PDA

View Full Version : புதிரோ புதிர் எண்-571-05-06-2015



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17 18 19

gragavan
09-09-2005, 11:22 AM
அன்பு நண்பர்களே-----நான் நாளை ஒரு மாத விடுமுறையில் புறப்படுகிறேன்.
ஊர் சென்று நேரம் இருந்ததல் அடுத்த புதிரை பதிவு செய்கிறேன்.

அனைவருக்கும் எனது வணக்கங்கள்.நல்லபடியாக ஊருக்குப் போய் வாருங்கள் அண்ணா. வாழ்த்துகள்.

pgk53
16-10-2005, 02:27 AM
அன்பு நண்பர்களே நலமா?
விடுமுறை முடிந்து திரும்பிவிட்டேன்.
முதல் புதிர் கொஞ்சம் எளிதானதாக இருக்கட்டுமே என்று அடுத்த புதிரைக் கொடுக்கிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் எனது புனித ரமதான் நோன்பு வாழ்த்துக்கள்

pgk53
16-10-2005, 02:30 AM
புதிர் எண்-190


திருச்சியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு காரில் நான் சென்று கொண்டிருந்தேன்.

திடீரென்று அந்தக் கார் நேராகச் செல்லாமல் அங்கும் இங்குமாக அலைந்தது.

சமாளிக்க இயலாமல் ஓட்டுனர் வேகத்தைக் குறைத்துக் காரை நிறுத்தினார்.
கீழே இறங்கிவந்து வாகனத்தின் நான்கு பக்கமும் ஆராய்ந்துபார்த்தார்.

ஒவ்வொரு சக்கரமாகப் பார்த்து வந்ததில், ஒரு சக்கரத்தில் பினைப்புக்காகப் பொருத்தப்பட்டிருந்த நட்டுகள் நான்குமே இல்லாமல் சக்கரம் எந்த சமயமும் விலகிக் கீழே விழும் நிலையில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.நல்ல வேளையாக பெரிய விபத்து நடக்காமல் இருந்தது என்று மனதைத் தேற்றிக்கொண்டார்.

அடுத்த நகரமான மேலூர் இன்னும் பத்து கிலோமீட்டார் தொலைவில் இருப்பதினால், வேறு ஒரு வாகனத்தில் ஏறிச் சென்று மேலூரில் இருந்து சக்கரத்தில் பொருத்தும் நட்டுகளை வாங்கி வந்து பொருத்தினால்தான் வண்டியை ஓட்ட முடியும் என்று முடிவு செய்துகொண்டார்.

இதற்கிடையில் காரில் இருந்து நான் இறங்கினேன். சக்கரத்தின் நட்டுகள் கழன்றுபோன விபரத்தைக் கூறி, .தான் மேலூர் சென்று விரைவில் நட்டுகளை வாங்கிவந்துவிடுவதாகக் கூறினார்.

சிறிது ஆலோசனை செய்த நான் ஒரு எளிய வழியைக் கூறினேன்.
அதன்படி செய்த ஓட்டுனர் வாகனத்தை உடனே கிளப்பினார்.
மெதுவாக ஓட்டிச்சென்று மேலூரை அடைந்தோம்.
வேறு புதிய நட்டுகளை வாங்கிப் பொருத்திக்கொண்டு வழக்கமான வேகத்தில் சென்று மதுரையை அடைந்தோம்.

நண்பர்களே------------நான் அந்த வாகன ஓட்டுனருக்கு என்ன வழி கூறியிருப்பேன்???

பிரியன்
16-10-2005, 04:49 AM
மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து ஒரு நட்டை கழற்றி மாட்டி யிருப்பீர்கள். மேலூர் வந்த பின்பு சரி செய்து பயணத்தை தொடர்ந்திருப்பீர்கள்

mukilan
16-10-2005, 05:20 AM
மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து ஒரு நட்டை கழற்றி மாட்டி யிருப்பீர்கள். மேலூர் வந்த பின்பு சரி செய்து பயணத்தை தொடர்ந்திருப்பீர்கள்
அதே அதே சபாபதே! ஆனாலும் உங்களின் கடினமான புதிர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

மன்மதன்
16-10-2005, 05:22 AM
அன்பு நண்பர்களே நலமா?
விடுமுறை முடிந்து திரும்பிவிட்டேன்.
முதல் புதிர் கொஞ்சம் எளிதானதாக இருக்கட்டுமே என்று அடுத்த புதிரைக் கொடுக்கிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் எனது புனித ரமதான் நோன்பு வாழ்த்துக்கள்

வாருங்கள் பிஜிகே..இந்த முறையும் பார்க்காமல் போயிட்டீங்களே.....:mad: :mad:

பரஞ்சோதி
16-10-2005, 05:48 AM
பிஜிகே அண்ணாவை வருக வருக என்று வரவேற்கிறேன். இனிமேல் மூளைக்கு நிறைய வேலை கிடைக்கப் போகுது.

பரஞ்சோதி
16-10-2005, 05:49 AM
மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து ஒரு நட்டை கழற்றி மாட்டி யிருப்பீர்கள். மேலூர் வந்த பின்பு சரி செய்து பயணத்தை தொடர்ந்திருப்பீர்கள்

பாராட்டுகள் பிரியன்.

இது எல்லாம் அய்யா? புல்லரிக்க வைத்து விட்டீங்க. :D

பிரியன்
16-10-2005, 05:57 AM
பாராட்டுகள் பிரியன்.

இது எல்லாம் அய்யா? புல்லரிக்க வைத்து விட்டீங்க. :D

இதெல்லாம் அதிகமா தெரியல..... ஏதோ கேள்வி ஞானம்தான்:)

gragavan
16-10-2005, 07:45 AM
வாருங்கள் பிஜிகே அண்ணே. மீண்டும் உங்கள் புதிர்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

வாழ்த்துக்கள் பிரியன்.

pgk53
17-10-2005, 03:51 AM
சரியான விடையைக் கூறிய பிரியன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இந்தப் புதிர் மிகவும் எளிமையாக இருப்பதாக கூறுகிறீர்கள்.
சரி அடுத்த புதிரைப் பார்ப்போம்.
அன்பு நண்பர் மன்மதன் அவர்களே இம்முறை நான் அபுதாபியில் இருந்தே சென்னை சென்றேன்.அதனால் துபாய் வர இயலவில்லை.அடுத்த பயணத்தில் கட்டாயமாக துபாய் வருகிறேன்.
சரி அடுத்த புதிருக்குப் போகலாமா?

அறிஞர்
17-10-2005, 03:52 AM
வாவ்... வெகு நாட்களுக்கு பிறகு அன்பரே.. தொடருங்கள் தங்கள் புதிர்களை....

பரஞ்சோதி இந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்

pgk53
17-10-2005, 03:52 AM
புதிர் எண்-191

மாணிக்கமும் முத்துவும் நண்பர்கள்.
பக்கத்தில் உள்ள நகரத்துக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்ற்றிருந்தார்கள்.
“நம்மில் யார் அறிவுடையவர்கள் என்று சோதித்துப் பார்ப்போமா”? என்றான் மாணிக்கம்.
“என்ன சோதனை” என்று கேட்டான் முத்து.

“நாம் நகரப் பேருந்தில் பக்கத்தில் உள்ள திருமங்கலத்துக்குச் செல்லப் போகிறோம்..அதற்கான கட்டணம் ஐந்து ரூபாய்.நான் உன்னிடம் ஐந்து ரூபாய் தருகிறேன். அதைக்கொண்டு நீ தனியாக டிக்கெட் எடுத்துக்கொள். நான் எனக்குத் தனியாக டிக்கெட் எடுத்துக்கொள்கிறேன்.” என்றான் மாணிக்கம்.

“சரி---நீ சொன்னபடியே செய்கிறேன். ஆனால் இதில் என்ன அறிவுச் சோதனை இருக்கிறது”? என்று கேட்டான் முத்து.

“இருக்கிறதே!!!!!!!----நீ கண்டக்டரிடம் ஐந்து ரூபாய் கொடுப்பாய்.அவர் உன்னிடம் எந்த ஊருக்கு என்று கேட்கமாட்டார். டிக்கெட்டைக் கொடுத்துவிடுவார். ஆனால் நான் ஐந்து ரூபாய் கொடுக்கும்போது, எந்த ஊருக்கு என்று என்னைக் கேட்பார்” என்றான் மாணிக்கம்.

அதெப்படி???/என்னிடம் கேட்காமல் உன்னிடம் மட்டும் கண்டக்டர் கேட்பார்?என்றான் முத்து.


அதில்தானடா அறிவுச் சோதனையே அடங்கியுள்ளது….என்றான் மாணிக்கம்.

சரி என்று முத்து ஒப்புக்கொண்டான்.
டவுன்பஸ் வந்தது.இருவரும் அதில் ஏறிக்கொண்டார்கள்.
கண்டக்டரிடம் முதலில் ஐந்து ரூபாய் கொடுத்தான் முத்து.
கண்டக்டர் முத்துவிடம் எதுவுமே கேட்காமல் டிக்கெட்டை கிழித்துக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

அடுத்தாற்போல் நின்றிருந்த மாணிக்கம் கண்டக்டரிம் ஐந்து ரூபாய் கொடுத்தான்.
உடனே கண்டக்டர் “ எங்கே போகவேண்டும்” என்று கேட்டார்.
மாணிக்கம் திருமங்கலம் என்றதும் ஐந்து ரூபாய்க்குரிய டிக்கெட்டை கிழித்துக் கொடுத்துவிட்டு அடுத்த ஆளிடம் சென்றார்.

மாணிக்கம் முத்துவைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தான்.

நண்பர்களே முத்துவிடம் எந்த ஊருக்கு என்று கேட்காமல் மாணிக்கத்திடம் மட்டும் ஏன் கண்டக்டர் கேட்டார்.

அறிஞர்
17-10-2005, 04:02 AM
முத்து ஐந்து ரூபாய் சில்லறையாக கொடுத்து இருந்தால்..... மொத்தம் உள்ள ஐந்து ரூபாய்க்கு.... டிக்கெட் கொடுத்து இருக்கலாம்.

(2ம் கணிப்பு ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து இருந்தால்.... கொடுத்த நோட்டில் செல்ல வேண்டிய ஊர் பெயர் இருந்ததோ)

mania
17-10-2005, 05:09 AM
முத்து ஐந்து ரூபாய் சில்லறையாக கொடுத்து இருந்தால்..... மொத்தம் உள்ள ஐந்து ரூபாய்க்கு.... டிக்கெட் கொடுத்து இருக்கலாம்.

ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து இருந்தால்.... கொடுத்த நோட்டில் செல்ல வேண்டிய ஊர் பெயர் இருந்ததோ

:D பாராட்டுகள் அறிஞரே.....(முன் அநுபவமோ.....???):rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:D :D

pradeepkt
17-10-2005, 05:38 AM
சில்லறைதான் காரணமாக இருக்கும்...

பரஞ்சோதி
17-10-2005, 05:43 AM
பாராட்டுகள் அறிஞர்.

சில்லறை புதிரை அருமையாக சொல்லிவிட்டீங்க.

pgk53
19-10-2005, 02:12 AM
கலைஞருக்கு எனது வாழ்த்துக்கள்.
சில்லறை விஷயத்தை சட்டென்று கண்டுபிடித்தமைக்கு எனது பாராட்டுக்கள் பல.

சரி அடுத்த புதிருக்குப் போவோம்.

அறிஞர்
19-10-2005, 03:11 AM
கலைஞருக்கு எனது வாழ்த்துக்கள்.
சில்லறை விஷயத்தை சட்டென்று கண்டுபிடித்தமைக்கு எனது பாராட்டுக்கள் பல.

சரி அடுத்த புதிருக்குப் போவோம்.கலைஞரா......

அடுத்த புதிர் எப்போது அன்பரே.. கொடுங்கள்

pgk53
19-10-2005, 04:16 PM
புதிர் எண்-192

நண்பர்களே----துப்பறியும் நிபுணர் சோதி என்பவரைப் பற்றி நீங்கள் அனைவருமே நிறையக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.அவர் எடுத்துக்கொண்ட வழக்குகளில் எல்லாம் நூறு சதவிகிதம் வெற்றியடைந்தவர். ஒருநாள் அவர் தனது நண்பர் சுந்தரத்துடன் காவல் நிலையத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். சுந்தரம் அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர்..

அப்போது தொலைபேசி மணி ஒலிக்க, சுந்தரம் தொலைபேசியை எடுத்தார்.
பேசியது ஒரு பெண்.அந்தப் பெண் அழுது புலம்பியபடி “ ஐயோ நான் என்ன செய்வேன்---நான் எனது கணவரை தவறுதலாகத் துப்பாக்கியால் சூட்டுக் கொன்றுவிட்டேன் “ என்று கதறி அழுதாள்.

“அம்மா---அழாதீர்கள். நிதானமாக இருங்கள். என்ன நடந்தது என்று நான் நேரில் வந்ததும் கூறுங்கள். இப்போது உங்கள் வீடு எங்கே என்று விபரமாகக் கூறினால் நான் புறப்பட்டு வருகிறேன்” என்று சுந்தரம் பதில் கூறினார்.

அதற்கு அவள் “ வானவில் நகர், இரண்டாவது தெரு. வீட்டு எண் பத்து. கிழக்குப் பார்த்த வீடு.வீட்டுக்கு முன் புறம் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும்.உடனே வாருங்கள்” என்றாள்

உடனே சுந்தரம், சோதியையையும் அழைத்துக்கொண்டு அந்த வீட்டை அடைந்தார்.அதை வீடு என்பதைவிட ஒரு மாளிகை என்றே கூறும் அளவுக்கு பெரியதாகவும் செல்வச் செழிப்புடனும் இருந்தது.

தலைவாசல் கதவருகே வீட்டின் உட்புறம் ஒருவர் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து, இரத்தம் தரையெங்கும் பரவிக் கிடக்க கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

சுந்தரமும் சோதியும் அந்த இடத்தை நன்கு ஆராய்ந்தார்.கதவில் நான்கு குண்டுகள் பாய்ந்த அடையளம் இருந்தது.
கண்களில் நீர் வழிய ஒரு பெண் அழுதுகொண்டு நின்றிருந்தாள்.அவள் கதறி அழுதுகொண்டிருந்ததைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
அவரிடம் சோதி, “ அம்மா! அழுவதை நிறுத்துங்கள். என்ன நடந்தது என்று சொல்லுங்கள். எப்படி உங்கள் கணவர் இறந்தார் ? எதையுமே மறைக்காதீர்கள்” என்றார்.

“நான் எல்லா விஷயத்துக்குமே அஞ்சி நடுங்கும் சுபாவம் கொண்டவள்.சில நாட்களாகவே நான் எங்கு சென்றாலும் யாரோ என்னை பின் தொடர்வதுபோல உணர்ந்தேன்.அதனால் வீட்டில் தனியாக இருக்கும்போதும் எனக்குப் பயமாகவே இருந்தது.

காலையில் வழக்கம்போல என் கணவர் வேலைக்குச் சென்றார்.மாலை நான்கு மணி இருக்கும். என் கணவரின் நண்பர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து, என் கணவருக்கு அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் இருப்பதாகவும், அதனால் இன்று மிகவும் தாமதமாகும் என்று என்னிடம் சொல்லும்படி கணவர் கூறியதாகச் சொன்னார்.” என்று கூறினாள்.
அப்போது இடையில் குறுக்கிட்ட சோதி,
அம்மா---இப்படி அடிக்கடி உங்கள் கணவரின் நண்பர்கள் தகவல் கூறுவார்களா?” என்று கேட்டார்.
அதற்கு அவள்”அடிக்கடி வராது.மாதம் ஓரிருமுறை இப்படி தகவல் வரும்..சில சமயங்களில் என் கணவரே தகவலும் கொடுப்பார். அதனால் இன்று தகவல் கிடைத்ததும் என் கணவர் இன்று வரத் தாமதம் ஆகும் என்று நினைத்தேன்.மாலை ஐந்தரை அல்லது ஆறு மணி இருக்கும். வாசல் கதவருகே யாரோ வருவதுபோல் ஓசை கேட்டது.யார் என்று தெரியவில்லை. பயத்தினால் நான் யாரோ டிருடந்தான் வருகிறான் என்று நினைத்தேன்.என் அச்சம் அதிகம் ஆனது.எப்படியாவது என்னைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று பரபரப்புடன் செயல்பட்டேன்..
மாடி அறைக்கு ஓடிய நான், எங்கள் படுக்கை அறையில் இருந்து கணவரின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு , கொஞ்சம் துணிவு வரப்பெற்றவளாக கீழே வந்தேன்..
கீழே வந்ததும் கதவின் பின்னால் ஒளிந்துகொண்டேன்.
கதவு கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்தது. வந்தவனின் நிழல் கதவைத் தாண்டி வீட்டுக்குள் விழுந்தது.பிறகு மெல்ல வீட்டுக்குள் அந்த நிழல் நுழைவதைக் கண்டேன்.

திருடன்தான் வீட்டுக்குள் நுழைகிறான் என்று எனக்குள் தீர்மானம் ஆனது.

என்ன செய்கிறோம் என்பதே என் நினைவில் இல்லை. உயிர் தப்பவேண்டுமே என்ற எண்ணம்தான் அப்போது எனக்குள் மேலோங்கி இருந்தது.

கதவின் பின்னால் ஒளிந்திருந்த நான் கண்களை மூடிக்கொண்டேன்.ஒரு தோராயமாக கதவைக் குறிவைத்துச் சுட ஆரம்பித்தேன். தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தேன்.

அப்போது---ஆ----என்ற அலறல் எனக்குக் கேட்டது.

அதன்பிறகு எந்த ஓசையும் கேட்கவில்லை.
சிறிது நேரம் சென்றது.

துணிவை வரவழைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.
பிறகு நான் கண்ட காட்சியை எப்படிச் சொல்லுவேன்!!!!!!!!!!!!!

வாசல் கதவருகே என் கணவர் இறந்து கிடந்தார்.

பரபரப்பிலும் அச்சத்திலும் நான் எனது கணவரையே சுட்டுக் கொன்று விட்டேன் என்பது தெரியவந்தது.என்ன செய்வது என்று அறியாமல் நிலை குலைந்துபோய் காவல் நிலையத்துக்குப் போன் செய்தேன்” என்றாள்.

சுந்தரம் அப்படியா என்று கேட்டவாறே----இந்த வழக்கை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என்று புரியாமல் குழப்பமுடன் சோதியைப் பார்த்தார்.

ஆனால் சோதியோ புன்முறுவலுடன், “ அம்மா------!!!!!!!!-----இது தற்செயலாக நிகழ்ந்த விபத்து அல்ல…..!!!!!!!!!!...கதறி அழுவதுபோல் நடித்துவிட்டால் நாங்கள் ஏமாந்து போகமாட்டோம்.இது.நீங்களே திட்டமிட்டு செய்த கொலை.உங்கள் கணவரை நீங்களே கொலை செய்த காரணத்துக்காக உங்களை கைது செய்கிறோம். மறுக்காமல் உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள். உண்மையை ஒத்துக்கொண்டு சரணடைந்தால் தண்டனை குறைவாக ஆகலாம். இல்லையென்றால், உங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும்” என்றார்.

சோதியின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவள், கொஞ்சநேரம் மவுனமாக இருந்துவிட்டு பிறகு , தான் திட்டமிட்டுக் கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்தாள்.

நண்பர்களே--------------சுந்தரம் குழப்பமுடன் நிற்க----துப்பறியும் சோதி மட்டும் எப்படி அவள் கொலை செய்தாள் என்பதைக் கண்டுபிடித்தார்?

கூறுங்களேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பரஞ்சோதி
19-10-2005, 07:50 PM
பிஜிகே அண்ணா, அருமையான துப்பறியும் கதை.

நம்ம சோதி கண்டுபிடித்ததை, இந்த பரஞ்சோதி சொல்லட்டுமா?

அந்த வீட்டை அடையாளம் சொல்லும் போது கிழக்கு திசையைப் பார்த்த வீடு என்கிறார்.

மாலை நேரம் நேரத்தில் திருடனாக வந்தவர் நிழல் வீட்டின் உள்ளே விழாது, காரணம் சூரிய வெளிச்சம் இருந்தாலும் வீடு கிழக்கு பார்த்து இருப்பதால் வெளிச்சத்தால் நிழல் உள்ளே விழாது.

அந்த பெண்மணியோ கதவைத் தாண்டி நிழல் உள்ளே விழுந்தது என்று பொய் சொல்கிறார், எனவே திட்டமிட்டு செய்த கொலை என்பதை நம்ம சோதியார் கண்டுபிடித்து விட்டார்.

pradeepkt
20-10-2005, 05:30 AM
அடடா...
இந்த மாதிரி நான் யோசிக்கவே இல்லையே...
அதாவது நான் எந்த மாதிரியும் யோசிக்கவே இல்லையே..
பரம்ஸ் அண்ணா கலக்குறீங்க...

gragavan
20-10-2005, 06:01 AM
அடேங்கப்பா பயங்கர சூரப்புலி பரம்ஸ் விடையச் சொல்லீட்டானே. பெரிய தில்லாலங்கடியா இருப்ப போலிருக்கு. வாழ்த்துகள் பரம்ஸ்.

மன்மதன்
20-10-2005, 08:09 AM
பரம்ஸ் நண்பா.. நீ ஒரு கிரைம் நாவல் எழுதேன்.......

pgk53
27-10-2005, 03:09 PM
அன்பு நண்பர்களே------எதிர்பாராமல் ஏற்பட்ட வேளைப் பளு காரணமாக புதிர்களைப் பதிவு செய்ய நேரம் இல்லாமல் போய்விட்டது. இப்போது பளு கொஞ்சம் குறைந்துவிட்டது. எனவே அடுத்த புதிரை விரைவில் பதிகிறேன்..

இளசு
27-10-2005, 09:45 PM
அன்பு நண்பர்களே------எதிர்பாராமல் ஏற்பட்ட வேளைப் பளு காரணமாக புதிர்களைப் பதிவு செய்ய நேரம் இல்லாமல் போய்விட்டது. இப்போது பளு கொஞ்சம் குறைந்துவிட்டது. எனவே அடுத்த புதிரை விரைவில் பதிகிறேன்..

வாங்க வாங்க பிஜிகே அவர்களே,
நலமா?
மன்றத்தின் நட்சத்திரம் நீங்கள்.
மீண்டும் முழுவேகத்தில் உலா வரப்போவதை அறிந்து
மிக மிக மகிழ்ச்சி அடைகிறோம் நண்பரே.

pgk53
28-10-2005, 03:31 AM
புதிர் எண் - 193


போரூர் என்ற ஊரில் முனியப்பன் என்ற கிழவர் ஒருவர் இருந்தார். அவர் எப்போதும் வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்துகொண்டு, அந்தப் பக்கம் போவோர் வருவோரை எல்லாம் அழைத்து ஏதாவது கேள்வி கேட்பார்.அவர்கள் என்ன பதில் கூறினாலும் விடமாட்டார். இடக்கு மடக்காக ஏதேனும் கேட்டு அவர்களைத் தவிக்க விடுவார்.
அதனால் அவருக்கு அஞ்சி அந்தத் தெரு வழியே வருவதற்கு மக்கள் தயங்கினார்கள்.
அன்று, பக்கத்து தெருவைச் சேர்ந்த பொன்னியும், வள்ளியும் அந்தப் பக்கமமக வந்தார்கள்.அவர்களளப் பார்த்ததும் கிழவருக்கு மகிழ்ச்சியானது. அன்றைய பொழுதுக்கு பொழுதுபோக்க ஆள் கிடைத்துவிட்டார்கள் என்ற எண்ணத்துடன்
அவர்களை அழைத்தார்.
பொன்னியைப் பார்த்து, " உன் தந்தை வீட்டில் இருக்கிறாரா.அவரை நான் பார்க்க வரவேண்டும்." என்று பேச்சை ஆரம்பித்தார்.

"தொணதொணவென்று பேசும் பழக்கமுள்ள இந்த கிழவரை நாம் குழப்பவேண்டும்" என்ன சொல்லலாம்" என்று ஆலோசித்தாள் பொன்னி.
பிறகு," என் அப்பா இப்போது வீட்டில் இல்லை. நிறைய பிணம் சேர்ந்துவிட்டது.. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சந்தையில் விற்பதற்காகச் சென்றிருக்கின்றார்" என்றாள்.

பொன்னி கூறியதைக் கேட்டதும் ஒரு கணம் திடுக்கிட்டார் கிழவர். இது ஏதடா" இவள் நம்மையே குழப்புகிறாளே----என்று நினைத்தபடி, அருகில் இருந்த வள்ளியைப் பார்த்து, " வள்ளி----உன் தந்தையாவது வீட்டில் இருக்கின்றாரா" என்று கேட்டார்.

வள்ளியும் பொன்னிக்குச் சளைத்தவள் இல்லை. அவள்" ஐயா----என் தந்ததயும் வீட்டில் இல்லை.சுட்ட பிணம் வீட்டில் நிறறய சேர்ந்துவிட்டது.அவைகளை மீண்டும் சுடவேண்டும். அதற்காக எல்லாப் பிணத்தையும் எடுத்துக்கொண்டு விற்பனை செய்துவரச் சென்றுள்ளார்" என்றாள்.

கிழவருக்கு மண்டை காய்ந்துவிட்டது. வள்ளி சொன்னதுபோல் சுட்ட பிணம் என்று பார்த்தால், அது சாம்பலாகத்தானே இருக்கும்.சுட்ட பிணத்தை மீண்டும் சுட முடியுமா????அப்படிச் சுடுவதற்க்லாக அதை யார் விலைக்கு வாங்குவார்கள்???.பொன்னி சொன்னபடி பிணத்தை விற்பனை செய்தால் அதை யார் வாங்குவார்கள்?????---என்று சிந்தனை செய்து கிழவரால் விடை தெரிந்துகொள்ள முடியாமல் அமைதியானார்.

அன்றுமுதல் அவர் யாரையும் ரம்பம் போடுவதில்லை. அவர் இன்னும் பொன்னியும் வள்ளியும் கூறியதற்கு விளக்கத்தை ஆலோசித்துக்கொண்டுள்ளளர்.


மன்ற நண்பர்களே---நீங்களாவது கிழவருக்கு உதவி செய்யக் கூடாதா?????

suma
29-10-2005, 01:49 AM
வள்ளி சொன்னதின் பொருள் எருமுட்டை இல்லை எனில் செங்கல்.

பரஞ்சோதி
29-10-2005, 05:47 AM
பிணம் என்று சொன்னது விறகை, வெட்டிய மரத்தின் விறகுகள் பிணம்.

சுட்ட பிணம் என்று சொன்னது கரியை.

விறகை எரித்ததால் கிடைத்த கரிகள் அதிகம் சேர்ந்ததால், அதனையும் விற்க சென்றிருக்கிறார். கரியும் கடையில் விற்பார்கள் தானே.

பரஞ்சோதி
31-10-2005, 10:10 AM
என் விடை, சரியா, தவறா என்று சொல்ல பிஜிகே அண்ணாவை காணவில்லையே.

pgk53
31-10-2005, 04:51 PM
இதோ வந்துவிட்டேன் சகோதரர் பரஞ்சோதி அவர்களே------

தாங்கள் கூறிய விடை மிக மிகச் சரியானது.
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

சரி------------ மீண்டும் 194வது புதிரில் சந்திப்போம்.

இளசு
31-10-2005, 08:47 PM
பரம்ஸுக்கு வாழ்த்துகள்... அபார விடைகள் அருமை!

pgk53
01-11-2005, 02:27 AM
மன்ற நண்பர்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

புதிர் எண்-194




மதுரைக்குப் பக்கத்தில் உள்ள அலங்காநல்லூரில் அழகப்பன் என்ற வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் தனது ஒரே மகனுக்குத் திருமணம் செய்துவைக்க நினைத்தார்.
இதை அறிந்த பல செல்வந்தர்கள் “ நீங்கள் எவ்வளவு நகை போடச்சொன்னாலும் போடுகிறோம். ஏத்தனை பணம் கேட்டாலும் வரதட்சனையாகக் கொடுக்கிறோம். என் மகளை மருமகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று முன் வந்தார்கள்.

அதற்கு அழகப்பன் “ என்னிடம் ஏராளமான செல்வம் உள்ளது.மேலும் செல்வம் சேர்த்து என்ன செய்யப் போகிறேன்.? அறிவு நிறைந்த ஒரு பெண் என் மறுமகளாக வந்தால்தான் என் மகனது இல்வாழ்வு சிறப்பாக இருக்கும். என் குடும்பமும் விருத்தியடையும்” என்றார்.

அப்படி ஒரு பெண்ணை அழகப்பன் தேடிக்கொண்டிருந்தார். பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக தனது கடையின் முன்னே ஒரு அறிவிப்புப் பலகை வைத்தார்.

அதில்

“ இங்கு அரிசியை ஒரு பாத்திரம் கொண்டு அதில் கொள்ளும் அளவுக்கு வாங்கிக்கொள்ளலாம். அதற்குப் பணம் தரத் தேவையில்லை. ஆனால் அதே பாத்திரத்தில் நல்லெண்ணை அதே அளவுக்கு ஊற்றித் திருப்பித் தரவேண்டும்..

இதில் ஒரே ஒரு நிபந்தனை உள்ளது. நாங்கள் கொடுக்கும் அரிசியின் விலை மதிப்பைவிட நல்லெண்ணையின் மதிப்பு குறைவாக இருக்கவேண்டும்.

இதில் வெற்றி பெற எந்த முறையையும் பயன்படுத்தலாம். இதில் எந்தப் பெண் வெற்றி பெறுகிறாளோ, அவளுக்கும் என் மகனுக்கும் திருமணம் நடைபெறும்”-------

என்று எழுதியிருந்தது.

இதைப் படித்த பலர், “ அரிசியைப்போல் நான்கு மடங்கு விலை விற்கிறது நல்லெண்ணை.அரிசியின் அதே அளவுக்கு நல்லெண்ணை தரவேண்டும். அனால் நல்லெண்ணையின் மதிப்பு அரிசியைவிட அதிகமாக இருக்கக் கூடாதென்றால் எப்படி????இப்படிச் செய்ய யாராலும் முடியாது. “ என்று பேசினார்கள்.
அந்த ஊரிலும் அடுத்த ஊரிலும் இருந்த திருமணம் ஆகாத பெண்கள் அனைவரும் “ ஆஹா--- மிக நல்ல வாய்ப்பு. எப்படி இந்த புதிரான சவாலை வெல்வது.” என்று தீவிரமாக சிந்தித்த வண்ணம் இருந்தார்கள்.

பல நாட்கள் சென்றன.ஒருநாள் மதுரையில் இருந்து அறிவுச் செல்வி என்ற பெண் தற்செயலாக தனது உறவினரைப் பார்ப்பதற்காக அலங்கா நல்லூருக்கு வந்தாள். கடைவீதிக்கு வந்தபோது அறிவிப்புப் பலகையைப் பார்த்தாள்.சிந்தித்தாள்.

அவளுக்கு சிறந்த வழி ஒன்று புலப்பட்டது.

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டாள்.
கடைக்கு வந்தாள்.
“ஐயா----நான் இந்த அறிவுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறேன்
.இந்தப் பாத்திரம் நிறைய அரிசி கொடுங்கள்” என்றாள்.

அதற்கு அழகப்பன் “ அம்மா--- உன்னால் முடிந்த அளவு நீயே அந்தப் பாத்திரத்தில் நிறைத்து எடுத்துக்கொள்.இல்லையென்றால் தோற்றபிறகு என்னைக் குறை சொல்வாய்” என்றார்.

அவளே அந்தப் பாத்திரம் கொள்ளும் அளவுக்கு அரிசி எடுத்துக்கொண்டாள்.
உறவுனர் வீட்டுக்குச் சென்றாள்.
அரிசியைக் வைத்துவிட்டு, அதே பாத்திரத்தையும், நல்லெண்ணையும் எடுத்துக்கொண்டு வந்தாள்.
அழகப்பனிடம் பாத்திரத்தையும் நல்லெண்ணையும் கொடுத்து , பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ளச் சொன்னாள்.
அழகப்பனும் பாத்திரம் கொள்ளும் அளவுக்கு ஊற்றினார்.

பிறகு பாத்திரத்தில் இருந்த எண்ணையை அளந்து பார்த்து விலை மதிப்பு இட்டதில் அரிசியைவிட எண்ணையின் விலை மதிப்பு குறைவாகவே இருந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற அறிவுச்செல்விக்கும் அழகப்பனின் மகனுக்கும் சிறப்பாக திருமணம் நடந்தது.


“போட்டியில் வெற்றயடைய இவ்வளவு எளிய வழி இருப்பது தெரியாமல் போனதே” என்று மற்ற பெண்கள் மிக மிக மணம் வருந்தினார்கள்.


நண்பர்களே----ஒரே பாத்திரத்தில் அறிவுச் செல்வி எப்படி அரிசியைவிட குறைவான விலை மதிப்பில் நல்லெண்ணையைக் கொடுத்தாள்.

பென்ஸ்
01-11-2005, 08:50 AM
பதில் 1: பாத்திரத்தில் மெழுகு கொண்டு நிரப்பவும். பின்னர் எண்ணையை ஊற்ற சொன்னால் கொள்ளளவு குறைவாக இருக்கும்... எனவே குறைவான எண்ணை, குறைவான விலை :confused: :confused:
பதில் 2: பாத்திரத்தை சப்பி சடச்சிடுங்கோ... ;) பின்னர் எண்ணையை உற்ற சொன்னால் கொள்ளளவு குறைவாக இருக்கும்... எனவே குறைவான எண்ணை, குறைவான விலைB) B)
பதில் 3: ராமர் பிள்ளையிடம் மூலிகை நல்லெண்ணை எடுக்க சொல்லலாம், குறைவான விலையுள்ள நல்லெண்ணை :p :p
பதில் 4: சத்தியமா..!!!! எனக்கு சரியான விடை தெரியவில்லை...:D :D :D

பரஞ்சோதி
02-11-2005, 05:12 AM
பெஞ்சமின் என்ன இது இப்படி கலக்கிட்டீங்க.

நீங்க கொடுத்த க்ளூவை நான் சிந்தித்து இங்கே வந்தால், நீங்களும் அதையே சொல்லியிருக்கீங்க.

இந்த புதிரில் அந்த பெண் பாத்திரத்தில் முக்கால் வாசி தண்ணீர் நிரப்பி, பெரியவரிடம் போய் அதில் அரிசியை போடச் சொல்லியிருக்கலாம். அப்படி செய்யும் போது அரிசியானது, தண்ணீரில் மூழ்கி, உள்ளே சென்றதும், தண்ணீர் மட்டம் ஏறி இருக்கும், ஒருவேளை முழு தண்ணீரும் வெளியேறும் அளவிற்கோ அல்லது தண்ணீர் அளவு மேலே வரும் அளவிற்கோ அரிசியை போடச் சொல்லியிருக்கலாம்.

பின்னர் அந்த அளவு தண்ணீரில் நல்லெண்ணெய் ஊற்றச் சொன்னால் அது மேலேயே மிதக்கும். பாத்திரம் நிரம்பும் அளவிற்கு எண்ணெய் ஊற்றியதும், அதன் எடையையும், விலையையும் சோதித்து பார்த்தால் கண்டிப்பாக அரிசியின் விலையை விட குறைவாகவே இருந்திருக்கும்.

(நன்றி: என் மனைவி - தண்ணீரில் நல்லெண்ணெய் மிதக்கும் என்று சொன்னதற்கு)

gragavan
02-11-2005, 06:08 AM
எனக்கென்னவோ நீங்க ரெண்டு பேரு சொன்னதும் தப்பாயிருக்குமுன்னு தோணுது. காரணம் பாத்திரத்தை முதலிலேயே தயாராக வைத்திருந்தாள் அந்தப் பெண். மேலும் மறுபடியும் அதில் எதையும் நிரப்பவில்லை. (இது பரஞ்சோதியின் தண்ணீருக்கான கருத்து). முதலில் நீர் இருந்து அதில் அரிசியைப் போட்டால் அதில் அதிலிருக்கும் தண்ணீர் கீழே வழிந்து விடும். அப்புறம் எண்ணெய்யை எப்படி ஊற்றுவது? மறுபடியும் தண்ணீரை நிரப்புவதா? அப்படிச் செய்தது போலத் தெரியவில்லையே. வேறு ஏதேனும் இருக்கும். நானும் யோசிக்கிறேன்.

mukilan
02-11-2005, 05:33 PM
ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை கொடுத்தால் விலையே இல்லை . இருந்தாலும் மதிப்பு குறைதானே. எந்த முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதால் என் மூளை இப்படி சிந்தித்தது.

gragavan
03-11-2005, 04:30 AM
ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை கொடுத்தால் விலையே இல்லை . இருந்தாலும் மதிப்பு குறைதானே. எந்த முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதால் என் மூளை இப்படி சிந்தித்தது.இது சரியாக இருக்குமென்று எனக்கும் தோன்றுகிறது. பயன்படுத்தாத எண்ணெய் என்று அவர் சொல்லவில்லையே. சரி. பிஜீகே அண்ணாவே வந்து விடையைச் சொல்லட்டும்.

பென்ஸ்
03-11-2005, 05:11 AM
பரஞ்சோதி,
உங்களை போல் நான் அந்த தண்ணிர், மிதத்தல் விதி கதையைதான் யோசித்தேன்... பின்னர் மெழுகாக மற்றிவிட்டேன்... இருந்தாலும் பிஜிகே அவர்கள் வந்து பதில் சொன்னால் தான் தெரியும்
"எந்த முறையையும் கையாளலாம்".. என்றதும் பத்திரதையும் சப்பி சடச்சிட்டேன்...

pgk53
04-11-2005, 04:11 PM
பரஞ்சோதி,
உங்களை போல் நான் அந்த தண்ணிர், மிதத்தல் விதி கதையைதான் யோசித்தேன்... பின்னர் மெழுகாக மற்றிவிட்டேன்... இருந்தாலும் பிஜிகே அவர்கள் வந்து பதில் சொன்னால் தான் தெரியும்
"எந்த முறையையும் கையாளலாம்".. என்றதும் பத்திரதையும் சப்பி சடச்சிட்டேன்...

அன்பு நண்பர்களே---------------

சகோதரர் பரஞ்சோதியும்-பெஞ்சமினும்-ராகவனும் - முகிலனும் சரியயன விடையைக் கூற பெருதும் செய்தமமக்கு நன்றி.

இப்போது நான் ஒரு சிறிய க்ளூ கொடுக்கட்டுமா????

பெஞ்சமின் சரியான விடைக்கு பக்கமாக வந்து நழுவி விட்டார்.

இனிமேல் பெஞ்சமினே சரியான விடையைக் கூறிவிடுவார் என்று நினனக்கின்றேன்.

Mathu
05-11-2005, 08:20 AM
pgkன் புதிர் எப்போதும் புரிஜாத புதிர்தான் இருந்தாலும் நானும் முயற்சிக்கிறேன். :confused: :confused:

பெண் ஒரு தட்டையான மிக அகண்ட பாத்திரத்துடன் போயிருப்பள்,
அதில் அரிசியை குவித்து எடுத்திருப்பாள், ஆனால் அதே
பாத்திரத்தை கடைக்காரனிடம் கொடுத்து எண்ணெயை விட்டு
எடுத்துக்கொள்ள சொன்னால், தட்டையான பாத்திரத்தில்
எண்ணை வளிந்து விடுமாகையால் பெண்ணுக்கே வெற்றி.

:p :D :eek:

(குறிப்பு:- ஐயா----நான் இந்த அறிவுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறேன்
.இந்தப் பாத்திரம் நிறைய அரிசி கொடுங்கள் என்றாள்.

அதற்கு அழகப்பன் அம்மா--- உன்னால் முடிந்த அளவு நீயே அந்தப் பாத்திரத்தில் நிறைத்து எடுத்துக்கொள்.இல்லையென்றால் தோற்றபிறகு என்னைக் குறை சொல்வாய் என்றார்.

அவளே அந்தப் பாத்திரம் கொள்ளும் அளவுக்கு அரிசி எடுத்துக்கொண்டாள்.
உறவுனர் வீட்டுக்குச் சென்றாள்.
அரிசியைக் வைத்துவிட்டு, அதே பாத்திரத்தையும், நல்லெண்ணையும் எடுத்துக்கொண்டு வந்தாள்.
அழகப்பனிடம் பாத்திரத்தையும் நல்லெண்ணையும் கொடுத்து , பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ளச் சொன்னாள்.
அழகப்பனும் பாத்திரம் கொள்ளும் அளவுக்கு ஊற்றினார்)

இங்கே ஒரு தகவல் இருப்பதாக தோன்றுகிறது :cool: :rolleyes:

பரஞ்சோதி
05-11-2005, 01:42 PM
பாராட்டுகள் மது,

பாத்திரமான ஒரு தாம்பளமாக இருக்கலாம் என்று சொல்லுறீங்க தானே.

ஆமாம், தாம்பளத்தட்டாக இருந்தால் அரிசியை நிறையவே எடுக்க முடியும், எண்ணெய் அதிகம் எடுக்க முடியாது.

பிஜிகே அண்ணா என்ன சொல்லுறாங்கன்னு பார்ப்போம்.

இளசு
05-11-2005, 02:39 PM
சிறுசிறு ஓட்டைகள் உள்ள பாத்திரமோ????

பரஞ்சோதி
05-11-2005, 02:51 PM
சிறுசிறு ஓட்டைகள் உள்ள பாத்திரமோ????

ஆகா, இளசு அண்ணா, புது வேட்டு போடுறாங்க.

இதுவும் கலக்கலாக இருக்கிறது. வித்தியாசமாக யோசிக்கிறீங்க அண்ணா. :D

pgk53
06-11-2005, 12:48 PM
பெண் ஒரு தட்டையான மிக அகண்ட பாத்திரத்துடன் போயிருப்பள்,
அதில் அரிசியை குவித்து எடுத்திருப்பாள், ஆனால் அதே
பாத்திரத்தை கடைக்காரனிடம் கொடுத்து எண்ணெயை விட்டு
எடுத்துக்கொள்ள சொன்னால், தட்டையான பாத்திரத்தில்
எண்ணை வளிந்து விடுமாகையால் பெண்ணுக்கே வெற்றி.



திரு மது அவர்கள் மிகச் சரியான விடையைக் கூறிவிட்டார்,

அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

அடுத்த புதிர் விரைவில்-------

இளசு
06-11-2005, 10:11 PM
அசத்தல் பிஜிகே
பாராட்டுகள் மது.

(பரம்ஸ் - அண்ணா, எங்கே கிளம்பிட்டீங்க?
இளசு - என் ஓட்டைத் தட்டை தூக்கிப் போட்டுட்டு வர...)

பரஞ்சோதி
07-11-2005, 03:21 AM
அசத்தல் பிஜிகே
பாராட்டுகள் மது.

(பரம்ஸ் - அண்ணா, எங்கே கிளம்பிட்டீங்க?
இளசு - என் ஓட்டைத் தட்டை தூக்கிப் போட்டுட்டு வர...)

பரம்ஸ் - அண்ணா, கிடைக்கும் பேரீச்சம் பழத்தில் எனக்கும் ஒன்று.:D


மது, பாராட்டுகள். கலக்கலான பதில்.

gragavan
07-11-2005, 04:50 AM
ஆகா! இதுதான் விடை. வாழ்த்துகள் மது.

பென்ஸ்
07-11-2005, 05:06 AM
ஆகா... இது(வும்) சரியான விடை தான்.... :D :D
வாழ்த்துகள் மது. ;)

இளசு.. ஓட்டை பாத்திரம் இன்னும் இருக்கா???

பரஞ்சோதி
07-11-2005, 05:54 AM
ஆகா... இது(வும்) சரியான விடை தான்.... :D :D
வாழ்த்துகள் மது. ;)

இளசு.. ஓட்டை பாத்திரம் இன்னும் இருக்கா???

அதான் பேரீச்சை பழம் வாங்கியாச்சே, அதையும் தின்று தீர்தாச்சு.

Mathu
07-11-2005, 07:26 AM
ஆகா கடசில pgk நம்ம பக்கம் தலை ஆட்டிடாரா...!
நன்றி பரம்ஸ், இளசு அண்ணா, ராகவன், பெஞ்ஜமின்.

pgk53
07-11-2005, 02:27 PM
புதிர் எண்-195

சென்னை நகரில், காரோட்டி ஒருவர் வேகமாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தார்.அவர் கவனக் குறைவாக வண்டியை ஓட்டியதால், எதிரே வந்த ஒரு வேனுடன் அவரது கார் பயங்கரமாக மோதியது.

இரண்டு வாகனங்களின் முன்பக்கமும் அப்படியே நசுங்கி விட்டது
.காரோட்டிகள் இருவரும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.

ஆனால் எதிரில் வந்த வேனில் இருந்த பயணிக்கு கார்கள் பலமாக மோதியபோது உருண்டு விழுந்ததில் கழுத்து எழும்பு முறிந்தது.

போலீஸ் விபத்து நடந்த இடத்துக்கு வந்தார்கள்.
ஓட்டுனர்களுக்கு சிகிச்சை அளித்த பிறகு விபத்துக்குக் காரணத்தை ஆராய்ந்து தவறு செய்த ஓட்டுனரை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள்.

நடந்த எல்லாவற்றையும் நீதிபதி விசாரனை செய்தார்.
ஆனால் பயனியின் கழுத்து முறிந்ததை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. போலீஸ்காரர்களும் அதைப்பற்றி முக்கியமாகக் குறிப்பிடவில்லை.

வழக்கின் முடிவில் நீதிபதி, “ கவனக் குறைவாகவும் வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை கடுமையாகக் கண்டித்து, சேதம் அடைந்த மற்ற வாகனத்தின் சீரமமப்புக்கு ஆகும் செலவை அந்த ஓட்டுனர் செலுத்த வேண்டும் என்றும், கவனக்குறைவாகக் கார் ஓட்டியதற்கு ஆயிரம் ரூபாய் அபதாரம் என்றும் தீர்ப்புக் கூறினார்.




விபத்தில் சம்பந்தப்பட்ட மற்ற பயனியை யாருமே கவனத்தில் கொள்ளாததற்குக் காரணம்

என்னவென்று மன்ற நண்பர்கள்தான் கூறவேண்டும்.!!!!

பென்ஸ்
08-11-2005, 02:49 AM
கார் ஒட்டுனர் ஒன் வேயில் எதிராக சென்று மோதி இருப்பார்... அதனால் தன்டனை...

வேனில் இருந்தவர்கள் ஒவெர் லோடட் (புட் போட் கேஸ்) ஆக இருந்து இருக்கும், எனவே தான் "உருண்டு விழுந்ததில் கழுத்து எழும்பு முறிந்தது". அதனால் அவர்களுக்கான சேதாரம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே..

gragavan
08-11-2005, 05:47 AM
காரிலும் வேனிலும் புட்போர்டா? நான் நினைக்கிறேன். அது நாயாக இருக்குமோ என்று. கழுத்து முறிந்த நாய் இறந்து போயிருக்கும். அதுக்கு அப்புறம் என்னத்த நட்டத்தை ஈடு செய்வது?

gragavan
08-11-2005, 05:48 AM
அந்த வேன். நாய் பிடிக்கிற வேனாக இருக்கலாம். அதுல பயணிகள் என்றால் தெரு நாய்கள்தானே.

பரஞ்சோதி
08-11-2005, 05:49 AM
ஆகா அருமையான புதிர்.
ஏதோ பெஞ்சமின் மிச்சம் வைத்த விடையை நான் சொல்கிறேன்.

அந்த பயணி ஏற்கனவே மரணம் அடைந்தவர்.

அந்த வேன் பிணம் எடுத்துச் செல்லும் வேன்.

ஹா! ஹா1

இராகவன் அண்ணாவுக்கும் விடை தெரியலை....

gragavan
08-11-2005, 06:04 AM
ஆகா அருமையான புதிர்.
ஏதோ பெஞ்சமின் மிச்சம் வைத்த விடையை நான் சொல்கிறேன்.

அந்த பயணி ஏற்கனவே மரணம் அடைந்தவர்.

அந்த வேன் பிணம் எடுத்துச் செல்லும் வேன்.

ஹா! ஹா1

இராகவன் அண்ணாவுக்கும் விடை தெரியலை....ம்ம்ம்.....சரி. சரி. விடையோ வடையோ. நீயே வெச்சுக்கோ.

பரஞ்சோதி
10-11-2005, 06:04 AM
எங்கே பிஜிகே அண்ணாவை காணவில்லையே!

pgk53
11-11-2005, 11:41 AM
Helo Friends i am not able to opem my PC.
Because My Internet connection is not working.
Now i am sending this message from my friends PC.
So not able to type in Tamil.
within three days my connection will be re-install.
i will come after that.

இளசு
11-11-2005, 09:45 PM
இணையத் தொடர்பு விரைவில் கிடைத்து
வாருங்கள் பிஜிகே..

இங்கே ரொம்ப பேர் மண்டை காய்ந்தபடி காத்திருக்கோம்..

kiruba_priya
16-11-2005, 01:23 PM
ஒரு மாடிவீடு.முதல் மாடியில் உள்ள ஹாலில் மூன்று பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதற்குறிய சுவிட்சுகள் கீழேயே மாடிப்படி ஏறும் இடத்தில் உள்ளன.
நீங்கள் முதன்முறையாக அந்த வீட்டுக்குச் செல்கிறீர்கள்.
உங்கள் திறமையை பரிசோதிப்பதற்காக உங்கள் நண்பர், ஒரு பென்சிலை உங்கள் கையில் கொடுத்து, மேலே மாடியில் உள்ள மூன்று பல்புகளில், எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்று கீழே அடையாளம் செய்யும்படி கூறுகிறார்.கூடவே ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார்.
அதாவது, ஒரே ஒருமுறை மட்டுமே எந்த பல்ப் எரிகிறது என்பதைப் பார்க்க மாடிக்குப் போகலாம்.

நீங்கள் எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்????

ans:
first put one switch. wait 15 min. then put second switch. then go to upper. one pulp is lighting. check other two pulps also. which one is so got, that is firsh he pressed. now the lighting pulp is second one. the remaining pulb is the third one

gragavan
16-11-2005, 01:29 PM
ஆகா! கிருபா பிரியா, சரியாகச் சொன்னீர்கள். உங்கள் விடை சரியானது என்றே நினைக்கிறேன். வாழ்த்துகள்.

pgk53
16-11-2005, 03:23 PM
அன்பு மன்ற நண்பர்களே ---அனைவருக்கும் வணக்கம்.
ஒரு வழியாக இண்டெர்நெட் தொடர்பு மறுபடியும் கிடைத்துவிட்டது.
இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன்.

pgk53
16-11-2005, 03:24 PM
சகோதரர் பரஞ்சோதி புதிருக்கான விடையைச் சரியாகக் கூறிவிட்டார்.
அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

pgk53
16-11-2005, 03:25 PM
சகோதரி கிருபா பிரியா ஒரு புதிரைக் கூற வந்துள்ளமைக்கு மிக்க மகிழ்ச்சி.
அது சரி அதற்குரிய விடையை ஏன் அவரே கூறிவிட்டார்?????
அதுதான் புதிராக உள்ளது.

pgk53
16-11-2005, 03:26 PM
புதிர் எண்-197

அது ஒரு அடர்ந்த பெரிய வனம்.
அந்த வனத்தின் தென் பகுதியில் கொடிய பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது.
அது நூறு அடி நீளப் பாம்பு.
பசியுடன் வேக வேகமாக வனத்தின் வட பகுதியை நோக்கி இரைக்காகச் சென்று கொண்டிருந்தது.
வலிமை வாய்ந்த அந்தப் பாம்பின் கண்ணில் பட்ட விலங்குகள் ஒன்றுகூட அதனிடம், இருந்து தப்பிக்க இயலவில்லை..
யானையையும் விழுங்கும் ஆற்றல் கொண்ட அந்தப் பாம்பின் பசி இன்னும் அடங்கவில்லை..
ஏதாவது இரை கிடைக்குமா என்று தேடியபடியே விரைந்துகொண்டிருந்தது.


அந்த வனத்தின் வட பகுதியிலும் ஒரு பாம்பு இருந்தது.
அதுவும் நூறடி நீளம் கொண்டது. வலிமையிலும் வேகத்திலும் தென்பகுதிப் பாம்புக்கு எந்த வகையிலும் சளைத்தது இல்லை.
இரண்டு பாம்புகளையும் ஒன்றக வைத்துப் பார்த்தால், உருவத்திலோ, வேறு எந்த வகையிலோ எந்த வித்தியாசமும் கானமுடியாது.

அதற்கும் பசி.

இரையைத் தேடி கண்ணில் பட்ட விலங்குகளை எல்லாம் சுருட்டி விழுங்கியபடி வனத்தின் தென் பகுதியை நோக்கி விரைந்து செல்ல ஆரம்பித்தது.

இரண்டு பாம்புகளும் எதிரெதிரே வந்து சந்தித்துக்கொண்டன.
ஒரு கணம் இரு பாம்புகளும் ஒன்றையொன்று முறைத்துப் பார்த்துக்கொண்டன.
தனக்கு எதிராக தன் அளவு சம சக்தி கொண்ட வேறொரு பாம்பு அந்த வனத்தில் இருப்பதை ஒரு பாம்புகளுமே விரும்பவில்லை.

அதனால் தென்பகுதிப் பாம்பு வட பகுதிப் பாம்பின் வாலைப் பிடித்து விழுங்க ஆரம்பித்தது.

அதேபோல் வட பகுதிப் பாம்பும் தென் பகுதிப் பாம்பின் வாலைப் பிடித்து விழுங்க ஆரம்பித்தது.

கொஞ்சம் கொஞ்சமாக ஒரே வேகத்தில் இரு பாம்புகளுமே தனது எதிரியை விழுங்கிக்கொண்டே இருந்தன.

எந்தப் பாம்பும் மற்ற பாம்பை விட்டுவிடத் தயாராக இல்லை.

நண்பர்களே இப்போது இத்துடன் நிறுத்துவோம்.

நாம் ஒரு முடிவுக்கு வருவோமா?????

இந்தப் பாம்புகளின் போராட்டத்தில் எந்தப் பாம்பு வெற்றியடையும்.

தென் பகுதிப்பாம்பா????????அல்லது வட பகுதிப் பாம்பா??????

பாரதி
17-11-2005, 07:18 PM
அந்த வனத்தின் வட பகுதியிலும் ஒரு பாம்பு இருந்தது.
அதுவும் நூறடி நீளம் கொண்டது. வலிமையிலும் வேகத்திலும் தென்பகுதிப் பாம்புக்கு எந்த வகையிலும் சளைத்தது இல்லை.இரண்டு பாம்புகளையும் ஒன்றக வைத்துப் பார்த்தால், உருவத்திலோ, வேறு எந்த வகையிலோ எந்த வித்தியாசமும் கானமுடியாது.

நீங்களே கூறிவிட்டீர்கள்... ஒரே அளவுள்ள பாம்பு என்று! தனக்கு சமமான நீளமுள்ள பாம்பை எந்தப்பாம்பாலும் விழுங்கவே இயலாது. ஆகவே எந்தப்பாம்பும் வெற்றியடையப் போவதில்லை..

gragavan
18-11-2005, 04:35 AM
இரண்டு பாம்புகளும் இறந்து போகும். ஒன்றை ஒன்று விழுங்கி இரண்டும் காணாமல் போகாது. அல்லது ஒன்றை ஒன்று விழுங்கி வெல்லாது.

pgk53
21-11-2005, 03:56 PM
நண்பர்களே-----பாரதியும், ராகவனும் மிகச் சரியான விடையைக் கூறிவிட்டார்கள்.

இந்தப் புதிருக்கு எது வெல்லும் என்ற பதில் இருக்கமுடியாது.

சரியான பதில் கூறிய இருவருக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்

அடுத்த புதிர் விரைவில்.!!!!!!!!!!!!!

பென்ஸ்
22-11-2005, 01:39 AM
பதில் இல்லாத கேள்வி உண்டா?
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=133174#post133174 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=133174#post133174)

பதில்: உண்டு அப்பு.... உண்டு.. :D :D :D

gragavan
22-11-2005, 07:24 AM
நண்பர்களே-----பாரதியும், ராகவனும் மிகச் சரியான விடையைக் கூறிவிட்டார்கள்.

இந்தப் புதிருக்கு எது வெல்லும் என்ற பதில் இருக்கமுடியாது.

சரியான பதில் கூறிய இருவருக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்

அடுத்த புதிர் விரைவில்.!!!!!!!!!!!!!நன்றி பிஜிகே அண்ணா. இரவும் பகலும் ஒன்றன் வாலைக் கவ்விக் கொண்டிருக்கும் இரண்டு பாம்புகள் என்று எங்கோ படித்த நினைவு. எங்கென்று நினைவுக்கு வரவில்லை. வெள்ளைப் பாம்பும் கருத்த பாம்பும் ஒன்றன் வாலை ஒன்று கவ்விக் கொண்டிருப்பது நாளின் உருவகம் என்று படித்திருக்கிறேன். ஒன்றை ஒன்று விழுங்க முடியாது. இரண்டும் இருந்தே தீரும். பகலை விட இரவோ, இரவை விட பகலோ நீளமாக இருக்கும் நாடுகளில் கூட முழுக்க பகல் அல்லது முழுக்க இரவு என்பது வாய்ப்பில்லாத ஒன்று.

pradeepkt
22-11-2005, 07:27 AM
அடேயப்பா... பாரதியண்ணனுக்கும் ராகவனுக்கும் வாழ்த்துகள்...
ஏய்யா, இதுக்கும் ஒரு தத்துவமா...
இதெல்லாம் எங்கருந்துய்யா புடிக்கறீங்க...
தானா வருதுன்னா நான் டென்சன் ஆயிருவேன் ஆமா.. :D

gragavan
22-11-2005, 08:34 AM
அடேயப்பா... பாரதியண்ணனுக்கும் ராகவனுக்கும் வாழ்த்துகள்...
ஏய்யா, இதுக்கும் ஒரு தத்துவமா...
இதெல்லாம் எங்கருந்துய்யா புடிக்கறீங்க...
தானா வருதுன்னா நான் டென்சன் ஆயிருவேன் ஆமா.. :Dஉண்மையச் சொல்லனுமுன்னா.....தானாத்தான் வருது. வர்ரதெல்லாம் எங்கையோ எப்பவோ படிச்சிருப்போமுன்னு நெனச்சு, "எங்கயோ படிச்ச நினவு"ன்னு சொல்லீருவேன். ஹி ஹி

பரஞ்சோதி
22-11-2005, 10:33 AM
அட இந்த விடையை நானும் கூடத் தான் சொல்லுவேன், போட்டி சரியானது அல்ல.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதுக்கா இராகவன் அண்ணா இந்த ஆட்டம் ஆடுகிறார். அடுத்த போட்டியில் சரியான பதில் சொல்லி வெற்றி பெறட்டும்,அப்புறம் நான் வாழ்த்துகிறேன்.

-கடுப்புடன் பரம்ஸ்

pradeepkt
22-11-2005, 11:26 AM
இன்னும் சில போட்டியில எல்லாம் ராகவன் வெற்றி பெற்றால் என்ன ஆட்டம் ஆடுவாரு?
ஜெயமாலினி தோத்தாங்க போங்க :D

pgk53
22-11-2005, 12:31 PM
புதிர் எண்-198


மதுரைக்குப் பக்கத்தில் உள்ள திருமங்கலத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது பேரையூர் .
அதை சிறிய நகரம் என்று கூறுவதைவிட பெரிய கிராமம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஒரு பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், ஒரு நூலகம், கால்நடை மருத்துவமனை,மக்களுக்கான சிறிய அரசு மருத்துவ மனை, ஒரு டெண்ட் சினிமா கொட்டகை, ஒரு உயர் நிலைப்பள்ளி,பேருந்து நிலையம் என்று எல்லாமே சிறிய அளவில் இருக்கும் ஊர் அது.[ நிச்சயமாக டாஸ்மாக் உண்டு. அது இல்லாமலா????}

அக்கம் பக்கம் உள்ள சிறிய கிராமங்களில் இருந்து தேவையான பொருட்கள் வாங்குவதற்கு அங்கேதான் வந்தாக வேண்டும்.

அதனால் தினந்தோரும் புதிய புதிய ஆட்கள் வந்துபோகும் சாத்தியம் இருந்தது.

அங்கே பேருந்து நிலையத்துக்குப் பக்கமாக இருந்த சரவணா உணவு விடுதியில் ஒருவர் கொஞ்சம் தயக்கமுடன் நுழைந்தார். அவரைப் பார்த்தால் ஊருக்குப் புதியவர் போலத்தான் தெரிந்தது.

வந்தவர் மேசையின் முன் அமர்ந்தார்.
அவரைப் பார்த்த பறிமாறுபவர், இவர் புதியவர் என்று நினைத்தபடியே வந்தார்.
“ என்ன சாப்பிடுகிறீர்கள்?: என்று கேட்டார்.
வந்தவரோ, “ நான்கு இட்டிலியும் ஒரு வடையும் , கொஞ்சம் கெட்டிச் சட்டினியும் வைத்துக்கொண்டு வருகிறீர்களா”? என்றார்.

“ அய்யா----இங்கே நெய்ப் பொங்கல் சுவையாக இருக்கும். அதையும் கொண்டுவரவா””? என்று கேட்டார் பறிமாறுபவர்.
“ சரி அதையும் சேர்த்துக் கொண்டுவா” என்றார் வந்தவர்.

எல்லாவற்றையும் கொண்டு வந்தார் பறிமாறுபவர்.
வந்தவரும் ஆர அமர சாப்பிட்டு முடித்தார்.

பிறகு காபி கொண்டுவரச் சொல்லி அதையும் குடித்தார்.

பிறகு பறிமாறியவர் பில் கொண்டு வந்தார்.
பில்லை வந்தவரிடம் கொடுத்தபடியே-----“ நீங்கள் இந்த ஊர் காவல் நிலையத்துக்கு புதிதாக மாறுதல் ஆகி வந்திருக்கின்றீர்களா”? என்று கேட்டார்.

“---ஆமாம்---மாறுதல் பெற்றுச் சென்ற காவலர் எழுமலைக்கு பதிலாக நான் வந்துள்ளேன்” என்றார் அவர்.


இப்போது நான் புதிருக்கான கேள்விக்கு வருகின்றேன்.


நண்பர்களே------புதிதாக வந்தவர் காவலர் என்று பறிமாறுபவர் எப்படி சரியாகச் சொன்னார்.??????????????????

பரஞ்சோதி
22-11-2005, 03:39 PM
இராகவன் அண்ணா விடையை சொல்ல விட்டு விடுகிறேன்.

இருந்தாலும் ஏதோ சொல்ல வேண்டுமே, வந்தவரின் தொப்பையையும், ஒட்ட வெட்டிய முடியையும் வைத்து கண்டுபிடித்து இருப்பார்.

ஆமாம் அங்கே ஏன் டாஸ்மார்க் சொல்லுறீங்க, ஒருவேளை ஒரு பாட்டிலையும் தைரியமாக கையில் எடுத்து வந்தாரா? இருக்கலாம், போலிஸ்காரங்க தைரியமாக தப்பு செய்வாங்க தானே.

பாரதி
22-11-2005, 04:24 PM
ஒரு சந்தேகம்-வந்தவர் ஏன் தயக்கத்துடன் உணவகத்திற்குள் செல்ல வேண்டும்?

வந்தவர் காவலர் சீருடையில் வந்திருந்தால் எளிதாக கூறிவிட வாய்ப்பிருக்கிறதே..!

பரஞ்சோதி
23-11-2005, 03:10 AM
பாரதி அண்ணா,

மிகவும் எளிதான புதிராக இருக்குமோ, ஒருவேளை வந்தவர் போலிஸ் உடையிலேயே வந்திருக்கலாமே என்று சொல்லாமல் விட்டு விட்டோமே, இப்போ சொல்லிவிடலாம் என்று வந்தால், நீங்க ஏற்கனவே சொல்லிட்டீங்க. பாராட்டுகள்.

gragavan
23-11-2005, 03:58 AM
அட இந்த விடையை நானும் கூடத் தான் சொல்லுவேன், போட்டி சரியானது அல்ல.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதுக்கா இராகவன் அண்ணா இந்த ஆட்டம் ஆடுகிறார். அடுத்த போட்டியில் சரியான பதில் சொல்லி வெற்றி பெறட்டும்,அப்புறம் நான் வாழ்த்துகிறேன்.

-கடுப்புடன் பரம்ஸ்ஆட்டமா! தேரோட்டமா! நோட்டமா! சதிராட்டமா!

gragavan
23-11-2005, 03:59 AM
இன்னும் சில போட்டியில எல்லாம் ராகவன் வெற்றி பெற்றால் என்ன ஆட்டம் ஆடுவாரு?
ஜெயமாலினி தோத்தாங்க போங்க :Dகிழிஞ்சது போங்க.....ஜெயமாலியோட நான் ஆடி.....வெளங்கி வெள்ளக்கோழி கூவீரும்.

gragavan
23-11-2005, 04:18 AM
இராகவன் அண்ணா விடையை சொல்ல விட்டு விடுகிறேன்.

இருந்தாலும் ஏதோ சொல்ல வேண்டுமே, வந்தவரின் தொப்பையையும், ஒட்ட வெட்டிய முடியையும் வைத்து கண்டுபிடித்து இருப்பார்.

ஆமாம் அங்கே ஏன் டாஸ்மார்க் சொல்லுறீங்க, ஒருவேளை ஒரு பாட்டிலையும் தைரியமாக கையில் எடுத்து வந்தாரா? இருக்கலாம், போலிஸ்காரங்க தைரியமாக தப்பு செய்வாங்க தானே.ஆமாய்யா! ஒங்களுக்கு வெட தெரியலைன்னா நாந்தான் மாட்டுனேன். அதான் பாரதியண்ணா சொல்லீட்டாரே.

அப்புறம் இன்னொரு விஷயம். பிஜீகே அண்ணா, பேரையூரில் டாஸ்மாக் இருக்குங்குற வரைக்கும் போனவரு, போலீஸ் ஸ்டேஷன் இருக்குன்னு சொல்லலையே.....அதுக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பு?

pgk53
26-11-2005, 12:43 AM
ஒரு சந்தேகம்-வந்தவர் ஏன் தயக்கத்துடன் உணவகத்திற்குள் செல்ல வேண்டும்?

வந்தவர் காவலர் சீருடையில் வந்திருந்தால் எளிதாக கூறிவிட வாய்ப்பிருக்கிறதே..!

நண்பர் பாரதி அவர்களே--சரியான விடையைத்தான் கூறினீர்கள்.
இருப்பினும் காவலர் உணவகத்தில் தயக்கத்துடன் நுழைந்ததுபோல் நீங்களும் தயக்கத்துடனேதான் கூறினீர்கள்.

காவலர் ஏன் தயக்கத்துடன் நுழைந்தார் ? என்று கேட்டிருந்தீர்கள்.
அது மனித இயல்பு.
புதிதாக வருபவர்கள் யாராயிருந்தாலும் கொஞ்சம் தயக்கத்துடன்தான் புதிய இடத்தில் நுழைவார்கள்.

சரியான விடையை முதலில் கூறிய பாரதி வாழ்க.

pgk53
26-11-2005, 12:49 AM
ஆமாய்யா! ஒங்களுக்கு வெட தெரியலைன்னா நாந்தான் மாட்டுனேன். அதான் பாரதியண்ணா சொல்லீட்டாரே.

அப்புறம் இன்னொரு விஷயம். பிஜீகே அண்ணா, பேரையூரில் டாஸ்மாக் இருக்குங்குற வரைக்கும் போனவரு, போலீஸ் ஸ்டேஷன் இருக்குன்னு சொல்லலையே.....அதுக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பு?

நண்பர் ராகவன் அவர்களே---பேரையூரில் டாஸ்மாக் இருப்பதைக் குறிப்பிட்ட நான் ஏன் காவல் நிலையம் இருப்பதாகக் குறிப்பிடவில்லை என்று கேட்டிருந்தீர்கள்.

அனைத்தையுமே நான் குறிப்பிட வேண்டியதில்லை. அதுதான் எனக்குப் பதிலாக பறிமாறுபவர் காவல் நிலையம் இருப்பதைக் குறிப்பிட்டாரே?

மேலும் அனைவருமே கேட்ட பொதுவான கேள்வி ஒன்று.

ஏன் டாஸ்மாக் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.????

இதுபோன்ற புதிர்கள் போடும்போது மக்களைக் குழப்பித் திசை திருப்பிவிட புதிருக்குச் சம்பந்தம் இல்லாததையும் சேர்த்துதான் குறிப்பிடவேண்டும்.

சரி வாருங்கள் அடுத்த புதிரைப் பார்ப்போம்.

pgk53
26-11-2005, 12:53 AM
புதிர் எண்-199


சென்னை----கோடம்பாக்கம்---ஆர்க்காடு சாலையில் சேகர் எம்போரியத்துக்கு எதிர்புறமாக அவள் நின்றிருந்தாள். பேருந்து வர மிகவும் காலதாமதம் ஆகியது.

அவளுக்கு எக்மோர் செல்லவேண்டிய அவசியம்.
காலம் தாழ்த்திப் போனால் வைகை எக்ஸ்பிரஸ் வந்துவிடும்.
தனது உறவினரை அவள் எதிர்கொள்ளச் சென்றுகொண்டிருக்கிறாள்.
உறவினர் சென்னைக்கு முதல் தடவையாக வருகிறார்.
அதனால் அவள் இரயில் வந்து சேரும் முன்பாக எழும்பூர் சென்றடையவேண்டும்.
அதனால் காலியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தினாள்.
அவசரமாக எழும்பூர் போகவேண்டும் என்றபடி ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

ஆட்டோ புறப்பட்டது.
ஆட்டோவை ஓட்டிவன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ஓட்டினான்.
ஆட்டோ நுங்கம் பாக்கத்தில் நுழைந்தது
அவளுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
சென்னை ஆட்டோ ஓட்டுனர்களிடம் முதலிலேயே பேரம் பேசிக்கொள்ளாவிட்டால் இறங்கும்போது அளவுக்கு அதிகமான தொகையை ஏமாற்றி வாங்கிவிடுவார்கள் என்ற கருத்து அவளுக்கு இருந்தது.
அதனால் ஓட்டுனரிடம் எழும்பூருக்கு எவ்வளவு வாங்குவாய் என்று கேட்டாள்.
அவன் ஒன்றும் பதில் கூறவில்லை.
லேசாக அவன் தோளைத் தட்டியபடி மறுபடியும் அவள் கேட்டாள்.

அவனோ, அவள் பக்கம் லேசாகத் திரும்பி, தான் செவிட்டு ஊமை என்று சைகை காட்டினான்.
அய்யோ பாவம் என்று அவனுக்காக இரக்கப்பட்டபடி அவள் அமர்ந்திருந்தாள்.

எழும்பூர் வந்தது.
மீட்டர் காட்டிய எழுபது ரூபாயைவிட விட பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்துவிட்டு அவள் இறங்கினாள்

ஆட்டோ புறப்பட்டுப் போனது.
அவள் இரயில்வே பிளட்பாரம் சென்றாள்.
வைகை இரயில் வர இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும் என்று தெரிந்தது.

சிறிது நேரம் சும்மா இருந்தாள்.
ஏதோ ஒரு நினைவு வர----- ஆட்டோக்காரன் தன்னை சரியாக ஏமாற்றிவிட்டான் என்பது அவளுக்கு உரைத்தது.

தனது முட்டாள்தனத்தை நினைத்து தலையில் அடித்துக்கொண்டாள்.
இனிமேலாவது இப்படி ஏமாற்றக்கூடாது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

அன்பு நண்பர்களே அவள் ஆட்டோக்காரனிடம் எப்படி ஏமாந்தாள்????
கூறுங்களேன்.

பரஞ்சோதி
26-11-2005, 03:11 AM
அவசரமாக எழும்பூர் போகவேண்டும் என்றபடி ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்

இது பிஜிகே அண்ணா சொன்னது,

அப்போ அவன் செவிட்டு ஊமை என்றால் எப்படி இப்படி கூறியவுடன் வண்டியை கிளப்பி இருக்க முடியும், கண்டிப்பாக காது கேட்கவில்லை என்று சொல்லியிருக்க வேண்டும் இல்லையா.

mania
26-11-2005, 04:19 AM
இதுக்கு மட்டும் முந்திரிக்கொட்டையாட்டம் வந்து பதில் சரியா சொல்லிட்டு போயிடு......:mad: :mad:
அன்புடன்
மணியா...:mad:

poo
26-11-2005, 04:55 AM
ஹாஹாஹஹா..

தலை.. உங்க எரிச்சல் எனக்கும் இல்லாம இல்லை...

mania
26-11-2005, 04:58 AM
ஹாஹாஹஹா..

தலை.. உங்க எரிச்சல் எனக்கும் இல்லாம இல்லை...

தலை எரிச்சல் இல்லப்பா.....!!!!???? வயத்தெரிச்சல் அல்லது பேட்டெரிச்சல்....:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

poo
26-11-2005, 05:53 AM
கல்கத்தாவுலதானே தலை பேட்டெரிச்சல் ??!!

மன்மதன்
26-11-2005, 06:07 AM
கல்கத்தாவுலதானே தலை பேட்டெரிச்சல் ??!!

:D :D :D பவுலெரிச்சலும் கூட :rolleyes: :rolleyes:

poo
26-11-2005, 06:16 AM
ஜிந்தியில பேட்டெரிச்சல்னா வயித்தெரிச்சல்னு சொன்னாங்க..
பவுலெரிச்சல்னா?! (ஹிந்தியில இன்னாப்பா??)

மன்மதன்
26-11-2005, 06:28 AM
பவுலிலிருந்து (கோப்பையிலிருந்து) கண்டதை குடித்து ஏற்படும் எரிச்சல் ..போதுமா??? :D :D

poo
26-11-2005, 06:43 AM
பவுலிலிருந்து (கோப்பையிலிருந்து) கண்டதை குடித்து ஏற்படும் எரிச்சல் ..போதுமா??? :D :D

பவுலில் இருப்பதை குடித்தால் எரிச்சல் ஏற்படுமெனில் எனக்கு போதும்பா... :p :p

mania
26-11-2005, 07:42 AM
என்னப்பா இது :mad: ரெண்டு பேரும் ஒரே ஃபவுல் லேங்குவேஜில் பேசிக்கிறீங்க....!!!???:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

gragavan
28-11-2005, 03:17 AM
என்ன நடக்குதுன்னே புரியலை. அண்ணா ஒரு புதிர் போட்டிருந்தார். விடையைச் சொல்லும் முன்னாடியே முந்திரிக்கொட்டை பரம்ஸ் முந்திக்கிட்டான். அப்புறம் பாத்தா புரியாத மொழியில பேசிக்கிறாங்க.

பரஞ்சோதி
28-11-2005, 03:32 AM
வாங்கண்ணா வாங்க, எங்கே இன்னும் உங்களைக் காணவில்லையே என்று பார்த்தேன். நீங்களும் புலம்பி தள்ளியாச்சா?

gragavan
28-11-2005, 03:47 AM
பொலம்பாம என்ன செய்ய? காலைல ஆபீஸ் வந்ததுமே தூக்கம் வருது. அதான்.

pgk53
29-11-2005, 12:57 AM
அவசரமாக எழும்பூர் போகவேண்டும் என்றபடி ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்

இது பிஜிகே அண்ணா சொன்னது,

அப்போ அவன் செவிட்டு ஊமை என்றால் எப்படி இப்படி கூறியவுடன் வண்டியை கிளப்பி இருக்க முடியும், கண்டிப்பாக காது கேட்கவில்லை என்று சொல்லியிருக்க வேண்டும் இல்லையா.


சபாஷ் ------------ சகோதரர் பரஞ்சோதி அவர்கள் முற்றிலும் சரியான விடையை கூறியுள்ளார்.

எல்லா பேட் எரிச்சலும், பவுல் எரிச்சலும் மும்பாய் விருந்துண்டதும் பறந்தோடியிருக்குமே??????!!!!!!

சரி இனி அடுத்த புதிருக்கு விரைவில் போவோம்.

அடுத்த புதிர் ஒரு சிறப்புப் புதிராக கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

ஏனென்றால் அடுத்த புதிர் 200வது புதிர்.

aren
29-11-2005, 01:42 AM
200 புதிர் கொடுத்து பிகேஜி அவர்களுக்கு ஒரு பெரிய "ஜே" போடுங்கப்பா?

பிகேஜிக்கு "புதிர்மன்னன்" என்ற பட்டத்தைக் கொடுக்கலாமா.

mania
29-11-2005, 02:57 AM
" ஜே ":D :D :D :D :D
அன்புடன்
மணியா:D

பரஞ்சோதி
29-11-2005, 03:22 AM
200 புதிர் கொடுத்து பிகேஜி அவர்களுக்கு ஒரு பெரிய "ஜே" போடுங்கப்பா?

பிகேஜிக்கு "புதிர்மன்னன்" என்ற பட்டத்தைக் கொடுக்கலாமா.
ஆரென் அண்ணா, இது என்ன கேள்வி?

உடனே கொடுத்து விடுங்க.

பிஜிகே அண்ணா புதிர்களின் மன்னன், எங்கள் அறிவுக்கு அண்ணன்.

mania
29-11-2005, 03:36 AM
ஆரென் அண்ணா, இது என்ன கேள்வி?

உடனே கொடுத்து விடுங்க.

பிஜிகே அண்ணா புதிர்களின் மன்னன், எங்கள் அறிவுக்கு அண்ணன்.

:mad: :mad: :mad: அவர் எப்போ 200 ஆவது புதிரை கொடுத்தாலும் உனக்கு அன்னிக்கு தலைக்கு மேலேயும்.....காலுக்கு கீழேயும் வேலையே இருக்காதே.....????:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D

gragavan
29-11-2005, 04:45 AM
புதிர் மன்னன் பிஜிகே அண்ணாவிற்கு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ போட்டாச்சு.

இருநூறு புதிர் தந்த அபூர்வ சிகாமணி பட்டம் ஐவரணியில் சார்பாக தலை அவர்களால் வழக்கப்படுகிறது என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மன்மதன்
29-11-2005, 02:41 PM
பிஜிகேவிற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்........

pradeepkt
30-11-2005, 03:21 AM
பிஜிகே அண்ணாவிற்கு வாழ்த்துகள்.
எத்தனை புதிர்கள், அதில் எத்தனை தலை சுற்றல்கள்....

pgk53
01-12-2005, 03:13 PM
புதிர் எண் -200

வங்கக் கடலில் முத்துத் தீவு என்று ஒரு தீவு.
மிகவும் அழகிய தீவு.
அந்தத் தீவில் ஆங்காங்கே அருவிகள் அழகாகக் கொட்டியது.
அந்த நீர் தேங்கிய பொய்கைகளில் பல வகையான வண்ணப் பறவைகள் தங்கி இருந்து களித்தன..இயற்கை அழகு எங்குக் கொட்டிக் கிடந்தது.

தீவின் அழகைக் கண்டு களிப்பதற்கு, சுற்றுலாப் பயணிகள் ஏராளமாக வந்துபோனார்கள்.
அந்தத் தீவில் மருத்துவ மனை ஒன்று இருந்தது.

திடீரென்று தீவில் தொற்று நோய் பரவத் தொடங்கியது.
நோய் தாக்கியவர்கள் சிலர் இறந்து போனார்கள்.
மருத்துவர்குழு ஒன்று அந்த நோயைப் பற்றி ஆராய்ச்சி செய்தது. ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களுக்கு அறிவித்தார்கள்.

“தொற்று நோய் எந்தக் கிருமியால் பரவுகிறது?அதற்கான மருந்து என்ன என்பதை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்!----இந்த நோய் தோல் வழியாகப் பரவுகின்றது.
நோய் தாக்கப்பட்டவர் கையை இன்னொருவர் குலுக்கினாலோ, அல்லது அவர் உடல் அடுத்தவர் மீது பட்டாலோ, நோய் அடுத்தவரைம் பற்றிக்கொள்ளும்.

நோயின் அறிகுறி முதல் பத்து நாட்களுக்குத் தெரியாது.பிறகு காய்ச்சலும் மயக்கமும் உண்டாகும். அப்போதுதான் நோய் தொற்றியுள்ளதை அறிந்துகொள்ளமுடியும்.முறையான மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படாததினால், நோய் தாக்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இறந்துவிடுவார்.

அதனால் நோய் யாரைத் தாக்கி உள்ளது என்று முன்கூட்டியே அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லை.மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒருவரை ஒருவர் எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது.நாங்கள் விரைவில் தகுந்த மருந்தைக் கண்டு பிடித்துவிடுவோம்.”----- என்று அறிவித்ததைக் கேட்ட மக்கள் மிகுந்த பீதி அடைந்தார்கள்.

கடைவீதியில் நெரிசல் குறைந்துவிட்டது.மக்கள் அனைவருமே மருத்துவர்களின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு ஒருவரை ஒருவர் தொடாமல் எச்சரிக்கையுடன் இருக்க ஆரம்பித்தார்கள்.

அந்த சமயம் விபத்தில் சிக்கிய ஒருவரை அந்த மருத்துவ மனைக்குக் கொண்டு வந்தார்கள். மிக மோசமாக அடிபட்டிருந்தார் அவர்.
அவரைக் காப்பாற்ற அவரது இதயத்திலும் வயிற்றிலும், தலையிலும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிலைமை இருப்பதை மருத்துவர்கள் உணர்ந்தார்கள்.

அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளும் மிகத் துரிதமாக நடந்தது.

அடுத்து அடுத்து செய்யவேண்டிய அறுவை சிகிச்சைகளை நடத்த, அந்த அந்த சிறப்பு மருத்துவர்கள் மூன்று பேரும் அங்கே வந்தார்கள்.

உதவியாளர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கான கருவிகளை கொண்டுவந்து வைத்தார்கள் .

மருத்துவர் சிகிச்சையை ஆரம்பிக்கும்போதுதான் அங்கே இரண்டி சோடிக் கையுறைகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

உடனே மருத்துவமனை ஸ்டோருக்கு விரைந்தார்கள் உதவியாளர்கள்.ஆனால் அங்கேயும் கையுறைகளின் இருப்பு இல்லை. முற்றிலும் தீர்ந்த நிலை.

அக்கம் பக்கம் இருந்த மருந்துக்கடைகளிலும் முயற்சி செய்தார்கள். எங்குமே இருப்பு இல்லை. அது சிறிய தீவு என்பதினால் வேறு மருத்துவமனையும் இல்லை.
அதனால் அங்கிருந்து எடுத்துவர இயலாத நிலைமை.

மேற்கொண்டு கையுறை வேண்டுமானால் அது சென்னையில் இருந்துதான் விமானத்தில் கொண்டுவரப்படவேண்டும்.
அதனால் மருத்துவர்கள் மிகவும் குழப்பமான நிலையில் ஆழ்ந்தார்கள்.

தொர்று நோய் தாக்கப்பட்டவர்கள் மருத்துவராகவும் இருக்கலாம்.
அல்லது நோயாளியாகவும் இருக்கலாம்.

அதனால் மருத்துவர் கையுறை இல்லாமல் சிகிச்சை செய்ய இயலாது.
இரண்டு சோடிக் கையுறை மட்டுமே இருப்பதினால் யாராவது இரண்டு மருத்துவர் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்.
மூன்றாவது மருத்துவர் சிகிச்சை அளிக்க இயலாது. அப்படி இயலாமல் போனால் அடிபட்டவர் இறந்துபோக வாய்ப்புகள் அதிகம்.

அதனால் மருத்துவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்கள்.

அப்போது அறிவும் திறமையும் உள்ள ஒரு நர்ஸ் அங்கே இருந்தாள்.
நிலைமையைப் புரிந்துகொண்டாள்.
ஆலோசித்தாள்.
அந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு நல்ல வழி அவளுக்குப் புலப்பட்டது. மருத்துவர்களிடம் அந்த வழிமுறையைக் கூறினாள்.

அதைக் கேட்ட மருத்துவர்கள் அவளைப் பாராட்டி, அவள் கூறியபடியே அறுவை சிகிச்சை செய்தார்கள்.

அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது.
விபத்தில் அடிபட்டு வந்தவர் உயிர் பிழைத்தார்.

அன்பு நண்பர்களே---------------அந்த நர்ஸ் கூறிய வழிமுறை என்னவாக இருக்கும். கூறுங்களேன்.??????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

gragavan
02-12-2005, 04:00 AM
போச்சு...மருத்துவப் புதிரா.....அப்ப இளசு அண்ணா வந்து சொல்லட்டும். என்ன ரெண்டு பேரு ஒரே ஒரு கையில மட்டும் கையுறை போட்டுக் கொண்டாங்களா?

gragavan
02-12-2005, 04:00 AM
பரஞ்சோதி எங்க? என்னவோ முந்திரிக் கொட்டை மாதிரி விடை சொல்வானே...இப்ப ஆளையே காணோம்.

பென்ஸ்
02-12-2005, 04:35 AM
வந்துற்றேயா.... ஐயா....

முதல் மருத்துவர் இரண்டு கையுறையையும் அனிந்து கொன்டு அறுவைசிகிச்சையை துவங்க,

அவ்ர் வேலை முடிந்ததும்.... மேலே இருக்கும் உறையை கழற்றி ஒருவருக்கு கொடுத்து இரண்டாமர் அவருடைய வேலையை துவங்க வேண்டும்...

இப்பொது மூன்றவது மருத்துவர் முதல் மருத்துவரின் கையுறையை வாங்கி உல்டாவாக (சைடு மாற்றி) அனிய வேண்டும்...

இரன்டாவது மருத்துவர் தனது அறுவையை முடித்தது அதை வாங்கி அப்படியே தனது கையுறை மீது இட்டு கொண்டு தனது அறுவை சிகிச்சையை துவங்கலாம்...


கலக்கி போட்டோம்மில்ல... :D :D :D

pradeepkt
02-12-2005, 05:48 AM
ஏன்யா
உல்டாவாக மாற்றி அணிந்தால் அந்தத் தோலில் ஒட்டிக் கொண்டுள்ள கிருமி பரவாதா...
நக்கீரன் மாதிரி கேள்வி கேட்டோமில்ல :D :D :D

gragavan
02-12-2005, 06:00 AM
ஏன்யா
உல்டாவாக மாற்றி அணிந்தால் அந்தத் தோலில் ஒட்டிக் கொண்டுள்ள கிருமி பரவாதா...
நக்கீரன் மாதிரி கேள்வி கேட்டோமில்ல :D :D :Dமதுரைக்காரருன்னு நிரூபிக்கிறாரு.

பாரதி
02-12-2005, 06:02 AM
இந்த நோய் தோல் வழியாகப் பரவுகின்றது.

இதுதான் இந்தப்புதிருக்கு விடையா..?

பென்ஸ்
02-12-2005, 06:06 AM
யோவ்... அதுதான் சொன்னேன்மில்லையா....

திரும்பவும் விளக்குறேன்...

1, முதல் மருத்துவர் இரண்டு கையுறையும் ஒன்றின் மேல் ஒன்றாக அணிவார்....

2, முதல் மருத்துவர் தன் வேலையை முடித்ததும்...

3, இரண்டாமர் மேலே இருக்கும் கையுரையை வாங்கி அனிவார்.. (இது வரை சரியா??)

4, மூன்றாமர் முதல் மருத்துவர் உள்ளே அணிந்திருந்த கையுறையை வாங்கி உல்டாவாக அணிவார்.. (இப்போ புரியுதா??)

5, இரண்டாமர் தன் வேலையை முடித்ததும் அதை முன்றாமரிடம் கொடுப்பார்.. அவர் அந்த கையுறையை வாங்கி அதை தான் அனிந்திருக்கும் கையுறையில் மேல் அனித்து பின் தன் வேலையை துவங்குவார்....

இப்பவாவது புரியுதா....??????

pradeepkt
02-12-2005, 06:15 AM
ஏதோ கொழப்பிக் கொழப்பி நீங்க புரியுற மாதிரி சொல்ல முயற்சி பண்ணுறீங்கன்னு எல்லாரும் சொல்றாங்கன்னு நான் சொல்லலைன்னு உங்களுக்குப் புரியுதுல்ல...
அப்ப எனக்கு எல்லாமே புரிஞ்சிருச்சு

மதி
02-12-2005, 06:53 AM
யோவ்... அதுதான் சொன்னேன்மில்லையா....

திரும்பவும் விளக்குறேன்...

1, முதல் மருத்துவர் இரண்டு கையுறையும் ஒன்றின் மேல் ஒன்றாக அணிவார்....

2, முதல் மருத்துவர் தன் வேலையை முடித்ததும்...

3, இரண்டாமர் மேலே இருக்கும் கையுரையை வாங்கி அனிவார்.. (இது வரை சரியா??)

4, மூன்றாமர் முதல் மருத்துவர் உள்ளே அணிந்திருந்த கையுறையை வாங்கி உல்டாவாக அணிவார்.. (இப்போ புரியுதா??)

5, இரண்டாமர் தன் வேலையை முடித்ததும் அதை முன்றாமரிடம் கொடுப்பார்.. அவர் அந்த கையுறையை வாங்கி அதை தான் அனிந்திருக்கும் கையுறையில் மேல் அனித்து பின் தன் வேலையை துவங்குவார்....

இப்பவாவது புரியுதா....??????

கலக்கிப்புட்டீங்க அப்பு..

மதி
02-12-2005, 06:55 AM
ஏதோ கொழப்பிக் கொழப்பி நீங்க புரியுற மாதிரி சொல்ல முயற்சி பண்ணுறீங்கன்னு எல்லாரும் சொல்றாங்கன்னு நான் சொல்லலைன்னு உங்களுக்குப் புரியுதுல்ல...
அப்ப எனக்கு எல்லாமே புரிஞ்சிருச்சு
சமீபமாய் விசு படம் எதாவது பார்த்தீங்களா?
தாக்கம் பயங்கரமா இருக்கே!

பென்ஸ்
02-12-2005, 06:58 AM
திரும்பவும் விளக்குறேன்...

1, முதல் மருத்துவர் இரண்டு கையுறையும் ஒன்றின் மேல் ஒன்றாக அணிவார்....
(உறை1 மேல் உறை2 , இப்போது உறை1 உள் பகுதியும், உறை2 வேளி பகுதியும் பாதிக்கபட்டது, ஆனால் உறை 1ன் வேளி பகுதியும், உறை 2ன் உள் பகுதியும் சுத்தம்...)

2, முதல் மருத்துவர் தன் வேலையை முடித்ததும்...

3, இரண்டாமர் மேலே இருக்கும் கையுரையை வாங்கி அனிவார்.. (இது வரை சரியா??)
ஆதாவது உறை 2... இதன் உள் பகுதி சுத்தம் இல்லையா.. அதனால.. இரான்டாமர் பத்திரம் இல்லையா???..... அதே நேரம்.. உறை 2 வேளி பகுதி, நோயாலியின் ரத்ததால் பாதிக்க பட்டது.. அது நோயாளியின் மீது படுதல் தப்பில்லையே...

4, மூன்றாமர் முதல் மருத்துவர் உள்ளே அணிந்திருந்த கையுறையை வாங்கி உல்டாவாக அணிவார்.. (இப்போ புரியுதா??)
அதாவது உறை 1ன் வேளி பக்கம் சுத்த்மானது.. அதனால, உல்டாவாக அனிந்த்தால் மூன்றாவது மருத்துவருக்கு பாதிப்பில்லை... ஆனால் உறை 1ன் உள் பக்கம் (முன்றாமர் அனிந்த பின் அது வேலி பக்கம் அகிவிடும்) முதல் மருத்துவரால் பதிக்க பட்டு இருக்கும்... எனவே இவர் இரண்டாவது மருத்துவர் தன் அறுவை சிகிச்சையை முடிக்கும் வரை காத்திருப்பார்...

5, இரண்டாமர் தன் வேலையை முடித்ததும் அதை முன்றாமரிடம் கொடுப்பார்.. அவர் அந்த கையுறையை வாங்கி அதை தான் அனிந்திருக்கும் கையுறையில் மேல் அனித்து பின் தன் வேலையை துவங்குவார்....
முதல் இரு மருத்துவரும் அறுவையை முடித்தாயிற்று...
முன்றாவது மருத்துவர் அனிந்திருக்கும் கையுறையின் (உறை 1) வேளி பக்கம் அசுத்தமானது, அதனால் இரண்டாமர் கையுரையை வாங்கி தான் அனித்திருக்கும் உறையிம் மேலே இடுவார்... இன்னமுன் உறை 2ன் வேலி பகுதி நோயாளியின் ரத்ததால் மட்டுமே பாதிக்க பட்டிருக்கிறது, உள்பகுதி இரண்டாவது மருத்துவறின் கையால் பாதிக்க பட்டிருக்கிறது, ஆனாலும் அதை தன் கையுறையின் மீதே இடுவதால் எந்த பாதிப்பும் இருக்காது அல்லவா????



இப்பவாவது புரியுதா....??????

pradeepkt
02-12-2005, 07:02 AM
புரிஞ்சிருச்சு புரிஞ்சிருச்சு...
சூப்பரப்பு...
என்னாஆஆஆஆஆல தாஆஆஆஆங்க முடியலை.. இதை சிவகுமார் பாணியில் படிக்கவும் :D
வாழ்த்துகள் பென்ஸ்

பென்ஸ்
02-12-2005, 07:04 AM
சுவேதா மாதிரி கத்திபுட்டு சிவகுமார் மாதிரி வாசிக்க சொன்னா????

gragavan
02-12-2005, 07:21 AM
என்னவோ ஒரு விடையச் சொல்லீருக்கீங்க....ஒன்னும் புரியலைங்க...........எல்லாரும் ஒரே நேரத்துல ஆப்ரேஷன் பண்ண மாட்டாங்களா? ஒவ்வொருத்தரும் வரிசையாவா அப்ரேஷன் செய்வாங்க?

பென்ஸ்
02-12-2005, 07:32 AM
இளசு .. இதுக்கு நீங்கதான் பதில் சொல்லனும்....

gragavan
02-12-2005, 07:35 AM
இளசு .. இதுக்கு நீங்கதான் பதில் சொல்லனும்....என்ன பெஞ்சமின்....இதுக்கு நீங்க இப்படி பதில் சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்.
1. டாக்டர் 1ம் 2ம் சேர்ந்து ஆப்பரேஷன் செய்வார்கள்.
2. இப்பொழுது 2ம் 3ம் செய்வார்கள்.
3. மீண்டும் 3ம் 1ம் சேர்ந்து ஆப்பரேஷன் செய்வதால் ஆப்பரேஷன் முழுமையடைந்தது.
:D :D :D :D :D :D :D :D :D

பென்ஸ்
02-12-2005, 07:48 AM
இல்லை.. இப்படி செய்ய முடியாது... அவ்வாறு சேய்வதாக இருந்தால் புதிருக்கு பதில் கிடைக்காது...
இளசுவை இதில் இளுக்க காரனம்...

உன்மையிலையே ஒரே நேரத்தில் பலர் அறுவை செய்வார்களா என்று தெரிந்து கொள்ளதான்...

sankar_itian
02-12-2005, 08:04 AM
அருமை நண்பரே,
மூளையை கசக்கி பிழிந்து விட்டீர் போலும்

mania
02-12-2005, 08:13 AM
பெஞசமின் கூறுவது சரியே....:D .பாராட்டுகள்......:D ஆனால் இது ஒரு மாதிரியான புதிர்....:rolleyes: :rolleyes: .!!!???அழகாக மாற்றி கேட்டிருக்கிறார் பிஜிகே....:D :D
அன்புடன்
மணியா:D

pradeepkt
02-12-2005, 08:20 AM
தலை, அது என்ன "ஒரு மாதிரியான"
அது என்னா மாதிரின்னு இப்ப எனக்குத் தெரிஞ்சாவணும் :D
ஒரு வழியா மேட்ச்சை ஏறக்கட்டிட்டு வந்திட்டீங்க போல :D :D

பென்ஸ்
02-12-2005, 08:21 AM
தலை...:) நீங்கள் என்ன சொல்ல வருகிறிர்கள் என்று எனக்கு தெரியும்...:p :p :D :D :D
அந்த புதிரும் அதன் விடையும் எனக்கு தெரியும்... :D :D :D

அதனால் தன் இவ்வளவு ஈசியா...:rolleyes: :rolleyes: :rolleyes:

mania
02-12-2005, 08:24 AM
:D :D நீ சின்ன பையன் .....:rolleyes: :rolleyes: :D :D !!!???? இப்போ தெரிஞ்சிக்க வேண்டாம்.....:D :D .உனக்கு அப்பிடி என்ன சந்தோஷம் மேட்சை ஏறக்கட்டறதிலே...:mad: :mad: .???? உனக்காகவே நான் மன்மதனையும் சேரனையும் அழைக்கவில்லை மேட்ச் பாக்க.....அப்பிடியும்.....????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

mania
02-12-2005, 08:26 AM
தலை...:) நீங்கள் என்ன சொல்ல வருகிறிர்கள் என்று எனக்கு தெரியும்...:p :p :D :D :D
அந்த புதிரும் அதன் விடையும் எனக்கு தெரியும்... :D :D :D

அதனால் தன் இவ்வளவு ஈசியா...:rolleyes: :rolleyes: :rolleyes:

:rolleyes: :rolleyes: :D :D தீரடிகல்லா தெரிஞ்சா சரி.....:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:D :D

pradeepkt
02-12-2005, 08:28 AM
அடப்பாவி பென்ஸ்...
இதானா விஷயம்??? இருக்கட்டும் இருக்கட்டும்... :D
தலை மேட்சை ஏறக்கட்டுறதில எனக்கென்ன சந்தோஷம்...? :D மன்மதனை நாளைக்குக் கூப்பிடுங்க, கண்டிப்பா மேட்ச் நடக்கும்.

pradeepkt
02-12-2005, 08:29 AM
:rolleyes: :rolleyes: :D :D தீரடிகல்லா தெரிஞ்சா சரி.....:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:D :D
அவரு காலேஜிலயே ப்ராக்டிகல்லதான் நிறைய மார்க்கு வாங்குவாராம்...
சரி இதுக்கு மேல எழுதி இந்தத் திரியையே பண்பட்டவர் பதிப்புக்கு மாத்தீரப் போறீங்க...:rolleyes: :D
எனக்கேன் வம்பு? :rolleyes: :D

mania
02-12-2005, 08:36 AM
அவரு காலேஜிலயே ப்ராக்டிகல்லதான் நிறைய மார்க்கு வாங்குவாராம்...
சரி இதுக்கு மேல எழுதி இந்தத் திரியையே பண்பட்டவர் பதிப்புக்கு மாத்தீரப் போறீங்க...:rolleyes: :D
எனக்கேன் வம்பு? :rolleyes: :D

:D :D :D பேச்சே புண்பட்டவர்களை பற்றித்தானே....!!!!????:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

பென்ஸ்
02-12-2005, 09:12 AM
சரிப்பா.. என் பங்குக்கு ஒரு புதிர்... (முன்னால் எப்பவோ செர்லக் கால்ம்ஸ் என்று ஆனந்த விகடனிலோ அல்லது குமுதத்திலோ வசித்த நியாபகம்)

சார்லெஸ் ஒரு பெரிய வியபாரி... இவர் தன்னுடைய வியபார விசயமாக வாரம் ஒருமுறை சிங்கப்பூர் சென்று வருவது வழக்கம். வியபாரம் என்று சரியாக சொன்னால் இவர் ஒரு கள்ளகடத்தல்காரன். இவர் ஒவ்வொறு முறை சிங்கப்பூர் செல்லும் போதும் தன்னுடைய பிரீப் கேஸ்சில் பின்வரும் பொருட்களை வைத்திருப்பார்... இதை தவிர ஒரு பொருளும் அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து செல்லுவதில்லை....

1, ஒரு ஜோடி பேன்ட், சட்டை.
2, ஒரு பழைய, கிழிந்த தடிமனான பைபிள்
3, ஒரு நாவல் புத்தகம்
4, ஒரு டுத் பெஸ்ட்
5, ஒரு சீப்பு
6, ஒரு கண்ணாடி

ஒரு முறை இவர் தன் பயனத்தை துவங்கும் பொது இவர் மேல் சந்தேகம் கொண்ட போலிஸ்... இவர் பெட்டியை சோதிக்க, எதுவும் தென் படாமல் விட்டு விட்டனர்.

ஆனால் நமது செர்லக் கால்ம்ஸ் அங்கு வர, அவரது பெட்டியை பார்வை இட்டார்... அவர் மூளையில் ஏதோ தட்டு பட.. அவர் வைரங்கள் மறைத்து வைக்க பட்டிருந்த டுத் பெஸ்ட் டியுபை எடுத்து வெட்ட, வைரம் வேளியே வர ஆரம்பிக்குது....

சரி இப்போ கேள்வி... நம்மாளு பேஸ்ட்டுல தான் வைரம் இருக்குன்னு எப்படி சந்தேக பட்டார்???

பிஜிகே அண்ணா.. நீங்கள் விடை சரியா என்று சொல்லும் முன் முந்திரி கொட்டை மாதிரி இன்னொரு புதிரை போடுவதற்க்கு மன்னிக்கவும்...

mania
02-12-2005, 09:24 AM
நான் சொல்லவா.....நான் சொல்லவா......:D :D (இன்னொரு முந்திரிக்கொட்டை) .....:D :D
பென்ஸ் உன் பதிவை பாரதி படிக்க வேண்டும்....:rolleyes: .எப்போவோ சின்ன வயதில் படித்தது என்பதனால் சின்ன குழந்தை மாதிரியே நிறைய தப்பு தப்பா எழுதியிருக்கியே....????:D :D
அன்புடன்
மணியா....:D

பென்ஸ்
02-12-2005, 09:27 AM
சாரி தலை... பாரதி அவர்கள் வருவதற்கு முன்னாடி சரி செய்ய முயர்ச்சிக்கிறேன்...

gragavan
02-12-2005, 11:01 AM
சாரி தலை... பாரதி அவர்கள் வருவதற்கு முன்னாடி சரி செய்ய முயர்ச்சிக்கிறேன்...அது நடக்கப் போறாப்புல தெரியல...............

gragavan
02-12-2005, 11:04 AM
நான் சொல்லவா.....நான் சொல்லவா......:D :D (இன்னொரு முந்திரிக்கொட்டை) .....:D :D
பென்ஸ் உன் பதிவை பாரதி படிக்க வேண்டும்....:rolleyes: .எப்போவோ சின்ன வயதில் படித்தது என்பதனால் சின்ன குழந்தை மாதிரியே நிறைய தப்பு தப்பா எழுதியிருக்கியே....????:D :D
அன்புடன்
மணியா....:Dஇந்தப் புதிருக்கான விடை எனக்கும் தெரியும். சினிமாவுலயே எடுத்துட்டாங்களே.........

mania
02-12-2005, 11:09 AM
சரிப்பா.. என் பங்குக்கு ஒரு புதிர்... (முன்னால் எப்பவோ செர்லக் கால்ம்ஸ் என்று ஆனந்த விகடனிலோ அல்லது குமுதத்திலோ வசித்த நியாபகம்)

சார்லெஸ் ஒரு பெரிய வியபாரி... இவர் தன்னுடைய வியபார விசயமாக வாரம் ஒருமுறை சிங்கப்பூர் சென்று வருவது வழக்கம். வியபாரம் என்று சரியாக சொன்னால் இவர் ஒரு கள்ளகடத்தல்காரன். இவர் ஒவ்வொறு முறை சிங்கப்பூர் செல்லும் போதும் தன்னுடைய பிரீப் கேஸ்சில் பின்வரும் பொருட்களை வைத்திருப்பார்... இதை தவிர ஒரு பொருளும் அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து செல்லுவதில்லை....

1, ஒரு ஜோடி பேன்ட், சட்டை.
2, ஒரு பழைய, கிழிந்த தடிமனான பைபிள்
3, ஒரு நாவல் புத்தகம்
4, ஒரு டுத் பெஸ்ட்
5, ஒரு சீப்பு
6, ஒரு கண்ணாடி

ஒரு முறை இவர் தன் பயனத்தை துவங்கும் பொது இவர் மேல் சந்தேகம் கொண்ட போலிஸ்... இவர் பெட்டியை சோதிக்க, எதுவும் தென் படாமல் விட்டு விட்டனர்.

ஆனால் நமது செர்லக் கால்ம்ஸ் அங்கு வர, அவரது பெட்டியை பார்வை இட்டார்... அவர் மூளையில் ஏதோ தட்டு பட.. அவர் வைரங்கள் மறைத்து வைக்க பட்டிருந்த டுத் பெஸ்ட் டியுபை எடுத்து வெட்ட, வைரம் வேளியே வர ஆரம்பிக்குது....

சரி இப்போ கேள்வி... நம்மாளு பேஸ்ட்டுல தான் வைரம் இருக்குன்னு எப்படி சந்தேக பட்டார்???

பிஜிகே அண்ணா.. நீங்கள் விடை சரியா என்று சொல்லும் முன் முந்திரி கொட்டை மாதிரி இன்னொரு புதிரை போடுவதற்க்கு மன்னிக்கவும்...

:D :D இன்னொரு மொறை முயற்சி பண்ணுங்கோ.....!!!:D :D
அன்புடன்
பாரதியிடம் தமிழ் கற்றுவரும்...:rolleyes: :D
மணியா:D :D

பென்ஸ்
02-12-2005, 11:09 AM
அது நடக்கப் போறாப்புல தெரியல...............

கொஞ்சம் கோளரு நாக்குனா (சாரி, நாக்கு கோளறுனா) ஓடனே பிடிச்சிடுவிங்களே...:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D

mania
02-12-2005, 11:10 AM
அது நடக்கப் போறாப்புல தெரியல...............

:D :D :D :D
அன்புடன்
மனியா....:D

பென்ஸ்
02-12-2005, 11:15 AM
:D :D இன்னொரு மொறை முயற்சி பண்ணுங்கோ.....!!!:D :D
அன்புடன்
பாரதியிடம் தமிழ் கற்றுவரும்...:rolleyes: :D
மணியா:D :D

ஐ யாம் சாரிப்பா...:angry: :angry: :angry: இதுதான் தலை மாதிரி வாத்தியாரிடம் தமிழ் படிக்க கூடாது என்று சொல்லுறது....:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:


கவலையுடன்.. தலையின் மாணவன் :angry: :angry: :angry:

pradeepkt
02-12-2005, 11:21 AM
அடுத்து நேராக் கோளறு பதிகம் கோளாறில்லாம எழுத வேண்டியதுதான் பென்ஸ்...
சாரி... ச்சும்மா லுலுலுவாயிக்கு :D

aren
02-12-2005, 01:15 PM
ஐ யாம் சாரிப்பா...:angry: :angry: :angry: இதுதான் தலை மாதிரி வாத்தியாரிடம் தமிழ் படிக்க கூடாது என்று சொல்லுறது....:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:


கவலையுடன்.. தலையின் மாணவன் :angry: :angry: :angry:

அப்படிப்போடு அறிவாளை!!!

தப்பு கண்டுபிடித்தவரையே வாறலா??

பேஷ்!! பேஷ்!! ரொம்ப நன்னாயிருக்கு!!!!!

இளந்தமிழ்ச்செல்வன்
02-12-2005, 03:10 PM
சரிப்பா.. என் பங்குக்கு ஒரு புதிர்... (முன்னால் எப்பவோ செர்லக் கால்ம்ஸ் என்று ஆனந்த விகடனிலோ அல்லது குமுதத்திலோ வசித்த நியாபகம்)

சார்லெஸ் ஒரு பெரிய வியபாரி... இவர் தன்னுடைய வியபார விசயமாக வாரம் ஒருமுறை சிங்கப்பூர் சென்று வருவது வழக்கம். வியபாரம் என்று சரியாக சொன்னால் இவர் ஒரு கள்ளகடத்தல்காரன். இவர் ஒவ்வொறு முறை சிங்கப்பூர் செல்லும் போதும் தன்னுடைய பிரீப் கேஸ்சில் பின்வரும் பொருட்களை வைத்திருப்பார்... இதை தவிர ஒரு பொருளும் அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து செல்லுவதில்லை....

1, ஒரு ஜோடி பேன்ட், சட்டை.
2, ஒரு பழைய, கிழிந்த தடிமனான பைபிள்
3, ஒரு நாவல் புத்தகம்
4, ஒரு டுத் பெஸ்ட்
5, ஒரு சீப்பு
6, ஒரு கண்ணாடி

ஒரு முறை இவர் தன் பயனத்தை துவங்கும் பொது இவர் மேல் சந்தேகம் கொண்ட போலிஸ்... இவர் பெட்டியை சோதிக்க, எதுவும் தென் படாமல் விட்டு விட்டனர்.

ஆனால் நமது செர்லக் கால்ம்ஸ் அங்கு வர, அவரது பெட்டியை பார்வை இட்டார்... அவர் மூளையில் ஏதோ தட்டு பட.. அவர் வைரங்கள் மறைத்து வைக்க பட்டிருந்த டுத் பெஸ்ட் டியுபை எடுத்து வெட்ட, வைரம் வேளியே வர ஆரம்பிக்குது....

சரி இப்போ கேள்வி... நம்மாளு பேஸ்ட்டுல தான் வைரம் இருக்குன்னு எப்படி சந்தேக பட்டார்???

பிஜிகே அண்ணா.. நீங்கள் விடை சரியா என்று சொல்லும் முன் முந்திரி கொட்டை மாதிரி இன்னொரு புதிரை போடுவதற்க்கு மன்னிக்கவும்...
பிரஷ் இல்லாமல் வெறும் டூத் பேஸ்ட் மட்டும் நம்ம செர்லாக் ஹோம்சை உறுத்தியிருக்கும்.

பரஞ்சோதி
02-12-2005, 05:56 PM
இ.த.செ கலக்கிபுட்டீங்க.

பரஞ்சோதி
02-12-2005, 05:57 PM
பெஞ்சமின் பிஜிகே அண்ணாவின் புதிருக்கு அற்புதமாக விடை சொல்லியிருகீங்க.

இது மாதிரி புதிரை எங்கேயே படித்த நினைவு. :)

பென்ஸ்
02-12-2005, 06:10 PM
அப்படிப்போடு அறிவாளை!!!

தப்பு கண்டுபிடித்தவரையே வாறலா??

பேஷ்!! பேஷ்!! ரொம்ப நன்னாயிருக்கு!!!!!

அறிவு + வாள் = அறிவாள்
ஆகா ஆகா.. நீர் தாம் புலவர் ...
புலவர் ஆரெனுக்கு ஒரு ஓஓஓ....:D :D
(எனக்கு அது உங்கள் எழுத்து பிழை என்று தெரியும்... இது ச்சும்மா லுலுலுவாயி)

பரஞ்சோதி
03-12-2005, 06:24 AM
பெஞ்சமின், உங்க எழுத்துகள் ஒரு சகோதரியை நினைவுப்படுத்துகிறது.

முன்பு தலைக்கு அவரது எழுத்துக்களை சரி செய்வதே தலையான பணியாக இருந்தது.

பென்ஸ்
03-12-2005, 03:35 PM
பிரஷ் இல்லாமல் வெறும் டூத் பேஸ்ட் மட்டும் நம்ம செர்லாக் ஹோம்சை உறுத்தியிருக்கும்.

ம்ம்ம்ம்.. மளிகை லிஸ்ட் மாதிரி ரெம்ப பெரிசா ஒரு லிஸ்ட் போட்டு இருக்கனுமோ?????:confused: :confused: :rolleyes: :rolleyes:

ம்ம்ம்.. சரியான விடை....:angry: :angry:

ஆனால் பிரஷ்,டூத் பேஸ்ட், செர்லாக் ஹோம்சை என்று பதித்திருப்பது தலையிடம் திட்டு வாங்க தானே????:rolleyes: :rolleyes: :D :D

ஆமா தலை, செர்லாக் ஹோம்சுக்கு தமிழில் என்ன???:confused: :confused: :confused: :rolleyes:

கேள்வியுடன்

pradeepkt
03-12-2005, 04:24 PM
ரொம்ப முக்கியம்,
இருக்கிற மத்த உருப்படியான விசயத்துக்குத் தமிழைத் தேடுங்கய்யா... :D

mukilan
03-12-2005, 05:05 PM
"ஸெர்லாக்" (Cerelac) தெரியும்ல அதோட வீடுகதான் (Holmes)!

pradeepkt
03-12-2005, 05:17 PM
வந்திட்டாருய்யா நம்மாளு...
முகிலன், பென்ஸு நம்மள கலாய்க்கிறாராம்..
நீங்க அவருக்கு சீரியஸா என்னமோ சொல்லிட்டு இருக்கீங்க?

mukilan
03-12-2005, 05:40 PM
இதெல்லாம் சொல்றதில்லையா! நானும் சேர்ந்துக்கிறேன்! ஆனாலும் அநியாயத்துக்கு ட்யூப்லைட்டா இருப்பேன்னு எனக்கு இப்போதான்யா தெரியுது.சீக்கிரம் ஊரைப் பார்த்து வந்திடனும்.!

pgk53
05-12-2005, 12:46 AM
அடேயப்பா---------!!!!!!!!!!!!???????????!!!!!!!!!!எத்தனை பதில்கள்.!!!!!!!!!!!!
பதில்களும் பாராட்டுக்களும் கூறிய அனைவருக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

பரஞ்சோதி
05-12-2005, 03:09 AM
அண்ணா, அடுத்த் புதிர் எங்கே? ஆவலோடு காத்திருக்கிறோம்.

gragavan
05-12-2005, 03:55 AM
அண்ணா, அடுத்த் புதிர் எங்கே? ஆவலோடு காத்திருக்கிறோம்.ஏன் எனக்கு முந்தி பதில் சொல்லவா?

aren
05-12-2005, 12:49 PM
ஏன் எனக்கு முந்தி பதில் சொல்லவா?

எப்படி அப்படி தெரிந்தமாதிரி சொல்கிறீர்கள் ராகவன். பிகேஜி முன்னரே பதிலை பரம்ஸுடம் கொடுத்துவிட்டாரா?

pgk53
05-12-2005, 05:01 PM
அன்பு தமிழ் நெஞ்சங்களே----ஒருநாள் பொறுத்துக்கொள்ளுங்களேன்.
.
இப்போது புதிர் உருவாகிக்கொண்டிருக்கின்றது.

நாளை கண்டிப்பாகப் பதிவு செய்கிறேன்

pradeepkt
06-12-2005, 04:01 AM
கண்டிப்பாக பிஜிகே அண்ணா
அதில பாருங்க உங்க புதிர்களை விடுவிக்கிறதை விட அவற்றை படிக்கிறதிலதான் எனக்கு ஆர்வம் ஜாஸ்தி :D

(தலை: அப்படியே நீ விடுவிச்சுக் கிழிச்சிட்டாலும் .... )

பரஞ்சோதி
06-12-2005, 04:02 AM
நன்றி அண்ணா,

இராகவன் அண்ணா இல்லாத நேரம் பார்த்து புதிர் போடுங்க, போட்டு விட்டு எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் செய்தி அனுப்பி விடுங்க.

பிரதீப் தம்பி பிரச்சனையே இல்லை என்று அவரே சொல்லிவிட்டார். பாரதி அண்ணா அப்போ அப்போ வருவார், தலை மைதானத்தில் இருக்கிறார்.

gragavan
06-12-2005, 04:05 AM
எப்படி அப்படி தெரிந்தமாதிரி சொல்கிறீர்கள் ராகவன். பிகேஜி முன்னரே பதிலை பரம்ஸுடம் கொடுத்துவிட்டாரா?சேச்சே! பிஜிகே அண்ணா ரொம்ப நல்லவரு. அப்படியெல்லாம் செய்ய மாட்டாரு. நம்ம பரஞ்சோதிதான் எங்கயாவது தேடிக்கீடி உருட்டித் தெரட்டி விடையச் சொல்லீருவான். அதான்.

gragavan
06-12-2005, 04:08 AM
நன்றி அண்ணா,

இராகவன் அண்ணா இல்லாத நேரம் பார்த்து புதிர் போடுங்க, போட்டு விட்டு எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் செய்தி அனுப்பி விடுங்க.

பிரதீப் தம்பி பிரச்சனையே இல்லை என்று அவரே சொல்லிவிட்டார். பாரதி அண்ணா அப்போ அப்போ வருவார், தலை மைதானத்தில் இருக்கிறார்.இப்பத்தான் ஒன்னப் பத்திப் பெருமையா ஆரென் கிட்ட சொல்லீட்டிருந்தேன். நீயே..........சரி. சரி.

பரஞ்சோதி
06-12-2005, 04:11 AM
சேச்சே! பிஜிகே அண்ணா ரொம்ப நல்லவரு. அப்படியெல்லாம் செய்ய மாட்டாரு. நம்ம பரஞ்சோதிதான் எங்கயாவது தேடிக்கீடி உருட்டித் தெரட்டி விடையச் சொல்லீருவான். அதான்.

அட கொடுமையப்பா, மூளையை கசக்கி விடை சொன்னா, அதை தேடி தருகிறேனா? இது என்ன? கூகிளிலேயா கிடைக்குது.

சரி சரி, நாம இருவரும் நேரில் சந்திக்கும் போது என்னிடம் கேட்க குறைந்தது 10 புதிர்கள் வைத்திருங்க, டாண் டாண் பதில் சொல்லுறேனா பாருங்க, சொன்னா, எனக்கு கோசணி, சொல்லாட்டி உங்களுக்கு அரபி குப்பூஸ், சிக்கன் டிக்கா.

gragavan
06-12-2005, 04:14 AM
அட கொடுமையப்பா, மூளையை கசக்கி விடை சொன்னா, அதை தேடி தருகிறேனா? இது என்ன? கூகிளிலேயா கிடைக்குது.

சரி சரி, நாம இருவரும் நேரில் சந்திக்கும் போது என்னிடம் கேட்க குறைந்தது 10 புதிர்கள் வைத்திருங்க, டாண் டாண் பதில் சொல்லுறேனா பாருங்க, சொன்னா, எனக்கு கோசணி, சொல்லாட்டி உங்களுக்கு அரபி குப்பூஸ், சிக்கன் டிக்கா.பத்தென்ன பத்து. ஒரு புதிரும் ஒரு நாள் பொழுதும் தருகிறேன். கண்டுபிடிச்சிட்டா நீ எனக்கு மஜ்பூஸ் வாங்கித் தரனும். கண்டுபிடிக்கலைன்னா நான் ஒனக்கு எம்.டீ.ஆர் சாப்பாடு வாங்கித் தர்ரேன். சரியா?

பரஞ்சோதி
06-12-2005, 04:19 AM
தமிழ்மன்ற நண்பர்களே!

நீங்க தான் சாட்சி, தலை நீங்களும் சாப்பிட வாங்க.

அண்ணா, அதுக்காக அபூர்வ ராகங்கள் மாதிரியோ, கோழியில் இருந்து முட்டையா, முட்டையில் இருந்து கோழியா என்று கேள்வி கேட்கக்கூடாது ஆமாம்.

-MTR சாப்பாட்டு ஆசையில் பரம்ஸ்

பென்ஸ்
06-12-2005, 04:22 AM
ஆமா.. சாப்பாட்டிலையே இருங்க...
சரி நான் உங்களுக்க நடுவர் சரியா...
யார் சரியான பதில் சொல்லுற... பேச்சு படி டிரீட் நடக்குதா..
சாப்பாடு தரம் நல்ல இருக்குதா..... எல்லாம் நான் சோதனை பன்னுறேன்... சரியா...

சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும்...

pradeepkt
06-12-2005, 04:28 AM
அதாவது நீங்க சோதனை பண்றீங்க...
இதை நான் நம்பணும்... நடக்காது...
எது எப்படியாயினும் இந்தப் போட்டிக்கு சீஃப் (கவனிக்க சீப்பு இல்லை :D) கெஸ்ட்டு நாந்தேன்... அப்படியே செஃப் கெஸ்ட்டா பென்ஸைப் போட்டிருவம்.

gragavan
06-12-2005, 04:33 AM
ஆமா.. சாப்பாட்டிலையே இருங்க...
சரி நான் உங்களுக்க நடுவர் சரியா...
யார் சரியான பதில் சொல்லுற... பேச்சு படி டிரீட் நடக்குதா..
சாப்பாடு தரம் நல்ல இருக்குதா..... எல்லாம் நான் சோதனை பன்னுறேன்... சரியா...

சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும்...இதாய்யா....இதான்...இதான்....பெஞ்சமீனு.....குமரிக்காரருன்னு நீரூபிக்கேகளே!

gragavan
06-12-2005, 04:34 AM
அதாவது நீங்க சோதனை பண்றீங்க...
இதை நான் நம்பணும்... நடக்காது...
எது எப்படியாயினும் இந்தப் போட்டிக்கு சீஃப் (கவனிக்க சீப்பு இல்லை :D) கெஸ்ட்டு நாந்தேன்... அப்படியே செஃப் கெஸ்ட்டா பென்ஸைப் போட்டிருவம்.சீப்பு இல்லைன்னா வாங்குறது....அதுக்காக ஒங்க சுருள் கூந்தல காத்துல அலபாய விடாதீக.

அறிஞர்
06-12-2005, 05:01 AM
நன்றி அண்ணா,

இராகவன் அண்ணா இல்லாத நேரம் பார்த்து புதிர் போடுங்க, போட்டு விட்டு எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் செய்தி அனுப்பி விடுங்க.

பிரதீப் தம்பி பிரச்சனையே இல்லை என்று அவரே சொல்லிவிட்டார். பாரதி அண்ணா அப்போ அப்போ வருவார், தலை மைதானத்தில் இருக்கிறார்.தனியா ஆளா ரவுண்ட் வர நினைக்கிறீர் வாழ்த்துக்கள்

pgk53
06-12-2005, 03:04 PM
நண்பர்களே----நமது பென்ஜமின் அவர்கள் மிகச் சிறப்பாக சரியான விடைக் கொடுத்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
மேலும் சிலரும் சரியான விடைக்குச் சமீபமாக வந்துள்ளார்கள்.
அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இந்தப் புதிர்ப்பகுதி சிறப்பாக நடக்கப் பங்களிக்கும் அனைவருக்குமே எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்..

சரி---இனி அடுத்த புதிரைப் பார்ப்போமா????

pgk53
06-12-2005, 03:05 PM
புதிர் எண் -201


அது ஒரு பரபரப்பான வியாபார நேரம்.
நிறைய கூட்டம்.
அந்த சூப்பர் காம்ப்லெக்ஸ் மிகப் பெரியது.
காம்ப்லெக்ஸின் முன்புறம் நிறைய இடம் விட்டுக் கட்டியிருந்தார்கள்.
அத்துடன் காம்ப்லெக்ஸின் முக்கிய நுழைவு வாசலில் ஒரு பெரிய கேட் அமைக்கப்பட்டு, அங்கே ஒரு காவல்காரனும் நிறுத்தப்பட்டிருந்தான்.
முன்புறம் நிறைய இடம் அருந்ததினால் அங்கே ஒரு புறம் பொருட்களை வாங்க வந்தவர்களின் மோட்டார் சைக்கிள்களும், மறுபுறம் கார்களும் பார்க் செய்யப்பட்டிருந்தன.
அப்போது ஒரு காரில் வந்து இறங்கினாள் ஒரு பெண்.
காரை அவளே செலுத்தி வந்திருந்தாள்.
அவளது கையில் ஒரு ஹேண்ட்பேக் இருந்தது.
அதில் அவள் ஒரு பர்ஸும் வைத்திருந்தாள்.
பர்ஸில் நிறைய பணமும் வைத்திருந்தாள்.

கடைக்குள் நுழைவதற்காக அவள் நடக்க ஆரம்பித்தாள்.திடீரென்று அவள் கையில் இருந்த பையை யாரோ தட்டிப் பறித்தார்கள்.
பறித்தவன் உடனே அங்கிருந்து மின்னல்போல் மாயமாக மறைந்தான்.
என்ன நடந்தது ? யார் பையை தட்டிப் பறித்தார்கள்?? என்று அவளால் அனுமானம் செய்ய முடியவில்லை..
உடனே அவள் ;ஐயோ-----திருடந்--திருடன்-----யாரோ என் கைப் பையை பறித்துக்கொண்டு ஓடுகிறார்கள்….பிடியுங்களேன்” என்று கூக்குரல் போட்டாள்.

அவளது கூச்சலைக் கேட்டதும் மெயின் கேட்டில் நின்றிருந்த காவல்காரன் உடனடியாக கேட்டை இழுத்துச் சாத்தி, யாரும் வெளியே போகமுடியாமல் தடுத்துவிட்டான்.

அதே சமயம் கடையின் வாசலும் கடையின் மேனேஜர் கட்டளைப்படி ஷட்டரை உடனே இறக்கிச் சாத்தப்பட்டது.
அதனால் கடைக்கு உள்ளே இருப்பவர்கள் வெளியே வர இயலாமல் தடுக்கப்பட்டது. அதே சமயம் வெளியே இருப்பவர்களும் மெயின் கேட்டைக் கடந்து வெளியே செல்ல இயலவில்லை.

காப்லெக்ஸ் மேனேஜர் உடனடியாக காவலருக்கு போன் செய்து தகவல் கூறியதால், காவல் ஆய்வாளராக இருந்த நமது வீர்சிங் உடனடியாக தனது மாருதி ஜீப்பில் வந்து மிடுக்காக இறங்கினார்.

இறங்கியதும் அங்கிருந்த சூழ்நிலையை ஒருமுறை நோட்டம் விட்டார்.
அந்தப் பெண்மனியிடம் மேனேஜர் அழைத்துச் சென்றார்.

அவளிடம் கைப்பையில் என்னென்ன இருந்தது? என்று கேட்டார் வீர்சிங்.
அவள் விபரமாகக் கூறி பத்தாயிரம் ரூபாய் பணமும் இருந்ததாகக் கூறினாள்.

அவள் கையில் இருந்து பையை தட்டிச் சென்றவன் எப்படி இருந்தான்? அவன் இந்தக் கூட்டத்தில் இருக்கின்றானா? என்று அடுக்கடுக்காய் கேள்விக் கணைகளைத் தொடுத்தார் வீர்சிங்.

அவள் கொஞ்சம் சிந்தனை செய்தபின்பு, தான் திருடனைப் பார்க்க இயலவில்லை என்றும், எல்லாம் மின்னல்போல நடந்தது , அதனால் அவனை கூட்டத்தில் அடையாளம் காட்ட இயலவில்லை என்றும் கூறினாள்.

“சரி” என்ற வீர்சிங் கூடியிருந்தவர்களையெல்லாம் கவனமாகப் பார்த்தபடி விசாரனையை ஆரம்பித்தார்.

அங்கிருந்தவர்கள் யாரும் சம்பவத்தைக் கவனிக்கவில்லை என்று கூறினார்கள்.

அதனால் குழப்பம் அடைந்த வீர்சிங், மேற்கொண்டு எப்படி விசாரணையை தொடர்வது என்று புரியாமல் சிந்தனை செய்தார்.

கூடியிருந்த மக்களோ, நாங்கள் போகவேண்டும் முன்புற கேட்டைத் திறந்துவிடும்படி மேனேஜரை நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.
மேனேஜர் வீர்சிங்கிடம் விபரம் கூறி கேட்டைத் திறந்துவிட அனுமதி கேட்டார்.

வீர்சிங் சம்மதிக்கவில்லை.
“முடியாது---திருடியவனை கண்டுபிடிக்காமல் கேட்டைத் திறந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கமாட்டேன் “ என்று கூறிவிட்டு, காவலர்களிடம், அங்கிருந்த அனைவரையும் சோதனை செய்யும்படி கட்டளையிட்டார்.

அங்கிருந்ததோ பெரும் கூட்டம். அனைவரையும் சோதனை போடுவதென்றால் குறைந்தது நான்கு மணி நேரமாவது ஆகும்.
அனைவருக்குமே அவரவர் வேலை தாமதம் ஆகின்றதே என்ற தவிப்பு.

அப்போது அங்கிருந்த ஒருவர், வீர்சிங்கிடம், “ அய்யா----நான் பையைப் பறித்துக்கொண்டு ஓடியவன் எப்படி இருந்தான் என்ற அடையாளத்தைப் பார்க்கவில்லைதான். ஆனால் உங்களுக்கு உபயோகமான ஒரு தகவலைக் கொடுக்கமுடியும்” என்றார்.

வீர்சிங்கும் ஆர்வமுடன் “ என்ன தகவல்” என்று கேட்டார்.

“ அய்யா----- அந்த பெண் கூச்சலிட்டபோது, யாரோ ஒருவன் கடையின் அவசர வழிக் கதவை { எமெர்ஜென்ஸி வழி} திறந்துகொண்டு கடைக்கு உள்ளே ஓடினான். அவன்தான் நிச்சயமாகத் திருடியிருக்கவேண்டும்.அதனால் கடைக்கு உள்ளே இருப்பவர்களைச் சோதனை செய்து பார்த்தால் திருடன் பிடிபடுவான். ----எங்களை அநாவசியமாகக் காக்க வைக்காதீர்கள்.----எங்களைப் போகவிடுங்கள்” என்றான்.

வீர்சிங் அவனை ஏற இறங்கப் பார்த்தார்.

புன்முருவல் செய்தபடியே காவலர்களை அழைத்தார்.

வீர்சிங்கிற்குத் தகவல் கொடுத்தவனைக் கைகாட்டி, அவனைப் பிடித்துச் செய்து சோதனை செய்யும்படி கட்டளையிட்டார்.

உடனடியாக காவலர்கள் அவனை பிடித்தார்கள்.
சோதனை செய்தார்கள்.

அவன் வளாகத்தில் நிறுத்திவைதிருந்த அவனது மோட்டர் சைக்கிளின் பெட்டியில் திருடுபோன கைப்பை கண்டெடுக்கப்பட்டது.


அவனை முட்டிக்கு முட்டி அங்கேயே நன்றாகத் தட்டி, ஜீப்பில் ஏற்றிக் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

வீர்சிங்கும் தனது பெரிய மீசையை முறுக்கிவிட்டபடியே ஜீப்பில் ஏறிச் சென்றார்.

மன்ற நண்பர்களே----------------இப்போது நீங்கள் கூறுங்கள்!!!
தனக்குத் தகவல் கொடுத்தவந்தான் திருடன் என்று வீர்சிங் எப்படிச் சரியாக ஊகம் செய்தார்.?????????????????

mukilan
06-12-2005, 03:24 PM
எமர்ஜென்ஸி கதவு என்பது கதவின் உள்புறம் இருந்து மட்டுமே திறக்க முடியும். வெளிப்புறம் திறந்து உள் நுழைய வாய்ப்பு இல்லை. அப்படியே நுழைந்திருந்தால் கடைக்காரர் அவனை பிடித்து வைத்திருப்பார். அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் காவலர்களிடம் சொல்லி இருப்பார். ஆனால் இதனை அறியாத திருடன் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாகப் படம் போட்டு மாட்டிக் கொண்டார்.

பரஞ்சோதி
06-12-2005, 07:05 PM
பாராட்டுகள் முகிலன்.

பிஜிகே அண்ணாவின் குறுஞ்செய்தி உங்களுக்கு வந்து விட்டதா?

mukilan
07-12-2005, 04:48 AM
பாராட்டுகள் முகிலன்.

பிஜிகே அண்ணாவின் குறுஞ்செய்தி உங்களுக்கு வந்து விட்டதா?
நன்றி பரம்ஸ் அண்ணா! பிஜிகே அண்ணா உங்களுக்கும் அதை CC அனுப்பி இருந்தாரே வரவில்லையா!

pradeepkt
07-12-2005, 05:20 AM
ஏய்யா குறுஞ்செய்தியிலயே இப்ப சிசி பிசிசி எல்லாம் அனுப்ப ஆரம்பிச்சிட்டீங்களா...
நடக்கட்டும் நடக்கட்டும்
முகிலன் கலக்கிட்டீங்கப்பு

gragavan
07-12-2005, 05:25 AM
ஓகோ இப்பல்லாம் இதுதான் நடக்குதா...ஐயாமாருங்களே....என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கிருங்க.

mukilan
07-12-2005, 05:33 AM
நீங்க பெங்களூர் பெர்ஷியாவுக்குக் கூப்பிட்டுப் போங்க, கவனிச்சிடுவோம்!

pradeepkt
07-12-2005, 08:01 AM
நீங்க முதல்ல பெங்களூருக்கு வாங்கப்பு...
அப்படிங்குறாரு ராகவன்

gragavan
07-12-2005, 08:28 AM
நீங்க முதல்ல பெங்களூருக்கு வாங்கப்பு...
அப்படிங்குறாரு ராகவன்அப்படிப் போடுங்க.....பெங்களூருக்கு எப்ப வர்ரீங்க முகிலன்?

பென்ஸ்
07-12-2005, 12:24 PM
அப்படிப் போடுங்க.....பெங்களூருக்கு எப்ப வர்ரீங்க முகிலன்?
முகிஸ்...
நானும், மதியும் கூட இங்கதான் இருக்கிறோம்... நீங்க வரலைனா ராகவன் எங்களை மட்டும் கூப்பிடிட்டு போயிடுவேன்னு பயமுறுத்துறார்...:rolleyes: :rolleyes: :rolleyes: எதாவது சொல்லுங்க..:D :D :D

பயத்தில்....

aren
07-12-2005, 12:35 PM
முகிஸ்...
நானும், மதியும் கூட இங்கதான் இருக்கிறோம்... நீங்க வரலைனா ராகவன் எங்களை மட்டும் கூப்பிடிட்டு போயிடுவேன்னு பயமுறுத்துறார்...:rolleyes: :rolleyes: :rolleyes: எதாவது சொல்லுங்க..:D :D :D

பயத்தில்....

எதுக்கு இப்படி பயப்படுறீங்க

பென்ஸ்
07-12-2005, 12:46 PM
எதுக்கு இப்படி பயப்படுறீங்க

சும்மா" பில்ட் அப்"... :p :p :p

ராகவன் முகில்ஸ்சை பெங்களுர் வாங்கா கவனிச்சிடுவோம்னாருல்லா... அதுதான்...:D :D :D

சாப்பிடுறதா இருந்தா பரவாயில்லை... :rolleyes: :rolleyes: :rolleyes: சாப்பாடாடிருந்தா (அடி, உதை) அதை வாங்குறதுக்கு நல்ல பாடி (உடம்ப்பு தான்..) வேனும்.. :eek: :eek: :eek: :eek: அதுதான் முகிலனை கூப்பிடுறேன்... :rolleyes: :rolleyes: :D :D :D

மதி
07-12-2005, 01:04 PM
முகில்,
தங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

மதி

mukilan
07-12-2005, 02:55 PM
நன்றி நண்பர்களே! நான் அடுத்த முறை இந்தியா வரும் பொழுது பெங்களூர் பயணம் நிச்சயம் உண்டு. ஆனா....... பெஞ்சமின் எம்மேல உள்ள காட்டத்தையெல்லாம் சேத்து வெச்சி தாக்கப் போறீரோ?

gragavan
08-12-2005, 05:19 AM
நன்றி நண்பர்களே! நான் அடுத்த முறை இந்தியா வரும் பொழுது பெங்களூர் பயணம் நிச்சயம் உண்டு. ஆனா....... பெஞ்சமின் எம்மேல உள்ள காட்டத்தையெல்லாம் சேத்து வெச்சி தாக்கப் போறீரோ?இதுக்குப் போயி பயந்துக்கலாமா! நான் இருக்கேன். ஓரூர்க்காரன். துணிஞ்சி வாங்க.

mukilan
08-12-2005, 05:21 AM
அதானே! பயமா? எனக்கா!! வந்திடறேன்.

pradeepkt
08-12-2005, 05:26 AM
ஆமாப்பூ... கொஞ்சம் முன்னாடியே சொல்லீருங்க... நானும் சங்கமிச்சுருவேன்...
அத்தோட ஹைதராபாது ஒண்ணும் பெங்களூரிலிருந்து ரொம்பத் தொலைவு கெடையாது... முகில்ஸ், கேக்குதா?

mukilan
08-12-2005, 05:31 AM
தெரியும். ட்ரெயின்ல ஒரு இரவுப் பயணம்தான். நான் கல்லூரியில் படிக்கும் போது டூர் போயிருக்கேன்.இரவு முழுக்க விழித்து கடலை போட்டுக் கொண்டிருந்த மறக்க முடியாத இரவு அது. அது ஒரு கனாக் காலம்.

pgk53
09-12-2005, 12:41 AM
எமர்ஜென்ஸி கதவு என்பது கதவின் உள்புறம் இருந்து மட்டுமே திறக்க முடியும். வெளிப்புறம் திறந்து உள் நுழைய வாய்ப்பு இல்லை. அப்படியே நுழைந்திருந்தால் கடைக்காரர் அவனை பிடித்து வைத்திருப்பார். அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் காவலர்களிடம் சொல்லி இருப்பார். ஆனால் இதனை அறியாத திருடன் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாகப் படம் போட்டு மாட்டிக் கொண்டார்.


அன்பு நண்பர் முகிலன் அவர்கள், புதிருக்கான விடையை மிகச் சரியாகச் சொல்லிவிட்டார்.

அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

சரி---இனி அடுத்த புதிருக்குப் போவோம்.


{குறிப்பு} நண்பர் ராகவன் அவர்களே-------புதிரைக் கொடுத்தவனை மறந்துவிட்டீர்களே????
அனைவரையும் பெங்களூருக்கு அழைக்கின்றீர்கள்.------------நான் வரக்கூடாதா????

gragavan
09-12-2005, 06:55 AM
அன்பு நண்பர் முகிலன் அவர்கள், புதிருக்கான விடையை மிகச் சரியாகச் சொல்லிவிட்டார்.

அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

சரி---இனி அடுத்த புதிருக்குப் போவோம்.


{குறிப்பு} நண்பர் ராகவன் அவர்களே-------புதிரைக் கொடுத்தவனை மறந்துவிட்டீர்களே????
அனைவரையும் பெங்களூருக்கு அழைக்கின்றீர்கள்.------------நான் வரக்கூடாதா????ஆகா! அண்ணா வாங்க என்று உங்களை வரவேற்றக் கசக்குமா? வாங்க வாங்கன்னு உங்களை வரவேற்கிறேன்.

mania
09-12-2005, 07:18 AM
ஆகா! அண்ணா வாங்க என்று உங்களை வரவேற்றக் கசக்குமா? வாங்க வாங்கன்னு உங்களை வரவேற்கிறேன்.

:D :D ஆஹா.....யாரை விட்டது......போட்டு தாக்கு ஹிண்டி மொசுறோ மொசுறுன்னு....(புதிரோ புதிர் மாதிரி ):rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா....:D

gragavan
09-12-2005, 08:17 AM
:D :D ஆஹா.....யாரை விட்டது......போட்டு தாக்கு ஹிண்டி மொசுறோ மொசுறுன்னு....(புதிரோ புதிர் மாதிரி ):rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா....:Dநீங்களும் வாங்க தலை. ஒங்களுக்கு இல்லாததா!

mania
09-12-2005, 08:42 AM
:D
நீங்களும் வாங்க தலை. ஒங்களுக்கு இல்லாததா!

:D :D :D நீ பழம் தின்னுட்டு கொட்டை போடற :rolleyes: :rolleyes: :D ஆசாமி.......ஹி...ஹி...ஹி...எனக்கு ஹிண்டி அவ்வளவா வராது....:rolleyes: :D :D வேற ஏதாவது இங்கிலீஷ் மொசுரு.....தமிழ் கொசுருன்னு இருந்தா சொல்லு......:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன் எஸ்கேப்பிய
மணியா....:rolleyes: :D :D

pgk53
09-12-2005, 11:58 AM
புதிர் எண் -202

கோடீஸ்வரர் கருப்பசாமியிடம் இருந்து துப்பறியும் சிங்கம் கண்ணாயிரத்துக்கு ஒரு அழைப்பு வந்தது.கண்ணாயிரம் உடனே சென்று கருப்பசாமியைச் சந்தித்தார்.

“என் மகன் ராமசாமியை பத்து நாட்களாகக் கானவில்லை.பொறுப்பே இல்லாமல் வீனாகச் செலவழித்துக்கொண்டு சுற்றித் திரியும் அவன் என்னிடம் தகவல் சொல்லாமல் எங்காவது வெளியூர் சுற்றப் போயிருப்பான் என்று நினைத்து அவனைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்துவிட்டேன்.
ஆனால் இன்று காலை எனக்கு ஒரு போன் வந்தது.அதில் போன் செய்தவன், உங்கள் மகனை நாங்கள் கடத்திச் சென்று விட்டோம். பத்து லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் அவனை விடுதலை செய்வோம்.
பணம் தராமல் போலீஸின் உதவியை நாடினால் அவனைக் கொன்றுவிடுவோம்.அதனால் உடனடியாக பத்து லட்சம் ரூபாயை தாயார் செய்யுங்கள்.பணத்தை எங்கே, எப்படிக் கொடுப்பது என்பதை அடுத்தாற்போல் தெரிவிக்கிறேன் என்றான்.
மேற்கொண்டு நான் எதுவும் பேசுவதற்குள் அவன் போனை வைத்துவிட்டான்.பத்து லட்சம் எனக்குப் பெரிதல்ல தந்துவிடலாம்.ஆனால் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் செய்ய எனக்குத் தயக்கமாக உள்ளது. அப்படி நான் ஏதாவது செய்யப்போக என் மகனை இழந்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்பதற்காக துப்பறியும் சிங்கமான உங்களை அழைத்தேன்” என்றார் கருப்பசாமி.

கண்ணாயிரத்துக்கு அவரது பெயருக்கு ஏற்றார்போல் ஆயிரம் கண்கள்.
எப்படிப் பட்ட குற்றத்தையும் இலகுவாகக் கண்டுபிடித்துப் பெரும் பெயர் எடுத்தவர்.
கருப்பசாமியை ஆதரவுடன் பார்த்தார்.”அய்யா---நீங்கள் எதற்கும் மனம் கலங்கவேண்டாம். அதுதான் நான் வந்துவிட்டேன் அல்லவா?இனி எல்லாவற்றையும் சுமுகமாக முடிப்போம்.” என்றார் கண்ணாயிரம்.

“சரி உங்கள் மகனுக்கு என்ன வயது” என்று கேட்டார்.

“அவனுக்கு இருபத்து ஐந்து வயது நடக்கின்றது. இன்னும் திருமணம் செய்யவில்லை.

“அப்படியா இந்த சூழ்நிலையில் நீங்கள் தாமதிக்காமல் அவன் எப்படிக் கூறுகிறானோ அப்படியே அவனுக்குப் பணம் கொடுத்து முதலில் உங்கள் மகனை மீட்டுக்கொள்ளுங்கள். பிறகு மற்றவைகளைப் பார்ப்போம்” என்றார் கண்ணாயிரம்/.

மேலும்” அய்யா---குற்றம் செய்தவர்கள் என்றும் நீதியின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது. அதனால் நீங்கள் மனம் தளராமல் இருங்கள்-- பணத்தைக் கொடுத்து உங்கள் மகன் வந்ததும் எனக்குச் செய்தி அனுப்புங்கள்--- நான் வந்து உங்கள் மகனைப் பார்க்கிறேன்” என்றார்.

அடுத்த நாள் மாலையில் கருப்பசாமி, கண்ணாயிரத்தை தொலைபேசியில் அழைத்து, தனது மகனைக் கடத்தியவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு விடுவித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்.

அதைக் கேட்ட கண்ணாயிரம் ஒரு நொடிகூட தாமதம் செய்யாமல் உடனே புறப்பட்டு கருப்பசாமியின் மாளிகையை அடைந்தார்.

அங்கே கருப்பசாமியின் மகன் அமர்ந்திருந்தான். அவனைக் கவனித்தார் கண்ணாயிரம்.
அழுக்கு பேண்ட்டும், சட்டையும் அனிந்திருந்தான் அவன்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக சவரம் செய்யப்பட்ட முகத்தில் முள் முள்ளாக முடி முளைத்திருக்க கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டு கவலையுடன் அமர்ந்திருந்தான்.

“ அவன் அருகில் அமர்ந்த கண்ணாயிரம் அவனைப் பார்த்து, “ உங்களைக் கடத்தியவர்கள் யார் என்று தெரிந்ததா?---பத்து நாட்கள் அவர்களுடன் இருந்திருக்கின்றீர்கள். அவர்கள் பெயராவது தெரிந்துகொண்ட்டீர்களா??
உங்களை அவர்கள் அடைத்து வைத்திருந்த இடத்தை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா???என்ன நடந்தது என்பதை விளக்கமாகக் கூறுங்கள். நீங்கள் கூறும் ஒரு சிறு தகவல்கூட அவர்களை நெருங்கும் முயற்சிக்கு உருதுணையாக இருக்கும்!!!!” என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

அதற்கு அவன்” அய்யா---என்னைக் கடத்தியவர்கள், கடத்தும்போதே எனக்கு முகமூடியை அணிவித்துவிட்டார்கள்.அவர்கள் நான்கு பேர்கள் இருக்கலாம் என்று ஊகிக்கிறேன்.என்னை ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்தார்கள்.
நான் சாப்பிடும்போது மட்டும் எனது முகமூடியைக் கழற்றுவார்கள். அப்போது அவர்கள் முகமூடி அனிந்திருப்பதைப் பார்த்தேன். அதனால் அவர்களை அடையாளம் கான இயலவில்லை. என்னை அடைத்து வைத்திருந்த இடம் ஒரு பாழடைந்த மாளிகைபோல் தோன்றியது.சாப்பிட்டு முடித்ததும் உடனே எனக்கு முகமூடியை மாட்டிவிடுவார்கள். அதனால் இதற்குமேல் என்னால் ஒன்றும் புரிந்துகொள்ள இயலவில்லை. அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக குரலையும் மாற்றிப் பேசியதுபோல் எனக்குத் தோன்றியது.

பணம் கிடைத்துவிட்டதாகக் கூறி என்னை கடைத்தெரு ஒன்றுக்கு அழைத்துவந்து, எனது முகமூடியைக் கழற்றியதும் காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டு, புயல்போல் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். அந்தக் குறுகிய இடைவெளியில் நான் புதிதாக ஒன்றும் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இயலவில்லை” என்றான் அவன்.

கண்ணாயிரம் புன்முறுவலுடன் நிமிர்ந்தார்,

கருப்பசாமியைப் பார்த்தார்.

அய்யா---இதற்குமேல் நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை.
பணம் வேண்டும் என்பதற்காக உங்கள் மகனே நடத்திய நாடகம்தான் இது.
அவன் கடத்தப்படவில்லை. “ என்றபடி புறப்பட்டார்.

கோடீஸ்வரர் கருப்பசாமி ஒன்றும் சொல்லத் தோன்றாமல் திகைத்து நின்றார்.

மன்ற நண்பர்களே நீங்கள்தான் கருப்பசாமிக்கு, கண்ணாயிரம் ஏன் அப்படிச் சொன்னார் என்பதை விளக்கமாகக் கூறிப் புரிய வைக்கவேண்டும்.

செய்வீர்களா????!!!!!

பென்ஸ்
09-12-2005, 12:25 PM
அழுக்கு பேண்ட்டும், சட்டையும் அனிந்திருந்தான் அவன்

இரண்டு நாட்களுக்கு முன்பாக சவரம் செய்யப்பட்ட முகத்தில் முள் முள்ளாக முடி முளைத்திருக்க கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டு கவலையுடன் அமர்ந்திருந்தான்.

அவன் அருகில் அமர்ந்த கண்ணாயிரம் அவனைப் பார்த்து, உங்களைக் கடத்தியவர்கள் யார் என்று தெரிந்ததா?---பத்து நாட்கள் அவர்களுடன் இருந்திருக்கின்றீர்கள். அவர்கள் பெயராவது தெரிந்துகொண்ட்டீர்களா??
உங்களை அவர்கள் அடைத்து வைத்திருந்த இடத்தை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா???என்ன நடந்தது என்பதை விளக்கமாகக் கூறுங்கள். நீங்கள் கூறும் ஒரு சிறு தகவல்கூட அவர்களை நெருங்கும் முயற்சிக்கு உருதுணையாக இருக்கும்!!!! என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

அதற்கு அவன் அய்யா---என்னைக் கடத்தியவர்கள், கடத்தும்போதே எனக்கு முகமூடியை அணிவித்துவிட்டார்கள்.அவர்கள் நான்கு பேர்கள் இருக்கலாம் என்று ஊகிக்கிறேன்.என்னை ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்தார்கள்.
நான் சாப்பிடும்போது மட்டும் எனது முகமூடியைக் கழற்றுவார்கள். அப்போது அவர்கள் முகமூடி அனிந்திருப்பதைப் பார்த்தேன். அதனால் அவர்களை அடையாளம் கான இயலவில்லை. என்னை அடைத்து வைத்திருந்த இடம் ஒரு பாழடைந்த மாளிகைபோல் தோன்றியது.சாப்பிட்டு முடித்ததும் உடனே எனக்கு முகமூடியை மாட்டிவிடுவார்கள். அதனால் இதற்குமேல் என்னால் ஒன்றும் புரிந்துகொள்ள இயலவில்லை. அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக குரலையும் மாற்றிப் பேசியதுபோல் எனக்குத் தோன்றியது.


இரண்டு நாளைக்கு முன் வரை அவர்களின் பிடியில் இருந்தவன் சரவம் செய்திருக்க வாய்ப்பில்லை...
மாட்டிக்கிட்டான்மில்ல....

Narathar
09-12-2005, 02:41 PM
நான் நினைச்சதை நம்ம பெஞமின் சொல்லிபுட்டாரு

பரஞ்சோதி
09-12-2005, 05:30 PM
பாராட்டுகள் பெஞ்சமின்.

நம்ம ஊர்க்காரரும் சொல்ல வேண்டும் தானே. அதான் பிந்தி வந்தேன்.

pgk53
10-12-2005, 01:02 PM
பாராட்டுக்கள் பெஞ்சமின்-------சரியான விடையைக் கூறியுள்ளீர்கள்.

நண்பர்களே நாம் அடுத்த புதிரில் மீண்டும் சந்திப்போம்.

aren
10-12-2005, 02:13 PM
எனக்கு புரிகிற மாதிரி இருக்கும் புதிருக்கெல்லாம் மற்றவர்கள் நமக்கு முன்னே ஆஜராகிவிடுகிறார்கள். இனிமேல் மன்றத்தை ஆன்லைனிலேயே வைத்து கண்காணிக்கவேண்டும் போலிருக்கிறது.

சரியாக பதில் சொன்ன பெஞ்ஜமின் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

gragavan
12-12-2005, 05:05 AM
இதென்ன..................நம்ம வர்ரதுக்கு முன்னாடியே எல்லாருஞ் சொல்லீர்ராங்க....அடடா!

pgk53
12-12-2005, 01:32 PM
புதிர் எண் -203

அழகப்பன்.
பெயருக்கேற்றபடி மிகுந்த அழகும் புத்திகூர்மையும் கொண்டவன்.
அவன் தனது பொறியாளர் பட்டப்படிப்பை மதுரையில் முடித்தான்.
இறுதித் தேர்வில் மாநிலத்தில் முதன்மையாகத் தேர்வு பெற்றதினால் அவனை கிண்டியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனம் நல்ல சம்பளத்தில் நல்ல பதவிக்கு எடுத்துக்கொண்டது.
அவனை மதுரையில் இருந்து வைகை விரைவு வண்டியில் அவனது பெற்றோர் சென்னைக்கு அனுப்பினார்கள்.
சென்னையில் அவனது மூத்த அக்கா தாம்பரத்தில் வசித்தாள்.
அxஅகப்பனின் தாய் மாமன் மாம்பலத்தில் இருந்தார்.
இருவருமே அழகப்பனை வரவேற்க எழும்பூருக்கு வந்திருந்தார்கள்.
அவனை அழைத்துக்கொண்டு, கிண்டியில் அவனது நிறுவனம் அவனுக்காகக் கொடுத்திருந்த வீட்டுக்குச் சென்றார்கள்.
நிறுவனமே சமையலுக்கும் மற்ற வசதிகளுக்கும் ஆள் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது..

இருவருக்குமே மகள் இருப்பதினால் எப்படியாவது அழகப்பனுக்கே அவளைத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் இருந்தது.

மாமா அழகப்பனைப் பார்த்து” அழகப்பா---என் வீடு மாம்பலத்தில்தான் இருக்கிறது.உனக்கு ரயில் நிலயம் பக்கமாக உள்ளது. அதனால் என் வீட்டுக்கு ரயிலிலேயே வா..கிண்டியில் இருந்து ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு மின்சார ரயில் மாம்பலம் வழியாகச் செல்லுகிறது. அவசியம் வரவேண்டும்” என்றார்
.
கிண்டியில் இருந்து தாம்பரம் ஒரு திசையிலும், மாம்பலம் அதற்கு எதிர் திசையிலும் இருப்பது அனைவரும் அறிந்ததே.

அக்காவும் சளைக்கவில்லை.அவள் கொஞ்சம் தந்திரம் தெரிந்தவள்.

“அழகப்பா, அக்காவை நீ அவசியம் அடிக்கடி வந்து பார்க்கவேண்டும்.
என் வீடு தாம்பரத்தில் இருப்பதை நீ அறிந்ததுதான்.
உன்னை எதிர்பார்த்திருப்பேன்.
நீ அக்கா வீட்டுக்கும் வரவேண்டும்.
மாமாவிடமும் போகவேண்டும்.
கிண்டியில் இருந்து தாம்பரத்துக்கும் ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு ரயில் இருக்கிறது.
நீ கிண்டி ரயில் நிலையத்துக்கு வந்ததும் எந்த ரயில் முதலில் வருகிறதோ அதில் ஏறிவிடு. அப்போதுதான் இருவர் வீட்டுக்கும் சரி சமமாகப் போய்வர முடியும்.” என்றாள்.

அழகப்பனும் சரி என்று ஒத்துக்கொண்டான்.
அக்கா மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.
மாமாவுக்கு அதில் இருந்த தந்திரம் புரியவில்லை.
மாதம் 4 முறை விடுமுறை வருவதினால் 2 தடவை தன் வீட்டுக்கும் 2 தடவை அக்காவீட்டுக்கும் வருவான் என்று நினைத்தார்.

அக்கா கூறியபடியே அழகப்பன் கிண்டி ரயில் நிலையத்துக்குப் போனதும் எந்த வண்டி முதலில் வருகிறதோ அதில் ஏறுவோம் என்று பார்த்தான். முதலில் தாம்பரம் வண்டிதான் வந்தது.அதில் ஏறி அக்கா வீட்டுக்குச் சென்றான்…
அப்போது மட்டுமல்ல,
அவன் சென்றபோதெல்லாம் 75% தாம்பரம் வண்டிதான் முதலில் வந்தது.

அதனால் ஒரு மாதத்தில் மூன்று தடவை அக்கா வீட்டுக்கும், ஒரே ஒரு தடவை மாமா வீட்டுக்கும் சென்றான்.

நண்பர்களே----இப்போது நீங்களே கூறுங்கள்.

அழகப்பன் தாம்பரம் ரயிலிலேயே அதிக முறை ஏன் செல்ல நேர்ந்தது???????

mukilan
12-12-2005, 03:35 PM
சற்றே குழப்பமான புதிர்தான்.
மின்சார ரயில் வண்டி மேற்கு மாம்பலம் வழியாகச் சென்றாலும் அங்கு நிற்க வேண்டிய அவசியம் இல்லை. தாம்பரத்திற்கு மின்சார ரயில் தவிர பிற ரயில்களும் கிண்டியில் நின்று செல்லும். எனவே தாம்பரம் செல்லும் ரயில் வண்டிகள் அதிகம். எனவே 75% தாம்பரம் செல்லும் வண்டிகளாகவே வந்தன.

பென்ஸ்
12-12-2005, 03:49 PM
புதிர் எண் -203

அழகப்பன்.
பெயருக்கேற்றபடி மிகுந்த அழகும் புத்திகூர்மையும் கொண்டவன்.
.............................................................


அழகப்பன் தாம்பரம் ரயிலிலேயே அதிக முறை ஏன் செல்ல நேர்ந்தது???????



இதில் ஒவ்வொரு ரயிலுக்கும் இடிப்பட்ட நேரம்தான் முக்கியமான விஷயம்....

உதரனமாக தாம்பரம் ரயில் 7:01 க்கு என்று வைத்து கொள்வோம்... மாம்பலம் ரயில் 7:04 க்கு என்று வைத்து கொள்வோம்... அழகப்பன் எந்த நேரத்தில் வந்தாலும் தாம்பரம் ரயிலுக்கும் மாம்பலம் ரயிலுக்கும் இடைப்பட்ட நேரம் வெறும் 3 நிமிடம் தான்... ஆனால் மாம்பலம் ரயிலுக்கும் தாம்பரம் ரயிலுக்கும் இடைப்பட்ட நேரம் 7 நிமிடங்கள்...
இதனால் தாம்பரம் ரயிலில் செல்லவே அதிகமான வாய்ப்பு உள்ளது....

pradeepkt
12-12-2005, 03:52 PM
இந்த நிகழ்தகவுதான் எங்கேயோ இடிக்கிறது.
பென்ஸ் செய்தது போல் அனுமானங்கள் செய்யலாமா? அவர் கூற்றுப்படி 75% வரவில்லையே ... 100% அல்லவா வருகிறது!
எனக்கென்னவோ வேறு ஏதோ இருக்கும் என்று தோன்றுகிறது.

பென்ஸ்
12-12-2005, 04:02 PM
இந்த நிகழ்தகவுதான் எங்கேயோ இடிக்கிறது.
பென்ஸ் செய்தது போல் அனுமானங்கள் செய்யலாமா? அவர் கூற்றுப்படி 75% வரவில்லையே ... 100% அல்லவா வருகிறது!
எனக்கென்னவோ வேறு ஏதோ இருக்கும் என்று தோன்றுகிறது.

100% வரவே வராது... இந்த 3 நிமிடத்து இடையில் வரும் போது தான் அவர் மாம்பலம் செல்ல வேன்டி வருது.... :D :D

மேலும் நான் கொடுத்த நேரங்கள் வெறும் ஊகம்தான்.. சரியான நேரம் வென்டும் என்றால்... சின்னதா ஒரு கணக்கு போடனும்... :angry: :angry: :rolleyes: :D

gragavan
13-12-2005, 05:03 AM
இந்தப் புதிர் குழப்புகின்றது. சென்னைவாசி என்ற வகையில் எனக்குத் தெரிந்ததைச் சொல்கின்றேன்.

தாம்பரத்திலிருந்து கோட்டைக்கும் அதற்கு எதிர்ப்புறத்திலும் ஒரே அளவிலான வண்டிகளே செல்கின்றன. ஆனால் அவருடைய அக்கையார் கொஞ்சம் அறிவாளி. எனக்கு இரண்டு காரணங்கள் தோன்றுகின்றன.

1. அழகப்பன் மாலையில்தான் தனது அலுவலகத்தை முடித்துக் கொண்டு கிளம்புவான். அப்பொழுது ஊருக்கு வெளியே செல்லும் வண்டிகள் நிறைய. காலையில் ஊருக்குள் வரும் வண்டிகள் நிறைய.

2. துறைமுகத்திலிருந்து செங்கல்பட்டு வரைக்கும் செல்லும் வண்டிகள் மாம்பலம் வழியாக வருவதில்லை. அவைகள் கிண்டியில் நிற்கும். அங்கிருந்து ஏறித் தாம்பரம் போகலாம் அல்லவா.

இதில் எது சரியோ!

Mathu
13-12-2005, 11:43 AM
இதில் மின்சார ரயிலின் நேர அட்டவணை முக்கிய இடம் பிடிகிறது என்பது புதிர் மன்னனின் வார்த்தைகளில் மிளிர்கிறது

"மாமா அழகப்பனைப் பார்த்து அழகப்பா---என் வீடு மாம்பலத்தில்தான் இருக்கிறது.உனக்கு ரயில் நிலயம் பக்கமாக உள்ளது. அதனால் என் வீட்டுக்கு ரயிலிலேயே வா..கிண்டியில் இருந்து ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு மின்சார ரயில் மாம்பலம் வழியாகச் செல்லுகிறது. அவசியம் வரவேண்டும் என்றார்
.
கிண்டியில் இருந்து தாம்பரம் ஒரு திசையிலும், மாம்பலம் அதற்கு எதிர் திசையிலும் இருப்பது அனைவரும் அறிந்ததே.

அக்காவும் சளைக்கவில்லை.அவள் கொஞ்சம் தந்திரம் தெரிந்தவள்.

அழகப்பா, அக்காவை நீ அவசியம் அடிக்கடி வந்து பார்க்கவேண்டும்.
என் வீடு தாம்பரத்தில் இருப்பதை நீ அறிந்ததுதான்.
உன்னை எதிர்பார்த்திருப்பேன்.
நீ அக்கா வீட்டுக்கும் வரவேண்டும்.
மாமாவிடமும் போகவேண்டும்.
கிண்டியில் இருந்து தாம்பரத்துக்கும் ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு ரயில் இருக்கிறது.
நீ கிண்டி ரயில் நிலையத்துக்கு வந்ததும் எந்த ரயில் முதலில் வருகிறதோ அதில் ஏறிவிடு. அப்போதுதான் இருவர் வீட்டுக்கும் சரி சமமாகப் போய்வர முடியும். என்றாள்."

ஆகவே செல்லும் வண்டிகள் சம அளவு என்று வைத்தால் நேர அட்டவணையில் தான் சூட்சுமம் இருக்கவேண்டும்.
நேர அட்டவணை எப்பொதும் பொக்குவரத்துக்கு இலகுவாக ஒரு பக்கம் போகும் வண்டிகள் போய் 2,3 நிமிடத்தில் எதிர்பக்கம் பொவது
வரக்குடியதாக வைப்பார்கள்.
எனவே பெஞ்சமினின் கருத்து சரியாக வர சாத்தியம் உண்டு.
;) :D :rolleyes:

பாரதி
13-12-2005, 02:13 PM
ம்ம்... சரியான புதிர்தான் பிஜிகே. உங்கள் கூற்றுப்படியே பார்த்தால் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் மாம்பலத்திற்கும், தாம்பரத்திற்கும் மின் தொடர் வண்டிகள் இருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். ஆகவே 75% வர வாய்ப்பு என்பது இல்லாமல் போகிறது. 50% என்பதுதான் சரி.

அப்படி பார்த்தால் நண்பர் முகிலனின் வாதம் சரியானதாக தெரிகிறது.
மாமா = ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு மின்சார ரயில் மாம்பலம் வழியாகச் செல்லுகிறது
அக்கா = கிண்டியில் இருந்து தாம்பரத்துக்கும் ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு ரயில் இருக்கிறது.
மாம்பலம் வழியாக செல்லும் தொடர்வண்டி அங்கே நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கும்.

இல்லாவிட்டால் மாம்பலத்திற்கு மின் தொடர்வண்டியை மட்டுமே குறிப்பிட்டதிலும், தாம்பரத்திற்கு பொதுவான தொடர்வண்டியை குறிப்பிட்டதிலும் சூட்சுமம் ஒளிந்திருக்கிறதா...?

அழகப்பன் புகைவண்டி நிலையத்திற்குள் வரும் போது முதலில் இருப்பது தாம்பரம் போகும் வழித்தடமா...?

அறிவுப்பூர்வமாக பார்த்தால் பயணத்திற்கு தேவையான பயணச்சீட்டை முதலிலேயே வாங்கிவிட வேண்டுமே..! ஆகவே தாம்பரம் செல்ல முடிவு செய்துவிட்டுதான் பயணம் செய்கிறார் என்று எண்ண வேண்டியிருக்கும்.

கடைசியில் முக்கியமானதை சொல்லவில்லையே? அழகப்பன் திருமணம் செய்துகொண்டது யாரை..??

பரஞ்சோதி
14-12-2005, 03:28 AM
பாரதி அண்ணா பாயிண்டை பிடித்து விட்டார்.

எனக்கு என்னவோ மாமன் மகளை விட அக்கா மகள் தான் அழகாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

பென்ஸ்
14-12-2005, 02:09 PM
ஐயோ ஐயோ.... பரம்ஸ்

"உன் அப்பா ஏழையா இருந்தா அது உன் தப்பு இல்லை, ஆனால் உன் மாமா எழையா இருந்தா அது உன் தப்பு"...

இந்தவிழயத்தில் PGK யாரு நல்ல காசு உள்ள ஆளுன்னு சொன்னாருன்னா விடை கண்டு பிடிக்க ஈசி இல்லையா????

சரி PGK அவர்கள் எங்கே???

pgk53
14-12-2005, 04:44 PM
அடடா-------இங்கே வந்து பார்த்தால்---மாமன் மகள் அழகா இல்லை அக்கா மகள் அழகா என்ற புதிர் ஆராய்ச்சியல்லவா நடக்கிறது.---

சரியாப் போச்சு போங்க.

ரயிலைப் பற்றிய புதிர் அல்லவா நான் போட்டேன்.
எப்படியோ ஆராய்ச்சியெல்லாம் முடிந்து புதிருக்கான சரியான விடை வந்தால் போதும்.

aren
14-12-2005, 05:11 PM
இது கொஞ்சம் குழப்பமான புதிர்தான்.

பொதுவாக ரயில்கள் சென்னையில் உள்ள கடற்கரை ஸ்டேஷனிலிருந்து தாம்பரத்திற்குச் செல்லும். விடுமுறை நாட்களில் இது 10 நிமிடத்திற்கு ஒரு முறை செல்லும். அப்படிப்பார்த்தால் மாம்பலத்திற்கும் தாம்பரத்திற்கும் சமமாகவே செல்லமுடியும்.

ஆனால் இந்த புதிரில், அக்காள், கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு ரயில் புறப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி பார்த்தால் பத்து நிமிடத்தில் இரண்டு ரயில்கள் கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு செல்கிறது. ஒன்று கடற்கரையிலிருந்து தாம்பிரத்திற்கு செல்லும் ரயில், மற்றது கிண்டியிலிருந்து தாம்பரத்திற்குச் செல்லும் ரயில்.

இது சரியா?

pgk53
15-12-2005, 12:38 AM
இது கொஞ்சம் குழப்பமான புதிர்தான்.

பொதுவாக ரயில்கள் சென்னையில் உள்ள கடற்கரை ஸ்டேஷனிலிருந்து தாம்பரத்திற்குச் செல்லும். விடுமுறை நாட்களில் இது 10 நிமிடத்திற்கு ஒரு முறை செல்லும். அப்படிப்பார்த்தால் மாம்பலத்திற்கும் தாம்பரத்திற்கும் சமமாகவே செல்லமுடியும்.

ஆனால் இந்த புதிரில், அக்காள், கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு ரயில் புறப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி பார்த்தால் பத்து நிமிடத்தில் இரண்டு ரயில்கள் கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு செல்கிறது. ஒன்று கடற்கரையிலிருந்து தாம்பிரத்திற்கு செல்லும் ரயில், மற்றது கிண்டியிலிருந்து தாம்பரத்திற்குச் செல்லும் ரயில்.

இது சரியா?

இல்லை ஆரென் அவர்களே-----அழகப்பனின் அக்காள் குறிப்பிட்டது கிண்டியில் இருந்து தாம்பரம் செல்ல ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு ரயில் உள்ளது என்பதே.

pgk53
15-12-2005, 12:40 AM
ஐயோ ஐயோ.... பரம்ஸ்

"உன் அப்பா ஏழையா இருந்தா அது உன் தப்பு இல்லை, ஆனால் உன் மாமா எழையா இருந்தா அது உன் தப்பு"...



அடடா....என்ன ஒரு அருமையான தத்துவம்.

pgk53
15-12-2005, 12:44 AM
[quote=பாரதி]

அறிவுப்பூர்வமாக பார்த்தால் பயணத்திற்கு தேவையான பயணச்சீட்டை முதலிலேயே வாங்கிவிட வேண்டுமே..! ஆகவே தாம்பரம் செல்ல முடிவு செய்துவிட்டுதான் பயணம் செய்கிறார் என்று எண்ண வேண்டியிருக்கும்.

quote]

அன்பு நண்பர் பாரதி அவர்களே---பயணத்துக்குத் தேவையான பயணச் சீட்டை முதலிலேயே வாங்கிவிட வேண்டும் என்பது உண்மைதான்.

நமது நாயகன் அழகப்பன் கிண்டி ரயில் நிலையத்தில் நுழைந்ததுமே அங்கே உள்ள எலெக்ட்ரானிக் டிஸ்பிளேயில் அடுத்து எந்த திசையில் வண்டி வர உள்ளது என்பதைப் பார்த்தபின்புதான் டிக்கெட் எடுக்கிறான்.---சரியா!!!!

pgk53
15-12-2005, 12:50 AM
இதில் ஒவ்வொரு ரயிலுக்கும் இடிப்பட்ட நேரம்தான் முக்கியமான விஷயம்....

உதரனமாக தாம்பரம் ரயில் 7:01 க்கு என்று வைத்து கொள்வோம்... மாம்பலம் ரயில் 7:04 க்கு என்று வைத்து கொள்வோம்... அழகப்பன் எந்த நேரத்தில் வந்தாலும் தாம்பரம் ரயிலுக்கும் மாம்பலம் ரயிலுக்கும் இடைப்பட்ட நேரம் வெறும் 3 நிமிடம் தான்... ஆனால் மாம்பலம் ரயிலுக்கும் தாம்பரம் ரயிலுக்கும் இடைப்பட்ட நேரம் 7 நிமிடங்கள்...
இதனால் தாம்பரம் ரயிலில் செல்லவே அதிகமான வாய்ப்பு உள்ளது....

அடுத்து பெஞ்சமின் விடையைப் பார்ப்போம்.

நன்றி பெஞ்சமின் அவர்களே......மிகச் சரியான விடையைக் கொடுத்துள்ளீர்கள்.
நீங்கள் குறிப்பிட்டபடி அழகப்பன் கிண்டி வந்ததுமே அடுத்து எந்த வண்டி என்றுதான் முதலில் பார்ப்பான்.
அப்படி அவன் பார்க்கும்போது ஒன்று மாம்பலம் செல்ல வண்டி தயாராக நிற்கும். அல்லது அடுத்து ஒரு நிமிடத்தில் வந்துவிடலாம். அதனால் அவன் டிக்கெட் எடுத்து பிளாட்பாரம் செல்லுமுன்பாக அது வந்து போய்விடும்.
ஏனென்றால் அவனுக்கு இருக்கும் இடைப்பட்ட நேரம் நீங்கள் கூறியதுபோல் 3 நிமிடம்தான்.

அப்படியில்லாமல் அவன் ரயில் நிலையம் வரும்போது தாம்பரம் செல்லும் வண்டி நின்றிருந்தால் அவன் கண்டிப்பாக மாம்பலம் செல்ல டிக்கெட் எடுப்பான்.

மிகச் சரியான விடையைக் கூறிய பெஞ்சமினுக்கு எனது வாழ்த்துக்கள்.

மதி
15-12-2005, 02:51 AM
அறிவுக்களஞ்சியம் பென்சுக்கு
ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒஹோ.... :D :D :D

பென்ஸ்
15-12-2005, 02:55 AM
அறிவுக்களஞ்சியம் பென்சுக்கு
ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒஹோ.... :D :D :D

ஆகா... ஆகா.... இன்னொரு முறை சொல்லுங்க....:D :D :D

மதி
15-12-2005, 03:15 AM
ஆகா... ஆகா.... இன்னொரு முறை சொல்லுங்க....:D :D :D
இன்னொரு முறை:D :D :D

பென்ஸ்
15-12-2005, 03:21 AM
என்ன பல்லிளிப்பு வேண்டிகிடக்கு... :rolleyes: :rolleyes:

சின்னபுள்ளதனமா இருக்கு...:rolleyes: :rolleyes: போ போ.. வேலையா பாரு... :rolleyes: :rolleyes: :D :D :D :D

மதி
15-12-2005, 03:35 AM
என்ன பல்லிளிப்பு வேண்டிகிடக்கு... :rolleyes: :rolleyes:

சின்னபுள்ளதனமா இருக்கு...:rolleyes: :rolleyes: போ போ.. வேலையா பாரு... :rolleyes: :rolleyes: :D :D :D :D
சத்தியமாண்ணே...!
என்ன நடக்குதுன்னே புரியல்ல....
வேல இருக்கற மாதிரி இருக்கு....ஆனா இல்ல..
இல்ல...ஆனா என்னமோ இருக்கு...:confused: :confused:

ஏன் என் வயித்தெரிச்சல கெளப்பரீங்க...?:angry: :angry: :angry:

பரஞ்சோதி
15-12-2005, 03:43 AM
நண்பா பெஞ்சமின் கலக்கிட்டீங்க.

எப்படியோ என் பெயரை காப்பாத்திட்டீங்க.

gragavan
15-12-2005, 03:48 AM
கலக்கிட்டீங்க பெஞ்சமின், கலக்கீட்டீங்க. பாராட்டுகள்.

ஆனால் ஒரு சந்தேகம். தாம்பரம் செல்லும் வண்டி 7:01க்கும் மாம்பலம் செல்லும் வண்டி 7:06க்குமாய் இருந்தால்?

aren
15-12-2005, 05:23 AM
இந்த புதிருக்குண்டான பதில் ஏற்றுக்கொள்ள முடியாது. ராகவன் அவர்கள் கேட்பதுபோல் அது வேறு மாதிரியாக இருந்தால். நீங்கள் புதிரில் இது பற்றிக் குறிப்பிடாததால் இந்த பதிலை ஏற்றுக்கொள்ளமுடியாது.

இந்தப் புதிரில் தவறு இருப்பதால் பெஞ்சமின் கொடுத்த பதில் செல்லாது. அதனால் அவருக்கு கொடுத்த மார்க்கை (அப்லாஸை) வாபஸ் வாங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

பரஞ்சோதி
15-12-2005, 05:44 AM
பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு, குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு, அதில் நீங்க எந்த வகை என்று உங்களுக்கே தெரியும்,

சிரிக்க வேண்டாம் ஆரென் அண்ணா.

-தருமி பெஞ்சமினின் நண்பன் பரம்ஸ்

பரஞ்சோதி
15-12-2005, 05:45 AM
கலக்கிட்டீங்க பெஞ்சமின், கலக்கீட்டீங்க. பாராட்டுகள்.

ஆனால் ஒரு சந்தேகம். தாம்பரம் செல்லும் வண்டி 7:01க்கும் மாம்பலம் செல்லும் வண்டி 7:06க்குமாய் இருந்தால்?

இராகவன் அண்ணா, ரெயிலு என்னைக்கு நீங்க சொன்ன நேரத்திற்கு வந்திருக்குது. குருட்டாம் போக்கில் வருது, அக்கா மகளை பார்க்க பெஞ்சமின் போறார், நீங்க ஏன் தடுக்கிறீங்க.

பென்ஸ்
15-12-2005, 05:51 AM
பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு, குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு, அதில் நீங்க எந்த வகை என்று உங்களுக்கே தெரியும்,

சிரிக்க வேண்டாம் ஆரென் அண்ணா.

-தருமி பெஞ்சமினின் நண்பன் பரம்ஸ்

ந்ன்றி பரம்ஸ்
ஆனால்... இந்த தருமி விஷயம் தான்..
சத்தியமா இது என்னொட விடைதான்... கோவிலில் யாரும் கொடுக்கவில்லை...

gragavan
15-12-2005, 05:55 AM
இராகவன் அண்ணா, ரெயிலு என்னைக்கு நீங்க சொன்ன நேரத்திற்கு வந்திருக்குது. குருட்டாம் போக்கில் வருது, அக்கா மகளை பார்க்க பெஞ்சமின் போறார், நீங்க ஏன் தடுக்கிறீங்க.அட நாயத்தக் கேட்டா ஏம்ப்பா இந்தப் பாடு...சரி. பெஞ்சமின் அக்கா மகளைப் பாக்கப் போறார். ஒனக்கென்ன வந்தது?

aren
15-12-2005, 08:11 AM
அட நாயத்தக் கேட்டா ஏம்ப்பா இந்தப் பாடு...சரி. பெஞ்சமின் அக்கா மகளைப் பாக்கப் போறார். ஒனக்கென்ன வந்தது?

பாவம் பெஞ்சமின் சிவனேன்னு இருக்கிறார். அவருக்கு அக்கா மகளை ஞாபகப்படுத்தி இந்த பரம்ஸ் ஏன் இப்படி பெஞ்சமினை இம்சை செய்கிறார் என்று தெரியவில்லை. பாவம் பெஞ்சமின்.

பென்ஸ்
15-12-2005, 08:37 AM
என் அக்கா மகானா எனக்கு உயிரு...
செம கலாசல் புள்ள...
அவள் கொஞ்ஜும் தமிழ்...
அவளை கிறிஸ்டுமாஸ் சமயத்தில் மீண்டும் சந்திகிறேன்...
அவளை பார்த்து எத்தனை நாள் ஆயிற்று
அவளை கொஞ்சி எத்தனை நாள் ஆயிற்று
இந்த முறை அவளை சந்திக்கும் போது என்ன வாங்கி செல்லலாம் என்று குழம்பி போயிருக்கிறேன்...
அவளுக்கு நான் வைத்த பேயர் "மியா".. இத்தாலியில் இதர்க்கு "என்னுடைய" என்று பொருள்...










ஆனாலும் இனிதான் அவளுக்கு பேயர் வைக்க போகிறார்கள்... அவள் இப்பொது தான் 1 வயதை தாண்டி இருக்கிறாள்...

pradeepkt
15-12-2005, 08:41 AM
என்னா சஸ்பென்ஸூ
பென்ஸூ, இனிமே உங்க பேரு சஸ்பென்ஸூன்னு வைக்கலாமின்னு இருக்கேன்... என்னாங்கறீங்க? :D :D

பரஞ்சோதி
15-12-2005, 09:39 AM
என் அக்கா மகானா எனக்கு உயிரு...
செம கலாசல் புள்ள...
அவள் கொஞ்ஜும் தமிழ்...
அவளை கிறிஸ்டுமாஸ் சமயத்தில் மீண்டும் சந்திகிறேன்...
அவளை பார்த்து எத்தனை நாள் ஆயிற்று
அவளை கொஞ்சி எத்தனை நாள் ஆயிற்று
இந்த முறை அவளை சந்திக்கும் போது என்ன வாங்கி செல்லலாம் என்று குழம்பி போயிருக்கிறேன்...
அவளுக்கு நான் வைத்த பேயர் "மியா".. இத்தாலியில் இதர்க்கு "என்னுடைய" என்று பொருள்...










ஆனாலும் இனிதான் அவளுக்கு பேயர் வைக்க போகிறார்கள்... அவள் இப்பொது தான் 1 வயதை தாண்டி இருக்கிறாள்...

ஆகா அட்டகாசமான அறிமுகம்.

பெஞ்சமின் தொலைக்காட்சி விளம்பரத்தில் வருவது போல் காத்திருக்கிறேன் என்று சொல்லிடாதீங்க ஆமாம்.

எங்க மியாவின் புகைப்படம் எனக்கு அனுப்பி வையுங்க, சக்திக்கு ஒரு நண்பி கிடைத்த மாதிரி ஆச்சுது.

gragavan
15-12-2005, 09:49 AM
நல்ல பேருதான். பெத்த பேருதான்.

பென்ஸ்
15-12-2005, 05:16 PM
எங்க மியாவின் புகைப்படம் எனக்கு அனுப்பி வையுங்க, சக்திக்கு ஒரு நண்பி கிடைத்த மாதிரி ஆச்சுது.

கண்டிபாக பரம்ஸ்....

pgk53
16-12-2005, 02:25 PM
புதிர் எண் -204

மதுரையில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது மங்களபுரம்.
மங்களபுரம் ஒரு சிறிய கிராமம்.
அந்த ஊருக்கு ஒரு கால்நடை மருத்துவ மனையை அரசு நிறுவியது.
முதன்முதலாக திறந்த அந்த மருத்துவ மனைக்கு மருத்துவராக அறிவுடை நம்பி என்பவர் வந்து சேர்ந்தார்.

முதல் நாள் அலுவல்கள் முடிந்ததும், அப்படியே ஊரைச் சுற்றிப் பார்த்துவரலாம் என்று அறிவுடை நம்பி சென்றார்.

ஒரு வீட்டுத் திண்ணையில் பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவரைக் கண்ட அறிவுடைநம்பி, “ அய்யா----நான்தான் இந்த ஊரில் திறக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ மனையில் புதிதாக வந்துள்ள மருத்துவர்.உங்கள் வீட்டு கால்நடைகளுக்கு எந்த நோய் வந்தாலும் தயங்காமல் மருத்துவமனைக்குக் கொண்டு வாருங்கள்” என்றார்.

“சரி---அப்படியே செய்கிறேன்” என்றார் பெரியவர்.

இன்னும் கொஞ்சம் பேச்சைத் தொடரலாமே என்று நினைத்த மருத்துவர், “ அய்யா---உங்கள் வீட்டில் எத்தனை மாடுகள் இருக்கின்றன” என்றார் .

அதற்கு பெரியவர், “ என் வீட்டில் உள்ள விலங்குகளில் இரண்டைத் தவிர எல்லாமே மாடுகள்தான்” என்றார்.

அடடா---என்ன இது---மாடுகளின் எண்ணிக்கையைச் சொல்லாமல் இப்படி மொட்டையாகச் சொல்லுகிறாரே இவர் என்று நினைத்த மருத்துவர், மற்ற விலங்குகளின் எண்ணிக்கையைக் கேட்டால் தெளிவாகிவிடும் என்று நினைத்து, “ சரி---மாடுகள் எத்தனை என்று சொல்ல உங்களுக்கு விருப்பம் இல்லை போலிருக்கின்றது.---பரவாயில்லல. எத்தனை ஆடுகள் என்றாவது சொல்லுங்கள்” என்று கேட்டார்.

மருத்துவரை ஏற இறங்கப் பார்த்தபடி ““ என் வீட்டில் உள்ள விலங்குகளில் இரண்டைத் தவிர எல்லாமே ஆடுகள்தான்” என்றார்.

இதேதடா வம்பாகப் போயிற்றே----என்று நினைத்த மருத்துவர், பெரியவரின் வாயிலிருந்து எதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லையே. சொன்னதையே திரும்பச் சொல்லுகிறாரே.இப்போது என்ன கேட்டால் ஆடுகள் எத்தனை என்று தெரிந்துகொள்வது என்று ஆலோசித்தார்.

பிறகு, “ சரி இதற்காவது தெளிவாகப் பதில் சொல்லுங்கள்.உங்கள் வீட்டில் எத்தனை நாய்கள் இருக்கின்றன என்றாவது கூறுங்களேன்” என்று கேட்டார்.

பெரியவர் சிரித்துக்கொண்டார்.
பிறகு மருத்துவரைப் பார்த்து, “ அய்யா---இதற்கும் அதே பதில்தான். என் வீட்டில் உள்ள விலங்குகளில் இரண்டைத் தவிர எல்லாமே நாய்கள்தான்” என்றார்.


மருத்துவருக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.
இந்தக் கிராமத்து ஆளுக்கு பைத்தியம்தான் பிடித்துள்ளது என்று நினைத்துக்கொண்டு “ சரி நான் வருகிறேன்” என்றபடி புறப்பட்டுச் சென்றார்.

அப்போது இவர்கள் பேசியதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மற்றொருவர் மருத்துவரைப் பின் தொடர்ந்தார்.
மெதுவாக மருத்துவரிடம் பேச்சுக்கொடுத்தார்.

“ அய்யா---மருத்துவரே---அந்தப் பெரியவரை நீங்கள் பைத்தியம் என்று நினைத்துவிட்டீர்களா?---அவர் பைத்தியம் இல்லை. நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் தெளிவான , சரியான பதிலைத்தான் சொல்லியிருக்கின்றார்.நீங்கள் வீட்டுக்குப் போய் நிதானமாகச் சிந்தனை செய்தால், பெரியவர் கூறியதில் உள்ள பதிலை புரிந்துகொள்வீர்கள்” என்றார்.


ஆனால் மருத்துவரால் எத்தனை சிந்தித்தும் பெரியவர் வீட்டில் உள்ள ஆடுகள் எத்தனை, மாடுகள் எத்தனை, நாய்கள் எத்தனை என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை.

மன்ற நண்பர்கள்தான் புதிர் மன்னர்களாயிற்றே.

யாராவது மருத்துவருக்கு விளக்கம் கூறுங்கள்.!!!!!!!!

aren
16-12-2005, 02:31 PM
முதலில் கேட்ட மாடுகள் ஆடுகள் கேள்விகள் முடிந்தவுடன் புதிர் அவிழ்ந்ததாக நினைத்தேன். கடைசியில் கேட்ட நாய் கேள்வி கொஞ்சம் பிரச்சனையை கிளப்பிவிட்டது. யோசிக்கிறேன்.

aren
16-12-2005, 02:33 PM
அவர்கள் வீட்டில் ஒரு மாடும், ஒரு ஆடும், ஒரு நாயும் இருக்கின்றன.

என்ன நான் சொல்வது சரியா

பென்ஸ்
16-12-2005, 02:54 PM
அவர்கள் வீட்டில் ஒரு மாடும், ஒரு ஆடும், ஒரு நாயும் இருக்கின்றன.

என்ன நான் சொல்வது சரியா

ஒரு காப்பி குடித்து விட்டு வர விட மாட்டீர்களே.. அதுக்குள்ளே பதிலை சொல்லிடுறதா????:rolleyes: :rolleyes: :rolleyes:

சரியான பதில் தான் போல...:D :D :D

Mathu
16-12-2005, 03:04 PM
ஆகா அரேன் சாப் அச்த்துறீங்க.....

பரஞ்சோதி
16-12-2005, 07:34 PM
ஆரென் அண்ணா கலக்கிபுட்டீங்க. அசத்தல் பதில்.

aren
16-12-2005, 07:37 PM
ஒரு காப்பி குடித்து விட்டு வர விட மாட்டீர்களே.. அதுக்குள்ளே பதிலை சொல்லிடுறதா????:rolleyes: :rolleyes: :rolleyes:

சரியான பதில் தான் போல...:D :D :D

நாங்களும் ஒரு தபாவாவது சரியாக பதில் சொல்லனுமில்ல. அதுக்குகூட சான்ஸ் கொடுக்கவில்லைன்னா எப்படி.

அடுத்த தடவையும் கொஞ்சம் மெதுவாகவே காப்பி சாப்பிட்டுவிட்டு வாங்க.

கையில் காப்பி பிளாஸ்குடன் எப்பொழுதும்
ஆரென்

mania
17-12-2005, 03:44 AM
அதற்கு பெரியவர், என் வீட்டில் உள்ள விலங்குகளில் இரண்டைத் தவிர எல்லாமே மாடுகள்தான் என்றார்

:rolleyes: :rolleyes: அதெப்படி ஒரு மாடு என்பது சரியான விடையாகும்.....???? மாடுகள் என்றால் குறைந்த பட்சம் இரண்டாவது இருக்கவேண்டுமே...!!!????:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
தமிழ் பண்டிட்
மணியா....:D

aren
17-12-2005, 03:47 AM
:rolleyes: :rolleyes: அதெப்படி ஒரு மாடு என்பது சரியான விடையாகும்.....???? மாடுகள் என்றால் குறைந்த பட்சம் இரண்டாவது இருக்கவேண்டுமே...!!!????:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
தமிழ் பண்டிட்
மணியா....:D


இதோ பாருப்பா!! இவர் குற்றம் கண்டுபிடிக்கவே கிளம்பிட்டாரப்பா!!

ஐயா, எங்களையும் ஒரு தடவையாவது வெற்றி பெற வழிவிடுங்களேன். இப்படி ஒருமை பண்மை என்று கிளப்பிவிடுகிறீர்களே. ஒருமைக்கு பதில் பண்மை தவறாக கேள்வியில் வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோமே?

சிறிது ஜகா வாங்கி மறுபடியும் முன்னேறும்
ஆரென்

mania
17-12-2005, 03:54 AM
இதோ பாருப்பா!! இவர் குற்றம் கண்டுபிடிக்கவே கிளம்பிட்டாரப்பா!!

ஐயா, எங்களையும் ஒரு தடவையாவது வெற்றி பெற வழிவிடுங்களேன். இப்படி ஒருமை பண்மை என்று கிளப்பிவிடுகிறீர்களே. ஒருமைக்கு பதில் பண்மை தவறாக கேள்வியில் வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோமே?

சிறிது ஜகா வாங்கி மறுபடியும் முன்னேறும்
ஆரென்

:rolleyes: :rolleyes: :rolleyes: :mad: :mad: ஆஹா......பிஜிகே யின் தமிழில் தவறா.....????:mad: :mad: இருக்கவே இருக்காது.....:D :D ????நீங்கள் வேறு வடை சுடுங்கள்....:D :D .(இப்படி ராத்திரி 1 மணிக்கு முழித்திருந்து ப்ளாஸ்கில் காப்பி சாப்பிட்டு புது புதிர் எப்போது வரும்னு......எல்லாம் கொஞ்சம் டூ மச்சா இருக்கு....!!!???):D :D

அன்புடன்
காலையில் எழுந்து ஏமாந்த
மணியா....:eek: :eek:

பரஞ்சோதி
17-12-2005, 03:56 AM
தலை, அந்த ஆள் பக்கத்து வீட்டு மாட்டையும் சேர்த்து சொல்லியிருப்பார், அது பெயர் என்னவோ லட்சுமியா, பிரதீப் தம்பி தான் பக்கத்து வீடா?

mania
17-12-2005, 03:59 AM
தலை, அந்த ஆள் பக்கத்து வீட்டு மாட்டையும் சேர்த்து சொல்லியிருப்பார், அது பெயர் என்னவோ லட்சுமியா, பிரதீப் தம்பி தான் பக்கத்து வீடா?

:D :D :D அப்படி பாத்தாலும் மூன்றாயிடுமே....????ப்ரதீப்பை எந்த கணக்கிலே சேர்ப்பது.....????:rolleyes: :rolleyes: :confused:
குழப்பத்துடன்
மணியா...:D :D

pradeepkt
17-12-2005, 12:47 PM
நாந்தான் போனாப் போவுதுன்னு பதில் சொல்லாம இருக்கேனே..
என் தலையை ஏன் தலை உருட்டுறீங்க :D :D

rajasi13
17-12-2005, 01:35 PM
என் அக்கா மகானா எனக்கு உயிரு...
செம கலாசல் புள்ள...
அவள் கொஞ்ஜும் தமிழ்...
அவளை கிறிஸ்டுமாஸ் சமயத்தில் மீண்டும் சந்திகிறேன்...
அவளை பார்த்து எத்தனை நாள் ஆயிற்று
அவளை கொஞ்சி எத்தனை நாள் ஆயிற்று
இந்த முறை அவளை சந்திக்கும் போது என்ன வாங்கி செல்லலாம் என்று குழம்பி போயிருக்கிறேன்...
அவளுக்கு நான் வைத்த பேயர் "மியா".. இத்தாலியில் இதர்க்கு "என்னுடைய" என்று பொருள்...
ஆனாலும் இனிதான் அவளுக்கு பேயர் வைக்க போகிறார்கள்... அவள் இப்பொது தான் 1 வயதை தாண்டி இருக்கிறாள்...
என்னாது ஒரு வயசுக்கு மேலயா பேரு வெக்கப்போறாங்க. நம்மூரு பேர கெடுத்திராதீரும்வே!!!