PDA

View Full Version : புதிரோ புதிர் எண்-571-05-06-2015

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17 18 19

மதி
26-01-2009, 06:50 AM
இதை எங்கேயோ கேட்ட படித்த ஞாபகம். தக்க சமயத்தில் ஞாபகம் வந்தது. அவ்வளவே..! என் தத்துவமல்ல.. :)

pgk53
28-01-2009, 03:46 PM
கனவில் ராமு பார்த்த காலடி சுவடு இறைவனுடையது. துன்பம் வந்த வேளையில் அவர் ராமுவை தாங்கி நடக்கிறார். அதனால் ஒரு ஜோடி காலடி சுவடு மட்டுமே தென்பட்டது

வாழ்த்துக்கள் மதி அவர்களே.
சரியான விடையை கூறியுள்ளீர்கள்.
பாராட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி.

நாளை வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

aren
28-01-2009, 04:54 PM
கனவில் ராமு பார்த்த காலடி சுவடு இறைவனுடையது. துன்பம் வந்த வேளையில் அவர் ராமுவை தாங்கி நடக்கிறார். அதனால் ஒரு ஜோடி காலடி சுவடு மட்டுமே தென்பட்டது

எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அனைவரும் சரியென்று சொல்லும்பட்சத்தில் நானும் உங்களை வாழ்த்துகிறேன்.

pgk53
29-01-2009, 02:32 PM
புதிர் எண்-319

ஒரு நாடு, அதன் பக்கத்து நாட்டுடன் எப்போது ஏதாவது காரணத்துக்காக யுத்தம் செய்துகொண்டே இருந்தது.

இப்படி தொடர்ச்சியான யுத்தத்தின் காரணமாக அந்த நாடு ஏழை நாடு ஆகிவிட்டது.

அதனால் போர் புரிவதற்கான உபகரணங்களை வாங்க பணம் இல்லாமல், இருப்பதை வைத்து போர் புரிந்தார்கள்.

சண்டையின்போது போட்டுக்கொள்ளும் தலைக்கவசம் இல்லை.
அதனால் துணியினால் செய்த தலைக்கவசத்தைப் போட்டுக்கொண்டார்கள் போர்வீரர்கள்.

துணியினால் செய்த தலைக்கவசம் தலைக்காயத்தை ஏற்படுத்தியதினால் எப்பாடு பட்டாவது இரும்பினால் செய்த தலைக்கவசத்தை வாங்கிவிடவேண்டும் என்று அந்த நாட்டு அதிபதி முடிவு செய்தார்,.

மற்ற செலவினங்களைக் குறைத்துக்கொண்டு போர் வீரர்களுக்கு இரும்பினால் ஆன தலைக்கவசத்தை இறக்குமதி செய்தார்கள்.

போர் தொடர்ந்து நடைபெற்றது.

தலைக்காயங்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகமாகியது.

அதைக் கண்ட தலைவன் குழம்பினான்.
இரும்பினால் ஆன தலைக்கவசம் அனிந்தபின்பு தலைக்காயங்கள் குறைவாக வேண்டுமல்லவா????

அதற்குப் பதிலாக அதிகம் ஆனது ஏன்??????????

தலைவனுக்கு உங்கள் கருத்தைக் கூறுங்களேன்!!!!!!!!!!!!!

கண்மணி
29-01-2009, 02:42 PM
புதிர் எண்-319

சண்டையின்போது போட்டுக்கொள்ளும் தலைக்கவசம் இல்லை.
அதனால் துணியினால் செய்த தலைக்கவசத்தைப் போட்டுக்கொண்டார்கள் போர்வீரர்கள்.

துணியினால் செய்த தலைக்கவசம் தலைக்காயத்தை ஏற்படுத்தியதினால் எப்பாடு பட்டாவது இரும்பினால் செய்த தலைக்கவசத்தை வாங்கிவிடவேண்டும் என்று அந்த நாட்டு அதிபதி முடிவு செய்தார்,.

தலைக்காயங்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகமாகியது.

அதைக் கண்ட தலைவன் குழம்பினான்.
இரும்பினால் ஆன தலைக்கவசம் அனிந்தபின்பு தலைக்காயங்கள் குறைவாக வேண்டுமல்லவா????

அதற்குப் பதிலாக அதிகம் ஆனது ஏன்??????????

தலைவனுக்கு உங்கள் கருத்தைக் கூறுங்களேன்!!!!!!!!!!!!!

தலையில் துணிக்கட்டுடன் கீழே விழுந்தால் தலையில் அடி குறைச்சலாத்தான் விழும்.

இரும்புக் கவசத்தோட விழுந்தா அடி பலமா விழும்.

கீழே விழுந்தா இரும்புக் கவசத்தில இடிச்சி பல மண்டைகள் உடைஞ்சு போச்சு,

தலையில் முதல்ல நல்லா துணியைச் சுத்திகிட்டு அப்புறம் கவசம் போட்டா அடி படுவது குறையும்.

ஆனா பிஜிகே அண்ணா, துணியினால் செய்த கவசம் எப்படித் தலைக்காயத்தை ஏற்படுத்தியதுன்னு குழப்பமாத்தான் இருக்கு,:icon_rollout::icon_rollout:

மதி
29-01-2009, 04:09 PM
எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அனைவரும் சரியென்று சொல்லும்பட்சத்தில் நானும் உங்களை வாழ்த்துகிறேன்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஆரென்...

அதெப்படி நீங்க மட்டும் உடன்படாம போகலாம்... அதெல்லாம் முடியாது உடன்பட்டே ஆகணும்.. :D:D:D:D:D:D

pgk53
09-02-2009, 07:18 AM
நண்பர்களே மிக அதிகமான வேலைப்பளுவினால் மன்றத்துக்கு வந்து செல்ல இயாமல் போனது.மன்னிக்கவும்

நண்பர்களே, துணிக்கவசத்தினால் இறப்பவர் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது.
தலையில் குண்டடிபட்டு காயத்துடன் பிழைப்பவர் எண்ணிக்கை குறைவு. ஆனால் இரும்புக்கவசம் அனிந்தபிறகு, இறப்பவர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தலைக்காயம் அடைந்தவர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

சரிதானா?????????

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
09-02-2009, 07:23 AM
புதிர் எண்-320

இரு நாடுகளுமே பக்கத்து பக்கத்து நாடுகள்.
அவை இரண்டுக்கும் எப்போதும் பகைதான்.
அந்தப் பக்கம் இருந்து ஆட்கள் இந்தப்பக்கம் வந்துவிட்டால் பிடித்துக் கொன்றுவிடுவார்கள்.

அதே போலதான் இந்தப்பக்கத்து நாட்டிலும்.
எதிர் நாட்டு ஆட்கள் வந்துவிட்டால் கொலைதான்.
இப்படி நீண்ட காலமாக நடந்துகொண்டிருந்தது.

அன்று இரண்டு ஆட்கள் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப்பக்கம் தவறுதலாக வந்துவிட்டார்கள்.

அவர்களை படைவீரர்கள் கைது செய்து அங்கிருந்த எல்லைப்புறத் தலைவனிடம் கொண்டுவந்தார்கள்.. அவனுக்கும் இப்படி அடிக்கடி ஆட்களை வெட்டிச் சாய்ப்பது அலுப்புத் தட்டிவிட்டது. அதனால் புதுமையாக ஏதேனும் தண்டனை கொடுக்கலாம் என்று நினைத்தான்.

இருவரையும் விசாரித்தான். ஆனால் இருவருமே ஊமைகள் . பேச இயலாது என்று தெரியவந்தது. ஆனால் சொல்வதை புரிந்துகொண்டார்கள்.

அதனால் இருவரையும் ஒரே அறையில் எதிர் எதிராக ஒருவரை ஒருவரை பார்க்க முடியாமல் சன்னல் பக்கமாக திருப்பி நிறுத்தி கால்களில் விலங்கிட்டான்.அந்த விலங்கு தரையோடு பதிக்கப்பட்டிருந்ததினால் அவர்களால் பின்புறம் திரும்ப இயலாது.

அத்துடன் நிறுத்தாமல் இருவரது முதுகுக்குப் பின்பக்கமாக பலகையை உயரமாக வைத்தான். அதனால் அவர்கள் திரும்பினாலும் பலகைதான் காட்சிக்கு வரும். ஒருவரை மற்றவர் பார்க்க இயலாது.

இப்போது இருவரிடம் ஆளுக்கு ஒரு சாக்பீஸ் கொடுத்தான்.மறுநாள் காலையில் அவன் வந்து பார்க்கும்போது,எதிரே உள்ள சன்னல் கதவின்மேல் 1000க்கு உள்ளே ஒரு எண்ணை இருவருமே எழுதியிருக்கவேண்டும் என்று கூறினான்.

இருவரும் எழுதிய எண் ஒரே எண்ணாக இருந்தால் இருவரையுமே விடுதலை செய்து அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவைப்பதாகவும், வெவ்வேறு எண்களாக இருந்தால் தலையை வெட்டிவிடப் போவதாகவும் கூறிச் சென்றான்.

மறுநாள் காலையில் வந்து பார்த்தான்.
இருவருமே ஒரே எண்ணைத்தான் எழுதியிருந்தார்கள்.

ஆச்சர்யமடைந்த தலைவன், இருவரையும் விடுதலை செய்து அனுப்பிவைத்தான்.

அதன்பிறகு அவர்களால் இது எப்படி சாத்தியம் ஆனது என்று குழப்பம் அடைந்த தலைவன், அந்த அறைக்கும் வந்தான்.

இரண்டு காவலாளிகளை சன்னலுக்குப் பக்கமாக எதிர் எதிர் திசைகளில் திருப்பி நிற்கவைத்தான்.

உடனே தான் செய்த தவறு அவனுக்குப் புரிந்துவிட்டது.

உங்களுக்கும் புரிந்திருந்தால் கூறுங்களேன்.????????????????????????

aren
09-02-2009, 07:33 AM
எனக்குத் தெரியாமல் நான் சரியாக எழுதாததால் இப்பொழுது நான் பிசாசாக அலைந்துகொண்டிருக்கிறேன்.

சிவா.ஜி
09-02-2009, 07:40 AM
எனக்குத் தெரியாமல் நான் சரியாக எழுதாததால் இப்பொழுது நான் பிசாசாக அலைந்துகொண்டிருக்கிறேன்.

அய்யய்யோ என்னங்க ஆரென்.....பிசாசா....?:sprachlos020:

அன்புரசிகன்
09-02-2009, 07:50 AM
கண்ணாடியில் விம்பம் தெரிந்திருக்கும்...

lenram80
09-02-2009, 02:25 PM
காவலாளிகளை நிற்க வைத்த உடனேயே தலைவன் கண்டு பிடித்ததால்...
விடை:
"ஒரு காவலாளியின் நிழலை மற்றொரு காவலாளி பார்க்க முடிந்திருக்கும். ஏனெனில் ஜன்னிலின் வழியாக பொதுவாக சூரிய ஒளி வரும்.
எனவே, நேராக இல்லாமல் ஒரு கோணத்தில் சூரிய ஒளி வரும் போது, நிழலை பார்த்திருக்க முடியும். 'கை ஜாடை காட்டி, இருவ்ரும் ஒரே
* எண்ணை எழுதிருப்பார்கள்' என தலைவன் நினைத்திருக்கலாம்.

pgk53
17-02-2009, 12:32 PM
அன்பு நண்பர்களே, ஜன்னல் கன்னாடியில் பிம்பம் தெரிந்திருக்கும் என்ற அன்பு ரசிகனுக்கும், சூரிய ஒளியில் நிழல் என்ற புதுமையாக சிந்தித்த இளம்புயல்
ராம் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

நான் குறுகிய விடுமுறையில் தாயகம் செல்வதால் அடுத்த மாதம் 10. தேதிவரை மர்றம் வர இயலாது
வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
17-02-2009, 12:34 PM
புதிர் எண்-321

சக்கரவர்த்தி அக்பர் ஒருமுறை பீர்பலை சோதிக்க நினைத்தார்.சோதிப்பதுடன் பீர்பலின் அறிவுக் கூர்மையையும் மற்றவர்களுக்கு புலப்பட வைக்கவேண்டும் என்று விரும்பினார்.
தனது அரசபையில் இருந்த மந்திரிகளின் எண்ணிக்கையைவிட ஒரு முட்டை குறைவாக காவலரிடம் கொடுத்து அரசாங்க நந்தவனத்தில் ஆங்காங்கே ஒளித்து வைக்கும்படி உத்தரவிட்டார். காவலர்களும் அதுபோலவே மறைத்து வைத்தார்கள்.,

பிறகு ஒவ்வொரு அமைச்சரையும் அழைத்து அரண்மனை நந்தவனத்தில் போய்த் தேடிப்பார்த்து ஆளுக்கொரு முட்டையை எடுத்துவருமாறு கூறினார்.அமைச்சர்களும் சென்று ஆளுக்கொரு முட்டையுடன் வந்தார்கள்.
அனைவரும் சென்று வந்தபின்பு பீர்பலை அனுப்பினார் அக்பர்.

நிச்சயமாக பீர்பலுக்கு முட்டை கிடைக்கப் போவதில்லை..
அதனால் பீர்பல் முட்டை கிடைக்காமல் முகந்தைத் தொங்கப் போட்டபடி ஏமாற்றமுடன் வரப்போகிறார் என்று அக்பர் எதிர்பார்த்தார்.

அக்பர் எதிர்பார்த்தபடி பீர்பல் முட்டை இல்லாமல்தான் வந்தார்.
ஆனால் அக்பர் நினைத்தபடி முகத்தை தொங்கப் போட்ட்டபடி ஏமாற்றமுடன் வரவில்லை.சிரித்தபடி வந்தார்.!!!!!!!!!!!

அன்பு நண்பர்களே இந்த சூழ்நிலையை பீர்பல் எப்படிச் சமாளித்தார்.??????????????

pgk53
19-02-2009, 11:43 PM
அன்பு நண்பர்களே??????????????என்ன ஆனது????????????யாருமே இந்தப் பக்கமே வரவில்லையே????????????????????????????????

lenram80
20-02-2009, 02:03 AM
மற்ற எல்லாருக்கும் கிடைத்தது கூமுட்டை. ஆனால் எனக்கு வைக்கப்பட்டிருந்த முட்டை மட்டும் நல்ல முட்டை. அதனால் அது குஞ்சாக பொரிந்து பறந்துவிட்டது

aren
20-02-2009, 03:58 AM
பீர்பல் ஒரு பறவை குஞ்சுடன் வந்தார். முட்டை பொரிந்து குஞ்சு வெளியே வந்துவிட்டது என்றார்.

lenram80
20-02-2009, 08:49 PM
பீர்பல் ஒரு பறவை குஞ்சுடன் வந்தார். முட்டை பொரிந்து குஞ்சு வெளியே வந்துவிட்டது என்றார்.

என் வெர்சன்-இன் இம்ப்ரூவுட் வெர்சன் நல்லா தான் இருக்கு :)

அறிஞர்
20-02-2009, 11:27 PM
இரண்டு கருத்துகளும் அருமை.. பதில் தான் என்ன??

pgk53
07-03-2009, 02:03 AM
மற்ற எல்லாருக்கும் கிடைத்தது கூமுட்டை. ஆனால் எனக்கு வைக்கப்பட்டிருந்த முட்டை மட்டும் நல்ல முட்டை. அதனால் அது குஞ்சாக பொரிந்து பறந்துவிட்டது

அன்பு நண்பர்களே....அனைவருக்கும் வணக்கம்.
விடுமுறை கழிந்து பணியிடம் வந்தடைந்தேன்.

நண்பர் ராம் கூறியது மிகச் சரியான விடை.
அவருக்கு வாழ்த்துக்கள்.
வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
07-03-2009, 02:05 AM
புதிர் எண்-322

ஒரு சமயம் சக்கரவர்த்தி அக்பரது அரசபைக்கு இரண்டு பாடகர்கள் வந்திருந்தார்கள். அருமையான குரல் வளம் கொண்ட அவர்கள், அற்புதமான பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்கள்.

அக்பர் சக்கரவர்த்தியும் மிக்க மகிழ்ந்து அவர்களுக்கு பொன்னும் பொருளும் பரிசாக அள்ளித் தந்தார்.

அதனால் குதூகலம் அடைந்த பாடகர்களில் ஒருவர் புறப்படும் சமயம், “ அக்பர் சக்கரவர்த்தி அவர்களே…..தாங்கள் இறைவனை விடப் பெரியவர்” என்று வாழ்த்திப் பாராட்டிச் சென்றார்.

பாடகர்கள் போனபின்பும் அரசபையில் இருந்தோர் கொஞ்சம் இறுக்கமாக உணர்ந்தார்கள்.

இறைவனை விடப் பெரியவர் என்று கூறுவது சரியல்ல என்ற எண்ணம் அனைவரது மனதிலும் ஓடியது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தார்கள். அவர்களது நிலையைக் கண்ட அக்பர் அனைவரையும் இன்னும் கொஞ்சம் சீண்டிப் பார்க்க நினைத்தார்.
என்ன சபையோர்களே பாடகன் கூறியது சரியா என்று அனைவரையும் பார்த்து கேட்டார்.

அனைவருக்குமே மனதில் ஒன்று இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல், ஆஹா…. அரசே , மிகச் சரியாகத்தான் பாடகன் கூறினான் “ என்று அரசைப் புகழ்ந்தார்கள்.

அக்பருக்கு ஒரே ஒருவர்மேல்தான் நம்பிக்கை.
பீர்பலாவது உண்மையையே பேசுவார் என்று நினைத்தார். அதனால் பீர்பலைப் பார்த்து, என்ன பீர்பல் உமது கருத்து என்ன என்று கேட்டார்.
புண்முறுவல் பூத்த பீர்பல், “ அரசே….பாடகன் மிகச் சரியாகத்தான் கூறியுள்ளான். ஒரு வகையில் இறைவனைவிட தாங்கள் பெரியவர்தான்” என்றார்.

அக்பர் மனம் நொந்துபோனார்.
பீர்பலாவது எதார்த்தமாக , அரசருக்குப் பயமில்லாமல் பதில் கூறுவார் என்று எதிர்பார்த்தால் இப்படி பீர்பலும் மற்றவர்களைப் போலவே முகஸ்துதி செய்கிறாரே என்று அக்பர் முகம் வாடினார்.

உடனே பீர்பல்” அரசே, நான் உண்மையாகத்தான் கூறுகிறேன்.இறைவனால் செய்ய இயலாத ஒரு காரியத்தை தங்களால் செய்ய இயலும்.
அப்படியானால் பாடகன் கூறியது உண்மைதானே?” என்றார்.

விளக்கமாகக் கூறு பீர்பல் என்றார் அக்பர்.
பீர்பலும் விளக்கினார்.
அக்பர் பீர்பலின் அறிவை வியந்து பாராட்டியதுடன், பரிசுகளையும் அளித்தார்.

நண்பர்களே பீர்பல் கூறிய விளக்கம் என்னவாக இருக்கும்???????????

பூமகள்
07-03-2009, 10:28 AM
அக்பர் சக்கரவர்த்தியும் மிக்க மகிழ்ந்து அவர்களுக்கு பொண்ணும் பொருளும் பரிசாக அள்ளித் தந்தார்.
ஐயா பிஜிகே,

பொன்னா?? பொண்ணா?? :smilie_abcfra:

ஒரு சுழியில் அர்த்தமே மாறிவிடுகிறதே... :eek::eek:

--

பதில்:

பீர்பால் : அரசே... இறைவன் எல்லார் முன்னிலையிலும் காட்சி தருவதில்லை. ஆனால், தாங்கள் நம் மக்களுக்கு காட்சியளிக்கிறீர்கள்..

இறைவன் பாவம் செய்தவரை இறந்த பின் நரகத்தில் தான் தண்டனை கொடுப்பார்.. ஆனால், நீங்கள் உயிருடன் இருக்கும் போதே தண்டனை கொடுக்கிறீர்கள்.

ஆக நீங்களே இறைவனைக் காட்டிலும் பெரியவர்..

இது தான் என் அறிவுக்கு இப்போதைக்கு எட்டியது.. வேறு தோன்றினால் பின்பு வந்து சொல்கிறேன்.

நன்றி...

அக்னி
07-03-2009, 10:43 AM
பூமகள்...

அப்படியானால், பீர்பாலுக்குத் தண்டனை கொடுத்துவிட்டு நான் கடவுள் என்று சொல்வாரே அக்பர்...

காட்சி விடயம் ஓ கே...

pgk53
07-03-2009, 04:53 PM
அன்பரே தவறுதலாக பொன் பொண்ணாக மாறியமைக்கு மன்னிக்கவும்.
திருத்தப்பட்டுவிட்டது.

pgk53
09-03-2009, 02:36 AM
ஐயா பிஜிகே,

பொன்னா?? பொண்ணா?? :smilie_abcfra:

ஒரு சுழியில் அர்த்தமே மாறிவிடுகிறதே... :eek::eek:

--

பதில்:

பீர்பால் : அரசே... இறைவன் எல்லார் முன்னிலையிலும் காட்சி தருவதில்லை. ஆனால், தாங்கள் நம் மக்களுக்கு காட்சியளிக்கிறீர்கள்..

இறைவன் பாவம் செய்தவரை இறந்த பின் நரகத்தில் தான் தண்டனை கொடுப்பார்.. ஆனால், நீங்கள் உயிருடன் இருக்கும் போதே தண்டனை கொடுக்கிறீர்கள்.

ஆக நீங்களே இறைவனைக் காட்டிலும் பெரியவர்..

இது தான் என் அறிவுக்கு இப்போதைக்கு எட்டியது.. வேறு தோன்றினால் பின்பு வந்து சொல்கிறேன்.

நன்றி...

பூமகள் அவர்களே....தங்கள் பதிலைக் கண்டேன்.
மிகவும் ஆலோசனை செய்துதான் பதில் கூறியுள்ளீர்கள்.
ஆனால் அது தவறு.

இறைவன் காட்சிதருவதைப் பற்றி கூறியுள்ளீர்கள்.
எத்தனையோ முறை பல்வேறு விதமாக இறைவன் நமக்கு காட்சி கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்.
அதை நாம் மனதால் கட்டாயமாக உணர இயலும்.
இப்போதெல்லாம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதற்கு சாட்சியாக அந்த பிறவியிலேயே அவன் அவன் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றது.
அதனால் அதுவும் தவறு.

இன்னும் கொஞ்சம் சிந்தனை செய்யலாம்.
இரண்டு தினங்களில் நானே சரியான பதிலைக் கூறி அடுத்த புதிருக்குச் செல்லுகின்றேன்.

மன்மதன்
10-03-2009, 07:44 AM
இன்னும் கொஞ்சம் சிந்தனை செய்யலாம்.
இரண்டு தினங்களில் நானே சரியான பதிலைக் கூறி அடுத்த புதிருக்குச் செல்லுகின்றேன்.

அரசர் காலத்து தண்டனையான நாடு கடத்துதல் என்பதை கடவுள் செய்ய இயலாது. அரசருக்கு ஒரு ராஜ்ஜியம் இருக்கும். தவறிழைத்தவனை அந்த ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறும்படி அரசன் கட்டளையிடலாம். ஆனால் இந்த உலகம் முழுதும் ராஜ்ஜியமாக கொண்ட கடவுளால் அப்படி ஆணையிட வசதியில்லை என்பதால் பீர்பால் அப்படி சொல்லியிருக்கலாம்..!!!;)

aren
10-03-2009, 08:24 AM
கடவுள் தன்னைவிட பெரியவர் யாரும் இல்லை என்று சொல்லமுடியாது. ஆனால் அரசன் சொல்லமுடியும். ஆகையால் அவர் பெரியவர் என்று பீர்பல் சொல்லியிருக்கலாம்.

ஆதி
10-03-2009, 09:04 AM
அரசர் காலத்து தண்டனையான நாடு கடத்துதல் என்பதை கடவுள் செய்ய இயலாது. அரசருக்கு ஒரு ராஜ்ஜியம் இருக்கும். தவறிழைத்தவனை அந்த ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறும்படி அரசன் கட்டளையிடலாம். ஆனால் இந்த உலகம் முழுதும் ராஜ்ஜியமாக கொண்ட கடவுளால் அப்படி ஆணையிட வசதியில்லை என்பதால் பீர்பால் அப்படி சொல்லியிருக்கலாம்..!!!;)

இதுதானுங்க சரியான விடை இந்த கதையை நான் ஏற்கனவே படிச்சிருக்கேன்..

பீர்பாலும் இதைதான் சொல்லுவார்..

பாராட்டுக்கள் அண்ணா...

pgk53
11-03-2009, 02:46 PM
ஆதியே சொல்லிவிட்டபிறகு அப்பீல் ஏது????????
மன்மதனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
11-03-2009, 02:50 PM
புதிர் எண்-323

அன்று சந்தையிலே கூட்டம் மிக அதிகமாக இருந்தது.

அந்தப் பிச்சைக்காரன் தளர்வான நடையுடன் சென்று கொண்டிருந்தான்.
அவனது கால்களில் ஏதோ இடறியது.

சட்டென்று குனிந்து அது என்னவென்று பார்த்தான்.
அது ஒரு தோல் பை. உள்ளே ஏதோ நிறைத்திருந்ததால் உப்பலாக இருந்தது.

என்னவென்று தோல் பையை திறந்து பார்த்தான்.
முழுவதும் தங்கக் காசுகளால் நிறைக்கப்பட்டிருந்தது.

அவன் பிச்சைக்காரனாக இருந்தாலும் மிகவும் நேர்மையானவன்.
பாவம் யாரோ தோல் பையை தொலைத்து விட்டார்கள் என்று நினைத்தபடியே பையை தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

சந்தையில் ஒரு உயரமான இடத்தில் நின்றபடி ஒரு வணிகன் ஒருவன் சப்தம் போட்டு ஏதோ கூறிக்கொண்டிருந்ததை பார்த்தான் பிச்சைக்காரன்.
என்னெவென்று சரியாகப் புரியாததினால் கொஞ்சம் அருகில் போனான்.

“எனது தோல் பையை நான் எங்கோ தொலைத்துவிட்டேன்….அதை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சிறந்த பரிசு கொடுப்பேன்” என்று அந்த வணிகன் சப்தமாகக் கூறிக்கொண்டிருந்தான்.

உடனே அந்தப் பிச்சைக்காரன் தன்னிடமிருந்த தோல் பையை அந்த வணிகனிடம் கொடுத்து அது தனக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதையும் கூறி, பரிசு வாங்குவதற்காகக் காத்திருந்தான்.

வணிகன் அவசரம் அவசரமாக தோல் பையில் இருந்த தங்கக் காசுகளை எண்ணிப் பார்த்தான். அவன் வைத்திருந்த நூறு தங்கக் காசுகளும் சரியாக இருந்தன. இருந்தாலும் அந்த வணிகன் ஒரு கஞ்சன்….பிச்சைக்காரனுக்கு எந்த வெகுமதியும் கொடுக்காமல் ஏமாற்ற நினைத்தான்.

அதனால், பிச்சைக்காரனைப் பார்த்து, “ ஏய்…பிச்சைக்காரனே…. இந்த தோல் பையில் நான் இருநூறு பொற்காசுகள் வைத்திருந்தேன். இப்போது நூறு பொற்காசுகள்தான் உள்ளது. மீதி நூறு காசுகளை எங்கே ஒளித்து வைத்தாய்.????மரியாதையாக இங்கிருந்து ஓடிவிடு. இல்லையென்றால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உன்னை கைது செய்ய வைப்பேன்” என்றான்.

பிச்சைக்காரன் நேர்மையானவன். அவனுக்கு தனது நேர்மையின்மேல் நம்பிக்கை இருந்ததுனால் வணிகனின் மிரட்டலுக்கு பயப்படவில்லை.

வணிகனைப் பார்த்து, “ நான் உனது நூறு பொற்காசுகளைத் திருடவில்லை. வா…..நீதி மன்றம் போகலாம்” என்று கூறி அருகில் இருந்த நீதிமன்றத்துக்கு வணிகனுடன் சென்றான்.

வழக்கை விசாரித்த நீதிபதியிடம் வணிகன், “ அய்யா…. தோல் பையில் நான் 200 பொற்காசுகளை வைத்திருந்தேன்.தொலைந்துவிட்ட தோல் பையை இந்த பிச்சைக்காரன் எடுத்துக் கொடுத்தான்.
ஆனால் இப்போது 100 பொற்காசுகள்தான் உள்ளது மீதி 100 பொற்காசுகளை பிச்சைக்காரன்தான் எடுத்திருக்கவேண்டும்.100 காசுகளை எடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல் இப்போது வெகுமதியும் கேட்கிறான்” என்றான்.

வழக்கை விசாரித்த நீதிபதியின் தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும்?????????????????????????????

அக்னி
11-03-2009, 03:09 PM
வணிகன் பொய் சொல்லுவதை நீதிபதி உணர்ந்துகொண்டு,
தோற்பையில் 200 பொற்காசுகள் இல்லாமல், 100 பொற்காசுகள் மட்டுமே இருப்பதனால் அது அவனது தோற்பை இல்லை எனவும்,
உரிமையானவர் இல்லாதபட்சத்தில் அது பிச்சைக்காரனுக்கே உரித்தாகும் எனவும் தீர்ப்புக் கூறியிருப்பார்.

மதி
11-03-2009, 04:26 PM
அதுக்குள்ள அக்னி முந்திக்கிட்டாரே...
வாழ்த்துகள் அண்ணோவ்..

aren
11-03-2009, 04:35 PM
அக்னி சொன்னதுதான் சரியென்று எனக்குப் படுகிறது.

தாமரை
11-03-2009, 05:01 PM
முதல்ல அந்தத் தோல்பை 200 தங்ககாசு கொள்ளுமா?

அது ஒரு தோல் பை. உள்ளே ஏதோ நிறைத்திருந்ததால் உப்பலாக இருந்தது.

samuthraselvam
12-03-2009, 05:15 AM
அக்னி, தாமரை அண்ணா அவர்கள் கூறியதே விடை என நினைக்கிறேன்.

அது ஒரு தோல் பை. உள்ளே ஏதோ நிறைத்திருந்ததால் உப்பலாக இருந்தது.

100 தங்கக் காசுகளுக்கே தோல்ப்பை உப்பலாக இருந்தால், 200 தங்கக் காசுகள் அந்தப் பையில் போட இடம் பத்தாது, எனவே வணிகன் கூறியது பொய் என நீதிபதி கண்டுபிடித்து பிச்சைக்காரனுக்கு சன்மானம் பெற்றுக்கொடுத்திருப்பார்.

ஆதி
12-03-2009, 10:27 AM
வணிகன் பொய் சொல்லுவதை நீதிபதி உணர்ந்துகொண்டு,
தோற்பையில் 200 பொற்காசுகள் இல்லாமல், 100 பொற்காசுகள் மட்டுமே இருப்பதனால் அது அவனது தோற்பை இல்லை எனவும்,
உரிமையானவர் இல்லாதபட்சத்தில் அது பிச்சைக்காரனுக்கே உரித்தாகும் எனவும் தீர்ப்புக் கூறியிருப்பார்.

சரியான பதில் அக்னி.. சின்ன வேறுபாடு உண்டு தீர்ப்பில்.. வாழ்த்துக்கள்..

-------------------

நீதிபதி பிச்சைகாரனின் பிரதிவாதத்தையும் கேட்பார்..

இருவரும் அவரவர் வாதத்தில் உறுதியாய் இருக்க..

நீங்கள் இருவரும் சொல்வதும் உண்மை என்றே எனக்கு படுகிறது..

வணிகனே, இந்த பை உன்னுடையதல்ல, நீ 200 பொற்காசுகளோடு தொலைந்த உன் பையை தேடிக்கொள்க..

பிச்சைக்காரனை பார்த்து, 100 பொற்காசுகளோடு இந்த பையை தொலைத்தவரை கண்டறியும் வரை நீயே இந்த பையை வைத்து கொள்..

என்றுரைப்பார்..

pgk53
13-03-2009, 03:57 PM
வணிகன் பொய் சொல்லுவதை நீதிபதி உணர்ந்துகொண்டு,
தோற்பையில் 200 பொற்காசுகள் இல்லாமல், 100 பொற்காசுகள் மட்டுமே இருப்பதனால் அது அவனது தோற்பை இல்லை எனவும்,
உரிமையானவர் இல்லாதபட்சத்தில் அது பிச்சைக்காரனுக்கே உரித்தாகும் எனவும் தீர்ப்புக் கூறியிருப்பார்.

அக்னி அவர்களே.....வாழ்த்துக்கள்.
அருமையான சரியான பதிலைக் கூறியுள்ளீர்கள்..
அடுத்த புதிர் நாளை.

pgk53
14-03-2009, 02:22 PM
புதிர் எண்-324

அது ஒரு அரசினர் ஆரம்பப் பள்ளி.

அன்று பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தகுதியையும் திறனையும் சோதிப்பதற்காக மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வுக்காக வந்திருந்தார்.

சில வகுப்புகளுக்குச் சென்றார்.
அதில் ஆசிரியரை மாணவர்களிடம் பாட சம்பந்தமான கேள்விகளைக் கேட்கச் சொன்னார்.
ஒரு சில மாணவர்கள் மட்டுமே தெரியும் என்று கை தூக்கினார்கள்.

அதனால் அதிகாரிக்கு திருப்தி ஏற்படவில்லை.

அடுத்தாற்போல் அந்த அதிகாரி 4வது வகுப்பில் நுழைந்தார்.ஆசிரியரைப் பார்த்து பாடம் சம்பந்தமாக கேள்விகளைக் கேட்கச் சொன்னார்.

ஆசிரியரும் கடினமான கேள்விகளைக் கேட்டார்.
உடனே வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் கைகளைத் தூக்கினார்கள்.

ஆசிரியர் அதில் குறிப்பிட்ட ஒரு மாணவனிடம் மட்டும் கேட்காமல் பரவலாக சிலரிடம் கேட்டார்.
அனைவருமே சரியாகப் பதில் கூறினார்கள்.

ஆய்வாளர் , ஆசிரியரின் செயல்திறனில் மிகவும் திருப்தியடைந்து அந்த ஆசிரியருக்கு சம்பள அதிகரிப்புக்கான சிபாரிசு எழுதிவைத்தார்.

அன்பர்களே அந்த ஆசிரியரின் வகுப்பில் மட்டும் கடினமான கேள்விக்குக் கூட அனைவரும் எப்படி கைகளைத் தூக்கினார்கள்.?????????????

samuthraselvam
15-03-2009, 04:47 AM
ஆசிரியர் கேட்ட கேள்வி: இரு கைகளாலும் கண்களை மூடிக்கொண்டால் புத்தகத்திலுள்ள எழுத்துக்களைப் படிக்க முடியுமா?
உடனே மாணவர்கள் அனைவரும் தெரியாது என்பதால் கைகளை தூக்கி இருப்பார்கள்.

pgk53
15-03-2009, 10:48 AM
பாடம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்டார் என்று குறிப்பிட்டிருந்தேன் நண்பரே.

விகடன்
15-03-2009, 12:06 PM
புதிர் எண்-324

அன்பர்களே அந்த ஆசிரியரின் வகுப்பில் மட்டும் கடினமான கேள்விக்குக் கூட அனைவரும் எப்படி கைகளைத் தூக்கினார்கள்.?????????????

அக்கடினமான கேள்விக்கு பதில் அனைவரிற்கும் தெரிந்திருந்தமையால் அனைவரும் கை தூக்கினார்கள். :D

pgk53
15-03-2009, 03:20 PM
அக்கடினமான கேள்விக்கு பதில் அனைவரிற்கும் தெரிந்திருந்தமையால் அனைவரும் கை தூக்கினார்கள். :D

விராடன் அவர்களே......கடினமான ஒரு கேள்வி மட்டுமல்ல...கேள்விகள் என்று குறிப்பிட்டுள்ளேன். கவனிக்கவும்.
மேலும் கடினமான கேள்விகளுக்கு பதில் தெரிந்த மாணவர்கள் குறைவாகவே இருப்பார்கள்.

அக்னி
15-03-2009, 06:48 PM
ஆசிரியரின் கட்டளை:
நான் எந்தக் கேள்வியைக் கேட்டாலும், விடை தெரிந்தாலோ தெரியாவிட்டாலோ. அனைவரும் கைகளை உயர்த்த வேண்டும்.

ஆனால், ஆசிரியருக்குத்தான் தெரியுமே, நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களை அல்லது பதிலளிக்கக்கூடிய மாணவர்களை.

எல்லோரும் கைகளை உயர்த்தினாலும், ஆசிரியர் கேள்வியைக் கேட்டது,
விடை சொல்லக்கூடிய மாணவர்களிடம் மட்டுமே.

ஆசிரியர் அதில் குறிப்பிட்ட ஒரு மாணவனிடம் மட்டும் கேட்காமல் பரவலாக சிலரிடம் கேட்டார்.
அனைவருமே சரியாகப் பதில் கூறினார்கள்.

அந்தச் சிலர்கள், நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள்.

ஒருவேளை, ஆய்வாளரினால் அனைத்து மாணவர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால்,
ஆசிரியரின் வேலை கிழிந்திருக்கலாம்.

aren
16-03-2009, 02:50 AM
கேள்வி ஆம் அல்லது இல்லை என்ற நிலையில் இருக்கும் கேள்விகாளக கேட்டிருக்கலாம். ஆம் என்ற பதிலே அனைத்திற்கும் இருக்கும்படி முன்னேற்பாடாக செய்திருக்கலாம்.

aren
16-03-2009, 02:52 AM
அப்படி கேள்வி கேட்காத மாணவந்தான் வகுப்பில் முதன்மையானவன். அவனிடம் மாவட்ட அதிகாரி என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்பவனாக இருப்பான்.

pgk53
16-03-2009, 10:53 AM
ஆசிரியரின் கட்டளை:
நான் எந்தக் கேள்வியைக் கேட்டாலும், விடை தெரிந்தாலோ தெரியாவிட்டாலோ. அனைவரும் கைகளை உயர்த்த வேண்டும்.

ஆனால், ஆசிரியருக்குத்தான் தெரியுமே, நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களை அல்லது பதிலளிக்கக்கூடிய மாணவர்களை.

எல்லோரும் கைகளை உயர்த்தினாலும், ஆசிரியர் கேள்வியைக் கேட்டது,
விடை சொல்லக்கூடிய மாணவர்களிடம் மட்டுமே.

அந்தச் சிலர்கள், நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள்.

ஒருவேளை, ஆய்வாளரினால் அனைத்து மாணவர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால்,
ஆசிரியரின் வேலை கிழிந்திருக்கலாம்.

நண்பர் அக்னி அவர்களே பாதிக்கினற்றை சரியாகத் தாண்டிவிட்டீர்கள்.மீதியில்தான் இருக்கிறது சூட்சுமம்.

பரஞ்சோதி
16-03-2009, 11:05 AM
வணக்கம் அண்ணா,

எப்படி இருக்கீங்க, வழக்கம் போல் தனிமடல் போடமுடியாத நிலையில் தான் வைச்சிருக்கீங்களா?

நானும் இந்த ஆட்டத்தில் கலந்துக்கலாமா?

- முன்னாள் மாணவன்

அக்னி
16-03-2009, 11:27 AM
நண்பர் அக்னி அவர்களே பாதிக்கினற்றை சரியாகத் தாண்டிவிட்டீர்கள்.மீதியில்தான் இருக்கிறது சூட்சுமம்.
விடை தெரிந்தவர்கள் வலது கையை உயர்த்த வேண்டும்.
விடை தெரியாதவர்கள் இடது கையை உயர்த்த வேண்டும்.
(அல்லது மாற்றி...)
ஆக, ஆசிரியருக்கு தெரிந்துவிடும், யாருக்கு விடை தெரியும் என்று...

சரியா அண்ணா...

சிவா.ஜி
16-03-2009, 12:04 PM
அட அக்னி முழு கிணறையும் தாண்டிவிட்டது போல தெரிகிறதே....

பரஞ்சோதி
16-03-2009, 01:00 PM
சபாஷ் அக்னி

மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க, பாராட்டுகள்.

அக்னி
16-03-2009, 01:10 PM
நன்றிகள் அண்ணல்களே...

இனி நம்ம வாத்தியாரு வந்துதான் சொல்லணும் பாஸா பெயிலா என்று...

pgk53
18-03-2009, 03:17 AM
நன்றிகள் அண்ணல்களே...

இனி நம்ம வாத்தியாரு வந்துதான் சொல்லணும் பாஸா பெயிலா என்று...

பொறுப்பாளர் அக்னி அவர்களே.............தாங்கள் பாஸ் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா??????????

மிகச் சரியான விடை.
வாழ்த்துக்கள்.

நாளை அடுத்த புதிர்.

பா.ராஜேஷ்
18-03-2009, 07:39 AM
நண்பர் அக்னிக்கு வாழ்த்துக்கள்.

pgk53
19-03-2009, 03:08 PM
புதிர் எண்-325
சொர்க்கத்திலும் நரகத்திலும் இருந்தவர்களுக்கு மற்ற வசதிகள் எப்படியிருந்தாலும் ஒன்றே ஒன்று மட்டும் பொதுவானதாக இருந்தது.
அதாவது மற்ற சமயங்களில் கைகள் நன்றாக மடங்கி எந்த காரியத்தையும் செய்யமுடியும். ஆனால் சாப்பிடும்போது மட்டும் முழங்கையிலிருந்து கைகளை மடக்க இயலாது.

அதனால் நரகத்தில் இருந்தவர்கள் சாப்பிடும்போது உணவை எடுத்து வாய்க்குள் போட இயலாமல் விலங்குகள் போல நேரடியாக உணவுத் தட்டில் இருந்து வாயால் கவ்வி எடுத்து உண்டு வந்தார்கள்.
அதனால் சரியாகச் சாப்பிட இயலாமல் நாளுக்கு நாள் மெலிந்து துன்பம் அடைந்துகொண்டிருந்தார்கள்.

ஆனால் சொர்க்கத்தில் இருந்தவர்கள் நாளுக்குநாள் மேனி பொலிவோடு புன்முறுவலுடன் இருந்தார்கள்.

சாப்பிடும்போது கைகள் மடங்காதது இருபாலருக்கும் பொதுவானதாக இருந்தும் சொர்க்கத்தில் இருந்தவர்கள் மட்டும் அதனால் பாதிக்கப்படாமல் இருந்தது எப்படி??????????????.

கூறுங்கள் நண்பர்களே??????????????????

ஆதி
19-03-2009, 03:15 PM
மடக்க இயலாததால் தானள்ளிதானே சாப்பிட இயலாது.. மற்றவர்க்கு ஊட்டலாம் அல்லவா..

சொர்க்கத்தில் இருந்தவர்கள் அதைதான் செய்திருப்பார்கள்..

இந்த மனசு இருப்பதால்தானே அவங்க சொற்கத்தில் இருக்காங்க..

அறிஞர்
19-03-2009, 03:16 PM
இந்த பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.... சும்மா குத்து மதிப்பா ஒரு பதில்..
-----------
சாப்பிட தனியாக நேரம் இல்லாமல்...
வேலை செய்யும்பொழுது சாப்பிட்டுக் கொண்டே வேலை செய்தனரா..

அறிஞர்
19-03-2009, 03:17 PM
மடக்க இயலாததால் தான் அள்ளிதானே சாப்பிட இயலாது.. மற்றவர்க்கு ஊட்டலாம் அல்லவா..

சொர்க்கத்தில் இருந்தவர்கள் அதைதான் செய்திருப்பார்கள்..

இந்த மனசு இருப்பதால்தானே அவங்க சொற்கத்தில் இருக்காங்க.. அடுத்தவர்களுக்கு ஊட்டிவிட்டு.. அனைவரும் இன்புற்றனரா..
அருமையான பதில் ஆதி..

மன்மதன்
19-03-2009, 04:15 PM
மடக்க இயலாததால் தானள்ளிதானே சாப்பிட இயலாது.. மற்றவர்க்கு ஊட்டலாம் அல்லவா..

சொர்க்கத்தில் இருந்தவர்கள் அதைதான் செய்திருப்பார்கள்..

இந்த மனசு இருப்பதால்தானே அவங்க சொற்கத்தில் இருக்காங்க..

சரியான விடை என்று நினைக்கிறேன்..பாராட்டுகள் ஆதி...

samuthraselvam
20-03-2009, 05:31 AM
ஆம் ஆதி அவர்களின் பதிலே மிகச் சரியானது என்று நானும் நினைக்கிறேன்.

பா.ராஜேஷ்
20-03-2009, 06:34 AM
வாழ்த்துக்கள் ஆதி! உங்கள் பதிலே சரியானது

பரஞ்சோதி
21-03-2009, 08:49 PM
சரியான விடை தம்பி. பாராட்டுகள்.

அடுத்த போட்டியில் நான் வெல்ல காத்திருக்கிறேன். புதிர் கொடுங்க அண்ணா.

pgk53
22-03-2009, 02:32 AM
மடக்க இயலாததால் தானள்ளிதானே சாப்பிட இயலாது.. மற்றவர்க்கு ஊட்டலாம் அல்லவா..

சொர்க்கத்தில் இருந்தவர்கள் அதைதான் செய்திருப்பார்கள்..

இந்த மனசு இருப்பதால்தானே அவங்க சொற்கத்தில் இருக்காங்க..

சபாஷ் ஆதி அவர்களே அற்புதமான பதில்.
வாழ்த்துகிறேன்.

வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
22-03-2009, 02:36 AM
புதிர் எண்-326

பீர்பலுடைய புத்தி சாதுர்யத்தை கேள்விப்பட்ட பக்கத்து நாட்டு அரசன் அவரை விருந்துக்கு அழைத்திருந்தான்.

பீர்பலும் சக்கரவர்த்தி அக்பரின் அனுமதியைப் பெற்று பக்கத்து நாட்டுக்கு விருந்தினராகச் சென்றிருந்தார்.

ஐந்து நாட்கள் விருந்தினராகக் கழித்த பீர்பல் தாய் நாட்டுக்குப் புறப்பட ஆயத்தமானார்.

அப்போது அந்த அரசனது சபையில் இருந்த அமைச்சர்கள் பீர்பலைப் பார்த்து, “ பீர்பல் அவர்களே…..எங்கள் அரசனைப் பற்றி தங்கள் கருத்து என்ன?தங்களது அரசனையும் எங்கள் அரசனையும் ஒப்பிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.” என்று கூறினார்கள்.

பீர்பல் கொஞ்சமும் தாமதியாமல் புன்முறுவலுடன், “ தங்களது அரசர் பெளர்ணமி நிலவைப் போன்றவர். எனது அரசனோ பிறை நிலவைப் போன்றவர்” என்றார்..

அந்த நாட்டு அரசனும் மற்றவர்களும், அரசன் பெளர்ணமி நிலவைப் போன்றவர் என்று கூறியதில் அளவில்லாத மகிழ்வடைந்தார்கள். சிறப்பான பல பரிசுகளை பீர்பலுக்கு அளித்து அனுப்பிவைத்தார்கள்.

பீர்பல் தாய்நாடு திரும்பியதும் அரசபைக்கு வந்தார்.
அக்பர் சக்கரவர்த்தியோ பீர்பலை மகிழ்வுடன் வரவேற்கவில்லை. மாறாகக் கடும் கோபத்தை முகத்தில் காட்டினார்.

பீர்பலுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ அரசே… ஏன் என்மேல் கோபமாக இருக்கிறீர்கள்? “ என்று பணிவுடன் கேட்டார்.

அதற்கு அக்பர்” ராஜ துரோகியே…..நீ எந்த முகத்தை வைத்துக்கொண்டு என்னிடம் வந்தாய்”? என்றவர், “ பக்கத்து நாட்டு அரசனை பூரண நிலவோடு ஒப்பிட்டு என்னை பிறை நிலவு என்று கூறியதால் ராஜ துரோகியாக உன்னை நினைத்து உனக்கு மரண தண்டனைதான் கொடுக்கவேண்டும். இருப்பினும் இத்தனை நாள் உனது சேவையை நினைத்து அந்த தண்டனை கொடுக்காமல் உன்னை நாடு கடத்துகிறேன்” என்றார்.

கொஞ்சம் கூட கவலையோ, பயமோ இல்லாமல் பீர்பல் , அரசருக்கு சில வார்த்தைகளைக் கூறினார்.

அதைக் கேட்ட அரசன் பீர்பலை அழைத்து கட்டிப்பிடித்து மகிழ்ந்து பீர்பலுக்கு சிறப்பான பரிசுகளை வாரி வழங்கினார்.

நண்பர்களே…..அக்பர் சக்கரவர்த்தியின் கோபத்தை நீக்கி குளிர்விக்கும் வகையில் என்னதான் கூறினார்,?????????????

அறிஞர்
22-03-2009, 03:10 AM
முன்பு எங்கோ கேட்டது..
------------------
பிறை நிலா - வளரும்

பீர்பால் "அரசே தங்கள் அரசாட்சி (ராஜ்யம்) வளரும் என்பதை.. பிறை நிலா என குறிப்பிட்டேன்".

பா.ராஜேஷ்
22-03-2009, 05:56 AM
பரிசுகளை அள்ளி வழங்குவதிலும் நாட்டை வளர்ப்பதிலும் பிறை நிலா போன்றவர் அக்பர். அதாவது நாடு வளர்ந்து கொண்டே இருப்பதையும், பக்கத்து நாட்டு அரசன் தேய்ந்து கொண்டே போவதையும் மறைமுகமாக கூறி இருக்கிறார் பீர்பால். இதை கேட்டு மன்னர் மகிழ்ந்து பல பரிசுகளை அள்ளி கொடுத்திருக்கிறார்.

samuthraselvam
23-03-2009, 09:43 AM
முழு நிலவின் அடுத்த கட்டம், தேய்வது தான்.
ஆனால் பிறை நிலவின் அடுத்த கட்டம் வளர்வது தான்.
இதை கூறி "தாங்களுக்கு என்றுமே வளர்ச்சி மட்டும் தான், எனவே தான், தங்களை பிறை நிலவுடன் ஒப்பிட்டேன்" என பீர்பால் கூறிஇருப்பார்.

pgk53
23-03-2009, 04:49 PM
முன்பு எங்கோ கேட்டது..
------------------
பிறை நிலா - வளரும்

பீர்பால் "அரசே தங்கள் அரசாட்சி (ராஜ்யம்) வளரும் என்பதை.. பிறை நிலா என குறிப்பிட்டேன்".

அறிஞர் அவர்கள் அடி எடுத்துக் கொடுக்க
அன்பர்கள் ராஜேஷும் சமுத்திரச்செல்வனும்
அதை விளக்கமாகக் கூற அருமைதான்போங்கள்.
சரியான விடை....அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நாளை அடுத்த புதிர்.

அடுத்த புதிரையாவது தம்பி பரஞ்சோதி அவர்கள் கைப்பற்றுவாரா???????பார்க்கலாம்

பரஞ்சோதி
23-03-2009, 06:43 PM
ஆஹா!

நன்றி அண்ணா.

உங்களிடம் முன்பு பலமுறை பாராட்டு பத்திரங்கள் வாங்கி குவித்தவன் என்பதை நினைவில் வைச்சிருக்கீங்க.

- மாணவன்

pgk53
25-03-2009, 12:47 PM
புதிர் எண்-327

ராமுவுக்கு ஒரு முக்கிய வேலை ஒன்று இருந்ததால் பாண்டியன் துரித ரயிலில் சென்னை சென்று எக்மோர் ரயில் நிலையத்தில் இறங்கினான்.

கிண்டி தொழுற்பேட்டைக்குச் செல்லவேண்டும் என்று வாடகைக் கார் ஓட்டுனரிடம் கூறிவிட்டு காரில் ஏறி அமர்ந்தான்.

ராமுவுக்கு ஓட்டுனரிடம் தொணதொணவென்று எதாவது பேசும் வழக்கம் எப்போதும் இருந்தது.

அதனால் சென்னையைப் பற்றியும் சென்னை போக்குவரத்து, விலைவாசி என்று ஆரம்பித்து அரசியலை அலச ஆரம்பித்தான்.

ஓட்டுனருக்கு அது பிடிக்கவில்லை.ராமுவின் தொணதொணப்பான பேச்சினால் சாலையில் கவனம் செலுத்தி ஓட்டுவதும் சிரமம் ஆக இருந்தது.

அதனால் ஓட்டுனர் ராமுவைப் பார்த்து, “ ஐயா…ஏதோ முக்கியமான விஷயம் குறித்துப் பேசிக்கொண்டு வருகிறீர்கள் என்று தோன்றுகிறது.
நான் செவிடன். கேட்கும் கருவி இல்லாமல் நான் ஒலியை உணர இயலாது. காலையில் வேலைக்கு வரும்போது வீட்டில் இருந்து கேட்டும் கருவியை எடுத்துவர மறந்துவிட்டேன்” என்றான்.

ராமு கப் சிப் என்று வாயை மூடிக்கொண்டான்.
கிண்டி வந்தடைந்தான்.

ஓட்டுனருக்கு பேசிய தொகையைக் கொடுத்துவிட்டு தான் செல்லவேண்டிய அலுவலகத்தை அடைந்தபிறகுதான் ஓட்டுனர் தன்னிடம் காது கேட்காது,கேட்கும் கருவியை எடுத்துவர மறந்ததாக பொய் கூறினான் என்பதை ஊனர்ந்தான்.

நண்பர்களே ராமு எதை வைத்து ஓட்டுனர் பொய் கூறியதாக உணர்ந்தான்???????????????

மன்மதன்
25-03-2009, 02:15 PM
புதிர் எண்-327

அதனால் சென்னையைப் பற்றியும் சென்னை போக்குவரத்து, விலைவாசி என்று ஆரம்பித்து அரசியலை அலச ஆரம்பித்தான்.

ஓட்டுனருக்கு அது பிடிக்கவில்லை.............

அதனால் ஓட்டுனர் ராமுவைப் பார்த்து, “ ஐயா…ஏதோ முக்கியமான விஷயம் குறித்துப் பேசிக்கொண்டு வருகிறீர்கள்

காரணம் இதுவாக இருக்கலாம்.

”முதலில் சென்னையை பற்றி பேசும் போது ஒன்றும்
சொல்லாதவன் அரசியல் பற்றி பேசும் போது
தனக்கு காது கேட்காது என்று சொன்னது..அதுவும் ஏதோ முக்கியமான விஷயம் பேசுறீங்கன்னு சொன்னது “

அன்புரசிகன்
25-03-2009, 02:21 PM
புதிர் எண்-327

.

கிண்டி தொழுற்பேட்டைக்குச் செல்லவேண்டும் என்று வாடகைக் கார் ஓட்டுனரிடம் கூறிவிட்டு காரில் ஏறி அமர்ந்தான்.

---------------
அதனால் ஓட்டுனர் ராமுவைப் பார்த்து, “ ஐயா…ஏதோ முக்கியமான விஷயம் குறித்துப் பேசிக்கொண்டு வருகிறீர்கள் என்று தோன்றுகிறது.
நான் செவிடன். கேட்கும் கருவி இல்லாமல் நான் ஒலியை உணர இயலாது. காலையில் வேலைக்கு வரும்போது வீட்டில் இருந்து கேட்டும் கருவியை எடுத்துவர மறந்துவிட்டேன்” என்றான்.

ராமு கப் சிப் என்று வாயை மூடிக்கொண்டான்.
கிண்டி வந்தடைந்தான்.

கிண்டி போகவேண்டும் என்றது மட்டும் எவ்வாறு விளங்கீச்சாம்..............?:mini023:

ஆனால் ஒரு லொஜிக் இருக்கு. காது கேளாதவர்கள் உங்கள் வாய் அசைவுகளை பார்த்து புரிந்துகொள்ளும் திறமை படைத்தவர்களாகவும் இருப்பர். இப்படி பலரை ஊரில் கண்டிருக்கிறேன். :icon_p:

அறிஞர்
25-03-2009, 02:21 PM
ஓட்டுனருக்கு பேசிய தொகையைக் கொடுத்துவிட்டு தான் செல்லவேண்டிய அலுவலகத்தை அடைந்தபிறகுதான் ஓட்டுனர் தன்னிடம் காது கேட்காது,கேட்கும் கருவியை எடுத்துவர மறந்ததாக பொய் கூறினான் என்பதை ஊனர்ந்தான்.

நண்பர்களே ராமு எதை வைத்து ஓட்டுனர் பொய் கூறியதாக உணர்ந்தான்???????????????
வாகனத்தில் ஏறும்பொழுது, இருவரும் தொகை பேசி இருப்பார்கள். அப்பொழுது பேசியவனுக்கு எப்படி காது கேட்காமல் இருந்திருக்கும்.

இறங்கினவுடன் பேசின தொகையை கொடுத்துள்ளார்.

இதன் மூலம், ராமு டிரைவர் பொய் கூறினான் என அறிந்துகொண்டான்

அன்புரசிகன்
25-03-2009, 02:23 PM
காரணம் இதுவாக இருக்கலாம்.

”முதலில் சென்னையை பற்றி பேசும் போது ஒன்றும்
சொல்லாதவன் அரசியல் பற்றி பேசும் போது
தனக்கு காது கேட்காது என்று சொன்னது..அதுவும் ஏதோ முக்கியமான விஷயம் பேசுறீங்கன்னு சொன்னது “

அது சும்மாவும் சொல்லியிருக்கலாம். பக்கத்தில் வருபவர் மாடு இரை மீட்பது போல் வாயசைத்துக்கொண்டு வந்தால் சும்மா சொல்ல அது சரியாக பொருந்தியிருக்கலாம் தானே.... :D இதற்கு சூப்பரான உதாரணம் நம் நண்பர்கள் பட்டாளங்கள் சொல்வாங்க... இங்க சொல்ல.................. :D

மன்மதன்
25-03-2009, 02:26 PM
கிண்டி போகவேண்டும் என்றது மட்டும் எவ்வாறு விளங்கீச்சாம்..............?:mini023:

அட ..ஆமால்ல..:D:D கிண்டி கிண்டி சொல்லி இருப்பானோ...:rolleyes::rolleyes:

பா.ராஜேஷ்
25-03-2009, 02:34 PM
அறிஞர் கூற்றே சரி என படுகிறது!

பரஞ்சோதி
25-03-2009, 05:55 PM
அறிஞரின் பதில் சரியானதாக தெரிகிறது, பாராட்டுகள் தோழரே!

lenram80
25-03-2009, 08:06 PM
முன்பு எங்கோ கேட்டது..
------------------
பிறை நிலா - வளரும்

பீர்பால் "அரசே தங்கள் அரசாட்சி (ராஜ்யம்) வளரும் என்பதை.. பிறை நிலா என குறிப்பிட்டேன்".

அறிஞரின் இப்போதைய கூற்று, ஔவையாரின் அப்போதைய கூற்று.
அவர் தான் அதிய மான், தொண்டை மான் பற்றி இப்படி பிறை நிலா, முழு நிலா என்று வஞ்சப் புகழ்ச்சியில் பாடினார்.

எனக்கு ஒரு சந்தேகம்?
எப்போது பீர்பால் ஔவையாரின் நூலைப் படித்தார்? :)

அறிஞர்
25-03-2009, 08:22 PM
அறிஞரின் இப்போதைய கூற்று, ஔவையாரின் அப்போதைய கூற்று.
அவர் தான் அதிய மான், தொண்டை மான் பற்றி இப்படி பிறை நிலா, முழு நிலா என்று வஞ்சப் புகழ்ச்சியில் பாடினார்.

எனக்கு ஒரு சந்தேகம்?
எப்போது பீர்பால் ஔவையாரின் நூலைப் படித்தார்? :) நம் வசதிக்கேற்றாற் போல் பெயர்களை, இடங்களை.. மாற்றிக் கொள்ளவேண்டியதுதான்.:D:D:D:D

ராமு உண்மையிலே ஆட்டோவில போனாரான்னு எல்லாம் கேட்கப்படாது... :eek::eek::eek::eek:

aren
26-03-2009, 05:09 AM
வாடகைக்காரில் மீட்டர் இருந்திருந்தால் அதில் இருக்கும் தொகையை கொடுத்திருபார் ராமு. ஆகையால் அது சரியான பதிலாக இருக்கமுடியாது என்று நினைக்கிறேன்.

கிண்டி செல்லவேண்டும் என்று வெறும் வார்த்தையால் ராமு சொன்னதை சரியாக கேட்டதால்தான் அவனால் கிண்டி வரமுடிந்தது. இதனால் ராமுவிடன் டிரைவர் பொய் சொல்லியிருக்கிறான் என்பது தெளிவாகிறது.

அன்புரசிகன்
26-03-2009, 06:24 AM
வாடகைக்காரில் மீட்டர் இருந்திருந்தால் அதில் இருக்கும் தொகையை கொடுத்திருபார் ராமு. ஆகையால் அது சரியான பதிலாக இருக்கமுடியாது என்று நினைக்கிறேன்.

அங்கு மீட்டரைப்பற்றி கதையில்லை. காரணம் அவர்கள் பேசி தான் முடிவெடுத்திருக்கிறார்கள்...

இதில் இரண்டு காரணிகள் விடையை கொணரும்....

1.
கிண்டி தொழுற்பேட்டைக்குச் செல்லவேண்டும் என்று வாடகைக் கார் ஓட்டுனரிடம் கூறிவிட்டு காரில் ஏறி அமர்ந்தான்
---
கிண்டி வந்தடைந்தான்.

2.
ஓட்டுனருக்கு பேசிய தொகையைக் கொடுத்துவிட்டு தான் செல்லவேண்டிய அலுவலகத்தை அடைந்தபிறகுதான்

பாரதி
26-03-2009, 06:46 AM
காது கேளாதவர்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுமோ...?

அன்புரசிகன்
26-03-2009, 06:50 AM
காது கேளாதவர்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுமோ...?

எடுத்ததற்கப்புறமா காதுகேட்க்காமல் போயிருந்தா..............????? :eek:

பாரதி
26-03-2009, 06:55 AM
எடுத்ததற்கப்புறமா காதுகேட்காமல் போயிருந்தா..............????? :eek:

காதை எடுத்துட்டா அப்புறம் எப்படி காது இருக்கும்... கேட்கும்?;)

மன்மதன்
26-03-2009, 09:17 AM
காதை எடுத்துட்டா அப்புறம் எப்படி காது இருக்கும்... கேட்கும்?;)

வாடகை காது வைத்திருந்தா... கிடைக்காதா..??:rolleyes::rolleyes:

அக்னி
26-03-2009, 12:20 PM
இருக்காது ஒருவனுக்கு இருக்கத்தானே வேண்டும்... :rolleyes:
ஒருகால் இருக்காது போனால்,
இருக்கையில் இருப்பதும் கடினம்தான்...

சும்மா லூலூவாயிக்கு... :aetsch013:

விகடன்
26-03-2009, 12:59 PM
அறிஞர் கூற்று சரியாக இருக்கலாம்.
அதையும் பொய்ப்பிக்கும் வாதங்களும் உள்ளன.
உதாரணத்திற்கு கேட்க இயலாதவர்களில் பலர் எதிரில் தன்னைப்பார்த்து பேசுபவர்கள் என்ன பேசுகின்றனர் அன்பதனை அவர்களின் உதட்டு மற்றும் நாக்கு அசைவில் வைத்து பிடித்துவிடும் வல்லமை உடையவர்களாக இருப்பதுண்டு. வாடகைக்கு பேரம் பேசுகையில் கட்டாயம் முகம் பார்த்துத்தான் பேசியிருப்பார்கள். ஆகையால் உதட்டசைவை வைத்து, கேற்கும் திறனில்லாத ஒருவன் பேசியவற்றை அறிந்திருக முடியும்.

-------------------------------

எனது பதில்,
வாகனத்தில் அருகிலேயோ பின்னாலோ இருந்து வழ வழ என்று பேசிக்கொண்டு வருகையில் செவிப்புலன் திறணறவனால் எதுவும் கேட்டிருக்க முடியாது. ஏனெனில் ஓட்டுனர் வீதியைப் பார்த்துத்தான் ஓட்டியிருப்பான். அருகிலிருப்போர் என்னதான் பேசினாலும் அவரிற்கு ஒன்றுமே தெரிந்திருக்காது. இப்படியிருக்கையில் ஏன் தான் பேசிக்கொண்டிருக்கையில் சம்பந்தமின்றி தனக்கு கேற்கும் திறனில்லை என்று சொல்லவேண்டும்?. இந்த ஓர் துணுக்கே போதும் அவன் பொய் சொல்லியிருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள.

அன்புரசிகன்
26-03-2009, 01:41 PM

ஏனையா.......... நீங்கள் வாகனம் ஓட்டும் போது அக்கம் பக்கம் பார்த்ததில்லையா??? அதை தாங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளதே................ :sprachlos020:

விகடன்
26-03-2009, 02:11 PM
ஏனையா.......... நீங்கள் வாகனம் ஓட்டும் போது அக்கம் பக்கம் பார்த்ததில்லையா??? அதை தாங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளதே................ :sprachlos020:
விராடன் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் வீதி விதிமுறை என்னவோ வீதியை மட்டும் பார்த்து ஓடச் சொல்லித்தானே... அன்பு :D

அன்புரசிகன்
26-03-2009, 02:15 PM
விராடன் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் வீதி விதிமுறை என்னவோ வீதியை மட்டும் பார்த்து ஓடச் சொல்லித்தானே... அன்பு :D
இந்த திரியில் சில விதிவிலக்குகளையும் கருத்தில் கொண்டு தானே பதில் சொல்கிறார்கள்............ :D

பாரதி
26-03-2009, 02:18 PM

வாங்க விராடன். நீங்க விதிவிலக்குதான் .

காரின் பின்சக்கர டயர் பஞ்சர் ஆனதையும் விட காரோட்டுவதிலே கவனத்தை செலுத்துபவர்களும் உண்டு என்பதை நீங்கள் அறிந்ததுதானே அன்பு?:mini023::icon_ush:

விகடன்
26-03-2009, 02:41 PM
:grin::grin:

pgk53
27-03-2009, 04:02 AM
சபாஷ்......சூடான வாக்குவாதம் போய்க்கொண்டிருக்கின்றது.

பாரதி
27-03-2009, 05:26 AM
புதிருக்கான விடையை சொல்லுங்க பி.ஜி.கே.

pgk53
28-03-2009, 06:35 PM
கிண்டி போகவேண்டும் என்றது மட்டும் எவ்வாறு விளங்கீச்சாம்...என்று கேள்விக் கணையை முதலில் வீசிய அன்புரசிகன்

வாகனத்தில் ஏறும்பொழுது, இருவரும் தொகை பேசி இருப்பார்கள். அப்பொழுது பேசியவனுக்கு எப்படி காது கேட்காமல் இருந்திருக்கும்.என்று அடுத்த ஒரு அருமையான கேள்வியை கேட்ட அறிஞர்
கிண்டி செல்லவேண்டும் என்று வெறும் வார்த்தையால் ராமு சொன்னதை சரியாக கேட்டதால்தான் அவனால் கிண்டி வரமுடிந்தது. இதனால் ராமுவிடம் டிரைவர் பொய் சொல்லியிருக்கிறான் என்பது தெளிவாகிறது…… என்று ஆணித்தரமாக கேட்டிருக்கும் ஆரென்

இப்படி அனைவருமே புதிருக்கான விடையை சரியாகச் சொல்லிவிட்டார்கள்.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
28-03-2009, 06:38 PM
புதிர் எண்-328

அக்பர் சக்கரவர்த்திக்கு அன்று காலை முதலே மனநிலை அமைதியாக இன்றி எரிச்சலுடன் இருந்தார். சரி கொஞ்சநேரம் அரண்மனை தோட்டத்திலே உலவினால் மனநிலை அமைதியாகும் என்று நினைத்து அக்பர் தோட்டத்தில் உலவ ஆரம்பித்தார்.

அங்கே நடக்கும்போது ஒரு கல் இடறி காலில் நகம் பெயர்ந்து ரத்தம் வந்தது. அதனால் அக்பர் மேலும் சினம் கொண்டார்.

கொஞ்சமும் ஆலோசிக்காமல் காவலாளிகளை அழைத்து அரண்மனை தோட்டக்காரனை இழுத்து வரச் செய்து அவனுக்கு தூக்கு தண்டனை அளித்தார்.

தோட்டக்காரன் அழுது புலம்பினான். எந்த பயனும் இல்லை. அக்பர் அவனது அழுகைக்குச் செவி சாய்க்கவில்லை.

நடந்ததையெல்லாம் பீர்பல் கேள்விப்பட்டார்.தோட்டக்காரனை நினைத்து மிகவும் வேதனை கொண்டார். அவனுக்கு உதவி செய்யலாம் என்று முடிவு செய்த பீர்பல் அவனை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலைக்குச் சென்றார்.

தோட்டக்காரனைப் பார்த்து தான் கூறுவதுபோல் தோட்டக்காரன் நடந்துகொண்டால் அவன் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்று பீர்பல் கூறினார்.

தோட்டக்காரன் சம்மதித்தான். பீர்பல் அவனுக்கு மறுநாள் நடந்துகொள்ளவேண்டிய விதத்தை விளக்கமாகக்ச் சொன்னார்.

மறுநாள் விடிந்தது. அன்றுதான் தோட்டக்காரனை தூக்கிலிடும் நாள்.
காவலர்கள் அவனை அரசவைக்கு அழைத்து வந்தார்கள்.

பொதுவாக ஒருவனைத் தூக்கிலிடும் முன்பாக அவனை அழைத்து அவனது கடைசி ஆசை என்ன என்று கேட்டு நியாயமான ஆசையாக இருந்தால் அதை அரசர் நிறைவேற்றிவைப்பார்.

அதனால் வழக்கம்போலவே அக்பர் அவனைப் பார்த்து அவனது கடைசி ஆசை என்ன என்று கேட்டார்.

அவன் மிகவும் பணிவாக “ அரசே,….நான் தங்கள் பக்கத்தில் வந்து நின்று அவையோர்களைப் பார்த்து நன்றி என்று ஒரே ஒரு வார்த்தை கூற தாங்கள் அனுமதிக்கவேண்டும். இதுதான் எனது கடைசி ஆசை “ என்றான்.

அக்பரும் சம்மதித்தார். காவலாளிகளை அவனை விடுவித்தார்கள். அரசரின் பக்கம் சென்ற தோட்டக்காரன் எதிர்பாராதவிதமாக அரசரது கிரீடத்தை தட்டிவிட்டான்.கிரீடம் கீழே விழுந்து உருண்டது.

அரசனது கிரீடத்தை தட்டிவிடுவது மிகக் கடுமையான குற்றம்.
அதனால் கடும் கோபம் கொண்டாலும், அக்பர் அவனை குழப்பமுடன் ஏறிட்டு நோக்கினார்.ஒருவனுக்கு இருமுறை தூக்குதண்டனை கொடுக்க இயலாது. அதனால் அவன் ஏன் இவ்வாறு நடந்துகொண்டான் என்று அக்பர் அறிந்துகொள்ள விரும்பினார்.

அவனைக் காரணம் கேட்டார்.
அவனோ பீர்பலைப் பார்த்தான்.

பீர்பல் எழுந்து அரசருக்கு அவன் நடந்துகொண்ட விதம் குறித்து விளக்கம் அளித்தார்.

பீர்பல் கூறிய விளக்கம் கேட்ட அக்பர் முதலில் திகைப்படைந்தபோதிலும் பிறகு சிரித்தபடி தோட்டக்காரனை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

அன்பு நண்பர்களே அக்பரது மனம் மாறும்படி பீர்பல் கூறிய விளக்கம் என்னவாக இருக்கும்.?????????????????????????

அக்னி
28-03-2009, 08:01 PM
பீர்பல் கூறிய விளக்கம்:
மேன்மை மிக்க அக்பர் சக்கரவர்த்தி அவர்கள், ஒரு கல் இடறியதற்காகத் தோட்டக்காரனுக்குத் தூக்கு வழங்கினார் என்ற அவப்பெயர் ஏற்படுவதைத் தவிர்க்கவே,தோட்டக்காரன் கிரீடத்தைத் தட்டிவிட்டுச், சக்கரவர்த்தியை அவமதித்தான். இது தண்டனைக்குரிய குற்றம் என்பதனால், இப்போது தூக்கு வழங்கினால், சக்கரவர்த்தி அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படாது.

விகடன்
28-03-2009, 08:36 PM
கையில் இடறுப்பட்ட கிரீடம் அணிந்திருந்ததோ மன்னன். நாட்டின் சட்டதிட்டத்திற்கு அனைவருமே சமமானவர்கள். ஆகையால் தோட்டக்காரனிற்கு இடறுப்பட்ட அந்த கிரீடம் குறித்த இடத்தில் வைத்திருந்த/ அணிந்திருந்தவர் மன்னர். இப்போது தோட்டக்காரன் நிலமையிலே மன்னருமிருக்கிறார். ஆகையால் மன்னரிற்கான தண்டனையும் மரண தண்டனையே.
இதை ஒப்புக்கொள்ள முடியாத மன்னன் தனது தவறையும் உணர்ந்து தோட்டக்காரணை விடுவித்திருப்பார். :D

அக்னி
28-03-2009, 08:41 PM
:D
இதெதற்கு... :confused:

தோட்டக்காரன் இடறவில்லையே. தட்டியல்லவா விட்டிருக்கின்றான்...

விகடன்
28-03-2009, 09:10 PM
இதெதற்கு... :confused:

தோட்டக்காரன் இடறவில்லையே. தட்டியல்லவா விட்டிருக்கின்றான்...

தோட்டக்காரன் தட்டிவிட்டது அரசனிற்கு தெரியாதல்லவா? அவன் வேணுமென்று செய்ததை அவனும் பீர்பலுந்தானே அறிவர்.

அன்புரசிகன்
29-03-2009, 03:14 AM
அக்பரும் சம்மதித்தார். காவலாளிகளை அவனை விடுவித்தார்கள். அரசரின் பக்கம் சென்ற தோட்டக்காரன் எதிர்பாராதவிதமாக அரசரது கிரீடத்தை தட்டிவிட்டான்.கிரீடம் கீழே விழுந்து உருண்டது.

அரசனது கிரீடத்தை தட்டிவிடுவது மிகக் கடுமையான குற்றம்.
அதனால் கடும் கோபம் கொண்டாலும், அக்பர் அவனை குழப்பமுடன் ஏறிட்டு நோக்கினார்.ஒருவனுக்கு இருமுறை தூக்குதண்டனை கொடுக்க இயலாது. அதனால் அவன் ஏன் இவ்வாறு நடந்துகொண்டான் என்று அக்பர் அறிந்துகொள்ள விரும்பினார்.

அவனைக் காரணம் கேட்டார்.
அவனோ பீர்பலைப் பார்த்தான்.

பீர்பல் எழுந்து அரசருக்கு அவன் நடந்துகொண்ட விதம் குறித்து விளக்கம் அளித்தார்.

பீர்பல் கூறிய விளக்கம் கேட்ட அக்பர் முதலில் திகைப்படைந்தபோதிலும் பிறகு சிரித்தபடி தோட்டக்காரனை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

அன்பு நண்பர்களே அக்பரது மனம் மாறும்படி பீர்பல் கூறிய விளக்கம் என்னவாக இருக்கும்.?????????????????????????

தோட்டக்காரன் தட்டிவிட்டது அரசனிற்கு தெரியாதல்லவா? அவன் வேணுமென்று செய்ததை அவனும் பீர்பலுந்தானே அறிவர்.

அவன் தட்டிவிட்டது அரசருக்கு தெரிந்ததாலேயே கோபம் கொண்டிருக்கிறார்.

விகடன்
29-03-2009, 05:58 AM
அரசனது கிரீடத்தை தட்டிவிடுவது மிகக் கடுமையான குற்றம்.
அதனால் கடும் கோபம் கொண்டாலும், அக்பர் அவனை குழப்பமுடன் ஏறிட்டு நோக்கினார்.

இல்லை அன்பு,
அவனால்த்தான் தட்டுப்பட்டது கிரீடம். இதை மட்டுமே மன்னர் அறிவார். ஆனால் அது தற்செயலாக நடந்ததா? இல்லை திட்டமிட்டுச் செய்ததா எனபதை அறிந்திருக்கவில்லை மன்னன்.

t_senthilvel
31-03-2009, 09:48 AM
:roll: :roll: :roll: :idea: :idea: :idea: :?: :?: :?: :!: :!: :!:

கொஞ்சம் யோசிக்கிறேன்
அன்புடன்
மணியா
முதலில் ஒரு ஸ்விச் போட்டு சில நிமிடம் கழித்து அதை ஆஃப் செய்துவிட்டு இரண்டாவது ஸ்விச் போடவும்.

இப்போது உள்ளே சென்று பார்க்கவும் லைட் எறிந்தால் அது இரண்டாவது ஸ்விச் இல்லை எனில் லைட் ஹீட்ஆ இருக்கானு செக் பண்ணவும் . ஹீட்ஆ இருந்த ஃபர்ஸ்ட் ஸ்வீச்

விகடன்
31-03-2009, 10:25 AM

வணக்கம் செந்தில்வேல்,
உங்களைப்பற்றிய அறிமுகத்தை "உங்களை அறிமுகம் செய்து கொள்க. " பகுதியில் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்.

இந்தப் புதிர்ப்பகுதி தற்போது பல புதிர்களை கடந்து வந்துவிட்டது. தாங்கள் பதிலளித்த புதிரிற்கான சரியான விடையை ஏற்கனவே தெரிவித்தாகிவிட்டது. இறுதியாக கேற்கப்பட்ட புதிரிற்கு முயற்சியுங்கள்.
அதில் வெற்றி காண என்னுடைய வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி
31-03-2009, 10:55 AM
பீர்பல் கூறிய விளக்கம்:
மேன்மை மிக்க அக்பர் சக்கரவர்த்தி அவர்கள், ஒரு கல் இடறியதற்காகத் தோட்டக்காரனுக்குத் தூக்கு வழங்கினார் என்ற அவப்பெயர் ஏற்படுவதைத் தவிர்க்கவே,தோட்டக்காரன் கிரீடத்தைத் தட்டிவிட்டுச், சக்கரவர்த்தியை அவமதித்தான். இது தண்டனைக்குரிய குற்றம் என்பதனால், இப்போது தூக்கு வழங்கினால், சக்கரவர்த்தி அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படாது.

இது தான் என்னுடைய பதிலும் கூட.

அதாவது சாதாரண கல் இடறி, அதுவும் சக்ரவர்த்தியின் கவனக்குறைவுக்கு தோட்டக்காரனை தண்டித்தார் என்ற அவப்பெயர் வருவதை விட, அவையோர் முன்னர் மகா சக்கரவர்த்தியின் மகுடத்தை தட்டி விட்டு துஷ்டத்தனம் செய்தவனுக்கு சரியான தண்டனை கொடுத்தார் மன்னர் என்று மன்னரின் பெயரை காப்பாற்றவே தோட்டக்காரன் அப்படி நடந்து கொண்டார் என்று பீர்பால் சொல்லியிருப்பார். பீர்பாலுக்கு முன்னாடி அக்னி தம்பி சொன்னது அருமை :)

ஆதி
31-03-2009, 11:07 AM
அக்னி மற்றும் பரம்ஸ் அண்ணா இருவரின் பதிலும் அருமை, இருவருக்கும் வாழ்த்துக்கள்..

பீர்பல் இதையும் சொல்லுவார், மாமன்னர் அவர்களே இவனை விட உங்களுக்கு விசுவாசமான வேலைக்காரன் எவனும் கிடையாது என்றும் கூறுவார்..

விகடன்
31-03-2009, 11:33 AM
பாராட்டுக்கள் அக்னி.

pgk53
01-04-2009, 10:59 AM
பீர்பல் கூறிய விளக்கம்:
மேன்மை மிக்க அக்பர் சக்கரவர்த்தி அவர்கள், ஒரு கல் இடறியதற்காகத் தோட்டக்காரனுக்குத் தூக்கு வழங்கினார் என்ற அவப்பெயர் ஏற்படுவதைத் தவிர்க்கவே,தோட்டக்காரன் கிரீடத்தைத் தட்டிவிட்டுச், சக்கரவர்த்தியை அவமதித்தான். இது தண்டனைக்குரிய குற்றம் என்பதனால், இப்போது தூக்கு வழங்கினால், சக்கரவர்த்தி அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படாது.

அன்பு நண்பர் அக்னி அவர்கள் மிகச் சரியான விடையைக் கூறியுள்ளார்.

வாழ்த்துக்கள் அக்னி அவர்களே........

மேலும் கருத்து தெரிவித்த விராடன் மற்றும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

பரஞ்சோதி
01-04-2009, 11:03 AM
பாராட்டுகள் அக்னி.

அண்ணா அடுத்த புதிர் சொல்லுங்க. முன்பு எல்லாம் நான் மட்டுமே மன்றத்தில் இருக்கும் நேரம் பார்த்து புதிர் சொல்வீங்க, இப்போ நான் இல்லாத நேரமாக சொல்றீங்க :).

பா.ராஜேஷ்
02-04-2009, 06:17 AM
வாழ்த்துக்கள் அக்னி. கலக்கிட்டிங்க போங்க!

pgk53
02-04-2009, 03:26 PM
பரஞ்சோதி அவர்களே......நாளை கட்டாயமாக அடுத்த புதிர் போடுகிறேன்.

நாளை மறுநாள் ஒரு மாத விடுமுறையில் புறப்பட உள்ளேன்.

pgk53
03-04-2009, 10:08 AM
புதிர் எண்-329

ஒரு விலங்கினம் இந்த உலகில் ஆனந்தமாக வாழ்ந்துகொண்டு இருந்தது.

திடீரென்று ஏற்பட்ட ஒரு புதுவகையான வைரஸ் கிருமி நோயால் அந்த விலங்கினம் மட்டும் உலகில் ஒன்றுகூட மீதம் இல்லாமல் அழிந்துபோய்விட்டது.

ஒரு வருடம் கழிந்தது.அந்த விலங்கின் ஒரு குட்டி மட்டும் துள்ளிவிளையாடியது.

அந்த வருடக் கடைசிக்குள் மேலும் நூறு குட்டிகள் தோன்றியது.

வைரஸ் நோயால் நூறுசதமானம் அந்த விலங்கினம் அழிந்தபிறகு ஒரு வருடத்தில்

புதியதாக ஒரு குட்டி எப்படி வந்தது?

கண்மணி
03-04-2009, 10:10 AM
அது முட்டையாக இருந்தது. :D. ஒரு வருடம் கழித்து முட்டை பொறிக்குதுன்னா அது டைனோசாரா?. டைனோஸர் முட்டையில் இருந்து வெளிவர ஒருவருடத்திற்கு மேல ஆகும். அந்த நூற்றுக்கணக்கான குட்டிகளும் முட்டைகளாகவே இருந்தன.

டை - நோ - ஸார்..

அப்புறம் எப்படிச் சாகும்?

aren
03-04-2009, 04:31 PM
கண்மணி அவர்கள் சொல்வது சரி.

pgk53
03-04-2009, 04:57 PM
அன்புத் தம்பி பரஞ்சோதி எங்கே !!!!!!!!!!???????????
ஆளையே கானோம்.
இது அவருக்கு நல்ல வாய்ப்பு அல்லவா???????
வாருங்கள்....வந்து சரியான விடையைக் கூறுங்கள்.

விகடன்
03-04-2009, 05:37 PM
ஒன்று கூட மீதந்தானே அழிந்துபோனது. அந்த கூடிய விலங்குகளின் விளைவாக குட்டி பிறந்திருகிறது.

பரஞ்சோதி
03-04-2009, 07:29 PM
ஹா! ஹா!

அது ஒரு கலப்பினம், அதனால முடிஞ்சது.

இரு இனங்களின் கூட்டாக உருவான இனம், எடுத்துக்காட்டாக கோவேறு கழுதையை சொல்லலாம்.

விகடன்
03-04-2009, 11:05 PM
ஒன்றுகூட அதாவது, கூட்டமாக சேர்ந்த தொகுதி (get together) விலங்குகள் தவிர்ந்த ஏனையவை அழிந்துபோனது. கூடிய அந்த தொகுதி விலங்குகளால் பிற்காலத்தில் குட்டிகள் ஈன்றெடுக்கப்பட்டிருக்கலாம்.

pgk53
04-05-2009, 07:11 PM
ஹா! ஹா!

அது ஒரு கலப்பினம், அதனால முடிஞ்சது.

இரு இனங்களின் கூட்டாக உருவான இனம், எடுத்துக்காட்டாக கோவேறு கழுதையை சொல்லலாம்.

அன்பு நண்பர்களே, விடுப்பு முடிந்து பணியிடம் திரும்பிவிட்டேன்.
விடுப்பில் இருந்தபோது மன்றத்துக்கு வர வாய்ய்பில்லாமல் , நேரமில்லாமல் போனது.

தம்பி பரஞ்சோதி அவர்கள் மிகச் சரியான விடையைக் கொடுத்துள்ளார்.
அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

அடுத்த புதிர் தயாராகிக்கொண்டுள்ளது.
நாளை பதிவு செய்கிறேன்.

விகடன்
04-05-2009, 08:36 PM
புதிர் என்றதும் எவ்வாறு இடக்கு முடக்காக எல்லாம் சிந்தித்திருக்கிறேன். எழுதியதை படிக்கையில் எனக்கே சிரிப்பாக உள்ளது.
சீ..... இவ்வளவு கேவலமாக எல்லாம் சிந்திக்க வைச்சிட்டாங்கப்பா....

pgk53
05-05-2009, 03:37 PM
புதிர் எண்-330

சீதா தனது கணவன் ராமுவை கல்கத்தா செல்லும் இரவு 8 மணி ஏர் இந்தியா விமானத்தில் ஏற்றி அனுப்பிவைத்துவிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினாள்.

அரை மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தாள்.
இரவு உணவை முடித்துவிட்டு, படம் பார்க்கலாம் என்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்.

படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே திடீரென ஒரு ப்ளாஷ் செய்தி திரையில் மின்னியது.

“சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கல்கத்தா சென்ற ஏர் இந்தியா விமானம் எந்திரக் கோளாறினால் தீப்பிடித்து விசாகப் பட்டினம் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.

பயணிகளில் பலருக்கு காயம் ஏற்பட்டு சிலரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்” என்று செய்தி வந்துகொண்டிருந்தது.

அதைக்கண்ட சீதா கொஞ்சமும் பொருட்படுத்தாமல் எந்தவித பரபரப்பும் இல்லாமல் படத்தையே தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அன்பர்களே சீதா ஏன் தனது கணவனைப் பற்றிய கவலையே இல்லாமல் இருந்தாள்?????

மதி
05-05-2009, 03:51 PM
சீதாவின் கணவர் விமானியோ... பயணிகளுக்குத் தானே காயம்.. விமானிக்கு இல்லையே..!?

பா.ராஜேஷ்
05-05-2009, 08:13 PM
விமானியாகவும் இருக்க கூடும். இல்லையேல் சீதாவிற்கு படிப்பறிவு இல்லாமல் இருக்ககூடும்!! ;)

pgk53
07-05-2009, 03:05 AM
நான் விடுப்பு கழிந்து வந்துவிட்டேன் அய்யா......சபையில் ஆஜர் ஆகிவிட்டேன்.
வாருங்கள்....புதிருக்குரிய சரியான விடையைச் சொல்லுங்கள்.

aren
07-05-2009, 03:57 AM
சீதாவினுடைய கணவர் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு நடந்த விஷயத்தை சொல்லி தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொல்லியிருக்கலாம்.

அல்லது அவருடைய கணவர் விமான ஏர் ஹோஸ்டஸாகவோ அல்லது விமானியாகவோ இருக்கக்கூடும்.

பூமகள்
07-05-2009, 04:00 AM
ஒருவேளை அவர் கல்கத்தா ப்ளைட்டில் விபத்து நடக்கும் முன்பே ஒரு இடத்தில் இறங்கியிருப்பாரோ??

அல்லது

சென்னை - கொல்கத்தா பயண நேரம் 1 மணி 41 நிமிடம் என்று அறிவோம். ஆக, சீதா அவரை உள்ளே அனுப்புவிட்டு வீடு திரும்புகையில் அரை மணி நேரம் போயிருக்கும். அதன் பின் சமைத்து இரவுணவு உண்டு பின் தொலைக்காட்சி பார்க்கையில் தன் கணவர் அங்கே இறங்கி பத்திரமாக வந்துவிட்டதாக அலைபேசியில் பேசியிருப்பார்.

அல்லது

சீதாவின் கணவர் உள்ளே செல்கையில் நேரம் 8. ஆக, அவர் அதன் பின் தன் பயணப் பொதி சோதனை மற்றும் பாதுகாப்பு சோதனைகளை முடித்து பின் அடுத்த விமானத்தில் தான் சென்றிருப்பார்...(அதாவது, அந்த விபத்து நடந்த விமானத்தில் சீதாவின் கணவர் செல்லவில்லை.)

ஹீ ஹீ.. இதுக்கு மேல ஒன்னும் தோணலீங்க... :)

aren
07-05-2009, 04:14 AM
பூமகள் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.

கல்கத்தா செல்லும் விமானம் ஹைதராபாத் வழியாக செல்லக்கூடம். அப்படியிருக்கையில் அவர் ஹைதராபாத்தில் இறங்கி அலைபேசி மூலம் செய்தியை சொல்லியிருக்கலாம்.

samuthraselvam
07-05-2009, 09:55 AM
விமானியாகவும் இருக்க கூடும். இல்லையேல் சீதாவிற்கு படிப்பறிவு இல்லாமல் இருக்ககூடும்!! ;)
நண்பர் ராஜேஷ் சொல்வதே மிகச்சரியான விடை என்று நினைக்கிறேன்.

மதி
07-05-2009, 10:42 AM
ஒரு வேளை அந்த ஃப்ளாஷ் செய்தி படத்திலேயே வர்ற ஒரு சீனோ???

அமரன்
07-05-2009, 11:04 AM
மதி'யூகமும் ஒத்துப்போகுதே..

pgk53
07-05-2009, 03:44 PM
ஒரு வேளை அந்த ஃப்ளாஷ் செய்தி படத்திலேயே வர்ற ஒரு சீனோ???

மதி அவர்களே 25% சரியான ரூட்டுக்கு வந்துவிட்டீர்கள்.
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் சரியான விடைக்கு வந்துவிடலாம்.

samuthraselvam
08-05-2009, 06:38 AM
ஒருவேளை நீங்க போட்ட புதிரே சினிமாவில் வரும் சீனோ...? அதில் தான் இயக்குனரின் இஸ்டத்திற்கு எடுத்த சீன்கள் இருக்கும்..

பூமகள்
08-05-2009, 06:59 AM
தங்கை சொல்வது சரியென நினைக்கிறேன்..

சீதா தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருக்க, திரையிலும் கதா நாயகி பெயர் சீதாவாக இருந்திருக்கலாம்..

ஆக, கணவரை வழியனுப்பும் காட்சியும் ஃப்ளாஸ் நியூசும் திரைப்படத்தில் வரும் காட்சியாக இருக்கக் கூடும்..

ஹி ஹி... பெயர் தற்செயலாக ஒன்றாக இருப்பது தான் புதிருக்கான விடையாக இருக்கலாம் என்கிறது பட்சி..

aren
08-05-2009, 07:17 AM
ஒரு வேளை சீதாவிற்கு அந்த பிளாஷ் நியூஸ் வந்த மொழியை படிக்கத்தெரியாமல் இருந்திருக்கலாம்.

தாமரை
08-05-2009, 07:30 AM
பதில் மதி சொன்னதேதான்..

சீதா கணவரை வழியனுப்பி விட்டு வந்து திரைப்படம் பார்த்தாள்..

அந்த திரைப்படத்தில் வரும் ஒரு சீன் தான் விபத்து நடந்ததாக - டிவி யில் ஃப்ளாஷ் நியூஸ் வரும் காட்சி... அது சினிமா என்பதால் சீதா அலட்டிக்கலை..

பி.ஜி.கே அண்ணாவைப் பற்றித்தான் தெரியுமே.. பதிலை முழுசா சொல்லாம ஒத்துக்க மாட்டாரு.

ஆனா உண்மையில அப்படியா? உச்.. உச்.. ஸ்...ஸ்... இப்படி பல வித பாவங்களைக் காட்டியல்லவா நம்ம மங்கையர் திலகங்கள் டி.வி. பாக்கறாங்க.. அய்யோ.. என்று கத்தி விடுபவர்கள் கூட உண்டு.

அடிபட்ட புலி

அமரன்
08-05-2009, 09:13 AM
அடிபட்ட புலி

நம்பிட்டேன்:rolleyes:

தாமரை
08-05-2009, 09:41 AM
நம்பிட்டேன்:rolleyes:

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=142935#post142935

நம்பலைன்னா இதைப்பாருங்க

pgk53
08-05-2009, 10:08 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=142935#post142935

நம்பலைன்னா இதைப்பாருங்க
தங்கை தாமரை அவர்களே............சுற்றளவு வேறு விட்டம் வேறு.
தாங்கள் விட்டம் என்று கூறியிருந்தால் நான் மறுத்திருக்கமாட்டேன்.

அதெல்லாம் போகட்டும். இந்தப் புதிருக்கு வருவோம்.
தொலைக்காட்சியில் ப்ளாஷ் செய்தி வந்தது உண்மை.
அதைப் பார்த்த சீதா சாதாரணமாக எடுத்துக்கொண்டது ஏன் என்பதுதான் இங்கே புதிர்.

மதி
08-05-2009, 10:57 AM
கம்ஃயூட்டர்ல தேதி மாத்தற மாதிரி ஒரு வேளை சீதா பார்த்தது பழைய அல்லது முந்தின நாள் நிகழ்ச்சியோ...??

pgk53
08-05-2009, 03:13 PM
கம்ஃயூட்டர்ல தேதி மாத்தற மாதிரி ஒரு வேளை சீதா பார்த்தது பழைய அல்லது முந்தின நாள் நிகழ்ச்சியோ...??

சபாஷ் ....மதி.....கிட்டத்தட்ட சரியான பதிலை 90 சதமானம் நெருங்கிவிட்டீர்கள்.இன்னும் கொஞ்சம் முயற்சி தேவை.

தாமரை
08-05-2009, 03:24 PM
ம்ம்ம்

பி.ஜி.கே அண்ணன் குடுத்த மாபெரும் க்ளூவைப் பார்த்தால்...

அது நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சி.. அதை பார்க்க முடியாததால் சீதா ரெகார்ட் செய்து வைத்திருந்திருக்கிறார். இன்று கணவனை வழியனுப்பி விட்டு வந்து நேற்றைய நிகழ்ச்சியைப் பார்க்கிறார்.

அது நேற்று நடந்தது என்பதாலும், அதைப் பற்றி சீதாவுக்கு ஏற்கனவே தெரியும் என்பதாலும் இன்று அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

பிஜிகே அண்ணே, தாமரை அண்ணா என்று என்னை மக்கள் அன்போடு அழைப்பார்கள். நீங்க தாமரைன்னே அழைக்கலாம். தங்கை தாமரை வேணாமே...

மதி
08-05-2009, 04:34 PM
கண்டுபுடிச்சிட்டேன்....
சீதா படம் பார்க்க தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்.. அவ்ளோ தான்.

ஏன் சி.டியிலேயோ.. டி.வி.டியிலேயோ படம் பார்த்திருக்கக்கூடாது..??

pgk53
09-05-2009, 03:24 AM
[QUOTE=தாமரை;417247]ம்ம்ம்

பி.ஜி.கே அண்ணன் குடுத்த மாபெரும் க்ளூவைப் பார்த்தால்...

அது நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சி.. அதை பார்க்க முடியாததால் சீதா ரெகார்ட் செய்து வைத்திருந்திருக்கிறார். இன்று கணவனை வழியனுப்பி விட்டு வந்து நேற்றைய நிகழ்ச்சியைப் பார்க்கிறார்.

அது நேற்று நடந்தது என்பதாலும், அதைப் பற்றி சீதாவுக்கு ஏற்கனவே தெரியும் என்பதாலும் இன்று அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

பிஜிகே அண்ணே, தாமரை அண்ணா என்று என்னை மக்கள் அன்போடு அழைப்பார்கள். நீங்க தாமரைன்னே அழைக்கலாம். தங்கை தாமரை வேணாமே...[/QUO

தாமரைத்தங்கையே..............இறுதியில் சரியான பதிலைக் கொடுத்து வெற்றிக்கொடி நாட்டிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.

உங்கள் பதிவுதான் முதலில். அதற்கு அடுத்து மதி அவர்களும் சரியான பதிலைக் கூறியுள்ளார்.
அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

சரி.....அடுத்த புதிர் இன்று மாலையில் பதிவு செய்கிறேன்.
கொஞ்சம் விவகாரமான புதிர்.
தயாராக இருங்கள்.

பூமகள்
09-05-2009, 03:38 AM
பிஜிகே அண்ணே, தாமரை அண்ணா என்று என்னை மக்கள் அன்போடு அழைப்பார்கள். நீங்க தாமரைன்னே அழைக்கலாம். தங்கை தாமரை வேணாமே...
தாமரைத்தங்கையே..............இறுதியில் சரியான பதிலைக் கொடுத்து வெற்றிக்கொடி நாட்டிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்..
மறுபடியுமா பிஜிகே அண்ணா???!!! :eek::eek: :confused::confused:

பரஞ்சோதி
09-05-2009, 09:35 AM
வாழ்த்துகள் தாமரைத்தங்கையே :)

அடுத்த விடை சொல்ல நான் தயாராக இருக்கிறேன்.

தாமரைச்செல்வன் பதில் சொல்லும் முன்னர் நான் சொல்லணும்.

மதி
09-05-2009, 09:40 AM
பதில் சொன்னது நானும் தான்... என்னை விட்டுட்டீங்களே..

pgk53
09-05-2009, 06:21 PM
மறுபடியுமா பிஜிகே அண்ணா???!!! :eek::eek: :confused::confused:
பழக்கதோஷம் தாமரைத் தங்கையே என்று சொல்லிவிட்டேன்.
தாமரைச் செல்வன் அவர்களே வணக்கம் . இனி தவறு நிகழாது.

pgk53
09-05-2009, 06:24 PM
இந்த புதிரோ புதிர் பகுதியில் ஆர்வமுடன் பங்குகொண்டு சிறப்பிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

உங்கள் பங்களிப்பும் நீங்கள் கொடுக்கும் உற்சாகப் பாராட்டுகளும்தான் எனக்கு இன்னும் புதிய புதிர்களை கொடுக்க அடிப்படையாக அமைகிறது.
அதனால் மறுபடியும் அன்பர்களுக்கு எனது வணக்கத்தைக் கூறிக்கொள்கிறேன்.

இனிமேல் அவ்வப்போது நமது பழைய நண்பர்கள் சோமு மற்றும் ராமுவுடன் …..தாமோதரன் என்ற தாமு,….. தாமுவின் மனைவி அமுதவல்லி என்ற அமுதா…..தாமுவின் மகள் குமுதவல்லி என்ற குமுதா இனி அடிக்கடி நமது புதிர்களில் உலா வருவார்கள்.

அத்துடன் இடைக்கிடையே விஞ்ஞான அடிப்படையில் அமைந்த புதிர்கள் சிலவற்றையும் கொடுக்கலாம் என்றிருக்கின்றேன்

இதோ முதல் புதிர்....வாருங்கள்...விடை கூறுங்கள்

pgk53
09-05-2009, 06:28 PM
[QUOTE=தாமரை;417247]ம்ம்ம்

பி.ஜி.கே அண்ணன் குடுத்த மாபெரும் க்ளூவைப் பார்த்தால்...

அது நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சி.. அதை பார்க்க முடியாததால் சீதா ரெகார்ட் செய்து வைத்திருந்திருக்கிறார். இன்று கணவனை வழியனுப்பி விட்டு வந்து நேற்றைய நிகழ்ச்சியைப் பார்க்கிறார்.

அது நேற்று நடந்தது என்பதாலும், அதைப் பற்றி சீதாவுக்கு ஏற்கனவே தெரியும் என்பதாலும் இன்று அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

பிஜிகே அண்ணே, தாமரை அண்ணா என்று என்னை மக்கள் அன்போடு அழைப்பார்கள். நீங்க தாமரைன்னே அழைக்கலாம். தங்கை தாமரை வேணாமே...[/QUO

தாமரைத்தங்கையே..............இறுதியில் சரியான பதிலைக் கொடுத்து வெற்றிக்கொடி நாட்டிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.

உங்கள் பதிவுதான் முதலில்.
அதற்கு அடுத்து மதி அவர்களும் சரியான பதிலைக் கூறியுள்ளார்.
அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

சரி.....அடுத்த புதிர் இன்று மாலையில் பதிவு செய்கிறேன்.
கொஞ்சம் விவகாரமான புதிர்.
தயாராக இருங்கள்.

அன்பர் மதி அவர்களே......உங்களையும் இதில் இனைத்துள்ளேனே....? கவனிக்கவில்லையா???????

pgk53
09-05-2009, 06:32 PM
புதிர் எண்-331

ராமு, சோமு இருவரும் அவர்களது மற்றும் ஒரு நண்பனான தாமுவின் வீட்டுக்குச் சென்றிருந்தார்கள்.

அவர்களை வரவேற்ற தாமு அமரவைத்து உபசரித்து மனைவி அமுதாவை அழைத்து நல்ல குளிர்பாணம் கொண்டுவரும்படி கூறினான்.

அமுதா குளிர் பதனப் பெட்டியைத் திறந்து பார்த்தால். அதில் குளிர் தண்ணீர் கொஞ்சம்கூட இல்லை.

அதனால் மகள் குமுதாவை அழைத்து, பக்கத்துக் கடைக்குச் சென்று கொஞ்சம் ஐஸ்கட்டி வாங்கி வரும்படி அனுப்பிவைத்தாள்.

குமுதா கடைக்குச் சென்று ஐஸ் கட்டி வாங்கி வந்தாள்.
குளிர் பாணம் தயாரித்து அதை மூவருக்கும் எடுத்து வந்த குமுதா “ அனைவருக்கும் வணக்கம்.குளிர்பாணம் அருந்துங்கள்” என்றபடி அவர்களை உபசரித்தாள்.

பிறகு அவர்களைப் பார்த்துச் சிரித்த குமுதா, “ உங்களிடத்தில் ஒரு சிறிய கேள்வி கேட்கப் போகிறேன்.பதில் கூறுவீர்களா? என்றாள்.

ராமு, சோமு, தாமு மூவரும் ஒரே சமயத்தில் “கேட்கலாமே குமுதா என்றார்கள்.

“ நான் சிறிது நேரத்துக்கு முன்பு கடையில் இருந்து ஒரு ஐஸ்கட்டி வாங்கி வந்ததை நீங்கள் அறிவீர்கள்.நான் வாங்கி வந்தது கொஞ்சம் பெரிய அளவிலான ஐஸ்கட்டி.அதை சிறு துண்டுகளாக உடைக்காமல் அப்படியே அதே அளவில் வைத்து உருக்க வேண்டும். எப்படிச் செய்தால் ஐஸ்கட்டி சீக்கிரம் உருகும்?????????இதுதான் எனது கேள்வி என்றாள் குமுதா!!!!!!!!!!!!!

ராமு சட்டென்று “இதிலென்ன புதிர் இருக்கிறது?. ஐஸ்கட்டியை வாஷ்பேஸினில் வைத்து அதன் மேலே நல்ல சூடாகி கொதிக்கும் நீரை ஊற்றினால் விரைவில் உருகிவிடும்” என்றான்.

ஆனால் தாமுவோ அதைவிட சிறப்பான வழி அந்த ஐஸ் கட்டியை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 டிகிரி வெப்பம் இருக்குமாறு அமைத்துக்கொண்டு ஓவனில் வைப்பதுதான் என்றான்.

சோமு ஒன்றும் கூறாமல் சிரித்தபடி இருப்பதைக் கண்ட குமுதா “ என்ன அங்கிள்? நீங்கள் ஒன்றும் கூறவில்லையே” என்று கேட்டாள்.

“ இவர்கள் இருவரும் கூறியதைவிட விரைவாக ஐஸ் கட்டியை உருக வைக்கும் வழியை நான் கூறுகிறேன்….ஐஸ் கட்டியை வாஷ் பேனில் போட்டு, சாதாரன குழாய்த் தண்ணீரை அதன்மேல் திறந்துவிட்டாலே போதும். ராமுவும் தாமுவும் கூறிய வழிகளில் உருகுவதைவிட விரைவாக ஐஸ் உருகிவிடும்” என்றான் சோமு.

குமுதா ஒன்றும் புரியாமல் திகைத்தாள்.
நண்பர்களே நீங்கள்….. நல்ல வழி எது ? யார் கூறியது விரைவான வழி என்று குமுதாவுக்குப் புரிய வையுங்களேன்.

அன்புரசிகன்
09-05-2009, 06:49 PM
அவர்களது மகள் சொன்னது தான் சரி. காரணம் பெரிய பாத்திரத்தில் போட்டு கொதிநீரை ஊற்றுவது என்பது கொதிநீரை உருவாக்க ஒரு குறிப்பிட்ட நேரம் எடுக்கும்.

பாத்திரத்திற்கு 200 பாகை C ஐ உருவாக்கவும் நீண்ட நேரம் எடுக்கும்.

அத்துடன் இவை இரண்டாலும் வரும் நீர் குளிராக வராது. (குளிர்பான தயாரிப்புக்கு)

ஆனால் சாதாரண நீர் (குழாய் நீர்) உடனடியாக பெறக்கூடியது. ஆசிய நாடுகளில் (நம் ஊர்களில்) சாதாரண இளஞ்சூட்டுடன் தான் நீர்வரும். அது தான் விரைவில் கரைக்க உதவும்.

பாரதி
10-05-2009, 02:42 AM
இந்தப்புதிரை முன்பே படித்ததாக நினைவு இருக்கிறதே..!?

தாமரை
10-05-2009, 03:35 AM
முன்குறிப்பு: ஸாரி பி.ஜி,கே மற்றும் நண்பர்களே! பிட் அடிப்பதற்கு..

விளக்கம் ஆங்கிலத்தில்.

What is the fastest way to melt a block of ice without first breaking it up into smaller pieces?

The fastest way to melt a solid block of ice is to put it in a bowl in the sink and run cool water into the bowl. It's all to do with convection and thermal transfer. The cool water, being closer to the temperature of the ice than hot water, will more quickly dispense heat into the block. Couple that with the convection caused by the fact that the water is constantly moving while being replenished and you have ideal conditions for the transfer of heat necessary to melt the block."

What about the oven and the boiling water?"

"They both suffer from a similar problem.The boiling water does have a certain amount of convection, but because the water is so hot, the transfer of heat actually works to cool it down more than to heat up the ice. The oven is even worse because of the complete absence of external convection. All the block is doing is keeping your oven cool, which actually makes it the slowest way to melt a block ice short of leaving it in the freezer.

__________________ (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=147073&postcount=2456)

pgk53
10-05-2009, 04:34 PM

தாமரை அண்ணா......அதெல்லாம் சரிதான்....முடிவை எளிதாக ஒரு வரியில் தமிழில் கொடுத்துவிடுங்களேன்.

தாமரை
11-05-2009, 05:25 AM
பனிக்கட்டிகளை வென்னீரில் போட்டாலும், ஓவனில் வைத்தாலும் பனிக்கட்டியின் குளிர்ச்சி அங்கிருக்கும் வெப்பத்தைக் குறைக்க உதவுமே ஒழிய, காற்றோட்டமோ நீரோட்டமோ இல்லாததால் வெப்பக் கடத்தல் வேகம் குறைவாகவே இருக்கிறது..

ஐஸ்கட்டிகளை ஓடும் குளிர் நீரில் வைக்கும் பொழுது வெப்பச்சலனம் என்ற முறையில் குளிர் நீரிலிருந்து வெப்பம் பனிக்கட்டிகளுக்கு பரவுகிறது. சூடான நீரை விட குளிர்நீர் வேகமாக பனிக்கட்டிகளை சூடாக்கும். காரணம் பனிக்கட்டியின் சூட்டிற்கும் குளிர்நீரின் சூட்டிற்கும் வித்தியாசம் குறைவாக இருப்பதால், நீரோட்டத்தின் போது நீரின் வெப்பம் பனிக்கட்டிக்குள் விரைவாக பரவுகிறது. வெப்ப வித்தியாசம் அதிகமாக இருக்கும் பொழுது இம்முறையில் வெப்பம் பரவுவதை விட நீர் குளிர்வதே அதிகமாக நடக்கும்.

பனிக்கட்டியினால் குளிர்ந்த நீர் வெளியேறி புதிய நீர் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருப்பதால் பனிக்கட்டி வேகமாக உருகுகிறது.

பல கணினிகளில் சிறிய விசிறி மூலம் நுண்செயலி குளிர வைப்பதைக் காண்கிறோம். இதன் அடிப்படையும் அதுதான். காற்றானது சூடான வெப்பக்கடத்தியின் மேல் விசையுறுத்தப்பட்டு காற்றோட்டம் ஏற்படுத்தப்படுகிறது. இது அந்த கடத்தியில் உள்ள வெப்பத்தைப் பெற்று வெளியேற்றுகிறது.

வெப்பச்சலனத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

http://www.ariviyal.info/?p=74

pgk53
11-05-2009, 04:11 PM
தாமரை அண்ணா அவர்கள் மிகச் சரியான பதிலை மிக மிக அருமையான விளக்கத்துடன் கொடுத்துவிட்டார்.
அவருக்கு வாழ்த்துக்கள்.
வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
11-05-2009, 04:12 PM
புதிர் எண்-332

சென்னையில் இருந்து ரயில் புறப்பட்டது.

ரயிலிலே சன்னல் ஓரத்தில் இருந்த இருக்கையில் 30 வயதுள்ள ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்திலே வயதான ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் அவருடைய அப்பா போல் தோன்றியது.

கம்பார்ட்மெண்டில் நல்ல கூட்டம்.ரயில் புறப்பட்டு கொஞ்ச நேரத்தில் நகரை விட்டு விலகியது.

அப்போது சன்னல் வழியாக மரம் செடிகொடிகளைக் கண்ட அந்த 30 வது ஆள் …சின்னக் குழந்தையைப்போல குதித்துச் சப்தமிட்டு, ஹையா….மரம்…..ஆறு….குளம்….ஹையா மலை …அதோ ….அங்கே ஒரு ஆடு….மாடு…என்று கூறியபடியே வந்தார்.
அவர் சப்தம் போட்டு ஒவ்வொன்றையும் கூறி சிறு பிள்ளைபோல் நடந்துகொண்டதினால் அங்கே இருந்த சக பயனிகள் எரிச்சல் அடைந்தார்கள்.

எதிர் சீட்டில் அமர்ந்திருந்த ஒருவர், “ ஏண்யா…பெரியவரே!!!!!இவரை ஏதாவது மருத்துவமனையில் சேர்க்கவேண்டியதுதானே” என்றார்.
அந்த பெரியவர், “ நாங்க மருத்துவமனையில் இருந்துதானய்யா வந்துகொண்டிருக்கின்றோம் என்றார்.

“அப்போ. இவருக்கு பூரணமாக குணம் அடையவில்லையா???” என்றார் எதிர் இருக்கைக்காரருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்.

“ இல்லையே…..இவருக்கு பூரணமாகக் குணம் அடைந்தபின்னர்தான் இவரை அழைத்துவருகிறோம்” என்றார் பெரியவர்.

“எங்களுக்கென்னவோ பூரண குணம் அடைந்ததுபோல தெரியவில்லை.” என்றார் ரயிலில் இருந்த மற்றொரு பயணி.

அதற்கு அந்தப் பெரியவர், “ அய்யா, உங்கள் சந்தேகத்தை நான் தீர்த்துவைப்பதைவிட இவருக்கு மருத்துவம் செய்த மருத்துவமனையில் நீங்கள் போய் கேட்டுக்கொள்வதுதான் சிறப்பாக இருக்கும் “ என்றார்.
அனனவரும் அமைதியாக இருந்தார்கள்.

அருகில் அமர்ந்திருந்த நான் “ அய்யா….எந்த மருத்துவமனை “ என்று கேட்டேன்.

அதற்கு அந்த பெரியவர் கூறிய பதிலைக் கேட்டு அனைவரின் கண்களும் பணித்தன.

சப்தமிட்டுப் பேசிக்கொண்டு வந்த அந்த ஆளை கருணையுடன் பார்த்தார்கள்.

நண்பர்களே அந்த பெரியவர் என்ன கூறினார்???????????

நண்பர்களே உண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை புதிராக மாற்றிக் கொடுத்துள்ளேன்.

மதி
11-05-2009, 04:22 PM
கண் மருத்துவமனை. இத்தனை நாளாக ஏதோ ஒரு விபத்தில் கண்ணை பறிகொடுத்த பையனுக்கு அறுவை சிகிச்சை செய்து இப்போது தான் பெரியவர் தன் ஊருக்கு வருகிறார்.

பாரதி
11-05-2009, 05:16 PM
மதியின் விடை சரியானது என எண்ணுகிறேன்.

இந்தப்புதிர் இக்கதையைப் போன்றதா பி.ஜி.கே?
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14810

pgk53
12-05-2009, 02:35 AM
[QUOTE=பாரதி;417493]மதியின் விடை சரியானது என எண்ணுகிறேன்.

இந்தப்புதிர் இக்கதையைப் போன்றதா பி.ஜி.கே?
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14810[/Q

பாரதி அவர்களே,
கடந்தமுறை விடுப்பில் சென்றிருந்தபோது மங்கையர் மலரில் இந்த சம்பவம் உண்மை நிகழ்ச்சி என்று வெளியிட்டிருந்தனர்.
அது என் மனதைஈர்த்தது . அதைத்தான் புதிராக மாற்றியிருந்தேன்.
நான் உங்களது கதையை மன்றத்தில் படிக்கவில்லை.
மதி அவர்கள் மிகச் சரியான விடையைக் கொடுத்துவிட்டார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

aren
12-05-2009, 04:15 AM
இது ஏற்கெனவே நம் மன்றத்தில் பதிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

pgk53
12-05-2009, 04:47 PM
இது ஏற்கெனவே நம் மன்றத்தில் பதிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.
ஆரன் அவர்களே.......தாங்கள் கூறுவதும் ஒரு வகையில் சரிதான்.
இதை கதையாக நண்பர் பாரதி பதிவு செய்ததாக அவர் இதற்கு முன் பதிவில் குறிப்பிட்டுருந்தார்.
நான் அவருக்கு இதைக்குறித்து பதிலாக, அக் கதையை நான் படிக்கவில்லை என்றும் மங்கையர் மலரில் படித்த ஒரு விஷயத்தை புதிராக மாற்றி கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருக்கின்றேன்.
இனி கவனமாக இருக்கிறேன்.

நாளை அடுத்த புதிரைப் பதிவு செய்கிறேன்.

pgk53
13-05-2009, 11:58 AM
புதிர் எண்-333

பீர்பல் புகழுக்குமேல் புகழ் அடைந்து அனைவராலும் பாராட்டப்படுவதை பொறுத்துக்கொள்ள இயலாத அமைச்சர்களில் ஒருவர் பீர்பலை ஏதாவது காரனத்துக்காகத் தண்டிக்க விரும்பினார்.

அதற்காக ஒரு திட்டமும் தீட்டினார்.

அதன் ஒரு அங்கமாக அந்த அமைச்சர் பீர்பலை மட்டும் தனது வீட்டுக்கு ஒரு விருந்துக்கு அழைத்தார்.

பீர்பலும் கள்ளமில்லாமல் பரிசுப் பொருட்களுடன் சென்று அவரை வாழ்த்திவிட்டு விருந்தில் கலந்துகொண்டார்.

விருந்து முடிந்து பீர்பல் தனது இல்லம் திரும்பினார்.
மறுநாள் காலையில் அந்த அமைச்சர் ஊர்ப் பஞ்சாயத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில்,தான் பீர்பலை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்ததாகவும், விருந்தில் கலந்துகொண்ட பீர்பல் தனது குழந்தையின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை களவாடிக்கொண்டு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பஞ்சாயத்தார்கள் பீர்பலை அழைத்து அவர்மேல் கொடுக்கப்பட்டிருந்த புகாரைக் கூறினார்கள்.

பீர்பல் தான் விருந்துக்குச் சென்றது உண்மைதான் என்றும், தங்க நகை குறித்து தனக்கு ஏதும் அறியாதென்றும் பதிலளித்தார்.

ஆனால் அந்த அமைச்சர், அதை ஒத்துக்கொள்ளாமல், பீர்பலின் மேல்தான் தனது முழுச் சந்தேகமும் இருப்பதாகவும், அப்படி அவர் உண்மையாகவே எடுக்கவில்லை எனால், தான் கூறியதுபோல் செய்து அவர் குற்றமற்றவர் அல்ல என்று நிரூபிக்கவேண்டும் என்றும் வாதாடினார்.

பஞ்சாயத்தார் பீர்பல் எப்படி நிரூபிக்கவேண்டும் என்று கேட்டார்கள்?
அதற்கு அமைச்சர், “ ஐயா….பீர்பல் உண்மையிலேயே குற்றமற்றவர் என்றால், அதோ அந்த அடுப்பிலே பழுக்கக் காய்ச்சப் பட்டுக்கொண்டிருக்கும் இரும்புக் கம்பியை தனது இரு கரங்களிலும் வைத்து தான் குற்றமற்றவர் என்று கூறவேண்டும்.

அவர் கூறியது சத்தியம் என்றால் அவரது கைகளுக்கு எதுவும் ஏற்படாது.அவர் கூறுவது பொய் என்றால் கைகள் வெந்துபோகும்.
இந்த சோதனைக்கு பீர்பல் தயாரா? என்று அமைச்சர் சவால் விட்டார்.
பஞ்சாயத்தாரும் பீர்பலைப் பார்த்து, அமைச்சரது சோதனைக்கு பீர்பல் ஒத்துக்கொள்கிறாரா? என்று கேட்டார்கள்.

பீர்பல் புன்முறுவல் பூத்தார்.தான் சோதனைக்கு ஒத்துக்கொள்வதாகவும் அதற்கு முன்பு தான் கூறும் ஒரே ஒரு சிறிய நிபந்தனைக்கு மட்டும் அமைச்சர் கட்டுப்படவேண்டும் என்று கேட்டார்.

பஞ்சாயத்தாரும், அதை ஒத்துக்கொண்டார்கள்.
பீர்பலின் நிபந்தனை என்ன என்று கேட்டார்கள்!!!!!!!!!!!!.

பீர்பல் தனது நிபந்தனையைக் கூறியதும் அமைச்சர் தான் கொடுத்திருந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டு போய்விட்டார்.

அன்பர்களே பீர்பல் கூறிய அந்த நிபந்தனை என்னவாக இருக்கும்?????????????

தாமரை
13-05-2009, 12:04 PM
ஐயா, நகை காணாமல் போனது என்று அந்த இரும்புக் கம்பியை பிடிச்சு முதல்ல அமைச்சர் சத்தியம் செய்யட்டும். அவர் கை வெந்து போகாட்டா நகை களவு போனது உண்மை என்று ஆகிறது..

அதன் பின்னால் பீர்பால் சத்தியம் செய்வார், தான் திருடவில்லை என..

இதான் நிபந்தனை.

பா.ராஜேஷ்
15-05-2009, 07:20 PM
நான் வழி மொழிகிறேன் ;)

pgk53
16-05-2009, 06:04 PM
ஐயா, நகை காணாமல் போனது என்று அந்த இரும்புக் கம்பியை பிடிச்சு முதல்ல அமைச்சர் சத்தியம் செய்யட்டும். அவர் கை வெந்து போகாட்டா நகை களவு போனது உண்மை என்று ஆகிறது..

அதன் பின்னால் பீர்பால் சத்தியம் செய்வார், தான் திருடவில்லை என..

இதான் நிபந்தனை.

ஆஹா....தாமரை அண்ணா அவர்களே...
அருமையான பதில்.வாழ்த்துக்கள்.

இந்த பதிலை இப்படிக்கூடச் சொல்லலாம்.அதாவது,
"பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புக் கம்பியை அவரே தனது கையால் எடுத்து என் கையில் வைக்கவேண்டும்" என்ற நிபந்தனையையும் கூறியிருக்கலாம்.

சரி வாருங்கள் அடுத்த புதிர்க்குப் போவோம்.

pgk53
16-05-2009, 06:10 PM
புதிர் எண்-334

ஒருவன் பாம்பன் ரயில் பாலத்தில் தண்டவாளங்களுக்கிடையில் நடந்துகொண்டிருந்தான்.{பாம்பன் ரயில் பாலம் இராமேஸ்வரம் செல்லும் வழியில் கடலில் அமைந்துள்ளது.}

திடீரென்று இரயிலின் விசில் ஒலி பலமாகக் கேட்டது.
திடுக்கிட்டு தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

தூரத்தில் இரயில் அவனை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டான்.
கொஞ்சமும் தயங்காமல் தண்டவாளத்தில் இருந்து விலகமுயற்சிக்காமல் எதிரே வேகமாக வரும் இரயிலை நோக்கி அவனும் வேகமாக ஓட ஆரம்பித்தான்.

அன்பர்களே அவன் ஏன் தண்டவாளத்தில் இருந்து விலக முயற்சிக்காமல் இரயில் வரும் திசையிலேயே ஓட ஆரம்பித்தான்?????????????????????

aren
16-05-2009, 07:36 PM
இவன் நடந்துவந்த தண்டவாளத்தில் ரயில் வரவில்லை, அதற்கு அருகே இருக்கும் இன்னொரு தண்டவாளத்தில்தான் ரயில் வந்தது

பாரதி
16-05-2009, 11:30 PM
இரயில் பாதையின் ஓரத்தில் மனிதர்கள் பாதுகாப்பாக நிற்பதற்கான இடத்தை நோக்கி ஓடி இருக்கக்கூடும்.

தாமரை
17-05-2009, 02:49 AM
பாம்பனில் ஒற்றைப் பாதைதான். அதனால் ஆரென் சொன்னது சரியில்லை என நினைக்கிறேன்.

தப்பிக்கணும்னா, இரண்டு தண்டாவளாங்களுக்கு மத்தியில் படுத்திருக்கலாம்..

பாலத்தின் படம் பாருங்க.

http://www.arrl.org/news/features/2005/07/12/1/B-lrg.jpg

பாலம் தாங்கும் தூணின் மீது இறங்கி படுத்திருக்கலாம்..

ஆனால் இரயிலை நோக்கி ஓடுகிறார் என்றால், கையில் சிவப்புத் துணியுடன் இரயிலை நிறுத்த ஓடுகிறார். (நன்றி - சிவாஜி படம் - ஷ்ரேயா..ஹி ஹி...:D:D:D)

அப்படியென்றால், அவரோட பணி தண்டவாளப் பராமரிப்பு. தண்டவாளத்தில் எதோ பழுதோ ஆபத்தோ இருப்பதால் இரயிலை நிறுத்த இரயிலை நோக்கி சிகப்புக் கொடியுடன் ஓடுகிறார்,

lenram80
18-05-2009, 10:00 PM
அப்படியென்றால், அவரோட பணி தண்டவாளப் பராமரிப்பு. தண்டவாளத்தில் எதோ பழுதோ ஆபத்தோ இருப்பதால் இரயிலை நிறுத்த இரயிலை நோக்கி சிகப்புக் கொடியுடன் ஓடுகிறார்,

அவர் பழுது பார்ப்பவராக இருந்தால். ஏற்கனவே சிவப்பு விளக்கு சிக்னலைப் போட்டுவிட்டு தானே வந்து சோதனை பண்ணிருப்பார். :smilie_abcfra:

தாமரை
19-05-2009, 06:31 AM
அவர் பழுது பார்ப்பவராக இருந்தால். ஏற்கனவே சிவப்பு விளக்கு சிக்னலைப் போட்டுவிட்டு தானே வந்து சோதனை பண்ணிருப்பார். :smilie_abcfra:

பழுது பார்த்தல் வேறு... தண்டவாளங்களை தினமும் சோதித்தல் வேறு.. தண்டவாளங்களை பார்வையிட்டு பழுதிருந்தால் அறிவிக்கும் பொருட்டு பணியாளர்கள் உண்டு. இவர்களுக்கு கேங்மென் என்று பெயர். இது போன்று, தண்டவாளத்தில் விரிசல், பாறாங்கல், நாசவேலை இவற்றை கண்டறிந்து பல விபத்துக்களை இப்பணியாளர்கள் தவிர்த்திருப்பதை செய்தித்தாள்களில் அவ்வப்பொழுது செய்திகளாக படித்திருக்கிறேன்.

கீழ் கண்ட சுட்டியைப் பார்க்க...

http://dinamalar.in/Sambavamnewsdetail.asp?News_id=8023&ncat=DI

"தண்டவாளத்தில் விரிசல்" (http://www.google.co.in/search?hl=en&q=%22%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%22&btnG=Google+Search&meta=&aq=f&oq=) என்ற மந்திரம் சொல்லி கூகுளாண்டவரை வேண்டினால் பதில் கிடைக்கும்.

lenram80
19-05-2009, 06:27 PM
ஒருவேளை ரயிலில் மோதி தற்கொலை செய்து கொள்ள ஓடினானோ என்னவோ?
அல்லது..
ஒரே மோது மோதி ரயிலை கவிழ்க்க ஓடினானோ? (லெஜென்ட் பட வில் சுமித் மாதிரி)

குறிப்பு : இரண்டுமே சீரியசான பதில்கள் தான். ஜோக் இல்லை.

pgk53
21-05-2009, 05:26 PM
இரயில் பாதையின் ஓரத்தில் மனிதர்கள் பாதுகாப்பாக நிற்பதற்கான இடத்தை நோக்கி ஓடி இருக்கக்கூடும்.

நன்று....மிக மிக நன்று....நண்பர் பாரதி அவர்களே....மிகச் சரியான விடை கூறியுள்ளீர்கள்.

நண்பர்களே...இதுபோன்ற பாலங்களில் ஆட்கள் இரயில் வரும் வேளையில் பாதுகாப்பாக ஒதுங்கி நிற்க ஆங்காங்கே ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒதுங்கும் இடம் அமைத்திருப்பார்கள்.
குறிப்பாக கேங்மேன் மற்றும் இரயில்வே ஆட்களுக்கள்தான் பாலத்தின் தண்டவாளத்தில் வர வாய்ப்பு இருக்கும்.
அவன் நடந்துகொண்டிருக்கும்போது எதிரே வரும் இரயிலைக் கவனித்தான். தனக்குப் பின்னால் இருக்கும் இடத்துக்குப் போவதைவிட மிக அருகே எதிரே இருக்கும் பாதுகாப்பான இடத்துக்குப் போவதுதான் சரியானது என்று தீர்மானித்து இரயில் வரும் திசையிலேயே ஓடினான்.

தாமரை
21-05-2009, 06:17 PM
பாம்பன் பாலத்தில் அப்படி நிற்க இடம் இருப்பதாக படத்தில் தெரியவில்லையே பி.ஜி.கே அண்ணா..

pgk53
21-05-2009, 06:42 PM
பாம்பன் பாலத்தில் அப்படி நிற்க இடம் இருப்பதாக படத்தில் தெரியவில்லையே பி.ஜி.கே அண்ணா..

பாலத்தின் படத்தை ஜூம் செய்து பெரியதாக்கிப் பாருங்கள்.
பாலத்தில் இருந்து முதல் தூண் அருகில் பாருங்கள். தெரியும்.

pgk53
21-05-2009, 06:48 PM
புதிர்எண்-335

குமுதாவும் அவள் தோழிகளும் கூடைப் பந்து விளையாட்டிற்குச் செல்வதற்காக விளையாட்டு மைதானம் வந்தார்கள்.

மைதானத்தின் வாயிலில் அமைந்திருந்த பெண்கள் உடை மாற்றிக்கொள்ளும் அறையில் அனைவரும் நுழைந்தார்கள்.

பையில் கொண்டுவந்திருந்த உடைகளை மாற்ற ஆரம்பிக்காமல் பெண்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தார்கள்.அதற்கு ஒரு காரணம் இருந்தது.

அன்று காலையில் அவர்கள் பள்ளியின் விஞ்ஞான பேராசிரியரின் ஆராய்ச்சி சாலையில் திருட்டு நடைபெற்றிருந்தது.

விளக்கமாகச் சொன்னால்தானே அனைவருக்கும் விளங்கும்..

பேராசிரியர் ஒரு ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டு அதில் ஆரம்ப கட்ட வெற்றியையும் அடந்திருந்தார். அந்த ஆராய்ச்சியில் அவர் கண்டுபிடித்திருந்த ஒரு திரவத்தை அருந்தினால் ஒரு சில மணி நேரத்துக்குக்கு, அருந்துபவரின் உடல் அரூபம் ஆகிவிடும்.

அதாவது அவரது உடல் மற்றவர் கண்பார்வையில் இருந்து மறைந்துவிடும்.அந்த மருந்தை யார் திருடினார்கள் என்று அதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஒருவேளை அந்த மருந்து ஏதாவது ஒரு போக்கிரி மாணவனால் திருடப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தினால்தான் மாணவிகள் சுற்றுமுற்றும் பார்த்தபடி, உடைகளை மாற்ற கூச்சமும் அச்சமும் கொண்டிருந்தார்கள்.

குமுதா அனைவரையும் தீர்க்கமான ஒரு பார்வை பார்த்து புண்முறுவல் செய்தபடி, “நீங்கள் அச்சமோ…கூச்சமோ கொள்ளவேண்டிய அவசியமே இல்லை,

மருந்தை திருடிய ஆள் இங்கே இல்லை.அப்படியே இருந்தாலும் கவலைப் படவேண்டாம்.பிரச்சினையே இல்லை” என்று கூறியபடி தனது உடைகளை தயக்கமின்றி மாற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.

நண்பர்களே….குமுதா அவ்வளவு உறுதியாகக் கூறியதன் காரணம் என்ன?????????

பாரதி
21-05-2009, 06:57 PM
குறி்ப்பிட்ட மருந்தை குடித்தவர்களின் உடல்தானே தெரியாது... உடை காட்டிக்கொடுத்துவிடும்தானே...!

பாரதி
21-05-2009, 07:01 PM
பாலத்தின் படத்தை ஜூம் செய்து பெரியதாக்கிப் பாருங்கள்.
பாலத்தில் இருந்து முதல் தூண் அருகில் பாருங்கள். தெரியும்.

http://ecofin.files.wordpress.com/2007/09/img_0334a.jpg

pgk53
22-05-2009, 10:25 AM
http://ecofin.files.wordpress.com/2007/09/img_0334a.jpg

மிக்க நன்றி பாரதி அவர்களே.

aren
22-05-2009, 10:50 AM
மருந்தைத் திருடியவன் மறைந்துவிட்டதால் அவனாலும் எதையும் பார்க்கமுடியாது, ஏனெனில் உடலுடன் கண்ணும் மறைந்திருக்கும்.

pgk53
27-05-2009, 03:31 PM
அன்பு மன்ற நண்பர்களே,
என்ன ஆனது.?????????

ஏன் இந்த புதிருக்கு பதில் கொடுக்க வராமல் இருந்துவிட்டீர்கள்.
கடந்த வாரத்தின் சில கசப்பான சம்பவங்களில் இருந்து மீள இயலாமல் நாணும் மன்றத்தின் பக்கம் வராமல் இருந்துவிட்டேன்.

ஆரென் அவர்கள் சரியான விடைக்குப் பக்கமாக வந்துள்ளார்.
இன்னும் கொஞ்சம் விளக்கமாக அவர் குறிப்பிடால் மக்கள் அனைவரும் தெளிவாகத் தெரிந்துகொள்வார்கள்.

வாருங்கள் ஆரென் அவர்களே.

aren
27-05-2009, 03:45 PM
உடலுடன் கண்ணும் மறைந்திருக்கும் அதுபோல் மூளையும் இருக்காது. ஆகையால் அவனால் பெண்கள் இருக்கும் இடத்திற்கு வரமுடியாது

விகடன்
27-05-2009, 07:07 PM
உடல் மறைந்தாலும் குடித்த திரவம் மறையாது. அந்த இடத்தில் கண்டுபிடித்த திரவம் அந்தரத்தில் இருக்குமாகில் அங்கு மருந்து அருந்தியவன் இருப்பதாக உறுதிப்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு ஒரு நிகழ்வு அச்சமயம் அங்கு இடம்பெறாதிருந்தமையாலேயே அவர் பயப்பட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

பரஞ்சோதி
28-05-2009, 08:45 AM
உடலுடன் கண்ணும் மறைந்திருக்கும் அதுபோல் மூளையும் இருக்காது. ஆகையால் அவனால் பெண்கள் இருக்கும் இடத்திற்கு வரமுடியாது

அதே தான், உணர்ச்சிகளே இல்லாத போது அவனால் எப்படி அங்கே செல்ல முடியும்.

pgk53
31-05-2009, 02:50 AM
மருந்தைத் திருடியவன் மறைந்துவிட்டதால் அவனாலும் எதையும் பார்க்கமுடியாது, ஏனெனில் உடலுடன் கண்ணும் மறைந்திருக்கும்.

அன்புள்ள நண்பர்களே,
இங்கேதான் இருக்கின்றது சூக்குமம்.
ஆரென் அவர்கள் கூறியதுபோல உடலுடன் கண்ணும் மறைந்திருக்கும் அல்லவா?
பொதுவாக கண்களின் ரெட்டினா என்னும் பகுதியில்தான் ஒளிக்கதிர்கள் பட்டு பிரதிபலிக்கும்.
அந்தப் பிரதிபலிப்பினால்தான் எதிரே உள்ள காட்சி மூளைக்குச் செல்கின்றது.
மருந்தைக் குடித்ததும் உடலுடன் கண்களும் மறைந்துவிடுவதால் ரெட்டினா தனது சக்தியை இழக்கின்றது.
இதை அறிந்திருந்தாள் குமுதா. அதனால்தான் அவன் மருந்தைக் குடித்த பிறகு அந்த அறைக்கு வழிதேடி வந்திருக்க இயலாது.
அல்லது முன்கூட்டியே அந்த இடத்துக்கு வந்து மருந்தைக் குடித்தாலும் அவனால் பார்க்க இயலாது அதனால்தான் அவள் கவலைப்படவில்லை.

ஆரென் அவர்களே உங்கள் பதில் சரியானது .
எனது வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி கூறியதுபோல் மருந்து அவன் உடலின் உள்ளே இருப்பதும் தெரியாது. ஏனென்றால் அந்த மருந்து அவன் குடித்ததும் ரத்தத்தில் கலந்துவிடுமல்லவா?????

pgk53
31-05-2009, 02:51 AM
புதிர் எண் - 336

ராமு ஷெட்டில் வைக்கப்பட்டிருந்த தனது படகை எடுத்துக்கொண்டு கடலில் சிறிது தூரம் மகிழ்வாகச் சென்று வர விரும்பினான்.

ஆனால் படகில் நிறைய இடத்தில் ஓட்டைகள் இருந்ததினால் படகை தண்ணீரில் விட இயலாத நிலைமை.

அதனால் ராமு ,பக்கத்தில் இருந்த நகருக்குச் சென்று படகில் இருந்த ஓட்டைகளை அடைப்பதற்குரிய பசை மற்றும் உபகரணங்களை வாங்கி வந்தான்.

படகின் உள்ளே ஏறி அமர்ந்து பசை மற்றும் பொடிகளை எந்த சதவீதத்தில் கலக்கவேண்டுமோ , அந்த விகிதத்தில் சரியாகக் கலந்து குழைத்து ஓட்டைகளை அடைத்துப் பூசினான்.
எவ்வளவு நேரம் உணர விடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்களோ அந்த அளவு நேரத்துக்கு உணரவிட்டான்.

பிறகு குழாயைத் திறந்துவிட்டு படகின் உள்ளே தண்ணீரை நிறைத்தான்.
தேவையான அளவு நேரம் தண்ணீரை வைத்திருந்து எங்குமே தண்ணீர் கசியவில்லை என்பதை உறுதி செய்துகொண்டான்.

பிறகு படகை தனது பெரிய காரின் பின்பகுதியில் இனைத்து கடற்கரை சென்றான்.
அங்கே போகும் வழியில் சோமுவைக் கண்டான்.

ராமுமைக் கண்ட சோமு, “ என்ன ராமு ? படகை எடுத்துக்கொண்டு எங்கே கிளம்பிவிட்டாய்” என்று கேட்டான்.

ராமு ,” சோமு….படகில் இருந்த ஓட்டைகளை ஷெட்டில் வைத்தே சரியாக அடைத்துவிட்டேன்.நீ குறிப்பிட்டது போல் உடும்பு மார்க் ஒட்டும் உபகரணம்தான் வாங்கிவந்து அதில் சொல்லியிருந்த விகிதத்தில் சரியாகக் கலந்து உபயோகித்தேன்.போதாக் குறைக்கு தண்னீரை படகில் நிறப்பி ஏதும் கசிவு உண்டா என்றும் சோதனை செய்துவிட்டேன்.” என்றான்.

அதைக் கேட்ட சோமு கடகடவென்று சிரித்தான். பிறகு, “ ராமு, நீ உனது படகை கடலில் விட்டால் மறுபடியும் முன்பு போன்றே கசியத் தொடங்கும்” என்றான்.

சோமு கூறியதை ராமு ஏற்றுக்கொள்ளவில்லை,
தான் எல்லாமே சரியாகச் செய்துள்ளதாக ராமு நம்பினான்.

கடலில் கொண்டுபோய் படகை இறக்கினான்.
சோமு கூறியது போலவே படகில் நீர் கசியத் தொடங்கியது.

அதனால் ராமுவால் கடலில் செல்ல இயலாது போனது.

நண்பர்களே ராமு எந்த இடத்தில் தவறு செய்துள்ளான்?????????????????

விகடன்
31-05-2009, 05:54 AM
வெளிப்பக்கமாக இடவேண்டிய பசையினை உட்பக்கமாக இட்டிருக்கிறான்

பரஞ்சோதி
31-05-2009, 08:38 AM
விராடன் சொன்ன பதிலும் அருமை, விடை அதுவாக கூட இருக்கலாம்.

ராமு சொன்னதை வைத்தே சோமு படகு ஒழுகும் என்றார், அவர் படகை பார்த்ததாக சொல்லப்படவில்லை, அதனால் கீழே இருக்கும் பதிலை சொல்கிறேன்.

ராமு படகை ஓட்ட இருப்பது கடலில், கடலில் உப்பின் தன்மை அதிகமாக இருக்கும்.

அந்த உப்பின் தன்மைக்கு ஏற்ப பசையின் தன்மையை உருவாக்க வேண்டும். சோதனையின் போது வீட்டு குழாயை திறந்து விட்டு சோதனை செய்தார், அதனால் நீர் ஒழுக வில்லை.

மீண்டும் கடலில் விடும் போது ஒழுக ஆரம்பித்து விட்டது.

SathyaThirunavukkarasu
31-05-2009, 09:12 AM
ராமு சோமு சொன்னதை செய்ததில் தான் தவறாக இருக்கலாம், ஏனென்றாம் சோமு சொன்ன பசை படகு ஒட்டும் பசையாக இருக்காது,அதனால் தான் சோமு உறுதியாக கூறியிருக்கிறான்

பரஞ்சோதி
02-06-2009, 12:24 PM
பிஜிகே அண்ணாவை காணலையே?

- விடைக்காக காத்திருக்கும்

பாரதி
02-06-2009, 12:32 PM
வெளிப்பக்கமாக இடவேண்டிய பசையினை உட்பக்கமாக இட்டிருக்கிறான்

விராடனின் பதில் சரியானதென்றே எனக்குத் தோன்றுகிறது. வீட்டில் ராமு படகில் தண்ணீரை நிரப்பி கசிவை சோதனை செய்திருக்கிறான். அப்போது நீரின் அழுத்தம் கீழ் நோக்கி இருக்கும். ஆகவே உட்புறமிருந்து ஒட்டிய பசை நீர் கசிய இடமளித்திருக்காது. ஆனால் கடலில் விடப்படும் போது நீரின் அழுத்தம் வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக (கடலில் இருந்து படகை நோக்கி) இருக்கும். எனவே நீரின் அழுத்தம் தாங்காமல் உட்புறத்தில் ஒட்டப்பட்ட பசை நீர் கசிய இடம் கொடுத்திருக்கும்.

பரஞ்சோதி
02-06-2009, 12:38 PM
அடடா, பாரதி அண்ணாவின் பதில் கண்ட பின்னர் விபரம் புரியுது.

விராடன் உங்கள் பதில் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன், பாராட்டுகள்.

pgk53
02-06-2009, 03:47 PM
வெளிப்பக்கமாக இடவேண்டிய பசையினை உட்பக்கமாக இட்டிருக்கிறான்

விராடன் அவர்களே...அருமையான பதில் சரியான பதில். இருப்பினும் அதன் விளக்கத்தை நானே கூறிவிடுகின்றேன்.

சரியான பசையை போட்டு ஒட்டினாலும் படகின் உட்புறமாக அந்த பசையைப் போடும்போது , வெளியில் இருந்து வரும் அழுத்தம் தாங்காது உட்புறம் பசை தளர்ந்து கசிவு ஏற்படும்.

அதே பசையை வெளிப்புறமாக போட்டால், வெளிப்புற அழுத்தத்துக்கு ஈடு கொடுத்து நிற்கும். அதனால்தான், ராமு பசை போட்ட விபரத்தைக் கூறியதுமே, படகு ஒழுகும் என்று சோமு உடனடியாக கூறினான்.

இவ்விளக்கத்தை அளித்த பரஞ்சோதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

pgk53
02-06-2009, 03:50 PM
அன்புத் தமிழ் மன்ற நண்பர்களே....அனைவருக்கும் வணக்கம் பல.
நான் நாளை ஒரு மாத விடுமுறையில் தாயகம் புறப்பட உள்ளேன்.

மீண்டும் ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் சந்திப்போம்.

அடுத்து இரண்டு புதிர்களைப் போட்டுச் செல்லுகிறேன்.

pgk53
02-06-2009, 03:53 PM
புதிர் எண்-337

பீர்பலின் புத்திகூர்மையையும் அவரது புகழையும் கேள்விப்பட்ட பக்கத்து நாட்டு அரசன் பீர்பலை தனது நாட்டுக்கு விருந்தினாராக அழைத்தான்.
பீர்பலும் அக்பர் சக்கரவர்த்தியின் சம்மதம் பெற்று அந்த நாட்டை அடைந்தார்.

அந்த நாட்டு அரசனை இதுவரை பீர்பல் சந்தித்ததில்லை. அவரது உருவப்படத்தைக் கூடப் பார்த்ததில்லை.

பீர்பல் அரசபையை அடைந்தார்.

அங்கே அவருக்குப் பெரும் வரவேற்புக் கொடுக்கப்பட்டது.
ஆனால் அரியனையைப் பார்த்த பீர்பல் திடுக்கிட்டார்.

அங்கே 6 அரியனைகளில் ஆறு அரசர்கள் அமர்ந்திருந்தார்கள். அனைவருக்குமே ஒரே மாதிரியான அரச உடை.,கிரீடம் மற்றும் தோரணை எல்லாம் இருந்தது.

அறுவருக்குமே சேடிப் பெண்கள் சாமரம் வீசிக்கொண்டிருந்தார்கள்.
இதில் உண்மையான அரசன் யார் என்று தெரியாமல் பீர்பல் குழப்பம் அடைந்தார்.

ஆனால் சில நொடிகளில் பீர்பல் புன்முறுவலுடன் உண்மையான அரசனிடம் சென்று பணிந்து வணங்கினார்.

பீர்பலுடைய சாமர்த்தியத்தைக் கேள்விப்பட்டே அந்த அரசன் அவரைக் குழப்புவதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தான்.

அவன் பீர்பலின் திறமையை மெச்சி, பீர்பல் எப்படி உண்மையான அரசனை நொடிப்பொழுதில் கண்டு பிடித்தார் என்று விளக்குமாறு வேண்டினான்.

பீர்பலும் கூறினார்.

அன்பர்களே பீர்பல் எப்படி உண்மையான அரசனைக் கண்டு பிடித்தார்????????

pgk53
02-06-2009, 03:56 PM
புதிர் எண்-338

ஒருமுறை அக்பர் சக்கரவர்த்தி, பீர்பலையும் அழைத்துக்கொண்டு, தனது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்தார்.

அப்போது மிகவும் சாதாரனமான, ஒரு சிறிய குற்றத்தை ஒருவன் செய்ததை அக்பர் கண்டார். மிக்க சினம் கொண்டார்.

அவனது சிரத்தைக் கொய்து மறுநாள் அரசபைக்கு கொண்டுவந்து தனக்குக் காட்டும்படி காவலருக்குக் கட்டளையிட்டார்.காவலரும் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் பீர்பல் அந்த சாதாரன குற்றம் செய்த அப்பாவிக் குடிமகனைக் காப்பாற்றிவிடவேண்டும் என்று நினைத்தார்.

பொதுவாக இத்தகைய சிறிய குற்றங்களுக்கு சிரத்தை வெட்டுவது என்றால் பிறகு நாட்டில் உள்ள ஒருவருக்கும் உடலில் தலை இருக்காது.!!!!!!

அதனால் பீர்பல் அன்று இரவு ரகசியமாக சிறைக்குள் புகுந்தார்.
அவனைக் கண்டார். அவனிடம் மறுநாள் அவன் என்ன செய்யவேண்டும் என்று விளக்கமாகக் கூறினார்.

அவனும் மறுநாள் அவன் பறிகொடுக்க இருந்த தலையை ஆட்டினான்.
மறுநாள் பொழுது விடிந்தது.

அரசபை கூடியது. காவலர்கள் அவனை அழைத்துக்கொண்டு அரசபையில் நுழைந்தனர்.

அவன் யாரென்று அக்பருக்கு புரியவில்லை. முதல்நாள் அவனது தலையை வெட்டிக்கொண்டுவருமாறு அவர் காவலருக்குக் கூறியது அவர் நினைவில் இல்லை.

காவர் தலைவன் முன் வந்து, “ சக்கரவர்த்தி அவர்களே…..இவனது தலையைக் கொய்துவரும்படி தாங்கள் கட்டளை இட்டிருந்தீர்கள்.இன்று காலை இவன் தலையை வெட்டுவதற்காக இவனைக் கொண்டு சென்றோம்.அப்போது அவனது கடைசி ஆசையைக் கேட்டோம்.அதை நிறைவேற்றவே இங்கே கொண்டு வந்தோம் “ என்றார்கள்.

அக்பர் சக்கரவர்த்தியும் அவனைப் பார்த்து உனது கடைசி ஆசை என்ன என்று கேட்டார்.?

அவனும் தனது கடைசி ஆசையைக் கூறினான்.

அதைக் கேட்ட அக்பர் அவனை விடுதலை செய்தார்.

பீர்பல் அவனுக்கு கூறிய உபாயம் என்ன?

அக்னி
02-06-2009, 05:49 PM
pgk53:
ஏன் இந்த அக்னிப் பயல் புதிரோ புதிரில ரொம்ப நேரமா நிக்கிறான்... :icon_hmm: ஓ... இதுவா விசயம்... :icon_shades:

இவ்விளக்கத்தை அளித்த பாரதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வீட்ட போற அவசரத்தில மாத்திப்பதிஞ்சுட்டதக்கூட விடமாட்டேங்கறானே... :sauer028:

*****

இவ்விளக்கத்தை அளித்த பரஞ்சோதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அக்னி:
pgk53 அண்ணா... விளக்கம் தந்தது பாரதி அண்ணாவாச்சே...

*****
pgk53:
அதான் ரொம்ப நேரமா திரியில நிக்கறாதப் பார்த்து சுதாரிச்சுட்டோமில்ல... :icon_cool1:
அத எப்பவோ மாத்தியாச்சு...
அத வுட்டுட்டு அடுத்த புதிர்களுக்குப் பதில சொல்லுறது...

*****
அக்னி:
:shutup:
அலோ... யாரு... சிக்னல் சரியா கிடைக்கல... பொறுங்க வெளிய வாறன்... :innocent0002:

பாரதி
02-06-2009, 06:35 PM
அறுவருக்குமே சேடிப் பெண்கள் சாமரம் வீசிக்கொண்டிருந்தார்கள்.

உண்மையான அரசனின் சேடிப்பெண்ணைத்தவிர மற்ற சேடிப்பெண்கள் பீர்பால் எப்படி கண்டுபிடிக்கிறப்போகிறார் என்பதைப் பார்ப்பதில் கவனமாக இருந்திருப்பார்கள். ஆனால் உண்மையான அரசனின் சேடிப்பெண் சாமரம் அரசனின் மேல் படக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி இருப்பாள். அதை வைத்து பீர்பால் கண்டுபிடித்திருப்பாரோ..?

இது என் யூகம்... பீர்பால் எப்படி கண்டுபிடிச்சாரோ...!!!

lenram80
02-06-2009, 06:50 PM
இப்படிக் கூட இருக்கலாம். (புதிர் எண்-337)

1.உண்மையான அரசனுக்கு விசிறப்பட்ட விசிறிகள், கிரிடம், நகை, செறுப்பு, அரியணை எல்லாமே பழையனவாக இருந்திருக்கும்.

2.பொய் அரசர்களின் விசிறிகள் மட்டுமன்றி அவர்கள் கிரிடம், நகை, செறுப்பு, அரியணை எல்லாமே புதுசாக இருந்திருக்கும்.

பாரதி
02-06-2009, 06:54 PM
இப்படிக் கூட இருக்கலாம். (புதிர் எண்-337)

1.உண்மையான அரசனுக்கு விசிறப்பட்ட விசிறிகள் பழையனவாக இருந்திருக்கும்.

2.பொய் அரசர்களின் விசிறிகள் மட்டுமன்றி அவர்களின் கிரீடம், நகை, செருப்பு, அரியணை எல்லாமே புதுசாக இருந்திருக்கும்.

நல்ல யூகம்..! அசத்தலா இருக்கு.

pgk53
02-06-2009, 06:54 PM
விராடனின் பதில் சரியானதென்றே எனக்குத் தோன்றுகிறது. வீட்டில் ராமு படகில் தண்ணீரை நிரப்பி கசிவை சோதனை செய்திருக்கிறான். அப்போது நீரின் அழுத்தம் கீழ் நோக்கி இருக்கும். ஆகவே உட்புறமிருந்து ஒட்டிய பசை நீர் கசிய இடமளித்திருக்காது. ஆனால் கடலில் விடப்படும் போது நீரின் அழுத்தம் வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக (கடலில் இருந்து படகை நோக்கி) இருக்கும். எனவே நீரின் அழுத்தம் தாங்காமல் உட்புறத்தில் ஒட்டப்பட்ட பசை நீர் கசிய இடம் கொடுத்திருக்கும்.

ஆமாம்...ஆமாம்...நண்பர்களே....பாரதிதான் சரியான விளக்கம் கொடுத்துள்ளார்.
பாரதிக்கு வாழ்த்துக்கள்.

lenram80
02-06-2009, 07:38 PM
புதிர் எண் 338

"அரசே..நான் உங்களை குழந்தையாகப் பார்க்க வேண்டும்". என்றிருப்பான். அது முடியாததால் அவனை அக்பர் விட்டுவிட்டார்.

பரஞ்சோதி
03-06-2009, 08:30 AM
புதிர் எண்-337

விடை: உண்மையான அரசர் பீர்பாலை நோக்க, அவரைத் தவிர ஏனையோ உண்மையான அரசரையே பார்த்து, பார்த்து அவரது செய்கையை போல் இவர்களும் செய்திருப்பார்கள்.

ஆக உண்மையான அரசர் மற்ற யாரையும் நோக்காமல் தைரியமாக பீர்பாலை பார்த்து கொண்டிருந்திருப்பார், அதை வைத்து உண்மையான அரசர் யார் என்று பீர்பால் கண்டுபிடித்திருப்பார்.

பரஞ்சோதி
03-06-2009, 08:35 AM
புதிர் எண் 338

ஹி ஹி

அரசே! நான் புள்ளக்குட்டிக்காரன் என்னை விட்டுடுங்கன்னு சொல்லியிருப்பார்.

பா.ராஜேஷ்
06-06-2009, 10:55 AM
புதிர் எண்-337 : பரஞ்சோதி அண்ணாவின் பதிலே சரி என எண்ணுகிறேன்.

புதிர் எண் 338: மிக சிறிய தவறை செய்ததற்காக உயிர் துறக்க விரும்பவில்லை. எனவே தண்டனைகேற்ற தவறை செய்ய அனுமதிக்குமாறு கூறி இருக்கலாம்.

pgk53
04-07-2009, 01:28 PM
அன்புத் தமிழ் நண்பர்களே,
அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
ஒருமாத விடுமுறை கழிந்து இன்று பணியிடம் திரும்பிவிட்டேன்.
புதிர் எண் 337க்கு தம்பி பரஞ்சோதி சரியான விடை கொடுத்துள்ளார்.

புதிர் எண் 338க்கு இதுவரை யாருமே சரியான விடை கொடுக்கவில்லை.

இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் சரியான விடை கொடுக்கலாம்.
முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.

pgk53
04-07-2009, 01:29 PM
புதிர் எண்-337

விடை: உண்மையான அரசர் பீர்பாலை நோக்க, அவரைத் தவிர ஏனையோ உண்மையான அரசரையே பார்த்து, பார்த்து அவரது செய்கையை போல் இவர்களும் செய்திருப்பார்கள்.

ஆக உண்மையான அரசர் மற்ற யாரையும் நோக்காமல் தைரியமாக பீர்பாலை பார்த்து கொண்டிருந்திருப்பார், அதை வைத்து உண்மையான அரசர் யார் என்று பீர்பால் கண்டுபிடித்திருப்பார்.

சரியான விடையைக் கொடுத்த பரஞ்சோதிக்கு எனது வாழ்த்துக்கள்

பரஞ்சோதி
05-07-2009, 08:41 AM
புதிர் எண்-338

அக்பர் சக்கரவர்த்தியும் அவனைப் பார்த்து உனது கடைசி ஆசை என்ன என்று கேட்டார்.?

அவனும் தனது கடைசி ஆசையைக் கூறினான்.

அதைக் கேட்ட அக்பர் அவனை விடுதலை செய்தார்.

பீர்பல் அவனுக்கு கூறிய உபாயம் என்ன?

அண்ணா, முன்பு ஒரு கதை படித்திருக்கிறேன். அதில் தண்டனை பெற்றவர் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசரின் கீரிடத்தை தட்டி விடுவார், அதனால் கோபமடைந்து மரண தண்டனை கொடுத்ததாக இருக்கும்.

அப்படி செய்ததால் கடுமையான குற்றத்திற்கே அரசர் கடுமையான தண்டனை கொடுத்தார் என்று மக்கள் நினைப்பாங்க, அதனால சாதாரண குற்றத்திற்கு மரணதண்டனை கொடுத்தார் என்ற அவப்பெயர் நீங்கிடும்.

ஆக அவன் அரியணையில் அமர்ந்திருக்கும் உங்கள் கீரிடத்தை தட்டி விட வேண்டும் என்று சொல்லியிருப்பான்.

இது சரியில்லை என்றால் வேற விடையும் சொல்லிட வேண்டியது தான் :)

pgk53
05-07-2009, 04:44 PM

பரஞ்சோதி அவர்களே நீங்கள் வேற விடையைக் கூறுங்கள்.ஏனென்றால் நீங்கள் கூறிய விடை புதிர் எண் 328ல் வந்துவிட்டது.

pgk53
06-07-2009, 10:05 AM
அன்புச் சகோதரர் பரஞ்சோதி அவர்களே,
நானே புதிருக்குரிய விடையைக் கூறிவிட்டு அடுத்த புதிரைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.

அவன் அக்பர் சக்கரவர்த்தியைப் பார்த்து, “ சக்கரவர்த்தி அவர்களே…..தாங்கள் எனது உடலில்லாத தலையைமட்டும் பார்க்க மிக்க ஆவல் கொண்டு காவலரிடம் எனது தலையைக் கொய்து வருமாறு கட்டளையிட்டீர்கள்.சக்கரவர்த்தியாகிய தங்களது ஆவலை பூர்த்தி செய்யவேண்டியது தங்கள் குடிமகனாகிய எனது கடமை.காவலர் தங்களது ஆணையை சரியாக நிறைவேற்றுவார்களா என்று எனக்குச் சந்தேகம் வந்துவிட்டதனால், எனது கடைசி ஆசை என்னவென்று காவலருக்கு நான் கூறினேன்.
அதாவது நானே எனது தலையை அறுத்து எனது கையாலேயே தங்களிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். அதனால் அது நிறைவேற தாங்கள் அனுமதிக்கவேண்டும்” என்றான்.
அக்பர் அவனது சாமர்த்தியமான பேச்சை ரசித்து அவனை விடுதலை செய்தார்.

pgk53
06-07-2009, 10:09 AM
புதிர் எண்-339

சோமுவும் ராமுவும் வழக்கமாக உட்காரும் அந்த டீக்கடையின் பெஞ்சில் உட்கார்ந்துபலவிதமான விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது டீ மாஸ்டர் தவறுதலாக கொதிக்குக் கொண்டிருந்த சுடுநீரை கைகளில் ஊற்றிக்கொண்டு, ஆ…ஊ…என்று அலறினார்.

சோமு , “ என்ன மாஸ்டர்…..சுடுதண்ணீருக்காக இப்படி அலறுகிறீர்களே”? என்று கேலி செய்தான்.

உடனே ராமு “ அட போப்பா…..சுடுதண்ணீர் மேலே விழுந்தால் எப்படி வேதனையாக இருக்கும் தெரியுமா?????மிகவும் வேதனையானது” என்றான்.

அதைக் கேட்ட சோமு சிரித்தான்.” இதோ பார் ராமு…நன்றாகக் கொதித்துக்கொண்டிருக்கும் நீரை அப்படியே எடுத்து நான் எனது தலை வழியாக ஊற்றிக்கொள்கிறேன். எவ்வளவு பந்தயம் வைக்கிறாய்?” என்றான்.

சோமுவை விநோதமாகப் பார்த்த ராமு,” சரி 1000 ரூபாய் பந்தயம்.கொதிக்கும் நீரை எடுத்து உடலில் எந்த பாதுகாப்பு கவசமும் போட்டுக்கொள்ளாமல் அப்படியே ஊற்றிக்கொள்ளவேண்டும்” என்றான்.
அதற்கு ராமுவும் சம்மதித்தான்.

உடனே டீ மாஸ்டரிடம் கூறி பாய்லரில் கொதிக்கும் தண்ணீரை எடுக்கும்படி ராமு கூறினான்.மாஸ்டரும், சோமு இந்த பந்தயத்தை எப்படி வெற்றிகொள்ளப் போகிறான் என்ற எதிர்பார்ப்பில் பாய்லரில் இருந்து நீரை எடுக்க ஆரம்பித்தார்.

ஆனால் சோமுவோ அதை நிறுத்தச் சொன்னான்.
சோமு தனது வீட்டில் போய், தான் உண்டாக்கும் கொதிநீரைத்தான் ஊற்றிக்கொள்வேன் என்றான்.

அதற்கும் ராமு ஒத்துக்கொண்டான்.
வீட்டுக்குப் போனார்கள்.

ஒரு பெரிய பாத்திரத்தை சோமு தனது ஆய்வுக்கூடத்தில் தேடி எடுத்து அதில் நீரை ஊற்றினான். பாத்திரத்தை மூடினான். பாத்திரத்தின் மேல் பகுதி மூடி கண்ணாடியில் செய்யப்பட்டிருந்ததால் உள்ளே ஊற்றப்பட்டிருந்த நீர் அனைவருமே காணும் வண்ணம் இருந்தது. பிறகு சோமு ஒரு சிறிய வேலையைச் செய்தான்.

பிறகு அடுப்பை எரியவிட்டான். சிறுது நேரத்தில் பாத்திரத்தில் இருந்த நீர் தள தளவென்று கொதிப்பதை பார்க்க முடிந்தது.
ராமு பார்த்துக்கொண்டிருக்கும்போதே சோமு அடுப்பை நிறுத்தி, பாத்திரத்தில் மூடியைத் திறந்து உள்ளே தளதளவென்று கொதித்தபடி இருந்த நீரை பாத்திரத்துடன் அப்படியே எடுத்து தனது தலை வழியாக மேலே ஊற்றிக்கொண்டான்.

புன்முறுவலுடன் நின்றான். சோமுவுக்கு ஒன்றுமே ஆகவில்லை.
ராமுவுக்கு தனது கண்களையே நம்ப இயவில்லை. இருப்பினும் உண்மை அதுதானே. அதனால் பேசியபடி 1000 ரூபாயை சோமுவுக்குக் கொடுத்தான்.

அன்பர்களே………..சோமுவால் இதை எப்படிச் சாதிக்க முடிந்தது???????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பரஞ்சோதி
06-07-2009, 01:04 PM
அக்பர் புதிருக்கான விடை அசத்தலாக இருக்குது, அதை யோசிக்க முடியாமல் போச்சுது, இருந்தாலும் அது கொஞ்சம் கடினம் தான்.

புதிய புதிரோ வயிற்றை கலக்குது. சோமு அப்படி என்னத்தை தான் கலக்கினாரோ?

தாமரை
06-07-2009, 01:08 PM
வயித்தைக் கலக்கும்தான் பரம்ஸ்... இதைப் படிங்க

Alcohol: Alcohol has a lower boiling point that water (about 175° F as compared with 212° F). If you dilute water with alcohol, the mixture will have a lower boiling point up until the alcohol completely evaporates.

அதாவது ஆல்கஹாலை நீரில் கலந்தால் நீரின் கொதிநிலை குறையும்...அந்த ஆல்கஹால் ஆவியாகும் வரை. மூடி வைக்கப்பட்டிருப்பதால் ஆல்கஹால் முழுதும் வெளியேரும் முன்னரே சோமு குளிச்சிட்டாரு...

அப்படித்தான் சோமு செய்திருக்க வேண்டும்...

தலை இதை சோதித்துப் பார்த்து உறுதிப் படுத்துவார்.

பரஞ்சோதி
06-07-2009, 01:15 PM
இது கள்ள ஆட்டம், நான் ராமுவிடம் சொல்லிடுவேன். அவர் படிக்காதவர் என்பதற்காக இப்படியா ஏமாற்றுவது.

நான் நினைக்கிறேன், பாத்திரத்தின் மூடியில் சிறிய துளை, அதாவது ஒரு சொட்டு தண்ணீர் விழ கூட 1 நிமிடம் எடுத்துக்கும். ஆக அந்த தண்ணீர் தலையில் விழும் முன்னர் சில்லுன்னு ஆயிடும்.

(ஹி ஹி ஏதாச்சும் சொல்லணுமுல்ல, தாமரையார் எளிதில் வென்றதாக விட்டு கொடுக்கக்கூடாதுல்ல)

mania
07-07-2009, 06:41 AM
வயித்தைக் கலக்கும்தான் பரம்ஸ்... இதைப் படிங்க

Alcohol: Alcohol has a lower boiling point that water (about 175° F as compared with 212° F). If you dilute water with alcohol, the mixture will have a lower boiling point up until the alcohol completely evaporates.

அதாவது ஆல்கஹாலை நீரில் கலந்தால் நீரின் கொதிநிலை குறையும்...அந்த ஆல்கஹால் ஆவியாகும் வரை. மூடி வைக்கப்பட்டிருப்பதால் ஆல்கஹால் முழுதும் வெளியேரும் முன்னரே சோமு குளிச்சிட்டாரு...

அப்படித்தான் சோமு செய்திருக்க வேண்டும்...

தலை இதை சோதித்துப் பார்த்து உறுதிப் படுத்துவார்.

அருமை....அருமை.....தாமரை.....ஆனாலும் நான் இந்த மாதிரி தண்ணியை வேஸ்ட் பண்ணுவதில்லை. .....:rolleyes::rolleyes:
அன்புடன்
மணியா:D:D:D

தாமரை
07-07-2009, 07:00 AM
நான் சொன்ன பதில் தவறாக இருக்கலாம்...

தண்ணீரில் சில வகை உப்புகளைக் இட்டுச் சூடாக்கினால், அந்த உப்பு கரைந்து வாயுவை உற்பத்தி ஆக்க நீரில் குமிழிகள் தோன்றும்.. அது பார்க்க நீர் கொதிப்பது போலத் தோன்றும்..

அது என்ன உப்பு என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்..

Mathu
07-07-2009, 10:15 AM
அருமை....அருமை.....தாமரை.....ஆனாலும் நான் இந்த மாதிரி தண்ணியை வேஸ்ட் பண்ணுவதில்லை. .....:rolleyes::rolleyes:
அன்புடன்
மணியா:D:D:D

அதானே எப்படி வேஸ்ட் பண்றது :D :D

அடுக்களையில் எடுக்க வேண்டியதுக்கு பதிலாய் ஆய்வுகூடத்தில் தேடி எடுத்த பாத்திரம் என்பதால் அதில் தான் சூட்சுமம் இருக்க வேண்டும் என்ன என்பது தான் புரியவில்லை.

தாமரை
07-07-2009, 10:24 AM
மது பாயிண்டை கரெக்டா புடிச்சியுக்காரோ??? :)

lenram80
07-07-2009, 01:33 PM
சாதாரணமக 40 - 45 C சூடுபடுத்தினாலே ஆவியாகக் கூடிய ஒரு வேதியியல் பொருளை அந்த பானையில் உள்ளே ஒரு பூச்சு பூசி இருக்கிறான். பிறகு நீரை நிரப்பி சட்டியை சூடு படுத்தியதும், அந்த பூச்சு ஆவியாகி, தண்ணீருக்கு மேலே வரும் போது நமக்கு கொதிப்பதாக தெரிந்திருக்கிறது.

அந்த பூச்சு நீரில் கரையாத வேதியல் பொருளாக இருந்திருக்க வேண்டும்.

ஒன்று மட்டும் தெரிகிறது. கொதித்தது மாதிரி தோன்றியதே தவிர அது உண்மையிலே கொதிக்கவில்லை. காற்று குமிழிகளை வைத்து கொதிப்பது போல செய்து விட்டான். அது என்ன பூச்சாக (உடலை அரிக்காத) இருக்கும்? ஒருவேளை கற்பூரமாக இருக்குமோ?

தாமரை
07-07-2009, 01:59 PM
லெனின் நமது அறை வெப்பம் 25 டிகிரி செல்ஸியஸ்.. உடல் வெப்பம் 39 டிகிரி செல்சியஸ். எனவே இன்னும் கொஞ்சம் தெளிவாகணும்.

lenram80
07-07-2009, 03:09 PM
லெனின் நமது அறை வெப்பம் 25 டிகிரி செல்ஸியஸ்.. உடல் வெப்பம் 39 டிகிரி செல்சியஸ். எனவே இன்னும் கொஞ்சம் தெளிவாகணும்.

அப்படின்னா 40,45 C..நன்றி தாமரை. அறை வெப்ப நிலைக்கு மேலே 10 - 15 C சூடுபடுத்த வேண்டும். விடையை மாற்றிவிட்டேன்,

lenram80
07-07-2009, 03:22 PM
மற்றொரு விடை:

அழுத்தம் குறைய குறைய கொதி வெப்ப நிலை குறையும்.

அறை அழுத்தம் 1 பார் - 100 C நீரின் கொதி வெப்பம்
0.2 பார் எனில் - 60 C
0.14 பார் எனில் - 52.2 C
0.07 பார் எனில் - 38.7 C

எனவே, அவன் அந்த பாத்திரத்தில் அழுத்தத்தை குறைத்திருந்தால், குறைந்த வெப்ப நிலையிலேயே, தண்ணீர் கொதித்து இருக்கும்.

pgk53
08-07-2009, 04:37 PM
அன்பு நண்பர்களே...இதுவரை யாரும் சரியான விடையைக் கூறவில்லை.
சரி ஒரு க்ளூ கொடுக்கட்டுமா????????

நண்பர் Ienram80 சரியான விடைக்கு மிக அருகாமையில் வந்துள்ளார்.
நண்பர் Ienram80 இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் சரியான விடையைக் கூறிவிடுவார்.

lenram80
08-07-2009, 04:48 PM
உள்ளே ஊற்றப்பட்டிருந்த நீர் அனைவருமே காணும் வண்ணம் இருந்தது. பிறகு சோமு ஒரு சிறிய வேலையைச் செய்தான்.பிறகு அடுப்பை எரியவிட்டான்.

வெற்றிட பம்ப் மூலம் பாத்திரத்தின் உள்ளே இருந்த காற்றை கொங்சம் எடுத்து, அதன் மூலம் அழுத்தம் குறைந்து குறைந்த வெப்ப நிலையிலேயே அதை கொதிக்க விட்டாரோ?

pgk53
10-07-2009, 06:26 PM

சபாஷ்.....நண்பரே....சரியான விடை.
பாத்திரத்தை வேக்யூம் செய்தபின் சூடாக்கினான்.
நீர் கொதித்தது...ஆனால் சூடு இல்லை.

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்...நாளை.

pgk53
11-07-2009, 04:17 PM
புதிர் எண்-340

ராமு ஒரு பழைய இரும்புக் கடைக்குச் சென்றிருந்தான்.
அங்கே கடைக்காரர் விலை குறைவாகக் கொடுப்பதாகக் கூறினார் என்று சில காந்தத் துண்டுகளை வாங்கினான்.
வீட்டுக்கு வந்தான்.

சோபாவில் அவனது நண்பன் சோமு அமர்ந்திருந்தான்.

அவனைப் பார்த்து தான் சில காந்தத் துண்டுகளை விலை குறைச்சலாக வாங்கிவிட்டதாகக் கூறிக்கொண்டே அங்கிருந்த மர மேசையில் பையில் இருந்த வட்ட வடிவமான காந்தங்களைக் கொட்டினான்.

அவை ஒவ்வொன்றும் மேசையில் விழுந்து கொஞ்ச தூரம் உருண்டு போனதும் மேசையின்மேல் மல்லாக்க விழுந்துகிடந்தன.

சோமு சோபாவில் இருந்து எழுந்துவராமல் அங்கிருந்தபடியே, ராமுவை கடைக்காரன் காந்தம் என்று கூறி சாதாரண இரும்பு வில்லைகளைக் கொடுத்து ஏமாற்றிவிட்டதாகக் கூறிச் சிரித்தான்.
சோமு ஏன் அப்படிக் கூறினான்.????????

அருகில் வந்து காந்தங்களைப் பரிசோதிக்காமலேயே அவற்றைப் பார்த்ததுமே எப்படி சோமுவால் கூற முடிந்தது???????????????

பாரதி
11-07-2009, 04:53 PM
அவை உண்மையில் காந்தங்கள் எனில் தனித்தனியாக ஓடியிருக்க வாய்ப்பில்லை; ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருந்திருக்கும்.

(ஆனாலும் சோதிக்காமலா ராமு வாங்கினான்...?)

பரஞ்சோதி
11-07-2009, 05:14 PM
பாரதி அண்ணாவின் பதில் சரியாக இருக்கும்.

அதே சந்தேகம் எனக்கும் தான். ஒருவேளை பேக்கிங் செய்யும் போது கடைக்காரர் மாத்தியிருப்பார், சென்னையில் பழங்களை கொடுக்கும் போது மாற்றி கொடுப்பாங்க தானே.

pgk53
12-07-2009, 04:53 PM
அவை உண்மையில் காந்தங்கள் எனில் தனித்தனியாக ஓடியிருக்க வாய்ப்பில்லை; ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருந்திருக்கும்.

(ஆனாலும் சோதிக்காமலா ராமு வாங்கினான்...?)

சபாஷ் பாரதி அவர்களே.
மிகச் சரியான விடை கொடுத்துவிட்டீர்கள்.

அதுதான் கடைக்காரன் ஏமாற்றிவிட்டான் என்று சோமு கூறுவதாக அமைத்துள்ளேனே நண்பரே.

அடுத்த புதிர் தயாராகிக்கொண்டுள்ளது.
நாளை பதிவு செய்கின்றேன்.

pgk53
13-07-2009, 04:49 PM
புதிர் எண்-341

சோமு தனது நண்பர் ஒருவரது பிறந்தநாள் விழாவுக்குச் சென்றிருந்தான்.

அங்கே பிறந்தநாள் கேக் வெட்டும் வைபவம் முடிந்ததும் விருந்து தொடங்கியது.

கிட்டத் தட்ட அவனது நண்பர்கள் அனைவருமே மது அருந்த ஆரம்பித்தார்கள்.

சோமுவுக்கு மது அருந்தும் வழக்கம் இல்லை. அதனால் தனக்கு சாதாரணமான பாணம் ஏதாவது கொடுங்கள் போதும் என்றான்.

அவர்களோ வேறு சாதாரண பாணம் ஏதும் இல்லை என்றார்கள்.
அப்படியானால் தண்ணீர் கொடுத்தால் போதும் என்றான் சோமு.
அவனது நண்பன் ஒருவன் தண்ணீர் கொண்டுவருவதாகக் கூறி சென்றான்.

ஆனால் அந்த நண்பனின் திட்டமே வேறு.

ஊள்ளே சென்றவன் தண்ணீரைப் போலவே இருக்கும் வோட்கா என்னும் மது பாணத்தை பாதி கிளாஸில் ஊற்றி மீதி கிளாஸ்முழுவதும் தண்ணிரை நிறப்பிக் கொண்டுவந்து சோமுவின் எதிரே மேசையின்மேல் வைத்தான்.

கொஞ்சம் ஐஸ் க்யூப்ஸ் போட்டால் குளிர்ந்திருக்குமே என்று சோமு கூறினான்.

அங்கேதான் ஐஸ் கியூபிற்கு பஞ்சமே இல்லையே.
அதனால் இரண்டு ஐஸ் கியூப்களை எடுத்து சோமுவின் நண்பன் கிளாஸில் போட்டான்,

தண்ணீரை அருந்தாமல் கொஞ்ச நேரம் கிளாஸையே பார்த்துக்கொண்டிருந்த சோமு “ நண்பர்களே எனக்கு மதுவில் விருப்பம் இல்லை என்று உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அதனால் இதை நான் அருந்தமாட்டேன்” என்று கூறினான்.நண்பர்கள் அனைவரும் சோமுவை திகைப்புடன் பார்த்தார்கள்.

சோமு எதிரே மேசையின் மேல் இருந்த கிளாஸைப் பார்த்தானே தவிர அதில் இருந்த தண்ணீரை முகர்ந்து பார்க்கவோ, அல்லது கொஞ்சம் ருசி பார்க்கவோ செய்யவில்லை.

கிளாஸைப் பார்த்தே சோமு எப்படி அதில் மது கலந்துள்ளது என்று அறிந்துகொண்டான்???????????????

lenram80
13-07-2009, 06:02 PM
நானெல்லாம் கோக்கையே ராவா அடிக்காதவன் :food-smiley-010:. இருந்தாலும் பதிலை ட்ரை பண்றேன்.

வோட்கா கலந்த நீரின் அடர்த்தி குறைந்து அதனால் பனிக் கட்டிகள் மிதக்காமல் கிளாஸின் அடியில் சென்றிருந்ததோ?

குறிப்பு:

மடாக் குடியர்கள் யாராவது என் பதிலை சரியா என்று 'குடித்து' விட்டுச் சொல்லவும் :food-smiley-004:

பாரதி
13-07-2009, 08:38 PM
லெனின் பதில் சரியானது என்று நினைக்கிறேன். (உங்கள் பதிலை உறுதி செய்ய நான் நீருடன் காத்துக்கொண்டிருக்கிறேன். சோதனை செய்ய தேவையானவற்றை உடனே அனுப்பவும் லெனின்... ஹஹஹா..)

பனிக்கட்டியை விட நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் நீரில் பனிக்கட்டி மிதக்கிறது. நீரில் வோட்காவை சேர்க்கும் போது, நீரின் (திரவத்தின்) அடர்த்தி நிச்சயம் குறையும். எனவே பனிக்கட்டி மிதக்காமல் திரவத்தில் மூழ்கிவிடும்.

ஆகவே சோமு அது நீரல்ல என்பதைக் கண்டு பிடித்திருப்பான்

பரஞ்சோதி
14-07-2009, 10:42 AM
ஆஹா!

இது நமக்கு பொருத்தமான புதிர் அல்ல.

- எஸ்கேப் ஏகாம்பரம்

pgk53
17-07-2009, 03:12 AM
நானெல்லாம் கோக்கையே ராவா அடிக்காதவன் :food-smiley-010:. இருந்தாலும் பதிலை ட்ரை பண்றேன்.

வோட்கா கலந்த நீரின் அடர்த்தி குறைந்து அதனால் பனிக் கட்டிகள் மிதக்காமல் கிளாஸின் அடியில் சென்றிருந்ததோ?

குறிப்பு:

மடாக் குடியர்கள் யாராவது என் பதிலை சரியா என்று 'குடித்து' விட்டுச் சொல்லவும் :food-smiley-004:

பாரதி-----------------
லெனின் பதில் சரியானது என்று நினைக்கிறேன். (உங்கள் பதிலை உறுதி செய்ய நான் நீருடன் காத்துக்கொண்டிருக்கிறேன். சோதனை செய்ய தேவையானவற்றை உடனே அனுப்பவும் லெனின்... ஹஹஹா..)

பனிக்கட்டியை விட நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் நீரில் பனிக்கட்டி மிதக்கிறது. நீரில் வோட்காவை சேர்க்கும் போது, நீரின் (திரவத்தின்) அடர்த்தி நிச்சயம் குறையும். எனவே பனிக்கட்டி மிதக்காமல் திரவத்தில் மூழ்கிவிடும்.

ஆகவே சோமு அது நீரல்ல என்பதைக் கண்டு பிடித்திருப்பான் "-----------

நண்பர் லெனின் மிகச் சரியான பதிலைக் கூறிவிட்டார். அவருக்கும், அதை விளக்கமாகக் கூறிய பாரதிக்கும் எனது வாழ்த்துக்கள்.

நண்பர்களே----அடுத்த புதிருக்கு அழைக்கிறேன்....ஆனால் இன்றல்ல...நாளை.

pgk53
18-07-2009, 02:40 AM
புதிர் எண்-342

அது ஒரு அழகான வீடு,
மிகவும் நன்றாகக் கட்டியிருந்தார்கள்.
ஜன்னல்கள் எல்லாம் கண்ணாடி போடப்பட்டி அலங்காரமாக இருந்தது
அந்த வீட்டில் கணவனும் மனைவியும் காலை சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்தார்கள்.

பக்கத்துவீட்டுப் பெண் துணிகளைக் காயப் போடுவதை ஜன்னல் வழியாகப் பார்த்தாள் மனைவி. “சே …சே…துணியெல்லாம் எவ்வளவு அழுக்காக இருக்கின்றது. சரியாகத் துவைக்கவே இல்லை. எப்படித்தான் இந்தத் துணிகளை உடுத்துகிறார்களோ! எனக்கெல்லாம் இப்படி சரியாகத் துவைக்காமல் உடுத்துவது பிடிக்காது” என்று மனைவி சலித்துக் கொண்டாள்.

அடுத்த நாளும் அதே ஜன்னல் காட்சி.
மனைவியின் அதே மாதிரியான சலிப்பு.

அதற்கு அடுத்த நாளும் அதே காட்சி. அதே மாதிரியான சலிப்பு.

நான்காவது நாள் பக்கத்துவீட்டுப் பெண்மணி துணி காயப்போடுவதை அதே ஜன்னல் வழியாகக் கண்டாள் மனைவி.
என்ன ஆச்சரியம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அத்தனை துணிகளும் பளிச்சென்று சுத்தமாக இருந்தன.

“ ஆஹா…..ஒரே நாளில் பக்கத்து வீட்டுப் பெண் நன்றாகத் துவைக்கக் கற்றுக்கொண்டாளா”? என்று ஆச்சர்யப் பட்டாள் மனைவி.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த கணவன் அவளைப் பார்த்துச் சிரித்தபடி சில வார்த்தைகளைக் கூற, அந்த மனைவி திகைத்துப் பேச்சின்றி நின்றாள்.

அந்தக் கணவன் என்ன கூறியிருப்பான்????????????????????

தாமரை
18-07-2009, 02:54 AM
1 . ஜன்னல் கண்ணாடிகளைத் துடைத்து வைத்தான் கணவன். (மனைவிகள் தான் எத்தனை அப்பாவிகள் மாதிரி கணவர்களை வேலை வாங்குகிறார்கள்.)

2. முதல் நாள் இரவு மழை பெய்து ஜன்னல் கண்ணாடி ஜன்னல் சுத்தமாகி இருந்தது. (இங்கிட்டு கணவன் மனைவி இரண்டு பேருமே சோம்பேறிகள்)

3. இதைப் பற்றிக் கணவன் அந்தப் பெண்ணிடம் வத்தி வைக்க அவளே வந்து கண்ணாடியைத் துடைத்து விட்டுப் போனாள்.. தாவாங்கட்டையை தோளில் இடித்துக் கொண்டு (வீட்ல இராமன் வெளியில கிருஷ்ணன்???)

ஆக மொத்தம் கண்ணாடி ஜன்னல் அழுக்காக இருந்தது என்பதே உண்மை...

சரியா பி.ஜி.கே

aren
18-07-2009, 09:15 AM
இன்றுதான் உன்னுடைய கண்ணாடி ஜன்னலை நீ துடைத்திருக்கிறாய். அதனால்தான் துணிகள் பளிச்சென்று இருக்கின்றன.

பரஞ்சோதி
18-07-2009, 12:20 PM
அந்தக் கணவன் என்ன கூறியிருப்பான்????????????????????

அது ஒன்றுமில்லை அம்புஜா, அந்த அம்மணியின் வீட்டுக்காரர் ஊரிலிருந்து வந்து விட்டாராம் என்று சொல்லியிருப்பார் :)

- கிணற்றுக்கரையிலிருந்து

தாமரை
18-07-2009, 12:29 PM
இன்றுதான் உன்னுடைய கண்ணாடி ஜன்னலை நீ துடைத்திருக்கிறாய். அதனால்தான் துணிகள் பளிச்சென்று இருக்கின்றன.

மனைவி ஜன்னல் கண்ணாடியைத் துடைப்பதா? ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே வீரம்தான். :lachen001::lachen001::lachen001:

பரஞ்சோதி
18-07-2009, 12:32 PM
அதானே!

தலைவர் மிகச் சரியாக சொல்லிட்டீங்க.

- கண்ணாடி துடைப்போர் சங்கம்

விகடன்
18-07-2009, 09:53 PM
தாமரை அண்ணா, பரஞ்சோதி அண்ணா...
இருவரும் வீட்டில் செய்யும் வேலையை நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள்.
இதைத்தானா நம்ம ஓவியனும் வீட்டில் செய்கிறார்??!!?

தாமரை
19-07-2009, 08:32 AM
நம்ம நாடி அவங்க கையில இருக்கற வரை கண்ணாடி நம்ம கையிலதான்..

மதி
19-07-2009, 09:58 AM
நம்ம நாடி அவங்க கையில இருக்கற வரை கண்ணாடி நம்ம கையிலதான்..
:cool::cool::sauer028::sauer028::traurig001::icon_rollout::icon_rollout::fragend005::fragend005::eek::eek::eek::eek::sprachlos020::sprachlos020:

அன்புரசிகன்
19-07-2009, 12:44 PM
தாமரை அண்ணா, பரஞ்சோதி அண்ணா...
இருவரும் வீட்டில் செய்யும் வேலையை நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள்.
இதைத்தானா நம்ம ஓவியனும் வீட்டில் செய்கிறார்??!!?

சிறு திருத்தம். அவர் துடைக்கவில்லை. உடைத்துக்கொண்டிருக்கிறார். :D

mania
20-07-2009, 05:45 AM
அந்தக் கணவன் என்ன கூறியிருப்பான்????????????????????

அது ஒன்றுமில்லை அம்புஜா, அந்த அம்மணியின் வீட்டுக்காரர் ஊரிலிருந்து வந்து விட்டாராம் என்று சொல்லியிருப்பார் :)

- கிணற்றுக்கரையிலிருந்து

ஹா....ஹா...ஹா.....அடுத்த ஐந்தாவது நிமிடம் உன் பதில் கிணத்துக்குள்ளேயிருந்துதான் இருக்கும்......கர்டிசி அம்புஜாஆஆஆஆஆஆஆ......:D:D:D
வீட்டுக்குள்ளேயிருந்து
மணியா....:D:D

தாமரை
20-07-2009, 05:51 AM
அம்புஜா.. அழகிய புஜங்களைக் கொண்டவள்...

தன் புஜபல பராக்கிரமங்களை காட்டிடுவார் என நம்பறாரு தலை...

நமக்கெதுக்கு வம்பு! ஜா (ஹிந்தியில்)

எங்கே இருந்து என்று சொல்லாமல்...

ஒளிந்து கொண்டு குரல் கொடுக்கும்..

பரஞ்சோதி
21-07-2009, 09:08 AM
ஹா! ஹா!

தலை அசத்தல் பதில்,

உங்க வீட்டில் தான் கிணறு இல்லையே, அதான் வீட்டிலிருந்து குரல் கொடுக்கிறீங்க :)

சரி, சரி வாங்க மொட்டை மாடிக்கு துணி காயப்போட, நாம கொஞ்சம் பேசணும்.

நேசம்
21-07-2009, 11:15 AM
எவ்வளவு பிஸியிலும் இத்தனை வேலை பார்க்கிறது ஆச்சர்யம் தான்

பரஞ்சோதி
21-07-2009, 01:26 PM
என்ன நேசம், உங்களுக்கு சமீபத்தில் தான் கல்யாணம் ஆகியிருக்குது போல..

- ஈ.எஸ்.பியுடன்

நேசம்
21-07-2009, 02:29 PM
என்ன நேசம், உங்களுக்கு சமீபத்தில் தான் கல்யாணம் ஆகியிருக்குது போல..

- ஈ.எஸ்.பியுடன்

... 3 வருசம் ஆகுது.இப்பதான் ஆரம்பிச்சுக்கிறென்