PDA

View Full Version : புதிரோ புதிர் எண்-571-05-06-2015

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 [19]

இராஜிசங்கர்
27-08-2013, 05:48 AM
பட்டுன்னு பதில்வருகிறதே!
பாவம் இராஜி வீட்டுகாரர்!

:lachen001: :icon_rollout:

pgk53
09-09-2013, 02:49 PM
நானும் அந்த வழி தெரியாம தானப்பா சாமியார் ஆனேன் ன்னு சொல்லிருப்பார்..

இராஜாஜி சங்கர் அவர்களே......சரியான பதில் கூறியுள்ளீர்கள்.-----வாழ்த்துக்கள்.

pgk53
09-09-2013, 02:55 PM
நானும் பாத்துகிட்டே இருக்கிறேன்... பீஜிகே அண்ணாச்சி மட்டும் அடிக்கடி விடுப்பில் செல்கிறார். அபுதாபியில் இப்படியெல்லாம் நல்ல அலுவலகங்கள் இருக்குங்களா!

...பிரிவில் வாடுவோர் சங்க பிரதிநிதி

நல்ல கம்பெனிகள் பல இருக்கின்றது நண்பரே. அதிலும் ஆப் ஷோர் எனப்படும் கடலில் எண்ணைக் கிணறுகளில் வேலை நடக்கும் இடங்களில் இதைவிட இன்னும் சிறப்பான விடுமுறைச் சலுகை கிடைக்கின்றது. அதாவது 14 நாட்கள் வேலை செய்தால் 14 நாட்கள் சம்பளத்துடனும் தாய்நாட்டுக்கு விமானக் கட்டனத்துடனும் விடுமுறை கொடுக்கின்றார்கள். அந்தச் சலுகை செய்யும் வேலையைப் பொருத்தும் தகுதியைப் பொறுத்தும் அமையும்.

pgk53
11-09-2013, 01:13 AM
புதிர் எண்-544

முன்னொரு காலத்தில் மாறன் என்று ஒரு அரசன் பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருந்தான்.அனது அமைச்சன் பெயர் மதிவாணன்.அமைச்சன் மதிவாணன் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த மதியூகியாக விளங்கினான்.

அந்த அரசன் துறவிகள்மேல் மிக மதிப்பு கொண்டிருந்தான்.துறவிகள் பலரை தேடிச் சென்று வணங்கி ஆண்மீக உரையாடலை அடிக்கடி நிகழ்த்துவான் அந்த அரசன்.

ஒருநாள் அவன் தன் நாட்டில் இருந்த துறவிகளுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்தான்.அதனால் அமைச்சன் மதிவாணனை அழைத்தான்.”மதிவாணா….நமது அரசின் கருவூலத்தில் இருந்து எவ்வளவு பொற்காசுகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்.நம் நாட்டில் இருக்கும் உண்மையான துறவிகள் அனைவருக்கும் அவர்கள் வேண்டும் அளவுக்குக் கொடுத்துவிட்டு வா “ என்று ஆணையிட்டான்.

அமைச்சனும் பதில் ஏதும் கூறமல் அப்படியே ஆகட்டும் அரசே என்று கூறிவிட்டுச் சென்றான்.

ஒரு மாதம் கழிந்தது.

அமைச்சன் மதிவாணனை அழைத்த அ ரசன் “ மதிவாணா..நான் கூறியபடி செய்துவிட்டாயா?” என்று கேட்டான்.

அதற்கு அமைச்சன் மதிவாணன்” அரசே ! யாராலும் செய்ய இயலாத செயலை நான் மட்டும் எப்படிச் செய்ய இயலும்? நான் எடுத்துச் சென்ற பொற்காசுகள் அனைத்தும் என்னிடம்தான் உள்ளது” என்று கூறினான்.

வியப்படைந்தான் அரசன்.துறவிகளுக்கு பொற்காசுகளைக் கொடுப்பது அவ்வளவு கடினமான செயலா என்று மிகுந்த வியப்படைந்தான்.!

“ஆமாம் அரசே“ என்ற மதிவானன் மேலும் கூறியதைக் கேட்டு, மதிவாணன் கூறியதுபோல் அது இயலாத காரியம் என்று ஒப்புக்கொண்டான்.

மதிவாணன் அரசனுக்கு என்ன விளக்கம் கொடுத்திருப்பார்.?????????????

இராஜிசங்கர்
11-09-2013, 10:50 AM
மதிவாணன் கூறியிருப்பான்: 'அரசே...நீங்கள் சொன்னது போல துறவிகளிடம் சென்று, வேண்டும் அளவுக்குப் பணம் தருவதாகக் கூறினேன்..ஆனால் பெங்களூரில் வசிக்கும் இராஜியானந்தா போன்ற நல்ல துறவிகள் 'அன்பா...நாம் பணம், உடல், உறவுகள் இவையெல்லாம் தவிர்த்த துறவு வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறோம். நீ தரும் பணம் எமக்கெதற்கு? புசிக்க இயற்கையை எம்பெருமான் படைத்திருக்கிறானே? அவனால் செய்ய முடியாததையா இந்தக் காகிதம் செய்து விடும்?' என்று கேட்டனர் அரசே! அதனால் அந்த உண்மையான துறவிகளுக்குப் பணம் தர முடியவில்லை. இன்னொரு புறம் கும்பகோணத்துப் பிள்ளையானந்தா போன்ற துறவிகள் கட்டுக் கட்டாய் பணம் கிடைத்த வரை லாபம் என்று ஞாயிற்றுக் கிழமை என்பதைக் கூட பொருட்படுத்தாமல் ஆன்லைன் ட்ரான்ஸ்பர் பண்ணச் சொல்லி நச்சரித்தார்கள் மன்னா...அவர்கள் உண்மைத் துறவிகளாய் ஆக முடியாது. அதனால் அவர்களுக்குப் பணம் கொடுத்தால் நான் உங்கள் கட்டளையை மீறியதாய் ஆகும் என்பதால் தரவில்லை மன்னா'...

பின்குறிப்பு:
------------
இக்கதையில் வரும் 'உண்மைச்' சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே! (ஹி...ஹீ...கு.கோ.பி இப்போ என்ன பண்ணுவீங்க?இப்போ என்ன பண்ணுவீங்க?)

pgk53
25-09-2013, 03:47 PM
சபாஷ்..............இராஜி சங்கர்......மிகச் சரியான பதிலை கொடுத்ததோடு அதனை நகைச்சுவையாகவும் அமைத்திருக்கின்றீர்கள்.பாராட்டுக்கள்.--------------------------------------------------------வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்

pgk53
25-09-2013, 03:49 PM
புதிர் எண்-545 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மகா பாரதத்தில் பாண்டவர்களின் தாய் குந்திதேவி, கிருஷ்ணனிடத்தில் மாறாத அன்பும் தீராத பக்தியும் கொண்டிருந்தாள்.
தன்னிடம் அன்பும் பக்தியும் கொண்டுள்ள குந்திதேவிக்கு அருள் செய்ய நினைத்தார் கிருஷ்ணன்.
குந்தி தேவியிடம் ” நீ விரும்புகிற ஒரு வரம் கேள். தருகின்றேன்” என்றார்.
குந்திதேவி நீண்ட நேரம் சிந்தித்தார்.
பிறகு “கண்ணா….நாள்தோரும் எனக்கு ஏதாவது ஒரு துன்பம் வரவேண்டும்.இதுவே நான் கேட்கும் வரம்” என்று வேண்டினாள்.
இதைக்கேட்ட கிருஷ்ணன் வியப்பு அடைந்தார்.
“குந்தி தேவி அவர்களே , என்னிடம் பலர் நீண்ட ஆயுள்,நிறைந்த செல்வம் போன்ற பேறுகளைத்தான் வரமாகக் கேட்டுள்ளார்கள்.ஆனால் யாருமே நாள்தோறும் துன்பம் வரவேண்டும் என்ற வரத்தைக் கேட்டதே இல்லை.---------------------------------------நீங்கள் கேட்ட வரத்தை அருளுகின்றேன். ஆனால் இப்படி ஒரு வரத்தை எதற்காக விரும்புகின்றீர்கள்” என்று கேட்டார் கிருஷ்ணன்.

அன்பர்களே இதற்கு குந்திதேவி என்ன விளக்கம் கூறியிருப்பார்கள்??????????

மும்பை நாதன்
25-09-2013, 04:12 PM
" கண்ணா, இன்பமாக இருக்கும் நேரத்தில் உன் நினைப்பு மனத்தில் இருப்பதில்லை.

ஒருவனுக்கு துன்பம் நேருகின்ற போதுதான் உன்னுடைய நினைப்பு மேலோங்குகிறது.

உன்னுடைய நினவில் நான் எப்போதும் இருக்க விரும்புகிறேன். அதனால்தான் இவ்வாறு வேண்டுகிறேன்."

மும்பை நாதன்
25-09-2013, 04:13 PM

ஸ்ரீசரண்
06-10-2013, 03:16 PM
சரியான பதிலாக இருக்குமன்று நினைக்கிறேன்........

pgk53
15-10-2013, 02:59 AM
" கண்ணா, இன்பமாக இருக்கும் நேரத்தில் உன் நினைப்பு மனத்தில் இருப்பதில்லை.

ஒருவனுக்கு துன்பம் நேருகின்ற போதுதான் உன்னுடைய நினைப்பு மேலோங்குகிறது.

உன்னுடைய நினவில் நான் எப்போதும் இருக்க விரும்புகிறேன். அதனால்தான் இவ்வாறு வேண்டுகிறேன்."

மிகச் சரியான பதில் வாழ்த்துக்கள் மும்பைநாதன்.

pgk53
15-10-2013, 03:01 AM

15-10-2013, 03:08 AM
நண்பர்களே--------வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்

pgk53
15-10-2013, 03:28 AM
புதிர் எண்-546

பூக்கள் விற்கும் கடையில் இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். முதலில் நுழைந்த பெண் கடைக்காரரிடம் பத்து ரூபாய் கொடுத்து, ஒரு பூ வேண்டுமென்று கேட்டாள்.

கடைக்காரன்,''மஞ்சள் ரோஜாவின் விலை ஏழு ரூபாய். சிவப்பு ரோஜாவின் விலை எட்டு ரூபாய். வெள்ளை ரோஜாவின் விலை பத்து ரூபாய். மூன்றில் எது வேண்டும்?''என்று கேட்டான்.

அவள் தனக்கு சிவப்பு ரோஜா வேண்டும் என்று கேட்டு வாங்கிப் போனாள்.

இரண்டாமவளும் பத்து ரூபாய் கொடுத்தாள்.

ஆனால், அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளை ரோஜாவை எடுத்துக் கொடுத்தான்.

அவளும் அதை எடுத்துச் சென்றாள்.

அவளுக்கு வெள்ளை ரோஜாதான் தேவையென்று கடைக்காரனுக்கு எப்படித் தெரியும்??

மும்பை நாதன்
15-10-2013, 06:27 AM
முதலாமவள் கொடுத்தது பத்து ரூபாய் நோட்டாக இருந்திருக்கும்.

இரண்டாமவள் சில்லறையாக பத்து ரூபாய் கொடுத்ததால் அவளுக்கு வெள்ளை ரோஜாதான் வேண்டுமென்று புரிந்துகொண்டு கடைக்காரர் கொடுத்திருக்க வேண்டும்.

மும்பை நாதன்
15-10-2013, 06:28 AM

20-10-2013, 07:53 AM
மும்பை நாதன்

முந்திக்கிட்டாரே...............

lenram80
25-10-2013, 01:04 PM
முதலாமவள் கொடுத்தது பத்து ரூபாய் நோட்டாக இருந்திருக்கும்.

இரண்டாமவள் சில்லறையாக பத்து ரூபாய் கொடுத்ததால் அவளுக்கு வெள்ளை ரோஜாதான் வேண்டுமென்று புரிந்துகொண்டு கடைக்காரர் கொடுத்திருக்க வேண்டும்.

வெள்ளை ரோஜா 10 ரூபாய். எனவே எதற்கு அவள் சில்லறையாக கொடுக்க வேண்டும்?

எனது விடை:-
ஒன்று, அவள் வெள்ளை பூவை சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்.

அல்லது, அவள் அந்த கடையில் எப்போதுமே வந்து வெள்ளை பூவை வாங்கும் வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.

கும்பகோணத்துப்பிள்ளை
25-10-2013, 03:37 PM
மும்பை நாதனின் விடை சரியானதாகவிருக்கலாம்
இல்லையெனில்
அவள் விதவையாகவிருக்கலாம் அது கடைக்காரருக்கு தெரிந்திருக்கலாம்
அதனால் வெள்ளை ரோஜாவை எடுத்து கொடுத்திருக்கலாம்

மும்பை நாதன்
25-10-2013, 04:46 PM
புதிரில் கொடுத்திருக்கும் தகவலை மட்டும் கருத்தில் கொண்டால் தோன்றும் பதிலை கொடுத்திருக்கிறேன்.

ஊகங்கள் விரியும் போது விடைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

மும்பை நாதன்
25-10-2013, 04:52 PM
இப்படி யோசித்துப் பாருங்களேன்:

ஒரு பேருந்தில் 4 ரூபாய்க்கும் பயணச்சீட்டு உண்டு; 5 ரூபாய்க்கும் பயணச்சீட்டு உண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள்.
5 ரூபாயை கொடுக்கும் பயணியிடம் எங்கே போக வேண்டுமென்று நடத்துனர் கேட்பார். ஆனால் சில்லறையாக 5 ரூபாய் கொடுக்கும் பயணியிடம் ஒன்றும் கேட்காமலே 5 ரூபாய் சீட்டைக் கொடுத்து விடுவார், இல்லையா ?

கும்பகோணத்துப்பிள்ளை
28-10-2013, 08:50 PM
ஒரு கேள்விக்கு ஒரு பதில் சொன்னா மார்க் போடுவாங்க!
ஒரு கேளவிக்கு 10 பதில் சொன்னா இண்டலிஜென்ட்டுனுதானே அர்த்தம்!

pgk53
03-11-2013, 02:12 PM
முதலாமவள் கொடுத்தது பத்து ரூபாய் நோட்டாக இருந்திருக்கும்.

இரண்டாமவள் சில்லறையாக பத்து ரூபாய் கொடுத்ததால் அவளுக்கு வெள்ளை ரோஜாதான் வேண்டுமென்று புரிந்துகொண்டு கடைக்காரர் கொடுத்திருக்க வேண்டும்.

மும்பை நாதனின் விடை சரியானது . பாராட்டுக்கள் அவருக்கும் மற்ற மன்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம். இதில் சிறியதாக இரண்டு புதிர்கள் உள்ளது.

pgk53
03-11-2013, 02:13 PM
புதிர் எண்-547

1-இடது கையில் பிடிக்க முடிந்த ஒன்றை வலது கையால் பிடிக்க முடியாது! அது என்ன??????????

2-ராமசாமி மதுரை நகரின் தென் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு பக்கத்தில் சிம்மக்கல்லில் உள்ள மொத்த விலை பழக்கடைகளில் தேடிப்பார்த்து ஒரு பலாப்பழம் வாங்கிக்கொண்டு நடந்தே வைகை ஆற்றுப் பாலத்தைக் கடந்து கோரிப்பாளையம் செல்லத் தொடங்கினான். அப்போது அவன் மேலும் நான்கு பேர்கள் ஆளுக்கு இரண்டு பலாப்பழங்களை அதே வழியில் தோளில் சுமந்து கொண்டு சென்றதைப் பார்த்தான்.

இப்போது ராமசாமி ஆற்றைக் கடந்து செல்ல தரைப்பாலத்தில் நடந்தான்.

அன்பர்களே மொத்தம் எத்தனை பலாப்பழங்கள் இப்போது ஆற்றைக் கடந்து செல்கின்றது????????????

மும்பை நாதன்
03-11-2013, 03:16 PM

1. வலது கை மணிக்கட்டு.

2. ஙே !

ஸ்ரீசரண்
06-11-2013, 11:49 AM
1. வலதுகை மணிக்கட்டு.

2. ஒன்பது பலாப்பழங்கள்

ஜான்
06-11-2013, 02:08 PM
வலதுகைதான்

மதுரைக்காரன் என்பதால் சிம்மக்கல் ,பாலம், கோரிப்பாளையம்,தரைப்பாலம் என்றெல்லாம் வருவதால் ரொம்பவே குழம்பிக் கிடக்கிறேன் ...அவன் பாலத்தில் நடந்ததால் ஆற்றைக் கடந்தது எட்டோ?

pgk53
13-11-2013, 12:40 AM
நண்பர்களே மிக மிக இலகுவான பலாப்பழப் புதிருக்கு இன்னும் யாருமே சரியான விடை கூறவில்லை.-------------------------------------------------------மேலும் முயற்சி செய்யலாமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மும்பை நாதன்
13-11-2013, 01:49 AM
நண்பர்களே மிக மிக இலகுவான பலாப்பழப் புதிருக்கு இன்னும் யாருமே சரியான விடை கூறவில்லை.-------------------------------------------------------மேலும் முயற்சி செய்யலாமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்னடா இது !
மதுரைக்கு வந்த சோதனை !!
பலாப்பழ புதிருக்கு பதில் சொல்ல வல்லவர்கள் மன்ற உறுப்பினர்களில் யாருமே இல்லையா ?
கு.கோ.பி அவர்களே இப்புதிருக்கு நீங்கள்தான் விடையளிக்க வேண்டும்.
இது தமிழ் மன்றத்தின் கட்டளை !

(வரட்டும் இந்த ராஜிசங்கர், முரளி எல்லாம்; இருக்கு அவுங்களுக்கெல்லாம் ! )

மும்பை நாதன்
13-11-2013, 01:41 PM
நண்பர்களே மிக மிக இலகுவான பலாப்பழப் புதிருக்கு இன்னும் யாருமே சரியான விடை கூறவில்லை.-------------------------------------------------------மேலும் முயற்சி செய்யலாமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒன்றே ஒன்றுதான்.

pgk53
16-11-2013, 01:58 PM
ஒன்றே ஒன்றுதான்.

நண்பர் மும்பை நாதன் அவர்களே-------------------------------ஒன்றே ஒன்றுதான் என்று கூறியுள்ளீர்கள். சரியான விளக்கம் கொடுப்பீர்களா?????????????

rajapandian21
17-11-2013, 12:01 PM
புதிர் எண்-547

1-இடது கையில் பிடிக்க முடிந்த ஒன்றை வலது கையால் பிடிக்க முடியாது! அது என்ன??????????

2-ராமசாமி மதுரை நகரின் தென் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு பக்கத்தில் சிம்மக்கல்லில் உள்ள மொத்த விலை பழக்கடைகளில் தேடிப்பார்த்து ஒரு பலாப்பழம் வாங்கிக்கொண்டு நடந்தே வைகை ஆற்றுப் பாலத்தைக் கடந்து கோரிப்பாளையம் செல்லத் தொடங்கினான். அப்போது அவன் மேலும் நான்கு பேர்கள் ஆளுக்கு இரண்டு பலாப்பழங்களை அதே வழியில் தோளில் சுமந்து கொண்டு சென்றதைப் பார்த்தான்.

இப்போது ராமசாமி ஆற்றைக் கடந்து செல்ல தரைப்பாலத்தில் நடந்தான்.

அன்பர்களே மொத்தம் எத்தனை பலாப்பழங்கள் இப்போது ஆற்றைக் கடந்து செல்கின்றது????????????

1. வலது கையின் மணிக்கட்டு முதல் வலது கை முட்டி வரை

2. "கொண்டு சென்றதைப் பார்த்தான்" அவர்கள் ஏற்கனவே சென்று விட்டார்கள். தற்பொழுது செல்வது நமது ராமசாமி மட்டுமே. அவரிடம் இருப்பதோ ஒரே ஒரு பலாப்பழம்

மும்பை நாதன்
17-11-2013, 04:11 PM
நண்பர் மும்பை நாதன் அவர்களே-------------------------------ஒன்றே ஒன்றுதான் என்று கூறியுள்ளீர்கள். சரியான விளக்கம் கொடுப்பீர்களா?????????????

'அப்போது' சென்றதை கழித்து, 'இப்போது' செல்வதை மட்டும் எண்ணினால் ஒன்றுதானே வருகிறது.

pgk53
18-11-2013, 12:32 AM
நண்பர்களே, மும்பைநாதனும், ராஜ பாண்டியனும் கிட்டத்தட்ட சரியான பதிலை நெருங்கியுள்ளார்கள்.அவர்கள் கூறியபடியும் விடையைக் கொள்ளலாம். ஆனால் சரியான விடை------------------------------------------------------------------------------------------------------------------------- ராமசாமி பலாப்பழம் கொண்டு செல்பவர்களைப்பார்த்தது தான் செல்லும் திசைக்கு எதிர் திசையில்.அதாவது அவனுக்கு எதிரே ஏற்கனவே பாலத்தைக் கடந்து பலாப்பழங்களைச் சுமந்து வந்துகொண்டிருந்தவர்களைத்தான் பார்த்தான்.------------------------------------------------------------------------------------------------------------சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.--------------------------------------------------------------------------இந்தப் புதிர் மனோதத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.. அதிலும் நமது இந்தியாவின் மாமியார்களின் மனோதத்துவத்தை அடிப்படியாகக் கொண்டது.கிட்டத்தட்ட அடுத்த புதிருக்குரிய விடைக்கு க்ளூ கொடுத்துவிட்டேன் என்றே நினைக்கின்றேன்.

pgk53
18-11-2013, 12:37 AM
புதிர் எண்-548 ரவி ஒருநாள் தனது அம்மாவிடம் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் அவளைத் திருமணம் செய்துகொள்ள அம்மாவின் சம்மதம் வேண்டும் என்று கேட்டான்.

கொஞ்சம் சிந்தனை செய்த அம்மா….சரி நீ அந்தப் பெண்ணை அழைத்துவா. நான் பார்த்தபிறகு எனது முடிவைக் கூறுகின்றேன் என்றாள்.

அதற்கு ரவி , “அம்மா நான் மூன்று பெண்களை அழைத்து வருகின்றேன். அவர்களைப் பார். அவர்களிடம் நீ பேசக்கூடாது. அந்த மூன்று பெண்களில் நான் யாரைக் காதலிக்கின்றேன் என்பதை நீ பார்த்தே கண்டுபிடித்துக்கொள்” என்றான்.
அம்மாவும் சம்மதித்தார்கள்.

மறுநாள் ரவி தன் காதலியின் தோழிகள் இருவர்களையும் சேர்த்து அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.
மூன்று பெண்களும் வரிசையாக சோபாவில் அமர்ந்தார்கள்.

அம்மா அந்த மூன்று பெண்களையும் பார்த்தார்கள்.
மூவருமே அழகில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.மூவருமே கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து மூன்று பெண்களும் போய்விட்டார்கள்.

பிறகு ரவி அம்மாவைப் பார்த்து, “ அம்மா….வந்திருந்த மூன்று பெண்களில் நான் யாரைக் காதலிக்கின்றேன். திருமணம் செய்ய விரும்புகின்றேன் என்பதைக் கண்டு பிடித்துவிட்டீர்களா????? என்று கேட்டான்.

ஆமாம் கண்டுபிடித்துவிட்டேன்.
மூவரில் இடது பக்கம் ஓரமாக அமர்ந்திருந்த பெண்ணைத்தான் நீ விரும்புகிறாய்… சரிதானே? என்றார்கள் அம்மா.

மிகுந்த ஆச்சரியம் அடைந்தான் ரவி. “ எப்படி அம்மா கண்டுபிடித்தீர்கள். அவர்களிடம் நீங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர்களும் ஏதும் பேசவில்லை. ஆனால் நான் காதலிக்கும் பெண்ணை எப்படிச் சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?????????என்று கேட்டான். அம்மா எப்படி அவன் காதலிக்கும் பெண்ணை சரியாகக் கூறினார்கள்?????????

அப்படி அம்மா என்ன பதில் கூறினார்கள்?????????????????

மும்பை நாதன்
18-11-2013, 01:17 AM
இவர்கள் நம்மை, நம் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்ற தவிப்பு மூவரில் ரவியின் காதலிக்குத்தானே இருக்கும். அந்த தவிப்பும் பதைப்பும் காட்டிக்கொடுத்துவிடுமே !

காதலியின் தோழிகளின் கவனம் பரவலாக இருக்கும் ஆனால் காதலியின் கவனம் அதிகமாக வருங்கால மாமியாரின் மீது இருக்கும்.

ரவியுடன் பார்வைப் பறிமாற்றம் மூவரில் ஒருவருடன் மட்டுமே இருக்கும்.

இதையெல்லாம் வைத்து கண்டுபிடித்துவிட முடியும்.

முரளி
18-11-2013, 05:08 AM
அம்மா சொன்னாள் "எனக்கு அவளை கொஞ்சமும் பிடிக்கவில்லை. பார்த்தாலே பற்றிக் கொண்டு வந்தது. சண்டை போடணும் போல இருந்தது. அவள்தான் என் மருமகள்."

இது எப்படி இருக்கு?

இதில் மன தத்துவம் ஒன்று உண்டு. "Thin slicing" , " blink" என்று சொல்வார்கள். பொதுவாக, ஒருவரை பிடிப்பதற்கும், வெறுக்கவும் ,புரிந்து கொள்ளவும் சில நிமிடங்களே போதும் என சொல்கிறார்கள். சிலருக்கு அந்த திறமை அதிகம் எனவும் சொல்கிறார்கள். ஒருவேளை, இந்த மாமியார் அந்த கேடகரியோ?

உங்களுக்கு திருப்தி தானே மும்பை நாதன்.?

மும்பை நாதன்
18-11-2013, 03:30 PM
உங்களுக்கு திருப்தி தானே மும்பை நாதன்.?

அது..! அந்த பயம் இருக்கட்டும்.. !!

pgk53
02-12-2013, 01:00 AM
அம்மா சொன்னாள் "எனக்கு அவளை கொஞ்சமும் பிடிக்கவில்லை. பார்த்தாலே பற்றிக் கொண்டு வந்தது. சண்டை போடணும் போல இருந்தது. அவள்தான் என் மருமகள்."

இது எப்படி இருக்கு?

இதில் மன தத்துவம் ஒன்று உண்டு. "Thin slicing" , " blink" என்று சொல்வார்கள். பொதுவாக, ஒருவரை பிடிப்பதற்கும், வெறுக்கவும் ,புரிந்து கொள்ளவும் சில நிமிடங்களே போதும் என சொல்கிறார்கள். சிலருக்கு அந்த திறமை அதிகம் எனவும் சொல்கிறார்கள். ஒருவேளை, இந்த மாமியார் அந்த கேடகரியோ?

உங்களுக்கு திருப்தி தானே மும்பை நாதன்.?
சபாஷ் முரளி............சரியான பதிலைக் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.--------------மும்பைநாதன் நீங்கள் கொடுத்த்த பதிலும் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். ஆனால் சரியான பதில் என்றால் அது முரளியுடையதுதான்..-----சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
02-12-2013, 01:03 AM
புதிர் எண்-459
நான்கு பஞ்சு வியாபாரிகள் இருந்தனர்.
பஞ்சை எலிகள் நாசமாக்கிவிடுவதால் அவற்றைப் பிடித்துத் தின்ன ஒரு பூனை வளர்த்தனர்.
பூனையின் நான்கு கால்களையும் ஒவ்வொருவரும் பிரித்துக்கொண்டு பராமரித்தனர். அவரவர் கால்களுக்குத் தங்க மோதிரம், சங்கிலி எனப் போட்டு அழகு பார்த்தனர்.

ஒருநாள் பின்னங்கால் ஒன்றில் பூனைக்கு அடிபட, அந்தக் காலுக்கு உரிய வியாபாரி மண்ணெண்ணெயில் பஞ்சை நனைத்துக் கட்டுப்போட்டார்.

அந்த நேரம் பார்த்து பூனை அடுப்போரம் ஒதுங்க, காயம்பட்ட காலில் தீ பிடித்துக்கொள்கிறது. தன் காலில் தீயைப் பார்த்ததும் மிரண்ட பூனை, பயந்து பஞ்சு கோடவுனுக்குள் ஓட, பல லட்ச ரூபாய் பஞ்சு எரிந்து நாசமானது.
அதற்கு நஷ்டஈடு கேட்டு மற்ற மூன்று வியாபாரிகளும் அந்த எரிந்த காலுக்குரிய வியாபாரி மீது வழக்குத் தொடுத்தனர்.

ஆனால், இந்த மூன்று வியாபாரிகளும்தான் அந்த வியாபாரிக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது.

ஏன் நீதிபதி அப்படித் தீர்ப்பளித்தார்?????????

முரளி
02-12-2013, 04:38 AM
புதிர் எண்-459

இது ஒரு பால பாடம் என நினைவு. இந்த புதிரின் விடை எல்லோருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும்.பஞ்ச தந்திர கதைகளா அல்லது மரியாதை ராமன் கதைகளா என் நினைவில்லை.

தீ பிடிக்க காரணம் பூனை பயந்து பஞ்சு கோடவுனுக்குள் ஓடியது தான். அதுவும் மூன்று கால்களால் ஓடியது. அதனால், மூன்று கால்கள் தான் நஷ்டத்திற்கு காரணம். இந்த மூன்று வியாபாரிகளும்தான் அடிபட்ட கால் சொந்தக்கார வியாபாரிக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது.

என்னமா அந்த காலத்திலே யோசிச்சிருக்காங்க? காரணம் தெரிந்த பிறகு, இவ்வளவு தானா என தோன்றுகிறது. Out of the box thininking என்பது இதுதான் போலிருக்கு.

இது பற்றி ஒரு கொசுறு. 'கொலம்பஸின் முட்டை' கதை. காரணம் தெரிந்த பிறகு, இவ்வளவு தானா என தோன்றுகிறதே அதைப் பற்றி.

"என்ன பெரிசா சாதிச்சிட்டீங்க ? அமெரிக்கா அங்கேயேதான் இருக்கு, அதை கண்டு பிடிக்கறது என்ன பெரிய விஷயமா?"- கொலம்பசை நக்கலடித்தார்கள், பொறாமை பிடித்த சிலர்.

கொலம்பஸ் கேட்டார்: " இதோ இந்த முட்டையை எந்த வித சப்போர்ட்டும் இல்லாமல் உங்களால், நிமிர்த்தி நிக்க வைக்க முடியுமா? "

எல்லோரும் முட்டையை நேராக நிமிர்த்தி வைக்க பார்த்தார்கள். முடியவில்லை. கடைசியில், முட்டை கொலம்பஸ் கைக்கு வந்தது. அவர் , முட்டையின் அடியில் கொஞ்சம் தட்டி லேசாக உடைத்து, நிமிர்த்தி நிற்க வைத்தார். அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது. இது என்ன பெரிய திறமை?. எல்லாரும் செய்ய முடியுமே. ஆனால், அதுவரை அவர்களுக்கு தோன்ற வில்லை. அவர்கள் மண்டையில் எட்ட வில்லை.

"Once the feat has been done, anyone knows how to do it. ".

இது எப்படி இருக்கு? :icon_b:

மேலும் விவரங்களுக்கு இந்த திரி பார்க்கவும் :

http://en.wikipedia.org/wiki/Egg_of_Columbus

tnkesaven
05-12-2013, 04:31 PM
அழகான சக்கரம், அச்சு இல்லாத சக்கரம், ஊர் சுற்றும் சக்கரம்

அது என்ன?

pgk53
13-12-2013, 02:27 AM
புதிர் எண்-459

இது ஒரு பால பாடம் என நினைவு. இந்த புதிரின் விடை எல்லோருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும்.பஞ்ச தந்திர கதைகளா அல்லது மரியாதை ராமன் கதைகளா என் நினைவில்லை.

தீ பிடிக்க காரணம் பூனை பயந்து பஞ்சு கோடவுனுக்குள் ஓடியது தான். அதுவும் மூன்று கால்களால் ஓடியது. அதனால், மூன்று கால்கள் தான் நஷ்டத்திற்கு காரணம். இந்த மூன்று வியாபாரிகளும்தான் அடிபட்ட கால் சொந்தக்கார வியாபாரிக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. ---------------------------------------------------------------பதில் மிகச் சரியானது. வாழ்த்துக்கள்.................இது பால பாடமாக இருப்பினும் அனைவருக்கும் தெரிந்திருக்காது என்றே நினைத்து புதிரைக் கொடுத்துள்ளேன்.சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
13-12-2013, 02:29 AM
புதிர் எண்-550
இஸ்ரேல் நாட்டில் ஒரு ஆராய்ச்சியாளர் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார்.அந்தக் கருவியை மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் பொருத்திவிட்டால் அது திருடர்களைக் காட்டிக்கொடுத்து பிடித்துவிடும்.அந்த ஆராய்ச்சியாளர் அதை ஒவ்வொரு நாடாகப் போய் பரிசோதனை செய்ய நினைத்தார்.
முதலில் அமெரிக்காவுக்கு கொண்டுபோய் மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருத்தினர்.
30 நிமிடங்களில் 30 திருடர்கள் பிடிபட்டார்கள்.
அடுத்தாற்போல் அந்தக் கருவியை லண்டனில் பொருத்தினார். அங்கே 30 நிமிடங்களில் 50 திருடர்கள் பிடிபட்டார்கள்.
அடுத்து ஸ்பெயின் நாட்டில் பொருத்தினார்.
அங்கே 30 நிமிடங்களில் 60 திருடர்கள் பிடிபட்டார்கள்.
பிற்கு அவர் அதை இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்.
டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் பொருத்தினார்.

நண்பர்களே 30 நிமிடங்களில் எத்தனை பேர் பிடிபட்டார்கள் என்று நீங்கள்தான் சொல்லுங்களேன்.?????????????????????????????

முரளி
13-12-2013, 02:38 AM
அழகான சக்கரம், அச்சு இல்லாத சக்கரம், ஊர் சுற்றும் சக்கரம்

அது என்ன?

பொதுவாக வளையல் என கொள்ளலாம். குறிப்பாக லாரி ஓட்டும் டிரைவர்களின் கையில் இருக்கும் வளையல் அல்லது பிரேஸ்லெட். அவங்க தானே ஊர் சுற்றுகிறார்கள். சரிதானே.

தாமரை
13-12-2013, 10:56 AM
சூரியன்

தாமரை
13-12-2013, 10:57 AM
.

நண்பர்களே 30 நிமிடங்களில் எத்தனை பேர் பிடிபட்டார்கள் என்று நீங்கள்தான் சொல்லுங்களேன்.?????????????????????????????

யாரும் பிடிபடலையாம். அந்த மிஷினைக் காணோம்னு இப்பதான் எங்க தெரு வழியா அவர் புலம்பிகிட்டே போனாரு..

கும்பகோணத்துப்பிள்ளை
17-12-2013, 07:49 PM
அந்த மிஷினைக் காணோம்னு இப்பதான் எங்க தெரு வழியா அவர் புலம்பிகிட்டே போனாரு..

யாரு! அந்த மிசினை எடுத்தவர்தனே!....
போலிஸ் ஸ்டேசனுக்கு போய் பார்க்கச்சொல்லியிருக்கலாம்!

அமீனுதீன்
24-12-2013, 12:53 PM
ஒரு அம்மா குழந்தையுடன் வெளியே போகிறார் திடீர் என்று மழை வருகிறது
(கையில் குடை எதுவும் இல்லை)
அம்மா மட்டும் நனைந்து விடுகிறார் குழந்தை நனயவில்லை எப்படி?

முரளி
25-12-2013, 04:04 AM
ஒரு அம்மா குழந்தையுடன் வெளியே போகிறார் திடீர் என்று மழை வருகிறது
(கையில் குடை எதுவும் இல்லை)
அம்மா மட்டும் நனைந்து விடுகிறார் குழந்தை நனயவில்லை எப்படி?

அம்மா ஒரு கர்ப்பிணி. சரியா?

அமீனுதீன்
25-12-2013, 01:58 PM
1. பகலில் தெரிவான், இரவில் மறைவான், அவன் யார்?
2. மழையில் பிறப்பான், வெயிலில் காயுவான், அவன் யார்?

முரளி
26-12-2013, 07:41 AM
1. பகலில் தெரிவான், இரவில் மறைவான், அவன் யார்?

நிழல் -

முரளி
26-12-2013, 09:05 AM
1. பகலில் தெரிவான், இரவில் மறைவான், அவன் யார்?
2. மழையில் பிறப்பான், வெயிலில் காயுவான், அவன் யார்?

1. நிழல் 2. நாய்க்குடை

pgk53
22-01-2014, 12:54 AM
யாரும் பிடிபடலையாம். அந்த மிஷினைக் காணோம்னு இப்பதான் எங்க தெரு வழியா அவர் புலம்பிகிட்டே போனாரு..நண்பர் தாமரை அவர்களே.........வாழ்த்துக்கள். மிகச் சரியான பதிலை கூறியுள்ளீர்கள். ஒரு மாத கால விடுப்பில் தாயகம் சென்றமையால் மன்றத்தில் வர இயலவில்லை. அனைவரும் தாமதத்துக்கு மன்னிக்க வேண்டுகின்றேன். நாளை புதிய புதிருடன் வருகின்றேன் வணக்கம்.

pgk53
23-01-2014, 12:59 AM
புதிர் எண்-551

ராமு சோமுவின் வீட்டுக்குப் போனான்.. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ராமு புறப்படுவதாகக் கூற, ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த சோமுவும், சரி போய் வா என்றான்.

சோமுவைப் பார்த்த ராமு, " சோமு, இப்போது நீ உட்கார்ந்திருக்கும் நாற்காலியை நான் மூன்று முறை சுற்றி வருவதற்குள் நீ எழுந்துவிடுவாய் என்கிறேன். சரியா?" என்றான்.

அதற்கு சோமு, " போடா....மூன்று முறை சுற்றுவதற்குள் நான் ஏன் எழப்போகிறேன்.
நீ கூறியது தவறு. நான் எழுந்திருக்க மாட்டேன்.
ஆனால் அதற்காக நீ என்னை அடிக்கவோ பிடித்து இழுக்கவோ கூடாது" என்றான்.

"இல்லை, உன்னைத் தொடவே மாட்டேன். பந்தயம் வைத்துக்கொள்வோமா? நீ நிச்சயமாக எழுந்துவிடுவாய்" என்றான் ராமு.
.
சோமுவும் பந்தயத்துக்கு ஒத்துக்கொண்டான்.

ஆனால் ராமு இரண்டாவது சுற்று முடித்து, மூன்றாவது சுற்று வருவதற்குள் சோமு எழுந்துவிட்டான். ஏன்?.

sarcharan
23-01-2014, 06:40 AM
1) ஏதாவது spray பண்ணி விட்டாரா சோமு

2) சுற்றி வரும்பொது தொலைக்காட்ச்சியில் திரைப்பட க்லைமாக்ச், கிரிக்கெட் மாட்ச் பார்க்க

3) இல்லாட்டா நம்ம பார்த்திபன் வடிவேலு மாதிரி, ரெண்டு சுற்று
முடிந்ததும் ஒரு மாசம் கழித்து மூன்றாவது சுற்று முடிப்பேன் என்று சொன்னாரோ?

ஸ்ரீசரண்
23-01-2014, 02:28 PM
ஒண்ணும் புரியல..........

சொல்லத் தெரியல.......:traurig001::traurig001::traurig001:

ஜான்
24-01-2014, 04:16 AM
அம்மா ஒரு கர்ப்பிணி. சரியா?

ஓ!!பாராட்டுகள் முரளி

முரளி
25-01-2014, 04:00 AM
புதிர் எண்-551

ராமு சோமுவின் வீட்டுக்குப் போனான்.. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ராமு புறப்படுவதாகக் கூற, ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த சோமுவும், சரி போய் வா என்றான்.

சோமுவைப் பார்த்த ராமு, " சோமு, இப்போது நீ உட்கார்ந்திருக்கும் நாற்காலியை நான் மூன்று முறை சுற்றி வருவதற்குள் நீ எழுந்துவிடுவாய் என்கிறேன். சரியா?" என்றான்.

அதற்கு சோமு, " போடா....மூன்று முறை சுற்றுவதற்குள் நான் ஏன் எழப்போகிறேன்.
நீ கூறியது தவறு. நான் எழுந்திருக்க மாட்டேன்.
ஆனால் அதற்காக நீ என்னை அடிக்கவோ பிடித்து இழுக்கவோ கூடாது" என்றான்.

"இல்லை, உன்னைத் தொடவே மாட்டேன். பந்தயம் வைத்துக்கொள்வோமா? நீ நிச்சயமாக எழுந்துவிடுவாய்" என்றான் ராமு.
.
சோமுவும் பந்தயத்துக்கு ஒத்துக்கொண்டான்.

ஆனால் ராமு இரண்டாவது சுற்று முடித்து, மூன்றாவது சுற்று வருவதற்குள் சோமு எழுந்துவிட்டான். ஏன்?.

எனக்கென்னவோ, ராமு பந்தய விதிகளை தனக்கு சாதகமாக மாற்றி கொண்டிருப்பான் என சந்தேகம். நேரம் பற்றிய விதி (டைம் லிமிட்-Law of Limitation) இல்லாததால், ராமு மூன்றாவது சுற்று முடிக்காமல் சென்றிருக்கலாம். வேறு வழியின்றி, மூன்று மணி யோ அல்லது நான்கு மணி நேரங்கழித்தோ, இயற்கை உபாதைகளுக்காவது , ராமு எழுந்து தானே ஆக வேண்டும். சரசரன் அவர்கள் கூறிய மூன்றாவது எண்ணமே எனதும்.

ஸ்ரீசரண்
02-02-2014, 02:02 PM
என்னப்பா ஆச்சு...........

மன்றத்துக்கு யாருமே வரவில்லையா?

அல்லது யாருக்குமே பதில் தெரியவில்லையா?

P G K அண்ணாச்சி நீங்களாவது சரியான பதிலை சொல்லுங்க....

கும்பகோணத்துப்பிள்ளை
05-02-2014, 12:14 AM
முன்றாவது சுற்று முன்னே நன்பர் தள்ளாடி விழுவதுபோல் பாவித்திற்ப்பார்
நன்பர் விழுவதை சகிக்காமல் உட்கார்ந்திருப்பவர் சட்டென்று எழுந்து தாங்க முயற்ச்சித்திருப்பார்
சரிதானே!

pgk53
10-02-2014, 12:34 AM
1) ஏதாவது spray பண்ணி விட்டாரா சோமு

2) சுற்றி வரும்பொது தொலைக்காட்சியில் திரைப்பட க்லைமாக்ச், கிரிக்கெட் மாட்ச் பார்க்க

3) இல்லாட்டா நம்ம பார்த்திபன் வடிவேலு மாதிரி, ரெண்டு சுற்று
முடிந்ததும் ஒரு மாசம் கழித்து மூன்றாவது சுற்று முடிப்பேன் என்று சொன்னாரோ?

நண்பர் சர்சரன் அவர்கள் ஒன்றுக்கு மூன்றாக பதில்களைக் கொடுத்துவிட்டார். மூன்றாவது பதில் சரியானது. அவருக்கு வாழ்த்துக்கள்.---வருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்

pgk53
10-02-2014, 12:35 AM
புதிர் எண்-552
உங்களை ஒரு இடத்தில் வைத்து, நான்கு பக்கமும் சிமெண்ட்டால் சுவர் எழுப்புகிறார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த கட்டடத்துக்கு எந்த வாசலுமோ, அல்லது ஜன்னல்களோ, அல்லது சிறு துவாரங்களோ வைக்கப்படவில்லை எனக் கொள்ளுங்கள். அந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டால், நீங்கள் எப்படி கட்டடத்திலிருந்து வெளியே வருவீர்கள்?

pgk53
10-02-2014, 12:37 AM
புதிர் எண்-553
ஒரே உலோகத்தால் செய்யப்பட்ட இரண்டு உருளை வடிவுகள் உங்கள் நண்பரின் கைகளில் வைத்துள்ளார்.அதில் ஏதோ ஒரு உருளை மட்டும் உள்ளே காலியாக இருக்கிறதென்றும், மற்றதில் உலோகம் நிரப்பப்பட்டுள்ளது என்றும் நண்பர் கூறுகிறார்.
இப்போது உங்களை எது காலியான உருளை என்று நண்பர் கேட்கிறார். ஆனால் நீங்கள் அதை கையில் வாங்கிப் பார்த்து எடையை கணிக்கவோ அல்லது எடைதூக்கியில் போட்டுப் பார்க்கவோ, அவர் அனுமதிக்கவில்லை.
ஆனால் ஒருமுறை இரண்டு உருளைகளையும் தொட்டுப்பார்க்க மட்டும் அனுமதிக்கின்றார்.
நீங்கள் எப்படி, எது காலியான உருளை என்று கண்டு பிடிப்பீர்கள்????????????????

முரளி
10-02-2014, 03:59 AM
புதிர் எண்-552:

இந்த புதிரின் கீ நோட் "நினைத்துக் கொள்ளுங்கள்." என்பது தான். வெறும் கற்பனை. இன்னும் கட்டப்பட வில்லை.எனவே , கட்டடம் கட்டி முடித்த பின் வெளியே வந்து விட்டாதாக நினைத்துக் கொள்ள வேண்டும். கற்பனைதானே.

கும்பகோணத்துப்பிள்ளை
11-02-2014, 12:54 AM
புதிர் எண்-552

உயரம் தாண்டக்கூடியதாக இருக்கலாம் எழுந்து தாண்டிவரலாம்

கும்பகோணத்துப்பிள்ளை
11-02-2014, 01:01 AM
புதிர் எண்-553

குழாய் என்றால் முனை மூடப்பட்டிருக்கும் தொட்டுப்பார்த்து தெரிந்துகொள்ளலாம்

முரளி
11-02-2014, 03:06 AM
புதிர் எண்-553

இரண்டு உருளைகளும் மூடியிருந்தால், தண்ணீரில் மிதக்க விடலாம். காலியான உருளையை விட உலோகம் நிரம்பிய உருளை வேகமாக மூழ்கி விடும். காலி உருளை, தண்ணீர் நிரம்பிய பிறகே மூழ்கும்.

அல்லது, இரண்டு உருளையையும் கொஞ்சம் பள்ளத்தை நோக்கி உருட்டலாம். எது வேகமாக போகிறதோ, அது, உலோகம் நிரம்பிய உருளை. ஆனால், அதில் கொஞ்சம் பிரச்சனை உள்ளது. உருளை கொஞ்சம் நசுங்கி இருந்தால், அது நகராது. தவறன முடிவுக்கு தள்ளி விடும். ஏதோ பார்த்து செய்யுங்கள்...

lattif
11-02-2014, 03:26 PM
புதிர் எண்-553
ஒரே உலோகத்தால் செய்யப்பட்ட இரண்டு உருளை வடிவுகள் உங்கள் நண்பரின் கைகளில் வைத்துள்ளார்.அதில் ஏதோ ஒரு உருளை மட்டும் உள்ளே காலியாக இருக்கிறதென்றும், மற்றதில் உலோகம் நிரப்பப்பட்டுள்ளது என்றும் நண்பர் கூறுகிறார்.
இப்போது உங்களை எது காலியான உருளை என்று நண்பர் கேட்கிறார். ஆனால் நீங்கள் அதை கையில் வாங்கிப் பார்த்து எடையை கணிக்கவோ அல்லது எடைதூக்கியில் போட்டுப் பார்க்கவோ, அவர் அனுமதிக்கவில்லை.
ஆனால் ஒருமுறை இரண்டு உருளைகளையும் தொட்டுப்பார்க்க மட்டும் அனுமதிக்கின்றார்.
நீங்கள் எப்படி, எது காலியான உருளை என்று கண்டு பிடிப்பீர்கள்????????????????
thatti parthu oo;iyin mulamaga therinthu kollalam

lattif
11-02-2014, 03:29 PM
valathu kannukkum edathu kannukkum enna vithiyasam nu sollunga pakkalam?

pgk53
02-03-2014, 12:47 AM
புதிர் எண்-552:

இந்த புதிரின் கீ நோட் "நினைத்துக் கொள்ளுங்கள்." என்பது தான். வெறும் கற்பனை. இன்னும் கட்டப்பட வில்லை.எனவே , கட்டடம் கட்டி முடித்த பின் வெளியே வந்து விட்டாதாக நினைத்துக் கொள்ள வேண்டும். கற்பனைதானே. ------------------------------------------------சபாஷ் முரளி..........சரியானவிடை -----வாழ்த்துக்கள்

pgk53
02-03-2014, 12:48 AM
புதிர் எண்-553

இரண்டு உருளைகளும் மூடியிருந்தால், தண்ணீரில் மிதக்க விடலாம். காலியான உருளையை விட உலோகம் நிரம்பிய உருளை வேகமாக மூழ்கி விடும். காலி உருளை, தண்ணீர் நிரம்பிய பிறகே மூழ்கும்.

அல்லது, இரண்டு உருளையையும் கொஞ்சம் பள்ளத்தை நோக்கி உருட்டலாம். எது வேகமாக போகிறதோ, அது, உலோகம் நிரம்பிய உருளை. ஆனால், அதில் கொஞ்சம் பிரச்சனை உள்ளது. உருளை கொஞ்சம் நசுங்கி இருந்தால், அது நகராது. தவறன முடிவுக்கு தள்ளி விடும். ஏதோ பார்த்து செய்யுங்கள்...-----------------------------மீண்டும் பாராட்டுக்கள் முரளி.

pgk53
02-03-2014, 12:49 AM
புதிர் எண்-554
மூன்று பெண்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு பிள்ளைகள்.
அவர்கள் உணவருந்துவதற்காக, ஒரு உணவகத்திற்கு செல்கிறார்கள். அங்கே ஏழு இருக்கைகள்தான் இருந்ததன.
இருந்தாலும் எல்லோரும் இருக்கையில் இருந்து சாப்பிட்டார்கள்.
அது எப்படி சாத்தியம்??????

pgk53
02-03-2014, 12:50 AM
புதிர் எண்-555
ஒரு ஊரில் ஒருவனுக்கு பறவைகள் பேசும் மொழியைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருந்தது.வெகு தொலைவில் இருந்த தனது அத்தை ஊருக்கு ஒரு வேலையாக தனது மனைவியை அழைத்துச் செல்லாமல் தான் மட்டும் போனான்.
வந்த வேலை முடிந்ததும், அப்படியே அத்தையின் வீட்டுக்கும் போனான். எதிர்பாராமல் வந்த மருமகனைக் கண்டதும் மகிழ்ந்த அத்தை, மருமகனை உபசரித்து, விருந்து வைத்தாள். பிறகு அவன் தனது ஊருக்குப் புறப்பட்டான். அவனிடம், நிறைய பலகாரங்கள் செய்து, ஒரு பெரிய குடத்தில் வைத்துக் கொடுத்து, " மருமகனே...இதில் நிறைய பலகாரங்கள் உள்ளன.போகும் வழியில் சாப்பிட்டுக்கொள். மீதம் உள்ளதை எனது மகளுக்கும் கொண்டுபோய் கொடு" என்று கூறி அனுப்பினார்கள்.
அவனும் நடக்க ஆரம்பித்தான் . மதிய வேளையில் சூரியனின் வெப்பம் தாளாமல், ஒரு குளத்தின் அருகே இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் குடத்தை இறக்கி வைத்துவிட்டு, குளத்தில் நீராடி , குடத்தைத் திறந்து, பலகாரங்களை வேண்டிய மட்டும் சாப்பிட்டான். பிறகு களைப்பு நீங்க அங்கேயே படுத்து ஒரு உறக்கமும் போட்டான். மாலைப் பொழுதானதும், எழுந்தான். குடத்தின் மூடியை எடுத்து குடத்தை இறுக மூடினான். தலையில் தூக்கிக்கொண்டு ஊரை நோக்கி புறப்பட்டான்.....அப்போது அந்த மரத்தில் இருந்த இரண்டு பறவைகள், அவனைப் பார்த்தன. " இவன் வழியில் மறுபடியும் தங்கினால் இவன் உயிர் போய்விடும்....வழியில் தங்காமல் வீட்டுக்குப் போனால் இவனது மனைவியின் உயிர் போய்விடும்" என்று கூறிவிட்டுப் பறந்து போயின.
பறவைகள் பேசியதன் பொருளை உணர்ந்த அவன் மிகுந்த குழப்பம் அடைந்தான். தான் வழியில் தங்கினால் தனது உயிர் போய்விடும்..தங்காமல் வீட்டுக்குப் போனால் தனது அன்பு மனைவி இறந்துவிடுவாள். என்ன செய்வதென்றே புரியவில்லை. அதனால் அவன் வீட்டுக்குப் போக மனதில்லாமல் , தனது ஊருக்கு அடுத்த ஊரில் இருந்த ஒரு அறிஞரின் வீட்டுக்குப் போனான்.அந்த அறிஞர் இதற்கு ஏதாவது நல்ல வழி காட்டுவார் என்று நினைத்தான்.
அறிஞரிடம் சென்று விபரத்தைக் கூறினான். கொஞ்ச நேரம் சிந்தித்த அவர் அவனிடம் சில கேள்விகளைக் கேட்டார். அவனும் பதில் கூறினான்
கவலைப்படாதே என்று கூறிய அறிஞர் அவனை அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றினார்.
அறிஞர் எப்படி அவனைக் காப்பாற்றினார்.?????

முரளி
02-03-2014, 05:27 AM
நன்றி PGK.

புதிர் எண்-554

விடை : ஒரு பாட்டி, அவளது இரண்டு பெண்கள், அந்த பெண்களுக்கு இரண்டு இரண்டு பெண்கள்` மொத்தம் ஏழு. சரியா? (சேலம் பக்கத்தில், பெண் குழந்தைகளை பிள்ளைகள் என்று சொல்வது வழக்கம். ஆண் குழந்தைகளை பசங்கம்பாங்க.)

ஸ்ரீசரண்
12-03-2014, 01:13 PM
புதிர் எண் - 555

திறந்திருக்கும் போது குடத்தினுள் பாம்பு நுழைந்திருக்கலாம்,

அவன் வழியில் தங்கினால், மீண்டும் பலகாரம் எடுக்க குடத்தினுள் கையை விடும் போது, பாம்பு தீண்டும் போது அவன் உயிர் போய் விடும்

அல்லது

அவன் வீட்டுக்கு சென்றால், அவன் மனைவி பலகாரம் எடுக்க கையை விடும் போது, பாம்பு தீண்டும் போது, அவன் மனைவியின் உயிர் போய் விடும்.

அறிஞர் இந்த விபரங்களை கூறி அவனை ஆபத்தில் இருந்து காப்பாற்றினார்.

nellai tamilan
25-03-2014, 02:38 PM
நண்பர் சரண் சொன்னது சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

nellai tamilan
26-03-2014, 07:12 AM
புதிர் எண்-554
மூன்று பெண்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு பிள்ளைகள்.
அவர்கள் உணவருந்துவதற்காக, ஒரு உணவகத்திற்கு செல்கிறார்கள். அங்கே ஏழு இருக்கைகள்தான் இருந்ததன.
இருந்தாலும் எல்லோரும் இருக்கையில் இருந்து சாப்பிட்டார்கள்.
அது எப்படி சாத்தியம்??????

நன்றி PGK.

புதிர் எண்-554

விடை : ஒரு பாட்டி, அவளது இரண்டு பெண்கள், அந்த பெண்களுக்கு இரண்டு இரண்டு பெண்கள்` மொத்தம் ஏழு. சரியா? (சேலம் பக்கத்தில், பெண் குழந்தைகளை பிள்ளைகள் என்று சொல்வது வழக்கம். ஆண் குழந்தைகளை பசங்கம்பாங்க.)

நண்பர் முரளி சொன்னது சரியே இருப்பினும்..
நானும் எனது பங்கிற்க்கு...

புதிர் 554 சொன்னது "மூன்று பெண்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு பிள்ளைகள்."
அவர்களின் பிள்ளைகள் உணவருத்த வந்ததாக சொல்லவில்லை...
ஆகவே மொத்தம் மூன்று பெண்கள். ஏழு இருக்கை இருந்த சாப்பிட ஏதுவாக இருக்குமே....

pgk53
31-03-2014, 03:18 AM
நன்றி PGK.

புதிர் எண்-554

விடை : ஒரு பாட்டி, அவளது இரண்டு பெண்கள், அந்த பெண்களுக்கு இரண்டு இரண்டு பெண்கள்` மொத்தம் ஏழு. சரியா? (சேலம் பக்கத்தில், பெண் குழந்தைகளை பிள்ளைகள் என்று சொல்வது வழக்கம். ஆண் குழந்தைகளை பசங்கம்பாங்க.)
மிகச் சரியான விடையளித்த முரளிக்கு எனது வாழ்த்துக்களவாருங்கள் அடுத்த புதிரைப் பார்ப்போம்

pgk53
31-03-2014, 03:19 AM
ஒரு மாத விடுமுறையில் தாயகம் வந்துள்ளமையால் அடிக்கடி மன்றத்துக்கு வர இயலவில்லை.அதனால் தாமதத்துக்கு மன்னிக்கவும்.

pgk53
31-03-2014, 03:24 AM
புதிர் எண் - 555

திறந்திருக்கும் போது குடத்தினுள் பாம்பு நுழைந்திருக்கலாம்,

அவன் வழியில் தங்கினால், மீண்டும் பலகாரம் எடுக்க குடத்தினுள் கையை விடும் போது, பாம்பு தீண்டும் போது அவன் உயிர் போய் விடும்--அல்லது

அவன் வீட்டுக்கு சென்றால், அவன் மனைவி பலகாரம் எடுக்க கையை விடும் போது, பாம்பு தீண்டும் போது, அவன் மனைவியின் உயிர் போய் விடும்.

அறிஞர் இந்த விபரங்களை கூறி அவனை ஆபத்தில் இருந்து காப்பாற்றினார்.

ஸ்ரீசரண் அவ்ர்கள் சரியான பதில் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

pgk53
31-03-2014, 03:25 AM
நண்பர்களே----------------------------நாளை அடுத்த புதிருடன் சந்திக்கின்றேன். வணக்கம்

dellas
03-04-2014, 12:33 PM
பல்பு எரியும்போது சூடாகும்தானே . பின் கண்டுபிடிப்பது எளிது.

pgk53
04-04-2014, 10:11 AM
புதிர் எண்-556

சென்னையில் ஒரு சுமங்கலி மாதர் சங்கத்துக்கு பத்தாவது ஆண்டு நிறைவு
விழா நடைபெற இருந்தது...அந்த விழாவை எப்படி சிறப்பாக நடத்துவது என்று கூடிப்பேசினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து கூறினார்கள்.

புகழ் எற்ற நடிகை ஒருவரை தலைமை தாங்க அழைப்பது-----சுதா ரகுநாதனின் பாட்டுக் கச்சேரி வைப்பது என்று பலவிதமான திட்டங்கள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அப்போது ஒரு பெண்மணி, விழாவுக்கு என்ன ஆடை அணிந்து வருவது என்ற கேள்வியை எழுப்பினார்.

பலவிதமான கருத்துக்களுக்கு இடையே ஒரு பெண்ணின் புதுமையான கருத்து பெரும்பாலான அங்கத்தினர்களைக் கவர, அதையே செயல் படுத்துவது என்று தீர்மானித்தார்கள்.

அதாவது, அவரவர்களின் கணவரது தலைமுடி என்ன நிறத்தில் உள்ளதோ அதே நிறத்தில் ஆடையணிந்து வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள

ஒருத்தி, " எனது கணவரின் தலைமுடி கருப்பு நிறம். அதனால் நான் கரும்பட்டுப் புடவை அனிந்து வருவேன்" என்றாள்.

அடுத்தவளோ, "நான் இளம் சிவப்பு பட்டு அணிந்து வருவேன். ஏனென்றால் எனது கணவரின் தலைமுடி இளஞ்சிவப்பு" என்றாள்.
ஒருத்தியோ, " நான் வெண்பட்டுதான் அணியவேண்டும். எனது கணவரின் நலை நரைத்துவிட்டது" என்றாள்.

கடைசியாக ஒருவள் எழுந்து, "இந்த திட்டம் சரிப்படாது.நான் விழாவுக்கு வரவில்லை" என்றாள்.

அவள் ஏன் விழாவுக்கு வர இயலாது என்று கூறினாள். சொல்லுங்களேன்!!!!!

மும்பை நாதன்
04-04-2014, 05:18 PM

அந்த பெண்ணின் கணவருக்கு தலையில் முடியே இல்லை (வழுக்கைத்தலை).

ஜான்
05-04-2014, 11:50 AM
பாராட்டுகள் மும்பைநாதன்

sarcharan
08-04-2014, 01:25 PM
கணவரின் தலை ஒரு சறுக்குமரமா?

மும்பை நாதன்
08-04-2014, 04:44 PM
பாராட்டுகள் மும்பைநாதன்
இன்னும் நடுவர் தீர்ப்பு வவில்லையே. என்றாலும் பாராட்டுக்கு நன்றி, ஜான்.

மும்பை நாதன்
08-04-2014, 04:55 PM
கணவரின் தலை ஒரு சறுக்குமரமா?

அதே..அதே..!

dellas
09-04-2014, 12:23 PM
ஏழு திருடர்கள் சேர்ந்து ஒரு அரண்மனையில் கொள்ளை அடித்தனர். அதில் அவர்களுக்கு ஒரு மூட்டை அளவிற்கு முத்துக்கள் கிடைத்தன.
அதை ஒரு மறைவிடத்தில் வைத்து அவரவர் இல்லங்களுக்கு சென்று விட்டனர்.

இதில் ஒருவன் மட்டும் அனைத்து முத்துக்களையும் தானே எடுத்துக்கொள்ள முடிவு செய்து, இரவில் தனியாக அந்த மறைவிடத்தை அடைந்தான். அவன் அந்த மூட்டையை முதுகில் சுமந்து கொண்டு திரும்புகையில் அடுத்தவன் வந்துவிட்டான். இருவரும் பேசி சமமாக பங்கு வைப்பது என்ற முடிவிற்கு வந்தனர். ஆனால் சம பங்கு வராமல் ஒரு முத்து மட்டும் மீதம் இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் மீண்டும் ஒருவன் வந்து விட்டான்.வேறு வழி இல்லாமல் மூன்று பங்கு வைத்தனர். இப்போதும் ஒரு முத்து மீதமிருந்தது.

இப்படியே நான்காமவன், ஐந்தாமவன், ஆறாமவன் வந்தனர். ஆனால் முறையே அத்தனை பங்கு வைத்தபோதும் ஒரு முத்து மட்டும் மீதம் வந்துகொண்டே இருந்தது. இறுதியாக கடைசியாமவன் வந்தபின் ஏழு பங்கு, அனைவருக்கும் சமமாக முத்துக்கள் கிடைத்ததோடு மீதமும் வரவில்லை.

அப்படியானால் முத்துக்களின் மொத்த எண்ணிக்கை என்னவாக இருக்கும்?

dellas
09-04-2014, 12:25 PM

09-04-2014, 04:42 PM
421?சரியா?

dellas
10-04-2014, 06:27 AM
இல்லை. 421 முத்துக்கள் ஏழு பேருக்கு மீதமில்லாமல் பங்கு வராது.

அன்புரசிகன்
10-04-2014, 08:32 AM
5 , 2 ஆல் வகுக்கும் போதும் 1 வருகிறது என்பதால் இறுதி ஒன்றாம் தானத்தில் 1 தான் இருக்க வேண்டும். அவை 7ஆல் வகுபடும் என்பதால் 21 இல்லை. அடுத்தது அடுத்த 13 இல் முடிவது 91 இல்லை.
இவ்வாறு பார்த்தால் 43 ஆல் 7 ஐ பெருக்க வருவது 301 அது மற்ற வற்றை திருப்தி படுத்துவதால்

301 முத்துக்கள்.

dellas
10-04-2014, 09:37 AM
விடை 7 ன் மடங்காக இருக்கவேண்டும் என்பதுதான் பிரதானம்.
சரியான விடை. வாழ்த்துக்கள்.

dellas
10-04-2014, 09:38 AM
விடை 7 ன் மடங்காக இருக்கவேண்டும் என்பதுதான் பிரதானம்.
சரியான விடை. வாழ்த்துக்கள்.

dellas
10-04-2014, 12:25 PM
ஓடும் தொடர் வண்டியில் ஒரு பாதிரியார் கொலை செய்யப்படுகிறார். அதை புலன்விசாரணை செய்ய ஒரு புதிதாக வேலைக்கு சேர்ந்த இளம் துப்பறியும் அதிகாரி அனுப்பி வைக்கபடுகிறார். அவரும் விசாரணை செய்துவிட்டு அறிக்கையை உயர் அதிகாரியிடம் சமர்பிக்கிறார். அதை நன்கு ஆராய்ந்த உயர் அதிகாரி அந்த அறிக்கை சரியானதாக இல்லை என்று நிராகரிக்கிறார். பின்வரும் தகவல்கள் கொண்ட அறிக்கையில் என்ன தவறு என்று தெரியவில்லை.

1. பாதிரியார் அமர்ந்த நிலையில் உள்ளார்.
2.அவரது இடப்பக்க மேல் மார்பில் 5 அங்குல நீள கத்தி சுமார் 3 அங்குல அளவிற்கு சொருகப்பட்டுள்ளது.
3.கத்தியின் கைப்பிடி உலோகத்தால் ஆனது.
4.வெள்ளை அங்கியில் இரத்தம் காய்ந்த நிலையில் உள்ளது.
5.அங்கி வழியே வடிந்த இரத்தம் அவரின் பாதமருகில் தேங்கி உள்ளது.
6.எதிர் இருக்கையில் யாரும் வரவில்லை.
7.கண்கள் திறந்த நிலையில் உள்ளது.
8.கண் கண்ணாடி ஒரு காதில் மட்டுமே தொங்கிக்கொண்டு இருக்கிறது.
9.விவிலியம் திறந்து அவர்மடி மீது கிடக்கிறது. 567 மற்றும் 568 ம் பக்கங்கள்.
10.விவிலியத்தில் வேறு எந்த தகவல்களும் இல்லை. வாங்கிய கடை உட்பட.
11.வண்டியின் ஓட்டத்திற்கு இணை திசையில் அமர்ந்துள்ளார்.
12.சாளரங்கள் இரண்டும் அடைக்கப்பட்டுள்ளன.
13.இருக்கையில் எந்த சேதமும் இல்லை.
14.வலைக்கை ஆட்காட்டி விரலில் ஒரு புதிய கத்திக் கீறல் உள்ளது.
15.எந்த ஒரு காலணிகளும் அந்த பெட்டியில் இல்லை.
16. கீழ் உதட்டில் காயம் உள்ளது. வீங்கி இருக்கிறது.

ஜான்
10-04-2014, 03:22 PM
தகவல் 9&10 இல் ஏதோ இருக்கிறது?

அன்புரசிகன்
11-04-2014, 11:47 PM
சில தரவுகள் புரியவில்லை. குறிப்பிட்டவர்களுக்குத்தான் தெரியுமோ??? புகையிரத ஓட்டத்திற்கு முதலில் கீழே விழுந்திருக்கலாம். தவிர கத்திக்குத்துக்கு துடிதுடித்திருக்கலாம். ச்சீ... அமீரின் மிஸ்கினின் படங்கள் போல இருக்கு. :D

கும்பகோணத்துப்பிள்ளை
13-04-2014, 12:25 AM
நிறைய முரண்பாடுகளும் முக்கிய தகவல்களும் இல்லை

1. கத்தியின் நீளம் சரியானதாகவில்லை
2. இரத்தம் பற்றிய குறிப்பு சரியில்லை
3. பாதிரியாரின் பெயர் மற்றும் பயணவிவரங்களில்லை அவர் அந்த புகைவண்டியில் பயணித்தவர்தானா என்ற செய்தியே இல்லை (காலனிகள் இல்லததும் ஒரு சந்தேக காரணம்)
4. குறிப்புகள் முழுமையானதாவில்லை (மேற்கூறியதுபோல் மேலும் பல கூற ஏதுவாகவிருக்கிறது)

dellas
13-04-2014, 06:09 AM
பாதிரியாரின் பேர் மற்றும் விபரங்கள் தேவைதான். ஆனால் அதில் தவறு நடக்க வாய்ப்பில்லை.

ஆடையில் படிந்த ரத்தம் விரைவில் உலர்ந்துவிடும்.

5 அங்குல நீல கத்தியில் சுமார் கைப்பிடி நீளம் உட்படவில்லை.

காலணி அணியாத பாதிரியார்களும் உண்டல்லவா?

dellas
13-04-2014, 06:10 AM

23-04-2014, 04:29 PM
ஓடும் தொடர் வண்டியில் ஒரு பாதிரியார் கொலை செய்யப்படுகிறார். அதை புலன்விசாரணை செய்ய ஒரு புதிதாக வேலைக்கு சேர்ந்த இளம் துப்பறியும் அதிகாரி அனுப்பி வைக்கபடுகிறார். அவரும் விசாரணை செய்துவிட்டு அறிக்கையை உயர் அதிகாரியிடம் சமர்பிக்கிறார். அதை நன்கு ஆராய்ந்த உயர் அதிகாரி அந்த அறிக்கை சரியானதாக இல்லை என்று நிராகரிக்கிறார். பின்வரும் தகவல்கள் கொண்ட அறிக்கையில் என்ன தவறு என்று தெரியவில்லை.

1. பாதிரியார் அமர்ந்த நிலையில் உள்ளார்.
2.அவரது இடப்பக்க மேல் மார்பில் 5 அங்குல நீள கத்தி சுமார் 3 அங்குல அளவிற்கு சொருகப்பட்டுள்ளது.
3.கத்தியின் கைப்பிடி உலோகத்தால் ஆனது.
4.வெள்ளை அங்கியில் இரத்தம் காய்ந்த நிலையில் உள்ளது.
5.அங்கி வழியே வடிந்த இரத்தம் அவரின் பாதமருகில் தேங்கி உள்ளது.
6.எதிர் இருக்கையில் யாரும் வரவில்லை.
7.கண்கள் திறந்த நிலையில் உள்ளது.
8.கண் கண்ணாடி ஒரு காதில் மட்டுமே தொங்கிக்கொண்டு இருக்கிறது.
9.விவிலியம் திறந்து அவர்மடி மீது கிடக்கிறது. 567 மற்றும் 568 ம் பக்கங்கள்.
10.விவிலியத்தில் வேறு எந்த தகவல்களும் இல்லை. வாங்கிய கடை உட்பட.
11.வண்டியின் ஓட்டத்திற்கு இணை திசையில் அமர்ந்துள்ளார்.
12.சாளரங்கள் இரண்டும் அடைக்கப்பட்டுள்ளன.
13.இருக்கையில் எந்த சேதமும் இல்லை.
14.வலைக்கை ஆட்காட்டி விரலில் ஒரு புதிய கத்திக் கீறல் உள்ளது.
15.எந்த ஒரு காலணிகளும் அந்த பெட்டியில் இல்லை.
16. கீழ் உதட்டில் காயம் உள்ளது. வீங்கி இருக்கிறது.

தகவல் எண் 9 தவறானது.

ஏனென்றால் புத்தகத்தின் பக்கங்கள் 567, 568 இரண்டும் ஒரே தாளின் இரு பக்கங்கள்.

திறந்திருக்கும் விவிலியத்தின் இரு பக்கங்களாக அவை வர முடியாது.

vasanthy2k7
23-04-2014, 05:00 PM
முதல் பொத்தானை போடவும், 5 நிமிடம் கழித்து இரண்டாவது பொத்தானை போடவும், இப்போது மேலே சென்று பார்க்கவும், இரண்டாவது பொத்தான் எரியும் விளக்கிற்க்கும், எரியாத விளக்கில் எது சுடுகின்றதோ அது முதல் பொத்தானிற்க்கும், மீதம் உள்ளது 3வது பொத்தானிற்க்கும் ஆனது...

vasanthy2k7
23-04-2014, 05:08 PM
ஒரு தகப்பனும் மகனும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளாகி, தந்தை அந்த இடத்திலேயே இறந்துபோகிறார். அந்தப் பையனுக்கு மிக பலமாக அடிபட்டு, மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறான்.அவனுக்கு உடனடியாக சிக்கலான ஆப்பரேஷன் செய்யவேண்டிய நிலை. மருத்துவரை அவசரமாக அழைத்து அந்தப் பையனுக்கு அப்பரேஷன் செய்யும்படி கூறுகிறார், தலைமை மருத்துவர்.ஆனால் மருத்துவரோ, அந்தப் பையனைப் பார்த்ததும், " ஐயோ மகனே.."...என்று அழுது தன்னால் தனது மகனுக்கு ஆப்பரேஷன் செய்ய இயலாது என்றும், வேறு மருத்துவரை அழைக்கும்படியும் வேண்டுகிறார்.
கேள்வி:-
தந்தைதான் இறந்துவிட்டாரே? இந்த மருத்துவர் ஏன் மகனே என்று அழைத்தார்?
ஒரு தகப்பனும், மகனும் தான் செல்கிறார்களே தவிர, தகப்பனும் அவரது மகனும் அல்ல, அதாவது விபத்துக்குள்ளானவர்கள் தகப்பனும் அவரது மகனும் அல்ல...

dellas
24-04-2014, 05:40 AM
தகவல் எண் 9 தவறானது.

ஏனென்றால் புத்தகத்தின் பக்கங்கள் 567, 568 இரண்டும் ஒரே தாளின் இரு பக்கங்கள்.

திறந்திருக்கும் விவிலியத்தின் இரு பக்கங்களாக அவை வர முடியாது.

மிகச்சரியான பதில்.

வாழ்த்துக்கள்.

dellas
24-04-2014, 05:41 AM
தகவல் எண் 9 தவறானது.

ஏனென்றால் புத்தகத்தின் பக்கங்கள் 567, 568 இரண்டும் ஒரே தாளின் இரு பக்கங்கள்.

திறந்திருக்கும் விவிலியத்தின் இரு பக்கங்களாக அவை வர முடியாது.

மிகச்சரியான பதில்.

வாழ்த்துக்கள்.

ஸ்ரீசரண்
29-04-2014, 01:32 PM
நன்றி நண்பரே.............

pgk53
03-05-2014, 01:40 AM
அன்புள்ள தமிழ்மன்ற நண்பர்களே, இரண்டுமாத நீண்ட விடுமுறைக்குப் பின்பு மீண்டும் பணியிடம் திரும்பிவிட்டேன்.முதலில் நண்பர் டெல்லாஸ் அவர்களுக்கு எனது நன்றியும் வணக்கமும். நான் இல்லாத வேளையில் இரண்டு அருமையான புதிர்களைப் போட்டு அசத்தியமைக்கு மிக்க நன்றி.------வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்

pgk53
03-05-2014, 01:41 AM
புதிர் எண்-559
பவழத்தீவு என்ற நாட்டில் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது.
பட்டத்து யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து ஊருக்குள் அனுப்புவார்கள். அந்த யானை யாருக்கு மாலையிடுகின்றதோ அவர்களே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசராக இருந்து ஆட்சி செலுத்துவார்கள்.ஐந்து ஆண்டுக்காலம் தமது விருப்பம்போல் ஆளலாம். என்ன நினத்தாலும் செய்யலாம். 5 ஆண்டுகள் முடிந்ததும், அந்த நாட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய தீவில் இறக்கிவிடப்படுவார்கள். ஆள் யாரும் வசிக்காத கொடிய விலங்குகள் வாழும் தீவு அது. அந்த தீவில் இறக்கி விடப்பட்டவர் விரைவில் விலங்குகளுக்கு இரையாவார். மீண்டும் பட்டத்து யானை அடுத்த அரசனைத் தேர்ந்தெடுக்கும்.
இப்படி இருக்கையில் ஒருமுறை பட்டத்து யானை அறிவழகன் என்பவரைத் தேர்வு செய்தது. பெயருக்கு ஏற்றார்ப்போல் அவர் அறிவிற் சிறந்தவர். நல்ல ஆட்சியைக் மக்களுக்குக் கொடுத்தார்.அவரும் மகிழ்வுடன்..இருந்தார்.
ஐந்து ஆண்டுக்காலம் முடிந்தது. அவரைத் தீவில் கொண்டுபோய் விடுவதற்காக வீரர்கள் வந்து அவரை அழைத்தார்கள்.இ தற்கு முன்பு இருந்த அரசர்களைப் போல் அந்தத் தீவுக்குப் போக பயந்து, அறிவழகனும் அழுது புலம்பாமல் மகிழ்வுடன் சிரித்தபடி வீரர்களுடன்..சென்றார்.
அந்தத் தீவில் இறங்கி கவலையே இல்லாமல் தீவுக்குள் சென்றார்.
நன்பர்களே....ஏன் அறிவழகன் மற்ற அரசர்களைப் போல் அழுது புலம்பாமல் மகிழ்வுடன் சென்றார்?

pgk53
03-05-2014, 01:42 AM

03-05-2014, 02:07 AM
தனது ஆட்சிக் காலத்தில் அந்தத் தீவில் இருந்த கொடிய மிருகங்களை அழித்துவிட ஏற்பாடு செய்துகொண்டரோ?

ஸ்ரீசரண்
05-05-2014, 03:50 PM
புதிர் எண்-559
பவழத்தீவு என்ற நாட்டில் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது.
பட்டத்து யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து ஊருக்குள் அனுப்புவார்கள். அந்த யானை யாருக்கு மாலையிடுகின்றதோ அவர்களே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசராக இருந்து ஆட்சி செலுத்துவார்கள்.ஐந்து ஆண்டுக்காலம் தமது விருப்பம்போல் ஆளலாம். என்ன நினத்தாலும் செய்யலாம். 5 ஆண்டுகள் முடிந்ததும், அந்த நாட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய தீவில் இறக்கிவிடப்படுவார்கள். ஆள் யாரும் வசிக்காத கொடிய விலங்குகள் வாழும் தீவு அது. அந்த தீவில் இறக்கி விடப்பட்டவர் விரைவில் விலங்குகளுக்கு இரையாவார். மீண்டும் பட்டத்து யானை அடுத்த அரசனைத் தேர்ந்தெடுக்கும்.
இப்படி இருக்கையில் ஒருமுறை பட்டத்து யானை அறிவழகன் என்பவரைத் தேர்வு செய்தது. பெயருக்கு ஏற்றார்ப்போல் அவர் அறிவிற் சிறந்தவர். நல்ல ஆட்சியைக் மக்களுக்குக் கொடுத்தார்.அவரும் மகிழ்வுடன்..இருந்தார்.
ஐந்து ஆண்டுக்காலம் முடிந்தது. அவரைத் தீவில் கொண்டுபோய் விடுவதற்காக வீரர்கள் வந்து அவரை அழைத்தார்கள்.இ தற்கு முன்பு இருந்த அரசர்களைப் போல் அந்தத் தீவுக்குப் போக பயந்து, அறிவழகனும் அழுது புலம்பாமல் மகிழ்வுடன் சிரித்தபடி வீரர்களுடன்..சென்றார்.
அந்தத் தீவில் இறங்கி கவலையே இல்லாமல் தீவுக்குள் சென்றார்.
நன்பர்களே....ஏன் அறிவழகன் மற்ற அரசர்களைப் போல் அழுது புலம்பாமல் மகிழ்வுடன் சென்றார்?

தமது ஆட்சிக்காலத்தில் அந்த விதியை மாற்றி விட்டார்.........

dellas
07-05-2014, 09:48 AM
தனியாக இல்லாமல் வீரர்களுடன் சென்றதால் கவலைப்பட தேவை இல்லையே.

kochadaiyan
15-05-2014, 05:24 AM
பட்டத்து யானையை போட்டு தள்ளி இருப்பார்

nellai tamilan
18-05-2014, 02:33 PM
தனது ஆட்சிக்காலத்தில்...
தீவில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும்,
தீவிலிருந்து நாட்டிற்கு திரும்புவதற்க்கான ஏற்பாடும் செய்திருப்பார்..
ஆதலால்தான் பயம் இல்லாமல் தீவிற்க்குள் நடந்து சென்றார்

nellai tamilan
18-05-2014, 02:34 PM
தனது ஆட்சிக்காலத்தில்...
தீவில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும்,
தீவிலிருந்து நாட்டிற்கு திரும்புவதற்க்கான ஏற்பாடும் செய்திருப்பார்..
ஆதலால்தான் பயம் இல்லாமல் தீவிற்க்குள் நடந்து சென்றார்

ஸ்ரீசரண்
19-05-2014, 02:36 PM
மன்னர் அறிவழகன் தமது ஆட்சிக்காலத்தில் அந்த தீவுக்கு ரகசியமாக ஆட்களை அனுப்பி கொடிய விலங்குகளை அழித்துவிட்டு, மக்களை குடியேறச் செய்து விட்டார்.

இந்த புதிருக்கு விடை நேற்றைய தினமணிக்கதிரில்(18-05-2014) வந்துள்ளது.

நண்பர் ஜானின் பதிலோடு ஒத்துப்போகிறது.

pgk53
13-06-2014, 03:14 AM
புதிர் எண் 559க்கு அனைவருமே சரியான பதில் கூறியுள்ளார்கள். வாழ்த்துக்கள். வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்

pgk53
13-06-2014, 03:16 AM
புதிர் எண்-560
பாபு ஒரு திறமை மிக்க குதிரை ஓட்டும் ஜாக்கி.
அவன் ஒருமுறை ஊட்டிக்கு உல்லாசப் பயணம் சென்றிருந்தான்.
அவன் ஊட்டி போன சமயம் அங்கே குதிரைப் பந்தயங்கள் நடக்கும் சீஸன்.
ஊட்டியில் அவனைக் கண்ட ஒரு குதிரைப் பயிற்சியாளர், “ ஹலோ பாபு, எங்கே இப்படி? குதிரைப் பந்தயத்தில் கலந்துகொள்ள வந்தீர்களா” என்று கேட்டார். அதற்கு பாபு இல்லை சும்மா அப்படியே உல்லாசப் பயணம்தான் என்றான்.
அந்த சமயத்தில் அந்தக் குதிரைப் பயிற்சியாளர், தனது வசமிருந்த ஒரு குதிரையை பந்தயத்தில் ஓட்டுவதற்கு ஒரு ஜாக்கியைத் தேடிக்கொண்டிருந்தார். அதனால் பாபுவிடம் தான் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு குதிரையை பந்தயத்தில் ஓட்ட அவனால் இயலுமா என்று கேட்டார்.
பாபு முதலில் கொஞ்சம் தயங்கினாலும் இறுதியில் குதிரைப் பந்தயத்தில் கலந்துகொண்டு அவரது குதிரையை ஓட்ட சம்மதித்தான்.
பாபுவை குதிரை இருக்குமிடம் அழைத்துச் சென்று குதிரையைக் காட்டினார். வாளிப்பான குதிரைதான் அது. அந்தக் குதிரை நன்றாக ஓடக்கூடிய ஜாதியைச் சேர்ந்தது என்று குதிரையைப் பார்த்ததுமே பாபு புரிந்துகொண்டான்.
பந்தயத் திடலுக்கு குதிரைக் கொண்டு சென்றார்கள்.
பாபு குதிரையில் ஏறி அமரும் முன்பாக பயிற்சியாளர் பாபுவிடம், “பாபு ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்.இந்தக் குதிரை கடும் வேகத்தில் ஓடக் கூடியது. அதனால் வளைவுகள் வரும்போது லகானை பயன்படுத்தி ஓடும் திசையை குதிரைக்கு உணர்த்தவேண்டும். மேலும் இடையிடையே தடை ஓட்டம் அமைத்திருப்பார்கள். அப்போதெல்லாம் தடைக் கம்பத்தை நெருங்கியதும் நீ குதிரையின் காதருகே குனிந்து ஜம்ப் என்று சொல்லவேண்டும். மறந்துவிடாதே” என்றார்.
பந்தயம் தொடங்கியது. முதல் வளைவு வந்ததும் வலது பக்கம் திரும்ப வேண்டும் என்று குதிரையின் லகானை வலது பக்கமாக அழுத்தம் கொடுத்தான். குதிரை கடும் வேகத்திலும் அழகாகத் திரும்பி ஓடியது. முதல் தடைக் கம்பம் வந்ததும் தான் ஜம்ப் என்று கூறவேண்டியதை பாபு கொஞ்சம் மெதுவாகக் கூறினான். காற்றில் ஒலியை காதில் வாங்காத குதிரை தடைக் கம்பத்தை தனது வேகத்தால் உடைத்துக்கொண்டு ஓடியது.
அடுத்த தடைக் கம்பம் வரும் சமயம் பாபு கொஞ்சம் சப்தமாக குரலில் ஜம்ப் என்றான் . அப்போதும் குதிரையின் ஓடும் வேகத்தால் அவனது கட்டளையை காதில் வாங்காமல் தடைக் கம்பத்தை உடைத்துக்கொண்டு ஓடியது. அதற்குப் பிறகு தடைக் கம்பங்கள் வரும்போதெல்லாம், பாபு குதிரையின் காதருகே குனிந்து ஜம்ப் என்று சப்தமாகக் கூறினான்.
குதிரை அநாயசமாக தடையைத் தாண்டி ஓடியது.
போட்டியின் இறுதியில் பாபுவின் குதிரை முதலில் வெற்றி இலக்கைத் தொட்டபோதிலும், முதலில் இரு தடைக் கம்பங்களை உடைத்துக்கொண்டு ஓடியதால் அதற்கு இரண்டாவது பரிசே அறிவித்தார்கள்.
பந்தயம் முடிந்து பயிற்சியாளரிடம் குதிரையை ஒப்படைத்தபடி என்ன உங்கள் குதிரை செவிட்டுக் குதிரையா.. ஏன் முதல் இரண்டு கம்பங்களை உடைத்துக்கொண்டு ஓடியது? என்று கேட்டான்.
பாபுவை தீர்க்கமாகப் பார்த்தபடி அந்தக் குதிரைப் பயிற்சியாளர் கூறிய பதிலைக் கேட்டதும் பாபு அதிர்ச்சியில் ஆழ்ந்து பேச வார்த்தைகளின்றி நின்றுவிட்டான்.
அன்பர்களே பாபு அப்படி அதிர்ச்சியடையும் வண்ணம் குதிரைப் பயிற்சியாளர் என்ன பதில் கூறியிருப்பார்????????????

ஸ்ரீசரண்
14-06-2014, 02:50 PM
குதிரையின் காதருகே குனிந்து தான் ஜம்ப் என்று சொல்ல வேண்டும். முதல் இரண்டு முறையும் காதருகே சொல்லவில்லை.

ஜான்
19-06-2014, 01:18 AM
காற்றின் வேகத்தில் குதிரைக்குக் கேட்க வில்லையோ?

lenram80
19-06-2014, 06:32 PM
குதிரை செவிட்டுக் குதிரை மட்டுமல்ல. குருட்டுக் குதிரையும் கூட. அதனால் தான் அதன் லகானை பயன்படுத்தி சரியான திசையில் அதை ஓட விட வேண்டும். அதே போல, அதன் காதை தொட்டால் அந்த குதிரை தாவும். எனவே அவன் குனிந்து அதன் காதை தொட்டு (அதாவது அவன் முகத்தால் அதை உரசி) "ஜம்ப்" என்னும் போது - அவன் சொன்னதால் அது தாண்டவில்லை. மாறாக அவன் அதன் காதை தொட்டதால் அது தாவியது.

சரியா?

pgk53
11-07-2014, 02:42 AM
நண்பர் லென்ராம் அவர்கள் சரியான பதிலைக் கூறியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------"பாபு குதிரையில் ஏறி அமரும் முன்பாக பயிற்சியாளர் பாபுவிடம், “பாபு ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்.இந்தக் குதிரை கடும் வேகத்தில் ஓடக் கூடியது. அதனால் வளைவுகள் வரும்போது லகானை பயன்படுத்தி ஓடும் திசையை குதிரைக்கு உணர்த்தவேண்டும். மேலும் இடையிடையே தடை ஓட்டம் அமைத்திருப்பார்கள். அப்போதெல்லாம் தடைக் கம்பத்தை நெருங்கியதும் நீ குதிரையின் காதருகே குனிந்து ஜம்ப் என்று சொல்லவேண்டும். மறந்துவிடாதே” என்றார்.-----------------------------------------------------------------------------------------------------------------------புதிரில் வரும் இந்த வரிகளை கொஞ்சம் கவனமாகப் படித்தால் புதிரை சுலபமாக தீர்க்கலாம்.

pgk53
11-07-2014, 02:43 AM
வாருங்கள் நண்பர்களே..................................அடுத்த புதிருக்குப் போய் மாடு பிடித்து வெல்லலாம்!!!!!!!!!!!!!!!!!!!

pgk53
11-07-2014, 02:45 AM
புதிர் எண்-561
பாபு ஒரு அழகான இளைஞன்.
அவன் ஒருநாள் ஒரு அழகான பெண்ணை கடைவீதியில் கண்டான்…காதல் கொண்டான். விசாரித்ததில் அவள் பெயர் தீபா என்றறிந்தான். அவள் பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்தில் ஒரு பெரும் ஜமீன்தாரின் மகள் என்றும் தெரிந்துகொண்டான்,

மன உறுதியுடன் ஒருநாள் அந்தக் கிராமத்துக்குச் சென்று தீபாவின் அப்பாவைப் பார்த்து, தான் தீபாவை திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினான்.

அவனை ஏற இறங்கப் பார்த்தவர், “ தீபாவை நீ திருமணம் செய்யவேண்டுமானால் நீ ஒரு காரியம் செய்யவேண்டும்.என்னிடம் மூன்று காளைமாடுகள் உள்ளது. அதில் ஏதாவது ஒரு மாட்டின் வாலைப் பிடித்து மாட்டை ஓடவிடாமல் நிறுத்த வேண்டும். இதைச் செய்தாயானால் கட்டாயம் தீபா உனக்குத்தான்” என்றார்.

பாபுவும் அதற்கு ஒத்துக்கொண்டான். ஜமீந்தார் அவனை மாட்டுக்கொட்டடிக்கு அழைத்துச் சென்றார்.. பாபுவை வெளி வாசலில் நிறுத்திவிட்டு முதலில் ஒரு மாட்டை அவிழ்த்து வெளியே கொண்டுவரும்படி வேளையாளிடம் கூறினார்.

முதலில் ஒரு மாடு வெளியே வந்தது. அதைக் கண்ட பாபு மிரண்டுபோனான். அதன் திமிலும் ஆஜானுபாகுவான உடலும் கண்டு திகைத்தான். இந்த மாட்டை தன்னால் பிடிக்க இயாலாது அ தனால் இதை விட்டுவிட்டு அடுத்த மாட்டைப் பிடிப்போம் என்று முடிவு செய்து ஒரு ஓரமாக ஒதுங்கினான்.

அந்த மாடு போய்விட்டது. அதன் பிறகு அடுத்த மாட்டை அவிழ்த்து வெளியே கொண்டு வந்தார்கள்.

அதைப் பார்த்த பாபுவுக்கு மூச்சே நின்று போனதுபோல் ஆனது. இந்த மாட்டைவிட முதலில் வந்த மாடே பரவாயில்லை. இது அதைவிட மூர்க்கமான மாடாக அல்லவா இருக்கின்றது. நிச்சயம் இந்த மாட்டைப் பிடிக்க முடியாது என்று.அடுத்த மாட்டை முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்து மீண்டும் ஓரமாக போய்விட்டான்.

மூன்றாவது மாடும் அவிழ்த்துவிடப்பட்டது.
எதிரில் வந்த அந்த மாட்டைப் பார்த்ததும் பாபு மகிழ்ச்சியில் துள்ளினான். ஏனென்றால் அது ஒரு நலிந்த நிலையில் இருந்த மாடு வேகமாக ஓடக்கூட இயலாத நிலையில் மெதுவாக நடந்து வந்தது. ஒரு கையால்கூட அதைப்பிடித்து நிறுத்திவிடலாம் . தான் அதிர்ஷ்டக்காரன்தான் என்று என்னினான்.
ஆ னால் அதைப் பிடிக்க அருகின் சென்றவன் திகைத்து சிலையாக நின்றான்.

அன்பர்களே…பாபுவுக்கு என்ன ஆனது.ஏன் நலிந்த நிலையில் வந்த மாடாக இருந்தும் அவன் திகைத்து நின்றான்.கூறுங்கள்?????????????

ஸ்ரீசரண்
11-07-2014, 03:10 PM
வந்தது பசுங்கன்று.............

காளைக்கன்று அல்ல..................

lenram80
11-07-2014, 09:23 PM
புதிர் எண்-561
“ தீபாவை நீ திருமணம் செய்யவேண்டுமானால் நீ ஒரு காரியம் செய்யவேண்டும்.என்னிடம் மூன்று காளைமாடுகள் உள்ளது. அதில் ஏதாவது ஒரு மாட்டின் வாலைப் பிடித்து மாட்டை ஓடவிடாமல் நிறுத்த வேண்டும். இதைச் செய்தாயானால் கட்டாயம் தீபா உனக்குத்தான்” என்றார்.

அன்பர்களே…பாபுவுக்கு என்ன ஆனது.ஏன் நலிந்த நிலையில் வந்த மாடாக இருந்தும் அவன் திகைத்து நின்றான்.கூறுங்கள்?????????????

அந்த மாட்டிற்கு வால் இல்லை.

கும்பகோணத்துப்பிள்ளை
29-07-2014, 11:57 AM
அந்த பசுமாட்டிற்க்கு பின்னால் அந்த இரண்டாவது மாடு!!!
என்ன செய்வார் பாவம்!.....!:lachen001:

pgk53
12-08-2014, 11:03 AM
அந்த மாட்டிற்கு வால் இல்லை.

சபாஷ் சரியாகச் சொன்னீர்கள் லென்ராம்.----------------அடுத்த புதிருடன் நாளை சந்திப்போம்

pgk53
12-08-2014, 11:04 AM
இப்போது ஒரு மாத விடுப்பில் தாயகம் வந்துள்ளேன்.புதியதாகத் தயாரித்த புதிரை பணியிடத்தில் உள்ள கணிணியில் இருந்து எடுத்துவர மறந்துவிட்டேன்.---அதனால் விரைவில் அடுத்த புதிரைத் தயாரித்தபின்பு உங்களைச் சந்திக்கின்றேன்

pgk53
24-09-2014, 05:28 AM
தாமதத்துக்கு மன்னிக்கவும்.---------------------------------------------------------------------------------------------------------------------வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்

pgk53
24-09-2014, 05:29 AM
புதிர் எண்-562

ஒரு ஊரிலே மாணிக்கம் என்று ஒருவன் இருந்தான். ஓரளவு செல்வம் மிக்கவன். ஏழைகளுக்கு இரங்கும் கருணை உள்ளம் கொண்டவன். அதே ஊரிலே கருப்பன் என்று ஒருவனும் இருந்தான். அவன் பேராசை மிக்கவன். ஏழைகளுக்குக் கடன் கொடுத்துக் கந்து வட்டி வாங்குவது அவனுக்குக் கை வந்த கலை.அந்த ஊரில் இருந்தவர்கள் மாணிக்கத்தைப் புகழ்ந்து பாராட்டியும், கருப்பனை இகழ்ந்தும் பேசுவார்கள்

மாணிக்கத்தின் புகழைக் கண்டு கருப்பன் மிகுந்த பொறாமை கொண்டான்.எப்படியாவது மாணிக்கத்தை ஒழித்துவிட வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தான்.

ஒருநாள் மாணிக்கத்தைப் பார்க்க அவனது நண்பன் வந்திருந்தான்.அவனுக்கும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு பெரும் பணக்காரரின் மகளுக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதாகவும், மணப்பரிசாக மணமகளுக்குக் கொடுக்க விலை உயர்ந்த வைர மோதிரம் ஒன்று வாங்கவேண்டும் என்றும், திருமணச் செலவு நிறைய ஆகி ,அவனிடம் பணப்பற்றாக்குறை இருப்பதினால், மாணிக்கம் கொடுத்து உதவினால், ஒரு மாத காலத்துக்குள் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் கூறினான்.
நண்பனுக்குத் திருமணம் கூடிவந்தது கேட்டு மாணிக்கம் மகிழ்ந்தான். ஆனால் அந்த சமயம் மாணிக்கத்திடம் கையிருப்பில் பணம் இல்லை. அவனுக்கும் ஒரு மாதத்துக்குள் பணம் வந்துவிடும். இருந்தாலும், நண்பன் கேட்கும்போது இல்லை என்று சொல்வது எப்படி என்று யோசித்து, மறுநாள் தருவதாகக் கூறினான்.
அன்று மாலையே, கருப்பனிடம் சென்று ஒரு மாதகாலத்தில் திரும்பக் கொடுப்பதாகக் கூறி ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்டான்.கருப்பனுக்கு ஒரே மகிழ்ச்சி. மாணிக்கம் தன்னிடம் மாட்டிக்கொண்டான் என்று நினைத்து, பணத்தைக் கொடுப்பதாகக் கூறினான்.ஆனால் ஒரு நிபந்தனை போட்டான். அதாவது அவனுக்கு வட்டி ஏதும் வேண்டாம் என்றும், சரியாக முப்பது நாளைக்குள் பணம் தர இயலாவிட்டால், மாணிக்கத்தின் உடலில் இருந்து அவன் விரும்பிய இடத்தில், ஒரு கிலோ சதையை வெட்டி எடுத்துக்கொள்ள சம்மதம் என்று மாணிக்கம் பத்திரம் எழுதிக் கொடுக்கவேண்டும் என்றும் கூறினான்.
மாணிக்கம் அதைப் பற்றி எதுவும் அதிகம் ஆலோசிக்காமல், எப்படியும் ஒரு மாதத்தில் பணம் வந்துவிடுமென்பதினால் சம்மதித்து பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுச் சென்று நண்பனுக்குக் கொடுத்தான்.நண்பனும் திருமணம் முடிந்து மனைவியை அழைத்துக்கொண்டு தேனிலவுப் பயணம் சென்று விட்டான்.
ஒரு மாதம் சென்றது. எதிர்பாரதவிதமாக மாணிக்கத்தின் பணம் கைக்கு வந்து சேர தாமதம் ஆகிவிட்டது.நண்பனும் தேனிலவு முடிந்து இன்னும் திரும்பி வரவில்லை. அதனால் கருப்பனிடம் வாங்கிய பணத்தைக் கூறியபடி கொடுக்க இயலாமல், கருப்பனிடம் சென்று எப்படியும் இன்னும் பத்து நாட்களுக்குள் பணம் கொடுப்பதாகக் கூறினான் மாணிக்கம்.
கருப்பன் இந்த சந்தர்ப்பத்துக்காத்தானே காத்திருந்தான். அவன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. " பத்திரத்தில் ஒத்துக்கொண்டபடி ஒரு கிலோ சதைதான் வேண்டும் அது இல்லாமல் நீ ஆயிரம் மடங்கு பணம் பத்து நாட்கள் கழித்துக் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்" என்றான்......அது மட்டும் இல்லாமல் அந்த பஞ்சாயத்தில் போய் வழக்கும் தொடுத்தான்.
பஞ்சாயத்து கூடியது. யார் என்ன சொன்னாலும் கருப்பன் ஒத்துக்கொள்ளவில்லை. தனக்கு ஒரு கிலோ சதைதான் வேண்டும் என்றான். அந்த பஞ்சாயத்து தலைவர் சிறந்த அறிவாளி.......சிறிது நேரம் ஆலோசனை செய்தார்..பிறகு கருப்பனின் கோரிக்கை நியாயமானதே என்றும், கருப்பன், மாணிக்கத்தின் உடலில் இருந்து ஒரு கிலோ சதையை அரிந்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக்கூறினார்.அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
கருப்பன் ஒரு கத்தியையையும் தராசையும் எடுத்துக்கொண்டு மாணிக்கத்தை நெருங்கி, எந்த இடத்தில் இருந்து சதையை அறுக்கலாம் என்று மாணிக்கத்தை ஏற இறங்கப் பார்த்தான்.
அப்போது "ஒரு நிமிஷம் பொறு கருப்பா" என்றால் பஞ்சாயத்துத் தலைவர்.கருப்பன் என்ன என்று கேட்டபடி அவரைப் பார்த்தான்.
அவர் கூறியதைக் கேட்டதும், தனக்கு மாணிக்கத்தின் உடலில் இருந்து சதை வேண்டாம்என்றும், தாமதம் ஆனாலும் பரவாயில்லை,தனது பணத்தை மட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும் என்றும் கூறினான்.............................................கருப்பன் ஏன் அப்படி திடீரென்று மாறினான்?????????????

dellas
24-09-2014, 12:09 PM
ரத்தம் வராமல் சதையை அறுக்க சொல்லி இருப்பார்

lenram80
24-09-2014, 06:10 PM
கூறியதைக் கேட்டதும், தனக்கு மாணிக்கத்தின் உடலில் இருந்து சதை வேண்டாம்என்றும், தாமதம் ஆனாலும் பரவாயில்லை,தனது பணத்தை மட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும் என்றும் கூறினான்

கருப்பன் பயந்திருக்கிறான். எனவே இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணி சொல்றேன்.

"எந்த அளவுக்கு மாணிக்கம் உடம்புலேருந்து ரத்தம் வருதோ,,, அந்த அளவுக்கு உன் உடம்பிலிருந்து சதை / ரத்தம் எடுத்துக் கொள்ளப்படும் " ந்னு கருப்பன்கிட்டே சொல்லி இருப்பார்

கோபாலன்
03-10-2014, 09:48 AM
இது "The Merchant of Venice" கதை தான?

nellai tamilan
27-10-2014, 02:37 PM
புதிர் எண்-562
கருப்பா... அவன் மீது ஒரு கிலோ சதையை எடுத்துக்கொள் மேலும் அவன் பணம் திருப்பி தந்தவுடன் அந்த ஒரு கிலோ சதையை மீண்டும் அவனது உடம்பில் ஒட்ட வைக்க வேண்டும் இல்லையேல் உனது உடம்பிலிருந்து ஒரு கிலோ சதையை அவனிடம் கொடுத்துவிடவேண்டும்.
என்று கூறி இருப்பார்.

pgk53
19-01-2015, 12:27 AM
அன்புள்ள மன்ற நண்பர்களே ....வணக்கம். ஒரு நீண்ட தவிர்க்க இயலாத பிரிவு....பணியிடத்தில் ஏற்பட்ட பெரும் மாறுதல் காரனமாக மன்றம் வர இயலாமல் போனது. அனைவரும் மன்னிக்க வேண்டுகின்றேன்.....இனி தொடர்ந்து உங்களைச் சந்திக்க முயற்சி செய்கின்றேன்.....வணக்கம்

pgk53
19-01-2015, 12:29 AM
புதிர் எண்-562க்குரிய நண்பர் டெல்லாஸ் அவர்களும் லென்ராம் அவர்களும் சரியான விடையை கூறியுள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்த புதிருடன் நாளை உங்களைச் சந்திக்கின்றேன்.

pgk53
25-01-2015, 12:53 AM
அன்பு நண்பர்களே,வணக்கம் பல.நீண்ட நாட்கள் கழித்து மறுபடியும் மன்றத்துக்கு வந்துள்ளேன். உங்கள் ஆதரவை எப்போதும்போல் அளித்து புதிர்களை படித்து இன்புற வேண்டுகின்றேன். வணக்கம்

pgk53
25-01-2015, 12:55 AM
புதிர் எண்-563

ஒரு ஊரிலே ஒரு கணவனும் மனைவியும் மிகவும் ஒற்றுமையாகக் குடும்பம் நடத்திவந்தார்கள்.
யார் கண் பட்டதோ தெரியவில்லை!.அவர்களுக்குள் சிறு சிறு சண்டைகள் தோன்றத் தொடங்கின.ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாததினால் , அதுவே பெரிய சண்டையாக மாறத் தொடங்கியது.
எப்படி இருந்தவர்கள் எப்படி மாறிவிட்டார்கள்??? என்று ஊரார் பேசத் தொடங்கினார்கள்

.ஒருநாள் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட கோபத்தை அடக்க இயலாத கணவன் மனைவியைப் பார்த்து இனிமேல் நீயாக வந்துதான் என்னிடம் பேசவேண்டும். அப்படிப் பேசாவிட்டால் என் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் பேசமாட்டேன்.இது உறுதி! என்று சொன்னான்.

அதற்கு அவளும், நானாக வந்து உங்களிடம் பேசும் அளவுக்கு நான் மதிப்பு தாழ்ந்துபோகவில்லை.இனி நீங்களாக வந்து என்னிடம் பேசினால்தான் நான் உங்களுடன் பேசுவேன். இல்லாமல் நானாக வந்து பேசமாட்டேன்.� என்று கூறினாள்.
அன்றிலிருந்து இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசாமலேயே வாழ்க்கையை நடத்திவந்தார்கள்.
இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன.

யாராவது ஒருவர் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து முன்வந்து பேசினால் போதும். இருவரும் பழையபடி மகிழ்வுடன் வாழலாமே� என்று இருவருமே நினைத்தார்கள். ஆனால் இருவரில் யாரும் தங்கள் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து முதலில் பேசத் தயாராக இல்லை.

இருவரையும் ஒற்ருமைப் படுத்த நினைத்தார் ஒரு பெரியவர்.இருவரிடமும் நடந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார். இருவருமே விட்டுக்கொடுத்து கீழிறங்கிவரத் தயாராக இல்லை என்பதை உணர்ந்தார்.

கொஞ்சம் சிந்தனை செய்தார். அவர்களில் இருவரில் ஒருவர் தான் கூறியபடி உறுதிமொழியைப் பின்பற்றவில்லை..என்பதை..உணர்ந்தார்.

அதை அவர்களுக்கு உணர்த்தி நிரூபித்து இருவரையும் ஒற்றுமைப் படுத்தினார்.
இப்போது..நீங்கள்..கூறுங்கள்.

அந்தப் பெரியவர் எப்படி அவர்கள் உறுதிமொழியின்படி நடக்கவில்லை என்பதை நிரூபித்தார்?????????

dellas
25-01-2015, 04:43 AM
"அதற்கு அவளும், நானாக வந்து உங்களிடம் பேசும் அளவுக்கு நான் மதிப்பு தாழ்ந்துபோகவில்லை.இனி நீங்களாக வந்து என்னிடம் பேசினால்தான் நான் உங்களுடன் பேசுவேன். இல்லாமல் நானாக வந்து பேசமாட்டேன்.� என்று கூறினாள்."

மனைவி பேசியாகி விட்டது. இனி கணவன் பேசலாம்.

arsvasan16
29-01-2015, 09:40 AM
இந்த பதில் மிகவும் சரியானது தான் நண்பரே....

pgk53
03-02-2015, 01:34 PM
அன்ப்ர் டெல்லாஸ் அவர்களின் விடை மிகச் சரியானது....வாழ்த்துக்கள்.

pgk53
03-02-2015, 01:35 PM
அன்பு நண்பர்களே, அடுத்த புதிர் கொஞ்சம் தலையை சுழல வைக்கும் விதமாக அமைந்துள்ள புதிர்......வருங்கள் . அது என்னவென்று பார்ப்போம்.

pgk53
03-02-2015, 01:37 PM
புதிர் எண்-564
இளவரசர் விக்கிரமாதித்தன் மூன்று தலைகளும், மூன்று வால்களும் கொண்ட அசுரனுடன் சண்டை போடச் சென்றார்.
இளவரசரிடம் ஒரு மந்திர வாள் இருந்தது.
அந்த வாள் ஒரு வீச்சிலே ஒரு தலை அல்லது இரண்டு தலைகள் அல்லது ஒரு வால் அல்லது இரண்டு வால்களை வெட்டக் கூடியது.

அந்த அசுரனின் ஒரு தலையைத் துண்டித்தால் அந்த இடத்தில் இன்னொரு தலை வளரும்.
ஒரு வாலை துண்டித்தால் அந்த இடத்தில் இரண்டு வால் வந்து விடும்.
இரண்டு வாலை துண்டித்தால் ஒரு தலை வந்து விடும்.
இரண்டு தலையைத் துண்டித்தால் ஒன்றும் வளராது.
அசுரனின் மூன்று தலைகளையும், மூன்று வால்களையும் துண்டித்துக் கொல்ல எத்தனை வீச்சுக்கள் தேவைப்படும்?

aren
04-02-2015, 01:29 PM
ஒன்பது வீச்சுகள்.

pgk53
04-02-2015, 02:46 PM
ஒன்பது வீச்சுகள்.
கொஞ்சம் விள்க்கமாகச் சொல்ல இயலுமா நண்பர் ஆரென்.

dellas
05-02-2015, 11:03 AM
ஒன்பது என்பது சரியான விடை.

வெட்ட வேண்டிய முறை.

1.1 வால் = மீதம் 4 வால்கள் + 3 தலைகள்.
2. 1 வால் = மீதம் 5 வால்கள் + 3 தலைகள்.
3. 1 வால்= மீதம் 6 வால்கள் + 3 தலைகள்.
4. 2 வால்கள் = மீதம் 4 வால்கள் +4 தலைகள்
5. 2 வால்கள் = மீதம் 2 வால்கள் + 5 தலைகள்
6. 2 வால்கள் = மீதம் 0 வால்கள் + 6 தலைகள்.
7. 2 தலைகள் = மீதம் 0 வால்கள் + 4 தலைகள்.
8. 2 தலைகள் = மீதம் 0 வால்கள் + 2 தலைகள்.
9. 2 தலைகள் = மீதம் 0 வால்கள் + 0 தலைகள்.

pgk53
16-02-2015, 01:48 PM
நண்பர் டெல்லாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான விளக்கம்.
நாளை அடுத்த புதிரைப் பார்ப்போம்

pgk53
20-02-2015, 01:58 AM
புதிர் எண்-565

நரேன் பிள்ளையாருக்கு 5 தேங்காய்கள் உடைப்பதாக வேண்டிக்கொண்டான்.
அப்படி உடைக்க வேண்டுமென்றால் அவன் 10 வாயிற் கதவுகளைத் தாண்டி செல்ல வேண்டும்.

ஒரு பைக்கு ஒரு தேங்காய் விதம் ஒவ்வொரு கதவை கடக்கும் போதும் வரி செலுத்த வேண்டும்.
அதிகபட்சம், ஒரு பையில்10 தேங்காய்கள் தான் வைக்கலாம்.
அவன் குறைந்தது எத்தனை தேங்காய்களை ஆரம்பித்த இடத்தில் இருந்து எடுத்துச் சென்றிருப்பான் ?

ஜான்
20-02-2015, 03:04 AM
20,இரண்டு பைகளில்
முதல் 5*2=10 ...ஒரு பை காலியாகும்

sarcharan
27-02-2015, 09:33 AM
நரேன் இரண்டு பைகளில் பத்து தேங்காய்கள் எடுத்து வந்தான்.
ஐந்தாவது வாயிற் கதவுகள் வரை பைக்கு ஒன்றாக வரி கொடுத்து சென்றான்.
அவனிடம் மீதம் இருப்பது பத்து தேங்காய்கள் (இரண்டு பைகளிலும் ஐந்து தேங்காய்கள்).
இதை இப்படியே எடுத்து சென்றால் புள்ளையாருக்கு பூஜ்யம் தான் என்று நினைத்து,
எல்லா தேங்காய்களையும் ஒரே பையில் போட்டு அந்த காலி பையையும் இதனுள் போட்டு நடக்க ஆரம்பித்தான்.
மேலும் ஐந்து தேங்காய்களை வாயிலுக்கு ஒன்றாக காவு கொடுத்து ஐந்து தேங்காய்களை எடுத்துச் சென்றான்.

நரேன் பிள்ளையாருக்கு 5 தேங்காய்கள் உடைப்பதாக வேண்டிக்கொண்டதை முடிவில் சுபமாய் நிறைவேற்றினான்

pgk53
06-03-2015, 02:19 AM
நண்பர்கள் ஜான் மற்றும் சர்சரன் இருவருமே சரியான விடையை அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.
வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்

pgk53
06-03-2015, 02:20 AM
புதிர் எண்-566

வீர்சிங் ஒருநாள் தனது நன்பரான ஒரு சர்தாரைப் பார்த்துப் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்

இறுதியில் சர்தார்களைப் பற்றி அடுத்தவர்கள் கேலியும் கிண்டலும் செய்யும் விஷயத்தில் வந்து நின்றது.

சர்தார்களை கேலிப் பொருளாக அடுத்தவர்கள் நினைப்பது வீர்சிங்கிற்குப் பிடிக்கவில்லை.. சர்தார்கள் எவருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை மற்றவர்களுக்கு நிரூபிக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தான்.

வீர்சிங்கிற்கு ஒரு அருமையான வழியை ஆலோசித்து அதை நண்பரிடம் கூறினான். ஆஹா அப்படியே செய்யலாம் என்று நண்பரும் ஒத்துக்கொண்டார்.

மறுநாள் பக்கத்தில் இருந்த கடற்கரைக்கு மாலை நேரத்தில் இருவரும் சென்றார்கள். அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக் கூட்டம் சேர ஆரம்பித்திருந்த்து.
வீர்சிங்கும் அவனது நண்பரும் கடற்கரையோரமாக நின்று கொண்டார்கள்.

வீர்சிங் கடலை நோக்கிக் கையைக் காட்டினான்.
அவனது நண்பர், ஆமாம் ஆமாம் வீர்சிங்---ஆஹா என்ன அற்புதமான காட்சி---- என்று சத்தமாகச் சொல்லிக்கொண்டே அவரும் கடலையே நோக்கியபடி நின்றிருந்தார்.

இவர்களைக் கண்ட மற்றவர்கள் கடலில் என்ன தெரிகிறது என்று பார்க்க ஆரம்பித்தார்கள்.ஆனால் வீர்சிங்கும் அவனது நண்பரும் பின்பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை.மேலும் மேலும் ஆஹா என்ன அற்புதமான காட்சி என்று சொல்லியபடியே இருந்தார்கள்.
அவர்கள் பின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூட ஆரம்பித்ததை மக்களின் சலசலப்பில் இருந்தும், பேச்சுக் குரல்களில் இருந்தும் ஊகித்துக்கொண்ட வீர்சிங்கும் அவனது நண்பரும், உள்ளூற நகைத்தபடியே, தாங்கள் சர்தாராக இருந்தும், எப்படி புத்திசாலித்தனமாக அடுத்தவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றோம் என்று தங்களைத் தானே மனதில் புகழ்ந்துகொண்டார்கள்.இரவு பத்து மணி ஆகிவிட்டது.

சரி இனியும் ஏமாற்றக் கூடாது என்று நினைத்துத் திரும்பி கூடி நின்றிருந்தவர்களைப் பார்த்து------அங்கிருந்தவர்களிடம் , பார்த்தீர்களா? சர்தாரின் புத்திசாலித் தனத்தை, என்று அருமையான கேள்வி ஒன்றைக் கேட்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

வீர்சிங்கும் அவனது நண்பரும் பின்பக்கம் திரும்பி அங்கிருந்தவர்களைப் பார்த்ததும், பலத்த அதிர்ச்சிக்கு ஆளானார்கள்!!!!!!!!!
விர்சிங்கும் அவனது நண்பரும் கூடியிருந்தவர்களைப் பார்த்ததும் ஏன் அதிர்ச்சி அடைந்தார்கள்?

அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கூட்டம் கூடியிருந்ததா?
அல்லது மிகவும் குறைவான ஆட்களே இருந்தார்களா?
அல்லது அவர்கள் இருவரையும் கைது செய்ய காவலர்கள் நின்றிருந்தார்களா?
வீர்சிங்கும் அவனது நண்பரும் ஏன் அதிர்ச்சி அடைந்தார்கள்?

pgk53
11-03-2015, 05:01 PM
நண்பர்களே,
புதிய புதிரை பதிவு செய்து 5 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை யாருமே விடை கொடுக்கவில்லையே???????????????????????

pgk53
22-03-2015, 02:06 AM
நண்பர்களே,

என்ன ஆயிற்று????????
யாருமே இந்த புதிருக்கு விடை அளிக்க முன்வரவில்லையே???????????

dellas
30-03-2015, 08:48 AM
என்ன விடை சொல்லவேண்டும் என்று தெரியவில்லை...நீங்களே சொல்லிவிடுங்கள்...
ஒருவேளை. எல்லாரும் அவர்களைப் பார்த்தபடி நின்றிருந்தார்களோ?..

pgk53
31-03-2015, 01:29 AM
நல்லது டெல்லாஸ் அவர்களே.
நானே விடையைக் கூறிவிடுகின்றேன்.
இது உண்மையாகவே ஒரு சர்தாஜி ஜோக்.
அந்த ஜோக்கையே, புதிர்ஃஆக கொடுத்தேன்.

வீர்சிங்கும் அவனது நண்பரும் , இனியும் ஏமாற்றக்கூடாது என்று திரும்பிப்பார்த்தார்களே??????

அங்கே நின்றிருந்த பெருங்கூட்டம் அனத்தும் சர்தார்ஜிகளே.!!!!!!!!!!!!!!!!!!

dellas
31-03-2015, 07:05 AM
அடடா..நல்ல கதைதான்.

pgk53
05-04-2015, 02:04 AM
புதிர் எண்-567

திறமைசாலியான திருடன் ஒருவனுக்கு , ஒரு குறிப்பிட்ட தனியார் விமானத்தில் பெரும் மதிப்பு கொண்ட வைரம் கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்த்து.
சில தந்திரங்கள் செய்து அந்த விமான சிப்பந்திகளில் ஒருவனாக அவனும் இனைந்துகொண்டான்.
அவனையும் சேர்த்து அந்த விமானத்தில் மொத்தம் ஒன்பது ஆட்கள் இருந்தார்கள்.
விமானம் புறப்படும் நேரம் வந்தது. விமானம் ஓடுகளத்தில் நுழைந்ததும், அவன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விமானியின் நெற்றியில் வைத்து, உடனே விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு ஒன்பது பாராசூட் கொண்டுவந்து கொடுக்கும்படி கட்டளையிட்டான்.
நிலைமையைப் புரிந்துகொண்ட விமானி, கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு, அவர்கள் உள்ள நிலைமையைக் கூறி அனைவரும் உயிர் பிழைக்க வேண்டுமானால் உடனே ஒன்பது பாராசூட்டுகளை விமானத்துக்கு அனுப்பும்படி கூறினார்.
விமான நிலையம் பரபரப்படைந்த்து. பாதுகாப்பு அதிகாரிகள் கூடிப்பேசினார்கள். விமானத்தில் இருந்த மற்ற எட்டு ஆட்களையும் பாதுகாப்பாக மீட்க வேறு வழி இல்லாத்தினால் , திருடன் கேட்ட ஒன்பது பாராசூட்டுகளையும் விமானத்துக்கு அனுப்பினார்கள்
விமானத்தைக் கிளப்பும்படி ஆணையிட்டான்.விமானமும் பறக்க ஆரம்பித்தது.

சிறிது நேரம் கழித்ததும் வைரங்களை எடுத்துக்கொண்டான்.
எட்டு பாராசூட்டுகளையும் அப்படியே விட்டுவிட்டு, ஒரே ஒரு பாராசூட் மட்டும் எடுத்து அனிந்துகொண்டு விமானத்தில் இருந்து குதித்துத் தப்பித்தான்.

அவனுக்குத் தேவை ஒரே ஒரு பாராசூட். இருந்தும் ஏன் ஒன்பது பாராசூட் கொண்டுவரும்படி கேட்டான் அவன்.??????

dellas
06-04-2015, 10:10 AM
எல்லாம் ஒரு பாதுகாப்புதான்.

ஒரு பாரசூட் மட்டும் கேட்டிருந்தால், பாதுகாப்பு அதிகாரிகள் அதில் ஏதாவது குளறுபடிகள் செய்து பரசூட் இயங்க விடாமல் செய்துவிடலாம். ஆனால் மற்ற எட்டுபேருக்கும் அவ்வாறு செய்ய முடியாது அல்லவே?..

sarcharan
10-04-2015, 10:41 AM
விமானி தான் திருடன்.

drjagannathan
13-04-2015, 04:29 PM
திருடனும் ஊழியனாக விமானத்தில் இருப்பதால் தரையில் உள்ள வர்களுக்கு யார் திருடன் என்பது தெரியாது.
அவன் மட்டும் பாராசூட்டின் வழியாக குதித்தால் அவந்தான் திருடன் என்பது தரையில் உள்ளவர்களுக்குத் தெரிந்து விடும்
எனவே எல்லோரும் தப்பிக்கக் குதித்தால் யாரென்று தெரியாதல்லவா அதனால்தான் எல்லோருக்கும் பாராசூட் கேட்டான்

drjagannathan
13-04-2015, 04:30 PM

13-04-2015, 04:40 PM
1 மற்றும் 3 ஆம் விடுகதைகளுக்கு சரியான் விடை சொல்லப்பட்டுவிட்டது
2 க்கான விடை 'இரண்டாம் இடம்'

pgk53
16-04-2015, 01:40 AM
எல்லாம் ஒரு பாதுகாப்புதான்.

ஒரு பாரசூட் மட்டும் கேட்டிருந்தால், பாதுகாப்பு அதிகாரிகள் அதில் ஏதாவது குளறுபடிகள் செய்து பரசூட் இயங்க விடாமல் செய்துவிடலாம். ஆனால் மற்ற எட்டுபேருக்கும் அவ்வாறு செய்ய முடியாது அல்லவே?..

நண்பர் டெல்லாஸ் அவர்கள் சரியான விடையைக் கொடுத்துள்ளார்.
வாழ்த்துக்கள்.

நண்பர்களே நாளை அடுத்த புதிர்.

pgk53
23-04-2015, 01:59 AM
புதிர் எண்-568

நகரத்தில் உள்ள பாடசாலைக்குத் தேவையான மேசை நாற்காலிகளை அளித்து உதவுவதற்காக ராமு தனது வாகனத்தில் கொண்டு செல்லத் தயாரானான். பொருட்கள் இருக்கும் இடத்துக்கும் பாடசாலைக்குமான தூரம் 60 கிலோமீட்டர்கள்.

வாகனத்தில் அதிகபடியான பொருட்களின் சுமை இருந்தமையால் ராமுவால் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்திலேயே பயணிக்க முடிந்தது. பொருட்களை இறக்கிவிட்டு. வரும் போது மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்
. 8 கிலோமீட்டர்கள் பயணிக்க 1 லிட்டர் டீசல் தேவைப்படும்.

இப் பயணத்திற்காக 24 லிட்டர் டீசலை ராமு வாகனத்தின் எரிபொருளகத்தில் ஏற்றியிருந்தான். ராமு தனது பயணத்தை ஆரம்பிக்கத் தயாரானான்.
அப்போது அங்கே வந்த அவனது நண்பன் சோமு, வாகனத்தின் எரிபொருளத்தில் விரிசல் இருப்பதை கூறினான். அந்த விரிசலால் மணிக்கு ஒரு லிட்டர் டீசல் வீணடிக்கப்படும் என்றும் விபரம் கூறினான்.

24 லிட்டர் டீசலுடன் புறப்பட்ட ராமு மீண்டும் பொருட்களை ஏற்றிய இடத்துக்கு வந்து சேரமுடியுமா? விளக்கம் அளிப்பீர்களா??????????

தாமரை
23-04-2015, 02:49 AM
ராமு 60 கிலோ மீட்டர் சென்று பின்னர் திரும்ப வேண்டும்.

போகும் போது ஆகும் நேரம் = 60/12 = 5 மணி நேரம்
வரும் போது ஆகும் நேரம் = 60/16 = 3 மணி 45 நிமிடம்.

செலவாகும் டீசல் = 120/8 = 15 லிட்டர்
வீணாகும் டீசல் = 8.75 லிட்டர்

ஆக 23.75 லிட்டர் டீசல் செலவாகும் என்பதால் ஏற்றிய இடத்திற்கு திரும்ப இயலும்... கவனம் சிதறாமல், நேரத்தை வீணடிக்காமல் பயணித்தால்.

aren
24-04-2015, 09:46 AM
தாமரை சொன்னது சரியான விடை. 23.75 லிட்டரே தேவை.

dellas
28-04-2015, 10:05 AM
பொருட்களை ஏற்றி இறக்கும் நேரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்றால், போக வர 23.75 லிட்டர் டீசல் போதுமானதே.

pgk53
08-05-2015, 02:19 AM
நண்பர்களே, தாமரை அவர்கள் சரியான விடை அளித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
08-05-2015, 02:24 AM
புதிர் எண்-569

ராமுவும் சோமுவும் கட்டிடத்தொழிலாளிகள்.ஒரே இடத்தில் வேலை செய்தார்கள்.
ஒருநாள் மாலை நேரம் பணி முடிந்தபிறகு, பக்கத்தில் இருந்த மைதானத்தில் காலாற நடந்துகொண்டிருந்தார்கள். ராமு மிகவும் ஒல்லியான உடம்புவாகு கொண்டவன். ஆனால் சோமு நல்ல உடல்வாகும் பருமனும் உடையவன்.
பேச்சுவாக்கில் ராமு தான் மிகவும் அறிவாளி என்பதுபோல் பேசிக்கொண்டிருந்தான்..ஆனால் சோமு அதை ஒத்துக்கொள்ளவில்லை.
ஒரு சிறிய போட்டி வைப்பது. அதில் வெல்பவரே அறிவாளி. பந்தயப்பணம் நூறு ரூபாய் என்று பேசி முடித்தார்கள்.
அங்கிருந்த ஒரு சிறிய மணல் அள்ளிச் எல்லும் தள்ளுவண்டியைப் பார்த்த ராமு, இதோ பார்---இந்த தள்ளு வண்டியை, இதில் ஏதாவது ஒன்றை வைத்து
இங்கிருந்து இந்த மைதானத்தின் எல்லைவரை தள்ளிக்கொண்டு சென்று திரும்பவேண்டும்-. வண்டியில் வைக்கப்படுவது கீழே விழாமலும், அதே சமயம் வேகமாகவும் யார் வருகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்.சரியா…என்றான்.
அதற்கு ஒத்துக்கொண்ட சோமு,”நான் முதலில் ஆரம்பிக்கின்றேன். நான் எதை வைத்து தள்ளிச் செல்கின்றேனோ. அதையே வைத்து நீயும் வண்டியைத் தள்ளவேண்டும்.” என்று கூறிவிட்டு அவனுக்கு விருப்பட்ட்தை வைத்து வண்டியைத் தள்ளினான். ஆனால் வேகமாகத் தள்ளவில்லை. மிகவும் நிதானமாக மெதுவாகத் தள்ளிச் சென்றான். மைதானத்தின் கடைசிவரை சென்றபின்பு, ராமுவைப் பார்த்து, “ இதோபார், நான் கூறியபடி செய்து முடித்துவிட்டேன். இப்போது உனது முறை. ஆரம்பி” என்றான்.
சோமுவை ஏற இறங்கப் பார்த்த ராமு, சோமுதான் புத்திசாலி என்று ஒத்துக்கொண்டு பேசியபடி பந்தயப் பணம் 100ஐ கொடுத்தான்.
நண்பர்களே, ராமு ஏன் எந்த முயற்சியும் செய்யாமல் தான் தோற்றதாக ஒத்துக்கொண்டான்.??????????????

aren
08-05-2015, 05:28 AM
சோமு அவனுடைய நண்பன் ராமுவை வண்டியில் உட்காரவைத்துத் தள்ளினான். ராமு அவனையே உட்கார வைத்து தள்ளமுடியாதே, அதனால் தோல்வியை ஒப்புக்கொண்டான்.

pgk53
18-05-2015, 03:40 PM
சோமு அவனுடைய நண்பன் ராமுவை வண்டியில் உட்காரவைத்துத் தள்ளினான். ராமு அவனையே உட்கார வைத்து தள்ளமுடியாதே, அதனால் தோல்வியை ஒப்புக்கொண்டான்.

சபாஷ் ஆரென் அவர்களே.
மிகச் சரியான விடை.வாழ்த்துக்கள்.
நாளை அடுத்த புதிருடன் சந்திக்கின்றேன்.

pgk53
20-05-2015, 02:11 AM
புதிர் எண் -570

முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். முதல் அமைச்சராக இருந்த ஜாபரின் தங்கையைத்தான் அவர் திருமனம் செய்திருந்தார்.
ஜாபர் அரசரின் தங்கையை திருமணம் செய்திருந்தார்..
ஒரு நாளிரவு, அல் ரஷீதும், ஜாபரும் மதுவைக் குடித்து, மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவருக்குமே போதை ஏறிக்கொண்டிருந்தது.
அப்போது அல் ரஷீத், ஜாபரைப் பார்த்து, “ நீ அழகான அடிமைப் பெண் ஒருத்தியை வாங்கி வந்திருக்கின்றாய் என்று கேள்விப்பட்டேன். அவளை எனக்குக் கொடுத்துவிடு. என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கின்றேன்” என்றார்..
மதுவின் போதையில் இருந்த ஜாபர், அப்படியெல்லாம் அவளை விலைக்குக் கொடுப்பதான எண்ணம் இல்லை என்றார்.
அப்படியானால் அவளை எனக்கு அன்பளிப்பாகக் கொடு என்றார் ரஷீத்.
அதற்கும் ஜாபர் உடன்படவில்லை.
அதனால் மிகவும் கோபம் அடைந்த அல் ரஷீத்,’ நீ அன்பளிப்பாகவோ அல்லது விலைக்கோ கொடுக்கவில்லை என்றால் உனது தங்கையை தலாக் [விவாகரத்து] செய்துவிடுவேன் என்றார்.

இதைக் கேட்டுக் கோபம் அடைந்த ஜாபர், “ அப்படி என் தங்கையை தலாக் செய்தால், நான் எனது மனைவியை மூன்று குழந்தைகளுடன் தலாக் செய்து உங்களிடமே திருப்பி அனுப்புவேன் . இதுவும் உறுதி என்று போதையில் சப்தமிட்டார்.
கொஞ்ச நேரம் இருவருமே அமைதியுடன் இருந்தார்கள்.
மதுவின் போதை கொஞ்சம் இறங்கியது. அதன் பின்புதான் தாங்கள் இருவரும் முட்டாள்தனமாக பேசிக்கொண்டது எவ்வளவு தவறு என்று புரிந்த்து.

இருந்தாலும் பேச்சு மாறக்கூடாது அல்லவா?.....எப்படி இருந்தாலும் இருவரது வாழ்க்கையுமே பாழாகிவிடும் என்பதை உணர்ந்தார்கள்.
ஜாபர் அடிமைப்பெண்ணை தராவிட்டால் அரசர் தலாக் செய்வார். அப்படி ஜாபர் தந்துவிட்டால் ஜாபர் தலாக் செய்யவேண்டும்.

இப்போது இந்த சிக்கலான பிரச்சினையை எப்படி நல்லபடியாக முடிப்பது என்று இருவருக்குமே புரியவில்லை. அதனால் அவர்களது அரச குருவைச் சந்தித்து பிரச்சினையைக் கூறி ஆலோசனை கேட்டார்கள்..
அரசகுருவோ, இது ஒரு பிரச்சினையே இல்லை என்று கூறி அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சிக்கல் இல்லாத ஒரு வழியைக் கூறினார்..
அதன்படி இருவருமே தங்கள் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டார்கள்.
அரச குரு கூறிய ஆலோசனை என்ன??????????????

தாமரை
20-05-2015, 04:55 AM
அடிமைப்பெண்ணை அரசருக்குக் கொடுக்கவும் கூடாது. அரசரும் அமைச்சரின் தங்க்கையை தலாக்கும் செய்யக் கூடாது அப்படித்தானே?

தாமரை
20-05-2015, 09:45 AM
அமைச்சர் அமைச்சராகவே இருக்க இலாயக்கு இல்லாதவர்.

இதற்கு பல வழிகள் உண்டு.

1, அமைச்சர் ஒரு எளிமையான பந்தயம் வைத்து அதற்கு அடிமைப்பெண்ணை பரிசாக வைத்தார், மன்னர் போட்டியில் வென்று அந்த அடிமைப் பெண்ணை தனதாக்கிக் கொண்டார்.

2. அமைச்சர் இன்னொரு அடிமைப் பெண்ணை அரசருக்கு விற்றார். ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற பேரத்தில் அழகிய அடிமைப் பெண்ணை இலவச இணைப்பாக கொடுத்தார்.

3. அமைச்சரும் அரசரும் பண்ட மாற்று முறையில் அடிமைப் பெண்களை எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டனர்.

4. அமைச்சர் தனது அடிமையை தன் மனைவிக்கு பரிசளித்தார், அவரின் மனைவி அண்ணனுக்கு பரிசளித்தாள்

5. அமைச்சர் தன் அடிமையை இன்னொரு அமைச்சருக்கு பரிசளித்தார். அரசருக்கு அந்த அமைச்சர் பரிசளித்தார்.

6. அமைச்சர் தன் அடிமையை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தார், அவளை அரசர் அந்தப்புர ஆசை நாயகி ஆக்கிக் கொண்டார்.

7. பாதி அடிமையை விலைக்கும் பாதி அடிமையை பரிசாகவும் அளித்தார்,

இப்படி எக்கச்சக்க வழிகள் இருக்கிறது.

aren
20-05-2015, 10:05 AM
அன்பளிப்பாகவும் கொடுக்கக்கூடாது அதேமாதிரி விற்கவும் கூடாது, இது எப்படி சாத்தியமாகும். ஒருவழி, அரசர் ஒரு அடிமைப்பெண்ணை வாங்கி அவளுடன் ஜாபர் சந்தோஷமாக இருக்கும்போது அரசர் ஜாபரின் அடிமைப்பெண்ணுடன் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொல்லியிருப்பார். இது இருவருக்கும் உகந்ததாக இருந்திருக்கும்.

இதன் மூலம் ஜாபர் அடிமைப்பெண்ணை விற்கவும் இல்லை அன்பளிப்பாக கொடுக்கவும் இல்லை, ஆனால் அரசர் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த அடிமைப்பெண்ணை சந்திக்கலாம்.

25-05-2015, 03:16 AM
ஆரென் அண்ணா நீங்கள் சொல்வது இதுதானே

3. அமைச்சரும் அரசரும் பண்ட மாற்று முறையில் அடிமைப் பெண்களை எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டனர்.

aren
26-05-2015, 02:11 AM
ஆமாம் தாமரை அதேமாதிரிதான். ஆனால் இதை பண்டமாற்றுமுறை என்று சொல்லமுடியாது காரணம் எப்போது வேண்டுமோ அப்போது உபயோகிக்கலாம்.

sarcharan
28-05-2015, 10:19 AM
எப்போது வேண்டுமோ அப்போது உபயோகிக்கலாம். :) :) :)

pgk53
05-06-2015, 11:14 AM
நண்பர் ஆரென் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்

pgk53
05-06-2015, 11:16 AM
புதிர் எண்-571

வடபழனியின் மைய பகுதியில் 200 குடியிருப்புகளை கொண்ட ஒரு பல அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் அடிக்கடி திருட்டுப் போய்க்கொண்டிருந்தது.

அதனால் அந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் ஒருங்கினைந்து ஆலோசித்தார்கள்.
எப்படியாவது திருடனைக் கண்டுபிடித்துவிடவேண்டும். அப்போதுதான் அனைவரும் நிம்மதியாக இருக்க இயலும் என்று முடிவு செய்தார்கள்.

சென்னையில் தனிப்பட்ட துப்பறியும் துறையில் மிகவும் பிரசித்தி பெற்றவர் நமது துப்பறியும் சிங்கம் வீர்சிங் இவர் ஒரு கைதேர்ந்த நிபுணர் அவர் பல வழக்குகளில் திறமையாக செயல் பட்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து காவல் துறைக்கும் சிறந்த நண்பராக இருந்தார்.

அதனால் அந்த குடியிருப்பு வாசிகள் நமது துப்பறியும் சிங்கம் வீர்சிங்கை வரவழைத்து விஷயத்தைக் கூறி, கட்டிடத்தில் காலியாக இருந்த ப்ளாட் ஒன்றில் அவரைத் தங்க வைத்து குற்றவாளியை கண்டு பிடிக்கும் பொறுப்பை நம்பிக்கையோடு ஒப்படைத்தனர் .

வீர்சிங்கும் அங்கேயே தங்கிக்கொண்டு, பகலிலும் இரவிலும் யாராவது சந்தேகப்படும் விதமாக வருகிறார்களா????? என்று நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தார்.

கிட்டத்தட்ட 200 அபார்ட்மெண்டுகளுக்குமேல் அந்த குடியிருப்பில் இருந்ததினால், சட்டென்று எதையும் அவரால் முடிவு செய்ய இயலாமல் சற்று தடுமாறிக்கொண்டிருந்தார்.

இருந்தாலும் அவர் தன் முயற்சியை கைவிடவில்லை
நான்கு நாட்கள் அப்படியே ஓடிவிட்டது.

ஒருநாள் இரவு பத்து மணிக்குமேல் அவரது அறையின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
யாரோ அழைக்கிறார்கள் என்று நினைத்த வீர்சிங் உடனே வந்து கதவைத் திறந்தார்.
எதிரே அவருக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

வீர்சிங்கின் கட்டுமஸ்தான உருவத்தைக் கண்டதும், மன்னிக்கவும் எனது அறை என்று நினைத்து, உங்கள் கதவைத் தட்டிவிட்டேன் என்றான்.

உடனே துப்பறியும் சிங்கம் வீர்சிங் நின்றவரை மேலும் கீழும் கவனமாகப் பார்த்துவிட்டு,கொஞ்சமும் தாமதிக்காமல் சீறி பாய்ந்து அவனைத் தாவிப் பிடித்து, கட்டிப்போட்டு, மற்றவர்களுக்குக் குரல் கொடுத்து, போலீஸை அழைத்து அவன் தான் திருடன் என்று ஒப்படைத்தார்.

அவனும் தனது குற்றத்தை ஒத்துக்கொண்டான்.போலீஸ் அவனை கைது செய்து இழுத்துச் சென்றது.திறமையாக செயல்பட்ட துப்பறியும் சிங்கம் வீர்சிங்கை அனைவரும் பாராட்டினர்கள்

இப்ப நம்ம புதிருக்கு வருவோம் !!
திறமைசாலிகளே !!!துப்பறியும் சிங்கம் வீர்சிங் எந்த தடயத்தை வைத்து அவன்தான் திருடன் என்று முடிவு செய்தார்???

தாமரை
06-06-2015, 04:31 AM
சொந்த அறைக்குள்ளேயே கதவைத் தட்டி விட்டு வருபவர் ஜெண்டில்மேன்

sarcharan
15-06-2015, 11:00 AM
இந்த புதிரை நீங்கள் ஏற்கனவே பதித்து விட்டீர்கள் அண்ணா.

அல்லிராணியும் அதற்கு பதில் சொல்லி விட்டார்

http://www.tamilmantram.com/vb/showthread.php/3092-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-571-05-06-2015?p=205556&viewfull=1#post205556

sarcharan
29-04-2016, 08:45 AM
இந்த திரிக்கு என்ன தான் ஆச்சு? பி ஜி கே அண்ணா எங்கு தான் சென்றார்?

Mano60
17-11-2016, 05:56 AM
சிந்திக்கவைக்கும் புதிர்களும் ஆச்சரியப்பட வைக்கும் பதில்களும் கலந்த இந்த திரி மிகவும் சிறப்பாக உள்ளது.

sarcharan
24-09-2018, 01:24 PM
இந்த திரி செயலிழந்து விட்டதே!!