டுப் பாருங்கள். சூடாக இருப்பது, முதலில் போட்ட சுவிட்சின் பல்ப்.
சூடு இல்லாமல் இருப்பது, மூன்றாவது சுவிட்சுக்குரியது.

pgk53
12-01-2004, 12:57 AM
நண்பரே......நீங்கள் ஏதோ ஒரு குற்றம் செய்ததற்காக, ஆளில்லாத ஒரு தீவில் உங்களை விட்டுவிடும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது, என்று வைத்துக்கொள்வோம். உங்களை ஒரு ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டுபோய் ஒரு தீவில் தள்ளிவிட்டுவிடுகிறார்கள்.

அந்தத் தீவு ஒரு விசித்திரமான தீவு. பொதுவாக எல்லா இடங்களிலும் இருக்கும் கடற்கரை போல் இல்லாமல், கடல் மட்டத்தில் இருந்து 'சரேல்' என்று தீவில் எல்லா பக்கங்களிலும் உயர்வாக உள்ளது. கடலில் இறங்கினால் ஆரம்ப ஆழமே 20 அடிக்கும் மேலே இருக்கும். அதனால் நீச்சல் தெரியாமல் கடலில் இறங்க முடியாது

உங்களுக்கு நீச்சல் தெரியாது.
அங்கே படகு கிடையாது.சரி மரங்களை அறுத்து படகு செய்யலாம் என்றால்,
உங்களிடம் எந்த கருவியும் கிடையாது.உங்களைக் காப்பாற்றி அழைக்கும்படி எவரையும் கூப்பிட தொலைபேசி வசதி இல்லை.
அடுத்தாற்போல் பக்கத்தில் உள்ள தீவோ, குறைந்தது 500 மைல்களுக்கு அப்பால் உள்ளது. அதனால் தீயைப் பார்த்துவிட்டுப் புறப்பட்டு வந்து உங்களைக் காப்பாற்றவும் வாய்ப்பு இல்லை.

மேலும் அந்தத் தீவு, அடர்ந்த மரங்கள் கொண்டதாக இருந்தது.வடக்கு தெற்காக அமைந்தது. தீவின் அகலம் 100 அடிதான். ஆனால் நீளமோ பத்து மைல்கள். நீங்கள் அந்தத் தீவின் மத்தியப் பகுதியில் இருக்கிறீர்கள்.திடீரென்று தீவின் வடக்கு எல்லையில் தீபிடித்துவிட்டது. காட்டுத்தீயல்லவா?கனஜோராக எரிய ஆரம்பித்தது. காற்றும் வடக்கில் இருந்து தெற்காக, மணிக்கு ஒரு மைல் வேகத்தில் வீச ஆரம்பித்ததினால், தீயும் அதே வேகத்தில் காட்டை கபளீகரம் செய்துகொண்டு பரவி வருகிறது.அகலம் குறைவாக இருப்பதினால் 100 அடியையும் கொஞ்சம்கூட விட்டு வைக்காமல் எரித்துக்கொண்டு வருகிறது. இன்னும் பத்து மணி நேரத்தில் மொத்தத் தீவுமே எரிந்து பஸ்பமாகிவிடும்.
நீங்கள் தீவின் மத்தியப் பகுதியில் இருக்கிறீர்கள் என்று முன்னரே சொல்லியிருக்கிறேன்.தப்பிக்க வழி தேடாவிட்டால், நீங்களும் எரிந்து பஸ்பமாகிவிடுவீர்கள்.எப்படித் தப்புவது? என்று யோசியுங்கள்?

mania
12-01-2004, 03:07 AM
லைட் சுவிட்ச் புதிரை நானே அவிழ்க்கிறேன்.
முதல் சுவிட்சைப் போடுங்கள்.
இரண்டு நிமிடம் கழித்து, அந்த சுவிட்சை அனைத்துவிட்டு, அடுத்த சுவிட்சைப் போடுங்கள்.
மேலே போகவும். இப்போது, ஒரு பல்ப் எரிந்துகொண்டிருக்கும். அது இரண்டாவது சுவிட்சுக்குரிய பல்ப்.
மற்ற இரு பல்புகளில் எந்த பல்ப் சூடாக இருக்கிறது என்று தொட்டுப் பாருங்கள். சூடாக இருப்பது, முதலில் போட்ட சுவிட்சின் பல்ப்.
சூடு இல்லாமல் இருப்பது, மூன்றாவது சுவிட்சுக்குரியது.

அடாடா....பிரமாதம் பிஜிகே. நான் சும்மா மூளையை ...!!!! போட்டு கசக்கிக்கொண்டிருந்தேன். பதிலா கொஞ்சம் சூடு பண்ணியிருந்தால்.......
அன்புடன்
மணியா

இக்பால்
12-01-2004, 04:10 AM
பிஜிகே நண்பர் அவர்களே... ஆபத்து எனில் 110 மாடியிலிருந்து கடினமான
பொருள்களுக்கிடையில் குதிக்கும்பொழுது 20 அடி உயரத்திலிருந்து அதுவும்
தண்ணீரில் குதிப்பதைத் தவிர வேறு வழி எனக்கு தோன்ற மாட்டேன்
என்கிறது. மற்றவர்கள் வழிகள் சொல்லட்டும்.- அன்புடன் இக்பால்.

Mathu
12-01-2004, 03:57 PM
நெருப்பு எரியும் இடத்துக்கு போய் ஒரு
எரியும் கொள்ளியை துக்கிக்கொண்டு
தெற்குபக்கமாக ஓட வேண்டும், கரைக்கு
1 ஓ 2 மைல் முன்னமே காட்டுக்கு
தீ முட்டினால் வடக்கே இருந்து வரும் தீ
அவ் இடத்தை அடையும் முன்னே மிகுதி பகுதி
எரிந்து முடிந்திருக்கும், தீ எரிந்து அணைந்த
இடம் தீயில் இருந்து பாதுகாக்கும்.
:roll: :wink: :roll:

pgk53
13-01-2004, 12:52 AM
அருமையான பதில் மது அவர்களே.
வாழ்த்துக்கள்....நன்றி....சரி அப்படியே
அடுத்த புதிரையும் அவிழ்த்துவிடுங்கள்.

pgk53
13-01-2004, 12:53 AM
கதையிலே ஒரு புதிர்- 20
தண்னீர் காட்டும் புதிர்

மதுரையில் நாயக்கர் புதுத் தெருவில் இருக்கும் சக்தி-சிவன் திரை அரங்கில், ஒரு திரைப்படம் பார்த்து வரலாம் என்று எனது மனைவியுடன் சென்றிருந்தேன். சிறிது தாமதமாகச் சென்றதால் திரையரங்கின் நுழைவாயிலில் "HOUSE FULL" என்ற அறிவிப்பு தொங்கியது.ஏமாற்றம் அடைந்தவர்களாய் திரும்ப நினைக்கும்போது, " அடடே PGK வாங்க வாங்க.....என்ன இடம் கிடைக்கவில்லையா" என்ற குரல் கேட்டுத் திரும்பினால், அதே தெருவில் வசிக்கும் எனது நண்பர் ஒருவர்.அவருடன் பேசியபடி அவரது இல்லம் சென்றேன்.நான் மட்டும் வரவேறு அறையில் அமர்ந்து நண்பருடன் கதைகள் பேச, என் மனைவி உள்ளே சென்று அவரது குடும்பத்தினருடன் பேச ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் சென்றது.நண்பரின் மகன் உள்ளேயிருந்து வந்தான். "அன்கிள்...ஆண்ட்டி ஒரு பெரிய புதிரை திறமையுடன் விடுவித்து விட்டார்கள்." என்றபடியே நண்பரின் பக்கத்தில் அமர்ந்தான். "அது சரி எங்கே போனாலும் இந்த புதிர் விஷயம் நம்மைத் துரத்துகிறதே" என்றபடி அப்படி என்னப்பா புதிர் என்றேன்.அவன் கூற ஆரம்பித்தான்.

"இரண்டு பிளாஸ்டிக் ஜக் நிறைய தண்ணீர் உள்ளது.பக்கத்தில் ஒரு பெரிய டிரம் இருக்கிறது.
நீங்கள் அந்த ஜக்கில் உள்ள தண்ணீரை டிரம்மில் ஊற்றவேண்டும்.
இதற்கு சில நிபந்தனைகள் உண்டு.
அந்த ஜக்கை அப்படியே எடுத்து டிரம்மில் ஊற்றக்கூடாது.
வேறு சிறிய பாத்திரங்களை உபயோகித்தும் தண்ணீரை டிரம்மில் ஊற்றக்கூடாது.ட்யூப் போட்டும் தண்ணீரை மாற்றக்கூடாது
ஆனால் ஜக்கில் உள்ள தண்ணீர் டிரம்முக்குள் இருக்கும்படி செய்யவேண்டும்.
அத்துடன் டிரம்முக்குள் உள்ள தண்ணீரில், எந்த ஜக்கில் இருந்து வந்த தண்ணீர் எது என்பதையும் தனித்தனியாக அடையாளம் காட்டவேண்டும்.உங்களால் முடியுமா அன்கிள்" என்று கேள்வியைத் தொடுத்தான்.என் மனைவியும் முகத்தில் புதிரை விடுவித்த பெருமை பொங்க என் பக்கத்தில் வந்தமர்ந்தாள்.அவனுக்கு நான் விடை அப்புறமாகச் சொல்லிக்கொள்கிறேன்.
முதலில் நீங்கள் முயற்சி செய்து பாருங்களேன்.

sara
13-01-2004, 02:13 AM
:roll:

(தலை கிறுகிறுன்னு சுத்துற மாதிரி ஒரு 'Emoticon' இல்லாதது எவ்வளவு பெரிய் குறைன்னு இன்னக்கித்தான் தெரிஞ்சது. ஏன்னா என்னோட நெலமைய வெளங்க வைக்க முடியலயே..!)

mania
13-01-2004, 02:55 AM
அட....எங்கேப்பா ஜாம் பசார் ஜக்...கு........இந்த சைதாப்பேட்டை கொக்குவோட கேள்விக்கு பதில் சொல்லப்பா...............என்ன நான் சொல்லனுமா.........இதெல்லாம் ஓடு மீன்கள்...நான் கொக்காக்கும்....உறு மீன் வந்தால்தான்.....ஹி.....ஹி....ஹி....
அன்புடன்
மணியா
எங்கேப்பா இந்த மது....சிம்ப்பிளா கேட்டுக்கொண்டிருந்த பிஜிகேயை உசுப்பிவிட்டு.......எப்பிடி கேக்கிறார் பாருங்க இப்போ...........???!!!

mania
13-01-2004, 07:41 AM
நெருப்பு எரியும் இடத்துக்கு போய் ஒரு
எரியும் கொள்ளியை துக்கிக்கொண்டு
தெற்குபக்கமாக ஓட வேண்டும், கரைக்கு
1 ஓ 2 மைல் முன்னமே காட்டுக்கு
தீ முட்டினால் வடக்கே இருந்து வரும் தீ
அவ் இடத்தை அடையும் முன்னே மிகுதி பகுதி
எரிந்து முடிந்திருக்கும், தீ எரிந்து அணைந்த
இடம் தீயில் இருந்து பாதுகாக்கும்.
:roll: :wink: :roll:

பாராட்டுக்கள் மதன்............முன் அனுபவமோ....... :wink: :wink:
அன்புடன்
மணியா

mania
13-01-2004, 07:46 AM
:roll:

(தலை கிறுகிறுன்னு சுத்துற மாதிரி ஒரு 'Emoticon' இல்லாதது எவ்வளவு பெரிய் குறைன்னு இன்னக்கித்தான் தெரிஞ்சது. ஏன்னா என்னோட நெலமைய வெளங்க வைக்க முடியலயே..!)

எமோஷன் எதுக்கு. அதான் உன் அவதாரமே சுத்திக்கொண்டே தானே இருக்கு (சிம்பாலிக்கா) :wink: :wink:
அன்புடன்
மணியா

சேரன்கயல்
13-01-2004, 11:35 AM
சோக்கா சொன்னீங்க தலை...

பாலமுருகன்
13-01-2004, 11:51 AM
வாழ்த்துக்கள் பிகேஜி... அருமையான தொடர்... மூளையை கசக்கிபிழிய....

யாரவது சொல்லட்டும் அப்புரமா வர்றேன்..... பதிலோடா

poo
13-01-2004, 12:00 PM
சோக்கா சொன்னீங்க தலை...

புதிருக்கு விடை என்னாச்சு சேரன்?!!

சேரன்கயல்
13-01-2004, 12:44 PM
இருங்க பூ...
இரு டிரம் தண்ணி குடிச்சிட்டு வந்துடறேன்... :wink:
(போட்டு வாங்கறீரே பூ...)

பாலமுருகன்
13-01-2004, 12:57 PM
pkg அவர்களே.. ஒரு சந்தேகம்.... ஒரு ட்ரம்தானே உள்ளது.... எப்படி இரண்டு ஜக்கிலிருந்தும் ஊற்றிய நீரை பிரித்துகாட்டுவது?

மன்மதன்
13-01-2004, 01:27 PM
இரண்டு ஜெக் தண்ணீரையும் உறையவைத்து ட்ரம்மில் போட்டுவிட வேண்டியதுதான்.. ஊற்றத்தானே கூடாது, ஐஸ்கட்டியை எடுத்துபோடலாமே. பிறகு இரண்டு ஐஸ்கட்டிகளும் தனித்தனியே இருக்கும் போதே சொல்லிவிடலாமே எந்த ஜெக்குடையது என்று..


இப்படித்தான் ஆர்வக்கோளாரா எதையாவது சொல்லி குட்டு வாங்கி கொள்வேன்..

poo
13-01-2004, 01:44 PM
இருங்க பூ...
இரு டிரம் தண்ணி குடிச்சிட்டு வந்துடறேன்... :wink:
(போட்டு வாங்கறீரே பூ...)

2 டிரம்மா?!!

சேரன்... பாண்டி பார்ட்டியில உங்களை சேர்த்துக்கிறது யானையை கட்டி தீனி போடறமாதிரிபோல !! :shock:

mania
13-01-2004, 03:57 PM
இருங்க பூ...
இரு டிரம் தண்ணி குடிச்சிட்டு வந்துடறேன்... :wink:
(போட்டு வாங்கறீரே பூ...)

2 டிரம்மா?!!

சேரன்... பாண்டி பார்ட்டியில உங்களை சேர்த்துக்கிறது யானையை கட்டி தீனி போடறமாதிரிபோல !! :shock:

:lol: :lol: :lol: சேரன் நான் அப்போலிருந்து சொல்லிகிட்டே இருக்கேன். நீ கேக்கமாட்டேன் என்கிறாய். சொல்லாம கொள்ளாம போனாதான் உண்டு பாண்டிக்கு. இல்லேனா பூ .....எஸ்கேப்தான்....அதுவும் வெறும் தண்ணியே இப்படி குடிச்சா..... :wink: :wink: :wink:
அன்புடன்
மணியா

Mathu
13-01-2004, 04:13 PM
பாராட்டுக்கள் மதன்............முன் அனுபவமோ....... :wink: :wink:
அன்புடன்
மணியா

முன் அனுபவம் கிடையாது ஆனால் பின்னுக்கு வரலாமில்லையா
அதான் தற்பாதுகாப்பு....ஹீ ஹீ.

இக்பால்
13-01-2004, 04:16 PM
இப்படித்தான் ஆர்வக்கோளாரா எதையாவது சொல்லி குட்டு வாங்கி கொள்வேன்..


மோதிரக் கையால்தானே! நானும் இதையேத்தான் நினைத்தேன் மதன் தம்பி.

Mathu
13-01-2004, 04:16 PM
mania wrote:
எங்கேப்பா இந்த மது....சிம்ப்பிளா கேட்டுக்கொண்டிருந்த பிஜிகேயை உசுப்பிவிட்டு.......எப்பிடி கேக்கிறார் பாருங்க இப்போ...........???!!!

ஹிம் இப்போ கொங்சம் சூடா போகுதில்லையா..?
உங்களுக்கென்ன அண்ணா..! அண்ணி இருக்காங்க உதவிக்கு, :lol:
நம்ம பாட்டு தான் திண்டாட்டம். :oops:

இக்பால்
13-01-2004, 04:27 PM
மது கவலை வேண்டாம். விரைவில் திருமணம் செய்து விடலாம்.

-அன்புடன் அண்ணா.

poo
13-01-2004, 05:06 PM
மது கவலை வேண்டாம். விரைவில் திருமணம் செய்து விடலாம்.:)

-அன்புடன் அண்ணா.

சேரன் கேட்டீயா சேதி....

கல்யாணம் பண்ணா "மது" (பற்றிய) கவலை வேண்டாமாம்!!!

sara
13-01-2004, 05:51 PM
:roll:

(தலை கிறுகிறுன்னு சுத்துற மாதிரி ஒரு 'Emoticon' இல்லாதது எவ்வளவு பெரிய் குறைன்னு இன்னக்கித்தான் தெரிஞ்சது. ஏன்னா என்னோட நெலமைய வெளங்க வைக்க முடியலயே..!)

எமோஷன் எதுக்கு. அதான் உன் அவதாரமே சுத்திக்கொண்டே தானே இருக்கு (சிம்பாலிக்கா) :wink: :wink:
அன்புடன்
மணியா

இந்த கமெண்ட் யாராவது ஒருத்தர்கிட்ட இருந்து வரும்ன்னு எதிர்பார்த்தேன். வந்துருச்சு..:)

pgk53
14-01-2004, 12:48 AM
அருமையான அதேசமயம் சரியான பதில் மன்மதன் அவர்களே.
நன்றி

pgk53
14-01-2004, 12:50 AM
அவன் பாத்ரூமிற்குள் நுழைந்தான்.உண்மையான துப்பாக்கி அவன் கையில் இருந்தது.
உண்மையான குண்டுகள் அதில் நிரப்பப்பட்டிருந்தது..
துப்பாக்கியால், அவன் தனது மார்புக்கு குறிவைத்து சுட்டான்.
குறி தவறவில்லை.
பிறகு அவன் உயிருடன் எந்தவித ரத்தமும் சிந்தாமல் வெளியே வந்தான்.

கேள்வி:-....இது எப்படி சாத்தியமாகும்.?

sara
14-01-2004, 02:09 AM
கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தின் மார்பை சுட்டிருப்பான்..

அறிஞர்
14-01-2004, 02:37 AM
கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தின் மார்பை சுட்டிருப்பான்..:)

என்ன சரவணா.. கலக்குகிறீர்கள்....

poo
14-01-2004, 11:56 AM
இருந்த ஒரே ஒரு எளிய புதிருக்கும் சரா பதில் சொல்லிவிட்டார்... வாழ்த்துக்கள் நண்பரே!!

pgk53
14-01-2004, 04:00 PM
ஒரு மந்திரவாதி தனது வித்தைகளை சபையில் காட்டிக்கொண்டிருந்தான்.அப்போது, தான், தண்ணீருக்குக் கீழே முப்பது நிமிடங்கள், எந்தவித உபகரணங்களும் இல்லாமல் இருந்து காட்டமுடியும் என்றும், யாராவது இதுபோல் செய்யமுடியுமா? என்றும் சவால் விட்டான். அப்படி செய்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதாகவும் கூறினான். உடனே, ஒரு சிறுவன் எழுந்து தான் 40 நிமிடங்கள் தண்ணீருக்குக் கீழே இருக்க இயலும் என்று கூறவே மந்திரவாதியும் அதற்குச் சம்மதித்தான்.
அந்தச் சிறுவன் தான் கூறியதுபோலவே தண்ணீருக்குக் கீழே 40 நிமிடங்கள் இருந்து பரிசைப் பெற்றுச் சென்றான்.?
கேள்வி:.......அந்தச் சிறுவன் அந்தச் சாதனையை எப்படிச் செய்ய முடிந்தது?

Mathu
14-01-2004, 07:10 PM
தண்ணீருக்கு கீழே தானே தண்ணீருக்கு உள்ளே இல்லையே..! :roll:

இளசு
14-01-2004, 11:13 PM
சரா, மதன்
என்னமோ போங்க.. எப்படீங்க..???

pgk53
15-01-2004, 01:02 AM
ஒரு லாரி நிறைய சுமை ஏற்றிப் போகிறது.வழியில் ஒரு ரயில் பாலம். லாரி அந்தப் பாலத்தின் அடியில் உள்ள சாலையில்தான் போகவேண்டும்..ஆனால் பாலத்தின் உயரத்தைவிட லாரியின் சுமை ஒரு அங்குலம் அதிகமாக உள்ளது. அங்கே, லாரியில் இருக்கும் சுமையை இறக்க எந்த வசதியும் இல்லை. ஆனால் லாரி எப்படியும் அந்த வழியாகத்தான் போயாகவேண்டும். லாரி ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் எந்த சிக்கலும் இன்றி, பாலத்தில் மோதாமல் , லாரி கடந்து போனது. லாரி ஓட்டுனர் என்ன செய்தார்?

madhuraikumaran
15-01-2004, 04:10 AM
எல்லா டயரிலும் கொஞ்சம் போல காற்றை இறக்கி விட்டால் உயரம் குறைந்து விடும். (ஆனால் அப்படியே ரொம்ப தூரம் போக முடியாது. பாலம் தாண்டியதும் காற்றடிக்க வேண்டும்... இல்லையேல் டயர் பணால் !!!).

அறிஞர்
15-01-2004, 06:05 AM
சரா, மது, மதுரை வாழ்த்துக்கள்.....

கலக்கான பதில்கள்..

poo
15-01-2004, 12:10 PM
எப்ப்டீங்க சாமிகளா...

இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?!!

Mathu
15-01-2004, 12:45 PM
ம.கு...கேள்வியை பார்ததும் எனக்கும் இதே தான் தோணிச்சு,
இப்போ தான் புதிய மொடல் லாரிகள் வந்தாகி விடதே
உயர்த்தை குறச்சு கூட்ட கூடியதா.... :wink: :lol:

pgk53
15-01-2004, 04:22 PM
நீங்கள் ஒரு அறையில் இருக்கிறீர்கள்.அந்த அறையிலே இரு இரும்புத் துண்டுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மட்டும் காந்த சக்தி உடையது.எது காந்த சக்தி உள்ளது என்று சோதிக்க விரும்புகிறீர்கள். அதனால், அந்த வேறு ஏதாவது இரும்பு உள்ளதா , என்று தேடிப்பார்க்கிறீர்கள். வேறு இரும்பே இல்லை. {சன்னல், பூட்டு சாவி என்று யோசிக்கவேண்டாம்.. இரும்பு இல்லை என்பதுதான் நிலைமை}அந்த அறையை விட்டு வெளியே போகாமலேயே, அந்த இரண்டு இரும்புத் துண்டுகளில் காந்த சக்தி உள்ளது எது என்பதை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்.முடியுமா?

முத்து
15-01-2004, 05:08 PM
எந்தக் காந்தத்தையும் தொங்கவிட்டால் வடக்கு தெற்காக நிற்கும் ..
ஆனால் இரும்புத்துண்டு அவ்வாறு நிற்காகையால்
இரும்புத் துண்டைக் கண்டுபிடித்துவிடலாம் ...
என்று நினைக்கிறேன் ...

இளசு
15-01-2004, 10:02 PM
அருமை முத்து...

வேதியியலா..இயற்பியலா.. தத்துவவியலா..உளவியலா...

அறிவியல் அறிவொளி என் முத்து..

pgk53
16-01-2004, 01:33 PM
சரியான பதில் முத்து....வாழ்த்துக்கள்...

pgk53
16-01-2004, 01:36 PM
மன்மதராசா சிங்கப்பூர் சென்றிருந்தபோது ஒரு கடையில் அழகான வேலைப்பாடமைந்த தூண்டில் ஒன்றைப் பார்த்தார்...உடனே அவருக்கு தனது நண்பர் முத்துவின் நினைவுதான் வந்தது. தூண்டில்களை சேகரிப்பது முத்துவின் பழக்கம் அல்லவா? என்று நினைத்தபடி, மன்மதராசா அந்தத் தூண்டிலை வாங்கினார். அவர் இந்தியா திரும்ப எப்படியும் இரண்டு மாதங்கள் ஆகிவிடும் என்பதினால், தூண்டிலை முத்துவுக்கு பொங்கல் பரிசாக அனுப்பிவைக்க விரும்பினார்.அதனால் தூண்டிலை அப்படியே பார்சல் காகிதத்தில் சுருட்டி சிங்கப்பூரில் ஒரு தபால் நிலையத்துக்குக் கொண்டு போனார்.
தபால் நிலையத்தில், மன்மதராசா கொடுத்த தூண்டில் பார்சலை வாங்கியதும், நீளத்தை அளந்து பார்த்தார்கள். அது 4 அடி 1 அங்குலம் நீளம் இருந்தது. உடனே தூண்டிலை திருப்பிக்கொடுத்துவிட்டு, "4 அடிக்குமேல் அதிகமாக இருக்கும் எந்தப் பொருளையும் பார்சலில் எடுக்க சிங்கப்பூர் தபால் துறை அனுமதிப்பதில்லை" என்று கூறிவிட்டார்கள்.
மன்மதராசாவுக்கு ஒரே ஏமாற்றம். எப்படியும் அந்தத் தூண்டிலை நண்பர் முத்துவுக்கு அனுப்பியே ஆகவேண்டும் என்று சிந்தனை செய்தார். ஒரு வழி புலப்பட்டது. அதன்படி மறுபடியும் பேக் செய்துகொண்டுபோய் தபால் நிலையத்தில் கொடுத்தார். அவர்கள் இம்முறையும் அளந்து பார்த்தார்கள். திருப்தி அடைந்து பார்சலில் அனுப்ப எடுத்துக்கொண்டார்கள்.

மன்மதராசாவின் அந்த வழி என்ன???.அவர் தூண்டிலை மடக்கவில்லை....வெட்டி நீளத்தைக் குறைக்கவில்லை.இருந்தாலும் பார்சலில் அனுப்ப எடுத்துக்கொண்டார்கள்...அது எப்படி???

Mathu
16-01-2004, 02:37 PM
நம்ம மன்மத ராசா தானே..!
அவருக்கு தோணாததா? பேசாம கடைக்கு போய்
ஒரு 1 அடி அகலத்திலும் 4 அடி நீளத்திலும் 1 பெட்டி
வேண்டி அதுக்குள்ள தூண்டில சரிச்சு வச்சு முத்துவுக்கு
அனுபிடார், அதை வச்சு தான் இப்போ நிறைய போட்டிட்டு
இருக்கார் முத்து..! :wink: (தூண்டில சொல்றன் முத்து, கடல இல்ல)

இளசு
16-01-2004, 11:56 PM
அகலமோ, உயரமோ..சாய்ச்சு வைக்கணும்னு சொல்லவரீங்க இல்லியா மதன்..
சபாஷ்..

pgk53
17-01-2004, 12:49 AM
சபாஷ் மது....வெளுத்துக்கட்டிட்டிங்க....வாழ்த்துக்கள். அப்படியே அடுத்த புதிரையும் பாருங்க.

pgk53
17-01-2004, 12:50 AM
வாணியும் ராணியும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள்..அவர்களது பத்தாவது பிறந்த நாள் விழாவில் பெரிய கேக் ஒன்றை அவர்களது அப்பா வாங்கி வந்திருந்தார். மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து, வீட்டில் இருந்த ஒரே ஒரு கத்தியை வைத்து கேக் வெட்டும் சமயத்தில், நான்தான் கேக் வெட்டுவேன் என்று ராணி, வாணி இருவருமே அடம்பிடித்தார்கள்.வாணியை கேக் வெட்டவிட்டால், அவள் தனக்கு பெரிய துண்டாக வெட்டிக்கொள்வாள் என்று ராணியும் அதேபோலவே வாணியும் நினைத்ததினால், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாதம் செய்தார்கள். அப்போது அவர்களது அப்பா ஒரு யோசனை சொல்ல இருவருமே அதற்கு ஒத்துக்கொண்ள, பிறந்தநாள் கொண்டாட்டம் சுமுகமாக நடந்து முடிந்தது. வாணி, ராணியின் அப்பா சொன்ன யோசனை என்ன?

samuthira
17-01-2004, 05:37 AM
பல்பு விஷயத்தை யோசித்தபின் பார்கையில் இக்பால் முடித்திருகிறார்...

சந்தோஷமான பகுதி.. தொடருங்கள் பிஜிகே

samuthira
17-01-2004, 05:41 AM
வாணி ராணி பெரிய பஞ்சாயத்தாக இருக்கும் போல தெரியுதே...

முதலில் அப்பா கேக்கை இரண்டாக சமமாக வெட்டிவிட்டு பின்னர் குழந்தைகளை வெட்ட சொன்னாரா?

pgk53
17-01-2004, 02:26 PM
இல்லையே.....சமுத்திரா அவர்களே..முயற்சி செய்யுங்கள்.

Mathu
17-01-2004, 07:33 PM
இதில் என்ன பிரச்சனை? 2 பேரும் செர்ந்து
(அதான் இரட்டை பிறவிகள் அச்சே) 1 கேக்கை
1 கத்தி கொண்டு 2 கைகளால் 2 துண்டுகள் வெட்டலாம்...!

இல்லாவிட்டால் இரட்டை பிறவிகள் தத்துவத்தை உபயோகித்து
2அவத பிறந்தவர் முதலும், 1 ஆவதா பிறந்தவர் அடுத்தும் வெட்டலாம்.
ஆனால் இதில் என்ன விஞ்ஞை என்றால் வெட்டியவர் வெட்டிய
துண்டை மற்றவருக்கு ஊட்ட வேண்டும்.

இளசு
17-01-2004, 10:11 PM
மிச்ச மீதி இருந்தா எனக்கும் குடுக்கச் சொல்லுங்க மதன்..

pgk53
18-01-2004, 12:39 AM
மது அவர்களே....சரியாகச் சொல்லிவிட்டீர்கள். நன்றி.
ஒருவர் வெட்டி அடுத்தவருக்கு ஊட்டினால், கேக் துண்டு கூடுதல்
குறைச்சல் என்ற பிரச்சினையும் வராது. சரி அடுத்த புதிரைப் பார்ப்போம்.

pgk53
18-01-2004, 12:40 AM
நீங்கள் உங்கள் நண்பரின் வீட்டில் ஒரு ஹாலில் டேபிள்-டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்களுக்குத் தாகம் எடுக்கிறது. தண்ணீர் வேண்டும் என்று நண்பரைக் கேட்க அவரோ, " தண்ணீர் தீர்ந்து போய்விட்டது. வீட்டில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை, கொஞ்சம் பொருத்துக்கொள். இந்த ஆட்டத்துடன் முடித்துக்கொண்டு புறப்படுவோம் என்று கூறியபடியே, நண்பர் பந்தை வேகமாக அடிக்க அது சன்னல்; வழியாகப் பறந்துபோய், சன்னலுக்கு வெளிப்பக்கத்தில் இருந்த ஒரு இடத்தில் விழுந்தது. விழுந்த பந்து உருண்டு போய், அங்கே புதைக்கப்பட்டிருந்த ஒரு அங்குல குழாய்க்குள் விழுகிறது. குழாயின் ஆழம் எப்படியும் ஒரு அடியாவது இருக்கும். அதில் விழுந்த பந்தை எடுக்க நீங்கள் எடுக்கவேண்டும்....
பந்தின் அளவுக்கு சிறிதே பெரிய குழாய் என்பதால், வேறு குச்சியையோ கம்பியையோ உள்ளே நுழைக்கமுடியாது.
அதனால் பந்தை எப்படி வெளியே எடுக்கப்போகிறீர்கள்?????

samuthira
18-01-2004, 04:46 AM
தண்ணீர் குழாயாய் இருந்தால் நீரை திறக்கலாம், காலி குழாயாய் இருந்தால் ஊதிவிடலாம், சரியா பிஜிகே அவர்களே

இக்பால்
18-01-2004, 04:54 AM
குழாயைத் தோண்டி வெளியில் எடுத்து கவிழ்த்து பந்தை எடுக்க
வேண்டியதுதான்.

pgk53
18-01-2004, 12:47 PM
பூமியில் புதையுண்டு கிடக்கும் ஒரு குழாய். தண்ணீர் குழாயாக இருந்தால்
திறந்துவிடலாம் என்றீர்கள் சமுத்திரா!மூடியிருப்பதைத்தானே திறக்கலாம். மூடியிருந்தால் பந்து உள்ளே போகாதே.குழாயைத் தோண்டக்கூடாது நண்பர் இக்பால் அவர்களே.

மன்மதன்
18-01-2004, 01:17 PM
வீட்டில்தானே தண்ணீர் இல்லை.. பக்கத்து வீட்டில் கொஞ்சம் தண்ணீரை வாங்கி குழாயினுள்ளே ஊற்றினால் பந்து தானாக வெளியே வரப்போகிறது..

poo
18-01-2004, 02:41 PM
வீட்டில்தானே தண்ணீர் இல்லை.. பக்கத்து வீட்டில் கொஞ்சம் தண்ணீரை வாங்கி குழாயினுள்ளே ஊற்றினால் பந்து தானாக வெளியே வரப்போகிறது..

இந்த சம்பவம் நடந்தது சென்னையாக இருக்கும்பட்சத்தில்?!!

மன்மதன்
18-01-2004, 02:57 PM
மன்னிக்கவும் . என்னிடம் பதில் இல்லை.. சென்னையில் பக்கத்து வீட்டில் தங்கம் கடனா வாங்கலாம் . தண்ணீர் வாங்க முடியுமோ..???

Dr. Agaththiyan
18-01-2004, 04:39 PM
ஒரு அங்குல அகலமே உள்ள குழாய்க்குள் டேபிள் டென்னிஸ் பந்து உள்ளே
போயிருக்கும்?

pgk53
18-01-2004, 05:01 PM
ஒரு அங்குல அகலமே உள்ள குழாய்க்குள் டேபிள் டென்னிஸ் பந்து உள்ளே
போயிருக்கும்?
மன்னிக்கவும் பந்தின் அளவைவிட சிறிதே பெரிய குழாய் என்றும் குறிப்பிட்டுள்ளேன். ஒரு அங்குலம் என்பதை ஒரு குறிப்பிட்ட அளவாகக் கொள்ளாமல், பந்தைவிட கொஞ்சம் பெரியது என்பதையே எடுத்துக்கொள்ளவும்.

pgk53
18-01-2004, 05:03 PM
தண்ணீர் இல்லை என்று குறிப்பிட்டதே, ஒரு காரியமாகத்தான்.
இதுபோன்ற புதிர்களில் பக்கத்து வீடு என்றெல்லாம் யோசிக்கக் கூடாது. அதாவது தண்ணீர் இல்லை...அவ்வளவுதான்.அடுத்து என்ன செய்தால் பந்தை எடுக்கலாம்..?

pgk53
18-01-2004, 05:04 PM
ஒரு கார் ஊருக்கு வெளியே சென்று கொண்டிருக்கும்போது பங்சர் ஆகிவிடுகிறது.இருட்டு நேரம்....பக்கத்தில் பழுதுபார்க்க எந்த வசதியும் இல்லை..வேறு வழியில்லாமல்,காரை ஓட்டியவர், பங்சர் ஆன சக்கரத்தைக் கழற்றி ,அவசரத்தேவைக்காக வண்டியில் வைத்திருந்த அடுத்த சக்கரத்தை மாட்டுகிறார்.சக்கரத்தைக் கழட்டும்போது, சக்கரத்தை பொருத்தும் 'நட்' களை இருட்டில் எங்கேயோ வைத்துவிட்டார். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை.ஓட்டுனரோ ஒரு முக்கிய வேலையாகப் போய்க்கொண்டிருந்ததால், உடனே போயாகவேண்டிய நிலைமை.நிலைமையை எப்படிச் சமாளித்தார் அவர்?

Dr. Agaththiyan
18-01-2004, 05:04 PM
நீங்கள்தான் என்னை மன்னிக்கணும் பிஜிகே அவர்களே
கடைசியில் உள்ள அந்தக் குறிப்பை கவனிக்க தவறிவிட்டேன்.
(ஆனாலும் விடை தெரியவில்லிங்க.. அதுக்கும் சேர்த்து மன்னிச்சிடுங்க.
நல்ல மூளை இருந்தா நான் ஏன் டாக்டர் ஆயிருக்கப்போறேன் சொல்லுங்க..)

pgk53
18-01-2004, 05:07 PM
அய்யோ ...அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் அகத்தியன் அவர்களே. தங்களைப் போன்ற அறிஞர்கள் எல்லாம் வந்து கலந்துகொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.கிராமத்தில் கரிசல் காட்டுவழி செல்லும்போது 'செந்தட்டி' என்று ஒரு செடி காலில் பட்டுவிட்டால், உடனே சிவந்துபோய் அரிக்க ஆரம்பித்துவிடும். அதற்கு மருந்து, அந்த செடிக்குப் பக்கத்தில் இருக்கும் மண்ணை நீர் ஊற்றிப் பிசைந்து எடுத்து, அரிக்கும் இடத்தில் தடவுவதுதான்.ஆனால், கரிசல் காட்டுவழி நடக்கும்போது தண்ணீருக்கு உடனே எங்கே போவது. கிராமத்துக்காரர்களுக்கு மிகவும் சுலபமான ஒரே வழிதான் இருக்கிறது. தாங்களும் அறிந்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன். அதே வழிதான் இந்தப் புதிருக்கும். எல்லோரும் என்னை மன்னிக்கவும்.

Dr. Agaththiyan
18-01-2004, 05:11 PM
அறிஞர் என்பதெல்லாம் உங்களைப்போன்றவர்கள் பிஜிகே அவர்களே.
நான் படிப்பால் மருத்துவன். மற்றபடி அறியும் ஆவல் உள்ளவன்.அவ்வளவே.

முத்து
18-01-2004, 05:22 PM
அதற்கு மருந்து, அந்த செடிக்குப் பக்கத்தில் இருக்கும் மண்ணை நீர் ஊற்றிப் பிசைந்து எடுத்து, அரிக்கும் இடத்தில் தடவுவதுதான்.ஆனால், கரிசல் காட்டுவழி நடக்கும்போது தண்ணீருக்கு உடனே எங்கே போவது. கிராமத்துக்காரர்களுக்கு மிகவும் சுலபமான ஒரே வழிதான் இருக்கிறது.


அந்த வழியா ...
எனக்குத் தெரியும் ... :D

poo
18-01-2004, 05:27 PM
நான் அப்பவே நினைச்சேன்.. சொன்னா சரியா இருக்காதேன்னு சும்மா இருந்தேன்...

நண்பர் பி.ஜி.கே அவர்களே....ஏங்க திடீர்னு இப்ப்ப்டி பண்றீங்க ???!!

mania
19-01-2004, 03:18 AM
ஒரு கார் ஊருக்கு வெளியே சென்று கொண்டிருக்கும்போது பங்சர் ஆகிவிடுகிறது.இருட்டு நேரம்....பக்கத்தில் பழுதுபார்க்க எந்த வசதியும் இல்லை..வேறு வழியில்லாமல்,காரை ஓட்டியவர், பங்சர் ஆன சக்கரத்தைக் கழற்றி ,அவசரத்தேவைக்காக வண்டியில் வைத்திருந்த அடுத்த சக்கரத்தை மாட்டுகிறார்.சக்கரத்தைக் கழட்டும்போது, சக்கரத்தை பொருத்தும் 'நட்' களை இருட்டில் எங்கேயோ வைத்துவிட்டார். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை.ஓட்டுனரோ ஒரு முக்கிய வேலையாகப் போய்க்கொண்டிருந்ததால், உடனே போயாகவேண்டிய நிலைமை.நிலைமையை எப்படிச் சமாளித்தார் அவர்?

மற்ற மூண்று சக்கரங்களில் உள்ள நுட்டுகளில் ஒன்றொன்று கழட்டி நாலாவது சக்கரத்தில் முக்கோணமாக வரும்படி மட்டிக்கொண்டால் அவசரத்துக்கு சரி செய்து கொள்ளலாம்.
அன்புடன்
மணியா
(எப்போவுமே நாம் 8 நட்டுகளை கழட்டினால் திரும்பி மாட்டும்போது ஆறோ அல்லது ஏழோ தானே மாட்டுகிறோம்.....!!!)

Mathu
19-01-2004, 07:37 AM
மணியண்ணா சரியான பதில் சொல்லிடீங்க வாழ்த்துக்கள்.

Mathu
19-01-2004, 07:52 AM
நீங்கள் உங்கள் நண்பரின் வீட்டில் ஒரு ஹாலில் டேபிள்-டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்களுக்குத் தாகம் எடுக்கிறது. தண்ணீர் வேண்டும் என்று நண்பரைக் கேட்க அவரோ, " தண்ணீர் தீர்ந்து போய்விட்டது. வீட்டில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை, கொஞ்சம் பொருத்துக்கொள். இந்த ஆட்டத்துடன் முடித்துக்கொண்டு புறப்படுவோம் என்று கூறியபடியே, நண்பர் பந்தை வேகமாக அடிக்க அது சன்னல்; வழியாகப் பறந்துபோய், சன்னலுக்கு வெளிப்பக்கத்தில் இருந்த ஒரு இடத்தில் விழுந்தது. விழுந்த பந்து உருண்டு போய், அங்கே புதைக்கப்பட்டிருந்த ஒரு அங்குல குழாய்க்குள் விழுகிறது. குழாயின் ஆழம் எப்படியும் ஒரு அடியாவது இருக்கும். அதில் விழுந்த பந்தை எடுக்க நீங்கள் எடுக்கவேண்டும்....
பந்தின் அளவுக்கு சிறிதே பெரிய குழாய் என்பதால், வேறு குச்சியையோ கம்பியையோ உள்ளே நுழைக்கமுடியாது.
அதனால் பந்தை எப்படி வெளியே எடுக்கப்போகிறீர்கள்?????

இந்த பந்தை எடுக்க இன்னும் ஒரு வளி இருக்கே..!
பந்தை விட விட்டத்தில் கொஞ்சம் சிறிய ரப்பர் குளாய் ஒன்றை எடுத்து
உள்ளே விட்டு பந்தில் முட்டியதும் குளாயின் மறு நுனியில் காற்றை
உறிஞ்சினால் பந்து குளாயின் மறு துவாரத்தில் அடைத்துக்கொள்ளும்
அப்படியே தூக்கி எடுக்கலாமே..!
(Table tennis பந்து பாரமில்லாதது எனவே உறிஞ்சுதல் சாத்தியம்,
vacum technologie இது பல தொளிற்சாலைகளில் இன்றைய முன்னோடி)

பாரதி
19-01-2004, 10:39 AM
பிஜிகே... நீங்களும் "நல்ல" கூட்டத்தில் சேர்ந்திட்டீங்க போல இருக்கே..! ஹஹஹா... பாராட்டுக்கள் மதனுக்கும், மணியாவுக்கும்.

aren
19-01-2004, 10:45 AM
நல்ல மூளை இருந்தா நான் ஏன் டாக்டர் ஆயிருக்கப்போறேன் சொல்லுங்க..)

நீங்களே இப்படியென்றால், நாங்கலெல்லாம் எங்கே போவது.

aren
19-01-2004, 10:46 AM
ஒரு கார் ஊருக்கு வெளியே சென்று கொண்டிருக்கும்போது பங்சர் ஆகிவிடுகிறது.இருட்டு நேரம்....பக்கத்தில் பழுதுபார்க்க எந்த வசதியும் இல்லை..வேறு வழியில்லாமல்,காரை ஓட்டியவர், பங்சர் ஆன சக்கரத்தைக் கழற்றி ,அவசரத்தேவைக்காக வண்டியில் வைத்திருந்த அடுத்த சக்கரத்தை மாட்டுகிறார்.சக்கரத்தைக் கழட்டும்போது, சக்கரத்தை பொருத்தும் 'நட்' களை இருட்டில் எங்கேயோ வைத்துவிட்டார். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை.ஓட்டுனரோ ஒரு முக்கிய வேலையாகப் போய்க்கொண்டிருந்ததால், உடனே போயாகவேண்டிய நிலைமை.நிலைமையை எப்படிச் சமாளித்தார் அவர்?

மற்ற மூண்று சக்கரங்களில் உள்ள நுட்டுகளில் ஒன்றொன்று கழட்டி நாலாவது சக்கரத்தில் முக்கோணமாக வரும்படி மட்டிக்கொண்டால் அவசரத்துக்கு சரி செய்து கொள்ளலாம்.
அன்புடன்
மணியா
(எப்போவுமே நாம் 8 நட்டுகளை கழட்டினால் திரும்பி மாட்டும்போது ஆறோ அல்லது ஏழோ தானே மாட்டுகிறோம்.....!!!)

மணியா அவர்கள் சொல்வது சரியே. ஆனால் அப்படி கழற்றி மாற்றும்பொழுது மறுபடியும் தொலைக்காமல் இருக்கவேண்டும்.

pgk53
19-01-2004, 03:53 PM
நண்பர் பி.ஜி.கே அவர்களே....ஏங்க திடீர்னு இப்ப்ப்டி பண்றீங்க ???

அன்பு நண்பர் பூ அவர்களே........நான் கொடுத்த புதிரில் விரும்பத்தகாத விஷயங்கள் இருப்பதாக தாங்கள் உணர்ந்தால் , அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இதை நான் அப்படி உணரவில்லை.அதனால்தான் பதிவு செய்தேன்.

pgk53
19-01-2004, 03:55 PM
பந்து புதிரில் ஒரு புதிய கோணத்தில் சிந்தனை செய்த மதுவுக்கும், சக்கரங்கள் புதிரில் சரியான விடை கூறிய மணியாவுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். இனி அடுத்த புதிரைப் பார்ப்போம்.

pgk53
19-01-2004, 03:56 PM
ஒரே அளவுள்ள இரண்டு தொட்டிகள்.
இரண்டிலும் ஒரே அளவில் தண்ணீர் நிறப்பப்பட்டுள்ளது.
முதல் தொட்டியின் அடியில், தண்ணீர் வெளியேறுவதற்காக ஒரு இரண்டு அங்குல விட்டமுள்ள குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
அடுத்த தொட்டியில் ஒரு இரண்டு அங்குல குழாய்க்குப் பதிலாக இரண்டு ஒரு அங்குலக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இரண்டு தொட்டிகளிலும் ஒரே சமயத்தில் குழாய்களைத் திறந்து விடுகிறார்கள்.
எந்தத் தொட்டியில் உள்ள தண்ணீர் முதலில் காலியாகும்?

mania
20-01-2004, 12:22 AM
இரண்டு அங்குல குழாய் பொருத்திய தொட்டி தான் முதலில் காலியாகும்.
அன்புடன்
மணியா

pgk53
20-01-2004, 12:45 AM
மணியா அவர்களே.....தங்கள் விடை சரியானதே...காரணத்தையும் பதிவு செய்தால் அனைவரும் தெரிந்து கொள்வார்கள் அல்லவா?
நன்றி.

sara
20-01-2004, 02:22 AM
வரவர புதிருக்கு விடை கண்டுபிடிக்கும் என் முயற்சி முற்றிலும் நின்றுபோய், 'பிஜிகே புதிர் போட்டுட்டாரா..சரி.. இன்னும் கொஞ்ச நேரத்துல மணியா விடை சொல்லிருவாரு.. என்னவா இருக்கும்?' அப்படின்னு வந்து எட்டிப்பாத்துட்டு போறதே வழக்கமாயிடுச்சு. (புதிரெல்லாம் அந்த ரேஞ்சுல இருக்கு.. நம்ம அறிவுக்கு எட்டறதேயில்லை :( )

mania
20-01-2004, 03:31 AM
மணியா அவர்களே.....தங்கள் விடை சரியானதே...காரணத்தையும் பதிவு செய்தால் அனைவரும் தெரிந்து கொள்வார்கள் அல்லவா?
நன்றி.

நன்றி பிஜிகே . குழாயில் தண்ணீர் போகும் அளவு அதன் செக்ட்ஷனல் ஏரியாவை (cross sectional area ) பொறுத்தது. அதன்படி பார்த்தால் 2 அங்குல குழாய்க்கு பரப்பளவு 22/7 x 1 x 1 =3.14 சதுர அங்குலம். ( 2 அங்குலம் என்பதால் அதன் ஆரம் 1 ஆகும் ). 1 அங்குல குழாய்க்கு 22/7 x .5 x .5 =0.785 சதுர அங்குலம் தான். அதனால் 2 அங்குல குழாய் உள்ள தொட்டி தான் முதலில் காலியாகும்.
அன்புடன்
மணியா

samuthira
20-01-2004, 04:14 AM
ஆமாம் சாரா, போற போக்கு அப்படி தான் தெரியுது,. புதிரே புரியமாட்டேங்குது , இதில நண்பர் மணியன் கணக்கெல்லாம் போட்டு படில் சொல்றாரு,.

p.s. பள்ளி கூடத்தில கணக்கு வாத்தியார் என்னை பார்கணும்னு இன்று வரை துரத்திட்டு இருக்கிறதா கேள்வி...

தொடருங்கள் பிஜிகே.,

சேரன்கயல்
20-01-2004, 12:41 PM
நன்றி பிஜிகே . குழாயில் தண்ணீர் போகும் அளவு அதன் செக்ட்ஷனல் ஏரியாவை (cross sectional area ) பொறுத்தது. அதன்படி பார்த்தால் 2 அங்குல குழாய்க்கு பரப்பளவு 22/7 x 1 x 1 =3.14 சதுர அங்குலம். ( 2 அங்குலம் என்பதால் அதன் ஆரம் 1 ஆகும் ). 1 அங்குல குழாய்க்கு 22/7 x .5 x .5 =0.785 சதுர அங்குலம் தான். அதனால் 2 அங்குல குழாய் உள்ள தொட்டி தான் முதலில் காலியாகும்.
அன்புடன்
மணியா

வீரு சொன்னாரு...தலை அடிக்கடி ட்யூப் போட்டு குவார்ட்டர்ல என்னமோ பாசனவேலை செய்றதா...இப்பல்ல தெரியுது மேட்டர்... :wink:

(தலை...அசத்துறீங்களே தலை...உங்கள் மூளையில் 2 அங்குலம் குழாய் இணைப்பு இருக்கும்னு நெனைக்கிறேன்...எனக்கெல்லாம் 1/2 (அ) 1 அங்குலம் குழாய்தான் போல... :cry:
பூ...என்ன நான் சொல்றது சரிதானே)

pgk53
20-01-2004, 04:00 PM
வைரத்தை எடுப்பது எப்படி?

முதுமலைக் காட்டுக்குள்ளே ஓர் இடத்தில் விலை மதிப்பில்லாத வைரக்கல் இருப்பதாக ஏட்டுச் சுவடியில் படித்தறிந்து, அதை எடுப்பதற்காக ஒரு குழு புறப்பட்டுச் செல்கிறது.தேடித்தேடி அலைந்து இறுதியில் ஏட்டுச் சுவடியில் குறிப்பிட்டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அது ஒரு சதுரமான குளம்.குளத்தின் நடுவில் தீவுபோல் ஒரு சிறிய நிலம். அந்த நிலத்தின் நடுவில்தான் வைரக்கல் புதைந்து கிடக்கிறது.

இப்போது அந்தக் குளத்தைப் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.
40 அடி நீளமும், நாற்பது அடி அகலமும் உள்ள குளம் ..குளத்தின் ஆழம் 20 அடிகள்..அதன் நடுவில் தீவு போன்ற சிறிய இடம். நடுவில் இருந்து நான்கு பக்கங்களிலும் 19 அடி தூரத்தில் கரை இருந்தது. ஆராய்ச்சிக்குழு குளத்தின் அருகில் சென்று கவனமாகப் பார்த்தபிறகுதான், அந்தக் குளத்தில்
நிறம்பியிருந்தது, தண்ணீர் அல்ல....அடர்த்தியான அமிலம் என்று தெரியவந்தது. அதனால் அவர்களுக்கு நீச்சல் தெரிந்திருந்தும் எந்தப் பயனும் இல்லை.அவர்கள் இந்த சூழ்நிலையை எதிர்பார்க்காததினால், வரும்போது எந்த கருவிகளும் எடுத்துவரவில்லை. கயிறுகூட இல்லை,பக்கத்து கிராமமோ , மனிதர்கள் வசிக்கும் இடமோ செல்வதென்றால் குறைந்தது 50 கிலோ மீட்டராவது போகவேண்டும்.

அக்கம்பக்கம் ஏதாவது கிடைக்குமா என்று தேடியபோது . ஐந்து மரப்பலகைகள் கிடைத்தது. அந்தப் பலகைகள் 16 அடி நீளமும், 16 அங்குல அகலமும், 2 அங்குல கனமும் இருந்தன.அந்தப் பலகையை எடுத்துவந்து, குளத்தின் கரையில் இருந்து தீவுப்பகுதிக்கு வைத்துப் பார்த்தார்கள். பலகை 16 அடி நீளமே இருந்ததினால்,19 அடி தூரத்தில் இருக்கும் தீவு எட்டவில்லை.இப்போது என்ன செய்வது என்று திகைத்துக்கொண்டிருந்தார்கள்.

இரண்டு பலகைகளை இனைப்பதற்குத் தேவையான எதுவுமே அவர்களிடம் இல்லை. அதை எடுத்துவந்தபிறகு பலகைகளை இனைத்து, பிறகு தீவுக்குப் போகலாமா? இல்லை வேறு ஏதாவது செய்யமுடியுமா/ என்று குழப்பமுடன் அவர்கள் உட்கார்ந்துவிட்டார்கள்.மன்ற நண்பர்களே. அந்தப் பலகைகளை மட்டும் வைத்தே தீவுக்குள் சென்று வைரத்தை எடுத்துவர நீங்கள் அவர்களுக்கு ஒரு வழி கூறுங்களேன்.

poo
20-01-2004, 04:47 PM
அன்பு நண்பர் பூ அவர்களே........நான் கொடுத்த புதிரில் விரும்பத்தகாத விஷயங்கள் இருப்பதாக தாங்கள் உணர்ந்தால் , அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இதை நான் அப்படி உணரவில்லை.அதனால்தான் பதிவு செய்தேன்.


அய்யோ... நான் சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்ங்க... நீங்க என்ன பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க...

Mathu
20-01-2004, 09:54 PM
4 பலகைகளை குளத்தின் கரையோரமாக ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கினால்
குளத்தினுள் 5 அடி 4" வரும் 5 அவது பலகையை அதில் இருந்து நடு
பகுதிக்கு இணைத்துவிடலாம். வைரத்தை எடுத்துவிடலாம்.
(இந்த பலகையில் ஆள் ஏறினால் அமிலத்தில் மூழ்காது என்றால் மட்டும்
இது சாத்தியம்)

pgk53
21-01-2004, 12:44 AM
நன்றி பூ அவர்களே....புதிரைப் பார்க்கவில்லையா?ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டீர்களே?

மது அவர்களே....அடர்த்தியான அமிலம் நிறைந்த குளம் அது.பலகையைப் போட்டு அதிலே ஆள் ஏறுவது இயலாத காரியம்.

mania
21-01-2004, 03:17 AM
குளத்தில் ஒரு பக்க கரையின் இர்ண்டு மூலைகளிலும் ஒவ்வொறு பலகையை முக்கோனமாக வரும்படி வைக்கவேண்டும். மூணாவது , நாலாவது பலகையை இந்த இரண்டு பலகைகளையும் சேர்க்கிற மாதிரி கரைக்கு இணையாக ஒன்றுக்கு பிறகு ஒன்றாக வைக்க வேண்டும்.இப்படி செய்யும்போது 19 அடியானது குறைந்து 16 அடிக்குக் குறைவு ஆகிவிடும். பின் கையில் உள்ள ஐந்தாவது பலகையை அதன் மேல் நடுவில் இருக்கும் தீவு போன்ற பகுதிக்கு எட்டுகிற மாதிரி வைத்தால் வைரத்தை எடுத்துவிடலாம்.
அன்புடன்
மணியா

poo
21-01-2004, 12:23 PM
ஒண்ணுமே புரியல தலை...

பாலமுருகன்
21-01-2004, 12:26 PM
கொஞ்ச நாள்ல மண்டைய பிச்சுகிட்டுதான் அலையனும் போல.... யப்பா ஆள உடுங்க... எஸ்கேப்...

pgk53
21-01-2004, 04:01 PM
பூ....உங்களுக்காகவே இந்தப் புதிர்.இது மிகச் சுலபமான புதிர்.
நீங்கள் உங்கள் நண்பனுக்குப் பின்னால் நிற்கவேண்டும்.
அதே சமயம் உங்கள் நண்பன் உங்களுக்குப் பின்னால் நிற்கவேண்டும்.
இது சாத்தியமா?

aren
21-01-2004, 04:04 PM
பூ....உங்களுக்காகவே இந்தப் புதிர்.இது மிகச் சுலபமான புதிர்.
நீங்கள் உங்கள் நண்பனுக்குப் பின்னால் நிற்கவேண்டும்.
அதே சமயம் உங்கள் நண்பன் உங்களுக்குப் பின்னால் நிற்கவேண்டும்.
இது சாத்தியமா?

இது சாத்தியம், கியூ ரவுண்டாக இருக்கும் பட்சத்தில். பூ அவர் நண்பருக்கு பின்னால் நிற்கவேண்டும். அவருடைய நண்பர் இன்னொருவருக்கு பின்னால் நிற்கவேண்டும். அந்த மூன்றாமவர் பூ அவர்களுக்குப் பின்னால் நிற்கவேண்டும். அப்படியானால் பூவின் நண்பர் பூ அவர்களுக்குப் பின்னால்தானே நிற்கிறார்.

pgk53
21-01-2004, 04:13 PM
ஆரென் அவர்களே ரொம்பவும் சுற்றி வளைத்து வருகிறீர்களே.
கொஞ்சம் பக்கமாக வாருங்களேன்.
மணியா....மிகவும் சரியான விடையைக் கொடுத்ததற்கு மிக்க
மகிழ்ந்தேன்.நன்றி.பூ அவர்களே....மணியாவின் விடை இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

aren
21-01-2004, 04:15 PM
இருவரும் முதுகை காட்டிக்கொண்டு இருக்கவேண்டுமா?

poo
21-01-2004, 06:05 PM
இருவரும் முதுகை காட்டிக்கொண்டு இருக்கவேண்டுமா?
அண்ணா... சரியாக சொல்லி இருக்கிறீர்கள்........ என நினைக்கிறேன்!

Mathu
21-01-2004, 09:13 PM
மணியண்ணா வாழ்த்துக்கள்,
ஆரே உங்களுக்கும் தான்..!

இளசு
22-01-2004, 12:09 AM
சபாஷ் ஆரென்...
நானே விடை சொன்னதுபோல் மகிழ்ச்சி

(பொதுவாய் அறிவுப்புதிருக்கு முதுகைக் காட்டுவது என் வழக்கம்..)

pgk53
22-01-2004, 01:10 AM
ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள், ஒரு நாணயத்தைப் போட்டு, அந்தப் பாட்டிலை கார்க்கால் அடைத்து, உங்களிடம் கொடுக்கிறர்கள்.
கார்க்கை எடுக்காமல்,பாட்டிலை உடைக்காமல் உள்ளே இருக்கும் நாணயத்தை நீங்கள் எடுக்கவேண்டும், என்று கூறுகிறார்கள்.
உங்களால் நாணயத்தை அவர்கள் நிபந்தனைப்படி எடுக்க முடியுமா?

aren
22-01-2004, 01:53 AM
ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள், ஒரு நாணயத்தைப் போட்டு, அந்தப் பாட்டிலை கார்க்கால் அடைத்து, உங்களிடம் கொடுக்கிறர்கள்.
கார்க்கை எடுக்காமல்,பாட்டிலை உடைக்காமல் உள்ளே இருக்கும் நாணயத்தை நீங்கள் எடுக்கவேண்டும், என்று கூறுகிறார்கள்.
உங்களால் நாணயத்தை அவர்கள் நிபந்தனைப்படி எடுக்க முடியுமா?

கார்க்கை எங்கே அடைத்திருக்கிறார்கள். நாணயத்தைப் போட்ட ஓட்டை அப்படியே இருந்தால், அதன் வழியாகவே எடுத்துவிடலாமே.

pgk53
22-01-2004, 12:33 PM
ஆரென் அவர்களே...அதுதான் நாணயத்தைப் போட்டு கார்க்கால் அடைத்து என்று குறிப்பிட்டு உள்ளேனே.

aren
22-01-2004, 03:19 PM
ஆரென் அவர்களே...அதுதான் நாணயத்தைப் போட்டு கார்க்கால் அடைத்து என்று குறிப்பிட்டு உள்ளேனே.

பாட்டிலுக்கு வேறு ஓட்டே ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால் அதன் வழியாக எடுத்துவிடலாமே.

aren
22-01-2004, 03:20 PM
நாணயம் என்று நீங்கள் சொல்வது "பைசா" தானே. இல்லை வேறு ஏதாவது விஷயமா?

pgk53
22-01-2004, 04:06 PM
பைசாதான் தலைவரே....பாட்டிலில் வேறு ஒட்டைகளும் இல்லை.அடுத்து என்ன சொல்லப்போகிறீர்களோ....பயமாக இருக்கிறது.

mania
22-01-2004, 10:44 PM
அந்த பாட்டிலை ஒரு அடுப்பில் வைத்து சூடு ஏற்றினால் கொஞ்ச நேரத்தில் கார்க் தன்னால் வெளியே வந்துவிடும். பின் பாட்டிலை கவிழ்த்தால் காசு வெளியே வந்துவிடும்
அன்புடன்
மணியா

சேரன்கயல்
23-01-2004, 06:14 AM
சூப்பர் தலை...
ஒரு காச்சு காச்சிட்டா கார்க் எகிறுடும்ல...

aren
23-01-2004, 12:03 PM
அந்த பாட்டிலை ஒரு அடுப்பில் வைத்து சூடு ஏற்றினால் கொஞ்ச நேரத்தில் கார்க் தன்னால் வெளியே வந்துவிடும். பின் பாட்டிலை கவிழ்த்தால் காசு வெளியே வந்துவிடும்
அன்புடன்
மணியா

கார்கை எடுக்காமல் நாணயத்தை வெளியே எடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே?

pgk53
23-01-2004, 04:06 PM
மதுரைக்குப் பக்கம் உள்ள உசிலம்பட்டியில் இருந்து திருமங்கலம் செல்லும் பாதையில் ஒரு டாட்டா சுமோ போய்க்
கொண்டிருந்தது.சுற்றிலும் கருவேல முள்காடுகள் நிறைந்த ஒரு இடம் வந்தபோது, சாலையில் கிடந்த கருவேலமுள் குத்தி ஒரு சக்கரத்தில் காற்று இறங்கிவிட, மேற்கொண்டு பயணத்தைத் தொடரமுடியாமல் காரில் வந்த பாண்டியன் இறங்கி, மாற்றுச் சக்கரத்தை வண்டியில்
கொண்டுவராததை நினைத்து வேதனைப்பட்டபடி வேறு ஏதேனும் வாகனம் வருமா? என்று பார்த்துக்கொண்டிருந்தபோது, முள்காட்டில் இருந்து முகமூடி அணிந்த ஒருவன் வந்து, கத்தியைக் காட்டி, பாண்டியனிடம் இருந்த பணம் மற்றும் மோதிரத்தைக்
கொள்ளையடித்துக்கொண்டு ஓடிவிட்டான்,.
சிறிது நேரம் கழித்து அந்தப்பக்கம் வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி தனது நிலைமையைக் கூறி, ஒரு மைல் தொலைவிலே இருந்த
திருமங்கத்துக்கு வந்தடைந்தார். ஊருக்குள் நுழைந்ததுமே முதலாவதாக இருந்த கார் மெக்கானிக் கடையில், விஷயத்தைக் கூறி, மாற்று டயருடன் வந்து காரைச் சீர் செய்யும்படி கேட்டார். அந்த மெக்கானிக்கோ, தன்னிடம் தற்போது டாட்டா சுமோவுக்கு மாற்று டயரும் இல்லை என்றும், பக்கத்தில் உள்ள ஒரு கடையில் கேட்டுப் பார்க்கும்படியும் கூறினான். பாண்டியன் அடுத்தாற்போல் இருந்த மெக்கானிக் ஒர்க்ஷாப்பில் விபரத்தைக் கூற , அவனும் தன்னிடம் மாற்று சக்கரம் ஏதும் இல்லை என்று சொல்லி, அதற்கு அடுத்தாற்போல் இருந்த மற்றொரு இடத்தில் கேட்டுப் பார்க்கும்படி சொல்லியனுப்பினான். சலித்துப் போன பாண்டியன், இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும், அங்கே இருந்த ஒரு மெக்கானிக் ஒர்க்ஷாப்பில் இருந்தவனிடம், தனது காருக்கு மாற்றுச் சக்கரத்துடன் வந்து பழுதுபார்க்க முடியுமா என்று கேட்டார். அவனோ, அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் மாற்றுச் சக்கரத்தை எடுத்து, தனது ஸ்கூட்டரில் வைத்து, அவரையும் ஏற்றிக்கொண்டு, கார் இருந்த இடத்துக்குப் போய், சக்கரத்தை மாற்றிக்கொடுத்தான். வேலைக்கான பணத்தை திருமங்கலம் வந்து கொடுப்பதாகக் கூறிய பாண்டியன்,
நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று, காவலரை அழைத்து வந்து, தன்னிடம் முகமூடி அனிந்து கொள்ளையடித்தவன் இவன்தான் என்று அந்த மெக்கானிக்கை காவலரிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரனையில் மெக்கானிக்கும் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

நண்பர்களே......பாண்டியன், எப்படி மெக்கானிக்தான் முகமூடிக் கொள்ளையன் என்று கண்டுபிடித்தார்???.

pgk53
23-01-2004, 04:09 PM
மணியா...தாங்கள் கூறியதுபோலும் செய்யலாம்.ஆனால் அதைவிட ஒரு சுலபமான வழியும் உல்ளது. கார்க்கை வெளியேதானே எடுக்கக் கூடாது. அழுத்தி உள்ளே தள்ளிவிட்டு, நாணயத்தை குலுக்கி வெளியே எடுத்துவிடலாம்..சரியான விடை கூறிய மணியாவுக்கு எனது வாழ்த்துக்கள்.

poo
23-01-2004, 05:01 PM
அவர் சரியாக டாடா சுமோ டயரை எடுத்துக்கொண்டு வந்திருப்பார்..

(அங்கே அதுதான் நிற்கிறதென அந்த கொள்ளையனுக்கு தெரியுமே..)

பரஞ்சோதி
23-01-2004, 06:04 PM
கடைசி மெக்கானிக் தவிர அனைத்து மெக்கானிக்கிடமும் தன்னுடைய காரை காட்டியும், டாடா சுமோ கார் என்று சொல்லியும் டயர் மாற்றச் சொன்னார், ஆனால் என்ன கார் என்று கேட்காமலேயே அவன் சரியான டயர் மாற்றியதால் அவன் தான் திருடன் என்று கண்டுபிடித்து விட்டார்.

Mathu
23-01-2004, 09:55 PM
பூ , பரஞ்சோதி பாராட்டுக்கள்.
சரியான பாதையில் பதில்.

கொள்ளை அடித்தவன் முகமூடி மட்டும் தான்
போட்டிருந்தால் மிகுதியை வைத்தும் கண்டு பிடித்துருக்கலாம். :roll:

pgk53
24-01-2004, 01:00 AM
அடேயப்பா...பதிவு செய்து திரும்புவதற்குள் பதில்கள் வரும் வேகத்தைப் பார்த்தால், அடுத்து என்ன புதிர் போடலாம் என்று ஆலோசிக்க
வைத்துவிட்டதே.
பூவுக்கும், பரஞ்சோதிக்கும் எனது வாழ்த்துக்கள்.நன்றி

pgk53
24-01-2004, 01:01 AM
ஒரு மைல் நீளமுள்ள ஒரு பாலத்தை, ஒரு பெரிய கனரக லாரி கடந்து செல்வதற்காக வந்தது..அந்தப் பாலத்தின் இரு நுழைவாயிலிலும், லாரியை துல்லியமாக எடைபோடும் கருவியைப் பொருத்தியுள்ளார்கள்.ஒரு குறிப்பிட்ட அளவுதான் அந்த லாரி, அதில் உள்ள சுமையுடன் சேர்த்து இருக்கவேண்டும். அதற்கு மேல் 100 கிராம் எடை அதிகமாக இருந்தாலும், காவலர்கள் லாரியை பாலத்தைக் கடக்க அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் குறிப்பிட்ட எடைக்கு அதிகமாக 100 கிராம் இருந்தாலும், பாலம் உடைந்துபோகும் அபாயத்தில் இருந்தது.அதனால் அந்தக் கனரக லாரியையும் எடைபோட்டுப்பார்த்து, அளவுக்கு அதிகமாக இருந்த எடையை எடுத்துவிட்டு, சரியான எடையுடன் பாலத்தைக் கடக்க அனுமதித்தார்கள்.லாரியும் பாலத்தை பாதி தூரம் கடந்துவிட்டது. அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பறவை ஓடிக்கொண்டிருந்த லாரியின்மேல் வந்து அமர்ந்தது.அந்த பறவையின் எடை 100 கிராம்தான் .அந்தப் பறவை லாரியின் மேல் அமர்ந்துவிட்டதால் லாரியின் எடை கூடியிருக்கும் அல்லவா?. அந்த அதிகப்படியான எடையினால் பாலம் உடைந்து போகுமா?

aren
24-01-2004, 01:36 AM
நிச்சயம் பாலம் உடையாது, ஏனெனில் இந்த அதிகமான எடை கணக்கில் வராது. ஏனெனில் இது feather touchதான்.

பதில் தெரிந்தவர்கள் விளக்கமாக எழுதுவார்கள்.

kavitha
24-01-2004, 06:01 AM
பறவையின் எடை கணக்கில் வராது! ஏனெனில் அது 'பறக்கும் பாலம்'!! ஹி! ஹி! ஹி!

பாலமுருகன்
24-01-2004, 06:28 AM
சே.... நமக்குதான் ஒன்னும் தோனமாட்டேங்குது... அது என்ன கவிதா பறக்கும்பாலம்.?? பறக்கும் தட்டு கேள்விபட்டிருக்கிறேன்.

மன்மதன்
24-01-2004, 08:45 AM
பாலம் உடையும் என்றுதான் நினைக்கிறேன்.. ஏனென்றால் அதே 100 கிராம் உள்ள வேற எதாவது பொருள் லாரியில் விழுந்தாலும் லாரியின் எடை கூடும் அல்லவா?? அதே பறவையாக இருந்தால் வித்தியாசம் என்ன?? அதாவது கோழி குஞ்சா இருந்தா என்ன முடையா இருந்தா என்ன, குழம்பு ருசிக்கனும் அவ்வளவே.. அதன் அடிப்படையில் பாலம் உடையும்..

பாலமுருகன்
24-01-2004, 09:01 AM
அய்யோ புல்லரிக்குதே,,,,, எப்படி மன்மதன்???

பாலா

பரஞ்சோதி
24-01-2004, 05:49 PM
உடையது, ஏனெனில் வாகனம் ஏற்கனவே பாலத்தின் பாதி தூரத்தை தாண்டி விட்டது.

poo
25-01-2004, 03:55 PM
உடையாது...

(காரணம்:- " அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!!")

இக்பால்
25-01-2004, 04:06 PM
மோசமான பாலமாக இருக்கிறதே! ஏதாவது இயற்பியல் விதிகளில் ஒத்துப்
போய் பாலம் உடையாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறதா? சொல்லுங்கப்பா...

பரஞ்சோதி
25-01-2004, 04:38 PM
அண்ணா! நண்பர் சொன்ன எடைக்கு மேல் முழுபாலத்தையும் கடந்தால் தான் உடையும், அது தான் ஏற்கனவே பாதி பாலத்தை தாண்டிவிட்டதே, அது மட்டும் இல்லை, பாதி தாண்டி விட்டது என்பது தான் நமக்கு அவர் கொடுக்கும் துடுப்பு சீட்டு என்று நினைக்கிறேன். என் பதில் உடையாது, உடையாது, ஏற்கனவே என் மண்டையை போட்டு உடைத்து, கிடைத்த பதில் இது.

மோகன்
25-01-2004, 05:23 PM
ஒரு மைல் நீளமுள்ள ஒரு பாலத்தை, ஒரு பெரிய கனரக லாரி கடந்து செல்வதற்காக வந்தது..அந்தப் பாலத்தின் இரு நுழைவாயிலிலும், லாரியை துல்லியமாக எடைபோடும் கருவியைப் பொருத்தியுள்ளார்கள்.ஒரு குறிப்பிட்ட அளவுதான் அந்த லாரி, அதில் உள்ள சுமையுடன் சேர்த்து இருக்கவேண்டும். அதற்கு மேல் 100 கிராம் எடை அதிகமாக இருந்தாலும், காவலர்கள் லாரியை பாலத்தைக் கடக்க அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் குறிப்பிட்ட எடைக்கு அதிகமாக 100 கிராம் இருந்தாலும், பாலம் உடைந்துபோகும் அபாயத்தில் இருந்தது.அதனால் அந்தக் கனரக லாரியையும் எடைபோட்டுப்பார்த்து, அளவுக்கு அதிகமாக இருந்த எடையை எடுத்துவிட்டு, சரியான எடையுடன் பாலத்தைக் கடக்க அனுமதித்தார்கள்.லாரியும் பாலத்தை பாதி தூரம் கடந்துவிட்டது. அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பறவை ஓடிக்கொண்டிருந்த லாரியின்மேல் வந்து அமர்ந்தது.அந்த பறவையின் எடை 100 கிராம்தான் .அந்தப் பறவை லாரியின் மேல் அமர்ந்துவிட்டதால் லாரியின் எடை கூடியிருக்கும் அல்லவா?. அந்த அதிகப்படியான எடையினால் பாலம் உடைந்து போகுமா?

அந்த லாரி பாதி தூரம் அந்த பாலத்தை கடந்துவிட்டதால் அதற்கு தேவையான எரிபொருளை அது உபயோகபடுத்தி இருக்கும். அதனால் நிச்சயமாக எரிபொருளின் எடை 100gm மேலே குறைந்து இருக்கும். பொதுவாக கனரக லாரியின் mileage மிகவும் கம்மி. அதனால் அந்த பறவை உட்கார்ந்தாலும் பாலம் உடையாது.


மோகன்

இளசு
25-01-2004, 05:36 PM
மோகன்.. அருமை!

இக்பால்
25-01-2004, 06:07 PM
மோகன் தம்பி...கிளப்பிட்டீங்க... இருந்தாலும் பிஜிகே என்ன சொல்கிறார்
என பார்ப்போம்.

இக்பால்
25-01-2004, 06:07 PM
பரஞ்சோதி தம்பி...உடையாது என்பது சரிதான்.

Mathu
25-01-2004, 07:21 PM
எல்லாரும் அசத்துறீங்க பிரமாதம்,
இருங்க pgk வரட்டும்.
உடையாதென்பது உறுதியாகிறது,
இதில் காரணம் தான் இன்னும் சரியா தெரியல..!

பரஞ்சோதி
25-01-2004, 07:34 PM
நண்பர் மோகன் அவர்களே! மிகவும் அருமையான முறையில் பதிலை கண்டுபிடித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்

மோகன்
25-01-2004, 08:42 PM
நண்பர் மோகன் அவர்களே! மிகவும் அருமையான முறையில் பதிலை கண்டுபிடித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்


நண்பர் பரஞ்சோதி அவர்களே! இது தான் சரியான விடையா என தெரியவில்லை. இது என்னுடைய யூகம். pgk அவர்கள் வந்து என்ன சொல்லுகிறார்கள் என பார்ப்போம்.

மோகன்

ஜெய்
25-01-2004, 10:01 PM
மோகன் ஒரு இயந்திர பொறியாளர் என்பதை நிருப்பித்துவிட்டார்

pgk53
26-01-2004, 12:47 AM
ஆஹா.....சரியான பதிலக் கூறி நண்பர் மோகன் அசத்திவிட்டார்.
நன்றி மோகன் அவர்களே!சரி அடுத்த புதிரைப் பார்ப்போம்.

pgk53
26-01-2004, 12:48 AM
ராமுவும் சோமுவும் நண்பர்கள். ஒருநாள் ராமு சோமுவைத் தனது தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான்.அங்கே ஒரு மாமரம். அதன் பழம் மிகவும் தித்திப்பானது என்பது பிரசித்தம்....சோமு மாம்பழம் சாப்பிட ஆசைப்பட்டான். "சரி , வா...பறிக்கலாம்" என்று ராமு சோமுவை மரத்துக்குப் பக்கம் அழைத்துச் சென்றான். பழம் ராமுவுக்கு எட்டாத உயரத்தில் தொங்கியது..இங்கே ராமு, சோமுவின் உயரத்தைப் பற்றிக் கூறியாகவேண்டும். ராமு 6 அடி உயரம். சோமு 5 அடி உயரம்.. அதனால் ராமு சோமுவை தனது தோளில் ஏறி நின்று பழத்தைப் பறித்துக்கொள்ளச் சொன்னான். அதுபோலவே, சோமு, ராமுவின் தோளில் ஏறி பழத்தைப் பறிக்க முயற்சி செய்தான்.ஆனால் பழம் எட்டவில்லை.இரண்டு அங்குலம் உயரம் அதிகமாக இருந்தது.அதனால் ராமு, சோமுவை நிற்கச் சொல்லி, அவன் சோமுவின் தோளில் ஏறி மாம்பழத்தைப் பறித்து சோமுவுக்கு சாப்பிடக் கொடுத்தான். இது சாத்தியமா?. {கிளையை வளைத்துப் பிடித்தான்......கம்பை வைத்துப் பறித்தான்....என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். சோமுவுடைய தோளில் ஏறி நின்றுதான் பழத்தைப் பறித்தான்.சோமுவுக்கு எட்டாத பழம் , ராமுவுக்கு எப்படி எட்டியது.}

பாரதி
26-01-2004, 12:55 AM
பொதுவாக மனிதர்களின் உயரத்தின் அடிப்படையிலேயே கைகளின் நீளமும் இருக்கும்.அதன் படி ராமுவின் கையின் நீளம் சோமுவின் கை நீளத்தை விட அதிகமாகவே இருந்திருக்கும்.ஆகவே அவனால் பறிக்க முடிந்திருக்கிறது.

sara
26-01-2004, 01:26 AM
பாரதீ.. எப்படி இதெல்லாம்..??

poo
26-01-2004, 04:30 AM
இளசு அண்ணாவின் மரணமில்லா விந்தை மனிதனை தொடர்ந்து படித்து வருபவர் ஆயிற்றே!!!

பாரதி
26-01-2004, 05:34 AM
இளசு அண்ணாவின் மரணமில்லா விந்தை மனிதனை தொடர்ந்து படித்து வருபவர் ஆயிற்றே!!!


அப்படியா பூ.?! மரணமில்லா விந்தை மனிதனின் பதிப்பு லாவண்யாவினுடையது என்றல்லவா நான் நினத்துக் கொண்டிருக்கிறேன்.! :wink: :D

மூர்த்தி
26-01-2004, 05:51 AM
பொதுவாக மனிதர்களின் உயரத்தின் அடிப்படையிலேயே கைகளின் நீளமும் இருக்கும்.அதன் படி ராமுவின் கையின் நீளம் சோமுவின் கை நீளத்தை விட அதிகமாகவே இருந்திருக்கும்.ஆகவே அவனால் பறிக்க முடிந்திருக்கிறது.

பாரதியின் கருத்துக்கு நானும் ஒத்துப்போகிறேன்!

அறிஞர்
26-01-2004, 06:38 AM
கைகளின்.. நீளமே.. காரணம்... வாழ்த்துக்கள்.. பாரதி

poo
26-01-2004, 06:41 AM
இளசு அண்ணாவின் மரணமில்லா விந்தை மனிதனை தொடர்ந்து படித்து வருபவர் ஆயிற்றே!!!


அப்படியா பூ.?! மரணமில்லா விந்தை மனிதனின் பதிப்பு லாவண்யாவினுடையது என்றல்லவா நான் நினத்துக் கொண்டிருக்கிறேன்.! :wink: :D


சற்றே பொறுங்கள் பாரதி..

அதை ஆரம்பித்தது லாவண்யாதான்..ஆனால் தொடர்வது யார் பாரதி?!!

(மருத்துவ சம்பந்தப்பட்ட விஷயங்களை.. )

(உங்களுக்கு புரியும்படியாக நான் சொல்லவில்லையோ?!!)

pgk53
26-01-2004, 08:47 AM
அடேயப்பா...என்ன சுறுசுறுப்பு?
பாரதி வாழ்த்துக்கள்.....அப்படியே அடுத்த புதிருக்கும் விடை கூறுங்கள்.!!!

pgk53
26-01-2004, 08:49 AM
உங்களிடம் ஒரு தீப்பெட்டியும், அதில் நான்கு குச்சிகள் மட்டும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது அதிலிருந்து மூன்று தீக்குச்சிகளை எடுத்து மேசையின்மேல் வைக்கவும். தீப்பெட்டியில் மீதம் உள்ள ஒரு தீக்குச்சியைக்கொண்டு, மேசையின்மேல் நீங்கள் வைத்த மற்ற மூன்று குச்சிகளையும் ஒரே நேரத்தில் எடுக்கவேண்டும்.மறந்துவிடாதீர்கள், உங்கள் விரலால் அல்ல. மீதமிருக்கும் ஒரு குச்சியைக்கொண்டுதான் எடுக்கவேண்டும். முடியுமா???அதற்காக கோந்து, நூல் என்று யோசிக்க ஆரம்பிக்கவேண்டாம்.

இக்பால்
26-01-2004, 09:13 AM
பிஜிகே... மற்ற குச்சிகளின் மருந்துள்ள பகுதி ஒன்றையொன்று தொடுமாறு
வைத்து மற்றொரு குச்சியை பற்ற வைத்து உடனே அதைக் கொண்டு
தொட்டால் அதுவும் பற்றிக் கொண்டு இந்த குச்சியுடன் ஒட்டிக் கொள்ளும்.

poo
26-01-2004, 09:52 AM
இந்த மாதிரி தீக்குச்சி விளையாட்டால் வீடு கட்டியதுண்டு..

இக்பால் அண்ணா சரியாக சொல்லிவிட்டார்..(போல.)

pgk53
26-01-2004, 03:50 PM
இக்பால் அவர்களே வாழ்த்துக்கள் .சரியான விடையைச் சொல்லியிருக்கிறீர்கள். இனி அடுத்த புதிருக்குப் போவோம்.

ஒரு முக்கியமான ராணுவப் பாசறையில் இரு வீரர்கள் காவல் இருந்தார்கள். அதில் ஒருவன் எப்போதும் வடக்குப் பக்கமாகவே பார்த்தபடி நின்றிருந்தான். மற்றவன் தெற்குப் பக்கமாகப் பார்த்தபடி நின்றான்.
வடக்குப் பக்கமாகப் பார்த்து நின்றவன் திடீரெனப் புன்முருவல் செய்தான். உடனே தெற்குப் பக்கம் திரும்பியிருந்தவன், "ஏன் நண்பா புன்முறுவல் செய்கிறாய்" என்று கேட்டான்.வடக்குப் பக்கம் பார்த்து நின்றவன் புன்முறுவல் செய்தது தெற்குப் பக்கம் பார்த்து நின்றவனுக்கு எப்படித் தெரிந்தது???

பரஞ்சோதி
26-01-2004, 03:55 PM
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி காவல் காக்கிறார்கள். அதனால் சிரிப்பது கண்டிப்பாக தெரியும்.

இக்பால்
26-01-2004, 04:24 PM
பரஞ்சோதி...பரஞ்சோதி...

pgk53
27-01-2004, 12:41 AM
சரியான விடை பரஞ்சோதி அவர்களே....இனி அடுத்த புதிர்.

விஜய் ஒரு உல்லாசப் பிரியன். அடிக்கடி சுற்றுப் பயணம் போவது அவன் வழக்கம்.பலவித இடங்கள். புதுப்புது மனிதர்கள். இப்படிச் சந்திப்பது விஜய்க்கு மிகவும் பிடித்தது.ஒருமுறை அவன் பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகாருக்குச் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்தான். அங்கே நமது வீர்சிங் ஒரு தங்கும் விடுதியில் மேனேஜராகப் பணி செய்துகொண்டிருந்தான். அந்த விடுதியில் விஜய் அறை எடுத்தான். அறை கொடுக்கும்போதே வீர்சிங், விடுதியின் சட்டதிட்டங்களைக் கூறினான். தினமும் மாலை நேரமானதும் அறை வாடகையைக் கொடுத்துவிடவேண்டும். மொத்தமாகவும் வாங்கிக்கொள்ளமாட்டார்கள்..ஒருநாள் வாடகையைக் கொடுக்காவிட்டாலும் உடனே விடுதியைவிட்டு வெளியேற்றப்படுவான்.இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு விஜய் அறை எடுத்தான்.முதல் நாள் சண்டிகாரில் பல இடங்களுக்கும் சென்றான். மாலையில் விடுதி திரும்பும் நேரத்தில் ஒரு பிக்-பாக்கெட்காரனிடம் தனது பணம் முழுவதையும் பறிகொடுத்துவிட்டு, கவலையுடன் விடுதிக்கு வந்தான்.துரதிர்ஷ்டவசமாக விஜய் , அறையில் பணம் எதுவும் வைக்காமல் மொத்தப் பணத்தையும் கையில் கொண்டு போயிருந்தான்.

விடுதிக்கு வந்ததும் , நேராக மேனேஜர் வீர்சிங்கிடம் சென்று, நடந்த விபரத்தைக் கூறி, கையில் மீதம் இருந்த பணத்தை வைத்து சென்னைக்குத் தகவல் கொடுத்துள்ளதாகவும் மறுநாள் தந்தி மணியார்டர் மூலமாக பணம் கிடைத்துவிடும் என்றும், அது வந்ததும் வாடகையைக் கொடுத்துவிடுவதாகவும் கூறினான். வீர்சிங் குதிக்க ஆரம்பித்துவிட்டான். உடனே பணம் வேண்டும். இல்லையானால் விடுதியைக் காலி செய்யும்படி கூறினான். மேலும் பஞ்சாபில் அடுத்த ஆறு நாட்களுக்கு வேளாண்மைத் திருவிழா நடக்கவிருப்பதினால் எல்லா அரசு அலுவலகங்களும் ஆறு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். அதனால் விஜய்க்கு பணம் கிடைக்க 6 நாட்கள் ஆகிவிடும்.பணம் இல்லையென்றால் அதற்கு ஈடாக வேறு ஏதாவது தந்தால் தங்கவைப்பதைப் பற்றி யோசிக்கமுடியும் என்று வீர்சிங் சொன்னதும், விஜய் தன் கையைப் பார்த்தான். அவனது பிறந்தநாள் பரிசாக அவனது தந்தை போட்டிருந்த பிரேஸ்லெட் இருந்தது.

அது ஏழு கண்ணிகள் கொண்டது. ஒரு கண்ணியின் மதிப்பு, கிட்டத்தட்ட ஒரு நாளைய அறை வாடகைக்கு ஈடாகும்.ஏழுநாட்களுக்கும் இந்த பிரேஸ்லெட் சமமாக வரும். அதனால் இதை வைத்துக் கொள்ளுங்கள்.பணம் வந்ததும் மொத்தமாகக் கொடுத்துவிட்டு இதை திருப்பி வாங்கிக் கொள்கிறேன் என்றான் விஜய். நமது ஆள் வீர்சிங் எப்படிப்பட்டவர் என்று நமக்குத் தெரியுமே. அதெல்லாம் முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கண்ணி என்று கணக்காகக் கொடுத்தால்தான் வாங்கிக் கொள்வேன். மொத்தமாக வாங்கி வைக்க விடுதியின் சட்டம் அனுமதிப்பதில்லை என்றான்.விஜய் மிகவும் கவலைப் பட்டான். பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த அந்த பிரேஸ்லெட்டை தினமும் ஒரு கண்ணியாக வெட்டியெடுத்து அதைப் பாழாக்க அவனுக்கு மனமில்லை. ஆழ்ந்து யோசித்து மிகக் குறைவாக எவ்வளவு வெட்டமுடியுமோ அவ்வளவு வெட்டி எடுத்து, தினம் ஒன்று கணக்காகக் கொடுத்தான். ஏழாவது நாள் பணம் கிடைத்ததும் பிரேஸ்லெட்டை மீட்டுக்கொண்டான்.
மன்ற நண்பர்களே, விஜய் எத்தனை கண்ணிகளை வெட்டியிருப்பான்.கணக்குப் போட்டுச் சொல்லுங்களேன். ???

baranee
27-01-2004, 01:12 AM
ஆறு கண்ணிகளை வெட்டியிருப்பான், ஏழாவது நாள்தான் பணம் கிடைத்து விட்டதே....( ஆமாம் அது என்னங்க கண்ணி....!!!)

அறிஞர்
27-01-2004, 01:19 AM
4 கண்ணிகள் (வளையங்கள்)... வெட்டினால்.. 7 நாளைக்கு வரும்

mania
27-01-2004, 03:11 AM
நான்கு , இரண்டு , ஒன்று என்கிற விகிதத்தில் கண்ணிகளை வெட்டினால் 7 நாட்களுக்கு கொடுக்கலாம்.
அன்புடன்
மணியா

சேரன்கயல்
27-01-2004, 04:33 AM
வெட்டியது 6 கண்ணிகள்தான்...

pgk53
27-01-2004, 04:06 PM
நண்பர் மணியா சரியான விடையச் சொல்லியிருக்கிறார்.
ஆனால் விளக்கமாகச் சொல்லவில்லை. அதனால் நான் கூறுகிறேன்.
பிரேஸ்லெட்டின் ஏழு கண்ணிகளில் முதல் இரண்டை விட்டுவிட்டு மூன்றாவது கண்ணியை முதலில் வெட்டுகிறார் விஜய்.இப்போது அவர் கையில் ஒரு கண்ணி, இரண்டு கண்ணி, நான்கு கண்ணி இருக்கிறது.
முதல் நாள் ஒரு கண்ணியைக் கொடுக்கிறார்.
மறுநாள், இரண்டு கண்ணிகளைக் கொடுத்து ஒரு கண்ணியை வாங்கிக் கொள்கிறார்.
மூன்றாவது நாள் ஒரு கண்ணியை மறுபடியும் கொடுக்கிறார்.
நான்காவது நாள் நான்கு கண்ணிகளைக் கொடுத்துவிட்டு, ஒரு கண்ணி, மற்றும் இரண்டு கண்ணிகளை வாங்கிக் கொள்கிறார்.
ஐந்தாவது நாள் ஒரு கண்ணியைக் கொடுக்கிறார். ஆறாவது நாள், இரண்டு கண்ணிகளைக் கொடுத்து, ஒரு கண்ணியை வாங்கிக்கொள்கிறார்.
ஏழாவது நாள் கடைசியாக கையில் உள்ள ஒரு கண்ணியைக் கொடுத்துவிடுகிறார்.
எட்டாவது நாள், ஊரிலிருந்து பணம் வந்துவிடுகிறது. பணத்தைக் கொடுத்து எல்லாவற்றையும் திருப்பிக்கொள்கிறார். ஆக ஒரே கண்ணியை மட்டும்தான்
விஜய் வெட்டினார்.

pgk53
27-01-2004, 04:08 PM
முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனைதான் கொடுப்பான்.
அந்த அரசனிடம் ஒரு பழக்கம் இருந்தது. எப்படிச் சாகவேண்டும் என்பதை குற்றவாளிகளே தேர்வு செய்ய விட்டு விடுவான்.
ஒரு புத்திசாலியான திருடன் , திருடும்போது காவலாளிகளால் பிடிக்கப்பட்டு, அரசனிடம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான்.
அவனிடமும் எப்படிச் சாகவேண்டும் என்று அரசர் கேட்டார்.
அந்தப் புத்திசாலியான திருடன் எப்படிச் சாகவேண்டும் என்று சொல்லியிருப்பான்?

பரஞ்சோதி
27-01-2004, 08:07 PM
அரசே! யாரு ஒருவர் அவரது முழங்கை முட்டியால் தன் முக்கை தொடுகிறாரோ அவரது கையால் தலை வெட்டப்பட்டு சாகத் தயார் என்று சொல்லியிருப்பான்.

குசும்பு பதில், நண்பர் பிஜிகே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

சேரன்கயல்
28-01-2004, 02:57 AM
பரஞ்சோதி...சோக்கா சொன்னபா நீ...

இக்பால்
28-01-2004, 08:16 AM
நண்பர் பிஜிகே சொன்ன தகவல்கள் பகுதியிலிருந்து உங்கள் வழியைச்
சொல்லி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன் பரஞ்சோதி தம்பி.
பாராட்டுக்கள்.

நண்பரே...அவர் எந்த வகையில் புத்திசாலி என்பதை சொல்ல முடியுமா?

அறிஞர்
28-01-2004, 12:12 PM
புத்திசாலிகள்.. நிறைந்த உலகம்.. வாழ்த்துக்கள்.. நல்ல சிந்தனை

pgk53
28-01-2004, 03:47 PM
பரஞ்சோதி அவர்கள் ஒரு புதிய கோணத்தில் சிந்தித்து இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் நான் கூறிய புதிருக்கு அது முற்றிலும் பொருத்தமான விடை அல்ல.எப்படிச் சாக விரும்புகிறாய்? என்ற கேள்விக்கு அவன் முதுமையால் சாகவேண்டும் என்று கூறினான்.

pgk53
28-01-2004, 03:48 PM
ஒரே உலோகத்தால் செய்யப்பட்ட இரண்டு உருளை வடிவுகள் உங்கள் நண்பரின் கைகளில் வைத்துள்ளார்.அதில் ஏதோ ஒரு உருளை மட்டும் உள்ளே காலியாக இருக்கிறதென்றும், மற்றதில் உலோகம் நிரப்பப்பட்டுள்ளது என்றும் நண்பர் கூறுகிறார். இப்போது உங்களை எது காலியான உருளை என்று நண்பர் கேட்கிறார். ஆனால் நீங்கள் அதை கையில் வாங்கிப் பார்த்து எடையை கணிக்கவோ அல்லது எடைதூக்கியில் போட்டுப் பார்க்கவோ, அவர் அனுமதிக்கவில்லை.நீங்கள் எப்படி, எது காலியான உருளை என்று சொல்லப்போகிறீர்கள்???

பரஞ்சோதி
28-01-2004, 03:58 PM
பரஞ்சோதி...சோக்கா சொன்னபா நீ...

எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களின் நட்பும் ஆசிர்வாதமும் தான்.

பாரதி
29-01-2004, 12:46 AM
உருளையை உருட்டிப்பார்க்கலாமா?

puppy
29-01-2004, 12:49 AM
இரண்டு கைகளிலும் வைத்து ஊதி பார்க்க வேண்டியது தானே...பிஜிகே......ஒன்னுமே இல்லாதது கையில் உருண்டு விடும் இல்லையா...

kavitha
29-01-2004, 04:09 AM
இரண்டு உருளைகளையும் ஒரே நேரத்தில் கீழேப்போடச்சொல்லவேண்டும். எது முதலில் கீழே விழுகிறதோ அது காலியானது.

இக்பால்
29-01-2004, 05:06 AM
தட்டிப் பார்க்க வேண்டியதுதான்.

Mathu
29-01-2004, 05:51 AM
இரண்டு உருளைகளையும் ஒரே நேரத்தில் கீழேப்போடச்சொல்லவேண்டும். எது முதலில் கீழே விழுகிறதோ அது காலியானது.

கவிதா நல்ல அணுகுமுறை. இது சரி எனில் முதலில் விளுவது காலியானதல்ல. உலோகம் நிறைந்ததே..!

பப்பி சரியான விடை சொல்லிட்டாங்க என்று நினைக்கிறேன். :oops:

பரஞ்சோதி
29-01-2004, 02:00 PM
தண்ணீரில் போட்டால் எடை உலோகம் நிரம்பியது முதலில் கீழே போகும், அல்லது உருட்டி விடச் சொன்னால், காலியானது வேகமாக உருளும். இது என் பதில். நன்றி!.

சேரன்கயல்
29-01-2004, 03:37 PM
ஊதி பார்க்கலாம்...
தொட்டு பார்க்க அனுமதியிருந்தால் தட்டிப்பார்த்து சொல்லலாம்...தண்ணீரில் போடலாம் என்றால் தண்ணீரில் போடலாம்...கீழே தட்டிவிடலாம் என்றால் கீழேகூட தட்டிவிடலாம்...
(சும்மா சமரசமா எல்லார் விடையும் சரினு சொல்லலாம்னு ஒரு நல்ல எண்ணம்தான்)

பரஞ்சோதி
29-01-2004, 03:45 PM
ஊதி பார்க்கலாம்...
தொட்டு பார்க்க அனுமதியிருந்தால் தட்டிப்பார்த்து சொல்லலாம்...தண்ணீரில் போடலாம் என்றால் தண்ணீரில் போடலாம்...கீழே தட்டிவிடலாம் என்றால் கீழேகூட தட்டிவிடலாம்...
(சும்மா சமரசமா எல்லார் விடையும் சரினு சொல்லலாம்னு ஒரு நல்ல எண்ணம்தான்)

நண்பரே! பதில் சொல்லத் தெரியாததை எவ்வளவு அழகாக சமாளிக்கீங்க. அந்த வித்தையை எனக்கும் சொல்லிக் கொடுங்கள். வாழ்க்கைக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

சேரன்கயல்
29-01-2004, 03:49 PM
இல்லை பரம்ஸ்...
நீங்கள்லாம் ஆளுக்கு ஒன்று சொல்லிட்டு நிற்கும்போது நான் மட்டும் என்னத்த புதுசா சொல்லிடப்போறேன்...
பரம்ஸ் போல வித்தியாசமான சிந்தனைலாம் நமக்கு வராது...
அதனாலதான்...இப்படியெல்லாம்...

pgk53
29-01-2004, 04:07 PM
அனைவருமே கிட்டத்தட்ட சரியான விடையைக் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அதிலே ஒரு திருத்தம். உருட்டிவிடுவது என்றவரையில் சரியான விடை. அதில் முதலில் வருவதுதான் காலியாந உருளை என்பதுதான் தவறானது.
பெளதீக விதிகளின்படி, காலியான உருளையைவிட உள்ளே கனம் உள்ள உருளை வேகமாக உருளும்.
அதனால் வேகமாக உருள்வதை விட்டுவிட்டு, மெதுவாக உருள்வதையே காலியான உருளை என்று கூறுவதுதான் சரியான விடை.

pgk53
29-01-2004, 04:08 PM
ராமுவுக்கு இருட்டு என்றால் பயம். இரவில் கூட படுக்கைக்குப் போகுமுன்பாக மின்விளக்கை அனைத்துவிட்டு, சுவிட்ச் இருக்கும் இடத்தில் இருந்து படுக்கைவரை இருட்டில் செல்லப் பயந்துகொண்டு, விளக்கை அனைக்காமலேயே போய் படுத்துவிடுவான். அப்படி இருக்கையில், அன்று படுப்பதற்காக அறைக்குள் நுழைந்தவன், எரிந்துகொண்டிருந்த விளக்கின் சுவிட்சை அனைத்துவிட்டு, அறை இருள் ஆவதற்கு முன்பே படுக்கையில் படுத்தான். படுக்கையில் இருந்து விளக்கின் சுவிட்ச் குறைந்தது பத்து அடி தூரம் இருக்கும்.தனது கையால்தான் சுவிட்சை அனைத்தான்.? இது எப்படி சாத்தியம் ஆனது?

பரஞ்சோதி
29-01-2004, 04:13 PM
அவரது படுக்கையில் தலையணையை மாற்றி கால் இருக்கும் பக்கமும் இதுவரை தலை வைத்து தூங்கிய இடத்தில் காலையும் வைத்திருப்பார். ஆகவே அணைத்தவுடன் படுக்கவும், படுக்கையில் இருந்துக் கொண்டே விளக்கை அணைக்கவும் வசதியாக இருந்து இருக்கும்.

சேரன்கயல்
29-01-2004, 04:16 PM
அப்படி இருக்கையில், அன்று படுப்பதற்காக அறைக்குள் நுழைந்தவன், எரிந்துகொண்டிருந்த விளக்கின் சுவிட்சை அனைத்துவிட்டு, அறை இருள் ஆவதற்கு முன்பே படுக்கையில் படுத்தான். படுக்கையில் இருந்து விளக்கின் சுவிட்ச் குறைந்தது பத்து அடி தூரம் இருக்கும்.தனது கையால்தான் சுவிட்சை அனைத்தான்.? இது எப்படி சாத்தியம் ஆனது?


அன்று அப்படினு மட்டும் சொன்னதால...அன்று பகலில் படுக்க போக, எரிந்த விளக்கை அணைத்துவிட்டு படுக்கிறான்...இருள் இருக்கதுல்ல பகலில்...

pgk53
29-01-2004, 04:20 PM
சபாஷ் சரியான விடை சேரன் கமல்.
புதிரைப் போட்டுத் திரும்புவதற்குள் விடை வந்துவிட்டது.
ஹ¤ம்......இதோ பிடியுங்கள் அடுத்த புதிரை.
ஒரு நாட்டின் இளவரசன் தனது தந்தையான அரசனுடன் மனவேறுபாடு ஏற்பட்டு, யாருக்கும் தெரியாமல் எங்கோ ஓடிப் போய்விட்டான். அவனை எங்கு தேடியும் கிடைக்காத சோகத்தில், சில ஆண்டுகள் கழித்து, அரசர் மரணம் அடைந்தார். அரசன் இறந்த விபரத்தை அந்த நாட்டிலும், பக்கத்து நாடுகளிலும் அறிவித்து, இளவரசன் எங்கிருந்தாலும் உடனே வந்து, அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டினார்கள்.
இளவரசன் வந்தான். பதவியை ஏற்றுக்கொள்ள நாள்குறித்து அதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்த சமயத்தில், அந்த இளவரசனைப் போலவே எல்லா அம்சங்களிலும் இருக்கும் மற்றொருவன் வந்து, தான்தான் உண்மையான இளவரசன் என்றும், தனக்குத்தான் அரசு உரிமையானது என்றும் கூற, அமைச்சர்களும் அறிஞர்களும் திகைப்படைந்தார்கள்.இருவரையும், பல்வேறு விதமாகச் சோதனை செய்தார்கள். அனைத்து சோதனைகள் செய்தும் அவர்களில் யார் உண்மையான இளவரசன் என்று கண்டுபிடிக்க இயலவில்லை.
இறுதியாக அந்த நாட்டின் தலைசிறந்த மருத்துவராகத் திகழ்ந்த ஒருவரை அழைத்து, இருவருக்கும் ரத்த பரிசோதனை செய்யும்படி கூறினார்கள்.
அப்போது ஒருவன் பரிசோதனைக்காக ரத்தம் கொடுக்க தயார் என்று முன்னால் வந்தான். அடுத்தவனோ, தான் ரத்தம் கொடுக்க இயலாது என்று பின் வாங்கினான். அறிஞர்கள், ரத்தம் கொடுக்கத் தயார் என்று கூறியவனைச் சிறைக்குக் கொண்டுசெல்லும்படி, காவலாளிகளுக்கு ஆணையிட்டுவிட்டு, இயலாது என்றவனை அரசனாக முடிசூட்டினார்கள்.ஏன் அப்படிச் செய்தார்கள்???

பரஞ்சோதி
29-01-2004, 04:20 PM
நீங்கள் சொல்லுவதும் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம் மற்ற நண்பர்களின் பதிலையும் நண்பர் பி.ஜி.கேயின் சரியான விடையையும்.

pgk53
29-01-2004, 04:22 PM
பரஞ்சோதி அவர்களே....சேரன் கமல் சரியான விடையைத்தான் கூறியுள்ளார்.
இதோ அடுத்த புதிர். இதையும் படித்து விளக்கம்கூறுங்கள். நன்றி...

பரஞ்சோதி
29-01-2004, 04:24 PM
அரச காலத்தில் ரத்த பரிசோதனை என்பது கிடையாது. ஆகவே இல்லாத ஒன்றிற்கு சரி என்று சொன்னதால், அவன் போலியானவன் என்று கண்டுபிடித்திருப்பார்கள்.

பரஞ்சோதி
29-01-2004, 04:25 PM
பரஞ்சோதி அவர்களே....சேரன் கமல் சரியான விடையைத்தான் கூறியுள்ளார்.
இதோ அடுத்த புதிர். இதையும் படித்து விளக்கம்கூறுங்கள். நன்றி...

தாங்கள் எங்களுடனே தான் இருக்கீங்களா? அப்போ ஜாலி தான், இன்றைக்கு என் மண்டை காயப்போகுது உங்களின் புதிர்களால்.

சேரன்கயல்
29-01-2004, 04:27 PM
ஒரு வேளை...
ரத்தம் எடுக்க காயம் ஏற்படும், அது பதவியேற்புக்கு முன்பாக இருக்ககூடாது என்ற நியதி ஏதாவது...???

பரஞ்சோதி
29-01-2004, 04:30 PM
பரஞ்சோதி அவர்களே....சேரன் கமல் சரியான விடையைத்தான் கூறியுள்ளார்.
இதோ அடுத்த புதிர். இதையும் படித்து விளக்கம்கூறுங்கள். நன்றி...

வாழ்த்துக்கள், நண்பர் சேரன்கயல் என்றால் சும்மாவா?

சேரன்கயல்
29-01-2004, 04:35 PM
இருந்தாலும், உங்கள் ரேஞ்சுக்கு நம்மால முடியாது பரம்ஸ்...

பரஞ்சோதி
29-01-2004, 04:41 PM
இருந்தாலும், உங்கள் ரேஞ்சுக்கு நம்மால முடியாது பரம்ஸ்...

ரேஞ்ச் எல்லாம் ஒண்ணும் இல்லங்க, சின்ன வயசில குடிச்ச கம்ப கஞ்சி இப்போ தான் வேலை செய்யுதுங்க.

சேரன்கயல்
29-01-2004, 04:42 PM
நம்மோடது அரிசிக் கஞ்சி...
அதான் கொஞ்சம் லேட்...

பரஞ்சோதி
29-01-2004, 04:47 PM
எனக்கு சின்ன வயது நினைவு, ஊர் நினைவு வந்துவிட்டது உங்களால், அரிசிக் கஞ்சி, மாங்காய் ஊறுகாய், சுட்ட கருவாடு, மோர், பக்கத்தில் ஒரு காமிக்ஸ் புத்தகம். எவ்வளவு இனிமை.

சேரன்கயல்
29-01-2004, 04:49 PM
சின்ன வயசுன்னாலே இனிமைதானே பரம்ஸ்...

நிலா
29-01-2004, 04:53 PM
சின்ன வயசுன்னாலே இனிமைதானே பரம்ஸ்


யாருக்கு சின்ன வயசா இருக்கணும் சேரன்!? :wink: :roll: :D

பரஞ்சோதி
29-01-2004, 04:54 PM
நண்பரே! எனக்கு ஒரு சந்தேகம், இப்படி அரட்டைகளை நாம் இந்த பகுதியில்/தலைப்பில் அடிக்கலாமா? ஏனெனில் இது புதிர் பகுதியாயிற்றே? புதியவன் என்பதால் கேட்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம், அடிக்கலாம் என்றால் தூள் தான், இல்லை என்றால் அதற்குரிய பகுதி இருந்தால் சொல்லுங்கள், செல்வோம் அங்கே, ஆரம்பிப்போம் நம் அரட்டையை.

சேரன்கயல்
29-01-2004, 04:54 PM
உங்களுக்கும்தான்... :wink: :twisted: :mrgreen:

பரஞ்சோதி
29-01-2004, 04:56 PM
சின்ன வயசுன்னாலே இனிமைதானே பரம்ஸ்


யாருக்கு சின்ன வயசா இருக்கணும் சேரன்!? :wink: :roll: :D

ஆகா, சகோதரியும் வந்தாச்சா?

நிலா
29-01-2004, 04:57 PM
நண்பரே! எனக்கு ஒரு சந்தேகம், இப்படி அரட்டைகளை நாம் இந்த பகுதியில்/தலைப்பில் அடிக்கலாமா? ஏனெனில் இது புதிர் பகுதியாயிற்றே? புதியவன் என்பதால் கேட்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம், அடிக்கலாம் என்றால் தூள் தான், இல்லை என்றால் அதற்குரிய பகுதி இருந்தால் சொல்லுங்கள், செல்வோம் அங்கே, ஆரம்பிப்போம் நம் அரட்டையை.



நல்ல கேள்வி!
இதுக்குதான் அரட்டை அடிக்கலாம் வாங்கன்னு தனித்தலைப்புல கூப்பிட்டேன்!அதையும் யாரும் கண்டுக்கல..! :(

எதுக்கும் முன்னெச்சரிக்கையா நான் இந்தப்பகுதியில இருந்து ஜூட்!

poo
29-01-2004, 05:05 PM
நிலா.. நிலா... நில்லுங்க.. நானும் வாரேன்..

(அநேகமா.. சேரன் , நிலா...-வுக்கெல்லாம் எதனா எச்சரிக்கை போனாலும் போகும்... .. ஹிஹிஹி!!)

சேரன்கயல்
29-01-2004, 05:07 PM
ஒஹோ...
அப்படி ஒரு மேட்டர் இருக்க இங்க...

poo
29-01-2004, 05:13 PM
எனக்கு வராதுப்பா.. ஏன்னா நான்தான் நல்ல பையனாட்டும் கம்முனு இருக்கேனே!!

சேரன்கயல்
29-01-2004, 05:14 PM
அப்போ நானும் கம்முனு இருக்கேன்... :|

kavitha
30-01-2004, 04:54 AM
ராஜ முத்திரை ஏதாவது எதிர்பார்த்திருப்பார்களோ?

pgk53
30-01-2004, 07:22 AM
அரட்டையானலும் அர்த்தம் உள்ள சுவாரஸ்யமான அரட்டைதான். மிகவும் ரசித்தேன் நண்பர்களே......யார் உண்மையான இளவரசன் என்ற புதிருக்கு, அனைவருமே பதில் கூறியிருக்கிறீர்கள்..இருப்பினும் சரியான விடையை நானே கூறுகிறேன்.
உண்மையான இளவரசனுக்கு ஒரு நோய் இருந்தது. அதாவது, உடலில் இருந்து எதாவது ஓர் இடத்தில் ரத்தம் வெளியேறத் தொடங்கினால், அது சுலபத்தில் நிற்காது. சாதாரனமாக நமது உடலில் இருந்து காயத்தில் ரத்தம் வெளியேற ஆரம்பித்தால் , அதுவாகவே உறைந்துபோய், ரத்தம் வெளியேறுவது நின்றுபோகும். ஆனால் அந்த உண்மையான இளவரசனுக்கு, சோதனைக்காக ரத்தம் எடுத்தால், பிறகு அந்த ரத்தம் உறையாமல் வெளியேறிக்கொண்டே இருக்குமாதலால், அது அவனது உயிருக்கே எமனாக ஆகிவிடும். அதனால்தான் அந்த இளவரசன் ரத்தம் எடுக்கச் சம்மதிக்கவில்லை. அவன் சம்மதிக்காததினாலேயே, அவன் உண்மையான இளவரசன் என்று அறிஞர்கள் தீர்மானித்தார்கள்.

pgk53
30-01-2004, 07:27 AM
ராமுவிற்கு இன்று என்ன கிழமை என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அப்போது அவனது நண்பர்கள் சோமுவும் தாமுவும் அங்கே வந்தார்கள்.
இங்கே சோமு&தாமுவைப்பற்றிக் கூறியாகவேண்டும்..
சோமு, திங்கள் , செவ்வாய், புதன் கிழமைகளில் எப்போதும் பொய்யே பேசுவான்.
தாமு, வியாழன்,வெள்ளி, சனிக் கிழமைகளின் பொய்தான் பேசுவான்.
ராமு முதலில் சோமுவிடம் இன்று என்ன கிழமை என்று கேட்டான்.
அதற்கு சோமு, "நேற்று எனது பொய்பேசும் தினங்களில் ஒன்று" என்றான்.
அடுத்தாற்போல் தாமுவிடம், இன்று என்ன கிழமை என்று கேட்டான்.
அவனும் "நேற்று எனது பொய் பேசும் தினங்களில் ஒன்று "என்றான்.
இப்போது ராமுவுக்கு இன்று என்ன கிழமை என்று புரிந்துவிட்டது.
மன்ற நண்பர்களே உங்களுக்குப் புரிந்தால் கூறுங்களேன்.!!!

சேரன்கயல்
30-01-2004, 07:50 AM
ஞாயிற்றுக் கிழமையோ..???

kavitha
30-01-2004, 10:15 AM
வியாழன்

samuthira
30-01-2004, 10:45 AM
கொஞ்ச நாள் வெளியூர் பயணத்தில் இருந்து , இங்கு வந்து பார்த்தால் நண்பர்கள் புதிரில் விளையாடி கொண்டிருக்கிறார்கள்., (இருந்தாலும் பதில் சொல்ல இந்த மண்டையில சரக்கு இல்ல, அது வேறு விஷயம்)
எதோ சுலபாக தெரிகிறது...பதில் சொல்லுவோம்...

ஏனுங்க , வியாழ கிழமை தானுங்களே......

பரஞ்சோதி
30-01-2004, 10:58 AM
வியாழக்கிழமை என்பது என் பதில்

பரஞ்சோதி
30-01-2004, 11:07 AM
கொஞ்ச நாள் வெளியூர் பயணத்தில் இருந்து , இங்கு வந்து பார்த்தால் நண்பர்கள் புதிரில் விளையாடி கொண்டிருக்கிறார்கள்., (இருந்தாலும் பதில் சொல்ல இந்த மண்டையில சரக்கு இல்ல, அது வேறு விஷயம்)
எதோ சுலபாக தெரிகிறது...பதில் சொல்லுவோம்...

ஏனுங்க , வியாழ கிழமை தானுங்களே......

சரியான விடையை சுலபமாகச் சொல்லிவிட்டு, மண்டையில் ஒன்றும் இல்லை என்பது ரொம்பத் தான் தன்னடக்கம். வாழ்த்துக்கள்.

எதற்கும் நண்பர் பி.ஜி.கே அவர்கள் சரியான பதிலை தரட்டும் என்று காத்திருக்கிறேன்.

பரஞ்சோதி
30-01-2004, 11:09 AM
ஞாயிற்றுக் கிழமையோ..???

ஊரூக்கு போகும் வேளையில் ஏன் நண்பரே! மூளைக்கு வேலை கொடுக்குறீங்க.

பரஞ்சோதி
30-01-2004, 11:11 AM
அரட்டையானலும் அர்த்தம் உள்ள சுவாரஸ்யமான அரட்டைதான். மிகவும் ரசித்தேன் நண்பர்களே......யார் உண்மையான இளவரசன் என்ற புதிருக்கு, அனைவருமே பதில் கூறியிருக்கிறீர்கள்..இருப்பினும் சரியான விடையை நானே கூறுகிறேன்.
உண்மையான இளவரசனுக்கு ஒரு நோய் இருந்தது. அதாவது, உடலில் இருந்து எதாவது ஓர் இடத்தில் ரத்தம் வெளியேறத் தொடங்கினால், அது சுலபத்தில் நிற்காது. சாதாரனமாக நமது உடலில் இருந்து காயத்தில் ரத்தம் வெளியேற ஆரம்பித்தால் , அதுவாகவே உறைந்துபோய், ரத்தம் வெளியேறுவது நின்றுபோகும். ஆனால் அந்த உண்மையான இளவரசனுக்கு, சோதனைக்காக ரத்தம் எடுத்தால், பிறகு அந்த ரத்தம் உறையாமல் வெளியேறிக்கொண்டே இருக்குமாதலால், அது அவனது உயிருக்கே எமனாக ஆகிவிடும். அதனால்தான் அந்த இளவரசன் ரத்தம் எடுக்கச் சம்மதிக்கவில்லை. அவன் சம்மதிக்காததினாலேயே, அவன் உண்மையான இளவரசன் என்று அறிஞர்கள் தீர்மானித்தார்கள்.

இங்கிலாந்து அரசப்பரம்பரை என் மரமண்டையில் தோன்றவில்லை. அருமையான விடுகதை நண்பரே!. தொடர்ந்து இது போன்று கொடுத்து எங்களை ஒரு வழி பண்ணிவிடுங்கள்.

Mathu
30-01-2004, 02:50 PM
கவி, சமுத்திரா, பரஞ்சோதி உங்கள் விடை தான்
என்னொடதும். pgk வரட்டும்.

pgk53
30-01-2004, 03:53 PM
கவி, சமுத்திரா, பரஞ்சோதி, மற்றும் முத்து அனைவருமே சரியான பதிலைச் சொலியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. இன்று என்ன கிழமை என்று தெரிந்த
பிறகு , மறுபடியும் புதிரைப் பார்த்தால் மிகச் சுலபமாக விளங்கிவிடும்.இது தவறான பதிலைச் சொல்லியவர்களுக்காக.சரி அடுத்த புதிருக்குப் போகலாமா/


துப்பாக்கி சுடுவதில் நிபுணனான ஒருவன் தனது தொப்பியைக் கழற்றித் தொங்கவிட்டான்.பிறகு தனது கண்களை , கருப்புத் துணியைக் கொண்டு இறுக்கமாகக் கட்டச் சொன்னான்.கட்டியபிறகு, பின் புறம் திரும்பி நூறு அடிகளும், பிறகு வலது புறம் திரும்பி சில அடிகளும் , பிறகு இடது புறம் திரும்பி கொஞ்ச தூரமும், நடந்து போய், மறுபடியும் முன்புறம் திரும்பி சுட்டான். பிறகு கண்களைக் கட்டியிருந்த துணியைக் அவிழ்த்தான்.துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டா, சரியாக தொப்பியைத் துளையிட்டு இருந்ததைக் கண்டான்.
இது எப்படி சாத்தியம் ஆனது???

இக்பால்
30-01-2004, 06:25 PM
தொப்பியைத் துப்பாக்கியிலேயே தொங்க விட்டிருந்தான். சரிங்களா?

பரஞ்சோதி
30-01-2004, 07:31 PM
தொப்பியைத் துப்பாக்கியிலேயே தொங்க விட்டிருந்தான். சரிங்களா?

அண்ணா இவ்வளவு எளிதாக சொல்லிவிட்டீங்கள். நான் என்னடா என்றால் கிராப், டிகிரி என்று எல்லாம் போட்டு மண்டை காய்ந்து விட்டேன்.

samuthira
31-01-2004, 04:51 AM
ஆமாம் பரஞ்சோஜி இங்கேயும் அந்த கதை தான், இக்பால் அண்ணா சொல்வது சரி

Mathu
31-01-2004, 05:02 AM
பரம்ஸ் வீக்கென்ற் தானே காயட்டும்....!
இக்பால்ஜி என்னமா ஜொசிக்கிறீங்க..!

pgk53
31-01-2004, 02:53 PM
இக்பால் அவர்களே....சரியாகச் சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி.....சரி அடுத்த புதிருக்குப் போவோமா?இரண்டு சிறிய புதிர்கள்.

1} ஆண்டுக் காலண்டரில் சில மாதங்கள் 31 நாட்களும், சில மாதங்கள் 30 நாட்களும் இருக்கின்றன.
28 நாட்கள் உள்ள மாதங்கள் எத்தனை?

2} 25ல் இருந்து எத்தனை முறை 5ஐக் கழிக்கமுடியும்?