PDA

View Full Version : புதிரோ புதிர் எண்-571-05-06-2015

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17 18 19

pgk53
23-07-2009, 05:41 PM
1 . ஜன்னல் கண்ணாடிகளைத் துடைத்து வைத்தான் கணவன். (மனைவிகள் தான் எத்தனை அப்பாவிகள் மாதிரி கணவர்களை வேலை வாங்குகிறார்கள்.)

2. முதல் நாள் இரவு மழை பெய்து ஜன்னல் கண்ணாடி ஜன்னல் சுத்தமாகி இருந்தது. (இங்கிட்டு கணவன் மனைவி இரண்டு பேருமே சோம்பேறிகள்)

3. இதைப் பற்றிக் கணவன் அந்தப் பெண்ணிடம் வத்தி வைக்க அவளே வந்து கண்ணாடியைத் துடைத்து விட்டுப் போனாள்.. தாவாங்கட்டையை தோளில் இடித்துக் கொண்டு (வீட்ல இராமன் வெளியில கிருஷ்ணன்???)

ஆக மொத்தம் கண்ணாடி ஜன்னல் அழுக்காக இருந்தது என்பதே உண்மை...

சரியா பி.ஜி.கே
ஆஹா.........என்ன அருமையான பதில்கள்.
தாமரை அண்ணா கூறினால் அதற்கு மறு பேச்சு ஏது.?

மிகச் சரியான விடைகள்........வாழ்த்துக்கள்.

அன்பு நண்பர்களே...கொஞ்சம் பொறுங்கள்.
நாளை அடுத்த புதிருடன் சந்திக்கிறேன்.

pgk53
25-07-2009, 03:15 PM
புதிர் எண்-343

சோமுவும் ராமுவும் ஒருநாள் பக்கத்து நகரில் இருந்த உணவு விடுதி ஒன்றுக்குப் போயிருந்தார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி.

தாமு தன் மகள் குமுதாவை மட்டும் அழைத்துக்கொண்டு அங்கே வந்து எலுமிச்சை சாறு அருந்திக்கொண்டிருந்தான்.

அவர்களைக் கண்ட ராமுவும் சோமுவும் மகிழ்வுடன் அவர்கள் அமர்ந்திருந்த மேசைக்குச் சென்றமர்ந்தார்கள்.

சோமுவும் ராமுவும் ஆளுக்கொரு சமோஸாவும் காப்பியும் ஆர்டர் செய்தார்கள்.

சோமுவை ஆர்வமுடன் நோக்கிய குமுதா, “ என்ன அங்கிள் ?...மேசையை தீவிர சிந்தனையுடன் பார்க்கின்றீர்கள்? தங்கள் சிந்தனையில் ஏதாவது புதியதாகத் தோன்றியுள்ளதா?” என்றாள்.

சோமு சிரித்தபடி, “ ஆமாம் குமுதா!....உன் முன்னால் இருக்கும் ஜூஸ் கிளாஸ், எலுமிச்சம்பழத் துண்டு , தட்டு இவற்றைக் கண்டதும் ஒரு சிந்தனை என் மனதில் தோன்றியது” என்றான்.

“அங்கிள்…அங்கிள்…. என்ன என்று உடனே கூறுங்கள்” என்று மிகுந்த ஆர்வமுடன் கேட்டாள் குமுதா.

“ சரி…… அனைவருமே பார்த்துக்கொள்ளுங்கள்.!!!!!!...இதோ இந்த தட்டில் கொஞ்சம் தண்ணீரை நான் ஊற்றுகிறேன்” என்றபடி அங்கிருந்த தட்டில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினான் சோமு.

பிறகு அங்கிருந்த ஒரு காலி ஜூஸ்கிளாஸையும் உபயோகிக்கப்பட்ட ஒரு எலுமிச்சை துண்டையும், தனது சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு தீப்பெட்டியையும் எடுத்து தட்டுக்குப் பக்கத்தில் வைத்தான்.

பிறகு புன்சிரிப்புடன் அனைவரையும் பார்த்தபடி,” இதோ இந்த தட்டில் ஊற்றப்பட்டுள்ள நீர் , இந்த ஜூஸ் கிளாசுக்குள் வரவேண்டும். ஆனால் தட்டை எந்த வகையிலும் தொடவோ நகர்த்தவோ கூடாது. தட்டு அப்படியே அதே நிலையில் இருக்கவேண்டும்.
கிளாஸ், தீப்பெட்டி, எலுமிச்சைத் துண்டு இவைகளை நீங்கள் பயண்படுத்திக்கொள்ளலாம். யார் இதைச் செய்து முடிக்கிறார்களோ, அவர்களுக்கு எனது பாராட்டுகளும் 100 ரூபாய் பரிசும் காத்திருக்கின்றது” என்றான் சோமு.

ராமுவும் தாமுவும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்கள்.

இதையெல்லாம் கவனித்தபடி இருந்த பரிமாறுபவன் குமுதாவைப் பார்த்து சிரித்தபடி “ சீக்கிரம் இடத்தைக் காலி செய்யுங்கள் . கூட்டம் அதிகமாக இருக்கின்றது “ என்று குமுதாவைப் பார்த்தபடி கூறிவிட்டுச் சென்றான்.

அதைக் கேட்ட குமுதாவின் சிந்தனையில் ஒரு விஷயம் பளிச்சிட்டது.
“ அங்கிள்….நான் இதைச் செய்கிறேன்.” என்று கூறியவள் சோமு கூறியதுபோல் செய்து காண்பித்து, பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டாள்.

அப்போது அங்கே மறுபடியும் வந்த பறிமாறுபவன் குமுதா வெற்றியடைந்ததைக் கண்டு சிரித்தபடி சென்றான்.

நண்பர்களே,,,,,,,,குமுதா எப்படி இதைச் சாதித்தாள்??????????????????

பாரதி
25-07-2009, 03:29 PM
பரிமாறுபவர் கூறியதில் இருந்த வார்த்தைகளை சிந்தித்ததில் குமுதாவிற்கு ஒரு வழி தோன்றியது. தட்டில் ஊற்றி வைத்திருந்த நீரின் மீது எலுமிச்சம்பழத்துண்டை வைத்து, அதன் மேல் பற்ற வைத்த சில தீப்பெட்டிக்குச்சிகளை வைத்தாள். எரிந்து கொண்டிருக்கும் தீக்குச்சிகள் உள்ளே வரும்படியாக காலியான ஜுஸ் டம்ளரை கவிழ்த்து வைத்தாள். என்ன ஆச்சரியம்..! சில விநாடிகளில் தட்டிலிருந்த தண்ணீர் முழுவதும் டம்ளருக்குள்ளே...!!

பாலகன்
25-07-2009, 04:09 PM
நண்பர் பாரதியின் பதிலை இன்னும் விளக்கமாக கூறினால் நலமாக இருக்கும்.. எப்படி கீழிருந்த தண்ணீர் தம்ளருக்குள் சென்றது?

பாரதி
25-07-2009, 04:15 PM
தீக்குச்சி எரியும் போது அதன் மேலே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் டம்ளருக்குள் இருக்கும் காற்று என்ன ஆகும் என்பதை நினைத்தால் விடை கிடைக்குமே நண்பரே!

mania
26-07-2009, 03:55 AM
வெறும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பவர்களுக்கு இது எளிதாக புரியுமே....:rolleyes::rolleyes::D:Dஇல்லையா பாதிரி.....இல்லை....இல்லை ....பாரதி....:rolleyes::D:D
அன்புடன்
மணியா....:D:D

பாரதி
26-07-2009, 04:37 AM
வெறும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பவர்களுக்கு இது எளிதாக புரியுமே....:rolleyes::rolleyes::D:Dஇல்லையா பாதிரி.....இல்லை....இல்லை ....பாரதி....:rolleyes::D:D
அன்புடன்
மணியா....:D:D
எல்லாவற்றையும் உறிஞ்சிய பின்னர் என்னதான் மிஞ்சும்..?? இல்லையா மணி”யா” அண்ணா..!:icon_b:
மன்றத்தில் பாட்டுத்திரி நிறைய இருக்கே அண்ணா..? ஜூஸ் குடிக்காமல் இருக்கும் போது பார்க்கவும்.:D:icon_rollout:

lenram80
27-07-2009, 02:24 PM
தீக்குச்சி எரியும் போது அதன் மேலே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் டம்ளருக்குள் இருக்கும் காற்று என்ன ஆகும் என்பதை நினைத்தால் விடை கிடைக்குமே நண்பரே!

ஆவியாக நீர் மேலே போனாலும், கிளாஸ் கவிழ்ந்து இருப்பதால், மீண்டும் வழிந்து தட்டிற்கே நீர் வந்து விடும் அல்லவா...?

தாமரை
27-07-2009, 03:36 PM
ஆவியாக நீர் மேலே போனாலும், கிளாஸ் கவிழ்ந்து இருப்பதால், மீண்டும் வழிந்து தட்டிற்கே நீர் வந்து விடும் அல்லவா...?

இது நாம் எட்டாம் வகுப்பு படித்த போது அறிவியலில் படித்த ஒரு சோதனை..

ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி ஒரு கண்ணாடி கோப்பையை அதன் மீது கவிழ்க்க வேண்டும். இப்போது கண்ணாடி கோப்பையில் உள்ள நீரின் மட்டமும், தட்டில் உள்ள நீரின் மட்டமும் சமமாக இருக்கும்.

இதற்குப் பிறகு ஒரு வெள்ளைப் பாஸ்பரஸை கண்ணாடிக் கோப்பைக்குள் இட்டு நீரில் கவிழ்த்து வைக்க வேண்டும். பாஸ்பரஸ் எரிந்து முடிந்தவுடன் கண்ணாடிக் கோப்பையில் நீர் மட்டம் ஏறி இருக்கும். இப்பொழுது கண்ணாடிக் கோப்பையில் நீரின் மட்டத்தை அளக்க வேண்டும்.

பாஸ்பரஸ் எரியும் பொழுது காற்றில் உள்ள ஆக்சிஜனை உபயோகித்து விடுவதால் நீரின் மீதான காற்றின் அளவு குறைவதால் அழுத்தம் குறைகிறது. அதனால் தண்ணீரின் அளவு கோப்பையில் உயர்ந்திருக்கும்.

கோப்பையில் உள்ள காற்றின் அளவை அளந்தால் அது 20 சதவிகிதம் குறைந்திருக்கும். இதன் மூலம் காற்றில் 20 சதவிகிதம் ஆக்சிஜன் கலந்திருக்கும். மிச்சமிருக்கும் காற்றை, சுண்ணாம்புக் கரைசல் சோதனை, மணம் போன்ற பலவகைச் சோதனைகளைச் செய்து அது நைட்ரஜன் என்று நிரூபிப்போம்.

இது காற்றில் 20 சதவிகிதம் ஆக்சிஜனும், மிச்சத்தில் பெரும்பான்மை நைட்ரஜன் என நிரூபிக்கும் சோதனை ஆகும்.

ஏறத்தாழ அதேதான் இந்தப் புதிரின் விடையுமாகும்...

lenram80
27-07-2009, 04:51 PM
இது நாம் எட்டாம் வகுப்பு படித்த போது அறிவியலில் படித்த ஒரு சோதனை..... ...
ஏறத்தாழ அதேதான் இந்தப் புதிரின் விடையுமாகும்...

உங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி தாமரை.

கோப்பைக்குள் இருக்கும் ஆக்ஜிசன் கண அளவும், கோப்பைக்கு வெளியில் இருக்கும் தண்ணீரின் கண அளவும் ஒன்றாக இருந்தால் தானே, முழு தண்ணீரும் கோப்பைக்குள் வரும். அப்படி இருக்கும் என்று சொல்ல முடியாதே?

அது மட்டுமில்லாமல், கோப்பையின் எடை காரணமாக கோப்பை தட்டில் முழுவதும் பதிந்து, கோப்பைக்கு வெளியில் இருக்கும் தண்ணீரை கோப்பைக்கு உள்ளே இருக்கும் தண்ணீரிலிருந்து பிரித்து விடுமானால், எரிந்த பிறகு.. நீர் மட்டம் உயருவதை விட வெற்றிடம் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.அதனால், இன்னும் கோப்பை தட்டுடன் நன்றாக ஒட்டும்...

தட்டும், கோப்பையும் 100% ஒட்டிக் கொள்ள சாத்தியம் இல்லை யென்றால், எரியும் போது அழுத்த மாறுபாட்டால் முதலில் நீர் உயரும். எரிந்து முடிந்த அடுத்த கணமே அழுத்த மாறுபாட்டால் நீர் மீண்டும் சம நிலைக்கு வந்து விடுமே...?

நான் நீங்கள் சொல்ல வந்ததை புரிந்து கொள்ளவில்லையா?
இன்னும் எனக்கு விரிவாக சொல்லுங்கள் தாமரை...!

பாரதி
27-07-2009, 05:38 PM
தீ தொடர்ந்து எரிய ஆக்ஸிஜன் தேவை. எனவே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் கிளாஸுக்குள் இருக்கும் காற்றில், ஆக்ஸிஜன் இருக்கும் வரை (அல்லது தீக்குச்சிகள் எறிவதால் வெற்றிடம் ஏற்பட்டு, நீர் உள்ளிழுக்கப்பட்டு நீரால் அணையும் வரை) தீக்குச்சிகள் எரியும்.

ஆக்ஸிஜனை தீக்குச்சிகள் உபயோகித்து விட்டதால் கிளாஸில் ஏற்படும் வெற்றிடத்தை (அல்லது அழுத்தக்குறைவை) நிரப்ப தட்டில் இருக்கும் நீர் கிளாஸினுள் செல்லும். இப்போது வெற்றிடம் அல்லது அழுத்தக்குறைவு கிளாஸுக்குள் இருக்கும் வரை உட்புகுந்த நீர் வெளியே வராது.

நீர் பரப்பப்பட்ட தட்டில்தான் கிளாஸ் கவிழ்த்து வைக்கப்படுகிறது. எனவே (வெற்றிடம் / அழுத்தக்குறைவு காரணமாக) நீர் முழுவதும் கிளாஸுக்குள்ளே செல்லும் முன், கிளாஸ் தட்டுடன் ஒட்டிக்கொள்ளும் சாத்தியமும் இல்லை. (நாமாக குறிப்பிட்டு ஏதாவது ஏற்பாட்டை செய்துகொண்டால் ஒழிய) சாதாரணமாக கிளாஸின் கனம் நீர் உள்ளிழுக்கப்படுவதை எந்தக்காரணத்தாலும் தடுத்து நிறுத்தாது.

தாமரை
28-07-2009, 01:57 AM
லெனின் கவனிக்க..

1. பி.ஜி.கே கொஞ்சம் தண்ணீர் என்றுதான் சொல்லி இருக்கிறார். கண்ணாடித் தம்ளரின் கொள்ளளவு மிக அதிகம். அதனால் 20 சதவிகித காற்று குறையும் பொழுது தண்ணீர் முழுதும் உள்ளே வர வாய்ப்பு இருக்கிறது.

2. தம்ளர் தட்டுடன் ஒட்ட தட்டு மிக எளிதில் வளையும் தன்மை கொண்டிருக்க வேண்டும். தட்டு உலோகத்தினால் ஆனது. எனவே இந்தச் சின்ன விசைக்கு வளையாது, தண்ணீர்தான் கவரப்படும்.

3. இப்போது தண்ணீர் முழுதும் உயர்ந்த பிறகு இன்னும் தீக்குச்சி எரிந்து கொண்டிருப்பதாகக் கொள்வோம். அப்போது வெளிப்புறமிருந்து காற்று இழுக்கப்படும். ஆனால் இந்தக் காற்று குமிழிகளாக தண்ணீருக்கு மேலே சென்றுவிடும்..

4. அழுத்தம் சரிப்பட வழியில்லை, வெளிப்புற காற்று தண்ணீரைத் தள்ளி உள்ளே செல்லவோ வெளியே வரவோ புறவிசை தேவை. தண்ணீர் உள்ளே சென்றதே அழுத்த மாறுபாட்டைச் சரி செய்யத்தான். எனவே தண்ணீர் உள்ளே சென்ற பின் அழுத்தம் சமப்பட்டிருக்கிறது. எனவே நீர் வெளிப்பட எந்த விசையும் அதன் மீது செயல்படாது..

5. வேதியியல் ஆய்வகத்தில் பிப்பெட் கொண்டு சோதனைகள் செய்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

பிப்பெட் ஒரு முனையில் வாயை வைத்து, இன்னொரு முனையை திரவத்தில் வைத்து உறிஞ்சுகிறோம். திரவம் பிப்பெட்டில் மேலே வருகிறது.

இதன் பிறகு பிப்பெட்டின் மேல் முனையை விரலால் அடைத்துக் கொள்கிறோம். அப்போது என்ன நடக்கிறது? திரவம் பிப்பெட்டினுள் மட்டுமே இருக்கிறது. திரவம் கீழே சிந்துவதில்லை. வெளிப்புறக் காற்று பிப்பெட்டினுள் நுழைந்து திரவம் கொட்டி விடுவதில்லை...

அதன்பிறகு விரலை எடுத்தால் திரவம் கீழே வருகிறது. அதாவது குழாயின் மேல் பக்கமிருந்து காற்று உள்ளே நுழைந்தால் மட்டுமே திரவம் கீழே வருகிறது. இதே போலத்தான் டம்ளரின் மேல்பாகம் காற்று உள்ளே வர வழியே இல்லாததால் தண்ணீர் தம்ளரை எடுக்கும் வரை வெளியே வராது.

இந்தப் பிப்பெட் சோதனையை பழச்சாறு அருந்தும் ஸ்ட்ரா கொண்டும் பரிசோதனை செய்யலாம்.

இங்க் ஃபில்லர் (ஸ்பில்லராக மக்களால் உபயோகப்படுத்தப் படுவது) கூட இந்தத் தத்துவத்தில் தானே லெனின் இயங்குகிறது.

கூடுதல் சோதனை : தண்ணீர் ஸ்ட்ராவினுள் அடைபட்டு இருக்கும் போது, மேல்பாகத்தை விரலால் அடைத்துக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு நீண்ட குச்சியை அடிப்பாகத்தில் இருந்து உள்ளே நுழைத்தால் தண்ணீர் முழுக்க வெளியே கொட்டி விடும். (இதற்கு காரணம், அழுத்த மாறுபாடு மற்றும் பரப்பு இழுவிசை இரண்டுமாகும்.

உயரமான இடத்தில் உள்ள தொட்டியில் இருந்து தாழ்வான இடத்தில் இருக்கும் தொட்டிக்கு தண்ணீரைப் பாய்ச்ச, ஒருகுழாயை பெரிய தொட்டியில் தண்ணீரில் மூழ்குமாறு வைத்து வாயால் மறுபக்கம் உறிஞ்சுகிறோம். தண்ணீர் முழயில் வெளிவந்ததும் குழாயைத் தாழ்வாக வைத்தால் தண்ணீர் வந்து கொண்டே இருப்பதைக் காண்பீர்கள். (அட நம்ம டூ வீலரில் பெட்ரோலைத் திருடுகிறார்களே அதே டெக்னிக். )

இப்ப இன்னும் ரொம்ப குழப்பமா இருக்குமே!!!

lenram80
28-07-2009, 12:14 PM
வாவ்...அழுத்த வேறுபாடு பற்றி அலை அலையாக எனக்கு அறிவியல் பாடம் மீண்டும் நடத்திய தாமரை, பாரதி -க்கு நன்றிகள்....

pkg53 அங்கிள்...வந்து சரியான விடை என்று சொல்லிவிட்டு.. அடுத்த கேள்வியை தரவும். :)

kathalan
28-07-2009, 07:42 PM
வாவ்...அழுத்த வேறுபாடு பற்றி அலை அலையாக எனக்கு அறிவியல் பாடம் மீண்டும் நடத்திய தாமரை, பாரதி -க்கு நன்றிகள்....

pkg53 அங்கிள்...வந்து சரியான விடை என்று சொல்லிவிட்டு.. அடுத்த கேள்வியை தரவும். :)

அங்கிள்????

lenram80
28-07-2009, 08:24 PM
அங்கிள்????

அய்யயோ.. சண்டை போடாதிங்க.. ஏதோ அங்கில்ன்னு (uncle) கூப்பிடனும் போல இருந்துச்சு.. அதுனால கூப்பிட்டேன்

தாமரை
29-07-2009, 02:06 AM
அதுசரி லெனின், தீக்குச்சி எரியும் பொழுது ஆக்சிஜன் , கார்பன் டை ஆக்சைடாக அல்லவா மாறுகிறது, அப்படியானால் எரிய உதவிய அத்தனை ஆக்சிஜனும் அங்கேயேதானே இருக்கிறது?. பற்றாக்க்குறைக்கு கர்ர்பன் மூலக்கூறுகளும் காற்றில் கலக்கின்றன,

தீக்குச்சி திடப் பொருளாக இருந்த பொழுது குறைந்த இடத்தையே ஆக்ரமிக்கும். ஆனால் இப்படி செத்துப் போய் "ஆவியான" பிறகு வாயு அதிக இடத்தை அல்லவா ஆக்ரமிக்க வேண்டும்?

பட்டாசு வெடிப்பது இந்த தத்துவத்தில் தானே, வெடிமருந்து எரிந்து அதிக அளவு வாயுவை உண்டாக்கும். அது சுற்றி ஒட்டப்பட்ட காகிதத்தைக் கிழித்துக் கொண்டு வெளியேறுவதே ப்பட்டாசு வெடிப்பு நிகழ்ச்சியாகும்.

அதே மாதிரி பெட்ரோலியத்தை எரிபொருளாக கொண்ட எஞ்சின்கள் இயங்குவதும் இதே விதிப்படித்தானே?

lenram80
29-07-2009, 01:07 PM
தாமரை அவர்களே...
அப்படியென்றால், எரிந்து முடித்த பிறகு அழுத்த வேறுபாடு எதுவும் இருக்காது. அதனால் நீர் மட்டம் உயராது என்று சொல்ல வருகிறீர்களா?

பாஸ்பரஸ் எரியும் பொழுது காற்றில் உள்ள ஆக்சிஜனை உபயோகித்து விடுவதால் நீரின் மீதான காற்றின் அளவு குறைவதால் அழுத்தம் குறைகிறது. அதனால் தண்ணீரின் அளவு கோப்பையில் உயர்ந்திருக்கும்.

என்று முன் பதிலில் சொல்லி உள்ளீர்களே??

பரஞ்சோதி
30-07-2009, 04:08 PM
புதிர்கள் எல்லாம் நம் அறிவுக்கு தீனி போடுகின்றன, பாரதி அண்ணா, தாமரை அண்ணா, தோழர் லெனின் ஆகியோரின் பதில்கள் அருமை.

தலை தனியாக கலக்குகிறார்.

நன்றி பிஜிகே அண்ணா.

lenram80
30-07-2009, 05:52 PM
நன்றி பரம் ஜோதி அவர்களே...

தாமரை அவர்களே,

சூடு படுத்துவதால் பொதுவாக வாயு மூலக்கூறுகள் (அணுக்கள்) மேல் நோக்கி சொல்லும்.
அணுக்களின் எண்ணிக்கை ஒன்றாக இருந்தாலும் அதன் நெருக்கம் கோப்பையின் மேல் பகுதியில் அதிகமாகும்.

அதன் காரணமாக கீழுள்ள பகுதியில் காற்றழுத்தம் குறையும். எனவே.. அதை சரி செய்ய, வெளியிலிருந்து நீர் உள்ளே வரும்.

(இது தானே புயல், சுறாவளியின் சூத்திரம்.)

என்ன சரியா?

pgk53
31-07-2009, 01:54 AM
அன்புத் தமிழ் நெஞ்சங்களே.....அனைவருக்கும் வணக்கம்.
நமது மன்றத்தின் விஞ்ஞான அறிவற்றல் வெளிப்பாடுகளைக் கண்டு பிரமித்துப் போய்விட்டேன்.
நண்பர் பாரதி எடுத்த எடுப்பிலேயே சரியான பதிலை நச்சென்று கொடுத்துவிட்டார்.
அதன் பிறகு தாமரை அவர்களும் ராம்80,மணியா , பரஞ்சோதி ஆகிய நண்பர்களும் அந்த விடைக்குரிய சாத்தியக் கூறுகளை தோண்டித் துருவி எடுத்துவிட்டார்கள்.
நான் மிக மிக மகிழ்கிறேன்.
சொல்லப்போனால் புதிரை நான் போட்டேனே தவிர இவ்வளவு ஆழ்ந்த விஞ்ஞானக் கருத்துக்கள் எனக்கு தெரியாது.மேலோட்டமாக எப்படி நடக்கிறது என்றுதான் தெரியும்.
நானும் இந்த புதிர்மூலம் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.

தண்டூல்கர் பாஷையில் சொன்னால் " கத்துக்கிட்டேன்".

நண்பர் காதலன் என்னை அன்கில் என்று சொன்னதில் எந்த கருத்துவேறுபாடும் இல்லை.
மாறாக மகிழ்கிறேன்.
காதலா நீர் வாழ்க.

மீண்டும் அனைவருக்கும் நன்றி.
நாளை அடுத்த புதிரில் சந்திப்போமா???????

lenram80
31-07-2009, 02:27 PM
வாழ்த்துகள் பாரதி & தாமரை.

புன்னகை பூத்த PGKக்கும் நன்றி

pgk53
01-08-2009, 10:55 AM
புதிர் எண்-344

அது மிகவும் கடுமையான குளிர் காலம்.எங்கு பார்த்தாலும் பனிக்கட்டி உறைந்து வெள்ளை வெளேரென்று வெண் கம்பளம் போர்த்தியதைப் போல் இருந்தது

அந்த கால வேளையில் காலையில் எழுந்த சுரேஷ் குளிரில் நடுங்கியபடியேதன் வீட்டின் முன்கதவைத்திறந்தான்.

அங்கே தனது நண்பன், ஹரீஷ் படிக்கட்டின் முன்னே கீழே விழுந்து கிடந்ததைக் கண்டான்.

பதறிச் சென்று ஹரீஷின் நாடி பிடித்துப் பார்த்து அவன் இறந்துவிட்டான் என்று தெரிந்துகொண்டதும் , காவல் துறைக்கு தகவல் கொடுத்தான் சுரேஷ்.

காவலர்கள் வந்தார்கள்.

ஹரீஷின் உடல் கிடந்த விதத்தை ஆராய்ந்தார்கள்.

தலையில் பெரிய ஆழமான காயம் இருப்பதைக் கண்டார்கள்.
ஆனால் அவ்வளவு ஆழமான காயம் இருந்தும் ரத்தம் மிகக் குறைந்த அளவிலேயே வெளிவந்திருந்தது.

பக்கத்தில் ஏதேனும் ஆயுதம் கிடக்கின்றதா? என்று தேடினார்கள்.
அவனது தலையில் காயத்தை உண்டாக்கிய எந்த ஆயுதமும் அக்கம் பக்கத்தில் இல்லை.

அதனால் காவலர்கள் யார் ஹரீஷைக் கொன்றார்கள்.? எப்படிக் கொன்றார்கள்?? ஏன் கொன்றார்கள் என்று கண்டுபிடிக்க இயலாமல் தினறிக்கொண்டிருக்கின்றார்கள்.

நண்பர்களே நீங்கள் ஆராய்ந்து, அவன் இறந்தது எப்படி என்பதை காவல் துறைக்கு விளக்கம் கொடுக்கலாமே????????????????????????????

பாரதி
01-08-2009, 03:16 PM
இன்னும் கூடுதல் தகவல்கள் வேண்டுமே பி.ஜி.கே..! இல்லையெனில் ஹரீஷை குற்றம் சொல்லவோ... அல்லது தற்செயல் விபத்து/தற்கொலை என்று சொல்வதற்கும் இன்னும் தகவல்கள் வேண்டும். இல்லாவிட்டால் அனைவரும் கற்பனைக்குதிரையை தட்டி விட வேண்டியதுதான்...!

pgk53
01-08-2009, 03:53 PM
நண்பர் பாரதி அவர்களே,
ஏற்கனெவே நிறைய தகவல்கள் பனிக்கூட்டம்போல அடர்ந்து கிடக்கின்றனவே.
இனியும் தகவல் வேண்டுமா????????????????????

பரஞ்சோதி
01-08-2009, 04:12 PM
அவர் இறந்தது பனிக்கட்டியால், விபத்து என்றால் கூர்மையான பனித்துண்டு வெட்டியிருக்கும். அதுவே கொலை என்றால் பேசும் படத்தில் வருவது போல் பனிக்கட்டி ஆயுதத்தால் கொன்றிருப்பாங்க.

யார்? என்ன என்பதை துப்பறிய துப்பறியும் சிங்கம் தாமரையாரை வரவழைக்கிறேன்.

பாலகன்
01-08-2009, 05:51 PM
அவன் காலிங் பெல் அடித்திருப்பான் அதனால் அதிர்ந்த கூரையில் இருந்த பனிக்கட்டிகள் அவன் தலையில் விழுந்திருக்கம்

பா.ராஜேஷ்
03-08-2009, 12:14 PM
வழுக்கி விழுந்திருக்கலாம். விழுகையில் உறைந்திருந்த பனி கட்டியில் மோதி காயம் உண்டாகி இருக்கும். பனி கட்டியின் பொருட்டு ரத்தம் உறைந்து போய் நிறைய வெளி வராமல் இருந்திருக்கும்.

அமரன்
03-08-2009, 07:24 PM
அவன் காலிங் பெல் அடித்திருப்பான் அதனால் அதிர்ந்த கூரையில் இருந்த பனிக்கட்டிகள் அவன் தலையில் விழுந்திருக்கம்

கத்தி போல் கூர் முனையுடன் தாழ்வாராங்களில் பனிக்கட்டி தொங்கும். அது தலையில் விழுந்து மரணம் சம்பவித்திருக்கலாம். அதுக்காக அழைப்பு மணி அடித்த அதிர்வு எல்லாம் ஓவருங்கோ.

சுட்டிபையன்
04-08-2009, 07:13 AM
ஆஹா அழாகான விளக்கங்கள் தாமரை அண்ணா

pgk53
04-08-2009, 03:58 PM
அவர் இறந்தது பனிக்கட்டியால், விபத்து என்றால் கூர்மையான பனித்துண்டு வெட்டியிருக்கும்---பரஞ்சோதி.

அவன் காலிங் பெல் அடித்திருப்பான் அதனால் அதிர்ந்த கூரையில் இருந்த பனிக்கட்டிகள் அவன் தலையில் விழுந்திருக்கும் --மகாபிரபு

கத்தி போல் கூர் முனையுடன் தாழ்வாராங்களில் பனிக்கட்டி தொங்கும். அது தலையில் விழுந்து மரணம் சம்பவித்திருக்கலாம். அதுக்காக அழைப்பு மணி அடித்த அதிர்வு எல்லாம் ஓவருங்கோ என்று அமரனும்,

பதில் கூறாத தாமரை அண்ணாவைப் பாராட்டிய சுட்டி பையனுக்கும் எனது வணக்கங்கள்.

அடேயப்பா.....ஏற்கனெவே நிறைய தகவல்கள் பனிக்கூட்டம்போல அடர்ந்து கிடக்கின்றனவே என்ற க்ளூ கொடுத்ததும் சரசரவென பதில் மழை பொழிந்த அனைவருக்கும் மீண்டும் வணக்கங்கள்.

இருப்பினும் மிகச் சரியான பதிலைக் கொடுத்த அமருக்கு எனது பாராட்டுகள்.
அமரன் பதிலைக் கொடுக்க உதவிசெய்யும் வண்ணம் பதிவு கொடுத்த பரஞ்சோதிக்கும் எனது பாராட்டுக்கள்.

நாளை ஒரு மாத விடுப்பில் தாயகம் புறப்பட உள்ளேன்.
நாளை ஒரு புதிரை பதிவு செய்துவிட்டுப் புறப்படுகிறேன்.

சுட்டிபையன்
04-08-2009, 09:28 PM

ஐயஹோ பிகேஜி அண்ணா நான் தாமரைக்கு சொன்ன பாராட்டுக்கள் நீர் கோப்பைக்குள் சொன்ன விளக்கத்திற்க்ககா

பாரட்டுக்கள் அமரேசா, மற்றும் கோர்த்து கொடுத்த பரம்ஸ் தாத்தாவுக்கு:icon_b:

சீக்கிரம் கொடுங்கப்பா

தாமரை
05-08-2009, 02:46 AM
பரம்ஸ் பதில் சொன்ன பின்னால வேணாம்னு விட்டுட்டேன்..

இரத்தம் அதிகம் வராததற்கு காரணம், குத்து பட்டவுடன் பனிக்கட்டி புண்ணின் வாயை அடைத்துக் கொண்டிருந்தது ஆகும்.

உடல் வெப்பநிலையில் பனிக்கட்டி உருக, ஆயுதம் காணாமல் போய்விட்டது..

இதயம் செயல்படுவது நின்றதும் இரத்தம் இரத்த நாளங்களிலேயே உறைந்து விட்டது.

அப்புறம் ஒரு சின்ன விஷயம்..

இந்த மாதிரி விபத்துகள்.. மதியத்திற்கு அப்புறம்தான் நடக்கும். விடியற்காலையில் நடக்காது.

காரணம், பனிக்கட்டி உருகினால்தான் உடைந்து விழும்..அண்டார்டிகாவின் பனிப்பாளங்கள் போல.. இரவு வெப்பநிலையில் உறைந்த கூரையில் இருந்து தொங்கும் பனி விழுவது ஆக்சிடெண்ட் அல்ல...

ஒரே ஒரு சாத்தியம், அந்த வீட்டில், இருக்கும் ஃபய்ர் பிளேசில் தீ இரவு முழுதும் எரிந்து கொண்டிருந்தது, அதனால் புகைபோக்கி, அதாங்க சிம்னி பகுதியில் வெப்பமாகி பனி உருகியதால், அதனால் சரிவு ஏற்பட்டு கூரையில் இருந்து ஐஸ்விழ வேண்டும்.

மற்றபடி சிம்னி இல்லாமல், மின், மற்றும், எரிவாயு வெப்பமூட்டிகள் இருக்கும் வீட்டில், கூரை, வெப்பக் கடத்தல் செய்யமுடியாது இருப்பதால் (இல்லைன்னா ஜில்லுன்னு ஆயிடுமே) ஒன்றும் ஆகாது..

அதனால்

சுரேஷ் தான் ஹரீஸை இரவில் வரச்சொல்லிட்டு, அதிகமா நெருப்பு எரிச்சு, பனிக்கட்டிகளை அவன் மேல் விழவைத்துக் கொன்றான் எனக் குற்றம் சாட்டுகிறேன் யுவர் ஆனர்.

:D :D :D :D

pgk53
05-08-2009, 01:07 PM
தாமரை அண்ணா.....அடியேன் சரணம்.
ஆஹா.....தாங்கள் உண்மையிலேயே வக்கீலாகத்தான் பணி புரிகின்றீர்களா??????????
பிரமாதம்.

pgk53
05-08-2009, 01:09 PM
புதிர் எண்-445

தாமுவின் மகள் குமுதா.

தோட்டத்தில் உலாவியபடியே அடுத்து வரும் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தாள்.

அப்போது பக்கத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் ஒரு கிளியைப் பார்த்தாள்.

மெதுவாக சப்தமில்லாமல் மரத்தில் ஏறினாள் குமுதா.
சட்டென்று கிளியைப் பிடித்தாள்.

கீழே கொண்டுவந்தாள்.
வீட்டில் இருந்த ஒரு பறவைக் கூண்டில் கிளியை அடைத்துவைத்தாள் குமுதா.

சிறிது நேரம் கழித்து குமுதாவின் தந்தை தாமு வீட்டுக்கு வந்தார்.
குமுதா அடைத்து வைத்திருந்த கிளியைப் பார்த்தார்.

தாமுவுக்கு பறவைகளை அடைத்துவைத்து வளர்ப்பது பிடிக்காத விஷயம்.
சுதந்திரமாகப் பறந்து திரியும் பறவைகளை அடைத்துவைத்து அடிமைப் படுத்துவதை வெறுப்பவர் தாமு.

அதனால் குமுதாவிடம் தனது கருத்தைக் கூறி கிளியை கூண்டைத்திறந்து பறக்கவிடும்படி கூறினார்.

குமுதாவும் உண்மையை உணர்ந்து, கூண்டைத் திறந்துவிட்டாள்.
ஆனால் கிளியோ பறக்கவில்லை..மாறாக கூண்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தது.

அதைக் கண்ட குமுதா, கிளிக்கு உடல் நலம் இல்லையோ என்று சந்தேகித்து கிளியைப் பரிசோதித்தாள். கிளியின் உடல் நலத்தில் குறையேதும் இல்லை.

இருப்பினும் கிளி கூண்டை விட்டு ஏன் வெளியேறவில்லை என்று குமுதாவுக்குத் தெரியவில்லை.

நண்பர்களே நீங்கள் குமுதாவின் குழப்பத்தைப் போக்கலாமே???!!!!!?????!!!!

pgk53
05-08-2009, 01:13 PM
புதிர் எண் -446

ஒருநாள் சோமுவும் ராமுவும் வீட்டின் பால்கணியில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள்.

கையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்திருந்தான் ராமு.

அதைப் பார்த்த சோமு, “ இதோ பார் ராமு உன் கையில் உள்ள அந்த ஒரு ரூபாய் நாணயத்தை டான்ஸ் ஆட வைக்கிறேன். பந்தயம் கட்டுவாயா? என்றான்.

ம்ம்ம்….ஒரு ரூபாய் காசு எப்படி தன்னால் நாட்டியம் ஆடும். பொய் சொல்லாதே என்றான் ராமு.
ஆனால் சோமு விடவில்லை. தன்னால் ஆட வைக்க முடியும் என்று சொல்லியதினால் ராமு பந்தயத்துக்குச் சம்மதித்தான்.

சோமு ஒரு ரூபாய் நாணயத்தை ஆட வைத்துவிட்டால் ராமு 500 ரூபாய் சோமுவுக்கு கொடுக்கவேண்டும்.
சோமுவால் இயலாது போனால் சோமு ராமுவுக்கு கொடுக்க வெண்டும்.

தனது கையில் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை சோமுவிடம் கொடுத்த ராமு, “ ம்ம்ம்ம்….இப்போது இந்த நாணயத்தை ஆட வை.” என்றான்.

கொஞ்சம் பொறு என்றபடி எழுந்து சென்ற சோமு பக்கத்தில் இருந்த குளிர் சாதனப் பெட்டியைத் திறந்தான்.
உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு லிட்டர் பாட்டில் ஒன்றை எடுத்தான்.

நீண்ட நேரம் உள்ளே வைக்கப்பட்டிருந்ததினால் பாட்டிலின் மேலே ஐஸ் படர்ந்து சில்லென்றிருந்தது.அதில் நிறப்பப்பட்டிருந்த தண்ணீரைக் கீழே கொட்டினான் சோமு.

பால்கனிக்கு வந்தான் ராமுவின் எதிரே நாற்காலியில் அமர்ந்தான்.
பக்கத்தில் இருந்த டீப்பாயை இழுத்து அவர்கள் இருவருக்கும் இடையில் வைத்தான்.

கிழக்குப் புறமாக இருந்த டீப்பாயின் நீளமான பக்கம் வடக்கு நோக்கி இருக்கும்படி சோமு அமைத்துக்கொண்டான்.

அந்த டீப்பாயின் மேல் பாட்டிலை நிற்கவைத்தான்.
நாணயத்தை எடுத்து மிகுந்த கவனமுடன் பாட்டிலின் திறந்தபடி இருந்த வாயின்மேல் வைத்தான்.

பிறகு சோமு அந்த நாணயத்தை உற்றுப் பார்த்தபடி ஏதோ மந்திரங்களை ஜபிக்க ஆரம்பித்தான்.

என்ன ஆச்சர்யம். பாட்டிலின் வாயில்மேல் வைக்கப்பட்டிருந்த நாணயம் டப்--- டப்---- டப்பென்ற சப்தத்துடன் துள்ளியது. அதை பார்க்கையில் அது டான்ஸ் ஆடுவதைப் போன்றே இருந்தது.

ராமுவுக்கு ஆச்சர்யம் தாங்க இயலவில்லை.
சோமுதான் வென்றதாக ஒத்துக்கொண்டு 500 ரூபாய் பணத்தை சோமுவுக்குக் கொடுத்துவிட்டான்.

நண்பர்களே சோமு இதை எப்படிச் சாதித்தான். விளக்க முடியுமா?????

lenram80
05-08-2009, 06:45 PM
புதிர் எண்-445

மெதுவாக சப்தமில்லாமல் மரத்தில் ஏறினாள் குமுதா.
சட்டென்று கிளியைப் பிடித்தாள்.

குமுதாவும் உண்மையை உணர்ந்து, கூண்டைத் திறந்துவிட்டாள்.
ஆனால் கிளியோ பறக்கவில்லை..மாறாக கூண்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தது.

ஏற்கனவே அந்த கிளி மனிதனால் வளர்க்கப் பட்ட கிளி. அதனால் தான் குமுதா அருகே சென்று (அது பறக்காமல் இருந்தது) அதை பிடிக்க முடிந்தது.
ஏற்கனவே கூண்டில் வளர்ந்த படியால், கூண்டை திறந்தும் அது பறக்கவில்லை.

lenram80
05-08-2009, 07:02 PM
புதிர் எண் -446
அந்த டீப்பாயின் மேல் பாட்டிலை நிற்கவைத்தான்.
நாணயத்தை எடுத்து மிகுந்த கவனமுடன் பாட்டிலின் திறந்தபடி இருந்த வாயின்மேல் வைத்தான்.

என்ன ஆச்சர்யம். பாட்டிலின் வாயில்மேல் வைக்கப்பட்டிருந்த நாணயம் டப்--- டப்---- டப்பென்ற சப்தத்துடன் துள்ளியது. அதை பார்க்கையில் அது டான்ஸ் ஆடுவதைப் போன்றே இருந்தது.

அதாங்க பாட்டிலின் உள்ளே இருந்த வந்த காற்றால், இந்த காசு ஆடியது.

பாட்டிலின் உள்ளே இருந்து எப்படி காற்று வந்தது என்பதை மன்ற நண்பர்கள் விளக்குவார்கள்

தாமரை
07-08-2009, 02:27 AM
எதையாச்சும் சொல்லிற வேண்டியது.. விளக்க ஆள் இருக்காங்க அப்படின்னு தைரியம்தானே!

சரி சரி சொல்றேன் கேளுங்க..

1. பாட்டில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்தது.. அதனால் அது மிக மிக குளிர்ச்சியாக் இருந்தது.

2. சோமு பாட்டிலை பால்கனியில் வச்சாந்தானே. அதனால் பாட்டில் வெயில்பட்டு சூடாக ஆரம்பித்தது.
(அதுக்குத்தான் கிழக்கு வடக்குன்னு சொல்லியிருக்கார் பி.ஜி.கே)

3. பாட்டில் சூடாக ஆரம்பித்ததும் விரிவடைய ஆரம்பித்தது. அதை விட வேகமாக பாட்டிலில் உள்ள காற்று சூடானதால் விரிவடைய ஆரம்பித்தது. இதனால் பாட்டிலில் காற்றின் அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.

4. காற்றின் அழுத்தம் காசைத்தூக்கும் அளவிற்கு வலுவடைந்ததும் காசு தூக்கப்பட்டு சிறிது காற்று வெளியேறியது. இதனால் பாட்டிலில் அழுத்தம் குறைந்த உடன் காசு மறுபடியும் பாட்டில் மேல் விழுந்து மூடிக்கொண்டது.

5. அழுத்தம் மேலும் உயராத வரை காசு அமைதியாக இருக்கிறது.

சரி சரி இதற்கு உதாரணமா குக்கர் விசிலைச் சொல்லலாம் இல்லையா?

நீராவி அழுத்தம் கூடக் கூட குக்கரின் வெயிட் மெதுவாக மேலே தள்ளப்படுகிறது.

நீராவி தப்பித்த உடன் அழுத்தம் குறைந்து வெயிட் மறுபடியும் கீழே வந்து விடுகிறது..

மசாலா, கொண்டைக் கடலை போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவதால், நமக்குள்ளும் இதே போல சில விளைவுகள் நடக்கும். தெரியுமில்ல.

4.

பா.ராஜேஷ்
08-08-2009, 09:42 AM
விளக்கத்திற்கு நன்றி தாமரை செல்வன். கூண்டு கிளி பற்றிய ராமின் பதிலும் சரியானதாகவே தோன்றுகிறது.

பரஞ்சோதி
17-08-2009, 09:16 AM
ஹி ஹி அது என்னுடைய கிளிங்கோ

- ஜோசியக்கார பரஞ்சோதி

பரஞ்சோதி
17-08-2009, 09:18 AM
நாணய நடனத்தை அழகாக படம் பிடித்த நடன இயக்குநர் தாமரையாருக்கு என் பாராட்டுகள்.

தாமரை
17-08-2009, 09:24 AM
ஹி ஹி அது என்னுடைய கிளிங்கோ

- ஜோசியக்கார பரஞ்சோதி

இல்லையே பரம்ஸ்..

அது இந்தக் கிளி

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994

கிளி ஜோசியர்

பரஞ்சோதி
17-08-2009, 09:34 AM
ஆஹா! எல்லோரும் சும்மா கிளி கிளின்னு கிளிச்சிருக்கீங்க.

அசத்தல் திரி, படிச்சிட்டு இருக்கிறேன் :)

pgk53
06-09-2009, 03:41 PM
அன்பு நண்பர்களே....அனைவருக்கும் வணக்கம்.
இன்றுதான் விடுமுறை கழிந்து பணியிடம் திரும்பினேன்.

தாமரை அவர்கள்....நாணய நாட்டியத்துக்கு அளித்த விளக்கம் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டது.
தாமரை அவர்களே....வாழ்க வளர்க...வணக்கம்.

கிளி புதிருக்கு இதுவரை யாருமே சரியான விடை அளிக்கவில்லை.

தாமரை அவர்கள் கொடுத்த மீராவின் கிளி லிங்க் பார்த்தேன் . அருமையாக உள்ளது.

கிளிக்கு சரியான விளக்கம் கொடுங்களேன்.

aren
07-09-2009, 04:30 AM
கிளிக்கு இறக்கையில் அடி பட்டிருக்கிறது, ஆகையால் அதனால் பறக்கமுடியவில்லை

தாமரை
07-09-2009, 04:45 AM
கிளி பறக்காமல் இருக்க சில காரணங்கள் இருக்கு.. பார்ப்போம்

1. கிளியின் இறகுகள் வெட்டப்பட்டிருத்தல்
அப்புறம் மரத்துக்கு மேல் எப்படி இருந்தது?

2. கிளிக்கு கண்பார்வை மங்கலாக இருத்தல்
உடல் நலம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்களே..

3. பறவைகளில் புத்திசாலித்தனமானது கிளி... கொஞ்ச நாள் கூட்டில் விட்டால் அது கூட்டிற்கு பழகி விடும் அதை தன்வீடா மாத்திக்கும். கூண்டில் உணவு, நீர் என அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்ததால் கிளி அதை தன் கூடாகவே மாத்திகிச்சி... பொதுவா கிளிகள் கூட்டமாத்தானே இருக்கும்.. இந்தக் கிளி தனியா இருந்தது ஏன்னு புரியலை... அப்படின்னா அந்தக் கிளிக்கு பேச்சுத் துணையில்லை.. அதான் குமுதாவை தன் தோழியா ஏத்துகிச்சு..

இந்த மூன்றில் ஒண்ணுதான்...

aren
07-09-2009, 06:45 AM
கிளி முன்னரே கூண்டுக்கிளியாக இருந்திருக்கலாம். யாராவது அதை வெளியே விட்டிருப்பார்கள்.

தாமரை
07-09-2009, 06:48 AM
அதான் சரியான பதில் இல்லைன்னு அண்ணா சொல்லிட்டாரே ஆரென்

pgk53
11-09-2009, 09:33 AM
ஏற்கனவே அந்த கிளி மனிதனால் வளர்க்கப் பட்ட கிளி. அதனால் தான் குமுதா அருகே சென்று (அது பறக்காமல் இருந்தது) அதை பிடிக்க முடிந்தது.
ஏற்கனவே கூண்டில் வளர்ந்த படியால், கூண்டை திறந்தும் அது பறக்கவில்லை ….என்று ராம் அவர்களும்,

கிளிக்கு இறக்கையில் அடி பட்டிருக்கிறது, ஆகையால் அதனால் பறக்கமுடியவில்லை ----கிளி முன்னரே கூண்டுக்கிளியாக இருந்திருக்கலாம். யாராவது அதை வெளியே விட்டிருப்பார்கள்.
என்று ஆரென் அவர்களும்,

1.கிளியின் இறகுகள் வெட்டப்பட்டிருத்தல்
அப்புறம் மரத்துக்கு மேல் எப்படி இருந்தது?

2. கிளிக்கு கண்பார்வை மங்கலாக இருத்தல்
உடல் நலம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்களே..

3. பறவைகளில் புத்திசாலித்தனமானது கிளி... கொஞ்ச நாள் கூட்டில் விட்டால் அது கூட்டிற்கு பழகி விடும் அதை தன்வீடா மாத்திக்கும். கூண்டில் உணவு, நீர் என அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்ததால் கிளி அதை தன் கூடாகவே மாத்திகிச்சி... பொதுவா கிளிகள் கூட்டமாத்தானே இருக்கும்.. இந்தக் கிளி தனியா இருந்தது ஏன்னு புரியலை... அப்படின்னா அந்தக் கிளிக்கு பேச்சுத் துணையில்லை.. அதான் குமுதாவை தன் தோழியா ஏத்துகிச்சு..
இந்த மூன்றில் ஒண்ணுதான்... என்று தாமரை அவர்கள் ஆனித்தரமாகவும் கூறியுள்ளார்கள்.

இவர்கள் அனைவரது முயற்சிகளுக்கும் நன்றி.

ஆனால் யாருமே ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கவே இல்லையே.
அது கிளிதான்…..ஆனால் குஞ்சுக்கிளி.
இன்னும் பறக்கத்தெரியாத சரியாக சிறகு வளராத பாப்பா கிளி. அதனால்தான் அது பறந்து செல்லவில்லை.

ஆளை விடுங்கப்பா சாமி……..

pgk53
11-09-2009, 09:38 AM
புதிர் எண்-447

பீர்பல் தனது வீட்டில் இருந்து அரண்மனைக்கு தினமும் நடந்து வருவதை ஒருநாள் அக்பர் சக்கரவர்த்தி பார்த்தார். அதனால் பீர்பலுக்கு ஒரு குதிரையை தருவதாகக் கூறினார்.
குதிரை லாயக் காப்பாளனை அழைத்து பீர்பல் வீட்டுக்கு ஒரு குதிரையை அனுப்பிவைக்கும்படி கட்டளையிட்டார்.
குதிரை லாயக் காப்பாளனுக்கு பீர்பலின் செல்வாக்கைக் கண்டு பொறாமையும் வயிற்றெரிச்சலும் ஏற்கனேவே இருந்தது.அதனால் நல்ல குதிரையை அனுப்ப அவன் விரும்பவில்லை. தன் லாயத்தில் இருப்பதிலேயே மெலிந்து நோய்வாய்ப்பட்டு இன்றோ நாளையோ என்றிருந்த ஒரு குதிரையை பீர்பல் வீட்டுத் தொழுவத்தில் கட்டிவிட்டு வந்தான்.

மறுநாள் விடிந்தது.

அரண்மனைக்குப் புறப்பட்ட பீர்பல் குதிரையைக் கட்டிவைத்திருந்த இடத்துக்குச் சென்றார்.

பரிதாபமான அந்தக் குதிரை இரவிலேயே உயிரை விட்டிருந்தது..
பீர்பல் சிறிது நேரம் குதிரையின் விதியை எண்ணி வருந்தினார்.
பிறகு எப்போதும்போல் நடந்து அரண்மனைக்குச் சென்றார்.

அன்றைய தினம் தற்செயலாக அரண்மனை உப்பரிகைப் பக்கம் வந்திருந்த அக்பர் சக்கரவர்த்தி, பீர்பல் நடந்து வந்ததைக் கண்டார்.
உடனே கீழே இறங்கி வாசலுக்கு வந்தார்.

பீர்பலை அழைத்து, குதிரை இருக்கும்போது ஏன் நடந்து வருகிறார் என்று கேட்டார்.

இப்போது பீர்பல் தர்ம சங்கடமான நிலையில் இருந்தார்.
அக்பர் பரிசாக அளித்த குதிரை நல்ல குதிரை அல்ல என்று கூறினால் அது பரிசளித்தவரை அவமரியாதை செய்ததாகும்

நோய்வாய்ப்பட்ட குதிரையை லாயத் தலைவன் கொண்டு வந்தான் என்றான் பாவம் அந்த லாயத்தலைவன் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதனால் என்ன பதில் கூறுவது என்று ஒருகனம் தடுமாறினார் பீர்பல்.

நண்பர்களே பீர்பல் என்ன பதில் கூறியிருப்பார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்???????????????

தாமரை
11-09-2009, 09:39 AM
ஆனால் யாருமே ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கவே இல்லையே.
அது கிளிதான்…..ஆனால் குஞ்சுக்கிளி.
இன்னும் பறக்கத்தெரியாத சரியாக சிறகு வளராத பாப்பா கிளி. அதனால்தான் அது பறந்து செல்லவில்லை.

ஆளை விடுங்கப்பா சாமி……..

:icon_shout::icon_shout::icon_shout::icon_shout::icon_shout:

:medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:

pgk53
11-09-2009, 03:18 PM
Quote:
Originally Posted by pgk53
ஆனால் யாருமே ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கவே இல்லையே.
அது கிளிதான்…..ஆனால் குஞ்சுக்கிளி.
இன்னும் பறக்கத்தெரியாத சரியாக சிறகு வளராத பாப்பா கிளி. அதனால்தான் அது பறந்து செல்லவில்லை.

ஆளை விடுங்கப்பா சாமி……..

:icon_shout::icon_shout::icon_shout::icon_shout::icon_shout:

:medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:

தாமரை அண்ணா வியப்புடனும் கேள்விக்குறியுடனும் விழிப்பதைக் கண்டேன்.....அது வேறொன்றுமில்லை....
கிளிக்குஞ்சு என்று சொன்னால் என்ன கணைகள் தொடுக்கப்படுமோ என்ற பயந்தான்...

வானதிதேவி
11-09-2009, 03:25 PM
கிளிக்கு கிலி.அதான் பறக்கவில்லை சரியா நண்பரே

pgk53
14-09-2009, 02:10 AM
என்ன?? நண்பர்களே...யாருமே பீர்பல் புதிருக்கு விடையளிக்க முன்வரவில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

aren
14-09-2009, 03:01 AM
பீர்பல் தனக்கு உட்காரும் இடத்தில் கட்டி என்று சொல்லியிருப்பார்.

அப்படின்னா நகர்ந்து உட்காரவேண்டியதுதானே என்று மக்கள் யாரும் சொல்லமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

பாரதி
14-09-2009, 03:44 AM
அப்படின்னா நகர்ந்து உட்காரவேண்டியதுதானே என்று மக்கள் யாரும் சொல்லமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆஹா....!!! வரப்போகும் புதிருக்கு பதிலா...?:)

aren
14-09-2009, 03:46 AM
ஆஹா....!!! புதிருக்கு முன்னரே பதிலா...?:)

இல்லை பாரதி அவர்களே. இந்த பதில் குதிரையை ஏன் ஓட்டிக்கொண்டுவரவில்லை என்று அக்பர் அவர்களின் கேள்விக்கு பிர்பலின் பதில்.

தாமரை
14-09-2009, 03:48 AM
பீர்பாலுக்கு ஆரென் மாதிரி ஓட்டத் தெரியாதுங்க...(நான் குதிரையைத்தான் சொன்னேன்)

பாரதி
14-09-2009, 03:49 AM
ஹஹஹா..... நானும் புரிந்து கொண்டேன். (நகைச்சுவைக்காக நானும் மேற்கோளிட்டேன். தவறாக எண்ண வேண்டாம்) விளக்கத்திற்கு மிக்க நன்றி.

பரஞ்சோதி
14-09-2009, 08:06 AM
பீர்பால்: "நான் அந்த குதிரையை தமிழ்மன்ற பரஞ்சோதிக்கு பரிசாக கொடுத்து விட்டேன்"

pgk53
14-09-2009, 01:30 PM
பீர்பால்: "நான் அந்த குதிரையை தமிழ்மன்ற பரஞ்சோதிக்கு பரிசாக கொடுத்து விட்டேன்"

சோனிக் குதிரையை பரிசாகப் பெற்ற பரஞ்சோதிக்கு எனது அனுதாபம் கலந்த வாழ்த்துக்கள்.

ஆனால் பீர்பல் அப்படிச் செய்யவில்லையே!!!!!!!

அக்னி
14-09-2009, 02:22 PM
பீர்பல்: அந்தக் குதிரையின் வேகத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடிய்வில்லை அரசே...
அக்பர்: அவ்வளவு வேகமா..?
பீர்பல்: ஆமாம் அரசே! ஒரே இரவில் இவ்வுலகத்திலிருந்து, மேலுலகத்திற்குப் பறந்து சென்றுவிட்டது என்றால் பாருங்களேன்...
அக்பர்: !!!???!!!

வானதிதேவி
14-09-2009, 05:25 PM
என்னை சுமந்து செல்ல வேண்டுமே என நினைத்து என் தொழவம் வந்து சேர்ந்த தருனமே உயிரை மாய்த்து கொண்டு விட்டது என்று கூறியிருப்பார்

lenram80
15-09-2009, 05:05 PM
உங்கள் குதிரை மிகப் பாசமான குதிரை போல. உங்களையும், அந்த குதிரை லாயத் தலைவனையும் பிரிந்த துக்கத்தில் அது இறந்து விட்டது அரசே!

aravinthan21st
17-09-2009, 06:34 PM
எந்த விம்பமும் தெரியாது .ஏனென்றால் மூச்சு விடவே முடியாது என்றால் ஒளி வர வாய்ப்பில்லை ஆகவே விம்பம் தெரிய வாய்ப்பில்லை.

aravinthan21st
18-09-2009, 08:34 PM
புதிர் எண்-445

எனக்கும் கிளி யோசியக்காரநிடமிருந்து தப்பியது போல்தான் இருக்கிறது.

aravinthan21st
18-09-2009, 09:09 PM
புதிர் எண்-344

''அவர் இறந்தது பனிக்கட்டியால், விபத்து என்றால் கூர்மையான பனித்துண்டு வெட்டியிருக்கும்---பரஞ்சோதி.

அவன் காலிங் பெல் அடித்திருப்பான் அதனால் அதிர்ந்த கூரையில் இருந்த பனிக்கட்டிகள் அவன் தலையில் விழுந்திருக்கும் --மகாபிரபு

கத்தி போல் கூர் முனையுடன் தாழ்வாராங்களில் பனிக்கட்டி தொங்கும். அது தலையில் விழுந்து மரணம் சம்பவித்திருக்கலாம். அதுக்காக அழைப்பு மணி அடித்த அதிர்வு எல்லாம் ஓவருங்கோ என்று அமரனும்,

பதில் கூறாத தாமரை அண்ணாவைப் பாராட்டிய சுட்டி பையனுக்கும் எனது வணக்கங்கள்.

அடேயப்பா.....ஏற்கனெவே நிறைய தகவல்கள் பனிக்கூட்டம்போல அடர்ந்து கிடக்கின்றனவே என்ற க்ளூ கொடுத்ததும் சரசரவென பதில் மழை பொழிந்த அனைவருக்கும் மீண்டும் வணக்கங்கள்.

இருப்பினும் மிகச் சரியான பதிலைக் கொடுத்த அமருக்கு எனது பாராட்டுகள்.
அமரன் பதிலைக் கொடுக்க உதவிசெய்யும் வண்ணம் பதிவு கொடுத்த பரஞ்சோதிக்கும் எனது பாராட்டுக்கள்.

நாளை ஒரு மாத விடுப்பில் தாயகம் புறப்பட உள்ளேன்.
நாளை ஒரு புதிரை பதிவு செய்துவிட்டுப் புறப்படுகிறேன்.''

pgk53 அவர்களே,
தங்கள் கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது என்றீர்கள்,ஆனால் வீட்டு வாசலில்தான் இறந்திருந்தால், தலையில் பட்ட காயத்தால் என்னதான் குளிர் என்றாலும் குருதி இழப்பென்பது பெரியதே.
நீங்கள் தந்த தகவலின்படி எனது விடை,
அ) வேறிடத்தில் இறந்த /கொலை செய்த நண்பரை வீடு வாசலில் போட்டிருக்கலாம்.
ஆ) உண்மையிலேயே நண்பர் வீட்டு வாசலிலே கூரான பணிக்கட்டியாலோ அல்லது வேரு வழியிலோ காயம்பட்டு குருதி இழப்பாலும் குளிராலும் இறதிருக்கலாம்,ஆனால் மிகுந்த பனிப்பொழிவால் மூடப்பட்டிருக்கலாம். [/COLOR]

pgk53
20-09-2009, 09:26 AM
பீர்பல்: அந்தக் குதிரையின் வேகத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடிய்வில்லை அரசே...
அக்பர்: அவ்வளவு வேகமா..?
பீர்பல்: ஆமாம் அரசே! ஒரே இரவில் இவ்வுலகத்திலிருந்து, மேலுலகத்திற்குப் பறந்து சென்றுவிட்டது என்றால் பாருங்களேன்...
அக்பர்: !!!???!!!

திரு அக்னி அவர்களே......அருமையான பதில்.அசத்திவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.
அப்படியே அடுத்து வரும் ஒரு விஞ்ஞானப் புதிருக்கும் விடையைக் கூறிவிடுங்கள்.

pgk53
20-09-2009, 09:28 AM
புதிர் எண் - 448

அந்த பள்ளியின் எட்டாவது மாணவர்களுக்கான விஞ்ஞான வகுப்பு.

விஞ்ஞான பரிசோதனைச் சாலையில் நடந்துகொண்டிருந்தது.
மாணவ மாணவியர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த விஞ்ஞான பரிசோதனைகளை விரைவில் முடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

குமுதாவும் தனது சோதனையை விரைவில் முடித்தால் வீடு திரும்பலாம் என்று நினைத்தாள்.

அப்போது விஞ்ஞான பேராசிரியர் அங்கே வந்தார். அவர் கையில் ஒரு முட்டை வைத்திருந்தார்.

பேராசிரியர் அந்த முட்டையை அனைவருக்கும் காண்பித்தபடி அருகில் இருந்த ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து மேசைமேல் வைத்தார்.

பிறகு, “ மாணவ மணிகளே!!!!!!!! கவனமாகப் பாருங்கள். இதோ இந்த முட்டையை நான் இந்த கண்ணாடி பாட்டிலின் திறந்துள்ள வாயின்மேல் வைக்கிறேன்.

பாட்டிலின் வாய் கொஞ்சம் குறுகலாக உள்ளது . அதனால் முட்டை பாட்டிலுக்குள் செல்லாது.
பாட்டிலின் வாய் இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்தால் முட்டை சுலபமாக உள்ளே போய்விடும்.

நீங்கள் இந்த பரிசோதனைச் சாலையில் உள்ளவற்றில் எதை வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளலாம்.

முட்டையை பாட்டிலில் வாய்மீது வைத்தால் அது தானாக பாட்டிலின் உள்ளே போய்விடவேடும்.

முட்டை எந்தக் காரணம் கொண்டும் உடையக் கூடாது.

பாட்டிலின் வாயையும் உடைக்கக் கூடாது.

இதைச் செய்துமுடிக்கக் கூடிய கூர்மதி கொண்டவர்கள் யாராவது இருந்தால் முன்வாருங்கள்” என்றார்.

மானவ மாணவிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்களே தவிர யாரும் முன்வரவில்லை.

எல்லோரையும் தீர்க்கமுடன் நோக்கிய குமுதா தான் இக்காரியத்தை செய்வதாக கையை உயர்த்தியபடி முன்வந்தாள்.

மகிழ்வுற்ற பேராசியர், “ குமுதா….நீ இதை வெற்றிகரமாகச் செய்தால் 100 ரூபாய் பரிசளிப்பேன்” என்றார்.

குமுதா சில ஏற்பாடுகளைச் செய்தாள்.அந்த ஏற்பாடுகளுக்கு அரை மணிநேரம் அவகாசம் எடுத்துக்கொண்டாள். முட்டையை பாட்டிலின் வாய்மேல் வைத்தாள்.

பிறகு அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பாட்டிலின் வாயின்மேல் வைக்கப் பட்டிருந்த முட்டை தானாக நழுவி பாட்டிலுக்குள் சென்றுவிட்டது.

மாணவர்கள் கரகோஷம் செய்ய பேராசிரியர் குமுதாவைப் பாராட்டி 100 ரூபாய் பரிசளித்தார்.

நண்பர்களே,
குமுதா எந்த வழியைக் கையாண்டு இதைச் சாதித்தாள் ?????????????????

பாரதி
20-09-2009, 11:41 AM
முட்டையை வேக வைக்க அனுமதி உண்டெனில் சாத்தியம்தான்.

pgk53
20-09-2009, 12:08 PM
முட்டையை வேக வைக்க அனுமதி உண்டெனில் சாத்தியம்தான்.

புதிரை இன்னொருமுறை படித்துப் பாருங்கள் பாரதி அவர்களே.
--------------------எவ்வளவுதான் முட்டையை வேக வைத்தாலும் முட்டையின் தோல் சேதமாகமல் முட்டை உள்ளே செல்லாது.

மேலும் முட்டையை வைத்தால் அது தானாக உள்ளே போய்விடுவேண்டும்----என்று வருகிறது புதிரில்??????????

பாரதி
20-09-2009, 01:49 PM
நன்றி பிஜிகே.

முதலில் முட்டையை நன்கு வேக வைக்க வேண்டும். (முட்டையின் ஓட்டினை நீக்கினால் மிகவும் எளிது.) பின்னர் சில தீக்குச்சிகளை பற்ற வைத்து கண்ணாடிக்குடுவையில் போட வேண்டும். தீக்குச்சிகளை உள்ளே போட்ட உடன், கண்ணாடிக்குடுவையின் வாய்ப்பகுதியை அடைக்கும்படி தலைகீழாக, (அதாவது முட்டையின் சிறிய பகுதி குடுவையின் வாய்க்குள் இருக்கும்படி) வைக்க வேண்டும்.

தீக்குச்சிகள் எரிந்து முடிந்ததும், குடுவையின் உள்ளே ஏற்படும் வெற்றிடத்தால், முட்டை உள் நோக்கி இழுக்கப்படும். முட்டை நழுவி தானே குடுவையின் உள்ளே சென்று விடும்.

pgk53
20-09-2009, 03:41 PM
[QUOTE=பாரதி;433512]நன்றி பிஜிகே.

முதலில் முட்டையை நன்கு வேக வைக்க வேண்டும். (முட்டையின் ஓட்டினை நீக்கினால் மிகவும் எளிது.) பின்னர் சில தீக்குச்சிகளை பற்ற வைத்து கண்ணாடிக்குடுவையில் போட வேண்டும். தீக்குச்சிகளை உள்ளே போட்ட உடன், கண்ணாடிக்குடுவையின் வாய்ப்பகுதியை அடைக்கும்படி தலைகீழாக, (அதாவது முட்டையின் சிறிய பகுதி குடுவையின் வாய்க்குள் இருக்கும்படி) வைக்க வேண்டும்.

தீக்குச்சிகள் எரிந்து முடிந்ததும், குடுவையின் உள்ளே ஏற்படும் வெற்றிடத்தால், முட்டை உள் நோக்கி இழுக்கப்படும். முட்டை நழுவி தானே குடுவையின் உள்ளே சென்று விடும்.[/QUOTE

முட்டைக்கு எந்த சேதமும் கூடாது என்பதுதானே நிபந்தனை!!!!!!!!!!!!

பாரதி
20-09-2009, 04:40 PM
பரிசோதனைச்சாலை என்பதால் வினிகர் (அல்லது அசிட்டிக் அமிலத்தில்) முட்டையை அதன் ஓடு மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் சில தீக்குச்சிகளை பற்ற வைத்து கண்ணாடிக்குடுவையில் போட வேண்டும். தீக்குச்சிகளை உள்ளே போட்ட உடன், கண்ணாடிக்குடுவையின் வாய்ப்பகுதியை அடைக்கும்படி தலைகீழாக, (அதாவது முட்டையின் சிறிய பகுதி குடுவையின் வாய்க்குள் இருக்கும்படி) வைக்க வேண்டும்.

தீக்குச்சிகள் எரிந்து முடிந்ததும், குடுவையின் உள்ளே ஏற்படும் வெற்றிடத்தால், முட்டை உள் நோக்கி இழுக்கப்படும். முட்டை நழுவி தானே குடுவையின் உள்ளே சென்று விடும்.

(இந்த முறையில் முட்டை பார்ப்பதற்கு முழுமையான முட்டையாகவே காட்சி அளிக்கும். ஆனால் உண்மையில் முட்டையின் ஓட்டில் இருக்கும் கால்சியம் கார்பனேட் அமிலத்தில் கரைந்து விடும்.)

இது சரியா என்று சொல்லுங்கள் பிஜிகே.

aren
21-09-2009, 01:48 AM
பாரதி கலக்குறீங்க. பாராட்டுக்கள்.

தாமரை
21-09-2009, 02:35 AM
கோலி சோடாவில கோலியை எப்படிப் போடறாங்களோ அப்படி!

அக்னி
21-09-2009, 07:15 AM
எத்தனால் என்னும் எத்தன்,
முட்டை ஓட்டின் கடின மனதை இளகவைத்துப்
பாட்டிலில் அடைத்துவிடுவானோ...

தமிழ்மகன்
23-09-2009, 11:00 PM
குடுவையில் தண்ணீர் நிரப்பி வாயின் மீது முட்டையை வைத்து குடுவையை சூடுபடுத்த வேண்டும். தண்ணீரின் சூட்டால் குடுவையின் வாய் விரிந்து முட்டையை உள்வாங்கிக் கொள்ளும். குடுவையில் நீர் நிரம்பி உள்ளதால், முட்டையும் உடையாது குடுவைக்குள் நீந்தி சென்றுவிடும்..

எப்படி இந்த எடிசன் கண்டுபிடிப்பு?

மஞ்சுபாஷிணி
24-09-2009, 05:36 AM
புதிர் எண்-447

பீர்பல் தனது வீட்டில் இருந்து அரண்மனைக்கு தினமும் நடந்து வருவதை ஒருநாள் அக்பர் சக்கரவர்த்தி பார்த்தார். அதனால் பீர்பலுக்கு ஒரு குதிரையை தருவதாகக் கூறினார்.
குதிரை லாயக் காப்பாளனை அழைத்து பீர்பல் வீட்டுக்கு ஒரு குதிரையை அனுப்பிவைக்கும்படி கட்டளையிட்டார்.
குதிரை லாயக் காப்பாளனுக்கு பீர்பலின் செல்வாக்கைக் கண்டு பொறாமையும் வயிற்றெரிச்சலும் ஏற்கனேவே இருந்தது.அதனால் நல்ல குதிரையை அனுப்ப அவன் விரும்பவில்லை. தன் லாயத்தில் இருப்பதிலேயே மெலிந்து நோய்வாய்ப்பட்டு இன்றோ நாளையோ என்றிருந்த ஒரு குதிரையை பீர்பல் வீட்டுத் தொழுவத்தில் கட்டிவிட்டு வந்தான்.

மறுநாள் விடிந்தது.

அரண்மனைக்குப் புறப்பட்ட பீர்பல் குதிரையைக் கட்டிவைத்திருந்த இடத்துக்குச் சென்றார்.

பரிதாபமான அந்தக் குதிரை இரவிலேயே உயிரை விட்டிருந்தது..
பீர்பல் சிறிது நேரம் குதிரையின் விதியை எண்ணி வருந்தினார்.
பிறகு எப்போதும்போல் நடந்து அரண்மனைக்குச் சென்றார்.

அன்றைய தினம் தற்செயலாக அரண்மனை உப்பரிகைப் பக்கம் வந்திருந்த அக்பர் சக்கரவர்த்தி, பீர்பல் நடந்து வந்ததைக் கண்டார்.
உடனே கீழே இறங்கி வாசலுக்கு வந்தார்.

பீர்பலை அழைத்து, குதிரை இருக்கும்போது ஏன் நடந்து வருகிறார் என்று கேட்டார்.

இப்போது பீர்பல் தர்ம சங்கடமான நிலையில் இருந்தார்.
அக்பர் பரிசாக அளித்த குதிரை நல்ல குதிரை அல்ல என்று கூறினால் அது பரிசளித்தவரை அவமரியாதை செய்ததாகும்

நோய்வாய்ப்பட்ட குதிரையை லாயத் தலைவன் கொண்டு வந்தான் என்றான் பாவம் அந்த லாயத்தலைவன் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதனால் என்ன பதில் கூறுவது என்று ஒருகனம் தடுமாறினார் பீர்பல்.

நண்பர்களே பீர்பல் என்ன பதில் கூறியிருப்பார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்???????????????

புதிர் எண்: 447

குதிரையை புல் மேய விட்டுவிட்டு காலார நடந்து வந்தேன் மன்னரே.... வைத்தியர் என் தொப்பை குறைய சிறிது நடக்க சொன்னார் அதான்....

pgk53
26-09-2009, 02:58 PM
பரிசோதனைச்சாலை என்பதால் வினிகர் (அல்லது அசிட்டிக் அமிலத்தில்) முட்டையை அதன் ஓடு மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் சில தீக்குச்சிகளை பற்ற வைத்து கண்ணாடிக்குடுவையில் போட வேண்டும். தீக்குச்சிகளை உள்ளே போட்ட உடன், கண்ணாடிக்குடுவையின் வாய்ப்பகுதியை அடைக்கும்படி தலைகீழாக, (அதாவது முட்டையின் சிறிய பகுதி குடுவையின் வாய்க்குள் இருக்கும்படி) வைக்க வேண்டும்.

தீக்குச்சிகள் எரிந்து முடிந்ததும், குடுவையின் உள்ளே ஏற்படும் வெற்றிடத்தால், முட்டை உள் நோக்கி இழுக்கப்படும். முட்டை நழுவி தானே குடுவையின் உள்ளே சென்று விடும்.

(இந்த முறையில் முட்டை பார்ப்பதற்கு முழுமையான முட்டையாகவே காட்சி அளிக்கும். ஆனால் உண்மையில் முட்டையின் ஓட்டில் இருக்கும் கால்சியம் கார்பனேட் அமிலத்தில் கரைந்து விடும்.)

இது சரியா என்று சொல்லுங்கள் பிஜிகே.

மிகச் சரியான விடை பாரதி அவர்களே.....வாழ்த்துக்கள்.

அடுத்த புதிர் நிச்சயமாக நாளை பதிகிறேன்.
வணக்கம்.

pgk53
27-09-2009, 05:52 PM
புதிர் எண்-448

அது நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதி.

ஒரு வேக்யூம் க்ளீனர் விற்பனையாளன் அந்தப் பகுதிக்குள் புகுந்தான்.
இன்று எப்படியும் 3 வேக்யூம் க்ளீனராவது இந்தப் பகுதியில் விற்றுவிடவேண்டும் என்று மிகவும் விரும்பினான்.

அந்த வீட்டுன் அழைப்பு மணியை அழுத்தினான்.
வீட்டில் இருந்த இல்லத்தரசி கதவைத் திறந்தாள்.

விற்பனையாளன் தனது சாதனத்தைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேச ஆரம்பித்தான்.
எந்த அழுக்கையும் நொடியில் சுத்தப் படுத்திவிடும் என்றான்.
அத்தோடு நின்றுவிடாமல் சுற்றுமுற்றும் பார்த்தான்.

தெருவில் ஒரு மாடு நடந்து கொண்டிருந்தது.. நடந்துகொண்டே சாணி போட்டுச் சென்றது.
கொஞ்சம் பொருங்கள் என்றவன் வேகமாக வெளியே சென்று அந்த சானத்தை எடுத்து வந்தான்.

ஹாலின் நடுவில் சானத்தைப் போட்டான். அதை தரையில் பரப்பிவிட்டான்.

பிறகு அந்த இல்லத்தரசியைப் பார்த்து, “ அம்மா….பாருங்கள் இந்த சானத்தை நொடிப்பொழுதில் எனது வேக்யூம் க்ளீனரால் சுத்தப் படுத்திக் கட்டுகிறேன். அப்படி சுத்தப் படுத்த இயலவில்லை என்றால் தரையில் மீதம் இருக்கும் சானத்தை நான் எனது நாக்கினால் சுத்தப்படுத்துகின்றேன்” என்று தன்னம்பிக்கையுடன் சவால் விட்டான்.

அதைக் கேட்ட அந்த இல்லத்தரசி,” இன்று உங்களுக்கு மதிய உணவே இந்த சாணமாகத்தான் இருக்கப்போகிறது “ என்று கூறியபடி பெரிதாக நகைத்தாள்.

விற்பனையாளன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

நண்பர்களே, விற்பனையாளன் தனது சாதனத்தை உபயோகிக்கும் முன்பே இல்லத்தரசி அவ்வளவு உறுதியாக ஏன் கூறினார்.????

தெரிந்தால் விற்பனையாளனுக்குச் சொல்லுங்கள்.!!!!!!!!!!!!!!

aren
27-09-2009, 05:57 PM
அந்த வீட்டில் கரண்ட் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அழைப்பு மணி வேலை செய்திருக்கிறது ஆகையால் அங்கே கரண்ட் இருக்கிறது.

அந்த வீட்டின் தரை கரடுமுரடாக இருந்திருக்கலாம் அதில் வாக்யூம் செய்தால் முழுவதுமாக எடுக்கமுடியாது

கண்மணி
27-09-2009, 06:00 PM
1. சாணம் வேகுவம் கிளீனரை வெடிக்க வச்சிருச்சி... வேகமாக உறிஞ்சப்பட்டதால் அதில் இயற்கை வாயு வெளிப்பட்டு வெடிச்சி....

2. வெற்றிடத் துடைப்பம் உறிஞ்சுதல் மூலம் சுத்தப் படுத்தும். இதில் இரண்டு சாத்தியக் கூறுகள் இருக்கு

அ. ஈரமான கொழகொழப்பான சாணிக் கறை வெற்றிடத் துடைப்பானால் கண்டிப்பாக போகாது
ஆ. வெற்றிடத் துடைப்பானில் உள்ள வடிகட்டி ஈரமான கொழகொழப்பான சாணத்தால் அடைக்கப்பட்டு விடும். இதனால் காற்றினை உறிஞ்சுவது மிகவும் கடினமாகி விடும். வெற்றிடத்துடைப்பம் இருமி இருமி காலாவதியாகிடும்.

பாரதி
27-09-2009, 10:22 PM
விற்பனையாளன் தனது சாதனத்தைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேச ஆரம்பித்தான். எந்த அழுக்கையும் நொடியில் சுத்தப் படுத்திவிடும் என்றான்.
..............................
ஹாலின் நடுவில் சானத்தைப் போட்டான். அதை தரையில் பரப்பிவிட்டான்.

பிறகு அந்த இல்லத்தரசியைப் பார்த்து, “ அம்மா….பாருங்கள் இந்த சானத்தை நொடிப்பொழுதில் எனது வேக்யூம் க்ளீனரால் சுத்தப் படுத்திக் கட்டுகிறேன்.

1. வீட்டில் மின்சாரம் தடைப்பட்டிருக்க வேண்டும். (சில அழைப்புமணிகள் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் சமயத்தில் மின்கலத்தின் உதவியினால் செயல்படுகின்றன.)

2. நொடிப்பொழுது என்பது கண்ணிமைக்கும் நேரம்தான். சாதனத்தை இயக்குவதற்குள்ளேயே நொடி நேரம் முடிந்துவிடுமே!

பா.ராஜேஷ்
29-09-2009, 11:50 AM
கதவை திறக்கும் வேளையில் மின்சாரம் தடைப் பட்டிருக்க கூடும். எனவே அவ்வில்லத்தரசி உறுதியாய் கூறி இருக்கலாம்!!!

pgk53
01-10-2009, 03:30 PM
1. வீட்டில் மின்சாரம் தடைப்பட்டிருக்க வேண்டும். (சில அழைப்புமணிகள் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் சமயத்தில் மின்கலத்தின் உதவியினால் செயல்படுகின்றன.)

2. நொடிப்பொழுது என்பது கண்ணிமைக்கும் நேரம்தான். சாதனத்தை இயக்குவதற்குள்ளேயே நொடி நேரம் முடிந்துவிடுமே!

அன்பு நண்பர் பாரதி அவர்கள் மிகச் சரியான பதிலைக் கூறியுள்ளார்.
முதல் விடைதான் சரியானது.அவருக்கு எனது வாழ்த்துக்கள்

நொடிப்பொழுது என்பது கிட்டத்தட்ட அனைவரும் பொதுவாக உபயோகப் படுத்தும் வார்த்தைதான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

இனிமேல் நண்பர்கள் ஒரு பதிவில் ஒரு விடைதான் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒரே புதிருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடை கூறுவது அடுத்தவர்கள் தங்கள் கருத்தைப் பதிய இடைஞ்சலாக இருக்கும் என்று நினைக்கின்றேன்....நண்பர்களே ....சரிதானா??????

aren
02-10-2009, 02:47 AM
அன்பு நண்பர் பாரதி அவர்கள் மிகச் சரியான பதிலைக் கூறியுள்ளார்.
முதல் விடைதான் சரியானது.அவருக்கு எனது வாழ்த்துக்கள்

??????

நண்பர் பிஜிகே அவர்களே, பாரதிக்கு முன்னாலேயே நான் இந்த விடையைக் கூறியிருக்கிறேனே.

pgk53
02-10-2009, 10:28 AM
அந்த வீட்டில் கரண்ட் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அழைப்பு மணி வேலை செய்திருக்கிறது ஆகையால் அங்கே கரண்ட் இருக்கிறது.

அந்த வீட்டின் தரை கரடுமுரடாக இருந்திருக்கலாம் அதில் வாக்யூம் செய்தால் முழுவதுமாக எடுக்கமுடியாது

அன்பு நண்பரே....ஆரென் அவர்களே......முதலில் சரியாக விடை சொல்ல ஆரம்பித்தீர்கள் . ஆனால் அடுத்த வரியிலேயே நீங்களே அந்த விடை தவறு என்று சொல்லிவிட்டீர்களே????????????

வியாசன்
02-10-2009, 10:50 AM
புதிர் எண் 449

ஒருவர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கின்றார். அடுத்த புகையிரத நிலையத்தில் நிற்கும்போது பரோட்டா வாங்க் செல்கின்றார். அந்த நிலையத்தில் வண்டி மூன்று நிமிடங்கள்தான் நிற்கும். இவர் சென்று கடைக்காரனிடம் மூன்று பரோட்டா கேட்கின்றார். ஒரு பரோட்டா சுடுவதற்கு பக்கத்திற்கு ஒரு நிமிடவீதம் இரண்டு நிமிடம் ஆகும். அவருடைய சட்டியில் ஒரே நேரத்தில் இரண்டு பரோட்டாக்களைதான் சுட முடியும். கடைக்காரர் யோசித்துவிட்டு மூன்று நிமிடங்களுக்குள் சுட்டு கொடுக்கின்றார். எப்படி சுட்டிருப்பார் என்பதை கூறமுடியுமா?

aren
02-10-2009, 11:13 AM
முதலில் இரண்டு பரோட்டக்களை சுட்டார். அவை முதல் பக்கம் வெந்தவுடன் ஒன்றை மறுபக்கம் திருப்பிப்போட்டார். ஒன்றை கீழே இறக்கிவிட்டு, அந்த இடத்தில் மூன்றாவது பரோட்டாவைப் போட்டார். ஒரு நிமிடம் கழித்து, முதல் பரோட்டாவை எடுத்துவிட்டு கீழே வைத்திருந்த பரோட்டாவை அந்த இடத்தில் போட்டார். மூன்றாவது பரோட்டாவைத் திருப்பிபோட்டார். அதுவும் அடுத்த ஒரு நிமிடத்தில் வெந்துவிட்டது.

வியாசன்
02-10-2009, 03:02 PM
வாழ்த்துக்கள் அரேன்

உங்களுக்கு பரிசு தரவேண்டும் நானோ ஏழை

pgk53
05-10-2009, 12:43 PM
பரோட்டா புதிர் போட்ட வியாசனுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்..

மக்களே பணிப் பளுவினால் அடுத்த புதிரைப் போடாமல் இருந்தேன் . மன்னிக்கவும்.

நாளை ஒரு மாத விடுப்பில் தாயகம் புறப்பட உள்ளேன்.
அதற்குள் கண்டிப்பாக புதிரைப் போட்டுவிட்டுத்தான் செல்வேன்..

aren
05-10-2009, 12:46 PM
நாளை ஒரு மாத விடுப்பில் தாயகம் புறப்பட உள்ளேன்.
அதற்குள் கண்டிப்பாக புதிரைப் போட்டுவிட்டுத்தான் செல்வேன்..

அதற்குண்டான பதிலை எனக்கு மட்டும் தனிமடலில் அனுப்பிவிடுங்கள்.

pgk53
05-10-2009, 12:48 PM
புதிர் எண்-450

ஒரு குறுநில மன்னனிடம் அமைச்சராக இருந்த அவர் எல்லாம் நன்மைக்கே என்ற தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.மன்னருக்கும் அவருக்கும் இடையே சிறந்த நட்பு இருந்தது.மந்திரி துணையில்லாமல் மன்னர் எங்குமே போவதில்லை.

ஒருநாள் இருவரும் வேட்டையாட காட்டுக்குக் கிளம்பினார்கள்.மன்னனின் வில்லில் நாண் பூட்டும்போது மன்னன் ஒரு சிறிய தவறு செய்தமையால் அம்பு எய்யும்போது மன்னனின் வலது கை கட்டைவிரமல் துண்டாகி கீழே விழுந்தது.வலியால் துடித்தான் மன்னன்.

வழக்கம்போல அமைச்சர் பொறுத்துக்கொள்ளுங்கள் மன்னா….எல்லாமே ஒரு நன்மைக்குத்தான் என்றார்.
மன்னனுக்கு கோபம் வந்தது.தான் வேதனையால் துடிப்பதில் என்ன நன்மை இருந்துவிடப் போகின்றது. அமைச்சர் தவறாகக் கூறுகிறீர்கள் என்றான்

அப்போதும் அமைச்சர் ஒத்துக்கொள்ளவில்லை. “ மன்னா,,, இதனால் ஒரு நன்மை கட்டாயமாக உங்களுக்கு இருக்கும்” என்றார்.
மன்னன் மிகுந்த ஆத்திரம் அடைந்து, அமைச்சரை சிறையில் அடைத்தான்.

ஒரு மாதம் கடந்தது. வழக்கம்போலவே மன்னன் வேட்டைக்குக் கிளம்பினான். ஆனால் இம்முறை அமைச்சர் இல்லை.
காட்டுக்குள் நீண்ட தொலைவு சென்றுவிட்ட மன்னனை மனித மாமிசம் உண்ணும் ஆதிவாசிகள் பிடித்தார்கள்.

மன்னனை அவர்களது தெய்வத்துக்குப் பலியிடக் கொண்டு சென்றார்கள்.
பலி கொடுப்பதற்குரிய பூசைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.

மன்னனோ தனது வாழ்வு இப்படி ஆதிவாசிகளின் கையில் முடிவடைகிறதே என்று மிகுந்த வேதனை அடைந்தான்.

கழுத்தை வெட்டுவதற்கு ஆயத்தமான பூசாரி கடைசி நிமிடத்தில்தான் மன்னனின் வலது கை பெருவிரல் வெட்டுப்பட்டிருப்பதைக் கவனித்தான்.
ஊனம் இருப்பவர்களை பலி கொடுக்கவும் கூடாது.
உண்ணவும் கூடாது என்பது ஆதிவாசிகளுடைய கட்டுப்பாடு. அதனால் மன்னனை விடுவித்தார்கள்.

தப்பினோம் பிழைத்தோம் என்று மன்னன் தனது நகரை வந்தடைந்தான்.

நேராக சிறைச்சாலை சென்று முதல் வேலையாக அமைச்சரை விடுதலை செய்தான்.

அமைச்சர் எல்லாமே ஒரு நன்மைக்குத்தான் என்று கூறியது எத்தனை சரியாகிவிட்டது. தான் உயிர் பிழைத்ததே, வில் அம்பு எய்யும்போது ஏற்பட்ட ஊணத்தினால்தான்… அன்று அமைச்சர் எல்லாமே ஒரு நன்மைக்குதான் என்று கூறியதற்கு தான் கோபப்பட்டு அவரை சிறையில் போட்டதற்கு மன்னிப்புக் கேட்டான்.

அப்போது அமைச்சர் “மன்னா நீ என்னை சிறையில் போட்டதும் ஒரு நன்மைக்காகத்தான்” என்றார்.

நண்பர்களே அமைச்சரை சிறையில் பூட்டியதில் என்ன நன்மை இருந்துவிடப் போகிறது. கூறுங்களேன்???????????????????

aren
05-10-2009, 12:51 PM
அப்படி சிறையில் போடவில்லையென்றால் அரசர் வெகுதூரம் காட்டில் சென்றிருக்கமாட்டார், அந்த ஆதிவாசிகளிடம் மாட்டிக்கொண்டிருக்கவும் மாட்டார், இப்படி தப்பித்திருக்கவும் மாட்டார். எது செய்தாலும் அது நன்மைக்குத்தான் என்று தெரிந்திருக்கவும் மாட்டார்.

பாரதி
05-10-2009, 02:03 PM
அரசர் சிறையில் போடவில்லையென்றால், அமைச்சரை உடன் அழைத்துச் சென்றிருப்பார். அமைச்சருக்கு உடல் ஊனமில்லை என்பதால் அவரை பலிகொடுத்திருப்பார்கள். அமைச்சர் சிறையில் இருந்ததால் உயிர் தப்பினார் என்பதால் எல்லாம் நன்மைக்கே என்பது சரியாகி விட்டது.

பழைய கதையை நினைவூட்டியதற்கு நன்றி பி.ஜி.கே.

aren
05-10-2009, 02:08 PM

பாரதி அவர்கள் சொல்வது சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

ஆனால் அமைச்சர் சென்றிருந்தால் அரசர் வெகுதூரம் போயிருக்கமாட்டாரே

பா.ராஜேஷ்
05-10-2009, 02:21 PM
அமைச்சர் சிறையில் இல்லாமல் இருந்திருந்தால் அமைச்சரும் மன்னருடன் செல்ல வேண்டி இருந்திருக்கும். மேலும் அமைச்சருக்கு எந்த ஊனமும் இல்லாததால் அமைச்சரை கொன்று உண்டிருப்பர். எனவேதான் அமைச்சர் அவ்வாறு கூறினார்.

samuthraselvam
06-10-2009, 04:26 AM
இது சின்ன வயசில் படித்த கதை... பாரதியண்ணா & ராஜேஷ் அண்ணாவும் சொல்வதே மிகவும் சரியான பதில்...

pgk53
11-10-2009, 01:56 AM
அரசர் சிறையில் போடவில்லையென்றால், அமைச்சரை உடன் அழைத்துச் சென்றிருப்பார். அமைச்சருக்கு உடல் ஊனமில்லை என்பதால் அவரை பலிகொடுத்திருப்பார்கள். அமைச்சர் சிறையில் இருந்ததால் உயிர் தப்பினார் என்பதால் எல்லாம் நன்மைக்கே என்பது சரியாகி விட்டது.

பழைய கதையை நினைவூட்டியதற்கு நன்றி பி.ஜி.கே.

பாரதி அவர்களே....வாழ்த்துக்கள்.
மிகச் சரியான விடையைக் கூறியுள்ளீர்கள்.

அவரைத் தொடர்ந்து அதே சரியான விடையை உறுதிப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வேளைப் பளு காரணமாக விடுமுறையில் தாயகம் செல்வது ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
தீபாவளிக்கு போகலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.

வாருங்கள் ..... அடுத்த புதிருக்குப் போகலாம்.

pgk53
11-10-2009, 01:59 AM
புதிர் எண்-451

ராமு ஒருநாள் ஆகாயத்தில் பறந்து பாராசூட் அனிந்து குதிக்கும் பயிற்சி பெறச் சென்றிருந்தான்.

கிட்டத்தட்ட 10000 அடி உயரத்தில் அந்த பயிற்சி விமானம் பறந்துகொண்டிருந்தது.

ராமு பாராசூட் அனிந்து குதித்தான்.

முதல்தடவை குதிப்பது அவனுக்கு மிகுந்த படபடப்பாகவும் வினோதமாகவும் இருந்தது.

பாராசூட்டினை விரிக்கும் கயிறு அவனது இடுப்பைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.

அதை அவிழ்த்து பாராசூட் திறக்கும் விதமாக கீழே இழுத்தான்.
பாராசூட் விரிந்துகொண்டது.

ராமு அப்படியே அண்ணாந்து மேலே பார்த்தான்.

அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

ஏனென்றால் பாராசூட்டின் மேல்பகுதியில் ஒரு பெரிய ஓட்டை காணப்பட்டது.

ஆஹா….மோசம் போனோமே….ஓட்டையாக இருந்த பாராசூட்டை சரியாக பரிசோதனை செய்யாமல் எடுத்து அணிந்துகொண்டு குதித்துவிட்டோமே….இனி அவ்வளவுதான்…நமது கதை இன்றுடன் முடிந்தது என்று மனம் கலங்கினான்.

உடனடியான வாக்கி டாகியை எடுத்து விமானியுடன் தொடர்பு கொண்டான்.

விமானி அவனுக்கு ஏதோ பதில் கூறினார்.

ஆனால் அவனுக்கு அது எந்த விதத்திலும் பயனுள்ளதாக இல்லை.

ஏனென்றால் வாக்கி டாக்கியின் பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்ததினால் அவர் கூறியது அவனுக்கு தெளிவாகக் கேட்கவில்லை .

அவனது வாக்கி டாக்கியில் பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்தது.

நண்பர்களே….ராமுவின் கதை இத்துடன் முடிந்துவிடுமா??????????கூறுங்களேன்.

பாரதி
11-10-2009, 01:10 PM
எந்த சிக்கலும் இன்றி இராமு பத்திரமாக தரை இறங்குவதில் கதை நிறைவு பெறும்.

காற்றில் இங்கும் அங்கும் பாராசூட் அலையாமல் இருப்பதற்காகவும், பாராசூட்டை முறையாக கட்டுப்படுத்துவதற்காகவும் சில வகை பாராசூட்களில் துளை அல்லது ஓட்டையுடனே வடிவமைத்திருப்பார்கள். இராமு அணிந்திருந்தது அந்த வகை பாராசூட்டாகத்தான் இருந்திருக்கும். ரிசர்வ் பாராசூட்டை பயன்படுத்த வேண்டிய அவசியம் கூட இராமுவுக்கு வந்திருக்காது.

aren
14-10-2009, 04:18 PM

இது உண்மையா என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வது சரியாக இருந்தாலும் இருக்கலாம்.

பரஞ்சோதி
15-10-2009, 12:28 PM
பிஜிகே அண்ணா, பாரதி அண்ணாவின் பதில் சரி என்று சொல்லி ராமுவின் உயிரை காப்பாற்றுங்க.

- வேண்டுதலுடன்

pgk53
16-10-2009, 02:19 AM
எந்த சிக்கலும் இன்றி இராமு பத்திரமாக தரை இறங்குவதில் கதை நிறைவு பெறும்.

காற்றில் இங்கும் அங்கும் பாராசூட் அலையாமல் இருப்பதற்காகவும், பாராசூட்டை முறையாக கட்டுப்படுத்துவதற்காகவும் சில வகை பாராசூட்களில் துளை அல்லது ஓட்டையுடனே வடிவமைத்திருப்பார்கள். இராமு அணிந்திருந்தது அந்த வகை பாராசூட்டாகத்தான் இருந்திருக்கும். ரிசர்வ் பாராசூட்டை பயன்படுத்த வேண்டிய அவசியம் கூட இராமுவுக்கு வந்திருக்காது.

சபாஷ் பாரதி அவர்களே,
மிகச் சரியான விடையை கூறி ஹேட்ரிக் அடித்துவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.

pgk53
16-10-2009, 02:21 AM
அன்பு நண்பர்களே, அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
இன்று நான் தீபாவளிக்காக தாயகம் புறப்பட உள்ளேன்.

விடுமுறை கழிந்ததும் மீண்டும் சந்திப்போம்.
வாழ்த்துக்கள் ....வணக்கம்.

pgk53
16-10-2009, 02:23 AM
புதிர் எண்-452

உலகப் புகழ்பெற்ற மோனாலிஸா ஓவியம் காப்பகத்தில் இருந்து களவு போய்விட்டது.

அதனால் வெளிநாட்டுக்கு ஓவியத்தைக் கடத்துவதை தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும் கடுமையான சோதனை நடந்தது.

ஒரு பயணியின் பெட்டியை சந்தேகித்து திறந்தார்கள்.
அதனுள் துணியில் தீட்டப்பட்ட ஓவியங்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன.

வேக வேகமாக சுங்க அதிகாரிகள் அந்த ஓவியங்களைப் பிரித்துப் பார்த்தார்கள்.

மோனாலிஸாவின் ஓவியம் அதில் இருந்தது.

உடனே அந்த ஓவியத்தையும் அதைக் கொண்டுசென்ற ஆளையும் கைப்பிடியாகப் பிடித்துக்கொண்டு சுங்க இலாகாவின் தலைமை அதிகாரியிடம் கொண்டுபோனார்கள்.

மோனாலிசாவின் ஓவியத்தி இவர் கடத்திச் செல்லுகிறார் என்று தெரிவித்தார்கள்.

ஓவியத்தைப் பிரித்துப் பார்க்காமலேயே அந்த தலைமை அதிகாரி, “இது போலி ஓவியம்.. நகல் ஓவியம்தான்.அதனால் இதைக் கொண்டு வந்தவரைத் தொந்திரவு செய்யாமல் போகவிடுங்கள்” என்றார்.

தலைமை அதிகாரி ஏன் ஓவியத்தைப் பார்க்காமலேயே அப்படிக் கூறினார்?????????????????????????

மதி
16-10-2009, 03:43 AM
மோனோலிசா ஓவியம் துணியில் தீட்டப்பட்டதல்ல. போப்லர் என்ற மரப்பலகையில் தீட்டப்பட்டது. அதனால் துணியில் வரையப்பட்டது போலி என்று சுங்க அதிகாரிக்கு தெரிந்திருக்கும்

வியாசன்
16-10-2009, 03:43 AM
துணியில் தீட்டப்பட்டிருந்ததால் அவர் அதுபோலி என்று கண்டுபிடித்திருப்பார்.

வியாசன்
16-10-2009, 03:44 AM
மதி இருவரும் ஒரே நேரத்தில் பதில் அளித்திருக்கின்றோம்

aravinthan21st
03-11-2009, 03:50 PM
நான் இன்று திரு.மதி ,pgk53,வியாசர் மூலமாக மோனலிசா பற்றிய இன்னுமொரு விடயத்தை தெரிந்து கொண்டேன்,நன்றி நண்பர்களே.
தொடர்க நின் பணி.

பா.ராஜேஷ்
10-11-2009, 05:06 PM
ஓ அப்படியா ... நானும் இன்றுதான் தெரிந்து கொண்டேன் :)

pgk53
16-11-2009, 02:17 PM
அன்பு நண்பர்களே, அனைவருக்கும் வணக்கம்.
விடுப்பு முடிந்து பணியிடம் திரும்பிவிட்டேன்.
அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கின்றேன்.
சரி வாருங்கள் புதிருக்குப் போவோம்.

pgk53
16-11-2009, 02:19 PM
மதி இருவரும் ஒரே நேரத்தில் பதில் அளித்திருக்கின்றோம்

மோனோலிசா ஓவியம் துணியில் தீட்டப்பட்டதல்ல. போப்லர் என்ற மரப்பலகையில் தீட்டப்பட்டது. அதனால் துணியில் வரையப்பட்டது போலி என்று சுங்க அதிகாரிக்கு தெரிந்திருக்கும் என்று சரியான பதிலைக் கூறிய---மதிக்கும் வியாசனுக்கும் எனது வாழ்த்துக்கள்.

வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
16-11-2009, 02:23 PM
புதிர் எண்:-453

அந்த பெரிய நகரத்தின் வங்கி ஒன்றில் பெரும் திருட்டு நிகழ்ந்தது.

கோடிக்கணக்கான பணமும், தங்க நகைகளும் களவாடப்பட்டன.

காவல்துறை வெகு விரைவாகவும் திறமையுடனும் செயல்பட்டு, கொள்ளையர்கள் அந்த நகருக்கு அருகாமையில் இருந்த ஒரு காட்டில் மறைந்து இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள்.

பெரும் படை அந்த காட்டில் நுழைந்து தேடுதல் வேட்டையைத் துவக்கினார்கள்.

அந்தக் காட்டின் மையப்பகுதியில் ஒரு சிறிய மலை இருந்தது.
மலையிலும் காவல்படையினர் தேடினார்கள்.

அப்போது மலையில் இருந்த ஒரு இருண்ட குகையின் அருகில் கந்தலான உடைகளை அணிந்து பிச்சைக்காரனைப்போல் தோன்றிய ஒருவனைக் கண்டார்கள்.

அவனை நிறுத்தி விசாரிக்கும்போது, அவன், அந்தக் குகையின் பக்கமாக வந்தபோது ஒரு பெரிய கரடி ஒன்று குகையில் நுழைவதைக் கண்டதாகக் கூறினான்.

மேலும், குகையின் உட்புறம் வெளிச்சமே கிடையாது என்றும், கடுமையான விஷம் கொண்ட பாம்புகள் அங்கே இருப்பதாகவும் கூறியதுடன், சற்று முன்புதான் ஒரு வாத்து அந்தக் குகைக்குள் நுழைந்தது என்றும், க்வாக் க்வாக் என்று ஒலிஎழுப்பியபடி சென்றதாகவும். அந்த க்வாக் க்வாக் சப்தாம் குகையின் உட்புறச் சுவர்களில் பட்டு எதிரொலித்ததாகவும் கூறினான்.

மேலும், கரடி வாத்தைப் பிடித்து கொல்லும்போது வாத்து எழுப்பிய குவாக்---குவாக் சப்தம் குகையில் எதிரொலித்தபடி இருந்தது என்றும் கூறினான்.

எந்த நேரமும் அந்தக் கரடி வெளியில் வரலாம் என்றும், அப்படி வந்துவிட்டால் தனது உயிருக்கு ஆபத்து என்றும் கூறிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிச் சென்றான்.

பிறகு காவல் துறை ஆய்வாளர், ஆபத்தான இந்தக் குகைக்குள் நுழையவேண்டிய அவசியமில்லை என்றும் இதற்குள் கொள்ளையர்கள் ஒளிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறி வேறு திசையில் தேடுதலைத் தொடங்கச் சொன்னார்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த காவல்துறை கமிஷனர்,
“ ஆய்வாளைரை அழைத்து, நிச்சயமாக இந்தக் குகைக்குள்தான் திருடர்கள் ஒளிந்துள்ளார்கள். அவர்கள் கொள்ளையடித்த பணமும் நகையும் இங்குதான் இருக்கவேண்டும். அதனால் போதுமான விளக்குகளைக் கொண்டுவந்து, குகையின் உட்புறம் வெளிச்சத்தை அமைத்து ஆயுதங்களுடன் காவலர்களை நுழையும்படி உத்தரவிட்டார்.

மேலும் அந்தப் பிச்சைக்காரனை தேடிப் பிடித்து கைது செய்யும்படியும் உத்தரவிட்டார்.

கமிஷனர் கணிப்பு பொய்யாகவில்லை.
குகையில் ஓளிந்திருந்த கொள்ளையர்கள் பிடிபட்டார்கள்.

நண்பர்களே……கமிஷனர் எதனால் அந்தக் குகைக்குள்தான் கொள்ளையர்கள் ஒளிந்துள்ளனர் என்று தீர்மானமாக முடிவு செய்தார்???????????

பா.ராஜேஷ்
16-11-2009, 04:13 PM
இருட்டான, நீரோட்டம் இல்லாத இடத்திற்கு வாத்து வருவது என்பது மிகையாக தோன்றியதால் அவ்வாறு கணித்து இருக்கலாம்....

பாரதி
16-11-2009, 04:38 PM
புதிர் எண்:-453

.....................................

சற்று முன்புதான் ஒரு வாத்து அந்தக் குகைக்குள் நுழைந்தது என்றும், க்வாக் க்வாக் என்று ஒலி எழுப்பியபடி சென்றதாகவும். அந்த க்வாக் க்வாக் சப்தம் குகையின் உட்புறச் சுவர்களில் பட்டு எதிரொலித்ததாகவும் கூறினான்.

மேலும், கரடி வாத்தைப் பிடித்து கொல்லும்போது வாத்து எழுப்பிய குவாக்---குவாக் சப்தம் குகையில் எதிரொலித்தபடி இருந்தது என்றும் கூறினான்.

....................................

நண்பர்களே……கமிஷனர் எதனால் அந்தக் குகைக்குள்தான் கொள்ளையர்கள் ஒளிந்துள்ளனர் என்று தீர்மானமாக முடிவு செய்தார்???????????

வாத்து எழுப்பும் ஒலி எதிரொலிப்பதே இல்லை என்பதை நாம் பல இடங்களில் படித்திருக்கிறோம். ஆகவே வாத்து எழுப்பிய சத்தம் எதிரொலித்தது என்று அவன் கூறியதைக் கேட்டதும் கமிஷனர் அவன் பொய்தான் சொல்கிறான் என்று மிகச்சரியாகக் கணித்தார். திருடர்களையும் பிடித்தார்.

ஜனகன்
16-11-2009, 09:09 PM
கரடி, பாம்பு இரண்டும் குகைக்குள் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை எனவே அதை வைத்து கமிசினர் கண்டுபிடித்தார்.

aren
17-11-2009, 01:32 AM
வாத்தின் எதிரொலி என்று சொன்னது உண்மையல்ல என்பதால் அந்த பிச்சைக்காரன் சொல்வது பொய் என்று தெரிந்துகொண்டார்.

பாரதி அவர்கள் சொல்வதே சரி

pgk53
21-11-2009, 01:09 AM
வாத்து எழுப்பும் ஒலி எதிரொலிப்பதே இல்லை என்பதை நாம் பல இடங்களில் படித்திருக்கிறோம். ஆகவே வாத்து எழுப்பிய சத்தம் எதிரொலித்தது என்று அவன் கூறியதைக் கேட்டதும் கமிஷனர் அவன் பொய்தான் சொல்கிறான் என்று மிகச்சரியாகக் கணித்தார். திருடர்களையும் பிடித்தார்.

சபாஷ் பாரதி.....மிகச் சரியான விடை.
வாழ்த்துக்கள்.

வேலைப் பளு காரணமாக மன்றம் வர கொஞ்சம் தாமதம் ஆகின்றது.
நாளை அடுத்த புதிருடன் வருகிறேன்.

aren
21-11-2009, 02:58 AM
சீக்கிரம் வாங்க பிஜிகே. அடுத்த புதிருக்கு உடனே விடைகொடுத்துவிடலாம் என்று இருக்கிறேன் ஆகையால் கொஞ்சம் எளிதான புதிராக இருந்தால் விடை உடனே சொல்ல ஏதுவாக இருக்கும்.

pgk53
22-11-2009, 12:57 AM
சீக்கிரம் வாங்க பிஜிகே. அடுத்த புதிருக்கு உடனே விடைகொடுத்துவிடலாம் என்று இருக்கிறேன் ஆகையால் கொஞ்சம் எளிதான புதிராக இருந்தால் விடை உடனே சொல்ல ஏதுவாக இருக்கும்.

ஆரென் அவர்களே,

அடுத்த புதிர் எளிமையானதுதான்.
நீங்கள் நிச்சயமாக விடையைக் கூறிவிடுவீர்கள்.

ஆனால் புதிர் கொஞ்சம் விவகாரமானது.

உண்மையிலேயே நடந்த சம்பவத்தை நான் புதிராகக் கொடுத்துள்ளேன்.
இந்த சம்பவம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ஒன்றாகும்.

வாருங்கள் புதிருக்குப் போவோம்.

pgk53
22-11-2009, 12:59 AM
புதிர் எண்- 454

மூன்று நண்பர்கள் கடலில் ஒரு படகில் பயணம் செய்தார்கள்.

திடீரென்று படகில் ஓட்டை ஏற்பட்டு கடலில் மூழ்கியது.

எப்படியோ சமாளித்து மூவருமே ஒரு தீவில் கரை ஏறினார்கள்.

கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டபின்னார், தீவில் யாராவது இருக்கின்றார்களா என்று தேடத்தொடங்கினார்கள்.

அது ஒரு மிகச் சிறிய தீவு.
அந்தத்தீவில் ஆட்களே இல்லை.

மரங்களோ அல்லது வேறு பசியைத் தீர்த்துகொள்ள உபயோகமான தாவரங்களோ இல்லை.இருந்த முள் மரங்களிலும் பிசின் கூட இல்லை
அதிர்ஷ்டவசமாக ஒரு இடத்தில் கொஞ்சம் தண்ணீர் தேங்கி இருந்தது.
அதைக் குடித்து தாகம் தீர்த்துக்கொண்டார்கள்.

அப்படியே சில நாட்கள் ஓடியது.
தீவில் இருந்து அவர்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல யாருமே வரவில்லை.

அவர்களிளது நிலைமை கவலைக்கிடமானது.
இனிமேலும் அவர்கள் உணவில்லாமல் உயிரோடு இருக்க இயலாது என்ற கட்டம் வந்தது.

அதனால் மூன்று பேரில் யாராவது ஒருவர் தனது உயிரை தியாகம் செய்தால் அவரது சதையை உண்டு இன்னும் கொஞ்சகாலம் உயிரோடு இருந்து, யாராவது வந்து காப்பாற்றினால் இருவராவது உயிர் பிழைக்கலாம் என்ற எண்ணம் அவர்கள் மூவருக்குமே உண்டானது.

அதனால் யாராவது ஒருவர் இதற்கு சம்மதிக்கவேண்டும் என்று அவர்கள் பேசினார்கள்.

அவர்கள் மூவருமே அனாதைகள்.
மூவருமே எந்த நோயும் இல்லாத உடலைக் கொண்டவர்கள்.
படிப்பிலும் திறமையிலும் மூவருமே சரிசமானவர்கள்.
மூவருக்குமே திருமணம் ஆகவில்லை.

அதனால் யார் இதற்குத் தகுந்தவர்கள் என்ற ஆலோசனையின் பிறகு மூவரில் ஒருவனைத் தேர்வு செய்தார்கள்.

அவனும் பூரண சம்மதத்துடன் ஒப்புக்கொண்டான்.

நண்பர்களே ….எந்த அடிப்படையில் அவர்கள் ஒருவனைத் தேர்வு செய்தார்கள்.??????????????

குணமதி
22-11-2009, 03:02 AM
முதியவர் இளையவர் வேறுபாட்டை வைத்துத் தீர்மானித்தார்களா?

பாரதி
22-11-2009, 05:39 AM
ஆரென்.... வாங்க.... வாங்க, பி.ஜி.கே புதிர் கொடுத்திருக்காரு.

ஜனகன்
22-11-2009, 02:53 PM
உடம்பானவரை (மொத்தமானவரை) சாப்பிட்டால் பலநாள் நீடிக்கலாம் என்று நினைத்திருக்கலாம்.

aren
22-11-2009, 03:21 PM
இதற்கு இரண்டு பதில்களை சொல்லலாம்.

ஒன்று, யார் இந்த படகில் கடலுக்குள் போகலாம் என்ற ஐடியாவை சொன்னாரோ அவரே இந்த பிரச்சனைக்கு முதல் மூலகாரணமாவார். ஆகையால் அவர்தான் முதலில் பொறுப்பேற்று தன் உயிரைத் தியாகம் செய்யவேண்டும்.

அடுத்தது, ஜனகன் அவர்கள் சொன்னதுபோல் குண்டாக இருப்பதால் அவர் உடலை பல நாட்கள் வைத்து உண்டால் அதற்குள் உதவி கிடைக்கலாம் என்பதால் அவரை தேர்வு தெய்திருக்கலாம்.

pgk53
27-11-2009, 11:58 AM
மன்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது ஈத் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

புதிர் எண் -454 க்கு யாருமே இதுவரை சரியான விடையைக் கூறவில்லை.

ஒருமுறை முயற்சித்துப் பார்த்துவிட்டு பிறகு மறுபடியும் யாருமே இந்தப் பக்கமே வரவில்லையே????????????ஏன்???????????????

முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லை.

ஒரு சாக பட்ஷினியான யானைகூட வேறெந்த உயிரினத்தாலும் தூக்கமுடியாத எத்துனை பெரிய சுமையைத் தூக்குகின்றது.

அதனால் விடையத் தர முயற்சிக்கலாமே???????????

ஜனகன்
27-11-2009, 01:43 PM
யோசித்தேன் ஒன்றும் பிடிபடவில்லை. ஈத் பெருநாளை முடித்துக்கொண்டு வந்து பாருங்கள்.பி ஜி கே அவர்களே. அதற்கிடையில் யாரும் புத்தியிவிகள் வந்து பதில் போடுவார்கள்.

பாரதி
29-11-2009, 12:57 AM
மாமிசம் சாப்பிடாத அல்லது (நண்பனின் மாமிசத்தை) சாப்பிட விரும்பாத நண்பர் இருந்ததால் அவரை தேர்வு செய்திருப்பார்கள்.

குணமதி
29-11-2009, 01:12 AM
மாமிசம் சாப்பிடாத அல்லது (நண்பனின் மாமிசத்தை) சாப்பிட விரும்பாத நண்பர் இருந்ததால் அவரை தேர்வு செய்திருப்பார்கள்.

இதுவே சரியான விடையாக இருக்கவேண்டும்!

aren
29-11-2009, 11:48 AM
பாரதி அவர்கள் சொல்வதுபோல் வெஜிடேரியன் ஒருவனே இதற்கு சம்மதித்திருப்பான் காரணம் அவனால் மனித மாமிசத்தை சாப்பிடமுடியாது. ஒரு தாவரம் கூட அங்கே இல்லாத்தால் அவனால் நிச்சயம் உயிருடன் இருக்கமுடியாது.

pgk53
01-12-2009, 02:33 AM
சபாஷ் பாரதி அவர்களே.....சரியான விடையைக் கூறிவிட்டீர்கள்.
அதற்காகத்தான் நான் ஒரு க்ளூ கொடுத்திருந்தேன்.

"ஒரு சாக பட்ஷினியான யானைகூட வேறெந்த உயிரினத்தாலும் தூக்கமுடியாத எத்துனை பெரிய சுமையைத் தூக்குகின்றது."

கொஞ்சம் கவனித்திருந்தால் சரியான விடை தானாகத் தெரிந்திருக்கும்.

அடுத்த புதிருடன் நாளை சந்திக்கிறேன்.

அக்னி
01-12-2009, 06:07 AM
"ஒரு சாக பட்ஷினியான யானைகூட வேறெந்த உயிரினத்தாலும் தூக்கமுடியாத எத்துனை பெரிய சுமையைத் தூக்குகின்றது."
புதிய சொல் ஒன்றைத் தெரிந்துகொண்டேன்.
நன்றி pgk...

pgk53
02-12-2009, 08:31 AM
புதிர் எண்-455

ஒரு 20 மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் தாழ்தளத்தில் லிப்ட் இருந்தது.

தாழ்தளத்தில் என்னையும் சேர்த்து 4 பேர் லிப்டில் இருந்தோம்.
லிப்ட் இயங்கத் தொடங்கியது.

முதல் மாடியில் லிப்டில் இருந்து ஒரு ஆள் வெளியேற, 4 ஆட்கள் லிப்டில் புகுந்தார்கள்.

இரண்டாவது மாடியில் 2 ஆட்கள் வெளியேறி மேலும் மூன்று ஆட்கள் உள்ளே வந்தார்கள்.

அடுத்த தளத்துக்கு லிப்ட் போக அந்த தளத்தில் யாருமே இறங்கவில்லை.
மேலும் 5 ஆட்கள் லிப்டில் ஏறினார்கள்.

அடுத்த தளத்துக்கு மேல்நோக்கிப் புறப்பட்ட லிப்டின் இரும்புக் கயிறு திடீரென்று அறுந்துபோனதால், முழு வேகத்துடன் லிப்ட் தாழ் தளத்தை நோக்கிப் பயணித்து மிகுந்த சக்தியுடன் கீழே மோதியதில் , லிப்டில் இருந்த அனைவரும் உயிரிழந்தார்கள்.

ஆனால் எனக்கு ஒன்றுமே ஆகவில்லை.
நண்பர்களே இது எப்படி சாத்தியம் ஆனது????????????????

aren
02-12-2009, 09:26 AM
ஏனெனில் நீங்கள் முதல் மாடி அல்லது இரண்டாவது மாடியில் இறங்கிவிட்டீர்கள்.

பா.ராஜேஷ்
02-12-2009, 09:34 AM
நீங்கள் முதல் மாடியில் வெளியேறிய ஆளாக இருக்கலாம் !

குணமதி
02-12-2009, 11:54 AM
வெளியேறியவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும்.

மன்மதன்
02-12-2009, 12:19 PM
முதலிலேயே வெளியேறி விட்டால் 3வது தளத்தில் எத்தனை பேர் ஏறினார்கள்/இறங்கினார்கள் என்று எப்படி தெரியவரும்?

lolluvathiyar
02-12-2009, 02:32 PM
கடைசிவரை சொல்லி வருகிறார். கடைசியாக உள்ளே ஏறினார்கள் இறங்கவில்லை. அதனால் அதற்க்கு மேலும் லிப்ட் பயனிக்கும் போதும் இவர் லிப்ட் உள்ளே தான் இருந்திருகிறார். லிப்டிலிருந்த அனைவரும் உயிரழந்தும் இவர் உயிருடன் தான் இருக்கிறார் என்றால் இவர்

லிப்டிலிருந்த ஒழிந்திருந்த* எலியாக இருந்திருப்பார்

என்று என் அறிவுக்கு தோன்றுகிறது.

பா.ராஜேஷ்
03-12-2009, 01:27 PM
அப்படி இல்லேன்னா, ஏற்கனவே இறந்த ஒருவருடைய ஆவி இந்த கதைய சொல்லுதோ!!??? :D

ஜனகன்
03-12-2009, 04:42 PM
அறுந்து போன இரும்பு கயிற்றை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த்திருப்பிர்கள்.

பா.ராஜேஷ்
05-12-2009, 10:43 AM
சீக்கிரம் வந்து பதில் சொல்லுங்கள் பி.ஜி.கே அண்ணா

நறுமுகை
05-12-2009, 01:14 PM
புதிர் அருமை. விடைக்காக காத்திருக்கிறேன்...

பாரதி
09-12-2009, 02:21 PM
ஏனெனில் இரண்டாவது மாடியில் நான் இறங்கி விட்டேன். அதனால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. சரியா... பி.ஜி.கே..?

ஜனகன்
09-12-2009, 02:26 PM
இரண்டாவதில் வெளியேறி விட்டால் 3வது தளத்தில் எத்தனை பேர் ஏறினார்கள்-இறங்கினார்கள் என்று எப்படி தெரியவரும்?

pgk53
11-12-2009, 02:06 PM
புதிர் எண்-455

ஒரு 20 மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் தாழ்தளத்தில் லிப்ட் இருந்தது.
தாழ்தளத்தில் என்னையும் சேர்த்து 4 பேர் லிப்டில் இருந்தோம்.
லிப்ட் இயங்கத் தொடங்கியது.
முதல் மாடியில் லிப்டில் இருந்து ஒரு ஆள் வெளியேற, 4 ஆட்கள் லிப்டில் புகுந்தார்கள்.
இரண்டாவது மாடியில் 2 ஆட்கள் வெளியேறி மேலும் மூன்று ஆட்கள் உள்ளே வந்தார்கள்.
அடுத்த தளத்துக்கு லிப்ட் போக அந்த தளத்தில் யாருமே இறங்கவில்லை.
மேலும் 5 ஆட்கள் லிப்டில் ஏறினார்கள்.
அடுத்த தளத்துக்கு மேல்நோக்கிப் புறப்பட்ட லிப்டின் இரும்புக் கயிறு திடீரென்று அறுந்துபோனதால், முழு வேகத்துடன் லிப்ட் தாழ் தளத்தை நோக்கிப் பயணித்து மிகுந்த சக்தியுடன் கீழே மோதியதில் , லிப்டில் இருந்த அனைவரும் உயிரிழந்தார்கள்.

ஆனால் எனக்கு ஒன்றுமே ஆகவில்லை.
நண்பர்களே இது எப்படி சாத்தியம் ஆனது????????????????

முதல் பாரா வரைக்கும்தான் நான் சொல்வதுபோல் அமைந்துள்ளது.
பிறகு கடைசி பாராவில்தான் நான் சொல்கிறேன்.

இடையில் நடந்ததெல்லாம் நான் கூறவில்லை.
நான் இரண்டாவது மாடியிலேயே இறங்கிவிட்டேனே!!!!!!!!!!!!!!!!

pgk53
11-12-2009, 02:09 PM
ஏனெனில் நீங்கள் முதல் மாடி அல்லது இரண்டாவது மாடியில் இறங்கிவிட்டீர்கள்.

ஆரென் அவர்களே................ மிகச் சரியான பதிலைக் கூறியதற்கு எனது வாழ்த்துக்கள்.

pgk53
11-12-2009, 02:11 PM
புதிர் எண்-456

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பில்கேட்ஸ், ரஜனிகாந்த் மற்றும் தமிழகத்தின் பிர்சித்திபெற்ற ஒரு அரசியல்வாதி அனைவரும் சந்தர்ப்பவசமாக ஒரே விமானத்தில் பறந்து கொண்டிருந்தார்கள்.

அந்த விமானத்தில் மூன்று பாராசூட்கள் மட்டும்தான் இருந்தன,

ஒபாமா அனைவரையும் பார்த்து, “ நண்பர்களே….நான் உலகிலே ஒரு மாபெரும் வல்லரசின் தலைவன். அதனால் எனக்கு கட்டாயமாக ஒரு பாராசூட் வேண்டும்” என்றார்.

அதைக் கேட்ட பில்கேட்ஸ், “ எனக்கு கட்டாயமாக ஒரு பாராசூட் வேண்டும். ஏனென்றால் நான் இல்லையென்றால் உலகின் பெரும்பான்மையான தொழில்வளம் ஸ்தம்பித்துவிடும்” என்றார்.

ரஜினிகாந்த் ஸ்டைலாக தனது கருப்புக்கண்ணாடியை சுழற்றியபடி, “ யாருக்குக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எனக்கு கட்டாயம் பாராசூட் வேண்டும்.ஒரு பாராசூட் எனக்குக் கிடைத்தால் அது நூறுபேருக்கு கிடைத்ததற்குச் சமம்.” என்றார்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தமிழக அரசியல்வாதி ஒருவர் எதுவுமே பேசாமல் எழுந்து சென்று பாராசூட்டை வைத்திருந்த விமான ஊழியரிடம் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை தள்ளிவிட்டு ஒரு பாராசூட்டை தள்ளிக்கொண்டு வந்தார்.

மீதம் இருந்த மூவரில் யாருக்கு பாராசூட் கிடைக்காமல் இறந்திருப்பார்??????

அக்னி
11-12-2009, 02:28 PM
யாருமே இறந்திருக்க மாட்டார்கள்.
ஏனென்றால், விமானத்திற்தான் எந்தவிதமான கோளாறுமில்லையே...

பாவம் அரசியல்வாதி, தண்டமாய் ஆயிரம் ரூபாய்க் கட்டைக் கொடுத்துவிட்டார்...

aren
12-12-2009, 01:41 AM
விமானத்தில் ஒரு பிரச்சனையும் இல்லாத பட்சத்தில் யார் இறந்திருக்கமுடியும். அக்னி அவர்கள் சொல்வதே சரியான பதில்.

பா.ராஜேஷ்
14-12-2009, 04:26 PM
இது வரை வேறு யாருமே இந்த பக்கம் வரவில்லையா ! வெறும் மேலெழும்பும் திரிகளை மட்டும் படிப்பதால் இந்த மாதிரி நல்ல திரிகளையும் பார்க்க தவறுவது நேரிடுகிறது...

சரி, புதிருக்கான விடை.....

அதான் ஆரேனார் சொல்லிவிட்டாரே!!!

ஜனகன்
14-12-2009, 09:36 PM
நானும் இந்தபக்கம் வந்து போனேன். நான் என்னத்தை சொல்ல ராஜேஷ்.அதே பல்லவிதான்.

pgk53
18-12-2009, 12:06 PM
யாருமே இறந்திருக்க மாட்டார்கள்.
ஏனென்றால், விமானத்திற்தான் எந்தவிதமான கோளாறுமில்லையே...

பாவம் அரசியல்வாதி, தண்டமாய் ஆயிரம் ரூபாய்க் கட்டைக் கொடுத்துவிட்டார்...

சபாஷ் அக்னி அவர்களே.......மிகச் சரியான விடையைக் கொடுத்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

இதோ அடுத்த புதிர் வருகின்றது..... எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இருக்கின்றது.
இந்த புதிர் கடந்த ஆண்டு என்னால் பதிவு செய்யப்பதா இல்லையா?? என்று சந்தேகம்தான்.
ஏற்கனவே வந்த புதிராக இருந்தால் மன்னிக்கவும்.உடனே வேறு புதிர் போட்டுவிடுகிறேன்.

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
18-12-2009, 12:09 PM
புதிர் எண்-457

அது ஒரு ராணுவ தளம் அந்த ராணுவ தளம்.
ஒரு பாலைவனத்தின் ஆரம்ப நிலையில் இருந்தது.

பாலைவனத்தைக் கடந்ததும் அடுத்த ராணுவ தளம் இருந்தது.

இந்த தளத்தில் இருந்து பாலைவனத்துக்கு அப்பால் இருந்த தளத்துக்கு ஒரு முக்கியமான உத்தரவுக் கடிதம் அனுப்பவேண்டி இருந்தது.

ராணுவ மோட்டாரின் டாங்க் முழுவதும் டீஸல் நிரப்பிக்கொண்டு புறப்பட்டால் அந்த பாலைவனத்தின் பாதி தூரம் வரைதான் செல்ல இயலும் . அத்துடன் டீஸல் தீர்ந்துவிடும்..

ராணுவ மோட்டார் வாகனத்தில் , கேன்களில் டீஸல் நிரப்பிக்கொண்டு செல்ல இயலாது.
ராணுவ தளத்தில் டீஸல் டாங்கர் இல்லை.
வாகனத்துக்குத் தேவையான எரிபொருளை அங்கேயே டாங்கில் இருந்து நிறப்பிக்கொள்ளவேண்டும்.

வேண்டுமானால் அந்த தளத்தில் இருந்த மற்ற மோட்டார் வாகனங்களையும் பயன் படுத்திக்கொள்ளலாம்.
அதாவது உடன் அழைத்துச் செல்லலாமே தவிர அந்த ராணுவச் சட்டப்படி கட்டி இழுத்துச் செல்லக் கூடாது.

ஆனால் எத்தனை வாகனங்கள் உபயோகித்தாலும் அவை மீண்டும் ஏதாவது ஒரு தளத்துக்குத் திரும்பிவிடவேண்டும். பாலைவனத்தில் கிடக்கக் கூடாது. அதுதான் அங்கே சட்டதிட்டம்.

உங்களிடம் உத்திரவுக் கடிதத்தைக் கொடுத்துவிட்டார்கள்.

நீங்கள் பயணத்தை எப்படி திட்டமிடுவீர்கள்?????????????.

அன்புரசிகன்
18-12-2009, 12:38 PM
1. டீசல் டாங்கரையே கட்டி இழுத்துக்கொண்டு நிரப்பி நிரப்பி ஓடலாமே...

2. 8 வாகனங்களில் புறப்படவேண்டும். இடைப்பட்ட தூரம் 8கிமீ என்று எடுகோள் எடுத்தால் முதல் 1கிமீ க்க ஒரு வாகனம் மற்றய அனைத்து 7 வாகனத்தினையும் கட்டி இழுத்துக்கொண்டு செல்லும். அடுத்த 1கிமீ க்கு இன்னொரு வாகனம் மற்றய 6 ஐயும் இழுத்து செல்லும். 4 கிமீ சென்றதும் மீதி 4ற்கு மற்றய 4 வாகனமும் ஒன்றை ஒன்று கட்டி இழுத்து செல்லும். ஒருவர் திரும்பி வந்து ஒன்றை ஒன்று கட்டி இழுத்து ஒருபுறம் வந்துசேர்வர். மற்றய பகுதியை மற்றயவர்கள் மீண்டும் மீண்டும் வந்து கட்டியிழுப்பர்...

pgk53
18-12-2009, 12:50 PM

அன்பு ரசிகரே,,,,,,மன்னிக்கவும்

ஒரு சிறிய எடிட் செய்துள்ளேன் மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

அக்னி
18-12-2009, 03:37 PM
கட்டி இழுக்காமல், தள்ளிக்கொண்டு போயிருப்பார்களோ...

pgk அண்ணா: மன்னிக்கவும் அக்னி... மீண்டும் தணிக்கை செய்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

ஜனகன்
18-12-2009, 04:04 PM
அந்த தளத்தில் இருந்த மற்ற மோட்டார் வாகனத்தை பயன் படுத்திக்கொள்ளலாம்.

ராணுவ மோட்டார் வண்டியின் டாங்க்தான் பாதித்தூரம் போக டீசல் கொள்ளும்.
அந்த தளத்தில் இருந்த மற்ற மோட்டார்வண்டிகள் இல்லையே.

பாரதி
19-12-2009, 12:39 AM
வாகன எரிபொருளைப்பற்றியோ நேரத்தைப் பற்றியோ கவலை இல்லையெனில், நான்கு மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தி கடிதத்தை கொண்டு சேர்க்க இயலும்.

அன்புரசிகன்
19-12-2009, 02:17 AM
வாகன எரிபொருளைப்பற்றியோ நேரத்தைப் பற்றியோ கவலை இல்லையெனில், நான்கு மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தி கடிதத்தை கொண்டு சேர்க்க இயலும்.
எப்படி அண்ணா...

அரைவாசி தூரம் தான் செல்லும் என்றால் திரும்பிவரவேண்டிய வாகனம் கால்வாசி தூரம் சென்று திரும்பிவிடவேண்டுமே... அப்போது தான் அது அரைவாசி தூரத்தினை கடப்பதற்கு சமனாகும். கட்டியிழுப்பது சாத்தியமற்றதே...

அக்னி
19-12-2009, 06:39 AM
ஏன் இப்பிடிக் மூளையக் கஸ்ரப்படுத்துறாங்கன்னுதான் புரியல...

வாகனம் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே.

நடந்து சென்று, அல்லது ஓடிச்சென்று கொடுக்குமாறு,
எனக்குக் கீழே பணிபுரியும் இராணுவச்சிப்பாய் ஓவியனுக்குக் கட்டளையிட்டுவிடுவேன்.
கூடவே சென்று வருமாறு, சிப்பாய் ஜனகனையும் பணிப்பேன்.

தாமரை
19-12-2009, 09:51 AM
அன்பு ரசிகன் சொன்ன பதிலையே கொஞ்சம் தாம்மி,,, சாரி மாத்தி சொல்றேன்

3 வண்டிகள்,... முதல் வண்டி இரண்ட் வண்டிகளை இழுத்துக் கொண்டு பாதி தூரம் வரை செல்லும்.

இரண்டாம் வண்டி அங்கிருந்து அடுத்த கேம்பிற்கு புறப்பட்டுச் செல்ல, மூன்றாம் வண்டி முதல் வண்டியை இழுத்துக் கொண்டு கிளம்பிய தளத்துக்கு வந்து சேரும்...

எல்லோரும் சோரா கையத் தட்டுங்க...

அன்புரசிகன்
19-12-2009, 10:55 AM
அண்ணா.. கட்டியிழுப்பது சட்டவிரோதமாம். வேண்டுமானால் அக்னிக்கு கிம்பளம் தட்டிவிட்டு நாம கட்டியிழுக்கலாம்... :D

பாரதி
19-12-2009, 01:09 PM
எப்படி அண்ணா...

அரைவாசி தூரம் தான் செல்லும் என்றால் திரும்பிவரவேண்டிய வாகனம் கால்வாசி தூரம் சென்று திரும்பிவிடவேண்டுமே... அப்போது தான் அது அரைவாசி தூரத்தினை கடப்பதற்கு சமனாகும். கட்டியிழுப்பது சாத்தியமற்றதே...

இது சாத்தியம்தான் அன்பு.

உண்மையில் பாலைவனத்தில் மறுபுறத்தில் இருக்கும் இராணுவ வாகனங்களை வரச்சொல்லி தொலைபேசியிலோ, அலைபேசியிலோ
கூற முடியுமெனில் வைத்துக்கொள்வோம். அப்போது இரு புறங்களிலும் இருந்து செல்லும் வாகனங்கள் பாலைவனத்தின் நடுவில் சந்திக்கும் அல்லவா...? அந்த சமயத்தில் நாம் செல்லும் வாகனத்தில் இருந்து இறங்கி, மறுபக்க வாகனத்தில் ஏறி கடிதத்தைக் கொண்டு சேர்ப்பது எளிதான காரியமாக இருக்கும்.

இன்னும் கூறினால் கடிதத்தை அனுப்புவதை விட அலைபேசியிலேயே கூறி விடலாம் என்றும் கூட தோன்றும்.

எனினும் பி.ஜி.கேயின் புதிருக்கு மட்டுமான விடையை தட்டச்சுகிறேன். அது முடிந்ததும் பதிவிடுகிறேன்.

அன்புரசிகன்
19-12-2009, 01:58 PM
அண்ணா 4 வாகனங்கள் எந்த மூலையிலிருந்து வந்தாலும் அரைவாசி வரைக்கும் தான் செல்லமுடியும் என்றால் உதாரணத்திற்கு பாலைவனத்தின் தூரம் 4 km என்றால் வாகனம் செல்லக்கூடிய தூரம் 2 km தான். ஆகையால் அது 1km சென்று திரும்பிவிடவேண்டும். அப்போது தான் மொத்த தூரம் 2km என்று வரும். ஏனென்றால் அனைத்து வாகனமும் வந்து சேர்ந்திடவேண்டும்.

அண்ணனின் கேள்வி எந்தளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. ஏனென்றால் அங்குள்ள ஒரு வாகனம் தான் அரைவாசி பிரச்சனையுடன் உள்ளதோ தெரியவில்லை. இல்லை நடந்து போய் கொடுக்கலாம் என்கிறாரோ தெரியவில்லை. இல்லை உலங்கு வானூர்திகளை பயன்படுத்தினார்களோ தெரியவில்லை... :D

பாரதி
19-12-2009, 02:48 PM
செல்ல வேண்டிய வாகனங்களை வாகனம்-1, வாகனம்-2, வாகனம்-3, வாகனம்-4 என வைத்துக்கொள்வோம்.

ஒரு உதாரணத்திற்காக ஒரு இராணுவ தளம் மதுரை என்றும், சென்னை பாலைவனத்தின் நடுவில் இருக்கிறது என்றும், ஹைதராபாத் பாலைவனத்தின் மறுபுறத்தில் இருக்கும் இராணுவதளம் என வைத்துக்கொள்வோம்.

நாம் கிளம்ப வேண்டிய இடமான மதுரையில் இருந்து கிளம்பும் இராணுவ வாகனங்கள் திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னையை அடைய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதாவது சென்னையை அடைந்தால் பயணத்தின் பாதி தூரத்தைக் கடந்ததாக வைத்துக்கொள்வோம்.

மதுரையில் இருந்து சென்னை வரையிலான தூரத்தை மூன்றாக பிரித்துக்கொள்வோம். அதாவது

மதுரையில் இருந்து திருச்சி 1/3 பங்கு தூரத்தில் இருக்கிறது;
திருச்சியில் இருந்து விழுப்புரம் 1/3 பங்கு தூரத்தில் இருக்கிறது;
விழுப்புரத்தில் இருந்து சென்னை 1/3 பங்கு தூரத்தில் இருக்கிறது எனக் கொள்வோம்.

எரிபொருள் நிரப்பப்பட்ட இராணுவ வாகனம் மதுரையில் இருந்து கிளம்பினால் சென்னையை அடையும் போது எரிபொருள் தீர்ந்து விடும் என்பதாகவும் வைத்துக்கொள்வோம்.

1. வாகனம்-1, வாகனம்-2, வாகனம்-3, வாகனம்-4 ஆகியவை முழுக் கொள்ளளவு எரிபொருளுடன் மதுரையில் இருந்து கிளம்புகின்றன.

2. 1/3 பங்கு எரிபொருளை பயன்படுத்தி எல்லா வாகனங்களும் திருச்சியை அடையும். அப்போது எல்லா வாகனங்களிலும் 2/3 பங்கு எரிபொருள் மீதம் இருக்கும்.

3. வாகனம்-3 1/3 பங்கு எரிபொருளை வாகனம்-1க்கு தரும். வாகனம்-4 1/3 பங்கு எரிபொருளை வாகனம்-2க்கு தரும். இப்போது வாகனம்-1 மற்றும் வாகனம்-2 ஆகியவற்றின் எரிபொருள் முழுமையாக இருக்கும். வாகனம்-3, வாகனம்-4 மதுரைக்கு திரும்பும் அளவிற்கான எரிபொருளுடன் இருக்கும்.

வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-2 முழுமையான எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-3 1/3 பங்கு எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-4 1/3 பங்கு எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.

4. வாகனம்-3, வாகனம்-4 மதுரைக்கு திரும்பி எரிபொருளை முழுமையாக நிரப்பிக்கொள்ளும்.

வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-2 முழுமையான எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-3 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

5. வாகனம்-1, வாகனம்-2 திருச்சியில் இருந்து கிளம்பி விழுப்புரத்தை அடையும். அந்த சமயத்தில் வாகனம்-1, வாகனம்-2 ஆகியவற்றின் எரிபொருள் 2/3 பங்கு இருக்கும். வாகனம்-2 1/3 பங்கு எரிபொருளை வாகனம்-1க்கு தரும்.

வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-2 1/3 பங்கு எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-3 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

6. வாகனம்-2 விழுப்புரத்தில் இருந்து கிளம்பி திருச்சியை அடையும். அந்த சமயத்தில் அதன் எரிபொருள் முழுமையாக தீர்ந்திருக்கும்.

இப்போது
வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-2 எரிபொருள் இல்லாமல் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-3 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

7. வாகனம்-3, வாகனம்-4 ஆகியவை மதுரையில் இருந்து கிளம்பி திருச்சியை அடையும். வாகனம்-3, வாகனம்-4 ஆகியவை தலா 1/3 பங்கு எரிபொருளை வாகனம்-2க்கு தரும்.

இப்போது
வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-2 2/3 பங்கு எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-3 1/3 பங்கு எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-4 1/3 பங்கு எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.

8. வாகனம்-3, வாகனம்-4 மதுரைக்கு திரும்பி எரிபொருளை முழுமையாக நிரப்பிக்கொள்ளும்.

இப்போது
வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-2 2/3 பங்கு எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-3 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

9. வாகனம்-3 மதுரையில் இருந்து கிளம்பி, திருச்சியை வந்தடையும். திருச்சியில் இருக்கும் வாகனம்-2க்கு 1/3 பங்கு எரிபொருளை தந்து விட்டு மீண்டும் மதுரைக்கு வந்து சேர்ந்து எரிபொருளை நிரப்பிக்கொள்ளும்.

இப்போது
வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-2 முழுமையான எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-3 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

10. வாகனம்-2 திருச்சியில் இருந்து கிளம்பி விழுப்புரத்தை வந்து அடையும்.

இப்போது
வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-2 2/3 பங்கு எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-3 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

11. வாகனம்-3, வாகனம்-4 மதுரையில் இருந்து கிளம்பி திருச்சியை அடையும். வாகனம்-4 1/3 பங்கு எரிபொருளை வாகனம்-3க்கு தரும். பின்னர் வாகனம்-4 திருச்சியில் இருந்து கிளம்பி மதுரைக்கு வந்து
எரிபொருளை நிரப்பிக்கொள்ளும்.

இப்போது
வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-2 2/3 பங்கு எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-3 முழுமையான எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

12. இப்போது வாகனம்-3 திருச்சியில் இருந்து கிளம்பி விழுப்புரத்தை வந்தடையும். அங்கு வாகனம்-2க்கு 1/3 பங்கு எரிபொருளை தந்து விட்டு மீண்டும் திருச்சியை வந்தடையும். அந்த சமயத்தில் வாகனம்-3ன் எரிபொருள் தீர்ந்திருக்கும்.

இப்போது
வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-2 முழுமையான எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-3 எரிபொருள் இன்றி திருச்சியில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

13. இப்போது வாகனம்-1, வாகனம்-2 ஆகியவை விழுப்புரத்தில் இருந்து கிளம்பி சென்னையை அடையும். அப்போது வாகனம்-1, வாகனம்-2 ஆகியவற்றில் தலா 2/3 பங்கு எரிபொருள் இருக்கும். வாகனம்-2 1/3 பங்கு எரிபொருளை வாகனம்-1க்கு தந்து விட்டு விழுப்புரத்திற்கு திரும்பும் சமயத்தில் அதன் எரிபொருள் முழுமையாக தீர்ந்திருக்கும்.

இப்போது
வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் சென்னையில் இருக்கும்.
வாகனம்-2 எரிபொருள் இன்றி விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-3 எரிபொருள் இன்றி திருச்சியில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

14. வாகனம்-4 மதுரையில் இருந்து திருச்சிக்கு மூன்று முறை பயணித்து, ஒவ்வொரு முறையும் 1/3 பங்கு எரிபொருளை வாகனம்-3க்கு தரும். பின்னர் வாகனம்-4 மதுரைக்கு திரும்பி முழு அளவு எரிபொருளை
நிரப்பிக்கொள்ளும்.

இப்போது
வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் சென்னையில் இருக்கும்.
வாகனம்-2 எரிபொருள் இன்றி விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-3 முழுமையான எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

15. வாகனம்-3 திருச்சியில் இருந்து கிளம்பி விழுப்புரத்திற்கு செல்லும். அங்கு வாகனம்-2க்கு 1/3 எரிபொருளை தந்து விட்டு மீண்டும் திருச்சிக்கு வந்து விடும். அந்த சமயத்தில் வாகனம்-3ல் எரிபொருள் தீர்ந்திருக்கும்.

இப்போது
வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் சென்னையில் இருக்கும்.
வாகனம்-2 1/3 பங்கு எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-3 எரிபொருள் இன்றி திருச்சியில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

16. வாகனம்-4 மதுரையில் இருந்து திருச்சிக்கு மூன்று முறை பயணித்து, ஒவ்வொரு முறையும் 1/3 பங்கு எரிபொருளை வாகனம்-3க்கு தரும். பின்னர் வாகனம்-4 மதுரைக்கு திரும்பி முழு அளவு எரிபொருளை
நிரப்பிக்கொள்ளும்.

இப்போது
வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் சென்னையில் இருக்கும்.
வாகனம்-2 1/3 பங்கு எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-3 முழுமையான எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

17. வாகனம்-3 திருச்சியில் இருந்து கிளம்பி விழுப்புரத்திற்கு செல்லும். அங்கு வாகனம்-2க்கு 1/3 எரிபொருளை தந்து விட்டு மீண்டும் திருச்சிக்கு வந்து விடும். அந்த சமயத்தில் வாகனம்-3ல் எரிபொருள் தீர்ந்திருக்கும்.

இப்போது
வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் சென்னையில் இருக்கும்.
வாகனம்-2 2/3 பங்கு எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-3, எரிபொருள் இன்றி திருச்சியில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

18. வாகனம்-4 மதுரையில் இருந்து திருச்சிக்கு பயணித்து, 1/3 பங்கு எரிபொருளை வாகனம்-3க்கு தரும். பின்னர் வாகனம்-4 மதுரைக்கு திரும்பி எரிபொருளை நிரப்பிக்கொள்ளும்.

இப்போது
வாகனம்-1 முழுமையான எரிபொருளுடன் சென்னையில் இருக்கும்.
வாகனம்-2 2/3 பங்கு எரிபொருளுடன் விழுப்புரத்தில் இருக்கும்.
வாகனம்-3 1/3 எரிபொருளுடன் திருச்சியில் இருக்கும்.
வாகனம்-4 முழுமையான எரிபொருளுடன் மதுரையில் இருக்கும்.

முழுமையான எரிபொருளுடன் இருக்கும் வாகனம்-1 கடிதத்தை சுமந்து சென்று பாலைவனத்தின் மறுபுறம் இருக்கும் ஹைதராபாத்தை சென்றடையும். வாகனம்-4 ஏற்கனவே மதுரையில் இருக்கும். தம்மிடம் இருக்கும் எரிபொருளைக்கொண்டு வாகனம்-2, வாகனம்-3 ஆகியவை மதுரையை வந்தடையும்.

aren
25-12-2009, 01:46 AM
பாரதி சொல்வதே சரியான பதில் என்று தோன்றுகிறது, ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. வாகனம் அங்கேயே இருக்கக்கூடாது, திரும்பி ராணுவதளத்திற்கு வந்துவிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆகையால், ராணுவத்தளத்தில் இருக்கும் தொலைதூரம் செல்லக்கூடிய ஹெலிகாப்டரை உபயோகித்திருக்கலாம் என்பதே என் பதில்.

aren
25-12-2009, 01:49 AM
பாலைவனமாகையால் ஒரு ஒட்டகத்தை உபயோகித்துப் போயிருப்பார். அதுதான் வேகமாகவும் செல்லும், அதே சமயம் தண்ணீர் பிரச்சனையும் இல்லை.

பாரதி
25-12-2009, 05:07 AM
பாரதி சொல்வதே சரியான பதில் என்று தோன்றுகிறது, ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. வாகனம் அங்கேயே இருக்கக்கூடாது, திரும்பி ராணுவதளத்திற்கு வந்துவிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

அன்பு ஆரென், நான் கூறிய முறையில் இறுதியில் எல்லா வாகனங்களும் ஏதாவது ஒரு இராணுவ தளத்திற்கு திரும்பி வந்து விடும்.

pgk53
27-12-2009, 04:21 PM
அன்பு ஆரென், நான் கூறிய முறையில் இறுதியில் எல்லா வாகனங்களும் ஏதாவது ஒரு இராணுவ தளத்திற்கு திரும்பி வந்து விடும்.

அன்பு நண்பர்களே அனைவரும் மன்னிக்க வேண்டுகிறேன்.
வேலைப் பளுவின் காரனமாக நான் மன்றத்தில் பங்கெடுக்க இயலாமல் போனது.
சரி இப்போது புதிருக்கு வருவோம்.

நண்பர் பாரதி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இந்த புதிருக்குரிய பதிலை தயாரிக்க எப்படியும் அவருக்கு ஒரு முழு நாளாவது ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

மிகவும் கஷ்டப்பட்டாலும் சரியான பதிலைத்தான் கொடுத்துள்ளார்.
அவருக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்.
அவர் உதாரணத்துக்காகக் கூறிய மதுரை...திருச்சி...விழுப்புறம்...சென்னை...ஹைதரபாத் என்பதை அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டாம்.
ஏனென்றால் அப்படி எடுத்துக்கொண்டால் நீங்கள் மணிக்கணக்குப் போட்டுப் பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
அப்போது சில நிபந்தனைகள் மீறியதாகத் தெரியும்.
அதை ஒரு எடுத்துக்காட்டாகவே எடுத்துக்கொள்ளலாம்.
அதையே...மதுரை...மேலூர்...துவரங்குரிச்சி...விராலிமலை...திருச்சி என்று வைத்துக்கொண்டால் இந்தப் பிரச்சினை இருக்காது.
{அதாவது மொத்தமே இரண்டுமணி நேரப் பயணதூரம்}
ஒரே நாளில் எல்லா வண்டிகளும் தளங்களை அடைந்துவிடும்.

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
27-12-2009, 04:26 PM
புதிர் எண்-458

வெகு காலத்துக்கு முன்பு அந்த நாட்டை ஆண்ட ஒரு அரசனின் அவைக்கு ஒருவன் வந்தான்.

அவன் அரசனிடம் , “ அரசே…நான் ஒரு வித்தையைச் செய்து காண்பிக்கின்றேன். மிகுந்த சிரமத்துக்கும், 10 ஆண்டுகால பயிற்சிக்கும் பிறகுதான் நான் இதைச் சாதித்துள்ளேன்” என்றான்.

அரசனும் சரி செய் என்றான்.

அவன் ஒரு துணி தைக்கும் ஊசியை ஒரு பழத்தின் மேல் சொருகினான்.

பழத்தை ஊசியின் மேல்பாகம் மேலே இருக்கும்படியாக தரையில் வைத்தான்.

பிறகு அந்த பழத்தில் இருந்து 10 அடி தூரம் தள்ளிச் சென்றான்.
தனது பையில் இருந்து ஒரு நூல் கண்டை எடுத்தான்.

பிறகு அந்த நூல்கண்டில் இருந்த நூலை நீளமாகப் பிரித்தான்.

10அடி தூரத்தில் இருந்துகொண்டே நூலை லாவகமாகச் செலுத்தி, ஊசியின் காதில் நூலைச் செருகினான்.

அவையில் இருந்த அனைவரும் அவனது செயலைக் கண்டு பிரமித்தார்கள்.

பலத்த கரகோஷம் செய்து அவனைப் பாராட்டினார்கள்.

அரசனும் அவனைப் பாராட்டி அவனுக்கு நூறு பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கும்படி ஆனையிட்டான்.

பிறகு தளபதியை அழைத்து அவனுக்கு நூறு முறை சவுக்கால் அடிக்கும்படி தண்டனையும் கொடுத்தான்.

அன்பர்களே…..அவனது செயலைப் பாராட்டி நூறு பொற்காசுகள் கொடுத்த அரசன் ஏன் அவனைச் சவுக்கால் அடிக்கும்படி தண்டனை கொடுத்தான்.????????????

pgk53
31-12-2009, 12:13 AM
அன்பு நண்பர்களே ....அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்தப் புதிருக்கு யாருமே விடையைக் கூறமுன்வரவில்லையே??????
ஏன்!!!!!!!!!!!
புதிர் ஒன்றும் அவ்வளவு கடினமானதல்லவே...
முயற்சி செய்யுங்கள்.

aren
31-12-2009, 01:52 AM
100 பொற்காசுகள் பரிசு அவனுடைய செயலை மெச்சியதற்கு.

100 சவுக்கடிகள் பரிசு, அவன் ஒருவருக்கும் உதவாத இந்த வித்தையை கற்றுக்கொள்ள பத்துவருடம் செலவழித்ததற்கு.

அன்புரசிகன்
31-12-2009, 02:22 AM
100 பொற்காசுகள் பரிசு அவனுடைய செயலை மெச்சியதற்கு.

100 சவுக்கடிகள் பரிசு, அவன் ஒருவருக்கும் உதவாத இந்த வித்தையை கற்றுக்கொள்ள பத்துவருடம் செலவழித்ததற்கு.
அதுமட்டுமல்ல. பத்து வருடங்களாக எத்தனை பழங்களை பாழாக்கியிருப்பான்...

pgk53
02-01-2010, 02:19 PM
100 பொற்காசுகள் பரிசு அவனுடைய செயலை மெச்சியதற்கு.

100 சவுக்கடிகள் பரிசு, அவன் ஒருவருக்கும் உதவாத இந்த வித்தையை கற்றுக்கொள்ள பத்துவருடம் செலவழித்ததற்கு.

சபாஷ் ஆரென் அவர்களே.......மிகச் சரியான விடை.
பாராட்டுக்கள்.

சரி வாருங்கள் அடுத்த புதிரைப் பார்ப்போம்.

pgk53
02-01-2010, 02:21 PM
புதிர் எண்-459

அது ஒரு தேசிய நெடும் சாலை.

ஒருவன் தனது புத்தம் புதிய காரை அந்த தேசிய நெடுங்சாலையில் மிக மிக விரைவாக ஓட்டிக்கொண்டிருந்தான்.

திடீரென எதிர்பாராத விதமாக ஒரு திருப்பம்.
அந்த வளைவில் காரின் வேகத்தைக் கட்டுப்படுத்தித் திருப்பவேண்டும்.

அதிக வேகத்தால் அவனால் சமாளிக்க இயலவில்லை.
சாலையில் இருந்து கார் விலகி பக்கத்தில் இருந்த ஆற்றில் கார் பாய்ந்தது.

அவனுக்கு தெய்வாதீனமாக அதிகமாக அடிபடவில்லை.
ஆனால் அதிவேகத்தில் கார் பாய்ந்ததில் காரின் முன்பகுதி நசுக்கப்பட்டு அவனது கால்கள் காரில் சிக்கிக்கொண்டது . அவனால் காரைவிட்டு வெளியேற இயலாத நிலை.

ஆற்றில் பாய்ந்த கார் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கத் தொடங்கியது.
அவன் காரைவிட்டு வெளியேறிவிடத் துடித்தான்.

காரில் கால் மாட்டிக்கொண்டதால் அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

காரின் கதவை திறக்க முயற்சித்தான்.
அதிலும் ஒரு சிக்கல்

விபத்தில் காரின் கதவு அடிபட்டதில் திறக்கும் விசை பழுதாகிட்டதால் கதவும் சிக்கிக்கொண்டது.

என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான்.

கார் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்க ஆரம்பித்து இறுதியில் ஆற்றின் அடித்தளம்வரை சென்றுவிட்டது.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து மீட்ட்புக் குழுவினர் அந்த இடத்தை வந்தடைந்தார்கள்.
நீரில் இருந்து காரை வெளியே இழுத்து அவனையும் காரின் பிடியில் இருந்து மேட்டார்கள்.

இவ்வளவு நேரம் கழித்து மீட்புக் குழுவினர் வந்து அவனை மீட்டபோதிலும் அவன் உயிருடன்தான் இருந்தான்.

நண்பர்களே கார் நீரின் அடிவரை சென்றபின்பும்கூட அவன் உயிர் பிழைத்திருந்தது எப்படி??????

ஜனகன்
02-01-2010, 04:38 PM
ஏன் என்றால் கார் கதவுகள் பூட்டி இருந்த படியால், நீர் கொஞ்சம் கொஞ்சம் மாகத்தான் உள்ளே போயிருக்கும்.எனவே அவன் சுவாசிப்பதற்கு பிரச்சனை இல்லாது இருந்திருப்பான்.

பாரதி
02-01-2010, 04:51 PM
ஆற்றில் ஓடும் நீரின் மட்டத்தைக்குறித்து பிஜிகே ஒன்றும் கூறாததில் இருந்து விடை தெளிவாக விளங்குகிறதே!

pgk53
11-01-2010, 12:34 AM
ஆற்றில் ஓடும் நீரின் மட்டத்தைக்குறித்து பிஜிகே ஒன்றும் கூறாததில் இருந்து விடை தெளிவாக விளங்குகிறதே!

பாரதி அவர்களே,
விடையை நேரிடையாகக் கூறாமல் நீங்களும் ஒரு புதிர்போல் கூறினீர்கள்.
ஆனாலும் அதுதான் சரியானவிடை பாராட்டுக்கள்.

மேலும் இந்த மாதத்துடன் எனது தற்போதைய
பணியிடத்தில் வேலை பூர்த்தியடைகின்றது.

ஜனவரி 31ம் தேதிக்குப் பிறகு நான் தாயகம் திரும்ப உள்ளேன்.

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
11-01-2010, 12:39 AM
புதிர் எண்:-460

அவனது மனைவி அவன் தன்மேல் அன்பில்லாமல் இருக்கின்றான் என்று எப்போது பார்த்தாலும் அவனிடம் புகார் செய்துகொண்டே இருப்பாள்.

அதனால் அவன் அவள்மேல் தனக்கிருந்த அன்பை வெளிப்படுத்த முடிவு செய்தான்.

மேற்குத் தொடர்ச்சி மலையைக் செருப்புகூட அணியாமல் வெறும் கால்களாலேயே ஏறிச் சுர்றி வந்தான். வீட்டுக்கு வந்து அன்பே….நான் உன்மேல் கொண்டுள்ள அன்பை வெளிக்காட்டவே இதைச் செய்தேன் என்றான்.

அடுத்தாற்போல் ராமேஸ்வரம் சென்று எந்தவித உபகரணங்களும் இல்லாமல் நீண்டதூரம் நீச்சல் செய்ய பயிற்சி எடுத்துக்கொண்டு, சிங்கள கடற்படையினரின் பயம் ஏதுமின்றி இலங்கைவரை நீந்திச்சென்று திரும்பிவந்து மீண்டும் அதையே கூறினான்.

பிறகு தனது ஊரிலிருந்து புறப்பட்டு கால்நடையாகவே காசிக்குச் சென்று திரும்பினான்.

பிறகும் அவள் தன்மேல் கோபமாக இருப்பதைக் கண்டு மீண்டும் புறப்பட்டு ராஜஸ்தான் பாலைவனத்தை அன்ன ஆகாரமின்று நடந்தே கடந்து சென்று திரும்பி வந்து, மனைவியைப் பார்த்து….அன்பே இப்போதாவது நான் உன்மேல் கொண்டுள்ள அன்பை உணர்கிறாயா?? என்றான்.

அதற்கு அவன் மனைவி கூறிய பதிலைக் கேட்டு அவன் அதிர்ச்சியடைந்து தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான்!!!!!!!!!!!

அவனது மனைவி அவனுக்கு என்ன பதில் கூறியிருப்பாள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?????????????

pgk53
11-01-2010, 12:41 AM
புதிர் எண்-461

உங்கள் எதிரே ஒரு பெரிய மலை இருக்கிறது.
அந்த மலையைக் கடந்து செல்ல இரண்டே வழிகள்தான் உள்ளன.

ஒரு வழியில் சென்றால் எந்தக் கஷ்டமும் இல்லாமல் சரியாக உங்களை அந்த மலைக்கு மறுபக்கம் கொண்டுபோய் சேர்க்கும்.

அடுத்த வழியோ அடர்ந்த காடுகளுக்குள் சென்று சுற்றிச் சுற்றி வந்து உங்கள் மதியை மயக்கி நீங்கள் செல்லவேண்டிய இடத்துக்குச்க் கொண்டுபோய்ச் சேர்க்காது.

ஆனால் எது சரியான வழி என்று உங்களுக்குத் தெரியாது..

எந்த வழியில் சென்றால் சரியான இடத்தை அடையலம் என்று அந்தக் கிராமத்தில் இருந்த இருவருக்கு மட்டுமே தெரியும்.

ஆனால் அதில் ஒரு சிக்கல்.

அந்த இருவரில் ஒருவர் எப்போதும் பொய்யே பேசுபவர்.
மற்றவர் எப்போதும் உண்மையே பேசுபவர்.

அதிலும் உங்களுக்கு ஒரு சிக்கல் இருக்கின்றது.

இருவரில் யார் பொய் பேசுபவர்…யார் உண்மை பேசுபவர் என்று உங்களுக்குத் தெரியாது.

மேலும் அவர்கள் இருவருமே உங்களது ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே விடை கூறுவார்கள்.

நீங்கள் அந்த மலையைக் கடந்தே ஆகவேண்டும்.

இப்போது அவர்களிடம் நீங்கள் என்ன கேள்வி கேட்பீர்கள்?????

அன்புரசிகன்
11-01-2010, 12:51 AM
புதிர் 461ற்கு விடை...

அந்த இருவரில் ஒருவரிடம் போய் சரியான பாதை எது என்று கேட்டால் அவர் ஒருவிடை சொல்வார்.

மற்றவரிடம் போய் பசுப்பால் வெள்ளையா கறுப்பா என்று கேட்டால் அவர் சரியான பதில் சொன்னால் முதல் சொன்னவர் பிழையான பதில் சொல்லியிருப்பார். அதை கொண்டு சரியான பாதைக்கு செல்லலாம். பசுப்பால் கறுப்பு என்றிருந்தால் முதல் சொன்னவரின் வழியிலே செல்லலாம்.
---

புதிர் 460 க்கு திருமணமான ஜாம்பவான்கள் தான் வேண்டும் போல கிடக்குது... :D

இருந்தாலும் ஒரு முயற்சி... ஏன்டா லூசா.. என்மேல அன்புவையடா என்றால் ஊர்சுற்றிக்கொண்டா இருக்கிறாய் என்று கேட்டிருப்பாளோ???

இல்லை காசி ராமேஸ்வரம் என்று சென்றதால் அவளது மாமனார் மாமியாரை பார்க்க போயிருப்பார் என்று நினைத்திருப்பாளோ...

aren
11-01-2010, 01:41 AM
புதிர் 461க்கு அன்புவின் பதில் சரியென்றே எனக்கும் தோன்றுகிறது.

புதிர் 460 எனக்கு பதில் தெரிந்தால் நான் ஏன் இப்படி இருக்கிறேன்.

அன்புரசிகன்
11-01-2010, 02:02 AM
460க்கு..

ஒருவேளை சிங்கன் வேலையில்லாமல் இருக்கிறாரோ... வீட்டில் காசு பணம் இல்லாததால் அவள் சொல்லியிருக்கலாம். அது தான் அவர் அங்க இங்க என்று சுற்றித்திரிந்திருக்கிறார்.

தாமரை
11-01-2010, 02:50 AM
புதிர் எண்-461

உங்கள் எதிரே ஒரு பெரிய மலை இருக்கிறது.
அந்த மலையைக் கடந்து செல்ல இரண்டே வழிகள்தான் உள்ளன.

ஒரு வழியில் சென்றால் எந்தக் கஷ்டமும் இல்லாமல் சரியாக உங்களை அந்த மலைக்கு மறுபக்கம் கொண்டுபோய் சேர்க்கும்.

அடுத்த வழியோ அடர்ந்த காடுகளுக்குள் சென்று சுற்றிச் சுற்றி வந்து உங்கள் மதியை மயக்கி நீங்கள் செல்லவேண்டிய இடத்துக்குச்க் கொண்டுபோய்ச் சேர்க்காது.

ஆனால் எது சரியான வழி என்று உங்களுக்குத் தெரியாது..

எந்த வழியில் சென்றால் சரியான இடத்தை அடையலம் என்று அந்தக் கிராமத்தில் இருந்த இருவருக்கு மட்டுமே தெரியும்.

ஆனால் அதில் ஒரு சிக்கல்.

அந்த இருவரில் ஒருவர் எப்போதும் பொய்யே பேசுபவர்.
மற்றவர் எப்போதும் உண்மையே பேசுபவர்.

அதிலும் உங்களுக்கு ஒரு சிக்கல் இருக்கின்றது.

இருவரில் யார் பொய் பேசுபவர்…யார் உண்மை பேசுபவர் என்று உங்களுக்குத் தெரியாது.

மேலும் அவர்கள் இருவருமே உங்களது ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே விடை கூறுவார்கள்.

நீங்கள் அந்த மலையைக் கடந்தே ஆகவேண்டும்.

இப்போது அவர்களிடம் நீங்கள் என்ன கேள்வி கேட்பீர்கள்?????

- x - = +

+ x + = +

இந்த முறைதான்.

முதல் வழி நேர்வழி என வைத்துக் கொள்வோம்.
இரண்டாம் வழி சுற்றல் வழி என வைத்துக் கொள்வோம்.

முதல் நபரிடம் சென்று,

இரண்டாம் நபரிடம் நான் எது நேர்வழி என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார் என்று கேட்பேன்.

அவர் உண்மை சொல்பவர் என்றால், சுற்றல் வழியைத்தான் அவர் காட்டுவார். (ஏன்னா பொய் சொறவர்கிட்ட நேர் வழி என்னன்னு கேட்டா, சுற்றல்வழியைத் தானே காட்டுவார்)

அவர் பொய் சொல்பவர் என்றால், சுற்றல் வழியைத்தான் அவர் காட்டுவார். (ஏன்னா பொய் சொறவர்கிட்ட நேர் வழி என்னன்னு கேட்டா, நேர்வழியைத் தானே காட்டுவார். அதைப் பொய்யா சொல்ல பொய் சொல்றவர் என்கிட்ட சுற்றல் வழியைக் காட்டுவார்)

அதனால் அவர் எந்த வழியைக் காட்டுறாரோ அதில் செல்லாமல் அடுத்த வழியில் செல்வேன்.

(ஆனால் அந்த ஆளுங்க எப்ப உண்மை சொல்வாங்க எப்ப பொய்சொல்வாங்கன்னு தெரியாம இருந்து, என்னை மாதிரி சுற்றலில் விடுவதே அவர்களது கொள்கை என்றால், நம்மால ஒண்ணுமே பண்ண முடியாது...:icon_ush::icon_ush:)

அன்புரசிகன்
11-01-2010, 07:29 AM
தாமரை அண்ணா... அந்த பொண்டாட்டி புதிருக்கு ஒரு முடிவு சொல்லுங்க... :D

தாமரை
11-01-2010, 07:35 AM
தாமரை அண்ணா... அந்த பொண்டாட்டி புதிருக்கு ஒரு முடிவு சொல்லுங்க... :D

பொண்டாட்டியே ஒரு புதிர்தானே.. ஒண்ணா? ரெண்டா? மூணூ முடிச்சு போட்டுல்ல வந்தாங்க..

பி.ஜி.கே சொன்ன புதிரில் வார்த்தை தவறு ஒண்ணு இருக்கிற மாதிரி தெரியுது...

பொண்டாட்டி "அவன் தன்மேல் அன்பில்லாமல் இருக்கின்றான்" அப்படின்னு நச்சரிக்கலைன்னு நினைக்கிறேன்.

பொண்டாட்டி சொன்னது "கணவன் தன்னுடன் அன்பாய் இல்லை" " என்பதாகும்.

ஏற்கனவே வூடு தங்க மாட்டேங்கறான் அப்படின்னு பொண்டாட்டி திட்டினா,

அவளை விட்டுட்டு மறுபடியும் ஊர் சுத்திட்டு வந்து உன்மேல் இருக்கிற அன்பினால்தான் இப்படிச் செய்தேன் எனச் சொன்னா கோபம் வருமா? வராதா?

அடிக்கத் தோணறப்ப கைக்கு வாகா வந்து நிக்கிறவந்தான் அன்பான கணவன்...

புரிய்தா?:icon_b:

பாரதி
11-01-2010, 08:47 AM
இந்த மாதத்துடன் எனது தற்போதைய
பணியிடத்தில் வேலை பூர்த்தியடைகின்றது.

ஜனவரி 31ம் தேதிக்குப் பிறகு நான் தாயகம் திரும்ப உள்ளேன்.

அடுத்து உங்கள் திட்டம் என்ன பிஜிகே..? உங்களுக்கு தனிமடல் அனுப்ப இயலவில்லையே..?

pgk53
11-01-2010, 01:36 PM
அடுத்து உங்கள் திட்டம் என்ன பிஜிகே..? உங்களுக்கு தனிமடல் அனுப்ப இயலவில்லையே..?

ஊரில் நிறைய வேலைகள் எனக்காக் காத்துக்கொண்டுள்ளது.
இம்முறை அவைகளை முடிக்க முயற்சி செய்யவேண்டும்.
மூன்று நான்கு மாதங்களுக்குள் மறுபடியும் 3 மாத வேலைக்கு சர்வீஸ் ஆர்டர் அனுப்புவதாக எனது அதிகாரி கூறியுள்ளார்.
அது கழிந்து ஆண்டுக்கொருமுறை அக்டோபரில் வரும் ஷட்டவுன் பணிகள் அப்போது மூன்று மாத வேலை இருக்கும்.
இப்படியாக நாட்களை ஓட்டவேண்டியதுதான் பாரதி.
எப்போதுமே எனது ஈ மெயில் முகவரிக்கு என்னை மன்ற நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம்,
pgk53@hotmail.com
மிக்க நன்றி பாரதி.

pgk53
14-01-2010, 12:24 AM
அன்பு ரசிகன் அவர்கள் மிகவும் சரியான விடையைக் கூற முயற்சி செய்துள்ளார்.அவரைப் பொறுத்தவரையில் அது சரியான விடையும்கூட.
ஆனால் ஒரு சிறிய தவறு என் பக்கமும் இருக்கின்றது.
அதாவது, அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.அது அந்த வழியைப் பற்றிய கேள்வியாகத்தான் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கவேண்டும்.
அதை விடுத்து பசும்பால் வெள்ளையா கருப்பா....இப்போது பகலா இரவா என்றெல்லாம் கேட்கக் கூடாது.மன்னிக்கவும்.
அன்பு ரசிகன் அவர்களே மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

lenram80
15-01-2010, 06:24 PM
முதல் நபரிடம் கேள்வி:2வது ஆள் என்ன சொல்வார்? 2- நபரிடம் கேள்வி:எது சரியான பாதை?

----------------உண்மை பேசீ ----- பொய் பேசி
1 சரி என்றால்------ 2 ------------ 2
2 சரி என்றால்------ 1 ------------ 1

---------------பொய் பேசி ----- உண்மை பேசீ
1 சரி என்றால்------ 2 ----------- 1
2 சரி என்றால்------ 1 ----------- 2

இணைக்கப்பட்ட அட்டவணையின் படி,
முதல் சந்தர்ப்பம் (முதலில் நான் சந்திக்கும் நபர் உண்மை பேசியாக இருப்பின்) இரண்டு பேருமே ஒரே எண்ணைச் சொல்வார்கள். முதலில் சொன்னவர் உண்மை பேசி. அவர்கள் சொன்னதிற்கு அடுத்த பாதையில் செல்ல வேண்டும்.

2-வது சந்தர்ப்பம் (அதாவது முதலில் நான் சந்திக்கும் நபர் பொய் சொல்பவராக இருப்பின்)
இரண்ரு பேருமே எண்களை மாற்றி சொல்வார்கள். அப்போது 2-வது நபர் உண்மை பேசி. அவர் சொல்வது தான் சரியான பாதை.

பாரதி
15-01-2010, 08:26 PM
புதிர் எண்-461

..

எந்த வழியில் சென்றால் சரியான இடத்தை அடையலம் என்று அந்தக் கிராமத்தில் இருந்த இருவருக்கு மட்டுமே தெரியும்.

ஆனால் அதில் ஒரு சிக்கல்.

அந்த இருவரில் ஒருவர் எப்போதும் பொய்யே பேசுபவர்.
மற்றவர் எப்போதும் உண்மையே பேசுபவர்.

அதிலும் உங்களுக்கு ஒரு சிக்கல் இருக்கின்றது.

இருவரில் யார் பொய் பேசுபவர்…யார் உண்மை பேசுபவர் என்று உங்களுக்குத் தெரியாது.

மேலும் அவர்கள் இருவருமே உங்களது ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே விடை கூறுவார்கள்.

நீங்கள் அந்த மலையைக் கடந்தே ஆகவேண்டும்.

இப்போது அவர்களிடம் நீங்கள் என்ன கேள்வி கேட்பீர்கள்?????

முதல் நபரிடம் கேள்வி:2வது ஆள் என்ன சொல்வார்? 2- நபரிடம் கேள்வி:எது சரியான பாதை?

பிஜிகேயின் புதிரின் படி இருவரிடமும் ஒரே கேள்வியைத்தான் கேட்க வேண்டும் என்பது விதி.

இப்புதிருக்கான விடையை முன்பே மன்றத்திலேயே கண்டதாக நினைவு.

pgk53
18-01-2010, 01:31 PM
முதல் நபரிடம் கேள்வி:2வது ஆள் என்ன சொல்வார்? 2- நபரிடம் கேள்வி:எது சரியான பாதை?

----------------உண்மை பேசீ ----- பொய் பேசி
1 சரி என்றால்------ 2 ------------ 2
2 சரி என்றால்------ 1 ------------ 1

---------------பொய் பேசி ----- உண்மை பேசீ
1 சரி என்றால்------ 2 ----------- 1
2 சரி என்றால்------ 1 ----------- 2

இணைக்கப்பட்ட அட்டவணையின் படி,
முதல் சந்தர்ப்பம் (முதலில் நான் சந்திக்கும் நபர் உண்மை பேசியாக இருப்பின்) இரண்டு பேருமே ஒரே எண்ணைச் சொல்வார்கள். முதலில் சொன்னவர் உண்மை பேசி. அவர்கள் சொன்னதிற்கு அடுத்த பாதையில் செல்ல வேண்டும்.

2-வது சந்தர்ப்பம் (அதாவது முதலில் நான் சந்திக்கும் நபர் பொய் சொல்பவராக இருப்பின்)
இரண்ரு பேருமே எண்களை மாற்றி சொல்வார்கள். அப்போது 2-வது நபர் உண்மை பேசி. அவர் சொல்வது தான் சரியான பாதை.

நண்பரின் பதிலே மிகச் சரியான பதிலாகும்.
அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

pgk53
18-01-2010, 01:33 PM
பிஜிகேயின் புதிரின் படி இருவரிடமும் ஒரே கேள்வியைத்தான் கேட்க வேண்டும் என்பது விதி.

இப்புதிருக்கான விடையை முன்பே மன்றத்திலேயே கண்டதாக நினைவு.

பாரதி அவர்களே இதே புதிர் மன்றத்தில் வரவில்லை என்பதுதான் என் நினைவு.
இதுபோலவே வேறு ஒரு புதிர் வந்திருக்கலாம்.
நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.

pgk53
18-01-2010, 01:36 PM
புதிர் எண் 460க்குரிய சரியான விடையை யாருமே கூறவில்லை.
ஆனால் மிகப் பக்கமாக வந்துள்ளார்கள்.
அவன் அவள்மீது கொண்ட அன்பை அருகில் இருந்து காட்டாமல் மாதக்கணக்கில் அங்கும் இங்கும் அலைந்து மாதங்களைப் போக்கினதால் அவள் என்னை விவாகரத்து செய்துவிடு என்றுதான் கூறியிருப்பாள்.

சரி வாருங்கள் நாளை நிச்சயமாக அடுத்த புதிருக்குப் போவோம்.

பா.ராஜேஷ்
18-01-2010, 03:01 PM
திருமணம் ஆனவர்களாலேயே சொல்ல முடியாதது வருத்தத்திற்குரிய விஷயம்தான் ;)

தாமரை
19-01-2010, 01:56 AM
பொண்டாட்டியே ஒரு புதிர்தானே.. ஒண்ணா? ரெண்டா? மூணூ முடிச்சு போட்டுல்ல வந்தாங்க..

பி.ஜி.கே சொன்ன புதிரில் வார்த்தை தவறு ஒண்ணு இருக்கிற மாதிரி தெரியுது...

பொண்டாட்டி "அவன் தன்மேல் அன்பில்லாமல் இருக்கின்றான்" அப்படின்னு நச்சரிக்கலைன்னு நினைக்கிறேன்.

பொண்டாட்டி சொன்னது "கணவன் தன்னுடன் அன்பாய் இல்லை" " என்பதாகும்.

ஏற்கனவே வூடு தங்க மாட்டேங்கறான் அப்படின்னு பொண்டாட்டி திட்டினா,

அவளை விட்டுட்டு மறுபடியும் ஊர் சுத்திட்டு வந்து உன்மேல் இருக்கிற அன்பினால்தான் இப்படிச் செய்தேன் எனச் சொன்னா கோபம் வருமா? வராதா?

அடிக்கத் தோணறப்ப கைக்கு வாகா வந்து நிக்கிறவந்தான் அன்பான கணவன்...

புரிய்தா?:icon_b:

புதிர் எண் 460க்குரிய சரியான விடையை யாருமே கூறவில்லை.
ஆனால் மிகப் பக்கமாக வந்துள்ளார்கள்.
அவன் அவள்மீது கொண்ட அன்பை அருகில் இருந்து காட்டாமல் மாதக்கணக்கில் அங்கும் இங்கும் அலைந்து மாதங்களைப் போக்கினதால் அவள் என்னை விவாகரத்து செய்துவிடு என்றுதான் கூறியிருப்பாள்.

சரி வாருங்கள் நாளை நிச்சயமாக அடுத்த புதிருக்குப் போவோம்.

இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலையே

pgk53
20-01-2010, 11:32 AM
இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலையே
நிச்சயமாக ஒத்துக்கொள்கிறேன் தாமரை அவர்களே..
இந்தப் புதிருக்கு தங்கள் விடை சரியானதுதான். வாழ்த்துக்கள்.
சரி....அடுத்த புதிரைப் பார்ப்போம்.

pgk53
20-01-2010, 11:35 AM
புதிர் எண்-462

அக்பர் சக்கரவர்த்தியின் அரசபைக்கு ஒரு சிற்பி ஒருவன் வந்தான்.
அவனது கையில் மூன்று சிறிய கண்ணாடிச் சிலைகள் இருந்தன.

சிறிய சிலைகள் என்றாலும் அவைகள் ஒரு மனிதனின் உருவம்போல் தத்ரூபமாக இருந்தன.
மூன்று சிலைகளும் எந்த வித்தியாசமும் பார்வைக்குத் தெரியாமல் ஒரே மாதிரியாக இருந்தன.

அக்பர் சக்கரவர்த்தியை வணங்கிய அவன் அந்த சிலைகளை எல்லோர் பார்வைக்கும் வைத்தான்.

அனைவரும் அந்தச் சிலைகளைப் பார்த்து வியந்து அவனை மிகவும் பாராட்டினார்கள்.

அக்பரும் அவனைப் பாராட்டி அவனுக்குப் பரிசளிக்குமாறு உத்தரவிட்டார்.
அவன் பரிசினைப் பெற்றுக்கொள்ளும் முன்பாக, “ அரசே….இந்தச் சிலகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும் ஒரு சிலைமட்டும் மிக்க சிறப்பானது.

உங்கள் அரசபையில் இருப்பவர்கள் யாரேனும் அந்தச் சிறப்பு அம்சம் கொண்ட சிலையைக் கண்டுபிடிக்க இயலுமா’? என்று கேட்டான்.
அக்பர் அந்த சிலைகளைப் பார்வையிட்டார்.

பிறகு சபையில் இருந்த அறிஞர்களைப் பார்த்து, “ உங்களில் யாரேனும் எந்தச் சிலை சிறப்பு அம்சம் கொண்டது என்பதைக் கண்டுபிடித்தால் அவர்களுக்கும் பரிசளிக்கிறேன்” என்றார்.

அறிஞர்கள் அனைவரும் சிலைகளைப் பார்த்தார்கள். ஆனால் யாரும் பதில் கூற முன்வரவில்லை.

அப்போது அரசபைக்கு தாமதமாக வந்த பீர்பல் அக்பரிடம் தாமதாமாக வந்தமைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஆசனத்தில் அமர்ந்தார்.

அக்பர், பீர்பலைப் பார்த்து விஷயத்தைக் கூறி பீர்பலால் எந்தச் சிலை சிறப்பானது என்று கண்டுபிடிக்க இயலுமா? என்று கேட்டார்.

பீர்பல் சிறிது நேரம் அந்தக் கண்ணாடிச் சிலைகளைப் பார்த்தார்.
பிறகு அக்பரைப் பார்த்து சிரித்தபடியே, “ சக்கரவர்த்தி அவர்களே….என்னால் எது சிறந்தது, சிறப்பு அம்சம் கொண்டது , என்று கூற இயலும்” என்றார்.

அக்பரும் மகிழ்வடைந்து, “ எங்கே கூறு பார்க்கலாம்” என்றார்.
பீர்பல் எந்தச் சிலை சிறப்பானது என்பதை காரணத்துடன் விளக்கினார்.

சிலையைச் செய்த சிற்பியும் மிகவும் மகிழ்ச்சியுடன் பீர்பல் கூறியதை ஒத்துக்கொண்டான்.

அக்பர் பீர்பலுக்கும் பரிசளித்துப் பெருமைப்படுத்தினார்.

மன்ற நண்பர்களே…..பீர்பல் என்ன கூறினார்??????

aren
20-01-2010, 11:40 AM
மூன்று சிலைகளும் ஒரே மாதிரியாகவே இருந்தன. எது சிறந்தது என்பது கண்டுபிடிக்கமுடியாது. ஆகையால் பீர்பல் கொடுத்தது சிறந்ததில்லை என்று நிரூபிக்கமுடியாது. ஆகையால் அதேயே சிறந்தது என்று சிற்பியும் ஒப்புக்கொண்டார்

பா.ராஜேஷ்
20-01-2010, 02:31 PM
மூன்று சிலைகளுள் ஒரு சிலைக்கு ஒரு பக்க காதில் துளையுடனும், வாயில் பல துளையுடனும் (அதாவது கேட்டதை பலவாக திரித்து கூறுபவன்), மற்றொரு சிலைக்கு இரு காதிலும் துளையுடனும் (எதையுமே காதில் வாங்கி கொள்ளாதவன்), மற்றுமொரு சிலைக்கு ஒரு பக்க காதில் மட்டும் துளையுடனும் (கேட்பதை வாங்கி மனதில் வைத்துக் கொள்பவன்) போன்று இருந்திருக்கலாம். எனவே அத வைத்து பீர்பால் கூறி இருக்கலாம்.

ஏற்கனவே படித்த ஞாபகம் ;)

pgk53
22-01-2010, 12:32 AM

ராஜேஷ் அவர்களே, நான் புதிரில் குறிப்பிட்டதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

எல்லா சிலைகளும் ஒரே மாதிரியாகத்தான் தோன்றியது.
ஒரு காதில் மட்டும் துளையுடனோ அல்லது ஒரு சிலையில் மட்டும் வாயில் துளையுடனோ இல்லை.

எல்லாமே பார்க்கும்போது வித்தியாசம் தெரியாமல் இருந்தன.
நீங்கள் முன்பு எப்போதோ படித்ததது நினைவுக்கு வந்தது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

நன்று.அது சரிதான். நீங்கள் நிச்சயமாகப் படித்திருப்பீர்கள்.

ஆனால் விடை சரியாக நினைவு கூறவில்லை நீங்கள்.
மீண்டும் முயன்றால் சரியான விடை நினைவுக்கு வந்துவிடும்.
நீங்கள் சிந்தனை செய்த பாதை சரியானதே.

ஆரென் அவர்களே நான் கொடுத்துள்ள க்ளூவைப் பாருங்கள்.
நீங்கள் விடை கூறிவிடுவீர்கள்.

தாமரை அவர்கள், பரஞ்சோதி, பாரதி எல்லோரும் எங்கே போனார்கள்???????

அன்புரசிகன்
22-01-2010, 04:18 AM
அங்கிருந்த வற்றில் 2 கண்ணாடியாலானது. ஒன்று வைரத்தினால் ஆனதோ???

aren
23-01-2010, 06:23 AM
அங்கிருந்த வற்றில் 2 கண்ணாடியாலானது. ஒன்று வைரத்தினால் ஆனதோ???

மூன்றுமே ஒரே மாதிரியானது என்று புதிர் சொல்கிறதே

அக்னி
23-01-2010, 06:43 AM
பீர்பால் எந்தச் சிலை சிறப்பானது எனக்கூறினாரே தவிர,
சிறப்பான சிலையைச் சுட்டிக்காட்டவில்லையே.

எனவே சிறப்பான சிலை எது என்பதற்கான காரணத்தை அவர் கூறியிருக்கவேண்டும்.
முதற் பிரசவம் போன்று, முதலிற் படைத்த சிலையே சிறப்பானது.
அதனைத் தழுவியே மற்றைய இரு சிலைகளும் செதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, எதனைச் சிற்பி முதலிற் செய்தானோ, அதுவே சிறந்த, சிறப்பம்சமிக்கச் சிலை எனப் பீர்பால் சொல்லியிருப்பார்.

aren
23-01-2010, 06:52 AM
அக்னி சொல்லும் பதில் சரியே என்று எனக்கும் படுகிறது.

முதலில் செய்ததுதான் ஒரிஜினல், மற்ற இரண்டும் காப்பி.

pgk53
23-01-2010, 08:58 AM
சரி நண்பர்களே.....இனி நான் அடுத்த க்ளூவும் கொடுக்கிறேன்.
நண்பர் ராஜேஷ் அவர்கள் கூறியதுபோல் சிலையின் உடலில் இருக்கும் துளைகள்தான் இந்தப் புதிருக்கு ஆதாரமானது.அந்தத் துளைகளைச் சோதித்துதான் பீர்பல் சிறப்பான சிலையைத் தேர்வு செய்தார்.

எங்கே பார்க்கலாம், இனி யார் சரியான விடையைச் சொல்லப்போகிறார்கள் என்று.

aren
23-01-2010, 09:05 AM
எனக்கு பதில் தெரியவில்லை, நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்

ஆர்.ஈஸ்வரன்
23-01-2010, 09:24 AM
எண்.463

veera
23-01-2010, 01:09 PM
முதலில் ஒரு சுவிட்சை போட வேண்டும் சிறிது நேரம் கழித்து அதை ஆப் செய்து விட்டு அடுத்த சுவிட்சை போட்டு விட்டு மேலே சென்று எரியாத இரண்டு பல்புகலை தொட்டு பார்க்க வேண்டும் சுடஹா இருப்பது முதலில் போட்டது எரிந்து கொண்டு இருப்பது இப்போது போட்டது மூன்றாவது மிச்சம் இருப்பது

veera
23-01-2010, 01:10 PM
ஒரு மாடிவீடு.முதல் மாடியில் உள்ள ஹாலில் மூன்று பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதற்குறிய சுவிட்சுகள் கீழேயே மாடிப்படி ஏறும் இடத்தில் உள்ளன.
நீங்கள் முதன்முறையாக அந்த வீட்டுக்குச் செல்கிறீர்கள்.
உங்கள் திறமையை பரிசோதிப்பதற்காக உங்கள் நண்பர், ஒரு பென்சிலை உங்கள் கையில் கொடுத்து, மேலே மாடியில் உள்ள மூன்று பல்புகளில், எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்று கீழே அடையாளம் செய்யும்படி கூறுகிறார்.கூடவே ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார்.
அதாவது, ஒரே ஒருமுறை மட்டுமே எந்த பல்ப் எரிகிறது என்பதைப் பார்க்க மாடிக்குப் போகலாம்.

நீங்கள் எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்????

முதலில் ஒரு சுவிட்சை போட வேண்டும் சிறிது நேரம் கழித்து அதை ஆப் செய்து விட்டு அடுத்த சுவிட்சை போட்டு விட்டு மேலே சென்று எரியாத இரண்டு பல்புகலை தொட்டு பார்க்க வேண்டும் சுடஹா இருப்பது முதலில் போட்டது எரிந்து கொண்டு இருப்பது இப்போது போட்டது மூன்றாவது மிச்சம் இருப்பது

veera
23-01-2010, 01:22 PM
புதிர் எண்-462

அக்பர் சக்கரவர்த்தியின் அரசபைக்கு ஒரு சிற்பி ஒருவன் வந்தான்.
அவனது கையில் மூன்று சிறிய கண்ணாடிச் சிலைகள் இருந்தன.

சிறிய சிலைகள் என்றாலும் அவைகள் ஒரு மனிதனின் உருவம்போல் தத்ரூபமாக இருந்தன.
மூன்று சிலைகளும் எந்த வித்தியாசமும் பார்வைக்குத் தெரியாமல் ஒரே மாதிரியாக இருந்தன.

அக்பர் சக்கரவர்த்தியை வணங்கிய அவன் அந்த சிலைகளை எல்லோர் பார்வைக்கும் வைத்தான்.

அனைவரும் அந்தச் சிலைகளைப் பார்த்து வியந்து அவனை மிகவும் பாராட்டினார்கள்.

அக்பரும் அவனைப் பாராட்டி அவனுக்குப் பரிசளிக்குமாறு உத்தரவிட்டார்.
அவன் பரிசினைப் பெற்றுக்கொள்ளும் முன்பாக, “ அரசே….இந்தச் சிலகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும் ஒரு சிலைமட்டும் மிக்க சிறப்பானது.

உங்கள் அரசபையில் இருப்பவர்கள் யாரேனும் அந்தச் சிறப்பு அம்சம் கொண்ட சிலையைக் கண்டுபிடிக்க இயலுமா’? என்று கேட்டான்.
அக்பர் அந்த சிலைகளைப் பார்வையிட்டார்.

பிறகு சபையில் இருந்த அறிஞர்களைப் பார்த்து, “ உங்களில் யாரேனும் எந்தச் சிலை சிறப்பு அம்சம் கொண்டது என்பதைக் கண்டுபிடித்தால் அவர்களுக்கும் பரிசளிக்கிறேன்” என்றார்.

அறிஞர்கள் அனைவரும் சிலைகளைப் பார்த்தார்கள். ஆனால் யாரும் பதில் கூற முன்வரவில்லை.

அப்போது அரசபைக்கு தாமதமாக வந்த பீர்பல் அக்பரிடம் தாமதாமாக வந்தமைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஆசனத்தில் அமர்ந்தார்.

அக்பர், பீர்பலைப் பார்த்து விஷயத்தைக் கூறி பீர்பலால் எந்தச் சிலை சிறப்பானது என்று கண்டுபிடிக்க இயலுமா? என்று கேட்டார்.

பீர்பல் சிறிது நேரம் அந்தக் கண்ணாடிச் சிலைகளைப் பார்த்தார்.
பிறகு அக்பரைப் பார்த்து சிரித்தபடியே, “ சக்கரவர்த்தி அவர்களே….என்னால் எது சிறந்தது, சிறப்பு அம்சம் கொண்டது , என்று கூற இயலும்” என்றார்.

அக்பரும் மகிழ்வடைந்து, “ எங்கே கூறு பார்க்கலாம்” என்றார்.
பீர்பல் எந்தச் சிலை சிறப்பானது என்பதை காரணத்துடன் விளக்கினார்.

சிலையைச் செய்த சிற்பியும் மிகவும் மகிழ்ச்சியுடன் பீர்பல் கூறியதை ஒத்துக்கொண்டான்.

அக்பர் பீர்பலுக்கும் பரிசளித்துப் பெருமைப்படுத்தினார்.

மன்ற நண்பர்களே…..பீர்பல் என்ன கூறினார்??????
மூன்று சிலைகளிலும் காதில் ஓட்டை இருந்தது ஒரு குச்சியை விட்டதும் முதல் சிலையில் வாய் வழியா வந்தது. இரண்டாவது சிலையில் மறு காது வழியா வந்தது. மூன்றாவது சிலையில் குச்சி உள்ளேயே இருந்தது. அதனால் அதுவே சிறந்தது.

karthik-gopal
25-01-2010, 09:55 AM
இரண்டாவது கேள்விக்கு பதில் இரண்டாம் இடம்.

pgk53
26-01-2010, 02:11 PM
நண்பர் கார்த்திக் அவர்களே.
நீங்கள் விடை கூறிய இரண்டாவது புதிர் பதிவாகி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது.
அந்தப் புதிரின் பதிலையும் அடுத்தாற்போல் மன்ற அன்பர்கள் பதிவு செய்துவிட்டார்கள்.
நீங்கள் இப்போது அதற்குரிய விடையைப் பதிவு செய்ததைப் பார்த்தபோது என்ன கூறுவதென்று தெரியவில்லை.
நண்பர் கார்த்திக் அவர்களே....உங்கள் பதிவும் இதே போலத்தான்.
முதலில் புதிரையும் பிறகு அதற்கு நண்பர்களின் பதில்களையும் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்..

pgk53
26-01-2010, 02:18 PM
மூன்று சிலைகளிலும் காதில் ஓட்டை இருந்தது ஒரு குச்சியை விட்டதும் முதல் சிலையில் வாய் வழியா வந்தது. இரண்டாவது சிலையில் மறு காது வழியா வந்தது. மூன்றாவது சிலையில் குச்சி உள்ளேயே இருந்தது. அதனால் அதுவே சிறந்தது.

நண்பர் வீரா அவர்களே பாராட்டுக்கள்.
சரியான பதிலைக் கூறிவிட்டீர்கள்.
இதற்குரிய விளக்கத்தையும் கூறிவிடுகிறேன்.
முதல் சிலை தனது காதில் கேட்பதை மனதில் வைத்துக்கொள்ளாமல் அப்படியே வாய் வழியாக அனைவரிடம் உளருபவன் என்பதனை உணர்த்துகிறது.
அடுத்த சிலை தனது ஒரு காதில் வாங்கி மற்ற காதில் வெளியே விடுபவனைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
மூன்றாவது சிலை தனது காதில் வாங்கும் விஷயத்தை அப்படியே மனதில் வைத்து அசைபோட்டு அதன் நன்மை தீமைகளை கருத்தில் கொள்பவன் என்று கருதவேண்டும்.
அதனால் மூன்றாவது சிலைதான் சிறந்தது என்று சிலைகளை ஆராய்ந்த பீர்பல் கூறினார்.

பா.ராஜேஷ்
26-01-2010, 02:23 PM
மூன்று சிலைகளுள் ஒரு சிலைக்கு ஒரு பக்க காதில் துளையுடனும், வாயில் பல துளையுடனும் (அதாவது கேட்டதை பலவாக திரித்து கூறுபவன்), மற்றொரு சிலைக்கு இரு காதிலும் துளையுடனும் (எதையுமே காதில் வாங்கி கொள்ளாதவன்), மற்றுமொரு சிலைக்கு ஒரு பக்க காதில் மட்டும் துளையுடனும் (கேட்பதை வாங்கி மனதில் வைத்துக் கொள்பவன்) போன்று இருந்திருக்கலாம். எனவே அத வைத்து பீர்பால் கூறி இருக்கலாம்.

ஏற்கனவே படித்த ஞாபகம் ;)

அண்ணா ! நான் கூறிய பதிலும் ஏறத்தாழ இதேதானே!!

pgk53
26-01-2010, 04:13 PM
அண்ணா ! நான் கூறிய பதிலும் ஏறத்தாழ இதேதானே!!
மூன்று சிலைகளுள் ஒரு சிலைக்கு ஒரு பக்க காதில் துளையுடனும், வாயில் பல துளையுடனும் (அதாவது கேட்டதை பலவாக திரித்து கூறுபவன்), மற்றொரு சிலைக்கு இரு காதிலும் துளையுடனும் (எதையுமே காதில் வாங்கி கொள்ளாதவன்), மற்றுமொரு சிலைக்கு ஒரு பக்க காதில் மட்டும் துளையுடனும் (கேட்பதை வாங்கி மனதில் வைத்துக் கொள்பவன்) போன்று இருந்திருக்கலாம். எனவே அத வைத்து பீர்பால் கூறி இருக்கலாம்.

ராஜேஷ் அவர்களே.....{மற்றொரு சிலைக்கு இரு காதிலும் துளையுடனும்...எதையுமே காதில் வாங்கி கொள்ளாதவன்}இதுமட்டும்தான் கொஞ்சம் ஒத்து வருகின்றது.
ஆனால் வீரா அவர்கள் பதில் கிட்டத்தட்ட சரியான அளவுக்கு இருக்கிறது.

நாளை அடுத்த புதிருக்குப் போவோம்.

aren
27-01-2010, 01:47 AM
துளை விஷயங்களை புதிரில் சொல்லாத்தால் புதிரேலேயே ஒரு குழப்பம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

pgk53
27-01-2010, 11:28 AM
சிறிய சிலைகள் என்றாலும் அவைகள் ஒரு மனிதனின் உருவம்போல் தத்ரூபமாக இருந்தன.
நண்பர் ஆரென் அவர்களே , புதிரில் சரியாகத்தான் குறிப்பிட்டிருந்தேன்.

aren
28-01-2010, 03:03 AM
சிறிய சிலைகள் என்றாலும் அவைகள் ஒரு மனிதனின் உருவம்போல் தத்ரூபமாக இருந்தன.
நண்பர் ஆரென் அவர்களே , புதிரில் சரியாகத்தான் குறிப்பிட்டிருந்தேன்.

சிறிய சிலைகள் என்றாலும் அவைகள் ஒரு மனிதனின் உருவம்போல் தத்ரூபமாக இருந்தன.
மூன்று சிலைகளும் எந்த வித்தியாசமும் பார்வைக்குத் தெரியாமல் ஒரே மாதிரியாக இருந்தன.

மேலேயுள்ளது பிரகாரம் எந்த வித்யாசமும் பார்வைக்குத் தெரியவில்லையென்றால் துளை எப்படி கண்ணுக்குத் தெரியாமல் இருந்திருக்கமுடியும். புதிரில் தவறு உள்ளது என்ற என் வாதம் சரியானதே.

அக்னி
28-01-2010, 06:46 AM
ஆரென் அண்ணா...
துளைகள் பார்வைக்குத் தெரியும்படி மூன்று சிலைகளிலும் இருந்தன.
அதனால் சிலைகளில் எந்த வித்தியாசமும் பார்வைக்குத் தெரியவில்லை.
துளைகள் சிலையின் உள்ளே இணைக்கப்பட்ட விதத்திற்தான், வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அது பார்வைக்குப் புலப்படாத பகுதி.

துளைகள் பற்றி எதுவுமே புதிரிற் குறிப்பிடப்படாததால், நம்மால் அந்த வழியில் சிந்திக்க முடியவில்லை.

இப்பிடி நூல் விட்டுப் பார்க்கணும்ன்னு யாருக்குத் தெரியும்...

pgk53
28-01-2010, 01:14 PM
நண்பர் ஆரென் அவர்களே....துளைகளைப் பற்றி புதிரில் நான் குறிப்பிட்டுவிட்டால் அதில் எந்தப் புதிரும் இல்லாமல் போய்விடும்.
அதனால்தான் குறிப்பிடவில்லை.
நண்பர் அக்னி அளித்த விளக்கம் சரியானதே.
சரி வாருங்கள் . அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
28-01-2010, 01:23 PM
புதிர் எண்-463

ராமுவின் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த சோமு கல்லூரி விடுமுறையில் வந்திருந்த தனது மகள் அமுதாவுடன் வந்தான்.

ராமுவின் மகள் குமுதா, அமுதாவைக் கண்டதும் மிக்க மகிழ்வடைந்து, அவளை வரவேற்று அழைத்துச் சென்று பல்வேறு விஷயங்களை அளவளாவிக்கொண்டிருந்தாள்.

சோமு தனது நண்பனுடன் பலவிஷயங்களைக் கதைத்துக்கொண்டிருந்தான்.
பேச்சோடு பேச்சாக அன்று சோமு மளிகை சாதனங்கள் வாங்க கடைக்குச் சென்ற விஷயம் வந்தது.

“ ராமு…இன்று நான் நன்றாக ஏமாந்துவிட்டேன்.ஒரு டஜன் முட்டை வாங்கிவந்தேன்.அந்த முட்டைகளில் இரண்டு முட்டைகளை உடைத்து பொறியல் செய்யப்போன என்மனைவி அவை இரண்டுமே அழுகிய முட்டைகள் என்பதால் முட்டை பொறியல் மெனுவை கேன்சல் செய்துவிட்டு, அழுகின முட்டைகளை வாங்கிவந்ததற்காக .. என் மனைவி என்னைத் தாளித்துப் பொறித்து விட்டாள்” என்றான்.

அப்போது கண்ணாடி கிளாஸில் தண்ணீர் எடுத்து குடிக்கப்போன குமுதாவைப் பார்த்த சோமு, “ குமுதா, நீதான் பெரிய விஞ்ஞானி ஆயிற்றே? முட்டைகளில் நல்ல முட்டை எது அழுகிய முட்டை எது என்பதைக் கண்டுபிடித்துவிடுவாயா?” என்று கேட்டான்.

குமுதா “ ஓ…..…அது ஒன்றும் பிரும்ம சூத்திரம் இல்லை அன்கிள்…..மிகச் சுலபனான விஷயம்” என்றாள்.

எப்படி என்று சோமு கேட்டான். உடனே குமுதா அமுதாவை அவர்கள் வீட்டில் போய் மீதமிருந்த முட்டைகளை எடுத்துவரச் சொன்னாள்.

எப்படி சுலபமாக அழுகிய முட்டைகளைக் கண்டுபிடிப்பது என்பதை விளக்கிவிட்டுத்தான் தண்ணீர் க்ளாஸைக் கீழே வைத்தாள்..

ராமு சோமு அமுதா அனைவருமே குமுதாவைப் பாராட்டினார்கள்.

நண்பர்களே….குமுதா கூறிய சுலபமான வழி எது என்று கூறுங்களேன்.

chinnakannan
28-01-2010, 01:33 PM
தண்ணீர் உள்ள கண்ணாடி கிளாசில் முட்டையை போட்டால், அழுகிய முட்டை மிதக்கும்.
என்ன சரிதானே!

veera
29-01-2010, 09:11 AM
அழுகிய முட்டை மிதக்கும்

அக்னி
29-01-2010, 09:23 AM
தண்ணீர் உள்ள கண்ணாடி கிளாசில் முட்டையை போட்டால், அழுகிய முட்டை மிதக்கும்.
என்ன சரிதானே!

அழுகிய முட்டை மிதக்கும்
இருவர் கூறியதும் பிழை.

நல்ல முட்டையை நீரில் போட்டால் அமிழ்ந்திருக்கும்.
(நல்ல முட்டையை கொதிநீரிற் போட்டால் இத்தனைக்கும் ஜீரணமாயிருக்கும்.)
இதுதான் சரியான விடை. இல்லையா pgk sir... :rolleyes:

அன்புரசிகன்
29-01-2010, 09:58 AM
தண்ணீர் உள்ள கண்ணாடி கிளாசில் முட்டையை போட்டால், அழுகிய முட்டை மிதக்கும்.
என்ன சரிதானே!

அழுகிய முட்டை மிதக்கும்

இருவர் கூறியதும் பிழை.

நல்ல முட்டையை நீரில் போட்டால் அமிழ்ந்திருக்கும்.
(நல்ல முட்டையை கொதிநீரிற் போட்டால் இத்தனைக்கும் ஜீரணமாயிருக்கும்.)
இதுதான் சரியான விடை. இல்லையா pgk sir... :rolleyes:
முடியல அக்னி....

ஆர்.ஈஸ்வரன்
29-01-2010, 10:00 AM
அழுகிய முட்டை மிதக்கும். சரிதானே!

அக்னி
29-01-2010, 03:07 PM
அழுகிய முட்டை மிதக்கும். சரிதானே!
திரும்பவும் பார்ரா...
அதான் பிழை என்று சொல்றோமில்ல...

pgk53
29-01-2010, 04:22 PM
திரும்பவும் பார்ரா...
அதான் பிழை என்று சொல்றோமில்ல...

அக்னி அவர்களே.....நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குத் தெரிகிறது.

pgk53
29-01-2010, 04:27 PM
தண்ணீர் உள்ள கண்ணாடி கிளாசில் முட்டையை போட்டால், அழுகிய முட்டை மிதக்கும்.
என்ன சரிதானே!

மிகச் சரியான விடையைக் கூறிய சின்னக்கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

அழுகிய முட்டை மிதக்கும் என்று கூறியுள்ளீர்கள். அது ஏன் மிதக்கிறது என்று தெரியுமா?

அழுகிய முட்டைக்குள் ஹைடிரஜன் சல்பைட் வாயு உற்பத்தியாகின்றது.
அந்த வாயு முட்டையில் இருந்து வெளியேற வழியில்லாமல் உள்ளேயே அடைப்பட்டுக்கிடக்கிறது.

முட்டைகள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிறைத்து அதில் போட்டால், நல்ல முட்டைகள் நீரின் அடியில் சென்றுவிடும்.

வாயுவின் மேல் நோக்கி அழுத்தும் தாக்கத்தால் அழுகிய முட்டை நீரின் அடியில் செல்லாமல் மிதக்கிறது.

நாளை அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
30-01-2010, 01:22 PM
புதிர் எண்-464

அந்த கிராமத்திலே ஒரு ஏழை விவசாயி ஒருவன் இருந்தான்.
அவனது சிறிய தோட்டத்திலே வெண்டக்காயும், தக்காளியும் கொஞ்சம் விளைந்திருந்தது.

அவைகளை விற்று காசாக்கத் தீர்மானித்தான்.

அதனால் பக்கத்தில் இருந்த ஒரு உழவர் சந்தைக்கு எடுத்துச் செல்லுவதற்காக காய்களைப் பறித்தான். தக்காளி 5 கிலோவும் பிஞ்சு வெண்டைக்காய் 5 கிலோவும் தேறியது.

காய்களை மூட்டையாகக் கட்டுவதற்கா சாக்கு தேடினான்.
அவனிடம் ஒரே ஒரு சாக்குதான் இருந்தது.

அதிலேயே தக்காளியும், வெண்டைக்காயையும் போட்டு எடுத்துச் செல்லத் தீர்மானித்தான்.

ஆனால் அந்த உழவர் சந்தைச் சட்டப்படி காய்களை மொத்தமாகக் கலந்து கொண்டு வராமல் ஒவ்வொரு காயையும் தனித்தனியாகத் தான் கொண்டுவரவேண்டும் கலந்துகொண்டுவந்தால் அனுமதிக்கமாட்டார்கள்.

அதனால் கொஞ்சநேரம் ஆலோசித்து அதற்கும் வழி கண்டுபித்தான்.
முதலில் வெண்டைக்காய்களை சாக்குக்குள் போட்டான்.
ஒரு சிறிய கயிறை எடுத்து சாக்கின் பாதிக்கும் குறைவான பாகத்தில் வெண்டைக்காயைக் கட்டினான். பிறகு சாக்கை விரித்து தக்காளியைக் கொட்டி அதையும் கட்டினான்.

அதாவது ஒரே சாக்கில் இரண்டு பாகங்களாகக் கட்டி எடுத்துச் சென்றான்.

உழவர் சந்தையில் நுழையும் முன்பாகவே ஒரு சாக்கைக் கையில் வைத்துக்கொண்டு வழியில் இருந்த ஒருவர், சாக்கில் என்ன காய் கொண்டு செல்வதாகக் கேட்டார்.

அதற்கு அவன், தனது தோட்டத்தில் விளைந்த தக்காளியும், வெண்டைக்காயும் எடுத்துச் செல்வதாகக் கூறினான்.

அவருக்கோ கிராமத்துத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் என்றால் மிகவும் விருப்பம்.அதிலும் இளம் பிஞ்சு வெண்டைக்காய் என்றால் மிக மிக விருப்பம்.

அதனால் தனக்கு வெண்டைக்காய் வேண்டும் அவன் கொண்டு வந்த 5 கிலோ வெண்டைக்காயை அவரே மொத்தமாக எடுத்துக்கொள்வதுடன் நல்ல விலை கொடுப்பதாகவும் கூறினார்

மிகவும் மகிழ்ச்சியடைந்த விவசாயி வெண்டைக்காய்களைக் கொடுக்க சம்மதித்தான்.ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது.

ஏனென்றால் வெண்டைக்காய் சாக்கில் அடிப்பாகத்தில் இருந்தது.
தக்காளியைக் காலிசெய்தால்தான் வெண்டைக்காயை அவருக்குக் கொடுக்க முடியும்.

தக்காளியைக் கீழே கொட்டினால் மண் கலந்துவிடும்.பிறகு வேறு யாரும் அதை வாங்கமாட்டார்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவனுக்கு ஒரு மேலான வழி தோன்றியது.அதன்படி செய்து அவருக்கு வெண்டைக்காயை கொடுத்தான்.

நண்பர்களே…..அந்த விவசாயி எப்படி இந்த சூழ்நிலையைச் சமாளித்தான்.??????????கூறுங்களேன்.!!!!!!!!!!!!

பின் குறிப்பு----சாக்கை அறுத்துவிட்டுக் கொடுத்திருக்கலாம் என்று கூறவேண்டாம். பொதுவாகவே புதிர்களில் இது போலெல்லாம் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை என்பதால் நான் குறிப்பிடவில்லை.
முழுச் சாக்கை அப்படியே வைத்துக்கொண்டு எப்படிச் சமாளிப்பது என்பதில்தான் புதிர் இருக்கின்றது.

மன்மதன்
30-01-2010, 01:28 PM
அடிப்பாகத்தில் அறுத்துவிட்டு கொடுத்திருக்கலாம்.. அதான்
சாக்கின் மையப்பகுதியில் இரண்டும் கலக்காமல் இருக்க
கட்டி வைச்சிருக்காப்லேயே..

சிவா.ஜி
30-01-2010, 01:39 PM
மன்மதன் சொன்ன விடை சரியென்றே நினைக்கிறேன்.

pgk53
30-01-2010, 04:23 PM
மன்மதன் மற்றும் சிவா-ஜி அவர்களே....மீண்டும் ஒருமுறை புதிரை பார்க்கவும். ஒரு பின் குறிப்பு இனைத்துள்ளேன்.

அக்னி
30-01-2010, 04:36 PM
உழவர் சந்தையில் நுழையும் முன்பாகவே ஒரு சாக்கைக் கையில் வைத்துக்கொண்டு வழியில் இருந்த ஒருவர், சாக்கில் என்ன காய் கொண்டு செல்வதாகக் கேட்டார்.

அவரது கையிலிருந்த சாக்கை வாங்கித்,
தனது காய்கறிச் சாக்கினை அதற்குள் நுழைத்துத் தக்காளியைக் கொட்டியபின்,
மீதமான வெண்டைக்காய் அடங்கிய தனது சாக்கை அவரிடம் கொடுத்துவிட்டுத்,
தக்காளிச் சாக்கைத் தான் எடுத்திருப்பான்.

aren
31-01-2010, 12:20 AM
அக்னி சொல்வது சரியே. வெண்டைக்காய் வாங்க வந்தவர் கொண்டு வந்த சாக்கில் தக்காளியைக் கொட்டிவிட்டு வெண்டைக்காயை சாக்குடன் அவருக்குக் கொடுத்திருப்பார்.

pgk53
31-01-2010, 01:27 AM
அடடா....மன்ற நண்பர்களுக்கு என்னென்ன விதமான சிந்தனைகள் வருகின்றன என்பதை எண்ணும்போது மெய்சிலிர்க்கின்றேன்.
அக்னி அவர்களே...மன்னிக்கவும் இப்படி சிறிய சிறிய விஷயங்களையெல்லாம் நான் ஆலோசித்து இதையெல்லாம் செய்யக்கூடாது என்று நான் குறிப்பிடவில்லைதான்.
ஆனால் நான் சொல்ல வந்த புதிர் இதுவல்ல.
சாக்கை மாற்றிக்கொள்வது, கத்தியால் அறுத்துக் கொட்டுவது என்பதெல்லாம் கிடையாது.

அப்பாடா....இப்பவே கண்ணைக் கட்டுதே சாமி.

எப்படி புதுவிதமாக யோசித்து காய்களை ஒரே சாக்கில் கொண்டுவந்தானோ...அதுபோலவே அடுத்தும் யோசித்தான்.
அதனால் மீண்டும் முயற்சிக்கவேண்டுகிறேன்.

pgk53
31-01-2010, 01:29 AM
அன்பு நண்பர்களே நான் இன்று விடுமுறையில் தாயகம் புறப்பட உள்ளேன்.
அடுத்த மாதம் சந்திப்போம்.
எனது பணி மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுவிட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவருக்கும் வணக்கம்.

மேலும் ஒரு புதிரையும் பதிவு செய்கிறேன்.
இரண்டு புதிர்களுக்கும் விடை காணுங்கள் நணபர்களே.

pgk53
31-01-2010, 01:35 AM
புதிர் எண்-465

ராமுவும் சோமுவும் சென்னை மெரினா கடற்கரையில் ஒரு மாலைப்பொழுதில் உலாவச் சென்றார்கள்.

அலைகளின் ஆர்ப்பரிப்பை ரசித்தபடியே அங்கிருந்த பஜ்ஜிக்கடையில், மிளகாய் பஜ்ஜி வாங்கி இருவரும் ரசித்துச் சாப்பிட்டபடியே சாலையை நோக்கி வந்தார்கள்.

அவர்களது வாகனம் நிறுத்தி இருந்த இடம் நோக்கி நடக்கும் வழியில் கண்ணகி சிலை இருந்தது.

அதன் கலை நுட்பத்தையும் சமீப காலத்தில் கண்ணகி நிலைக்கு நேர்ந்த சம்பவங்களையும் அலசி ஆராய்ந்தப்டியே மேலும் நடந்தார்கள்.

அடுத்தாற்போல் இருந்த உழைப்பாளர் சிலைக்கு மனதார வாழ்த்துச் ஒன்ன சோமு, உழைப்பாளர் சிலைக்கு அருகே புதிதாக ஒரு சிலை நிறுவப்பட்டிருந்ததைக் கண்டான்.

உடனே ராமுவைப் பார்த்து, “ ராமு இந்த சிலை புதிதாக இருக்கிறதே !எப்போது வைத்தார்கள்?” என்று கேட்டான்.

ராமு அந்த சிலையைப் பார்த்தான். அது வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலை..குதிரை மீதமர்ந்து வாளை உறுவி மேல் நோக்கித் தூக்கிப் பிடித்து வீராவேசம் பொங்கும் நிலையில் கட்டபொம்மன் சிலை அமைந்திருந்தது.

“எப்போது வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் குதிரை தனது முன்னம் கால்கள் இரண்டையும் தூக்கி பாயும் விதமாக அமைத்திருப்பது மனதைக் கொள்ளை கொள்கின்றது” என்று கூறினான்.

அதற்கு சோமு “குதிரையைச் செய்த சிற்பி மிகுந்த திறமையுடன்தான் செய்துள்ளான். அதில் சந்தேகம் ஏதுமில்லை.. ஆனால் சிற்ப சாஸ்திரப்படி தவறு செய்துவிட்டான்” என்றான்.

ராமுவுக்கு ஒன்றும் புரியாமல் சோமுவைப் பார்த்து “ என்ன தவறு “ என்று கேட்டான்.

அதற்கு சோமு, “ ராமு…குதிரை தனது முன்கால்கள் இரண்டையும் தூக்கி பாயும் விதமாக அமைந்துள்ளதே அதில்தான் தவறு இருக்கிறது” என்றான்.

நண்பர்களே…..சோமு கூறும் அடிப்படைத் தவறு என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா??????

கண்மணி
31-01-2010, 03:45 AM
குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு வீரனின் சிலையில், குதிரையின் முன் இரு கால்களும் அந்தரத்தில் உயர்ந்திருந்தால் அந்த வீரன் போரில் இறந்தவன் என அர்த்தம்.

முன் கால்களில் ஒன்றுமட்டும் உயர்ந்திருந்தால், அந்த வீரன் போரில் காயம்பட்டவன் என அர்த்தம்.

குதிரையின் நான்கு கால்களும் தரையில் பதிந்திருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணித்தவன் என அர்த்தம்.குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு வீரனின் சிலையில், குதிரையின் முன் இரு கால்களும் அந்தரத்தில் உயர்ந்திருந்தால் அந்த வீரன் போரில் இறந்தவன் என அர்த்தம்.

முன் கால்களில் ஒன்றுமட்டும் உயர்ந்திருந்தால், அந்த வீரன் போரில் காயம்பட்டவன் என அர்த்தம்.

குதிரையின் நான்கு கால்களும் தரையில் பதிந்திருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணித்தவன் என அர்த்தம..

ஆனால் கட்டபொம்மன் தூக்கிலடப்பட்டதால் அவரை குதிரையின் மீது சிலைவடித்தால் அந்தக் குதிரை எத்தனை காலில் நிற்கணும்? ஒற்றைக் காலிலா? இல்லை அனைத்து கால்களும் தரைக்கு மேல பறக்கிற மாதிரியா? இல்லை குதிரையே போடக் கூடாதா?

மன்மதன்
31-01-2010, 05:38 AM
எனது பணி மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுவிட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்த்துகள் பிஜிகே அண்ணா..
விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்..

பாரதி
31-01-2010, 05:54 AM
அன்பு நண்பர்களே நான் இன்று விடுமுறையில் தாயகம் புறப்பட உள்ளேன்.
அடுத்த மாதம் சந்திப்போம்.
எனது பணி மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுவிட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆஹா...! எத்தனை மகிழ்ச்சியான சேதி!!
உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்.
நிம்மதியாக விடுமுறையைக் கொண்டாடுங்கள் நண்பரே.
எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

aren
01-02-2010, 11:38 AM
நல்ல விஷயம் பிஜிகே. என்னுடைய வாழ்த்துக்கள்

பா.ராஜேஷ்
01-02-2010, 12:17 PM
வாழ்த்துக்கள் அண்ணா :)

சிவா.ஜி
01-02-2010, 12:22 PM
ஆனால் கட்டபொம்மன் தூக்கிலடப்பட்டதால் அவரை குதிரையின் மீது சிலைவடித்தால் அந்தக் குதிரை எத்தனை காலில் நிற்கணும்? ஒற்றைக் காலிலா? இல்லை அனைத்து கால்களும் தரைக்கு மேல பறக்கிற மாதிரியா? இல்லை குதிரையே போடக் கூடாதா?

புதிருக்கு விளக்கம் கேட்டா...அதுக்கு ஒரு புதிரா?

தூக்கிலிடப்பட்டு இறந்ததால், இரண்டு கால்களையும் தூக்கிய நிலையில் குதிரை சில வடிவமைத்தது தவறுன்னு சொல்றீங்க....!!

குதிரை இல்லாம வாளை தூக்கிப் பிடிச்சிருக்கிற மாதிரி கம்பீரமா சிலை வெச்சிருந்தா போதும் இல்லையா?

lenram80
01-02-2010, 02:15 PM
1) முதல் விடை:
குதிரை பாயும் போல உள்ளது - என்பதால் குதிரையின் முன்னங்கால்கள் இரண்டும் புலி பாய்வது போல வெளி நோக்கி இருக்கும் மாறு சிற்பி செதுக்கி இருப்பின் அது தவறு. ஏனென்றால் குதிரை முன்னங்கால்களை தூக்கும் போது, கால்கள் உள் நோக்கி வளைந்திருக்கும்.

2) இரண்டாவது விடை:
(குதிரையின் கால்கள் உள்நோக்கி வளைந்திருப்பின் - அதாவது சரியாக இருப்பின்) நிலையியல் விதிகளின் படி, அதன் புவி ஈர்ப்பு மையம் பின்னன்காலுக்கு நேர் மேலே வராமல், முன்னங்கால் பக்கம் இடம் மாறி இருக்கும். அதனால் கேண்டிலீவர் பீம் போன்று அமைவதால், சிலை நாள்பட உடைந்து விடும் ( கேண்டிலீவர் பீம் க்கு எ - கா : ஒரு சுவறில் ஆணி அடித்து, அதன் ' நீளமான ' வெளி நீட்டப் பட்ட முனையில் அதிக எடையை தொங்க விட்டால், நாள்பட அந்த ஆணி வளையும்.)

சிவா.ஜி
01-02-2010, 02:34 PM
ரொம்ப விளக்கமா சொல்லியிருக்கீங்க லெனின். ஆனா இந்தப் புதிருக்கு விடை ரொம்ப சிம்பிள். அதைக் கண்மணி சொல்லியிருக்காங்க.

ஆனாலும், ஒரு புதிருக்கான விடையில் இத்தனை விஷயங்களை உங்கள் மூலம் தெரிந்துகொண்டது ரொம்ப சந்தோஷம். நன்றி லெனின்.

lenram80
01-02-2010, 02:39 PM
மூட்டையை தரை மட்டமாக வைத்து, முனையில் கட்டிய கயிற்றை கழட்டினால், தக்காளிகள் முன்நோக்கு நகர்ந்து அவன் கையை உள்ளே விடும் அளவிற்கு இடம் கிடைக்கும்.
இப்பொது இடையில் கட்டிய கயிற்றை முழுதும் அவிழ்க்காமல் அவன் கை போகும் அளவிற்கு இறுக்கம் தளர்த்தி (லூஸ் பண்ணி) வெண்டைக் காயை கை பிடி கை பிடியாக வெளியே எடுத்து கொடுத்திருப்பான்.