PDA

View Full Version : புதிரோ புதிர் எண்-571-05-06-2015

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17 18 19

pgk53
16-06-2008, 05:00 PM
ஹைய்யோ ஹைய்யோ...

நாம வாங்குற மார்க்குண்ணா!!

முட்டை!!!

கண்மனி அவர்களே....நச்சென்ற பதிலை சரியாக கூறிவிட்டிர்கள்.
வாழ்த்துக்கள்.

நாளை அடுத்த புதிர்.

pgk53
20-06-2008, 02:04 PM
புதிர் எண்-293

ஒரு மலைப் பிரதேசத்தில் ஒரு பேராசைகொண்ட சூன்யக்காரக் கிழவி ஒருவள் இருந்தாள்.

அவளுக்குச் சொந்தமான பகுதியில் தங்கம் கிடைத்தது.

ஆனால் அந்தக் கிழவி அதை யாருக்குமே தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்தாள்.

அவளால் தங்கத்தைத் தோண்டி எடுக்க இயலாது.
உடலில் வலுவும் இல்லை. அத்துடன் அவளுக்கு பார்வை கிடையாது…..குருடி.
அதனால் பக்கத்தில் இருந்த நகருக்குச் சென்று வலுவுள்ள வாலிபனாக,,ஒருவனை மட்டும் அழைத்து வருவாள்.

அவன் எடுக்கும் தங்கத்தில் பத்து சவீதம் அவனுக்குக் கொடுப்பதாக வாக்குறுதி அளிப்பாள். ஆனால் அவள் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிப்பாள்.

அவன் தோண்டி எடுக்கும் தங்கம் எவ்வளவு எடையுள்ளது என்பதை அங்கிருந்த நுட்பமான தராசில் எடை பார்த்து,கிழவி வைத்திருந்த மூன்று பைகளில் தங்கத்தைப் பிரித்துப் போட்டு தங்கத்தின் மொத்த எடை என்ன என்பதை அவளிடம் மிகச் சரியாகக் கூறவேண்டும்.

அவளுக்குக் கண் தெரியாது என்ற நினைப்பில் பொய் கூறினால் , அவள் பிசாசை ஏவிவிட்டு பொய் கூறுபவரை கல்லாக மாறவைப்பாள்.

எத்தனையோ வாலிபர்கள் வந்தார்கள்.
அவர்கள் அனைவருமே அவளுக்குக் கண் தெரியாது,
அதனால் நாம் எடையைக் குறைத்துக் கூறினால் அவளால் கண்டுபிடிக்க இயலாது என்று நினைத்து குறைவாகக் கூறுவார்கள்.

ஆனால் கிழவி அவள் பொய் கூறுவதாகக் கூறி அவர்களைக் கல்லாக மாற்றச் சொல்லி பிசாசுக்குக் கட்டளையிடுவாள்.
பிசாசும் பொய் கூறியவரை கல்லாக மாற்றிவிடும்.
கிழவியின் தோட்டம் முழுவதும் கற்சிலைகளாக வாலிபர்கள் நின்றார்கள்.

இந்தத் தடவை ஒரு புதிய வாலிபனை கிழவி அழைத்துவந்தாள்.
தங்கம் எடுப்பதற்குரிய நிபந்தனையைக் கூறினாள்.

அவன் நியாயமாக நடக்கும் சுபாவம் கொண்டவன்.
கொஞ்சம் மதி நுட்பம் கொண்டவனும்கூட .
அதனால் தனக்குக் கிடைக்கும் பத்து சதவீதமே போதுமானதென்று நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டான்.

தான் பொய் கூறாமல் உண்மையே பேசினால் தன்னைக் கல்லாக மாற்ற இயலாது என்றும் புரிந்துகொண்டான்.
அத்துடன் அந்தக் கிழவிக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என்று நினைத்து அதற்குரிய வழியை ஆராய்ந்தான்.

இரவு வந்துவிட்டதால் மறுநாள் காலையில்தான் வேலையைத் தொடங்கவேண்டும் என்று கிழவி கூறினாள்.

அன்று இரவு, கிழவியின் அறையில் இருந்து பேச்சுக்குரல் கேட்க ஆர்வமிகுதியால் மறைந்திருந்து பார்த்தான்.

கிழவியின் முன்னே தங்கத்தைப் போடவேண்டிய மூன்று பைகள் இருந்தன..
அந்தப் பைகள் மந்திர சக்தி கொண்டவை. அவற்றுடன்தான் கிழவி பேசிக்கொண்டிருந்தாள்.

வாலிபனின் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது.

மறுநாள் காலை தங்கம் தோண்டும் பணியைத் தொடங்கினான்.
மாலையில் கிழவியிடம் வந்தான்.

அங்கிருந்த தராசில் தங்கத்தை எடைபோட்டான்.
மூன்று பைகளிலும் தங்கத்தைப் போட்டான்.

கிழவி மொத்தம் எவ்வளவு தங்கம் உள்ளது என்று கேட்டாள்.
வாலிபன் மொத்தம் பதினாறு [16] கிலோ உள்ளது என்றான்.
கிழவி புன்முறுவல் செய்தபடியே, அந்தப் பைகளிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்று கேட்டாள்.

முதல் பை தன்னிடம் பதினாறு கிலோ தங்கம் இருப்பதாகக் கூறியது.

அடுத்த பை தன்னிடம் ஐந்து கிலோ தங்கம் இருப்பதாகவும்,

மூன்றாவது பை தன்னிடம் இரண்டு கிலோ தங்கம் இருப்பதாகவும் கூறியது.

மொத்தம் இருபத்து மூன்று கிலோ தங்கம் என்று கணக்கிட்ட கிழவி, வாலிபன் பொய் கூறி தன்னை ஏமாற்றியதாக முடிவு செய்தாள்.

அவனிடம் “மொத்தம் இருபத்துமூன்று கிலோ தங்கம் இருக்கவேண்டும்.நீ பொய் கூறிவிட்டாய்” என்றாள்.

உடனே பிசாசை அழைத்து, பொய்கூறியவரை கல்லாக மாற்றும்படி ஆனையிட்டாள்.

அடுத்த சில நொடிகளில் அந்த சூன்யக்கார கிழவி கல்லாக மாறிவிட்டாள்.

வாலிபன் கிழவி வைத்திருந்த தங்கத்தை முழுவதுமாக எடுத்துக்கொண்டு சென்று வளமாக வாழ்ந்தான்.

மன்ற நண்பர்களே…….வாலிபன் கல்லாக மாறாமல்-------- கிழவி ஏன் கல்லாக மாறினாள்…??????????????கூறுங்களேன்.

அக்னி
20-06-2008, 03:49 PM
பை 3 --> 2kg
பை 2 --> 3kg + பை 3 --> 5kg
பை 1 --> 11kg + பை 2 + பை 3 --> 16kg

அதாவது
பை 1 இன் உள்ளே 11kg தங்கத்தையும் பை 2 ஐயும் வைத்து,
பை 2 இன் உள்ளே 3kg தங்கத்தையும் பை 3 ஐயும் வைத்து,
பை 3 இன் உள்ளே 2kg தங்கத்தையும் வைத்திருப்பான்.

ஒவ்வொரு பைகளிடமும் தனித்தனியே கேட்கும்போது, முறையே
16kg, 5kg, 2kg தங்கம் தம்மிடமுள்ளதாகக் கூறியுருக்கும். ஆகவே, கிழவி 23kg என கணக்கிட்டுவிட்டாள்.
ஆனால், உண்மை நிறை 16kg தங்கம் மட்டுமே.
எனவே, பொய் கூறியவரைக் கல்லாக்குமாறு கிழவி பிசாசிடம் சொன்னதும், கிழவியை பிசாசு கல்லாக்கிவிட்டது.

இளசு
20-06-2008, 05:02 PM
அருமை அக்னி!

பாராட்டுகள்..
----------------------------------

ஆனாலும்...............

பிஜிகே அவர்கள் வந்து விடை சரி எனச் சொல்லும்வரை -
ட்ரீட்/பார்ட்டி -ன்னும் ஆரம்பிச்சிடாத அக்னி!

ஆதவா
21-06-2008, 07:42 AM
பை 3 --> 2kg
பை 2 --> 3kg + பை 3 --> 5kg
பை 1 --> 11kg + பை 2 + பை 3 --> 16kg

அதாவது
பை 1 இன் உள்ளே 11kg தங்கத்தையும் பை 2 ஐயும் வைத்து,
பை 2 இன் உள்ளே 3kg தங்கத்தையும் பை 3 ஐயும் வைத்து,
பை 3 இன் உள்ளே 2kg தங்கத்தையும் வைத்திருப்பான்.

ஒவ்வொரு பைகளிடமும் தனித்தனியே கேட்கும்போது, முறையே
16kg, 5kg, 2kg தங்கம் தம்மிடமுள்ளதாகக் கூறியுருக்கும். ஆகவே, கிழவி 23kg என கணக்கிட்டுவிட்டாள்.
ஆனால், உண்மை நிறை 16kg தங்கம் மட்டுமே.
எனவே, பொய் கூறியவரைக் கல்லாக்குமாறு கிழவி பிசாசிடம் சொன்னதும், கிழவியை பிசாசு கல்லாக்கிவிட்டது.

வாவ்!!!!!!!!:icon_b: :icon_b:

aren
21-06-2008, 09:37 AM
இது சரியான விடையே. அக்னி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.

கண்மணி
24-06-2008, 07:56 AM
அண்ணன் வர லேட்டாகும் போல இருக்கே..

கேப்பில நான் ஒரு புதிர் போடவா!!!

சோமபுரி நாட்டில மந்திரி இறந்திட்டார். புது மந்திரி வேணும். ராஜா நம்ம மதியூகி விகடகவி வீரராமனிடம் ஆலோசனைக் கேட்டார்.

விகடகவியின் ஆலோசனைப்படி ஊரின் கோவில் குளத்தருகே தகுதி உள்ளவர்கள் அனைவரும் அழைக்கப் பட்டனர்.

அங்கே ஒரு பெரிய பாத்திரம், அதன் அடிப்பகுதியில் 6 அங்குல விட்டத்திற்கு மிகப் பெரிய இரண்டு ஓட்டைகள்.

இந்தப் பாத்திரம் முற்றிலும் நீரால் நிறைத்து வைக்க வேண்டும். பாத்திரத்தின் ஓட்டையை அடைக்கக் கூடாது. மன்னர் தினமும் மாலை 5:00 மணிக்கு வந்து பாத்திரத்தைப் பார்வையிடுவார். யார் பாத்திரத்தை நீரால் நிறைத்து வைக்கிறாரோ அவரே வெற்றியடைவார் என அறிவிக்கப் பட்டது..

ஒரு வார காலத்திற்குப் பிறகு, மதுசூதன் மட்டும் அப்போட்டியில் வெற்றிபெற்றான்.

ஆமாம் நண்பர்களே! மதுசூதன் எப்படி வெற்றி பெற்றான்.

(விகடகவிக்கு சம்திங் வெட்டி என்ற பதில் ரிசர்வ் செய்யப்படுகிறது!)

ஆதவா
24-06-2008, 08:01 AM
அண்ணன் வர லேட்டாகும் போல இருக்கே..

கேப்பில நான் ஒரு புதிர் போடவா!!!

சோமபுரி நாட்டில மந்திரி இறந்திட்டார். புது மந்திரி வேணும். ராஜா நம்ம மதியூகி விகடகவி வீரராமனிடம் ஆலோசனைக் கேட்டார்.

விகடகவியின் ஆலோசனைப்படி ஊரின் கோவில் குளத்தருகே தகுதி உள்ளவர்கள் அனைவரும் அழைக்கப் பட்டனர்.

அங்கே ஒரு பெரிய பாத்திரம், அதன் அடிப்பகுதியில் 6 அங்குல விட்டத்திற்கு மிகப் பெரிய இரண்டு ஓட்டைகள்.

இந்தப் பாத்திரம் முற்றிலும் நிறைத்து வைக்க வேண்டும். பாத்திரத்தின் ஓட்டையை அடைக்கக் கூடாது. மன்னர் தினமும் மாலை 5:00 மணிக்கு வந்து பாத்திரங்களைப் பார்வையிடுவார். யாருடைய பாத்திரம் நிறைந்திருக்கிறதோ அவரே வெற்றியடைவார் என அறிவிக்கப் பட்டது..

ஒரு வார காலத்திற்குப் பிறகு, மதுசூதன் மட்டும் அப்போட்டியில் வெற்றிபெற்றான்.

ஆமாம் நண்பர்களே! மதுசூதன் எப்படி வெற்றி பெற்றான்.

(விகடகவிக்கு சம்திங் வெட்டி என்ற பதில் ரிசர்வ் செய்யப்படுகிறது!)

எது நிறைக்க வேண்டும் என்று சொல்லவில்லையே!! குளத்தடி மண் எடுத்துக் கூட மதுசூதன் நிறைத்திருப்பார்.. மற்றவர்களெல்லாம் நீரை நிறைக்க எண்ணி ஏமாந்திருப்பார்கள்... ஹி ஹி ... நம்ம அறிவுக்கு இவ்ளோதான் எட்டிச்சி..

மறத்தமிழன்
24-06-2008, 08:27 AM
அங்கே ஒரு பெரிய பாத்திரம், அதன் அடிப்பகுதியில் 6 அங்குல விட்டத்திற்கு மிகப் பெரிய இரண்டு ஓட்டைகள்.

இந்தப் பாத்திரம் முற்றிலும் நிறைத்து வைக்க வேண்டும். பாத்திரத்தின் ஓட்டையை அடைக்கக் கூடாது. மன்னர் தினமும் மாலை 5:00 மணிக்கு வந்து பாத்திரங்களைப் பார்வையிடுவார். யாருடைய பாத்திரம் நிறைந்திருக்கிறதோ அவரே வெற்றியடைவார் என அறிவிக்கப் பட்டது..

கேள்வி தெளிவில்லை அம்மணி... மன்னிக்கவும், கண்மணி.

முதலில் ஒரு பாத்திரம் என்கிறீர்கள். பின் யாருடைய பாத்திரம் நிறைந்திருக்கிறதோ எனக்கூறுவதன்மூலம் பல பாத்திரங்கள் என கருத வைக்கிறீர்கள்.

மேலும் ஆதவா சொல்வதுபோல் எதனால் நிரப்பவேண்டுமென்பதிலும் தெளிவில்லை.

கண்மணி
24-06-2008, 08:28 AM
எது நிறைக்க வேண்டும் என்று சொல்லவில்லையே!! குளத்தடி மண் எடுத்துக் கூட மதுசூதன் நிறைத்திருப்பார்.. மற்றவர்களெல்லாம் நீரை நிறைக்க எண்ணி ஏமாந்திருப்பார்கள்... ஹி ஹி ... நம்ம அறிவுக்கு இவ்ளோதான் எட்டிச்சி..

நீரால் தான் நிரப்ப வேண்டும் ஆதவா!..

உங்க மூளையை (களிமண்ணை!!!) உபயோகிச்சி இருக்கீங்க.. :icon_rollout:

மறத்தமிழன், ஆதவா ஆகியோரின் வேண்டுக்கோளிக்கிற்கிணங்க புதிரைச் சரி செய்து இருக்கிறேன்.

ஒரே பாத்திரம்தான். அதை நீரால் தான் நிரப்ப வேண்டும்

மறத்தமிழன்
24-06-2008, 08:49 AM
மதுசூதனன் மன்னன் வரும்போது பாத்தைரத்தை கொண்டுபோய் குளத்தனுள்ளே வைத்திருப்பான். பாத்திரம் நீரினால் நிறைந்திருக்கும்!

aren
24-06-2008, 09:31 AM
அடிப்பகுதியில்தான் ஓட்டையிருக்கிறது. மதுசூதனன் மன்னன் வரும் சில நிமிடங்கள் முன்னதாக பாத்திரதில் நீரைஊற்றி நிரப்பியிருப்பான். அது அடியில் அவ்வளவு சீக்கிரமாக வெளியேறாது காரணம் அதன் அடிப்பகுதி தரையில் தாங்கியிருக்கும்.

pgk53
24-06-2008, 02:49 PM
மதுசூதனன் மன்னன் வரும்போது பாத்தைரத்தை கொண்டுபோய் குளத்தனுள்ளே வைத்திருப்பான். பாத்திரம் நீரினால் நிறைந்திருக்கும்!

அருமை அருமை-----மிக நல்ல புதிர்.

மறத்தமிழனின் நச்சென்ற பதில்.பாராட்டுகள் நண்பரே.

இதை இப்படியும் கூறலாமே மறத்தமிழரே.

அந்த பெரிய பாத்திரத்தை அதைவிட மற்றொரு பெரிய பாத்திரத்தின் உள்ளே வைத்து அந்தப் பாத்திரத்தை நீரினால் நிரப்பலாமே!!!!!!!!!!!!!!

pgk53
24-06-2008, 02:50 PM
பை 3 --> 2kg
பை 2 --> 3kg + பை 3 --> 5kg
பை 1 --> 11kg + பை 2 + பை 3 --> 16kg

அதாவது
பை 1 இன் உள்ளே 11kg தங்கத்தையும் பை 2 ஐயும் வைத்து,
பை 2 இன் உள்ளே 3kg தங்கத்தையும் பை 3 ஐயும் வைத்து,
பை 3 இன் உள்ளே 2kg தங்கத்தையும் வைத்திருப்பான்.

ஒவ்வொரு பைகளிடமும் தனித்தனியே கேட்கும்போது, முறையே
16kg, 5kg, 2kg தங்கம் தம்மிடமுள்ளதாகக் கூறியுருக்கும். ஆகவே, கிழவி 23kg என கணக்கிட்டுவிட்டாள்.
ஆனால், உண்மை நிறை 16kg தங்கம் மட்டுமே.
எனவே, பொய் கூறியவரைக் கல்லாக்குமாறு கிழவி பிசாசிடம் சொன்னதும், கிழவியை பிசாசு கல்லாக்கிவிட்டது.

அக்னி அவர்களே புதிர் போட்டதுமே சுடச்சுட சரியான பதிலை பதிவு செய்தமைக்கு எனது வாழ்த்துக்கள்.
அடுத்த புதிரில் சந்திப்போம்.

அக்னி
24-06-2008, 02:57 PM
அண்ணாமார் சொன்னது போல, நான் சொன்னது சரியாயிடுத்தே... :mini023:
:icon_rollout:
அடுத்ததயும் நமக்குத் விளங்கிற மாதிரி போடுங்க சாரே...

கண்மணி
24-06-2008, 03:04 PM
மறத்தமிழன் அழகாய்ச் சொன்னாலும், பாத்திரத்தில் நீரை அவர் நிரப்பவில்லை. பாத்திரத்தில் நீர் தானே நிரம்பியதாகி விடுகிறது.

எளிய வழி..

இந்தப்பாத்திரத்தை இதைவிடப் பெரிய பாத்திரத்தில் வைத்து
நிரப்ப வேண்டும். ஓட்டைவழியே நீர் வழிந்தாலும் பாத்திரத்தின் அளவுக்கே உயரும். பாத்திரம் நிரம்பியபின் நீரும் வெளியேறாது.

பிஜிகே பிஜிகேதான்.

கண்மணி
25-06-2008, 01:15 AM
இராமனுக்கு ஒரு காரியத்திற்கு சில பொருட்கள் தேவைப்பட்டன. அவை கிடைக்கும் ஹார்டுவேர் கடைக்குப் போனால்.. விலையைக் கேட்டான்

1 வாங்கினால் 10 ரூபாய்
10 வாங்கினால் 20 ரூபாய்
100 வாங்கினால் 30 ரூபாய்.

இராமனுக்குத் தேவைப்பட்டதோ 811.

இராமன் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கி இருப்பான். மிகக் குறைவான தொகைக்கு வழி சொல்பவர்களே வெற்றி பெற்றவர். எப்படி என்றும் விளக்க வேண்டும்.. (ஏதோ ஒரு கும்பல் வாங்கி விற்கத் திட்டம் போடறாப்பில செய்தி வருதே)

SathyaThirunavukkarasu
25-06-2008, 03:37 AM
811 ஐ 270 க்கு வாங்கியிருபான்

30 ரூபாயில் 800-ம்
20 ரூபாயில் 10-ம்
10 ரூபாயில் 1-ம் வாங்கியிருப்பான்

அனுராகவன்
25-06-2008, 04:58 AM
புதிர் நல்ல வளர்ச்சி..
புதிர் போடுங்க..பதிலும் அருமை..
அதற்கு பரிசும் தரலாமே!!
அப்பதான் உற்சாகம் இருகும்.
பதில் அளிக்க நேரம் இலை அனு அப்பீட்டு!!:icon_rollout:

கண்மணி
25-06-2008, 05:03 AM
இராமன் இன்னும் சீப்பாக வாங்கி விட்டார் சத்யா!!!

யோசிச்சுப் பாருங்க உங்க கணக்குப் படி 900 வாங்கினாலும் 270 ரூபாய்தான்.

ஆனால் இராமன் கொடுத்த விலை இன்னும் குறைவு!!!

aren
25-06-2008, 05:20 AM
ராமன் 270 ரூபாய் கொடுத்து 900 வாங்கினான். அவனுக்கு 811 போக அவனிடம் மீதம் 89 இருந்தது. அதை 10 ரூபாய்க்கு ஒன்று என மீண்டும் விற்றுவிட்டான். அதில் அவனுக்கு 890 கிடைத்தது. அவன் எதுவுமே செலவு செய்யவில்லை. அவனுக்கு நிகர லாபமாக 620 ரூபாய் கிடைத்தது.

கண்மணி
25-06-2008, 05:27 AM
பார்த்தீங்களா

(ஏதோ ஒரு கும்பல் வாங்கி விற்கத் திட்டம் போடறாப்பில செய்தி வருதே)

இந்த டிஸ்க்ளெய்மரை உண்மையாக்கிட்டார்..

ஆனால் ஆரென் உங்கள் விடையும் தவறு..

கண்மணி
25-06-2008, 04:11 PM
சரி, இராமன் 30 ரூபாய்க்கு வாங்கி விட்டார் எப்படி என்று மட்டும் சொல்லுங்களேன்!!!

அன்புரசிகன்
25-06-2008, 04:44 PM
100 வாங்கினால் 30 ரூபாய்.

இராமனுக்குத் தேவைப்பட்டதோ 811.

சரி, இராமன் 30 ரூபாய்க்கு வாங்கி விட்டார் எப்படி என்று மட்டும் சொல்லுங்களேன்!!!

இது உங்களுக்கே சரியா படுதா???? :shutup:

pgk53
25-06-2008, 04:46 PM
இராமனுக்கு ஒரு காரியத்திற்கு சில பொருட்கள் தேவைப்பட்டன. அவை கிடைக்கும் ஹார்டுவேர் கடைக்குப் போனால்.. விலையைக் கேட்டான்

1 வாங்கினால் 10 ரூபாய்
10 வாங்கினால் 20 ரூபாய்
100 வாங்கினால் 30 ரூபாய்.

இராமனுக்குத் தேவைப்பட்டதோ 811.

இராமன் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கி இருப்பான். மிகக் குறைவான தொகைக்கு வழி சொல்பவர்களே வெற்றி பெற்றவர். எப்படி என்றும் விளக்க வேண்டும்.. (ஏதோ ஒரு கும்பல் வாங்கி விற்கத் திட்டம் போடறாப்பில செய்தி வருதே)

கண்மனி அன்போடு
போட்ட உங்கள் புதிருக்கு---விடை இங்கே....

இராமன் வாங்க ஹார்டுவேர் கடைக்கு போனான்.
அவன் வாங்கியது நம்பர் பிளேட்.....சரிதானா?
ஒரு இலக்கம் உள்ளது 10 ரூபாய்.
இரண்டு இலக்கங்கள் உள்ளது 20 ரூபாய்.
மூன்று இலக்கங்கள் 30 ரூபாய்.
811 மூன்று இலக்கங்கள்.....அதனால் அதற்கும் 30 ரூபாய்தான்.
அன்புடன் பிஜீகே.....

கண்மணி
26-06-2008, 02:15 AM
அடடா பி.ஜி.கே அண்ணா, அதுக்குள்ள விடையைச் சொல்லிட்டீங்களே.. மக்களை இன்னும் கொஞ்சம் குழப்பலாம்னு இருந்தேன்.

சரி உங்கப் புதிரைக் குடுங்க..!!! எவ்வளவு நாள்தான் காத்திருப்பது

(இனி பி.ஜி.கே அண்ணா விடைச் சொல்லக் கூடாதுன்னு ஒரு டிஸ்கிளெய்மர் போடணும் போல இருக்கு!!)

aren
26-06-2008, 02:38 AM
நல்லாவே ஏமாற்றுகிறீர்கள். நாம் ஒப்புக்கொள்ளமாட்டேன்.

SathyaThirunavukkarasu
26-06-2008, 03:19 AM
கண்மனி அன்போடு
போட்ட உங்கள் புதிருக்கு---விடை இங்கே....

இராமன் வாங்க ஹார்டுவேர் கடைக்கு போனான்.
அவன் வாங்கியது நம்பர் பிளேட்.....சரிதானா?
ஒரு இலக்கம் உள்ளது 10 ரூபாய்.
இரண்டு இலக்கங்கள் உள்ளது 20 ரூபாய்.
மூன்று இலக்கங்கள் 30 ரூபாய்.
811 மூன்று இலக்கங்கள்.....அதனால் அதற்கும் 30 ரூபாய்தான்.
அன்புடன் பிஜீகே.....

அடடா இந்த விஷயம் தெரியாமல் போய்விட்டதே
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!!!!

pgk53
26-06-2008, 10:07 AM
அடடா பி.ஜி.கே அண்ணா, அதுக்குள்ள விடையைச் சொல்லிட்டீங்களே.. மக்களை இன்னும் கொஞ்சம் குழப்பலாம்னு இருந்தேன்.

சரி உங்கப் புதிரைக் குடுங்க..!!! எவ்வளவு நாள்தான் காத்திருப்பது

(இனி பி.ஜி.கே அண்ணா விடைச் சொல்லக் கூடாதுன்னு ஒரு டிஸ்கிளெய்மர் போடணும் போல இருக்கு!!)

சரி ஒத்துக்கொள்கிறேன்.
இனி தாங்கள் போடும் புதிருக்கு முந்திக்கொண்டு நான் விடை கூறமாட்டேன்.
மக்கள் கூறட்டும்...சரிதானே?

இன்று மாலை அடுத்த புதிரைப் பதிகின்றேன்.

அக்னி
26-06-2008, 11:32 AM
நல்லாவே ஏமாற்றுகிறீர்கள். நாம் ஒப்புக்கொள்ளமாட்டேன்.
ஆமாம்... ஆமாம்...
இப்பிடியெல்லாம் (ஏ)மாற்றினால், எப்படி நாங்கள் பதில் சொல்வது...
நானும் ஆரென் அண்ணாவுக்கு ஆதரவளிக்கின்றேன்...

கண்மணி
26-06-2008, 12:38 PM
ஒண்ணு பத்து ரூபா, பத்து இருபது ரூபா, 100 முப்பது ரூபா அப்படின்ன உடனே ஃபைனான்ஸ் கம்பெனியில பணத்தைப் போடறதுக்கு அவசரப்படற நம்ம மக்கள் மாதிரி அவசரப்பட்டா எப்படிங்க, என்னடா விலை வில்லங்கமா இருக்கே அப்படின்னு யோசிக்க வேணாமா?

pgk53
26-06-2008, 03:26 PM
புதிர் எண்-294

நமது வீர தீரக் கதாநாயகன் வீர்சிங் காலையில் முட்டைப் பொறியலின் மேல் {ஆம்லெட்} உப்பும் மிளகுத்தூளும் தூவி ரொட்டியுடன் சேர்த்து ரசித்து உண்டுகொண்டிருந்தான்.

அப்போது வீர்சிங்கின் மனைவியின் தங்கை அங்கே வந்தாள்

மாமா…மாமா…என்ன ஆம்லெட் சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டாள்.

“ம்ம்ம்ம்---பார்த்தால் எப்படி தெரிகிறது” என்ற வீர்சிங், அவளது கையில் ஒரு அடி நீளத்துக்கு ஒரு நூலும் , கண்ணாடி தம்ளரில் முக்கால் பாகம் அளவில் நீர் நிறப்பப்பட்டு, அதன் மேல் ஒரு சிறிய ஐஸ் கட்டியும் மிதந்துகொண்டிருந்தததைக் கண்டான்.
.

வீர்சிங் தனது கையைக் கவனிப்பதைக் கண்ட அவள்,” மாமா……ஒரு சிறிய புதிர்.
நீங்கள் பெரும் திறமைசாலி என்று எனது அக்கா, அடிக்கடி பீற்றிக்கொள்வார்கள்.
எங்கே உங்கள் திறமையைப் பார்ப்போம்” என்று கூறியபடி நூலையும், கிளாஸையும் வீர்சிங் முன்னே வைத்தாள்.

வீர்சிங்கிற்கு ஒன்றும் விளங்காமல் அவளை குழப்பமுடன் பார்த்தான்.

“மிகவும் சுலபமான ஒன்றுதான்..இந்த கிளாஸில் மிதக்கும் ஐஸ் கட்டியை, இந்த நூலால் வெளியே எடுக்கவேண்டும். நூலால் எடுக்கும்போது ஐஸ் கட்டியை நீங்கள் எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது.உங்களுக்கு விருப்பமானால் முடிச்சுப் போட்டும் எடுக்கலாம்.ஆனால் நூலால்தான் எடுக்கவேண்டும்.

உங்களால் முடியுமா”????? என்று சவால் விட்டாள்.

நமது வீர்சிங் மிகவும் ரோஷக்காரனாயிற்றே?????.
தன்னால் முடியாது என்று சொல்லமாட்டானே!!!!!!!!!.

சிறிது நேரம் தீவிரமாக ஆலோசனை செய்தபின்பு, மைத்துனியின் சவால்படியே ஐஸ் கட்டியை நூலால் வெளியே எடுத்து சவாலில் வெற்றியடைந்தான்.

என்ன மன்ற நண்பர்களே வீர்சிங்கே இந்த சவாலில் வெற்றியடைந்தபோது நம்மால் முடியாதா? என்ன?????????

விடையோடு வாருங்கள்.

மன்மதன்
26-06-2008, 03:46 PM
ஐஸ்கட்டியின் மீது நூலை வைத்து அதன் மீது உப்பை கொட்டினால் சிறிது நேரத்தில் ஐஸ்கட்டியுடன் நூல் ஒட்டிக்கொள்ளும் என்று படித்திருக்கிறேன்.. அப்படியே தூக்கிடலாம்...

சரியா அண்ணே..??

பூமகள்
26-06-2008, 04:37 PM
ஐஸ்கட்டியின் மீது நூலை வைத்து அதன் மீது உப்பை கொட்டினால் சிறிது நேரத்தில் ஐஸ்கட்டியுடன் நூல் ஒட்டிக்கொள்ளும் என்று படித்திருக்கிறேன்.. அப்படியே தூக்கிடலாம்...

சரியா அண்ணே..??
தப்பு தப்பு... உப்பில்லே... NaCl..! :lachen001::lachen001:

(இப்படி சொன்னாத்தான் தசாவதாரம் பார்த்த எபக்டு போல இருக்கும்..!! :p:cool::rolleyes: :icon_rollout::icon_rollout:)

தீபன்
27-06-2008, 12:44 AM
அடிக்கடி வந்து பாத்து தெரிஞ்ச புதிரா இருந்தா சந்தோசத்தோட நம்ம புத்திசாலித்தனத்தை மன்ற மக்களுக்கு காட்ட்லாம்னுபதிலளிக்க புறப்பட்டா அதுக்கிடையில யாராவது புகுந்திர்றாங்க...
அடப் போங்கையா... எப்பவும் வந்து இப்டி கொமன்ஸ் பண்ணிட்டு போறதே என் நிலமையச்சு...!

aren
27-06-2008, 02:16 AM
மன்மதன் சொல்வது சரிதான். அதுபோல் பூமகள் சொல்வதும் சரிதான்.

அட, குழப்பிட்டேனா, நானும் தசாவதாரம் பார்த்திட்டோம்லா, அந்த எபஃக்ட்தான் இது.

கண்மணி
27-06-2008, 02:37 AM
மன்மதன் சொல்வதும் சரிதான்
பூமகள் சொன்னதும் சரிதான்
தீபனின் கவலையும் சரிதான்
ஆரென் சொல்வதும் சரிதான்..
இப்படி நான் சொல்றதும் சரிதான்..
அதுக்கு ஆமாம் போடப் போற அடுத்த பதிவாளரும் சரிதான்
:D :D :D

SathyaThirunavukkarasu
27-06-2008, 03:54 AM
ஆமாம் ஆமாம் ஆமாம்........

விகடன்
27-06-2008, 05:05 AM
உப்பெல்லாம் வேலைக்காகாது. ஏனென்றால், ஒரு கரைசலின் உறைநிலை சாதார நீரைவிட குறைவாகும் (வெப்பநிலையில் மறை பெறுமானத்தில் அதிகம்) உப்பை ஐஸ்கட்டியினுள் போட்டால் அந்த நீர் கரைசலாக உறைநிலையிலிருந்த ஐஸ்க்கட்டி தீரவநிலையை அடையும். அதாவது உருகும். ஆனால் மீண்டும் உறையாதே... உறைந்தால்த்தானெ அந்த நூலுடன் ஒட்டினால்ப்போல இருக்கும்.

விகடன்
27-06-2008, 05:10 AM
அமுக்கத்தினை ஒரு ஐஸ்கட்டியின்மீது பிரயோகிட்தால் அந்த இடத்தில் உள்ள திண்மம் திரவமாக மாறும். அதாவது, நீலினால் ஐஸ்க்கட்டிமீது விசையை/ அழுத்தத்தை கொடுக்க தன்னாலேயே நூல் ஐஸ்க்கட்டியினுள் புதையுறும். பின்னர் நூலை வெறுமனே பிடித்து இழுத்தால் ஐஸ்க்கட்டியும் சேர்ந்தே வெளிவரும்.

பி.கு: பனிசறுக்கில் விளையாடுபவரும் இதன் கருவை மையமாகக் கொண்டே கத்தி விளிம்பையுடைய பாதணிகளை அணிந்து விளையாட்டு சாகசங்கள் செய்கின்றனர்.

aren
27-06-2008, 05:25 AM
விராடன் சொல்வதிலும் உண்மை இருக்குது போலிருக்கு.

கண்மணி
27-06-2008, 10:05 AM
விராடன் 3289
விராடன் 3290

எந்த விராடன் சொல்றது சரிங்கண்ணா?

aren
27-06-2008, 10:12 AM
விராடன் 3290தான் சரி.

pgk53
29-06-2008, 03:35 PM
ஐஸ்கட்டியின் மீது நூலை வைத்து அதன் மீது உப்பை கொட்டினால் சிறிது நேரத்தில் ஐஸ்கட்டியுடன் நூல் ஒட்டிக்கொள்ளும் என்று படித்திருக்கிறேன்.. அப்படியே தூக்கிடலாம்...

சரியா அண்ணே..??

மிகச் சரியான பதில் மன்மதரே....வாழ்த்துக்கள்.......
சந்தேகம் இருப்பவர்கள் செய்முறையாகச் செய்து பார்த்துவிடுங்களேன்.

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
29-06-2008, 03:36 PM
அன்பு மன்ற நண்பர்களே.....

நான் நாளை ஒரு மாத விடுப்பில் தாயகம் புறப்படுகின்றேன்.

அனைவருக்கும் வணக்கம் பல.

pgk53
29-06-2008, 03:38 PM
புதிர் எண்-295

ஒரு திறமை வாய்ந்த வேட்டைக்காரன் அந்த அடர்ந்த கானகத்தில் நல்ல வேட்டை கிடைக்குமென்று துப்பாக்கியுடன் சுற்றிக்கொண்டிருந்தான்..

ஒரு இடத்தில் இருந்த ஒரு பலகையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டான்.
அந்தப் பலகை அம்பைக் குறி வைத்து எய்து பழகும் பலகையாகும். டார்கெட் பலகை என்று சொல்வார்கள். அதில் மிகச் சரியாக நடுப்பகுதியில் இருந்த புள்ளியில் ஒரு அம்பு பாய்ந்திருந்தது.
அதைக் கண்ட வேட்டைக்காரன்,” அடடா….எப்பேர்ப்பட்ட குறி இது. இதை எய்தவன் மிகச் சிறந்த வில்லாளியாகத்தான் இருக்கவேண்டும்.” என்று வாய்விட்டுப் பாராட்டியபடி அக்கம் பக்கத்தில் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தான்.

தூரத்தில் ஒரு ஆள் இருப்பதைக்கண்ட வேட்டைக்காரன் அங்கே விரைந்து சென்றான்.
அங்கே இருந்தது வேறு யாருமல்ல . நமது வீரதீர நாயகன் வீர்சிங்தான்.
அவனிடம், அந்தப் பலகையைக் காட்டி அதில் மிகச் சரியாக அம்பை எய்தது யார் என்று கேட்டான்.
அதற்கு வீர்சிங் தான்தான் அம்பு எய்ததாகக் கூறினான்.
ஆனால் வேட்டைக்காரன் அதை நம்பவில்லை.
“எங்கே உனது விரல்களைக் காட்டு” ஏன்றான்.
வீர்சிங்கின் விரல்கள் மிருதுவாக இருப்பதைக் கண்ட வேட்டைக்காரன்” டேய் …அநாவசியமாகப் பொய் சொல்லாதே.! ஒரு வில்லாளிக்கு இருக்கவேண்டிய கடினமான உறுதிவாய்ந்த விரல்கள் உனக்கு இல்லை..அதனால் நீ சொல்வதை நான் நம்பப்போவதில்லை.” என்றான்.

ஆனால் வீர்சிங், கடவுள் மேல் ஆணையிட்டான். அந்த அம்பை தான்தான் எய்ததாகக் கூறினான்.

ஆனாலும் வேட்டைக்காரன் நம்பவில்லை.” ஒருவேளை நீ, பலகையின் அருகே சென்று, அம்பை மிகச் சரியாக நடுவில் பொருத்திவைத்து, எதையாவதை வைத்து அம்பை அடித்து இறக்கியிருப்பாய் என்றுதான் நினைக்கிறேன்” என்றான்.

ஆனால் வீர்சிங் “ அடடா….அப்படியெல்லாம் இல்லை. என் குல தெய்வத்தின்மேல் ஆனையிட்டுக் கூறுகிறேன். இந்த அம்பை எய்தது நான்தான். அதுவும் நூறு அடி தூரத்தில் இருந்து எய்தேன்” என்று ஆயிரம் சத்தியங்கள் செய்தான்.

வேட்டைக்காரன் குழப்பம் அடைந்தான். எப்படி எனது அனுமானம் தவறியது என்று பலவாறு சிந்தித்தபடி அங்கிருந்து சென்றான்.

நண்பர்களே….உண்மையிலேயே வீர்சிங்கிற்கு குறிபார்த்து அம்பு எய்யத் தெரியாது.வேட்டைக்காரனின் அனுமானம் மிகச் சரியானதுதான்.,
ஆனாலும் வீர்சிங் சத்தியம் செய்தது உண்மைதான் பொய்யாக சத்தியம் செய்யவில்லை.

அப்படியானால் நடந்தது என்ன????????? நீங்கள் கூறுங்களேன்.!!!!!!!!!!!!!!!!!!!!!

தீபன்
29-06-2008, 10:08 PM
வீர்சிங் அம்பை எய்தது வேறு இலக்கை நோக்கி இருக்கலாம். அது தற்செயலாக 100அடிக்கு அப்பாலிருந்த இலக்குப் பலகையில் நடுப்பகுதியில் போய் தைத்திருக்கலாம்...
(இவ்ளோதான் யோசிக்க முடிஞ்சுதுங்க... )

கண்மணி
30-06-2008, 03:32 AM
1. ஒரு நூறு அடி நீளமுள்ள குழாய். அதன் அந்தப் பக்கம் டார்கெட்.. இந்தப் பக்கம் வீர்சிங். குழாய் வழியாக அம்பை எய்ய சரியாக சதக்,.,,

2. பெரிய பலகையின் மீது 100 அடி தூரத்திலிருந்து அம்பு எய்வது. அப்புறம் அது எங்கு சதக்கோ அங்கே டார்கெட் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்வது..

3. டார்கெட்டின் மையப் பகுதியிலிரிந்து ஒரு நைலான் கயிறை சுருக்கிட்டுக் கட்டி அதை வில்லில் கட்டிக் கொள்வது. அம்பின் மேல் ஒரு கயிற்றாலே, காகிதத்தாலோ வளையமுண்டாக்கி அந்தக் கயிறை நைலான் கயிற்றில் மாட்டி விடுவதால்.. அம்பு நைலான் கயிற்றின் துணையால் டார்கெட்டின் சரியான இடத்தில் சதக்.. அப்புறமா இந்த ஒட்டு வேலையையும் கயிற்றையும் நீக்கி விடலாம்..

4. டார்கெட்டின் மையப் பகுதியில் முடிச்சிட்டு ஒரு இரப்பர் கயிறைப் பொருத்தி அதன் மறுமுனையில் அம்பை இணைத்து இழுத்து விட டார்கெட்டின் மையப் புள்ளியை நோக்கி ஒரு இழு விசை செயல்படுவதால் அம்பு டார்கெட்டின் மையத்தில் பாயும். ஆனால் இதில் காற்றும் புவியீர்ப்பு விசையும் அம்பின் பாதையில் மாற்றம் ஏற்படுத்தக் கூடும்.

இப்படி பல ஐடியாக்கள் கைவசம் இருக்குங்கோ பி.ஜி.கே அண்ணா!!!

நம்ம வீர்சிங்கோட கைகள் சாஃப்ட் அதனால் நேருக்கு நேர் அம்பு எய்திருக்க முடியாது..(100 அடி தூரம் பொகும் முன்பே கீழே விழுந்திருக்கும் அல்லது பாதியில் நின்றிருக்கும்.)

அதனால் உயரமான இடத்திலிருந்து புவியீர்ப்பு சக்தியின் துணை கொண்டு, மேற்கண்ட "கைய்டட் ஏரோ டெக்னாலஜி" மூலம் அம்பெய்திருக்கிறார் நம்ம வீர்சிங்.. :icon_b:

aren
30-06-2008, 03:52 AM
என்னவோசொல்லி இப்படி குழப்பறிங்களே!!! எனக்கு ஒன்னுமே புரியவில்லை

விகடன்
30-06-2008, 10:57 AM
முதலில் ஒரு பலகையில் அம்பை எய்து அதன்பின்னர் அது துளைத்த இடத்தை மையமாக வைத்து "டார்கெட் பலகையினை " உருவாக்கியிருப்பான்.

கண்மணி
30-06-2008, 11:44 AM
முதலில் ஒரு பலகையில் அம்பை எய்து அதன்பின்னர் அது துளைத்த இடத்தை மையமாக வைத்து "டார்கெட் பலகையினை " உருவாக்கியிருப்பான்.

வீர்சிங்கின் விரல்கள் மிருதுவாக இருப்பதைக் கண்ட வேட்டைக்காரன் டேய் அநாவசியமாகப் பொய் சொல்லாதே.! ஒரு வில்லாளிக்கு இருக்கவேண்டிய கடினமான உறுதிவாய்ந்த விரல்கள் உனக்கு இல்லை...அதனால் நீ சொல்வதை நான் நம்பப்போவதில்லை. என்றான்

இதைக் கவனிக்கலையா நீங்க!! 100 அடி தூரம் முதல்ல அம்பு போயிருக்காது..

ஓவியா
30-06-2008, 12:10 PM
அடடா.....மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்களே ..... சகோதரி ஓவியா.
நான் சொல்லவந்ததற்கும் மேலாக உங்கள் கற்பனை வளம் பெருக்கெடுத்து ஓடியிருக்கின்றது.
அற்புதமான பதில்.
சகோதரி ஓவியாவுக்கு எனது மனதார்ந்த வாழ்த்துக்கள்.

மீண்டும் அடுத்த புதிரில் சந்திப்போம்.

அப்பாடா ஒரு முறையாவது பரிச வாங்கியாச்சே. நன்றி அண்ணா.

ஆனாலும் எது சரியான விடை அண்ணா? :D

தீபன்
30-06-2008, 11:31 PM
றொம்ப நாளைக்கப்புறம்... எப்ப வந்திங்க சகோதரி...?

மன்மதன்
01-07-2008, 01:47 PM
மிகச் சரியான பதில் மன்மதரே....வாழ்த்துக்கள்.......
சந்தேகம் இருப்பவர்கள் செய்முறையாகச் செய்து பார்த்துவிடுங்களேன்.

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

நன்றி பிஜிகே..

கண்மணி
07-07-2008, 01:07 PM
பி.ஜி.கே அண்ணா! இங்க கொஞ்சம் கவனியுங்களேன்!

பாரதி
07-07-2008, 02:06 PM
அன்பு மன்ற நண்பர்களே.....

நான் நாளை ஒரு மாத விடுப்பில் தாயகம் புறப்படுகின்றேன்.

அனைவருக்கும் வணக்கம் பல.

பிஜிகே விடுமுறையில் ஊருக்கு சென்றிருக்கிறார். இன்னும் மூன்று வாரங்களில் வருவார்.

விகடன்
07-07-2008, 02:17 PM
வீர்சிங்கின் விரல்கள் மிருதுவாக இருப்பதைக் கண்ட வேட்டைக்காரன் டேய் அநாவசியமாகப் பொய் சொல்லாதே.! ஒரு வில்லாளிக்கு இருக்கவேண்டிய கடினமான உறுதிவாய்ந்த விரல்கள் உனக்கு இல்லை...அதனால் நீ சொல்வதை நான் நம்பப்போவதில்லை. என்றான்

இதைக் கவனிக்கலையா நீங்க!! 100 அடி தூரம் முதல்ல அம்பு போயிருக்காது..

அதை கவனித்தபடியால்த்தான் இந்த பதில்.
முதல் முறை எய்பவனிற்கு கைகள் வைரம்பாய்ந்தோ, விரல்கள் காய்த்தோ இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு குறித்த திசைக்கு அம்பை பாய்ச்ச பார்வையும் உடலில் சற்று வலிமையும் இருந்தால் போதுமானது.

விளங்காவிட்டால் உங்களுக்காக.
ஒரு பலகையை ஓரிடத்தில் வைப்பது,
அதற்கு அம்பை எய்வது. அது அந்த பலகையில் எங்கு வேண்டுமானாலும் குத்தி நிக்கட்டும்.
அது குத்தி நிற்கும் புள்ளியை மையமாகக் கொண்டு வர்ணங்களை தீட்டி டார்கெட் பலகையினை உருவாக்குவது.

புரியாவிட்டால் திரும்ப திரும படித்து பாருங்கள்.. கேள்விகேளுங்கள். வரவேற்கின்றேன். புரிந்தவரைக்கும் சொல்லி எவ்வ்விடத்திலிருந்து புரியவில்லை என்றோ அல்லது எவ்வாற்று புரிந்து வைத்திருக்கிற்றீர்கள்ள் என்றோ சுட்டிக்காட்டி கேள்விகளை கேட்டால் விளங்கப்படுத்த இலகுவாக இருக்கும்...
இல்லை,
என்னில் பிழையாயின்,
திருத்தி மேற்கொண்டு பதிவுகளை மேற்கொள்ள ஏதுவாக அமையும்.

கண்மணி
15-07-2008, 12:21 AM

இதே முறை என் பதிலில் இருப்பதைப் பார்க்கலியா விராடன் அண்ணா?

2. பெரிய பலகையின் மீது 100 அடி தூரத்திலிருந்து அம்பு எய்வது. அப்புறம் அது எங்கு சதக்கோ அங்கே டார்கெட் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்வது..

100 அடி தூரத்திலிருந்து அம்பெய்யத் தெரியாத ஒருவர் அம்பெய்தால், அது டார்கெட்டில் பட்டு கீழே விழத்தான் அதிகம் வாய்ப்பு இருக்கு. குத்தி நிற்பதற்கு வாய்ப்பு குறைவுதான். விராடன் அண்ணே, முயற்சி பண்ணி இருக்கீங்களா?

துப்பாக்கி என்றால் குண்டின் வேகம் சுடுபவனால் தீர்மானிக்கப் படுவதில்லை..

அம்பின் வேகம் எய்பவனால் தீர்மானிக்கப் படுகிறது.. நாணிழுத்து வில் வளைக்க உறுதியும், போகும் அம்பு நேராய்ப் போக பயிற்சியும் தேவை. அம்பு கோணையாய்ப் போனால் பலகையில் குத்தாமல், மந்திரிப் பதவி கிடைத்த அரசியல்வாதி மாதிரி டபக்குன்னு டார்கெட் கால்ல விழுந்திடும்.

சேரன்கயல்
26-07-2008, 03:55 AM
விராடன் சிங், கண்மணி சிங் இரண்டு பேர் சொல்வதும் சரியென்றே வீர்சிங் சொல்கிறார்...பிகேஜி அண்ணன் என்ன சொல்வாரோ?

pgk53
03-08-2008, 03:42 PM
அன்பு நண்பர்களே வணக்கம்.
விடுமுறி முடிந்து பணியிடம் திரும்பிவிட்டேன்.
புதிருக்கு பதில்களைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி.

முதலில் ஒரு பலகையில் அம்பை எய்து அதன்பின்னர் அது துளைத்த இடத்தை மையமாக வைத்து "டார்கெட் பலகையினை " உருவாக்கியிருப்பான்.

விராடன் அவர்கள் சரியான விடையை நச்சென்று கூறிவிட்டார்.

டார்கெட் பலகையை அம்பு தைத்த பிறகுதான் உருவாக்கினான்.
நூறு அடி தூரத்தில் இருந்துதான் அம்பை எய்தான்.

அதாவது ஒரு பெரிய பலகையை வைத்துவிட்டு, நூறு அடி தூரம் செய்து அம்பை எய்தான்.பெரிய பலகை என்பதால் குறி உத்தேசமாக வைத்து அம்பை விட்டதினால் பலகையின் ஓர் இடத்தில் பாய்ந்தது. பிறகு அந்த இடத்தை மட்டும் கொஞ்சம் அகலமாக அறுத்து எடுத்து ஒரு இடத்தில் தொங்கவிட்டான்.

சரியான பதிலைச் சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள்.
வாருங்கள் அடுத்த புதிருக்குப் போகலாம்.

pgk53
03-08-2008, 03:43 PM
புதிர் எண்-296

சுரேஷின் அப்பாவும் அம்மாவும் பக்கத்து ஊருக்கு ஒரு முக்கிய வேலையாகச் செல்லவேண்டியிருந்தது..ஆனால் சுரேஷை உடன் அழைத்துச் செல்ல இயலவில்லை.

ஏனென்றான் அவனது கல்லூரி தேர்வுகள் ஆரம்பம் ஆகியிருந்தது.

அதனால் சுரேஷை அழைத்து, “ சுரேஷ்….ஒரு முக்கிய வேலையாக நாங்கள் வெளியூர் செல்லவேண்டியுள்ளது.நீ வேண்டுமானால் உனது நண்பன் முரளியை துணைக்கு அழைத்துக்கொள்.நாளை மாலையில் நாங்கள் வந்துவிடுவோம்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள்.

வாசல்வரை போன அப்பா மீண்டும் திரும்பிவந்து, வெளியே இருந்து ஒரு ஜின் பாட்டிலை எடுத்துப் பார்த்தார். அதில் முக்கால்வாசிக்கும் மேலாக ஜின் மீதம் இருந்தது.சுரேஷின் அப்பா மிகவும் கண்டிப்பானவர்.
தனது பிள்ளைக்கு குடிப்பழக்கம் வந்துவிடக் கூடாது என்ற கருத்துக் கொண்டவர்.

அதனை அடிக்கடி தன் மகனுக்கு நினைவும் ஊட்டுவார்.
சுரேஷும் இதுநாள்வரை சமர்த்தாகத்தான் இருந்துவந்தான்.

அப்பா ஜின் பாட்டிலை எடுத்து குளிர் பதனப் பெட்டியைத் திறந்து உள்ளே வைத்தார்.

பிறகு ஒன்றும் பேசாமல் சென்றார்.

அன்று இரவு சுரேஷும் அவனது நண்பன் முரளியும் ஒழுங்காகத்தான் படிக்க ஆரம்பித்தார்கள்.

கொஞ்ச நேரம் சென்றது.
சுரேஷின் மனதில் அவனது அப்பா வைத்துவிட்டுச் சென்ற ஜின்பாட்டிலே ஸ்லோமோஷனில் ஓடிக்கொண்டிருந்தது.
கொஞ்சநெரம் போனது.

ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்தான் சுரேஷ்.
குளிர் பதனப் பெட்டியைத் திறந்தான்.
ஜின்பாட்டிலை வெளியே எடுத்தான்.
இரண்டு கிளாஸ்களை எடுத்தான்.
அவனுக்கும் நண்பனுக்கும் இரண்டிலும் நிறைத்தான்.
முரளி முதலில் தயங்கினாலும், பிறகு சுரேஷ் கொடுத்த தைரியத்தில் ஜின்னைக் குடித்தான்.

அடுத்தாற்போல் சுரேஷ் அந்த ஜின் பாட்டிலில் முதலில் எந்த அளவில் நிறம்பியிருந்ததோ, அதே அளவுக்கு தண்ணீரை நிரப்பினான். கவனமாகப் பார்த்தான் ஜின்னின் கலரிலோ அல்லது அளவிலோ எந்த மாறுதலும் தெரியவில்லை.

ஜின் பாட்டில் எங்கே இருந்ததோ அதே இடத்தில் கவனமாக வைத்துவிட்டான்.
பிறகு நிம்மதியாக கொஞ்சநேரம் படித்துவிட்டு தூங்கினார்கள்.

மறுநாள் சுரேஷின் அப்பாவும் அம்மாவும் வந்தார்கள்.
சிறிது நேரம் கழிந்தது.
அப்பா மெதுவாக குளிர்பதனப் பெட்டியருகே சென்றார்.
திறந்தார்.

ஜின் பாட்டிலை எடுத்தார்.
கோபமாக சுரேஷைப் பார்த்தார்.
“ சுரேஷ்…..உனக்கு நான் படித்துப் படித்துச் சொல்லியிருக்கின்றேன்.
எந்தக் காரணம் கொண்டும், எந்தச் சூழ்நிலையிலும் குடிக்கக்கூடாது என்று எத்தனைமுறை கூறினேன்.ஒருநாள் நான் இல்லையென்றதும் இந்த ஜின்னை எடுத்துக் குடித்திருக்கின்றாய்” என்று கடுமையான கோபத்துடன் கத்த ஆரம்பித்தார்.

சுரேஷ் இதை எதிர்பார்க்கவே இல்லை. அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டான்.

நண்பர்களே…..சுரேஷ் எவ்வளவோ கவனமாக செய்திருந்தபோதிலும் அவனது அப்பாவுக்கு எப்படி அவன் செய்த திருட்டுத்தனம் தெரியவந்தது??????????????.

விகடன்
03-08-2008, 03:48 PM
விராடன் அவர்கள் சரியான விடையை நச்சென்று கூறிவிட்டார்.

டார்கெட் பலகையை அம்பு தைத்த பிறகுதான் உருவாக்கினான்.
நூறு அடி தூரத்தில் இருந்துதான் அம்பை எய்தான்.

அதாவது ஒரு பெரிய பலகையை வைத்துவிட்டு, நூறு அடி தூரம் செய்து அம்பை எய்தான்.பெரிய பலகை என்பதால் குறி உத்தேசமாக வைத்து அம்பை விட்டதினால் பலகையின் ஓர் இடத்தில் பாய்ந்தது. பிறகு அந்த இடத்தை மட்டும் கொஞ்சம் அகலமாக அறுத்து எடுத்து ஒரு இடத்தில் தொங்கவிட்டான்.

சரியான பதிலைச் சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள்.
வாருங்கள் அடுத்த புதிருக்குப் போகலாம்.

இதை கண்மணிக்கு புரியவையுங்கள் அண்ணா.
தாங்க முடியவில்லை அவரின் லொள்ளு. ஏதோ என்னில் குற்றம் பிடித்து தான் சொன்னது சரி என்று நிரூபிக்க வாதாடுபவர் போலவே வாதாடினார் பாருங்கோ.
நல்ல வேளை நேரிற்கு நேராக வாக்குவாதப்படவில்லை. அப்படி நடந்திருந்தால் என்னை இரத்தக்காயங்களோடுதான் பார்த்திருக்க முடியுமோ என்னமோ...!!??

அதாலயே சத்தம் போடாமல் "கம்" என்று இருக்க வேண்டியதாச்சு.

விகடன்
03-08-2008, 03:57 PM
புதிர் எண்-296 இற்கான விடைகாணும் முயற்சி...

எதனோலின் (அல்க்ககோல்) கனவளவு வெப்பநிலையுடன் பெரிய மாற்றத்தை கொண்டுவராது. ஆனால் நீரின் கனவளவு வெப்பநிலைக்கு ஏற்ப மாறுமடும். வெப்பநிலை குறைய அதன் கனவளவும் குறைவடையும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது அந்த எதனோலின் கனவளவை அறை வெப்பநிலையில் பார்த்துவிட்டு போன தந்தை மீண்டும் வந்து பார்க்கையில் அதன் வெப்பநிலை குறைந்திருந்த போதிலும் கனவளவு குறையாமல் இருந்திருந்தால் கண்டுபிடித்திருக்கமாட்டார். ஆனால் மகனோ நீரை விட்டு வைத்தபடியால் அதன் கனவளவு குறைந்து காணப்பட்டிருக்கும். அதை வைத்து அவர் கண்டுபிடித்திருப்பார்.

lenram80
03-08-2008, 05:54 PM
விராடன் விடையில் சின்ன மாற்றம். கன அளவு குறையாது. அதிகரிக்கும்.

இது தான் விடை.:-
அவன் அப்பா வந்து பார்த்த போது, குறைந்த அளவு ஜின்னில் பனிக்கட்டி (சுரேஷ் ஊற்றிய தண்ணீர்) மிதந்து கொண்டிருந்ததால், அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.
(இன்னும் சொல்லவென்றால், பாட்டிலின் மேல் பகுதியான அதன் நுனி வரை பனிக்கட்டி நிரம்பியிருக்கும். ஏனென்றால், ஜின் முதலில் முக்கால் வாசிக்கும் மேலாக இருந்ததால்..)

pgk53
04-08-2008, 01:34 AM
சபாஷ்-----சரியான போட்டி!!!!
தலை....விராடன் அவர்களே.....இளம்புயல் மோதுகிறது...கவனம்.

விகடன்
05-08-2008, 06:50 AM
விராடன் விடையில் சின்ன மாற்றம். கன அளவு குறையாது. அதிகரிக்கும்.

நீரின் சிறப்பியல்பு,
அதன் வெப்பநிலை குறைய குறைய கனவளவும் குறைந்தே செல்லும். அதுவும் 4 பாகை செல்சியஸ் வரையே. அதன் பின்னர் நீரின் கனவளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.

இங்கே, புதிரின் படி, மதுவை பனிக்கட்டியாக உறையும் வெப்பத்தில் வைக்கமாட்டார்கள். விரும்பிய நேரம் அதை எடுத்து பருகக்கூடிய வகையிலும் இருக்கும். ஆகவே அது 4 பாகை செல்சியசிற்கு மேற்பட்ட வெப்பநிலையில்த்தான் இருக்க வேண்டும். அதனால் வெப்பநிலையுடன் கனவளவு நேர்விகிதமாக குறையுமியல்பே இங்கு சரியென கூறுகின்றேன்..

சபாஷ்-----சரியான போட்டி!!!!
தலை....விராடன் அவர்களே.....இளம்புயல் மோதுகிறது...கவனம்.

ஆமாம் அண்ணா...
கொஞ்சம் உஷாரோடதான் இருக்க வேண்டும்.

இளம்புயலோ!!?
சூறாவளியோ..!!???
யார் கண்டது.

pgk53
09-08-2008, 01:34 PM
நீரின் சிறப்பியல்பு,
அதன் வெப்பநிலை குறைய குறைய கனவளவும் குறைந்தே செல்லும். அதுவும் 4 பாகை செல்சியஸ் வரையே. அதன் பின்னர் நீரின் கனவளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.

இங்கே, புதிரின் படி, மதுவை பனிக்கட்டியாக உறையும் வெப்பத்தில் வைக்கமாட்டார்கள். விரும்பிய நேரம் அதை எடுத்து பருகக்கூடிய வகையிலும் இருக்கும். ஆகவே அது 4 பாகை செல்சியசிற்கு மேற்பட்ட வெப்பநிலையில்த்தான் இருக்க வேண்டும். அதனால் வெப்பநிலையுடன் கனவளவு நேர்விகிதமாக குறையுமியல்பே இங்கு சரியென கூறுகின்றேன்..

ஆமாம் அண்ணா...
கொஞ்சம் உஷாரோடதான் இருக்க வேண்டும்.

இளம்புயலோ!!?
சூறாவளியோ..!!???
யார் கண்டது.

விராடன் விடையில் சின்ன மாற்றம். கன அளவு குறையாது. அதிகரிக்கும்.

இது தான் விடை.:-
அவன் அப்பா வந்து பார்த்த போது, குறைந்த அளவு ஜின்னில் பனிக்கட்டி (சுரேஷ் ஊற்றிய தண்ணீர்) மிதந்து கொண்டிருந்ததால், அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.
(இன்னும் சொல்லவென்றால், பாட்டிலின் மேல் பகுதியான அதன் நுனி வரை பனிக்கட்டி நிரம்பியிருக்கும். ஏனென்றால், ஜின் முதலில் முக்கால் வாசிக்கும் மேலாக இருந்ததால்..)

--------------------------------------------------------------------------------
Last edited by lenram80 : 04-08-2008 at 07:14 AM.

அன்பு நண்பர்களே....நீங்கள் இருவருமே சரியான விடைக்கு அருகில் வந்துவிட்டீர்கள்.

ஆனால் சரியான விடையை நான் கூறுகிறேன்.
தண்ணீர் உறைந்ததும் ஜின் மேலாக வந்து, பனிக்கட்டி அடியில் இருக்கும்.
அதைக்கண்ட தந்தை தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளதை அறிந்தார்....

நாளை அடுத்த புதிர்.

pgk53
09-08-2008, 01:35 PM
நண்பர்களே.....ஒரே பதிலில் இரண்டு Quoteகளை எப்படி கொண்டுவருவது என்று யாராவது கூறுங்களேன்.

தீபன்
09-08-2008, 01:38 PM
புதிர் பாக்க வந்தா இரசாயனவியல் பாடம் நடத்துறாங்கப்பா.... இது புரியாமத்தானே பள்ளிக்கூடத்தில முட்டை வங்கினேன்... இங்கயுமா...

அக்னி
09-08-2008, 01:42 PM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269706&postcount=7 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269706&postcount=7)
இச்சுட்டியை அழுத்துங்கள்...
விளக்கமாக உள்ளது...

தீபன்
09-08-2008, 01:44 PM
நண்பர்களே.....ஒரே பதிலில் இரண்டு Quoteகளை எப்படி கொண்டுவருவது என்று யாராவது கூறுங்களேன்.

இதயே அடுத்த புதிரா கேட்டிருந்தா விடை சுலபமா கிடச்சிருக்குமே அண்ணா...!

சரி, நானே சொல்கிறேன். தெரிவு செய்ய வேண்டிய பதிவின் QUOTE பொத்தானுக்கு அருகிலிருக்கும் பொத்தானை(multi-QUOTE this massage) தெரிவு செய்யுங்கள். இப்படியே எல்லா பதிவுகளிலும் தெரிவு செய்துவிட்டு கடைசி தெரிவிற்கான பதிவில் QUOTE பொத்தானை தெரிவு செய்யுங்கள். அவ்வளவுதான்.

pgk53
10-08-2008, 02:57 PM
புதிர் எண்:- 297

அந்த ஊருக்கு வெளியே இருந்த ஒரு சிறிய மலையின் மேல் இருந்த குகை ஒன்றில் ஒரு துறவி ஒருவர் இருந்தார்.

அந்த ஊரிலிம் அக்கம் பக்கம் ஊர்களிலும் இருந்த மக்கள் அவர்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் துறவியைத் தேடி வருவார்கள்.

அவர்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் துறவி சரியான பதிலைக் கூறுவார்.
அவர்களும் மகிழ்வுடன் திரும்புவார்கள்.

அந்த ஊரில் இரண்டு வேலையற்ற போக்கிரிகள் இருந்தார்கள்.

அவர்களுக்கு துறவி நாளுக்கு நாள் புகழ் பெற்றுவருவது பொறுக்கவில்லை.

அதனால் துறவியை எப்படியாவது தவறான பதிலைக் கூறவைத்துவிடவேண்டும் என்று திட்டமிட்டார்கள்.

அதன்படி, ஒருநாள் ஒருவன் தனது கையில் ஒரு புறவை எடுத்துக்கொண்டான்.இருவரும் துறவியிடம் சென்றார்கள்.

அங்கே அவரைக் காண நிறைய மக்கள் வந்திருந்தார்கள்.

இரண்டுபேர்களில் புறாவை கையில் வைத்திருந்தவன் துறவியின் முன்னெ சென்று நின்றான்.தனது கையில் இருந்த புறாவை கைகளை பின்பக்கமாகக் கொண்டுசென்று மறைத்துக்கொண்டான்.

அடுத்தவன் துறவியைப் பார்த்து “ துறவியே…எனது நண்பன் கைகளில் வைத்திருக்கும் புறாவுக்கு உயிர் இருக்கிறதா???? இல்லையா???” என்று கேட்டான்.
துறவி அவனை கண்கொட்டாமல் பார்த்தார். பிறகு சிரித்தார்.
“நான் இந்தக் கேள்விக்கு பதில் கூற இயலாது” என்று சொல்லி அவர்கள் போகலாம் என்றார்.

கூடியிருந்த மக்கள் திகைப்படைந்தார்கள்.

அவனது கையில் புறா உயிருடன் தானே இருக்கின்றது.இருந்தும் துறவி ஏன் இப்படிப் பதில் கூறினார் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

நண்பர்களே உங்களுக்காவது புரிகிறதா????????????

pgk53
10-08-2008, 02:58 PM
இதயே அடுத்த புதிரா கேட்டிருந்தா விடை சுலபமா கிடச்சிருக்குமே அண்ணா...!

சரி, நானே சொல்கிறேன். தெரிவு செய்ய வேண்டிய பதிவின் QUOTE பொத்தானுக்கு அருகிலிருக்கும் பொத்தானை(multi-QUOTE this massage) தெரிவு செய்யுங்கள். இப்படியே எல்லா பதிவுகளிலும் தெரிவு செய்துவிட்டு கடைசி தெரிவிற்கான பதிவில் QUOTE பொத்தானை தெரிவு செய்யுங்கள். அவ்வளவுதான்.

மிக்க நன்றி தீபன் அவர்களே.

அக்னி
10-08-2008, 03:48 PM
புதிர் எண்:- 297

புறா உயிருடன் இருக்கின்றது என்றால் புறாவை வைத்திருந்தவன் துறவியின் கூற்றைப் பொய்ப்பிக்க, புறாவை நசித்துக் கொன்றுவிடுவான்.

புறா உயிருடன் இல்லை என்றால், துறவியின் வாக்குப் பொய்யாகிவிடும்.

இரண்டையும் துறவி விரும்பாததாலேயே, துறவி பதில் சொல்ல முடியாது என்று கூறினார்.

pgk53
16-08-2008, 02:07 PM

அருமையான விடை அக்னி அவர்களே.
வாழ்த்திக்கள்.
அடுத்த புதிர் நாளை.

pgk53
17-08-2008, 01:47 AM
புதிர் எண் : 298

உங்களிடம் ஒரு பந்தைக் கொடுக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அந்தப் பந்தை எறியவேண்டும்.

கொஞ்சதூரம் அந்தப் பந்து சென்று மேற்கொண்டு போகாமல் அப்படியே நின்று மீண்டும் உங்களிடமே திரும்பி வரவேண்டும்.

நிபந்தனை

1- பந்தை எந்த ஒரு பொருளையோ….,அல்லது எதன்மேலாவது மோதும்படியாகவோ நீங்கள் எறியக் கூடாது.
2- பந்தை எந்தவித கயிறு கொண்டும் கட்டக்கூடாது.
உங்களால் இந்த நிபந்தனையின்படி செய்ய முடியுமா?

கூறுங்கள்.

மதி
17-08-2008, 01:57 AM
அந்த பந்தை தலைக்கு மேலே எறிய வேண்டும்... கொஞ்ச தூரம் சென்று புவியீர்ப்பு விசையினால திரும்ப நம்மிடமே வந்துவிடும்

தாமரை
17-08-2008, 09:59 AM
புதிர் எண்:- 297

புறா உயிருடன் இருக்கின்றது என்றால் புறாவை வைத்திருந்தவன் துறவியின் கூற்றைப் பொய்ப்பிக்க, புறாவை நசித்துக் கொன்றுவிடுவான்.

புறா உயிருடன் இல்லை என்றால், துறவியின் வாக்குப் பொய்யாகிவிடும்.

இரண்டையும் துறவி விரும்பாததாலேயே, துறவி பதில் சொல்ல முடியாது என்று கூறினார்.

இந்தப் புதிருக்கு புறாவின் உயிர் உன்கைகளில் இருக்கிறது என்ற பதிலுடன் கூடிய ஒரு கதையைப் படித்திருக்கிறேன், ஆனால் அது புத்திசாலித்தனத்திற்கான பதில்

விகடன்
17-08-2008, 10:31 AM
தண்ணீர் உறைந்ததும் ஜின் மேலாக வந்து, பனிக்கட்டி அடியில் இருக்கும்.

தண்ணீர் உறையுமளவிற்கு உள்ள வெப்பநிலையில் (பூச்சியம் அல்லது பூச்சியத்திலும் தாழ்வான வெப்பத்தில்) எவராவது மதுபானத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பார்களா அண்ணே?? (மதுவின் உறை நிலை நீரின் உறைநிலையை விட அதிகம் என்பது வேறு விடயம்)

விகடன்
17-08-2008, 10:34 AM
புதிர் எண் : 298

உங்களிடம் ஒரு பந்தைக் கொடுக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அந்தப் பந்தை எறியவேண்டும்.

கொஞ்சதூரம் அந்தப் பந்து சென்று மேற்கொண்டு போகாமல் அப்படியே நின்று மீண்டும் உங்களிடமே திரும்பி வரவேண்டும்.

நிபந்தனை

1- பந்தை எந்த ஒரு பொருளையோ….,அல்லது எதன்மேலாவது மோதும்படியாகவோ நீங்கள் எறியக் கூடாது.
2- பந்தை எந்தவித கயிறு கொண்டும் கட்டக்கூடாது.
உங்களால் இந்த நிபந்தனையின்படி செய்ய முடியுமா?

கூறுங்கள்.

நிலைக்குத்தாக மேல்நோக்கி எறியுங்கள்.
அதாவது,
புவியீர்ப்பு விசைக்கு சரி எதிராக எறியுங்கள். நீங்கள் எதிர்பார்த்தது கட்டாயம் நிகழும்.

விகடன்
17-08-2008, 10:36 AM
ஆனால் அது புத்திசாலித்தனத்திற்கான பதில்

அது, புத்திசாலித்தனத்திற்கான பதிலா?
அல்லது
அதிபுத்திசாலித்தனத்திற்கான பதிலா? .................அண்ணா?? :D

மதி
17-08-2008, 10:39 AM
நிலைக்குத்தாக மேல்நோக்கி எறியுங்கள்.
அதாவது,
புவியீர்ப்பு விசைக்கு சரி எதிராக எறியுங்கள். நீங்கள் எதிர்பார்த்தது கட்டாயம் நிகழும்.

விராடரே.. நான் தான் முதலில் சொன்னேன்..
பரிசு எனக்கு தான்..

விகடன்
17-08-2008, 10:52 AM
அந்த பந்தை தலைக்கு மேலே எறிய வேண்டும்... கொஞ்ச தூரம் சென்று புவியீர்ப்பு விசையினால திரும்ப நம்மிடமே வந்துவிடும்

விராடரே.. நான் தான் முதலில் சொன்னேன்..
பரிசு எனக்கு தான்..

நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். தலைக்கு மேலே என்றால் கையை தலைக்கு மேலே கொண்டு சென்று கிடையாகவும் எறியலாம் அல்லவா? நிலைக்குத்தாக என்றோ அல்லது புவியீர்ப்பு விசைக்கு எதிராகவோ என்றோ சொல்லியிருக்க வேண்டும். :D

இதெப்படி இருக்கு.

மதி
17-08-2008, 10:54 AM

அதெல்லாம் முடியாது...
நானும் சரியா தான் சொல்லி இருக்கேன்.. :traurig001::traurig001:

விகடன்
17-08-2008, 11:03 AM
அடம்பிடிக்கத் தொடங்கீடுவீங்களே.....

சரி சரி. எப்படியும் புத்திஜீவிகள் வந்துபார்த்தால் எனக்குத்தான் பரிசு தருவார்கள். அப்படித்தந்தால் அதை உங்களுக்கு தருகிறேன். ஏதாவது ஏடாகூடமாகி உங்களுக்கு தந்தால் அதை எனக்கு தரவேண்டியது இல்லை. நீங்களே வைத்துக் கொள்ள்ளுங்கள். :D :D :D

அன்புரசிகன்
17-08-2008, 02:16 PM
அதெல்லாம் முடியாது...
நானும் சரியா தான் சொல்லி இருக்கேன்.. :traurig001::traurig001:

அடம்பிடிக்கத் தொடங்கீடுவீங்களே.....

சரி சரி. எப்படியும் புத்திஜீவிகள் வந்துபார்த்தால் எனக்குத்தான் பரிசு தருவார்கள். அப்படித்தந்தால் அதை உங்களுக்கு தருகிறேன். ஏதாவது ஏடாகூடமாகி உங்களுக்கு தந்தால் அதை எனக்கு தரவேண்டியது இல்லை. நீங்களே வைத்துக் கொள்ள்ளுங்கள். :D :D :D

இரண்டுமே பிழை என்றால்????????????????? :mad:

:medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002:

விகடன்
17-08-2008, 03:55 PM
இரண்டுமே பிழை என்றால்????????????????? :mad:

:medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002:

சரியானதை, பிழை என்று சொன்னவர்தான் சொல்லியாகவேண்டும்!!! :icon_36::icon_36::icon_36:

தாமரை
18-08-2008, 05:23 AM
அது, புத்திசாலித்தனத்திற்கான பதிலா?
அல்லது
அதிபுத்திசாலித்தனத்திற்கான பதிலா? .................அண்ணா?? :D

அப்படி இல்லை. இங்கே கேள்வி கேட்கப்படுவது ஒரு ஆன்மீக வாதியிடம். அவரைப் பொறுத்தவரை ஒரு உயிர் ஒரு மனிதனின் கையில் இருக்கிறது என்பது தவறான கூற்று அல்லவா? அதானால் ஒரு ஆன்மீகவாதி இந்தப் பதிலைச் சொல்ல மாட்டார். ஒரு பீர்பாலோ அல்லது தெனாலிராமனோ அல்லது அப்பாஜியோ நான் சொன்ன பதிலைச் சொல்லக் கூடும் என்று அர்த்தம்.

தாமரை
18-08-2008, 05:25 AM
இரண்டுமே பிழை என்றால்????????????????? :mad:

:medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002:

ஆமாம் ஆமாம் அன்புரசிகா!

1- பந்தை எந்த ஒரு பொருளையோ….,அல்லது எதன்மேலாவது மோதும்படியாகவோ நீங்கள் எறியக் கூடாது.

இந்த விதி மீறப்படுமில்லையா? மேல் நோக்கி எறிந்தாலும் காற்றின் மீது மோதுமில்லையா? :D :D :D :eek::eek::eek::eek:

pgk53
18-08-2008, 01:30 PM

அடடா.....தங்கை தாமரையே....மெய்சிலிர்க்கவைத்துவிட்டது உங்களின் கேள்வி.!!!!!!!!!

விகடன்
18-08-2008, 02:36 PM

இப்படிப்பார்த்தால் கனவில்த்தான் அதுவும் பல எடுகோள்களின் பின்னர்த்தான் எறியமுடியும். கைக்கு மீள வந்துசேர காலந்தான் எடுக்கும். :D

அமரன்
18-08-2008, 02:47 PM
ஆமாம் ஆமாம் அன்புரசிகா!

1- பந்தை எந்த ஒரு பொருளையோ….,அல்லது எதன்மேலாவது மோதும்படியாகவோ நீங்கள் எறியக் கூடாது.

இந்த விதி மீறப்படுமில்லையா? மேல் நோக்கி எறிந்தாலும் காற்றின் மீது மோதுமில்லையா? :D :D :D :eek::eek::eek::eek:

காற்றை நாம் விட்டாலும் காற்று நம்மை விடாதே. அதுவா வந்து மோதுமில்லையா.:)

தாமரை
19-08-2008, 07:01 AM
அடடா.....தங்கை தாமரையே....மெய்சிலிர்க்கவைத்துவிட்டது உங்களின் கேள்வி.!!!!!!!!!

தன் கையை மட்டுமே நம்பி வாழ்பவரே என்றுச் சொல்கிறீர்களோ? சரிதான் பி.ஜி.கே!:D:D:D:D

விகடன்
19-08-2008, 11:05 AM
pgk அண்ணாவின் நகைச்சுவைக்கும் குறைவில்லை. அப்படித்தானே தாமரை அண்ணா?

pgk53
23-08-2008, 02:04 PM
Quote:
Originally Posted by மதி
அந்த பந்தை தலைக்கு மேலே எறிய வேண்டும்... கொஞ்ச தூரம் சென்று புவியீர்ப்பு விசையினால திரும்ப நம்மிடமே வந்துவிடும்

Quote:
Originally Posted by மதி
விராடரே.. நான் தான் முதலில் சொன்னேன்..
பரிசு எனக்கு தான்..

விராடன்,
நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். தலைக்கு மேலே என்றால் கையை தலைக்கு மேலே கொண்டு சென்று கிடையாகவும் எறியலாம் அல்லவா? நிலைக்குத்தாக என்றோ அல்லது புவியீர்ப்பு விசைக்கு எதிராகவோ என்றோ சொல்லியிருக்க வேண்டும்.

நண்பர் மதி அவர்களுக்கும் நண்பர் விராடன் அவர்களுக்கும் வெற்றிக்கனியை சரி சமமாகப் பிரித்தளிக்கிறேன்.மகிழ்ச்சிதானே.!
இருவருமே சரியான விடையை வெவ்வேறு வகையில் கூறினார்கள்.
வாழ்த்துக்கள்.

வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
23-08-2008, 02:07 PM
புதிர் எண் : 299

ராஜன் கண்பார்வை இல்லாதவன்.

அத்துடன் கடுமையான சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தான்.
கொஞ்சம் சர்க்கரை அவன் உடம்பினுள் சென்றாலும் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் கடுமையான எச்சரிக்கை கொடுத்திருந்தார்கள்.

ராஜன் ஒருநாள் தனது நண்பன் ஒருவன் அளித்த ஒரு விருந்துக்குச் செல்லவேண்டியதாயிற்று.

அவனது நண்பனுக்கும் ராஜனது உடல் நிலை தெரியும்.எதற்கும் இருக்கட்டும் என்று கொஞ்சம் டயட் சோடாக்கள் வாங்கி வைத்திருந்தான்.

சாதாரன சோடாக்களையும், டயட் சோடாக்களையும் ஒரு ஐஸ் பெட்டியின் உள்ளே ஐஸ் நிறைத்து அதில் போட்டு வைத்தான்.ஐஸ் கரைந்து பாதி ஐஸ்ஸும் மீதி தண்ணீருமாக இருந்தது.

ராஜன் கொஞ்சம் சீக்கிரமாகவே அவனது நண்பன் வீட்டுக்குச் சென்றுவிட்டான்.
அவன் சென்ற சமயம் அவனது நண்பன் விருந்து தயாரிப்பில் மும்முரமாக இருந்தான்.

ராஜனை வரவேற்று ஹாலில் அமரச் செய்துவிட்டு, பக்கத்திலேயே ஐஸ் பெட்டி இருப்பதாகவும் ராஜனுக்கு தாகமாக இருந்தால் சோடாவை எடுத்துக் குடிக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றன்.

ராஜனும் சரி என்று கூறிவிட்டு ஐஸ் பெட்டியை தொட்டுப் பார்த்தான்.திறந்தான்.சாதாரன சோடாவுக்கும் அதே கம்பெனி தயாரித்த டயட் சோடாவுக்கும் அளவில் எந்த வித்தியாசமும் இல்லை.எந்தக் குறியீடும் இல்லை.
உள்ளே இருப்பவற்றில் எது டயட் சோடா என்று கொஞ்ச நேரம் குழம்பினான் ராஜன்.தவறான சோடாவை எடுத்துக் குடித்துவிட்டான் ஆபத்தாயிற்றே என்று தயங்கினான்.

பிறகு தெளிவு பெற்றவனாக யாருடைய துணையும் இல்லாமல் சரியாக டயட் சோடாவை தேர்ந்தெடுத்து குடித்து தாகத்தை தணித்துக்கொண்டான்.

நண்பர்களே ராஜன் எப்படி டயட் சோடாவைத் தேர்ந்தெடுத்தான்????????????

தாமரை
23-08-2008, 02:17 PM
ஹி ஹி.. திங்கள் கிழமை ஆஃபீஸில் எடுத்துப் பார்த்துட்டே சொல்லிடறேன் பி.ஜி.கே!!

pgk53
26-08-2008, 01:49 AM
ஹி ஹி.. திங்கள் கிழமை ஆஃபீஸில் எடுத்துப் பார்த்துட்டே சொல்லிடறேன் பி.ஜி.கே!!

தாமரைத் தங்கையே திங்கள்கிழமை அலுவலகம் சென்றீர்களா?????

நண்பர்கள் வேறு யாருமே இந்தப் பக்கமே கானோமே????????????

tamilambu
26-08-2008, 02:02 AM
புதிர் எண் : 299

சாதாரன சோடாக்களையும், டயட் சோடாக்களையும் ஒரு ஐஸ் பெட்டியின் உள்ளே ஐஸ் நிறைத்து அதில் போட்டு வைத்தான்.ஐஸ் கரைந்து பாதி ஐஸ்ஸும் மீதி தண்ணீருமாக இருந்தது.

சாதாரண சோடாவை விட டயட் சோடா அடர்த்தியில் குறைந்தது. அந்த ஐஸ் பெட்டியினுள் தண்ணீரும் இருந்தபடியால் அடர்த்தி குறைந்த டயட் சோடா கூடுதலாக மிதந்திருக்கும். கையை உள்ளே வைத்து பார்த்து கூடுதலாக மிதக்கும் டயட் சோடாவை எடுத்து குடித்திருப்பார்.

சரியான பதிலா நண்பரே?

தாமரை
26-08-2008, 02:15 AM
தாமரைத் தங்கையே திங்கள்கிழமை அலுவலகம் சென்றீர்களா?????

நண்பர்கள் வேறு யாருமே இந்தப் பக்கமே கானோமே????????????

தாமரையின் தங்கை வேலை தேடிக் கொண்டிருக்கிறார். அலுவலகம் செல்லவில்லை.:D:eek::D:eek::D:eek:(நான் ஓவியாவைச் சொல்றேங்க பி.ஜி.கே)

பென்ஸ்
26-08-2008, 02:43 AM
சாதாரண சோடாவை விட டயட் சோடா அடர்த்தியில் குறைந்தது. அந்த ஐஸ் பெட்டியினுள் தண்ணீரும் இருந்தபடியால் அடர்த்தி குறைந்த டயட் சோடா கூடுதலாக மிதந்திருக்கும். கையை உள்ளே வைத்து பார்த்து கூடுதலாக மிதக்கும் டயட் சோடாவை எடுத்து குடித்திருப்பார்.

சரியான பதிலா நண்பரே?
சரியான பதில் என்றே நினைக்கிறேன் தமிழன்பு....

tamilambu
26-08-2008, 04:06 AM
அப்போ பரிசு எனக்குத்தானா.....
ஆஹா... ஆஹா.... ஆஹா...

தாமரை
26-08-2008, 06:21 AM
அடர்த்தி வித்தியாசம் என்றால் எடை வித்தியாசம் வருமே!

தீபன்
26-08-2008, 09:29 AM
எடை வித்தியாசம் உணரக்கூடியளவு பெரிதாக இராது. அதனால், டமிழ் அம்பு சொன்ன பதில்தான் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.

மதி
26-08-2008, 09:36 AM
அடர்த்தி வித்தியாசம் என்றால் எடை வித்தியாசம் வருமே!
ஆமாம் அடர்த்திவித்தியாசம் என்றால் எடையும் வித்தியாசப்படும்.

இந்த சுட்டியைப் (http://www.elmhurst.edu/~chm/vchembook/121Adensitycoke.html) பாருங்கள்

தாமரை
26-08-2008, 01:11 PM
எடை வித்தியாசம் உணரக்கூடியளவு பெரிதாக இராது. அதனால், டமிழ் அம்பு சொன்ன பதில்தான் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.

1. எடுத்துப் பார்த்துவிட்டேன் எடை வித்தியாசம் தெரியுது

2. சாதரண பெப்ஸி அடிப்பாகத்தில் 26 என்றும் டையட் பெப்ஸி கீழு 27 என்றும் என்கிரேவ் செய்யப்பட்டுள்ளது. இதில் எதாவது அர்ததம் இருக்கா இல்லை இதுவேறு எதாவதா தெரியலை..

வீட்டுக்குப் போய் தண்ணியில டயட் பெப்ஸி மிதக்குதா முழுகுதா பார்த்திடலாம்..

:icon_b:

tamilambu
26-08-2008, 01:58 PM
என்னங்க இது.
இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணிகிட்டு...
பரிசை எனக்கே கொடுக்கச் சொல்லுங்க....
என்னை இன்னுமொரு 'தருமி' ஆக்கீடாதிங்க... பிளீஸ்...

pgk53
28-08-2008, 02:35 PM
சாதாரண சோடாவை விட டயட் சோடா அடர்த்தியில் குறைந்தது. அந்த ஐஸ் பெட்டியினுள் தண்ணீரும் இருந்தபடியால் அடர்த்தி குறைந்த டயட் சோடா கூடுதலாக மிதந்திருக்கும். கையை உள்ளே வைத்து பார்த்து கூடுதலாக மிதக்கும் டயட் சோடாவை எடுத்து குடித்திருப்பார்.

சரியான பதிலா நண்பரே?

தமிழன்பரே.......மிகச் சரியான விடையை அளித்தமைக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள்.உங்களைத் தொடர்ந்து அந்த விடைக்கு விளக்கங்களையும், நண்பர் மதி அவர்களின் சுட்டியுடன் கூடிய விளக்கத்திற்கும் மிக்க நன்றி.

அடுத்த புதிர் 300 வது புதிர் அதனால் சிறப்பாக ஒரு புதிரைக் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன்.
பார்க்கலாம்.
கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள்.

pgk53
30-08-2008, 01:53 PM
அன்பு நண்பர்களே.........நான் நாளை ஒரு குறுகிய விடுமுறைக்கு தாயகம் செல்ல உள்ளேன்.
மூன்று வார விடுமுறை.

மேலும் 300வது புதிரை பதிவதில் ஏதாவது ஒரு சிறப்பு இருக்கவேண்டும்..

அதனால் நண்பர்களே இம்முறை 300வது புதிர் வரை உங்கள் ஆதரவுடன் அடைந்ததற்காக மூன்று புதிர்களை ஒன்றாக பதிவு செய்துவிடுகிறேன்.
அனைவருக்கும் வணக்கம்.

pgk53
30-08-2008, 01:54 PM
புதிர் எண்-300

பூமிப்பந்தின் ஓர் மூலையில் ஆட்களே இல்லாத, இதுவரை யாருமே செல்லாத ஒரு தீவு அது.

இயற்கை வளத்தால் பசுமை அடர்ந்து மரம் செடிகொடிகளும் அடர்த்தியான புல்லும் நிறைந்து கிடந்தது.

அந்தத் தீவில் வாழ்ந்த உயிரினங்கள் 100 புலிகளும் ஒரே ஒரு ஆடு மட்டும்தான்.

அதில் புலிகளுக்கு ஒரு சிறப்புத் தன்மை இருந்தது.

1] புலிகள் மிகவும் புத்திசாலிகளாகவும் சூழ்நிலையை புரிந்துகொள்ளும் திறனுடையதாகவும் இருந்தன.

2]புலிகள் புல்லை மட்டுமே தின்று உயிர் ஜீவிக்கும் தன்மை கொண்டவையாக இருந்தன.

3]அந்தப் புலிகளுக்கு இருந்த ஒரே ஒரு ஆட்டை தின்பதற்கு ஆசைதான்.
4]ஏதாவது ஒரு புலி அந்த ஆட்டை அடித்து உண்டுவிட்டால் அந்தத் தீவின் சிறப்பு நியதியின்படி ஆட்டை தின்ற புலிமட்டும் ஆடாக மாறிவிடும். அப்படி ஒரு இயற்கை நியதி அந்த தீவில் இருந்தது.

நண்பர்களே அந்த ஆடு மேற்கொண்டும் அந்த தீவில் உயிருடன் இருக்குமா????

இல்லை கொல்லப்பட்டு புலிக்கு விருந்தாகுமா??????????

காரணத்துடன் பதில் கூறுங்கள்.

pgk53
30-08-2008, 01:58 PM
புதிர் எண்-301

ஒரு ஊரிலே வயதான ஒரு பெரியவர்.

மிக்க நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார்.

கடைசி நிமிடங்களில் தனது இரு மகன்களையும் அழைத்தார்.

“பிள்ளைகளே….உங்களுக்கு நான் போதுமான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளேன்.இதுவரை உங்களுக்குச் சொல்லாத ஒரு சொத்து உள்ளது. அதை நான் இந்த வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளேன். அது ஒரு விலை மதிப்புள்ள வைரம்.

உங்கள் இருவரில் யார் புத்திசாலியோ அவருக்கு அந்த வைரம் கிடைக்கட்டும் என்று முடிவு செய்து அதை மறைவாக வைத்துள்ளேன்.அதை கண்டுபிடிக்கும் திறமை உள்ளவர் எடுத்துக்கொள்ளுங்கள்.” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே உயிரின் கடைசி நிமிடம் தொடங்கிவிட்டது.

இரு மகன்களும் பரிதவித்தபடி, ஏதாவது சிறிய க்ளூ கொடுங்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் “ ஒரு உருளையை ஆயிரம் சதுரங்கள் மறைத்திருக்கும்” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டார்.

அவரது மகன்கள் இருவரும் இன்னும் அந்த வைரத்தை தேடிக்கொண்டிருக்கின்றார்களாம்.

உங்களுக்குத் தெரிந்தால் போய் எடுத்துக்கொள்ளலாமே!!!!!!!!!!!!!!!!!!!

pgk53
30-08-2008, 02:01 PM
புதிர் எண்-302

ஒரு பாலைவனத்தில் இரண்டு பேர் நடந்துகொண்டிருந்தார்கள்.

அவர்கள் இருவருமே அறிமுகம் இல்லாதவர்கள்.

அவர்களில் ஒருவன் மிகுந்த தாகத்தால் வருந்திக்கொண்டிருந்தான். அவனிடம் தண்ணீர் இல்லை.

அடுத்தவனிடம் ஒரு தண்ணீர் ஜக் இருந்தது.

அதனால் தாகத்தால் கஷ்டப்பட்டவன் மற்றவனிடம் அந்த தண்ணீர் ஜக்கைக் கொடு , எனக்குத் தண்ணீர் வேண்டும்.மிகுந்த தாகமாக இருக்கிறது என்று கேட்டான்.

அதற்கு அடுத்தவன் சரி தருகிறேன் ஆனால் மூன்று நிபந்தனைகள்.

1- ஜக்கை நீ கையால் தொடக்கூடாது.
2- ஜக்கை மூடியுள்ள கார்க்கை நீ திறக்கக்கூடாது.
3- ஜக்கில் எந்த துளையும் போடக்கூடாது
இந்த மூன்று நிபந்தனைகளுக்கு நீ சம்மதிக்கவேண்டும் என்றான்.

அவனும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தாகத்தை தணித்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தான்.

நண்பர்களே இது அவனுக்கு எப்படி சாத்தியமானது…..?????????????

தீபன்
30-08-2008, 05:07 PM

நீங்கள் கேட்ட அந்த ஆடு, ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன அந்த ஒரே ஒரு ஆடென்றால் அது தொடர்ந்து இருக்குமா இல்லையாவென்பது புலிகளின் புலிதாபிமானத்தில்தான் தங்கியுள்ளது.
அல்லது, அந்த தீவில் ஆடு ஒன்று தொடர்ந்திருக்குமா என்பதுதான் உங்கள் கேள்வியானால் நிச்சயமாக இருக்கும். ஏனெனில், ஆட்டை தின்னும் புலி தீவின் நியதிப்படி இன்னொரு ஆடாக மாறும். புதிய ஆட்டை மிஞ்சிய புலிகளிலொன்று உண்ணும். பின் அது ஆடாகும். இப்படியே இறுதிப்புலி ஆடாகும் வரை நடக்கும். (கடைசிப் புலி அதற்குமுன் ஆடாகிய புலியை உண்டு அதுவும் ஆடாகும்). ஆனால், அந்த ஆட்டை உண்ண இப்போ புலி இல்லை. எனவே இறுதியில் ஆடு தொடர்ந்தும் இருக்கும்.

300ஆவது புதிருக்கு முதலாவதாய் பதில் சொல்லியிருக்கேன்.... சரியாயிருந்தா பரிசு குடுப்பாங்களா...?

தீபன்
30-08-2008, 05:14 PM

சுற்றி வைக்கப்பட்ட பனை ஓலை பாய்க்குள் அந்த வைரம் இருக்குமோ...!?

தீபன்
30-08-2008, 05:18 PM

"மூடியை திறந்து ஜக்கை சரித்து நீரை நீயே ஊற்று, நான் கீழே கைகளால் ஏந்தி குடிக்கிறேன்" என்று நீரை வைத்திருப்பவனிடம் சொல்லியிருப்பான். அவனும் அப்படியே செய்ய, இவன் தன் தாகத்தை தீர்த்திருப்பான்.

தாமரை
31-08-2008, 03:33 AM
ஆனால், அந்த ஆட்டை உண்ண இப்போ புலி இல்லை. எனவே இறுதியில் ஆடு தொடர்ந்தும் இருக்கும்.

300ஆவது புதிருக்கு முதலாவதாய் பதில் சொல்லியிருக்கேன்.... சரியாயிருந்தா பரிசு குடுப்பாங்களா...?

அந்த ஆடு என்று பிஜிகே அழுத்தம் திருத்தமாய் சொல்லி இருக்கிறார்..ஆக ஆடாய் மாறும் புலிகளைப் பற்றிக் கவலை இல்லை.

பிறந்த அத்தனையும் இறக்கவேண்டும் என்பது நியதி. அதனால் புலிகளால் கொல்லப்பட்டோ, முதுமையாலோ அல்லது நோய்வாய்ப்பட்டோ அந்த ஆடு இறந்துதான் ஆகவேண்டும். :D :D

பிஜிகே கேட்க நினைத்தது அந்த ஆடு புலிகளால் கொல்லப்படுமா என்றுதான். அனைத்துப் புலிகளும் அந்த ஆட்டை நெருங்கப் பயப்பட்டாலும்,ஒரே ஒரு புலி இராப்பகலா ரூம் போட்டு யோசிச்சது. அந்த ஆட்டைப் போட்டுத் தள்ளி சாப்பிட்டு விட்டு, தான் ஆடாக "பில்லாவான - வேலுவாக" உலவ ஆரம்பிச்சிருச்சி.. ஒற்றை ஆட்டால் இனப்பெருக்கம் செய்ய முடியாது...அதனால் புலிகள் அதனைக் கொல்லாவிட்டால் ஆட்டினம் அழிந்துவிடும். அதனால கருணை அடிப்படையில் அந்த ஆட்டை அடிச்சுச் சாப்பிட்டு ஆட்டினத்தையே அந்தப் புலி காப்பாத்திருச்சி.

மத்த புலிகளெல்லாம்.. இன்னும் மல்லாக்கப் படுத்து யோசிச்சுகிட்டு இருக்கறதாக் கேள்வி. ஷேர் பண்ணிச் சாப்பிட்டா ஆட்டினத்தை அழியாமல் காப்பாத்தின புண்ணியம் வரும்னு அதில் இருக்கிற மல்லாக்க படுத்து விட்டத்தைப் பார்த்து யோசிக்கிற குழுவினர் முடிவெடுத்திருக்கிறதா கேள்வி.. (புலிகளெல்லாம் புத்திசாலிகள் என்றுச் சொல்லக் கேள்வி..)

அதனால அதனால புலியினம் அழியும் வரை ஆட்டினம் உயிரோடு இருக்கும். புலியினம் அழிந்தால் ஆட்டினம் அழிந்து போகும்.. :D

இது இயற்கையின் உணவுச் சங்கிலியாச்சே...

தீபன்
31-08-2008, 03:52 AM
புதிர் எண்-300

பூமிப்பந்தின் ஓர் மூலையில் ஆட்களே இல்லாத, இதுவரை யாருமே செல்லாத ஒரு தீவு அது.

இயற்கை வளத்தால் பசுமை அடர்ந்து மரம் செடிகொடிகளும் அடர்த்தியான புல்லும் நிறைந்து கிடந்தது.

அந்தத் தீவில் வாழ்ந்த உயிரினங்கள் 100 புலிகளும் ஒரே ஒரு ஆடு மட்டும்தான்.

அதில் புலிகளுக்கு ஒரு சிறப்புத் தன்மை இருந்தது.

1] புலிகள் மிகவும் புத்திசாலிகளாகவும் சூழ்நிலையை புரிந்துகொள்ளும் திறனுடையதாகவும் இருந்தன.

2]புலிகள் புல்லை மட்டுமே தின்று உயிர் ஜீவிக்கும் தன்மை கொண்டவையாக இருந்தன.

3]அந்தப் புலிகளுக்கு இருந்த ஒரே ஒரு ஆட்டை தின்பதற்கு ஆசைதான்.
4]ஏதாவது ஒரு புலி அந்த ஆட்டை அடித்து உண்டுவிட்டால் அந்தத் தீவின் சிறப்பு நியதியின்படி ஆட்டை தின்ற புலிமட்டும் ஆடாக மாறிவிடும். அப்படி ஒரு இயற்கை நியதி அந்த தீவில் இருந்தது.

நண்பர்களே அந்த ஆடு மேற்கொண்டும் அந்த தீவில் உயிருடன் இருக்குமா????

இல்லை கொல்லப்பட்டு புலிக்கு விருந்தாகுமா??????????

காரணத்துடன் பதில் கூறுங்கள்.
புதிரில் அண்ணன் சொல்லியுள்ளது வாழ்ந்தன என்றுதானே... (இறந்த காலம்). அப்படிப் பார்த்தால் இப்போ அவை உயிருடன் இல்லை என்றுதானே அர்த்தம். ஆகவே ஆடுமட்டுமல்ல புலிகளும் மேற்கொண்டு இல்லை என சொல்லலாம்தானே:sprachlos020:.

நானும் நீங்க சொன்னமாதிரி நினைத்தேன் தாமரை அண்ணா, ஆனா பிஜிகே அண்ணா காலம்பூரா இருக்குமான்ன அர்த்தத்தில கேக்கல, மேற்கொண்டு புலிகளால் பிரச்சினையில்லாமல் உயிர்வாழுமா என்ற அர்த்தத்தில்தான் கேடுள்ளார் என்ற முடிவுக்கு வந்தே என் பதிலை சொன்னேன்...!

:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
என்னண்ண சொல்ல வாறிங்க...

தாமரை
31-08-2008, 03:55 AM
"மூடியை திறந்து ஜக்கை சரித்து நீரை நீயே ஊற்று, நான் கீழே கைகளால் ஏந்தி குடிக்கிறேன்" என்று நீரை வைத்திருப்பவனிடம் சொல்லியிருப்பான். அவனும் அப்படியே செய்ய, இவன் தன் தாகத்தை தீர்த்திருப்பான்.

இது சரியான பதில் தீபன். :)

தாமரை
31-08-2008, 03:59 AM
புதிரில் அண்ணன் சொல்லியுள்ளது வாழ்ந்தன என்றுதானே... (இறந்த காலம்). அப்படிப் பார்த்தால் இப்போ அவை உயிருடன் இல்லை என்றுதானே அர்த்தம். ஆகவே ஆடுமட்டுமல்ல புலிகளும் மேற்கொண்டு இல்லை என சொல்லலாம்தானே:sprachlos020:.

நானும் நீங்க சொன்னமாதிரி நினைத்தேன் தாமரை அண்ணா, ஆனா பிஜிகே அண்ணா காலம்பூரா இருக்குமான்ன அர்த்தத்தில கேக்கல, மேற்கொண்டு புலிகளால் பிரச்சினையில்லாமல் உயிர்வாழுமா என்ற அர்த்தத்தில்தான் கேடுள்ளார் என்ற முடிவுக்கு வந்தே என் பதிலை சொன்னேன்...!

:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
என்னண்ண சொல்ல வாறிங்க...

அந்த ஆடு இயற்கையாய் சாகுமா இல்லை புலி அடித்துச் சாகுமா என்பதுதான் கேள்வி. பதில் ஒரு புத்திசாலிப் புலி கண்டிப்பாய் அடித்துச் சாப்பிட்டுவிட்டு ஆடாகி விடும். எல்லாம் அது பழைய ஆடுதான் என்று கருதிவிடும்..

இன்னொரு புலி புத்திசாலித்தனமா அது ஆடு இல்லை புலி என அறியும் வரை அந்த புலிக்கு ஆபத்து இல்லையே!

ஆட்டினத்தைப் பற்றி பிஜிகே அண்ணன் கேட்கவே இல்லையே!:lachen001::lachen001::lachen001:

தீபன்
31-08-2008, 04:14 AM
புதிர் எண்-300

அந்தத் தீவில் வாழ்ந்த உயிரினங்கள் 100 புலிகளும் ஒரே ஒரு ஆடு மட்டும்தான்.

அதில் புலிகளுக்கு ஒரு சிறப்புத் தன்மை இருந்தது.

1] புலிகள் மிகவும் புத்திசாலிகளாகவும் சூழ்நிலையை புரிந்துகொள்ளும் திறனுடையதாகவும் இருந்தன.

2]புலிகள் புல்லை மட்டுமே தின்று உயிர் ஜீவிக்கும் தன்மை கொண்டவையாக இருந்தன.

3]அந்தப் புலிகளுக்கு இருந்த ஒரே ஒரு ஆட்டை தின்பதற்கு ஆசைதான்.
4]ஏதாவது ஒரு புலி அந்த ஆட்டை அடித்து உண்டுவிட்டால் அந்தத் தீவின் சிறப்பு நியதியின்படி ஆட்டை தின்ற புலிமட்டும் ஆடாக மாறிவிடும். அப்படி ஒரு இயற்கை நியதி அந்த தீவில் இருந்தது.

நண்பர்களே அந்த ஆடு மேற்கொண்டும் அந்த தீவில் உயிருடன் இருக்குமா????

இல்லை கொல்லப்பட்டு புலிக்கு விருந்தாகுமா??????????

காரணத்துடன் பதில் கூறுங்கள்.

பிஜிகே அண்ணா எல்லா புலியும் புத்திசாலித்தனமானவை என்றே சொல்லியிருக்கிறார். இதனால், அவை அந்த தீவின் நியதியை சரிவர அலசி ஆய்ந்து ஆட்டை தின்றால் தின்ற புலி ஆடாகும். அதை இருக்கும் புலியிலொன்று மீண்டும் உண்ண இப்படியே தொடர்ந்தால் புலியினமே அளிந்துவிடும். எனவே நாம் அந்த ஆட்டை கொல்லக் கூடாது என்ற முடிவுக்கு வந்தன. அதனால் அந்த ஆடு மேற்கொண்டு உயிருடனேயே உள்ளது.:icon_b:

ஒரு புத்திசாலிப் புலி கண்டிப்பாய் அடித்துச் சாப்பிட்டுவிட்டு ஆடாகி விடும். எல்லாம் அது பழைய ஆடுதான் என்று கருதிவிடும்..

இன்னொரு புலி புத்திசாலித்தனமா அது ஆடு இல்லை புலி என அறியும் வரை அந்த புலிக்கு ஆபத்து இல்லையே!

ஆட்டினத்தைப் பற்றி பிஜிகே அண்ணன் கேட்கவே இல்லையே!:lachen001::lachen001::lachen001:
திருப்பியும் குழப்புறிங்களே... புலியென அறிந்தால்தான் அதற்கு புலிகளால் பிரச்சனை இல்லையே... ஆடென நினைத்தால்தான் ஆடாக மாறிய அந்த புலிக்கு மிச்ச புலிகளால் ஆபத்து... நீங்க மாறி சொல்றிங்களே....!

தாமரை
31-08-2008, 04:30 AM
பிஜிகே அண்ணா எல்லா புலியும் புத்திசாலித்தனமானவை என்றே சொல்லியிருக்கிறார். இதனால், அவை அந்த தீவின் நியதியை சரிவர அலசி ஆய்ந்து ஆட்டை தின்றால் தின்ற புலி ஆடாகும். அதை இருக்கும் புலியிலொன்று மீண்டும் உண்ண இப்படியே தொடர்ந்தால் புலியினமே அளிந்துவிடும். எனவே நாம் அந்த ஆட்டை கொல்லக் கூடாது என்ற முடிவுக்கு வந்தன. அதனால் அந்த ஆடு மேற்கொண்டு உயிருடனேயே உள்ளது.:icon_b:

திருப்பியும் குழப்புறிங்களே... புலியென அறிந்தால்தான் அதற்கு புலிகளால் பிரச்சனை இல்லையே... ஆடென நினைத்தால்தான் ஆடாக மாறிய அந்த புலிக்கு மிச்ச புலிகளால் ஆபத்து... நீங்க மாறி சொல்றிங்களே....!

இந்தியாவின் பிரச்சனையே அதிகம் புத்திசாலிகள் இருப்பதுதானே தீபன்,
இவ்வளவு நாட்களாக ஆடு உயிரோடு இருந்ததற்குக் காரணம், நீங்கள் சொன்ன காரணம்.

ஆனால் இதன் காரணமாய் புலிகள் கொல்லவில்லை. 100 புலிகள் இருப்பதால் சாகப் போகிற வயசில இருக்கிற ஒரு புலி எப்படியும் சாகப்போகிறோம்.. ஆசை நிறைவேறாமச் செத்து பேயாய் அலையவேணாம் என அந்த ஆட்டை அடித்துச் சாப்பிடவே வாய்ப்பு அதிகம்..

2வது வாய்ப்பு. ஆட்டை அடித்துச் சாப்பிட்டப் புலி ஆடாகி விடும்.. அப்படி இருக்க முதலில் இருந்த அதே பாதுகாப்பு ஆடாகிய புலிக்கும் இருக்கும். அதனால ஆடாவதைப் பற்றியக் கவலையை புலி தள்ளிப் போட்டு விடும். எப்படியும் புல்லைத்தான் சாப்பிடப் போறோம். ஆடாச் சாப்பிட்டா என்ன புலியாச் சாப்பிட்டா என்ன?

மூணாவது வாய்ப்பு.. எப்படி இருந்தாலும் ஆடு இறந்துதான் ஆக வேண்டும். அப்படியானால் ஆட்டினமே அழிந்துவிடும். புலிகள் ஆட்டிறைச்சி சாப்பிடுவதைப் பற்றி கனவு கூட காண முடியாது,

ஆனால் ஒரு வழி இருக்கு, ஆடு செத்த பின்னால அதன் கறியைச் சாப்பிட்டா என்ன ஆகும்னு பிஜிகே சரியாச் சொல்லலை. :D அதனால அதன் பின்னாடிதான் பதில் இருக்கு,,,

அதாவது புலிகளெல்லாம் நம்ம ரெண்டுபேரு மாதிரி ஒரு மீட்டிங் போட்டு

ஆடு செத்தா அதன் இறைச்சியை குலுக்கல் முறையிலோ அல்லது வேறுவகையிலோ தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் உண்ணலாம். அவர்கள் ஆடாவார்கள். அவர்கள் இறந்த பிறகு.. ஹி ஹி ஹி அப்படின்னு ஒரு வரைவுத் திட்டம் தயாரிச்சிருக்கறதாக் கேள்வி..

அதனால புலிகள் ஆட்டைக் கொல்லாது. ஆனால் ஆட்டிறைச்சியை உண்ணும் என்பதும் ஒரு நல்ல பதில்தான்.

புத்திசாலித்தனத்தினால் இதுதான் பிரச்சனையே.. அது குறுக்கு வழிகளை அதிகம் தேடும்.. :D:D:D:D

லைஃப் இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி எடுத்து வச்சிருக்கிற ஆட்டை அடிக்க புலிகள் "பலேபாண்டியா" கபாலி மாதிரி திட்டம் போட்டுக் கவுக்கப் பார்த்துகிட்டுதான் இருக்கும். ஆடா இருக்கிறது பாதுகாப்புதானே,..

இதை விட சிலபுலிகள் அந்த ஆட்டைப் பங்கு போட்டுச் சாப்பிட்டா ஆட்டினமும் விருத்தியாகும். அதனால் புலிப் பரம்பரைக்கு ஆட்டுக்கறி சாப்பிடற பாக்கியம் கிடைக்கும். அதனால சில அட்டு ஃபிகர் புலிகளையும், நோஞ்சான் புலிகளையும் ஆட்டை அடிச்சு சாப்பிட வைப்பதன் மூலம், சில ஆடுகளை உருவாக்கும் ஆடுகளினம், புலிகளினம் இரண்டையும் வாழவைப்பதே புத்திசாலித்தனம் இதுவும் சரியாத்தான் தோணும்.

ஹி ஹி..

தீபன்
31-08-2008, 04:41 AM
ஆடாவதைப் பற்றியக் கவலையை புலி தள்ளிப் போட்டு விடும். எப்படியும் புல்லைத்தான் சாப்பிடப் போறோம். ஆடாச் சாப்பிட்டா என்ன புலியாச் சாப்பிட்டா என்ன?
இதிலிருந்து இன்னொரு பதில் எனக்கு தோணுது, புத்திசாலி புலிகளெல்லாம் ஒண்ணுகூடி ஆட்டை அடித்து 100 புலிகளுமே சாப்பிட்டிச்சாம்... இப்ப என்ன நடக்கும்...? எல்லா புலியுமே ஆடாக மாறிடிச்சா... புலியளொண்ணுமே சாகாம ஆட்டையும் சாப்பிட்டு திருப்திபட்டு கொண்டிச்சாம்...!

பிஜிகே அண்ணா.. எப்ப வருவிங்க.... இங்க ஆடு புலி ஆட்டம் தாங்க முடியல... புலியளெல்லாம் மீட்டிங் போடுற அளவுக்கு வந்திடுச்சு...!:sprachlos020:

தாமரை
31-08-2008, 04:44 AM

ஆட்டினம், புலியினம் இரண்டுமே இருப்பது தானே புத்திசாலித்தனம். அதனால

சிலபுலிகள் அந்த ஆட்டைப் பங்கு போட்டுச் சாப்பிட்டா ஆட்டினமும் விருத்தியாகும். அதனால் புலிப் பரம்பரைக்கு ஆட்டுக்கறி சாப்பிடற பாக்கியம் கிடைக்கும். அதனால சில அட்டு ஃபிகர் புலிகளையும், நோஞ்சான் புலிகளையும் ஆட்டை அடிச்சு சாப்பிட வைப்பதன் மூலம், சில ஆடுகளை உருவாக்கும் ஆடுகளினம், புலிகளினம் இரண்டையும் வாழவைப்பதே புத்திசாலித்தனம்

தீபன்
31-08-2008, 04:47 AM
ஆக, புதிருக்கு விடை, அந்த ஆடு மேற்கொண்டு இருக்காது என்பதுதான். இல்லயா...
ஆனா இத சொல்றதுக்கு ஆடு லைஃப் இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி எல்லாம் யூஸ் பண்றது கொஞ்சம் ஓவர்தான்....!:lachen001:

தாமரை
31-08-2008, 04:53 AM
ஆக, புதிருக்கு விடை, அந்த ஆடு மேற்கொண்டு இருக்காது என்பதுதான். இல்லயா...
ஆனா இத சொல்றதுக்கு ஆடு லைஃப் இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி எல்லாம் யூஸ் பண்றது கொஞ்சம் ஓவர்தான்....!:lachen001:

எந்த கேள்விக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருத்தமான பதில்கள் உண்டு என்பது எனது நம்பிக்கை தீபன்..

அதுவுமில்லாம இங்க 100 புத்திசாலிகள் இருப்பதால ஆட்டுக்கு ஆபத்து ஆபத்துதான். அவங்களால அந்தக் கொலையை நியாயப்படுத்த முடியும் என்பதே முக்கியக் காரணம். :lachen001::lachen001::lachen001:

asok_03
01-09-2008, 05:27 PM
புதிர் எண்-300

பூமிப்பந்தின் ஓர் மூலையில் ஆட்களே இல்லாத, இதுவரை யாருமே செல்லாத ஒரு தீவு அது.

இயற்கை வளத்தால் பசுமை அடர்ந்து மரம் செடிகொடிகளும் அடர்த்தியான புல்லும் நிறைந்து கிடந்தது.

அந்தத் தீவில் வாழ்ந்த உயிரினங்கள் 100 புலிகளும் ஒரே ஒரு ஆடு மட்டும்தான்.

அதில் புலிகளுக்கு ஒரு சிறப்புத் தன்மை இருந்தது.

1] புலிகள் மிகவும் புத்திசாலிகளாகவும் சூழ்நிலையை புரிந்துகொள்ளும் திறனுடையதாகவும் இருந்தன.

2]புலிகள் புல்லை மட்டுமே தின்று உயிர் ஜீவிக்கும் தன்மை கொண்டவையாக இருந்தன.

3]அந்தப் புலிகளுக்கு இருந்த ஒரே ஒரு ஆட்டை தின்பதற்கு ஆசைதான்.
4]ஏதாவது ஒரு புலி அந்த ஆட்டை அடித்து உண்டுவிட்டால் அந்தத் தீவின் சிறப்பு நியதியின்படி ஆட்டை தின்ற புலிமட்டும் ஆடாக மாறிவிடும். அப்படி ஒரு இயற்கை நியதி அந்த தீவில் இருந்தது.

நண்பர்களே அந்த ஆடு மேற்கொண்டும் அந்த தீவில் உயிருடன் இருக்குமா????

இல்லை கொல்லப்பட்டு புலிக்கு விருந்தாகுமா??????????

காரணத்துடன் பதில் கூறுங்கள்.

அண்ணன் பிகேஜி அவர்களின் கூற்றுபடி புலிகள் அனைத்தும் புத்திசாலி மற்றும் புல்லை மட்டுமே தின்பவை.

ஆட்டை அடித்து தின்ன ஆசைதான் ஆனால் ஆட்டை சாப்பிடுவது அதன் குணம் அல்ல காரணம் ஆட்டை உண்ணும் புலி ஆடாகிவிடும் (புலிகள் புத்திசாலி).

அந்த தீவு மிக வளத்துடன் புல் நிறைய உள்ளது. எனவே ஆட்டின் உணவிற்கு பஞ்சமில்லை.

ஆட்டிற்கு புலிகளால் எந்த பாதிப்பும் கிடையாது என்பதே எனது பதில்..............

விகடன்
03-09-2008, 09:33 AM
முதலாவது விடயம், புலிகளுக்கு இந்த எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் எண்ணம் கிடையாது. பசி வந்தால் அதை போக்காட்ட வழிதான் பார்க்கும். அதிலும் ருசியாக இருந்துவிட்டால் தாமதிக்காது...

இருக்கும் ஆடு கொல்லப்பட்டு புலிக்கு இரையாகும். அதே வேளை ஆடும் உயிருடனேயே இருக்கும்.
அதுதான் சொல்லீட்டீங்களே.
ஆட்டை தின்ற புலி, தின்ற பின்னர் ஆடாக மாறிவிடுமென்று.

கொசுறு: இதுவே தொடர்ந்தால் புலி மறைந்து ஆடு மட்டுமே மிஞ்சும்.

poornima
03-09-2008, 10:41 AM
ஆளுக்கேற்ற சிந்தனையில் ஆடு புலி ஆட்டம்
காலம் மாறுகிறது கதைதான் மாறவில்லை

தீபன்
06-09-2008, 01:21 AM
பிஜிகே அண்ணா வர கொஞ்ச நாளாகும்... அதுக்கிடையில நானொரு புதிர் போடுகிறேன்... (ஆனா, இப்பவரைக்கும் இதுக்கு எனக்கும் விடை தெரியாதுங்க... விடைய தெரிஞ்சுக்கதான் அதை உங்ககிட்ட சொல்லுறன்...!)

சின்ன புதிர்தான்....

1, 2, 6, 42, 1806, .................. இந்த வரிசையில் அடுத்த எண் என்ன? உங்கள் விடைக்கு காரணம் என்ன?

SathyaThirunavukkarasu
06-09-2008, 04:01 AM
சின்ன புதிர்தான்....

1, 2, 6, 42, 1806, .................. இந்த வரிசையில் அடுத்த எண் என்ன? உங்கள் விடைக்கு காரணம் என்ன?[/QUOTE]

என்னங்க மிகவும் சுலபமான் புதிருக்கு விடை தெரியலன்னு சொல்ரீங்க

மேலே கொடுக்கப்பட்ட எண்ணில்
1*1= 1+1=2
2*2=4+2=6
6*6=36+6=42
42*42=1764+42=1806
1806*1806=3261636=3263442
விடை சரியா?

தீபன்
06-09-2008, 07:02 AM
சரியான விடைதான். சுலபமான புதிர்தான். விடைய பாத்தப்புறம்தானே அது புரியுது...!!!

பாராட்டுக்கள்.

pgk53
23-09-2008, 01:58 AM
தமிழ் நெஞ்சங்களுக்கு எனது இனிய வணக்கங்களும் புனித ரமதான் நோன்பு வாழ்த்துக்களும் கூறிக்கொள்கின்றேன்.
நேற்றுதான் விடுமுறை கழிந்து வந்தேன்.
சரி வாருங்கள் புதிர்களைப் பார்ப்போம்.

pgk53
23-09-2008, 01:59 AM
அண்ணன் பிகேஜி அவர்களின் கூற்றுபடி புலிகள் அனைத்தும் புத்திசாலி மற்றும் புல்லை மட்டுமே தின்பவை.

ஆட்டை அடித்து தின்ன ஆசைதான் ஆனால் ஆட்டை சாப்பிடுவது அதன் குணம் அல்ல காரணம் ஆட்டை உண்ணும் புலி ஆடாகிவிடும் (புலிகள் புத்திசாலி).

அந்த தீவு மிக வளத்துடன் புல் நிறைய உள்ளது. எனவே ஆட்டின் உணவிற்கு பஞ்சமில்லை.

ஆட்டிற்கு புலிகளால் எந்த பாதிப்பும் கிடையாது என்பதே எனது பதில்..............

அன்புள்ள அசோக் அவர்களே.....மிகவும் சரியான விடையை அழகாக விளக்கியமைக்கு எனது வாழ்த்துக்கள் பல.

pgk53
23-09-2008, 02:01 AM
"மூடியை திறந்து ஜக்கை சரித்து நீரை நீயே ஊற்று, நான் கீழே கைகளால் ஏந்தி குடிக்கிறேன்" என்று நீரை வைத்திருப்பவனிடம் சொல்லியிருப்பான். அவனும் அப்படியே செய்ய, இவன் தன் தாகத்தை தீர்த்திருப்பான்.

அன்பு நண்பர் தீபன் அவர்களே....அருமையான சரியான விடையை அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.

pgk53
23-09-2008, 02:02 AM
சுற்றி வைக்கப்பட்ட பனை ஓலை பாய்க்குள் அந்த வைரம் இருக்குமோ...!?

தீபன் அவர்களே தங்களது விடை தவறு.
மீண்டும் முயற்சிக்கலாமே.!!!!!!!!!!!!!!!!!!!!!!

தீபன்
23-09-2008, 02:33 AM
வாங்க வாங்க... எல்லாரும் வாங்க... வாத்தியார் வந்திட்டார்....

நன்றி அண்ணா...
புலிப் புதிருக்கு நானும் விடை சொன்னேன்... அது தப்பா....?
மூணாவது புதிருக்கு.... ம்ம்ம். ஜோசிக்கிறேன்.

pgk53
23-09-2008, 02:07 PM
நீங்கள் கேட்ட அந்த ஆடு, ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன அந்த ஒரே ஒரு ஆடென்றால் அது தொடர்ந்து இருக்குமா இல்லையாவென்பது புலிகளின் புலிதாபிமானத்தில்தான் தங்கியுள்ளது.
அல்லது, அந்த தீவில் ஆடு ஒன்று தொடர்ந்திருக்குமா என்பதுதான் உங்கள் கேள்வியானால் நிச்சயமாக இருக்கும். ஏனெனில், ஆட்டை தின்னும் புலி தீவின் நியதிப்படி இன்னொரு ஆடாக மாறும். புதிய ஆட்டை மிஞ்சிய புலிகளிலொன்று உண்ணும். பின் அது ஆடாகும். இப்படியே இறுதிப்புலி ஆடாகும் வரை நடக்கும். (கடைசிப் புலி அதற்குமுன் ஆடாகிய புலியை உண்டு அதுவும் ஆடாகும்). ஆனால், அந்த ஆட்டை உண்ண இப்போ புலி இல்லை. எனவே இறுதியில் ஆடு தொடர்ந்தும் இருக்கும்.

300ஆவது புதிருக்கு முதலாவதாய் பதில் சொல்லியிருக்கேன்.... சரியாயிருந்தா பரிசு குடுப்பாங்களா...?

தீபன் அவர்களே.......உங்கள் விடை தவறானதுதான்.
ஏனென்றால் ஆட்டை புசிக்க தீர்மானிக்கும் புலி தானும் ஆடாகி மற்ற புலி அதை அடித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது என்று அந்தப் புலி அறியும் என்பதினால் நிச்சயமாக புலி ஆட்டைத் தொடாது.

pgk53
26-09-2008, 05:59 PM
புதிர் எண்-303

ஒருநாள் இரவு சோமு தனது தோட்டத்துக்குக் காவலுக்குச் சென்றான்.
சரியாக இரவு பண்னிரெண்டு மணி.

திடீரென்று சோமுவின் எதிரில் ஒரு பூதம் தோன்றியது.
அந்த வேளையில் பூதம் மிகவும் நல்ல மனநிலையில் இருந்தது.
அதனால் சோமுவைப் பார்த்து, “பயப்படாதே. நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்.
நான் உன்னுடன் ஒரு பந்தயம் வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
நீ ஒரு விடுகதையைக் கூறு.அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் நான் விடுவிக்கின்றேன்.அப்படி என்னால் விடுவிக்க முடியாமல் தோற்றுவிட்டால் நீ வெற்றிபெற்றதாக எண்ணிக்கொண்டு நான் உனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடுகின்றேன்.
நான் விடுவித்துவிட்டால் நீ எனக்கு பத்து ரூபாய் கொடுத்தால் போதும். சம்மதமா” ? என்று கேட்டது.

கொஞ்சம் யோசனை செய்த சோமு சரி என்று அதற்கு ஒத்துக்கொண்டான்.
பிறகு யோசனை செய்த சோமு, ஒரு விடுகதையைச் சொன்னான்.
, “ வானத்தில் பறக்கும்போது மஞ்சள் நிறமாக இருக்கும்.திடீரென்று ஊதா நிறமாக மாறிவிடும். தரையில் இறங்கியதும் கருப்பாக மாறிவிடும். அது என்ன??????????????” என்று கேட்டான்.

பூதம் அசந்து போனது. இந்த விடுகதையை விடுவிக்க இயலவில்லை.

தனது தோல்வியை ஒத்துக்கொண்டு ஆயிரம் ரூபாயை சோமுவிடம் கொடுத்தது.
பிறகு பூதம் சோமுவிடம் விடையைக் கூறு என்றது.

சோமு என்ன விடையைக் கூறினான்.????

நண்பர்களே கூறுங்கள்.

பென்ஸ்
26-09-2008, 06:05 PM
சரி நான் பத்து ரூபாய் தந்து விடுகிறேன்....சரியா பிஜீகே:rolleyes::D:D
(நீங்கள் நலமா...??)

mukilan
26-09-2008, 06:35 PM
சூரியன் வானத்தில் பறக்கும் பொழுது வானம் மஞ்சளாக இருக்கும். பின்னர் சூரியன் வேறு கோணத்தில் தெரிகையில் நீல நிறமாகவும், முற்றிலும் கீழிறங்கிச் சென்றது போல தோற்றமளிக்கையில், வானம் கருப்பாகவும் மாறிவிடும். சரின்னா, 1000 இ-காசுகள் தாங்க இல்லைன்னா நான் 10 இ-காசு தர்றேன்.

pgk53
28-09-2008, 01:51 AM
புதிர் எண் 301க்குரிய விடையை இன்னும் யாருமே கூறவில்லை.
கவனிக்கவும்.????????????????????/
புதிர் எண் 303க்கும் இன்னும் யாரும் சரியான விடைக் கூறவில்லை.

வாருங்கள் நண்பர்களே....இந்த இரண்டு புதிர்கள் முடிந்தபின்புதான் அடுத்த புதிருக்குப் போகவேண்டும்!!!!!!!!!!!!!!!!!!!

pgk53
30-09-2008, 02:33 AM

அன்பு நண்பர்களே....அடுத்து இரு புதிர்கள் போடலாம் என்று உங்களது பதில்களுக்காகக் காத்துக்கொண்டுள்ளேன்.
வாருங்கள்....301 / 303 க்குரிய பதில்களைத் தாருங்கள்.

aren
30-09-2008, 04:54 AM
புதிர் எண்-303

கொஞ்சம் யோசனை செய்த சோமு சரி என்று அதற்கு ஒத்துக்கொண்டான்.
பிறகு யோசனை செய்த சோமு, ஒரு விடுகதையைச் சொன்னான்.
, “ வானத்தில் பறக்கும்போது மஞ்சள் நிறமாக இருக்கும்.திடீரென்று ஊதா நிறமாக மாறிவிடும். தரையில் இறங்கியதும் கருப்பாக மாறிவிடும். அது என்ன??????????????” என்று கேட்டான்.

பூதம் அசந்து போனது. இந்த விடுகதையை விடுவிக்க இயலவில்லை.

தனது தோல்வியை ஒத்துக்கொண்டு ஆயிரம் ரூபாயை சோமுவிடம் கொடுத்தது.
பிறகு பூதம் சோமுவிடம் விடையைக் கூறு என்றது.

சோமு என்ன விடையைக் கூறினான்.????

நண்பர்களே கூறுங்கள்.

நெருப்பு!!!

pgk53
30-09-2008, 03:00 PM
நண்பர் ஆரென் அவர்களே....தங்களது விடை தவறானது என்று வருத்தமுடன் கூறிக்கொள்கிறேன்.
வேண்டுமானால் ஒரு தகவல் {க்ளூ} கொடுக்கிறேன்.
அதுவாக இருக்குமோ....இதுவாக இருக்குமோ என்று ஆலோசிக்கவே வேண்டாம்.

pgk53
30-09-2008, 03:01 PM
301வது புதிருக்கும் ஒரு க்ளூ

அது டாய்லெட்டில் இருக்கும்.போதுமா????????????

பென்ஸ்
30-09-2008, 03:09 PM
பிஜிகே..
இப்படி கஷ்டமா கேள்வி எல்லாம் கேக்கபிடாது...

என்கிட்ட வேனுமுன்னா...
"ஆழகுழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு...." இந்தமாதிரி எனக்கு தெரிந்ததா கேக்கலாம்.

அமரன்
30-09-2008, 03:50 PM
பிறகு யோசனை செய்த சோமு, ஒரு விடுகதையைச் சொன்னான்.
, “ வானத்தில் பறக்கும்போது மஞ்சள் நிறமாக இருக்கும்.திடீரென்று ஊதா நிறமாக மாறிவிடும். தரையில் இறங்கியதும் கருப்பாக மாறிவிடும். அது என்ன??????????????” என்று கேட்டான்.

ஊரில் இருக்கும் போது இராணுவ முகாமிலிருந்து 'வெளிச்சக்கூடு' என்று அழைக்கப்படும் ஒன்றை வேவு பார்க்க ஏவுவார்கள். அதுகூட வானில் மஞ்சளாக தெரிந்து பிறகு ஊதாவாகி கீழே விழுந்து கறுப்பாகும்.. அதுவா இருக்குமோ..

நண்பர் ஆரென் அவர்களே....தங்களது விடை தவறானது என்று வருத்தமுடன் கூறிக்கொள்கிறேன்.
வேண்டுமானால் ஒரு தகவல் {க்ளூ} கொடுக்கிறேன்.
அதுவாக இருக்குமோ....இதுவாக இருக்குமோ என்று ஆலோசிக்கவே வேண்டாம்.

இல்லைன்னா "பூதம்"தான் விடையோ..

தீபன்
01-10-2008, 04:16 PM
ஊரில் இருக்கும் போது இராணுவ முகாமிலிருந்து 'வெளிச்சக்கூடு' என்று அழைக்கப்படும் ஒன்றை வேவு பார்க்க ஏவுவார்கள். அதுகூட வானில் மஞ்சளாக தெரிந்து பிறகு ஊதாவாகி கீழே விழுந்து கறுப்பாகும்.. அதுவா இருக்குமோ..

நீங்கள் குறிப்பிடுவது ”பரா லைட்” என்பதைத்தானே...? ஆனால், அதில் ஊதா வர்ணம் தெரிவதில்லையே....?

lenram80
01-10-2008, 10:01 PM
புதிர் 301க்கான விடை:
======================
டிஸ்ஸூ பேப்பர் சுருள். (அதில் தான், ஒரு உருளையில் 1000-க்கும் அதிகமான சதுர பேப்பர்கள் சுற்றப்பட்டிருக்கும்)

pgk53
02-10-2008, 02:22 AM
புதிர் 301க்கான விடை:
======================
டிஸ்ஸூ பேப்பர் சுருள். (அதில் தான், ஒரு உருளையில் 1000-க்கும் அதிகமான சதுர பேப்பர்கள் சுற்றப்பட்டிருக்கும்)

சபாஷ் நண்பரே......அப்படியே கடைசி புதிருக்கான விடையையும் கூறுங்களேன்.

அன்புரசிகன்
02-10-2008, 02:32 AM
புதிர் --- 303...

விடை - மின்னல்.... (சரியா???) வெடிக்கும் போது மஞ்சள்.. பின்னர் மோட்டார் வாகன பிளக் களில் தோன்றும் மின்சார பாச்சல் நிறம் போன்ற ஊதா... பின் ஏதாவதன் மேல் விழுந்தால் அது கறுப்பாகிடும்....

pgk53
04-10-2008, 02:05 PM
அன்பு நண்பர்களே......இதற்கு மேலும் உங்களையெல்லாம் புதிர் எண் 303 க்காக ஆலோசனை செய்யவைக்கவேண்டாம் என்று நினைக்கின்றேன்.
இவ்வளவு சாதாரன புதிருக்காக அனைவரும் எப்படியெல்லாமோ சிந்திப்பதை நினைத்தால் எனக்கே பாவமாக இருக்கின்றது.
அதனால் நாளை நானே விடையைக் கூறிவிடுகிறேன்.....ஆனால் இன்றல்ல நாளை....சரியா??????????????????????

சுட்டிபையன்
04-10-2008, 02:27 PM
:D:D:D:D:D:D

rajatemp
05-10-2008, 01:05 PM
நீங்களே சொல்லுங்கள்

pgk53
06-10-2008, 02:28 PM
புதிர் எண்-303

அன்புள்ள நண்பர்களே........நான் முதலிலேயே இந்தப் புதிருக்குரிய க்ளூ கொடுத்திருந்தேன்.
யாரும் மிகவும் யோசானை செய்யவேண்டாம் என்று,
ஏனென்றால் கேள்வி கேட்டவனுக்கே அதற்குரிய விடை தெரியாது. அதனால் அவனது திட்டமே வேறு.
தனக்கு விடை தெரியாது என்று கூறி தனது தோல்வியை ஒத்துக்கொண்டால் அவன் பூதத்துக்கு 10 ரூபாய் கொடுத்தால் போதும்.
அதனால் பூதம் தோற்றதாக ஒப்புக்கொண்டு கொடுத்த பணத்தில் இருந்து 10 ரூபாய் கொடுத்துவிட்டான்.

அவ்வளவுதான்.

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
06-10-2008, 02:30 PM
புதிர் எண்-304

முன்னொரு காலத்தில் ஒரு தீவில் வாழ்ந்த மக்கள் விஷத்துக்கு முறிவு ஒன்றை அறிந்து வைத்திருந்தார்கள்.

அதாவது யாராவது விஷம் அருந்திவிட்டால் அவரைக் காப்பாற்ற அவர் அருந்திய விஷத்தைவிட வீரியம் மிக்க விஷம் ஒன்றைக் கொடுப்பார்கள். அதை அருந்திவிட்டால் அந்த வீரியமுள்ள விஷம் ஏற்கனவே அருந்திய விஷத்தை முறித்துவிடும். அவர் பிழைத்துக்கொள்வார்.

இது நடைமுறையில் அவர்கள் சோதித்து தெரிந்துகொண்ட உண்மை.

அந்த தீவை ஆண்டு வந்த மன்னனுக்கு ஒருநாள் ஒரு ஆசை வந்துவிட்டது. அதாவது, இந்த உலகத்திலேயே கொடியவிஷம் தனது நாட்டில்தான் இருக்கவேண்டும் என்ற விநோதமான ஆசை.

அதனால் மன்னன் தனது தலைமை மருந்தாளரையும், தலைமை வைத்தியரையும் அழைத்தான்.

ஏழு நாட்களுக்கும் கொடிய விஷம் ஒன்றைத் தயாரிக்கும்படி கட்டளையிட்டான்.

அத்துடன், அதை எப்படி சோதனை செய்யப் போகிறான் என்பதையும் வெளிப்படையாகக் கூறினான் மன்னன். அதாவது முதலில் ஒருவர் தயாரிக்கும் விஷத்தை மற்றவர் அருந்தவேண்டும்.

பிறகு தான் கண்டுபிடித்த விஷத்தை அருந்தவேண்டும்.இப்படிச் செய்தால் யார் கண்டுபிடித்த விஷம் கடுமையானதோ அவர் மட்டும் உயிர் பிழைப்பார்.

மருந்தாளர் உடனே தனது ஆராய்ச்சிசாலைக்குப் போனார்.ஆனால் வைத்தியர் ஆலோசனையில் ஆழ்ந்தார்.

தான் வைத்தியராக இருந்தாலும் மருந்தாளர் தன்னைவிட மருந்துகளைக் கலப்பதில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.அதனால் அவர் கண்டிப்பாக கடுமையான விஷத்தை தயாரித்துவிடுவார்.அதனால் தான் உயிர் பிழைத்து மருந்தாளர் இறக்கும் வகையில் ஒரு திட்டம் தீட்டினார்.

இப்படி இருக்க மருந்தாளருக்கு ஏழாவது நாளில் ஒரு சந்தேகம் எழுந்தது.
அதாவது வைத்தியர் தன்னைவிட வீரியம் அதிகமான விஷத்தை நிச்சயம் கண்டுபிடிக்க இயலாது.இந்த விஷயம் வைத்தியருக்கும் தெரியும். அதனால் வைத்தியர் கண்டிப்பாக ஏதாவது திட்டம் போடுவார் என்று உணர்ந்தான்.

அதனால் அவர் கொடுக்கும் விஷத்தை அருந்தியபின் தனது விஷத்தை அருந்தினால் தான் நிச்சயமாக இறந்துவிடுவோம் என்று புரிந்துகொண்டார்.

அதனால் தான் சாகக்கூடாது என்று மருந்தாளர் ஒரு திட்டமிட்டார்.

மன்னன் கூறியபடி ஏழாவதுநாளும் வந்தது.

இருவருமே முதலில் மற்றவர் கொண்டுவந்ததை அருந்தினார்கள்.

பிறகு தான் கொண்டு வந்ததை அருந்தினார்கள்.

மருந்தாளர் உயிர் பிழைத்துக்கொண்டார்.
வைத்தியர் இறந்துவிட்டார்.

ஆனால் மன்னன் திட்டமிட்டபடி உலகிலேயே கடுமையான விஷம் அவனுக்குக் கிடைக்கவில்லை என்பதை அவன் அறிந்துகொண்டான்.

என்ன நடந்தது என்பதை நீங்கள் கூறுங்கள்.????????????

பாரதி
06-10-2008, 05:32 PM
மருந்தாளர் வீட்டிலேயே வீரியம் குறைவான விஷத்தைக் குடித்து விட்டு வெறும் நீரை மட்டுமே விஷம் எனக்கொண்டு வந்திருக்கக்கூடும். வைத்தியர் கொடுத்த விஷம் மருந்தாளரை உயிர்ப்பிக்கும் அருமருந்தாக மாறி இருக்கும். ஆனால் வைத்தியர் தான் கொண்டுவந்த விஷத்தை மட்டுமே அருந்தியதால் அவர் இறந்திருப்பார்.

கண்மணி
07-10-2008, 04:35 AM

குழம்பிட்டீங்களே பாரதி..

மருந்தாளர் வெறும் நீரும், வைத்தியர் வெறும் நீரும் கொண்டு வந்திருந்தால், யார் முன்னேற்பாடாக வீரியம் மிகக்குறைந்த மருந்தை முன்னரே உண்டு வந்தாரோ அவர் இறந்து போவார்.

இதன் படி பார்த்தால், குறைந்த வீரியம் உள்ள மருந்தை வைத்தியர் உட்கொண்டு விட்டு வெறும் நீரை மட்டும் கொண்டு வந்திருக்க வேண்டும். மருந்தாளரும் வெறும் நீரை மட்டும் கொண்டு வர.. முறிவு மருந்து கிடைக்காததால் வைத்தியர் செத்துப் போயிட்டார். ஆனால் மன்னனுக்கு கிடைத்தது வீரியம் இல்லவே இல்லாத வெறும் நீர்.

ஆகவே முன்னரே விஷம் குடித்தது வைத்தியர், வைத்தியர் வைத்தியர்தான் அய்யா!!!

பாரதி
07-10-2008, 06:10 AM
சபாஷ் கண்மணி!

pgk53
11-10-2008, 02:10 AM

பாரதியின் சபாஷுடன் நானும் ஒரு சபாஷ் சொல்லிவிடுகின்றேன்.

அருமையான சிந்தனை கண்மனி.
வாழ்த்துக்கள்.

நாளை அடுத்த புதிர்.

தாமரை
11-10-2008, 01:16 PM
சரி நான் பத்து ரூபாய் தந்து விடுகிறேன்....சரியா பிஜீகே:rolleyes::D:D
(நீங்கள் நலமா...??)

புதிர் எண்-303

அன்புள்ள நண்பர்களே........நான் முதலிலேயே இந்தப் புதிருக்குரிய க்ளூ கொடுத்திருந்தேன்.
யாரும் மிகவும் யோசானை செய்யவேண்டாம் என்று,
ஏனென்றால் கேள்வி கேட்டவனுக்கே அதற்குரிய விடை தெரியாது. அதனால் அவனது திட்டமே வேறு.
தனக்கு விடை தெரியாது என்று கூறி தனது தோல்வியை ஒத்துக்கொண்டால் அவன் பூதத்துக்கு 10 ரூபாய் கொடுத்தால் போதும்.
அதனால் பூதம் தோற்றதாக ஒப்புக்கொண்டு கொடுத்த பணத்தில் இருந்து 10 ரூபாய் கொடுத்துவிட்டான்.

அவ்வளவுதான்.

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

அதான் பென்ஸ் அப்பவே சொல்லிட்டாரே பி.ஜி.கே

pgk53
12-10-2008, 02:21 PM
புதிர் எண்-305

இன்று காலையில் எழுந்ததும் கடிகாரத்தைப் பார்த்தேன்.
ஏழு மணி ஏழு நிமிடங்களைக் காட்டியது கடிகாரம்.

எனது படுக்கையில் இருந்து எழுந்ததும் பல் துலக்குவதற்காக வாஷ் பேசினை நோக்கி அடியெடுத்து நடந்தேன்.
தற்செயலாக எத்தனை அடிகள் என்று மனது கணக்கிட்டதில் சரியாக ஏழு அடிகள் நடந்தது மனதில் பட்டது.

பல் துலக்கும் பிரஷைக் கானவில்லை.
பக்கத்தில் இருந்த மேசையின் டிராயரை திறந்தேன். நான் எப்போதும் பல் துலக்கும் பிரஷ்களை மொத்தமாக வாங்கி வைத்திருப்பேன்.

மேசையில் நிறைய பிரஷ்கள் இருந்தன. ஒரு மன உந்துதலில் அவைகளை எண்ணிப் பார்த்தேன். மொத்தம் ஏழு பிரஷ்கள் இருந்தன.
ஏழாவது பிரஷை எடுத்து பல் துலக்கினேன்.

நேராக குளிர் சாதனப் பெட்டியை நோக்கி நடந்தேன்.
மீண்டும் ஏழு அடிகள்.
இப்போது எனது மனம் இந்த ஏழைப் பற்றிக் கணக்கிடுவதில் ஏனோ ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டது.
குளிர் சாதனப் பெட்டியைத் திறந்தேன்.

உள்ளே 7UP போத்தல்கள் இருந்ததைக் கண்டேன்.
நேற்று இரவில் வாங்கி வைத்து நண்பர்களுடன் அருந்தியதில் மீதம்.

எண்ணிப் பார்த்தேன். ஏழுதான் மீதம் இருந்தது.
அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து குடித்தேன்.

பிறகு உடைகளை அணிந்தேன்.
பக்கத்தில் இருந்த உணவு விடுதிக்குள் நுழைந்தேன்.

எப்போதும் கல்லாவுக்குப் பக்கத்தில் இருக்கும் முதல் மேசையில்தான் அமர்வேன்.
இன்று அதில் ஆட்கள் அமர்ந்திருந்தனர்.

கல்லாவில் இருப்பவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்.
அவருடன் ஏதாவது கதைத்துக்கொண்டுதான் சாப்பிடுவேன்.

வாங்க சார்…என்றவர், மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, “ சார்…இன்று இங்கே காலியாக இல்லை. நீங்கள் அதோ அந்த ஏழாவது மேசையில் அமருங்களேன்” என்றார்.
மனதில் சுருக்கென்று பட்டது.
என்ன இது? இன்று இந்த ஏழு நம்மை விடாது துரத்துகிறதே….என்று நினைத்தபடி உணவு உண்டேன்.
வெளியே வந்து, எனது அலுவலகம் செல்லும் பஸ்ஸில் ஏறினேன்.
அதுவும் ஏழாம் எண் பஸ்தான்.

அலுவலகம் இருந்த ஏழாவது குறுக்குத் தெருவில் பஸ் நின்றது.

இன்றுதான் இவையெல்லாம் எனது மனதில் பட்டுக்கொண்டே இருந்தது.

அலுவலகம் வந்து லிப்டில் ஏறி பொத்தானை அழுத்தும்போதுதான், எனது அலுவலகம் அந்த கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருப்பதை {எப்போதும் அங்கேதான் இருக்கின்றது} சட்டென்று உணர்ந்தேன்.

அலுவலகத்தில் எனது மேசையில் அமர்ந்தேன்.
வழியில் வாங்கிவந்த இன்றைய செய்தித்தாளை எடுத்தேன்
ஏதோ ஒரு ஆர்வம் உந்த ஏழாவது பக்கத்தினை விரித்தேன்.

அங்கே…..இன்று நடைபெறும் குதிரைப் பந்தய விபரங்கள் இருந்தன.
இன்றைய ஜாக்பாட் பரிசுப்பணம் ஏழு கோடி.

எனது மனம் ஒரு கணம் துள்ளியது.
தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினேன். ஒரு முடிவுக்கு வந்தேன்.
இன்று ஏழு என்னை விடாது விரட்டுகிறது. அதனால் கண்டிப்பாக ஏழுகோடி ஜாக்பாட் எனக்குத்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.

மாலை நேராக குதிரைப்பந்தய மைதானம் சென்றேன்.

எந்தக் குதிரையின்மேல் பணம் கட்டலாம் என்று ஆராய்ந்தேன்.
எனது விரல் தானாக வரிசையில் ஏழாவதாக அச்சிடப்பட்டிருந்த குதிரையின்மேல் நின்றது.
7777 ரூபாயை அந்தக் குதிரைமேல் கட்டினேன்.

ஆர்வமுடன் காலரியில் அமர்ந்து கிடைக்கப்போகும் ஏழு கோடியை எப்படி முதலீடு செய்யலாம் என்று மனதில் கனக்கிட்டபடி பந்தயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.{கையில் காசு சேமிப்பு இல்லாத நேரம்...ஜாக்பாட் அடித்தால் யோகமல்லவா}

அப்பாடா…..மன்ற நண்பர்களே….கொஞ்சம் நீண்ட கதையாகிவிட்டதல்லவா?

சரி-----நான் என்ன தொழில் ஆரம்பித்திருப்பேன் என்று நீங்களே சொல்லுங்களேன்.???????????????

மதி
12-10-2008, 02:30 PM
பி.ஜி.கே...
ஜெயித்திருந்தா தானே தொழில் ஆரம்பிப்பதற்கு.

கண்மணி
13-10-2008, 05:31 AM
1. அந்தக் குதிரை ஏழாவது வந்ததால, ஏழு முறை ஏழில பணம் கட்டி ஏமாந்து பூவாவிற்கு லாட்டரி அடிப்பது.
2. எதையாவது வச்சு இப்படி ஏழு பக்கத்துக்குக் கதை எழுதறது
3. எண்கணித ஜோதிடம் சொல்றது
4. ஏழு நாளைக்கும் லீவு விடாத கையேந்தி பவன்
5. ஏழுமலை ஆண்டவனுக்கு (ஷேவை)சேவை செய்வது
6. ஏழாம் நம்பர் பஸ்ல லாட்டரி டிக்கட் விக்கறது
7. ஏழாம் நம்பர் பிளாட்பாரத்தில பிச்சை எடுக்கறது..

இதுமாதிரி 7777777 (ஹி ஹி 7 - 7) தொழில்கள் இருக்கு. :D :D :D ஆனாலும் ஏழேழு ஜென்மத்திற்கும் நாங்க திருந்த மாட்டம்ல.

மதி சொன்ன பதிலு கரீக்டு...

பாரதி
13-10-2008, 07:18 AM
அட..ஆமாம்..! அந்தக் குதிரையும் ஏழாவதாதானே வந்திருக்கும்!

pgk53
14-10-2008, 03:12 PM
அன்பு நண்பர்களே....மதி அவர்கள் ஜெயித்திருந்தால்தானே என்று கேள்விக்குறியோடு முடித்துக்கொண்டார்.
1. அந்தக் குதிரை ஏழாவது வந்ததால, ஏழு முறை ஏழில பணம் கட்டி ஏமாந்து பூவாவிற்கு லாட்டரி அடிப்பது.
2. எதையாவது வச்சு இப்படி ஏழு பக்கத்துக்குக் கதை எழுதறது
3. எண்கணித ஜோதிடம் சொல்றது
4. ஏழு நாளைக்கும் லீவு விடாத கையேந்தி பவன்
5. ஏழுமலை ஆண்டவனுக்கு (ஷேவை)சேவை செய்வது
6. ஏழாம் நம்பர் பஸ்ல லாட்டரி டிக்கட் விக்கறது
7. ஏழாம் நம்பர் பிளாட்பாரத்தில பிச்சை எடுக்கறது..

இதுமாதிரி 7777777 (ஹி ஹி 7 - 7) தொழில்கள் இருக்கு. ஆனாலும் ஏழேழு ஜென்மத்திற்கும் நாங்க திருந்த மாட்டம்ல.

மதி சொன்ன பதிலு கரீக்டு... என்று மதியைபின்பற்றியதோடு நில்லாமல் மேற்கொண்டு ஏழு சாத்தியக் கூறுகளை அலசிவிட்டார்.

அவரைத் தொடர்ந்து பாரதியும்....அட..ஆமாம்..! அந்தக் குதிரையும் ஏழாவதாதானே வந்திருக்கும்....என்ற்து முத்தாய்ப்பாக முடித்து வைத்துவிட்டார்.

இன்னும் நான் சொல்ல என்ன இருக்கின்றது.

சரி அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
14-10-2008, 03:14 PM
அன்பு நண்பர்களே.....நான் 16-10-08ல் ஒரு குறுகிய விடுமுறைக்கு தாயகம் செல்லவிருப்பதால் அடுத்து பதினைந்து நாட்களுக்கு மன்றம் வர இயலாது.
அனைவருக்கும் வணக்கமும் தீபாவளி வாழ்த்துக்களும் கூறிக்கொள்கின்றேன்.
வணக்கம்.

பாரதி
14-10-2008, 04:36 PM

நல்லது பிஜிகே. உங்கள் பயணமும் விடுமுறையும் இனிதாக வாழ்த்து. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் முன்கூட்டிய இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

pgk53
06-11-2008, 02:58 PM
விடுமுறை கழிந்து பணியிடம் திரும்பியாகிவிட்டது.
புதிய ஒரு புதிருடன் நாளை உங்களைச் சந்திக்கின்றேன்

pgk53
07-11-2008, 12:47 PM
புதிர் எண்-306

சூழ்நிலை.

ஒரு ஆற்றங்கரையின் ஒரு கரையில், ஒரு அப்பா, ஒரு அம்மா அவர்களது இரண்டுமகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் நிற்கிறார்கள். ஒரு காவல் அதிகாரியும் ஒரு திருடனும் அவர்களோடு இருக்கின்றார்கள் {மொத்தம் எட்டு பேர்}
.

செயல்பாடு

அனைவருமே ஆற்றைக் கடந்து அக்கரை செல்லவேண்டும்.
படகை செலுத்த படகோட்டி இல்லை.

நிபந்தனைகள்

இருப்பவர்களில் அப்பா, அம்மா மற்றும் காவலர் இந்த மூவருக்கும்தான் படகைச் செலுத்த தெரியும்.வேறு யாரும் படகை செலுத்த இயலாது.

ஒரு சமயத்தில் இரண்டுக்கும் அதிகமாக படகில் ஆட்கள் செல்ல இயலாது.

காவலர் இல்லாமல் திருடன் வேறு யாருடனும் இருக்க இயலாது.

அம்மா இல்லாமல் அப்பாவுடன் மகள்கள் இருக்க இயலாது.

அப்பா இல்லாமல் மகன்கள் தாயுடன் இருக்க இயலாது.

நண்பர்களே …. இவர்கள் அனைவருமே நிபந்தனையின்படி செயல்பட்டு ஆற்றின் அக்கரைக்குச் செல்லவேண்டும்.

உங்கள் கை வரிசையைக் காட்டுங்களேன்.

ஓவியா
07-11-2008, 04:03 PM

உங்கள் கைவரிசையை காட்டுங்கள் என்று முடித்துள்ளதால் நான் போய் என் கை கொண்டு அந்த படகை ஓட்டுகிறேன், அவரர் எப்படி அக்கறை செல்ல வேண்டுமோ அப்படியெ செல்வார்கள்...... :D:D:D:D :D:D:D:D

பிஜிகே அண்ணாவின் அருமை தங்கை
- ஜேம்ஸ் பாண்ட் ஓவியா...

pgk53
07-11-2008, 05:02 PM
பிஜிகே அண்ணாவின் அருமை தங்கை
ஜேம்ஸ் பாண்ட் ஓவியா... அவர்களே......எனது தங்கையின் பூப்போன்ற கரங்கள் சிவந்துவிடுமே......என் தங்கயின் கைகள் புண்படலாமா???அதனால் நீங்கள் செல்லவேண்டாம் ....எப்படிச் செல்வார்கள் என்று கூறினாலே போதுமானது அன்புத் தங்கையே....

கண்மணி
07-11-2008, 05:23 PM
அண்ணா இந்தப் புதிரை வச்சு ஒரு சண்டையே நடந்து முடிஞ்சாச்சு..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15626

இதில இரண்டு வித பதில்கள் இருக்கு

லாஜிக்கலா ஒண்ணு சரி..

போலிஸ் + கைதி ----->
<---- போலிஸ்
போலிஸ் + மகன் 1 ----->
<---- போலிஸ் + கைதி
அப்பா + மகன் 2 ----->
<---- அப்பா
அப்பா + அம்மா ----->
<---- அம்மா
போலிஸ் + கைதி ----->
<---- அப்பா
அப்பா + அம்மா ----->
<---- அம்மா
அம்மா + மகள் 1 ----->
<---- போலிஸ் + கைதி
போலிஸ் + மகள் 2 ----->
<---- போலிஸ்
போலிஸ் + கைதி -->

இதில கைதி தனியாளாகிடறார்.. ஆகவே தப்பிச்சு ஓடிடுவார்.. ஆனால் உங்க விதிமுறைக்குப் பொருந்தும்..

பிராக்டிகலா ஒண்ணு சரி

F S1 S2 M D1 D2 P A ----------- 0
அப்பா + மகன் 1 ---;>
S2 M D1 D2 P A -------- F S1
<---- அப்பா
S2 M D1 D2 P A F -------- S1
அப்பா + மகன் 2 -----> 2
M D1 D2 P A -------- S1, S2, F
<---- அப்பா
M D1 D2 P A F -------- S1, S2
அப்பா + அம்மா ----->
D1 D2 P A -------- S1, S2, F,M
<---- அம்மா
M D1 D2 P A -------- S1, S2, F
போலிஸ் + கைதி ----->
M D1 D2 -------- S1, S2, F, P A
<---- அப்பா
F M D1 D2 ------- S1, S2, P, A
அப்பா + அம்மா ----->
D1 D2 -------- S1, S2, P, A, F, M
<---- அம்மா
D1 D2 M -------- S1, S2, P, A, F
அம்மா + மகள் 1 ----->
D2 -------- S1, S2, P, A, F, M, D1
<---- அம்மா
D2 M -------- S1, S2, P, A, F, D1
அம்மா + மகள் 2 ----->
0 -------- S1, S2, P, A, F, M, D1, D2

அம்மா, போலீஸ், கைதி, மகள்கள் இருக்கும் பொழுது அம்மாவுடன் ஒரு மகன் இருக்கிறான்

அப்பா, போலீஸ், கைதி, மகன்கள் இருக்கும் பொழுது அப்பாவுடன் ஒரு மகள் இருக்கிறாள்..

இது ஏன் பிராக்டிகல் தெரியுமா?

கைதி என்பவன் குற்றம் புரிந்தவன். காவலர் என்பவர் குற்றத்தைத் தடுப்பவர்.

உங்க விதிமுறை கைதியை தனியே விடலாம் என்கிறது. அவன் தப்பித்து ஓட வழி வகுக்கிறது. அதே சமயம் காவலர் இருக்கும் போதே மாண்பு மிக்க இரு பெண்களின் தாய் ஒரு இள வயது ஆடவனுடன் இருக்கக் கூடாது என்கிறது.

--------------விதிமுறை இப்படி இருந்தால் சமூகத்திற்குப் பொருந்தும்.------------
4). அப்பா, மகள்களுடன் தனியே இருக்க முடியாது, அம்மா மகன்களுடன் தனியே இருக்க முடியாது..

ஆனால், போலீஸ் இருக்கும் பொழுது மகனையோ, மகளையோ இருக்க விடலாம்.

pgk53
08-11-2008, 12:18 AM
அடடா....தங்கை கண்மனி அவர்களே.....இது ஏற்கனவே வந்த பதிவு என்பதை நான் கவனிக்கவே இல்லை.
பிழைக்கு வருந்துகிறேன்.

கண்மணி
08-11-2008, 12:24 AM
மன்னிப்பெல்லாம் எதுக்குண்ணே! இரண்டில எதுசரின்னு சொல்லிட்டு அடுத்தப் புதிரைப் போடுங்க..

ஓவியா
08-11-2008, 01:21 PM
பிஜிகே அண்ணாவின் அருமை தங்கை
ஜேம்ஸ் பாண்ட் ஓவியா... அவர்களே......எனது தங்கையின் பூப்போன்ற கரங்கள் சிவந்துவிடுமே......என் தங்கயின் கைகள் புண்படலாமா???அதனால் நீங்கள் செல்லவேண்டாம் ....எப்படிச் செல்வார்கள் என்று கூறினாலே போதுமானது அன்புத் தங்கையே....

:D:D:D:D:D:D:icon_give_rose::icon_give_rose::icon_give_rose:

இது ஏற்கனவே கொடுத்த கேள்வி என்று சொல்லி விட்டீர்கலே!! அப்பாடா விடை சொல்லாமல் அப்படியே நானும் எஸ்கேப்தான்.....:lachen001:

pgk53
08-11-2008, 02:13 PM
அன்பு நண்பர்களே.....நான் கொடுத்த ஆற்றைக் கடக்கும் புதிருக்கும் அடுத்து கொடுக்கப்போகும் தவளை குதிக்கும் புதிருக்கும் உரிய கேம்ஸ் சாப்ட்வேர் என்னிடம் உள்ளது.{Excell formate}

ஆற்றைக் கடக்கும் புதிர்....1.2 MB
தவளை புதிர்....300KB.....

விரும்புகிறவர்கள் தெரிவித்தால் மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

அல்லது மன்றத்திலேயே பதிவு செய்கிறேன்.உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும்

pgk53
08-11-2008, 02:15 PM
தங்கை கண்மணி அவர்களே தாங்கள் கொடுத்த்த விடையில் முதல் விடைதான் சரியானது.
லாஜிக்கலா ஒண்ணு சரி..

போலிஸ் + கைதி ----->
<---- போலிஸ்
போலிஸ் + மகன் 1 ----->
<---- போலிஸ் + கைதி
அப்பா + மகன் 2 ----->
<---- அப்பா
அப்பா + அம்மா ----->
<---- அம்மா
போலிஸ் + கைதி ----->
<---- அப்பா
அப்பா + அம்மா ----->
<---- அம்மா
அம்மா + மகள் 1 ----->
<---- போலிஸ் + கைதி
போலிஸ் + மகள் 2 ----->
<---- போலிஸ்
போலிஸ் + கைதி -->

வாழ்த்துக்கள்.

pgk53
09-11-2008, 03:23 PM
புதிர் எண்-307

A----B----C----D----E----F----G

மூன்று பச்சை நிற தவளைகள் A B C கற்களில் அமர்ந்துள்ளன.
மூன்று கருப்பு நிற தவளைகள் E F G கற்களில் அமர்ந்துள்ளன.

இவைகளுக்கு நடுவில் உள்ள D கல் காலியாக உள்ளது.

ஒரு தவளை ஒரு சமயத்தில் ஒன்றோ அல்லது இரண்டு கற்களோ
காலியாக இருக்குமிடத்துக்குத் தாவ வல்லது.

இப்போது

பச்சை நிற தவளைகள் மூன்றும் தாவித் தாவி
கருப்புத் தவளைகள் இருக்குமிடம் செல்லவேண்டும்.

கருப்பு நிற தவளைகள் மூன்றும் தாவித் தாவி
பச்சை நிற தவளைகள் இருந்த இடத்துக்குச் செல்லவேண்டும்.

தவளைகள் எந்த வரிசையில் தாவும் என்று நீங்கள் கூறுங்கள்.

கண்மணி
09-11-2008, 03:48 PM

இந்த வரிசையில்...

http://i330.photobucket.com/albums/l426/kanmanai/frog_jump.jpg

ஓவியா
09-11-2008, 03:57 PM
நான் கேள்வியை படித்து, ஒரு தாளில் செய்முறையை பாதிக்கு மேல் செய்துக்கொண்டிருந்தேன், திடிரெண்டு பார்த்தால் கண்மனியக்கா விடையை கொடுத்து விட்டார்.......

இனி கண்மணியக்காவே எல்லா கேள்விக்கு பதிலளித்து விடுவார் என்று நினைக்கிறேன். வாழ்க..... நல்லாயிருங்கக்கா.

கண்மணி
11-11-2008, 12:05 AM
இன்னும் வழிகள் இருக்குங்க அக்கா.. ஒரே சமயத்தில் இரண்டு தவளைகள் தாவலாம் இல்லியா. அதனால இதில பாதி நேரம் தான் ஆகும்.

அதே சமயம் ஒரு கேள்விக்கு ஒரே ஒரே பதில்தான் இருக்குன்னு யார் சொன்னது? நிறைய சரியான பதில்கள் இருக்கலாம். எல்லாம் நம்ம கல்வி முறைதான் காரணம். வரை முறைகளுக்குள் கட்டுப்படாதீங்க அக்கா. கொஞ்சம் வெளியே வந்தும் சிந்திக்கணும்.
--------------------------------------------------------------------------

போன புதிரையே எடுத்துக்குங்க. விதிமுறைப்படி ஒரு வழி இருக்கு, ஆனா விதிமுறை அபத்தம் அப்படின்னு அல்லிராணி அந்தத் திரியில சொல்லலியா?

அதாவது திருடன் தனியா இருக்கலாம். தப்பிச்சு ஓடிட மாட்டானா அப்படின்னு கேட்டா மரத்தில கட்டிப் போட்டுடுவமில்ல என்பார்கள்..

அப்ப அதே கயிறால மத்தவங்க இருக்கும் போதுக் கட்டிப் போடக் கூடாதான்னு கேட்டா ஹி ஹி மக்கள் அவுத்து விட்டுட்டா என்பாங்க,,

ஓ அப்ப போலீஸ்தான் நல்லவரான்னு கேட்டா? இல்லைங்க போலீஸ் இருக்கும் போது உங்க மகளை நம்பி விட்டுட்டுப் போக முடியாது என்பாங்க..

ஒரு பொண்ணும் பையனும் தனியா இருக்கலாம்.. ஆனால் பொண்ணோட அம்மாவும் பையனும் பையனோட அப்பா இல்லாம இருக்கக் கூடாது.

அதே மாதிரி பொண்ணோட அம்மாவும் பையனோட அப்பாவும் தனியாக் கூட இருக்கலாம். ஆனால் பையனோட அப்பா பொண்ணோட, அவங்க அம்மா இல்லாம இருக்க முடியாது. இது என்னங்க கூத்து.

பார்த்தா அங்க இருக்கறதிலேயே திருடன் தான் மிக நல்லவன்.

இந்தப் புதிர்ல எனக்கும் அல்லி அக்காவுக்கும் இருக்கிற ஒரே ஆட்சேபனை, வீட்ல குழந்தைகளோட இந்தப் புதிரை வச்சு விளையாடினா, அந்த சின்னக் குழந்தைக்கு நாம என்ன கலாச்சாரத்தை கத்துத் தருகிறோம் என்பது தான். விளையாட்டுக்களை, கதைகளை, புதிர்களை பாக்கறப்ப இது போன்ற ஒரு சமுதாய அக்கறை இருக்கணும்.

ஆனால்

இப்படித்தான் ஆண்டி ஹீரோ சினிமாக் கதைகள் எழுதறாங்கன்னு நினைக்கிறேன்.

இங்க இருக்கிற புதிர்களை நீங்க எப்படியோ நான் அக்கம் பக்கத்து குழந்தை நண்பர்களோட விளையாட உபயோகிக்கிறேன். அவங்களுக்கு நல்ல கருத்துகள் இதன் மூலம் போய்ச் சேரும். அதே சமயம் "திங்கிங் ஆஃப் ஆல் பாஸிபிலிட்டீஸ்" என்ற மிகச் சிறந்த திறமை வளரும்.

இது சின்ன விஷயம்தான். ஆனால் குழந்தைகளும் சின்னவங்க. அதனால அவங்களுக்கு இது பெரிய விஷயம்.

ஆனால் என்னைப் பொருத்த வரை பி.ஜி.கே அண்ணா, பரம்ஸ் அண்ணா போன்றவர்கள் அம்புலிமாமா மாதிரி..

குழந்தைகளுக்கான நல்ல புத்தகங்கள். நம்மையும் குழந்தைகளாக்கும் புத்தகங்கள். அதை அவங்க உணர்ந்துக்கனும்னு தான் கொஞ்சம் விரிவா எழுதிட்டேன்..

இதுக்கு பேரு என்னக்கா?

காதலா காதலா வில் கமல் சொல்லுவாரே, பிரபு தேவா கூட சொல்லுவாரே..

அதாங்கக்கா,

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா....

இன்னுமொருமுறைச் சொல்லுங்க.. (உங்களை முந்திகிட்டு நானே எழுதி ஒரு பதிவைக் குறைச்சிட்டேன். ஹி.ஹி..)

aren
11-11-2008, 12:49 AM
என்னமோ போங்க கண்மணி. இப்படி எல்லா இடத்துலேயும் வந்து கலக்குறீங்க. பாராட்டுக்கள்!!!!

pgk53
18-11-2008, 02:31 PM
அன்பு நண்பர்களே,
கடந்த ஒரு வார காலமாக மன்றத்தில் வந்து புதிர் பதிய நேரம் கிடைக்கவில்லை.
வேலைப்பளு அதிகமாக இருந்தது.

சரி வாருங்கள் மீன் குழம்பு சாப்பிடலாம்....மன்னிக்கவும் புதிருக்குப் போகலாம்.

pgk53
18-11-2008, 02:33 PM
புதிர் எண்-308

முன்னொரு காலத்திலே ஒரு நாட்டில் ஒரு இளவரசி இருந்தாள்.
அவள் மிகுந்த அழகு மிக்கவள்.

அவளுக்கு அவளது தாயார் ஒரு மோதிரத்தை பரிசளித்தார்.
அந்த மோதிரம் தாயாருக்கு அவளது தாயார் பரிசளித்தது.
இப்படி வம்சவாளியாக வந்த மோதிரம் அது.
மிகுந்த அழகான வேலைப்பாடுள்ள மோதிம்.

அதை இளவரசி எப்ப்போதும் விரலில் அனிந்திருப்பாள்.

இளவரசி மாலை வேளையில் அவளது அந்தப்புறத்தில் அமைந்திருந்த ஒரு தடாகத்தில் சிறிய படகில் அமர்ந்து நீரில் உலவுவாள்.

அப்போது கொஞ்சம் தானியங்களை கொண்டுசென்று தடாகத்தில் இருந்த மீன்களுக்காக நீரில் தூவிவிடுவாள்.
மீன்களும் ஆர்வமுடன் அந்த சமயம் நீரின் மேலேழும்பி தானியங்களை கவ்விச் செல்லும்.
அந்தக் காட்சியைப் பார்ப்பதில் இளவரசிக்கு மிக விருப்பம்.

அதுமட்டுமல்ல தடாகத்தில் இருந்த மீன்களை மாதம் ஒருமுறை பிடித்து சமைத்து சாப்பிடுவதிலும் இளவரசிக்கு மிகவும் விருப்பமான ஒன்று.

ஒருநாள் தடாகத்தில் வழக்கம்போல் மீன்களுக்கு இரைபோட்டவாறு படகில் உலா வந்தபோது, அவள் விரலில் அனிந்திருந்த மோதிரம் கழன்று நீரில் விழுந்தது.
பளிச்சிட்டவாறே, நீரில் சுழன்று சுழன்று இறங்கிமறைந்தது.

பதைத்துப் போன இளவரசி கரைக்கு வந்து, சேவகர்களை அழைத்து தடாகத்தில் இறங்கி நீரில் மறைந்த மோதிரத்தை தேடச் சொன்னாள்.
சேவகர்களும் மிகக் கஷ்டப்பட்டு தடாகத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடினார்கள்.
ஆனால் யாருக்கும் மோதிரம் கிடைக்கவில்லை.

ஒரு மாதம் கடந்தது.
அன்று தடாகத்தில் இருந்த மீன்களைப் பிடித்துச் சமைக்கும் தினம்.
சேவகர்கள் மீன்களைப் பிடித்து வந்தார்கள்.

சமையல்காரர் மிக்க சுவையுடன் சமைத்து வைத்தார்.
மீன் குழம்பு உள்ள தினத்தில் இளவரசி காலையில் இருந்து ஏதும் சாப்பிடாமல் இருப்பாள்.
அப்போதுதானே மீனை ருசித்து அதிகமாகச் சாப்பிடலாம்.

நாக்கைச் சுழட்டிக்கொண்டு சாப்பிட வந்த இளவரசி, மிகுந்த பசி இருந்ததினால்
ஒரு முழு மீனை அப்படியே எடுத்து வாய்க்குள் தினித்து சதையை உறிஞ்சினாள்.

{சிவாஜி கனேசன் முதல் மரியாதை படத்தில் ராதா வைத்துக் கொடுக்கும் மீனை உறிஞ்சுவாரே…அப்படி}

திடீரென இளவரசிக்கு தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டது.

இளவரசி தினறினாள்.

அதைக்கண்டதும் உடனே அரன்மனை மருத்துவரை வரவழைத்தார்கள்.
மருத்துவர் வந்து புன்முருவலுடன் இளவரசியில் தொண்டையில் அடைத்ததை எடுத்துக் காட்டினார்.

மன்ற நண்பர்களே….இப்போது நீங்கள் கூறுங்கள்…!!!!!!!!!!!!!!!!!!!!
இளவரசியின் தொண்டையில் சிக்கியிருந்தது என்ன??????????????

கண்மணி
18-11-2008, 03:11 PM
மீன் முள்தான்.. பின்ன இளவரசின் வாயில் செல்லும் அந்தச் சின்ன மீன் மோதிரத்தை விழுங்கச் சாத்தியம் குறைவாச்சே..

ஓவியாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும்

pgk53
26-11-2008, 02:28 PM
பொதுவாக....இதுபோன்ற புதிர்களுக்கு சட்டென்று யாருமே....இளவரசியின் தொண்டையில் சிக்கியது மோதிரம் என்றுதான் கூறுவார்கள்....

கண்மனி அவர்கள்....மிக்க கவனமுடன்..மீன்முள் என்று கூறிவிட்டார்.
வாழ்த்துக்கள்.
நண்பர்கள் பொறுத்துக்கொள்ளவும்.
வேலைப்பளு மிக மிக அதிகம்.
இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது.
நாளை வட்டியும் முதலுமாக இரண்டு புதிர்களைப் பதிவு செய்ய முயற்சி செய்கின்றேன்.

pgk53
27-11-2008, 01:49 PM
புதிர் எண்-309

ஒரு விசித்திரமான வழக்கு அந்த கிராமப் பஞ்சாயத்துக்கு வந்தது..
ஒரு மாதத்துக்கு முன்பாக ராமு தனது நிலத்தை சோமுவுக்கு விற்றிருந்தான்.
இப்போது ராமுதான் வழக்கைக் கொடுத்திருந்தான்.

பஞ்சாயத்துத் தலவர் மிகுந்த அறிவாற்றல் மிக்கவர்.
அவர் ராமுவைப் பார்த்து “ நீ உன் வழக்கைக் கூறு” என்றார்.

சோமு,” அய்யா, எனது நிலத்தை நான் சோமுவுக்கு கடந்த மாதம் விற்றுவிட்டேன்.
அந்த நிலத்தில் ஒரு கிணறும் இருந்தது.
சோமுவுக்கு நான் நிலத்தையும் கிணற்றையும்தான் விற்றேனே தவிர , கிணற்றில் இருக்கும் தண்ணீரை விற்கவில்லை. அதனால் சோமு கிணற்றில் இருக்கும் தண்ணீருக்கும் விலை தரவேண்டும்.” இதுதான் எனது வழக்கு” என்றான்.

பஞ்சாயத்தில் இருந்த உப தலைவர்கள் எல்லாம் இதற்கு என்ன தீர்ப்பு கூறுவது என்று குழம்பிப்போய்விட்டார்கள்.தலைவரிப் பார்த்தார்கள்.

தலைவர் தீவிரமாக ஆலோசனை செய்தார்.
பிறகு புன்முறுவலுடன் சோமுவைப் பார்த்தார்.

“சோமு….நீ ராமுவின் நிலத்தை பத்திரம்போடும்போது, நிலமும் நிலத்தில் உள்ள கிணறும் வாங்குவதாகத்தானே பத்திரம் போட்டாய்” என்று கேட்டார். அதற்கு சோமு” ஆமாம் அய்யா” என்றான்.

“ சரி உனக்கு எத்தனை குழந்தைகள்” என்று கேட்டார்.
“அய்யா….எனக்கு இரண்டு ஆணும் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள்” என்றான்.

பிறகு தலைவர் ராமுவைப்பார்த்து “ என்ன ராமு, உனக்கு எத்தனை குழந்தைகள்” என்றார்.

ராமு,” அய்யா…எனக்கு ஒரு ஆணும் ஒரு பெண்ணும்” என்றான்.

பிறகு தலைவர் தனது தீர்ப்பைக் கூறினார்.

தீர்ப்பைக் கேட்ட ராமு அதிர்ச்சி அடைந்தான்.

அய்யா என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
பேராசையினால் புத்திகெட்டுப் போய்விட்டேன் என்று கூறி மன்னிப்புக் கேட்டான்.

நண்பர்களே…..தலைவரின் தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும்????????????

கண்மணி
27-11-2008, 02:03 PM
சோமு ஒரு பெண்ணைத் தானே கல்யாணம் செய்தார். அவருடைய மனைவி வயிற்றில் பிறந்த குழந்தைகள் எப்படி அவருடைய குழந்தைகள் ஆகும்?

அதனால அந்தக் குழந்தைகளை வச்சு காமெடி பண்ணிட்டார் நாட்டாமை!

தண்ணி உன்னதுன்னா குழந்தைங்க உன்னதில்லை. குழந்தைங்க உன்னுதுன்னா தண்ணி உன்னுதில்லை என சொல்லி இருப்பார்.:eek::eek::eek:

ஆனா ஒரு விஷயம். கிணறு சோமு தோண்டியதாவே இருக்கட்டும். கிணறுதானே அவருக்குச் சொந்தம். தண்ணி எப்படி அவருக்குச் சொந்தமாகும்?.அவர்தான் தண்ணி தோண்டலியே.

அதனால கண்மணி நாட்டாமையோட தீர்ப்பு ...

கிணத்து தண்ணியை உபயோகித்தற்கான நிலம் விற்கும் நாள் வரைக்குமான தொகையை சோமு பஞ்சாயத்துக்கு கட்டணும். :icon_b:

ராமுவுக்கு கிணத்து தண்ணியை உபயோகிக்க பஞ்சாயத்து தனியா டீல் பேசிக்கும்..:D

ஏன்னா பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கிற எல்லாம் அரசாங்கத்துக்குத்தான் சொந்தம்.

(எதுக்கு உணர்வுகளோட விளையாடணும்.. வார்த்தைகளோட விளையாடினா போதுமே!:icon_b:)

pgk53
29-11-2008, 12:39 AM
ஆஹா....என்ன அருமையான வாதம்....
கண்மனி அவர்களே...வாழ்த்துக்கள்......ஆனால்???????????

விடை தவறானது.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சாம்பவி
29-11-2008, 02:05 AM
வீட்டை விற்றால்
வீட்டை காலி செய்வது
விற்றவரின் பொறுப்பு......!!!!
கிணற்றை விற்றால்...
கிணற்றை காலி செய்வது................ ;)

இரவிற்குள்
இறைக்கணுமோ.... !!!!!!
இல்லை..
தந்தையும் பிள்ளைகளுமாய்..
குடித்தே தான் தீர்க்கணுமோ...

உப்பைத் தின்னவன் ........ !!!!!

கண்மணி
30-11-2008, 04:31 PM
இதைச் சொல்ல ஓடி வந்தால் சாம்பவி முந்திகிட்டாங்க..

அதாவது கிணற்றை விற்றவன் அந்தக் கிணத்தை காலிசெய்யலை. அதில தன்னோட தண்ணியை ரொப்பி வச்சிருக்கான்.

அதனால தீர்ப்பு

இது நாள் வரைக்கும் கிணற்றில் தண்ணீர் விட்டு வைத்ததற்கு வாடகை தரணும். அப்புறம் இனிமேலும் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் காலி செய்து தரணும்.

தண்ணீர் காலி செய்து தரும் வரைக்கும் அந்த நிலத்துக்கு போய் வரணுமில்லையா, அதுக்கும் அபராதம் கட்டணும்.. ஏன்னா நிலம் வாங்கியவருக்குச் சொந்தமாச்சே..

பாவம் தான்

aren
30-11-2008, 04:54 PM
எதுக்கு இருவருக்கும் எத்தனை குழந்தைகள் என்று கேட்டார். விடை அதில்தான் இருக்கிறது.

DivyaBharathi
01-12-2008, 08:24 AM
இதே மாதிரி ஒரு புதிர் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அதில் கிணறுக்கு பதிலாக வறப்பு வரும். அதற்கு, நீதிபதி தத்தம் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைக்க சொல்வார்.
இங்கேயும் அதே போல் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன். அதை கேட்டு ராமு அதிர்ச்சி அடைந்திருப்பான்.
சரியா ????

pgk53
02-12-2008, 01:23 AM
இதைச் சொல்ல ஓடி வந்தால் சாம்பவி முந்திகிட்டாங்க..

அதாவது கிணற்றை விற்றவன் அந்தக் கிணத்தை காலிசெய்யலை. அதில தன்னோட தண்ணியை ரொப்பி வச்சிருக்கான்.

அதனால தீர்ப்பு

இது நாள் வரைக்கும் கிணற்றில் தண்ணீர் விட்டு வைத்ததற்கு வாடகை தரணும். அப்புறம் இனிமேலும் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் காலி செய்து தரணும்.

தண்ணீர் காலி செய்து தரும் வரைக்கும் அந்த நிலத்துக்கு போய் வரணுமில்லையா, அதுக்கும் அபராதம் கட்டணும்.. ஏன்னா நிலம் வாங்கியவருக்குச் சொந்தமாச்சே..

பாவம் தான்

இதைத்தான் கோடு போட்டால் ரோடு போடுவது என்பார்கள்.

சாம்பவி அவர்கள்...மெல்லியதாக ஒரு கோடு போட கண்மனி அவர்கள் அதில் நான்கு வழிச்சாலையே அமைத்துவிட்டார்கள்.

குழந்தைகள் எத்தனை என்றெல்லாம் கேட்டதாக இருப்பது சும்மா.....உங்களை சரியான வழியில் யோசிக்கவிடாமல் திசை திருப்புவதற்காக....

கண்மனிக்கு வாழ்த்துக்கள்.

pgk53
03-12-2008, 02:37 PM
புதிர் எண்-310

அக்பரின் அரசபையில் மிக்க புகழ் வாய்ந்தவராக இருந்தவர் பீர்பல்.
அவருக்கு அக்பரிடம் இருந்த செல்வாக்கைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டிருந்தார்கள் மற்றவர்கள்.
ஒரு நாள் அக்பர் பீர்பலைப்பார்த்து, “ பீர்பல் உனக்கு ஒரு முக்கியமான கேள்வி.
அதற்கு ஏதாவது ஒரு பதிலைத்தான் நீ கூறவேண்டும். அதாவது, எனது அரச நீதி உனக்கு வேண்டுமா???? அல்லது ஒரு ஆயிரம் பொற்காசுகள் வேண்டுமா?இதில் ஏதாவது ஒன்றை நீ தேர்வு செய்து கூறவேண்டும்” என்றார்.

சிறிது நேரம் ஆலோசனை செய்த பீர்பல், “ எனக்கு ஆயிரம் பொற்காசுகள்தான் வெண்டும் “ என்றார்.
இந்த பதிலை அக்பரும் எதிர்பார்க்கவில்லை.
பீர்பல் இப்படி பொற்காசுமேல் பேராசை கொண்டு தனது நீதி தவறாத ஆட்சியை கேட்காமல் பொற்காசு வேண்டும் என்கிறாரே என்று கொஞ்சம் கோபமும் அடைந்தார்.

அதற்குத் தூபம் போடுவதுபோல் சபையில் இருந்த மற்றவர்களும் இதுதான் பீர்பலை பழி வாங்க தக்க சமயம் என்று கருதி “ அய்யோ என்ன இது….இப்படி சக்கரவர்த்தியை அவமதிக்கிறாரே பீர்பல்” என்று பேச ஆரம்பித்தார்கள்.

அக்பர் கொஞ்ச நேரம் சிந்தனை செய்தபின்பு, “பீர்பல் நீ இப்படிக் கூறியதற்கு தகுந்த காரணத்தை விளக்கவேண்டும்.
இல்லையென்றால் நீ தண்டனைக்கு ஆளாவாய்” என்றார்
அக்பர் தான் பொற்காசுகள்தான் வேண்டும் என்று கூறியதற்குரிய காரனத்தை விளக்கியதும், அக்பர் மிகவும் மனம் மகிழ்ந்து ஆயிரம் பொற்காசுகளுக்குப் பதிலாக இரண்டாயிரம் பொற்காசுகள் வழங்கினார்.

அன்பு நண்பர்களே…….பீர்பல் என்ன காரணம் கூறியிருப்பார்?????????

கண்மணி
03-12-2008, 02:50 PM
.

முதல்ல இரண்டில ஒண்ணு சூஸ் பண்ணச் சொல்லவேண்டியது.
அப்பால அவங்க எதிர்பார்க்கறதைச் சொல்லலைன்னா தண்டிக்கறேன்னு மிரட்ட வேண்டியது.
'
அதான் சூஸ் பண்ண சுதந்திரம் குடுத்தப்பவே இரண்டில எதுன்னாலும் ஒத்துக்க வேண்டியதுதானே மருவாதை. அதை விட்டுப்புட்டு ஆத்திர படற அரசனின் ஆட்சியில் என்ன அரசநீதி இருக்கப் போவுது? உனக்கு பிடிச்ச பதிலைத்தான் சொல்லணும்னா அப்பால எதுக்கு கேள்வி?

தவறு செய்யாத ஒருத்தனை தண்டிப்பது என்ன அரச நீதி?

அதனால அந்த அரசநீதியை விட ஆயிரம் பொற்காசு அதிக மதிப்புதானே!

இது நம்ம வீட்டில அடிக்கடி நடக்கிற விஷயந்தானே அண்ணே!,, அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா எனக் கேட்க வேண்டியது. சமத்துப் பிள்ளையா இருந்த கேட்கிற ஆளை வச்சி நிதானிச்சி சொல்லும். இல்லாட்டி ரெண்டு பேரும்னு சொல்லும். அதி சமத்துன்னா சரியா தப்பா சொல்லி மாட்டி விட்டுரும்

இதனால கத்துக்கற பாடம் என்னன்னா, அம்மா புடிக்குமா? அப்பா புடிக்குமா? அப்படின்னு மல்டிபுள் சாய்ஸ் கொஸ்டினை கொழந்தைங்க கைல கேட்காதீங்கோ.. கேட்டா அவங்க சமயம் பாத்து நோஸ்கட் பண்ணி வுட்ருவாங்கோ!

pgk53
05-12-2008, 09:37 AM
சபாஷ் கண்மனி அவர்களே........சரியான வாதம் !!!!!
ஆனால் புதிருக்குச் சரியான விடை இதுவல்லவே???????????
முயற்சிக்கவும்

aren
06-12-2008, 10:17 AM
எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுப்பதன் மூலம் அரச நீதி குறையாமல் காப்பாற்றப்படுகிறதே, அதனால் நான் சொன்னதில் என்ன தப்பு என்று பீர்பல் வாதித்திருப்பார்

கண்மணி
06-12-2008, 10:51 AM
அப்படி இல்லை.

அரசநீதி பீர்பால் எடுத்துக் கொண்டாலும் சரி எடுத்துக் கொள்ளாவிட்டாலும் சரி..

அது அவருக்கு எப்பொழுதுமே கிடைக்கும்..

அதை அவர் தனியே கேட்டுப் பெறவேண்டியதில்லை,,

அதனால்தான் அவர் ஆயிரம் பொற்காசுகளை கேட்டுப் பெற்றார். இது ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்துவிட்டு பவ்யமாக கேட்டால் கொடுக்கப் படவேண்டிய பதில்.

சிச்சுவேஷனுக்கு ஏற்ற மாதிரி பதிலும் மாறும். :D அதனாலதான் இதைச் சொல்லலை :D

கேப்பு கிடைக்கறப்ப ஆப்பு அடிப்பவர்தான் மதியூக மந்திரி,

இரண்டு பதிலுக்கும் வித்தியாசம் அக்பர் கேட்கும் முறை..

அங்க அரசநீதி மண்ணில் சாய்வதைக் சுட்டிக் காட்ட அந்த பதில்
இங்க அரச நீதி சரியான விதத்தில் செயல்படுவதால் இந்த பதில்..

pgk53
07-12-2008, 01:10 PM
[QUOTE=கண்மணி;395045]அப்படி இல்லை.

அரசநீதி பீர்பால் எடுத்துக் கொண்டாலும் சரி எடுத்துக் கொள்ளாவிட்டாலும் சரி..

அது அவருக்கு எப்பொழுதுமே கிடைக்கும்..

அதை அவர் தனியே கேட்டுப் பெறவேண்டியதில்லை,,

அதனால்தான் அவர் ஆயிரம் பொற்காசுகளை கேட்டுப் பெற்றார்.
********************************************************************************

கண்மனி அவர்களே.....பீர்பல் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அக்பரின் அரசநீதி எப்போதும் அவருக்குக் கிடைக்கும் ஒன்றாகும்.
பீர்பலுக்கு கிடைக்காதது பொற்காசுகள்தான்.
எந்த ஒருவனும் தன்னிடம் இல்லாததைத்தானே கேட்டுப் பெருவான்.

அதனால்தான் பீர்பல் தன்னிடம் இல்லாத பொற்காசுகளைக் கேட்டார்.

இந்த பதிலைக் கேட்ட அக்பர் பீர்பலின் சாமர்த்தியத்தை மெச்சி இரண்டு பங்காகவே பரிசைக் கொடுத்தார்.

கிட்டத்தட்ட சரியான பதிலைக் கொடுத்த கண்மனிக்கு எனது வாழ்த்துக்கள்.

அக்னி
07-12-2008, 01:21 PM
பீர்பாலிட்ட, எக்குத்தப்பா கேள்வி கேக்கறதும்,
பதில் சொல்லலைன்னா தண்டனைன்னு வெருட்டுறதும்,
பதில் சொன்னதுக்கப்புறமா, பரிசை அதிகமாகக் கொடுக்கிறதும்,
என்றதே,
அக்பருக்குப் பொழப்பாப் போச்சுது.

pgk53
07-12-2008, 02:56 PM
அக்னி அவர்களே ......அடுத்த புதிரும் அக்பர் ---பீர்பல் புதிர்தான்.
ஆனால் இதில் அக்பர் எக்குத் தப்பாய் கேள்வி கேட்கவில்லை.
பீர்பல்தான் சாமர்த்தியமாகச் சமாளிக்கின்றார்.
விரைவில் அடுத்த புதிர்.

pgk53
08-12-2008, 12:30 PM
புதிர் எண்-311

அக்பர் சக்கரவர்த்தி இரவில் உறங்கும்போது ஒரு கனவு கண்டார்.
ஒரு பல்லைத் தவிர அவரது பற்கள் அனைத்தும் விழுந்துவிட்டு பொக்கை வாய் ஆகியதுபோல கனவில் கண்டார். பிறகு அக்பருக்கு உறக்கமே வரவில்லை.

மறுநாள் அரசபை கூடியதும் பீர்பலிடம் தனது கனவைக் கூறவேண்டும் என்று தீர்மானமுடன் வந்தார்.

ஆனால் அன்று பீர்பல் அரசபைக்கு வரவில்லை.

அதனால் நகரில் இருந்த சிறந்த சோதிடர்களை அக்பர் அழைத்தார்.
அவர்களிடம் தனது கனவைக் கூறினார்.

சோதிடர்கள் அனைவரும் கவனமுடன் ஆராய்ந்து “ சக்கரவர்த்தி அவர்களே…..தங்கள் கனவு நல்லதைக் குறிப்பிடவில்லை. தங்கள் உறவினர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள் என்பதைக் குறிப்பதே இக்கனவின் பலன்” என்றார்கள்.

இதைக் கேட்ட அக்பர் மிக்க மனவருத்தம் அடைந்தார்.
அவரது மனநிலை மிகவும் பாதிப்படைந்தது.
அதனால் சோதிடர்களுக்கு பரிசு ஏதும் அளிக்காமல் அவர்களை அனுப்பிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து பீர்பல் அரசபைக்கு வந்தார்.

அக்பர் பீர்பலிடம் தனது கனவைக் கூறி அதன் பலன் என்ன என்று கேட்டார்.

இதைக் கண்ட அரசவையில் இருந்த மற்ற மந்திரிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பீர்பலும் சோதிடர்கள் கூறிய பலனைத்தான் கூறப்போகிறார். அதனால் அக்பர் கோபப்பட்டு பீர்பலை திட்டப்போகிறார் அன்று நினைத்து பீர்பல் என்ன பதில் சொல்லப்போகிறார் அன்று ஆர்வமுடன் காத்திருந்தார்கள்.

அக்பர் கேள்வியைக் கேட்டதும் பீர்பல் கொஞ்ச நேரம் சிந்தனை செய்தார். பிறகு புன்முறுவலுடன் அக்பரிடம் கனவின் பலனைக் கூறினார்.சோதிடர்கள் கூறிய அதே பலனைத்தான் பீர்பல் வேறுவிதமாகக் கூறினார்.

அதைக் கேட்ட அக்பர் கோபம் அடைவதற்குப் பதிலாக மிக்க மகிழ்வடைந்தார்.

பீர்பலுக்கு சிறந்த பரிசும் அளித்தார்.

அன்பர்களே பீர்பல் எப்படிச் சொல்லியிருப்பார்????????????

selvanntamil
08-12-2008, 12:49 PM
சில குருவிகள், சில பூக்கள்.
ஒவ்வொரு குருவியும் ஒரோர் பூக்களில் அமரும்பொழுது ஒரு குருவி மீதம்.
ஒவ்வொரு பூவிலும் இரண்டு குருவிகளாய் அமரும் பொழுது ஒரு பூ மீதம்.
அப்படியென்றால்
எத்துனை பூ? எத்துனை குருவி?

பாரதி
08-12-2008, 01:21 PM
அக்பரிடம், "சக்கரவர்த்தி அவர்களே.. இது மிக நல்ல கனவு. உங்களுக்கு நீண்ட ஆயுள் என்பதை இந்த கனவு குறிக்கிறது. உங்கள் உற்றார் உறவினருக்கு பின்னரும் நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்வீர்கள் " என்றார் பீர்பல்.

மதி
08-12-2008, 01:58 PM

இது தான் சரியான பதிலாக எனக்கும் தோன்றுகிறது.
பி.ஜி.கே அண்ணா... வரட்டும். அப்புறம் சபாஷ் சொல்கிறேன் பாரதியண்ணா.

pgk53
09-12-2008, 01:00 PM
மதி அவர்களே நீங்கள் தாரளமாக சபாஷ் சொல்லலாம் பாரதிக்கு.
மிகச் சரியான விடையை அளித்த பாரதிக்கு எனது வாழ்த்துக்கள்.

நாளை அடுத்த புதிர் .
நாளை மறுநாள் நான் விடுமுறைக்கு தாயகம் புறப்பட உள்ளேன்.

pgk53
11-12-2008, 12:34 AM
சில குருவிகள், சில பூக்கள்.
ஒவ்வொரு குருவியும் ஒரோர் பூக்களில் அமரும்பொழுது ஒரு குருவி மீதம்.
ஒவ்வொரு பூவிலும் இரண்டு குருவிகளாய் அமரும் பொழுது ஒரு பூ மீதம்.
அப்படியென்றால்
எத்துனை பூ? எத்துனை குருவி?

செல்வன் தமிழ் அவர்களே........3 பூக்கள்---4 குருவிகள்.
3 பூவிலும் குருவிகள் ஒவ்வொன்றாக அமர்ந்தபின் ஒரு குருவிக்கு பூ இல்லை.
இரண்டு பூக்களில் இரண்டு,இரண்டாக குருவி அமர்ந்தால் ஒரு பூ மீதம்.
சரிதானா??????????

pgk53
11-12-2008, 12:39 AM
புதிர் எண்-312

முன்னொரு காலத்திலே ஒரு நாட்டிலே பலவிதமான சித்துவேலைகள் தெரிந்த வயதான ஒருவர் இருந்தார்.

அவரிடம் மூன்று இளைஞர்கள் பணி செய்துவந்தார்கள்.
மூவரும் மிகுந்த பணிவும் அடக்கமும் கொண்டவர்கள்.

வயதானவர் இறக்கும் தருணம் சமீபித்ததை அறிந்து கொண்டார்.
தன்னிடம் பணி செய்த மூன்று இளைஞர்களுக்கும் ஏதாவது செய்ய ஆசை கொண்டார்.

அதனால் ஒருவனுக்கு ஒரு மந்திரக் கண்ணாடி ஒன்றைக் கொடுத்தார்.
அந்த கண்ணாடியிடம் உலகில் உள்ள எதைக் கேட்டாலும் அது இருக்கும் இடத்தைக் காட்டிவிடும்.

அடுத்தவனுக்கு உலகின் எந்த இடத்துக்கும் நொடிப்பொழுதில் பறந்து சென்று சேர்க்கும் மாயக் குதிரை ஒன்றைக் கொடுத்தார்.

மூன்றாவது இளைஞனுக்கு மிக அபூர்வ சக்திகொண்ட மாம்பழம் ஒன்றைக் கொடுத்தார்.
அந்த மாம்பழம் எத்தனைக் காலம் ஆனாலும் கெடாமல் இருக்கும்.
எந்த ஒரு நோயானாலும் அதைச் சாப்பிட்டால் நோய் நீங்கிவிடும்.

மூவருக்கும் பரிசுகள் கொடுத்த வயதானவர் விரைவில் இறந்துவிட்டார்.

காலம் கொஞ்சம் கழிந்தது.

அப்போது பக்கத்தில் ஏதோ ஒரு நாட்டின் இளவரசி நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் எந்த மருத்துவராலும் கண்டுபிடிக்க இயலாத விசித்திரமான நோய் என்றும் அவர்கள் கேள்விப்பட்டார்கள்.

அத்துடன் இளவரசியைக் குணப்படுத்தும் ஆளுக்கு அவளை மணமுடித்துக் கொடுப்பதாகவும் அரசன் அறிவித்திருப்பதாக அவர்கள் கேள்விப்பட்டார்கள்.

ஆனால் எந்த நாட்டு இளவரசி என்று தெரியவில்லை.

மூவரும் கூடிப் பேசினார்கள்.

முதலாமவன் தனது மாயக் கண்ணாடியிடம் விஷயத்தைக் கூறி அந்த இளவரசியின் இருப்பிடம் எது என்று கேட்க, மாயக்கண்ணாடியும் காட்டியது.

ஆனால் அந்த நாட்டுக்குப் போகும் வழி மிகுந்த ஆபத்தானது. சாதாரனமாக யாரும் நெருங்க முடியாத இடத்தில் அந்த நாடு இருந்தது.

உடனே மூவரும் அடுத்தவனது மாயக் குதிரையில் ஏறி அந்த நாட்டை அடைந்தார்கள்.

அரசனைக் கண்டு தாங்கள் நோயைக் குணப்படுத்த வந்துள்ளதாகக் கூறினார்கள்.
அரசனும் அவர்களை இளவரசி இருக்கும் அரன்மனைக்கு அழைத்துச் சென்றான்.

மூன்றாவது வாலிபன் தன்னிடம் இருந்த மாம்பழத்தை இளவரசிக்குக் கொடுத்தான்.

அதை உண்ட இளவரசி உடனே நோய் நீங்கி புத்துனர்வு பெற்றாள்.

அரசன் தான் அறிவித்திருந்தபடி இளவரசியை மனம் முடித்துக்கொடுக்க விரும்பினான்.

மூன்று இளைஞர்களுமே விட்டுக்கொடுக்காமல், தனக்குதான் இளவரசியை மணமுடிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அரசனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அதனால் தனது அரசவையைக் கூட்டி அறிஞர்களைடம் விஷயத்தைக் கூறி ஒரு நல்ல தீர்வு கூறும்படி வேண்டினான்.

அறிஞர் சபை நீண்ட ஆலோசனை மற்றும் விவாதங்களுக்குப் பிறகு அந்த மூவரில் ஒருவனைத் தேர்வு செய்தார்கள்.

அவனுக்கு இளவரசியை மணமுடித்துக்கொடுத்து அவனை அந்த நாட்டின் அரசனாக முடி சூட்டினார்கள்.

நண்பர்களே……அந்த மூவரில் யாரை தேர்வு செய்திருப்பார்கள் என்று நீங்கள் சொல்லுங்கள்.??????????????//

ரங்கராஜன்
11-12-2008, 02:17 AM
மாம்பழம் வைத்திருப்பவனுக்கு தான்

அன்புரசிகன்
11-12-2008, 03:10 AM
புதிர் எண் 312 ........... இதில் இரண்டு காரணங்களுக்காக என் பதிலை அடையலாம்.

மாம்பழக்காரன்
வழி 1 அதாவது மற்றவர்களுக்கு இளவரசியை குணப்படுத்திய பின்னரும் அந்த அதிசயப்பொருள் அவர்களது கையில் இருக்கும். ஆனால் மாம்பழக்காரனுக்கோ அது கிடையாது. அவன்மீது ஏற்பட்ட அனுதாபத்திற்காக / அவனின் தியாகமனப்பான்மைக்காக மாம்பழக்காரனுக்கு திருமணத்தினை செய்துவைத்திருக்கலாம். :D

pgk53
12-12-2008, 01:07 AM

மாம்பழம் வைத்துருப்பவனுக்குத்தான் என்று நண்பர் மூர்த்தி சுருக்கமாக கூறி சரியான பதிலுக்கு கோடு போட்டார்.
ஆனால் அன்பு ரசிகன் அதற்கான காரணங்களை மிகவும் விளக்கமாக கூறி ரோடே போட்டுவிட்டார்.
இருவருக்குமே எனது வாழ்த்துக்கள்.

pgk53
12-12-2008, 01:08 AM
அன்பு நண்பர்களே ,
இன்று நான் ஒரு மாத விடுமுறையில் தாயகம் புறப்படுகின்றேன்.
மீந்தும் உங்களை அடுத்த ஆண்டு சந்திக்கிறேன்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

அடுத்த புதிரும் போட்டுவிட்டுத்தான் செல்கிறேன்.
வணக்கம்.

pgk53
12-12-2008, 01:12 AM
புதிர் எண்-313

சர்க்கஸில் கோமாளியாக இருக்கும் ஒருவன் ஒரு காட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தான்.

கோமாளி வேடம் போடுவதுடன் சில வேடிக்கையான வித்தைகளும் செய்து கொண்டிருந்தான்.

அவன் வேலை செய்த சர்க்கஸ் கம்பெனியில் கொஞ்சம் சம்பளம் கூடுதலாகக் கேட்டு முதலாளி மறுத்துவிட்டதினால் வேறு வேலை கிடைக்கும்வரை தனது கிராமத்துக்குப் போய்வரலாம் என்று இப்போது போய்க்கொண்டுள்ளான்.

வழியில் ஒரு கயிற்றுப்பாலம் குறுக்கிட்டது.மிகச் சிறிய குறுகிய பழைய பாலம்.

அந்தப் பாலத்தின் முகப்பில் ஒரு அறிவிப்புப் பலகைக் கண்டான்.

அதில் “ இந்தப் பாலம் மிகவும் ஆபத்தானது. மிகவும் பழையது. இதைக் கடந்து செல்பவர்களின் மொத்த எடை 90 கிலோவுக்கும் அதிகமாக இருக்கக்கூடாது.

{அதாவது உடலின் எடையும் செருப்பு மற்றும் உடைகள் மற்றும் உடன் எடுத்துச் செல்லும் பொருள்களின் எடையும் சேர்த்து மொத்தமாக 90 கிலோதான் இருக்கவேண்டும். இதற்கு அதிகமாக கொஞ்சம் கூடினாலும் பாலம் அறுந்துவிடும்.கீழே அதல பாதாளம்தான்—எச்சரிக்கை}

பக்கத்திலேயே ஒரு எடை பார்க்கும் கருவியும் இருந்தது.

அதைப் படித்த அவன் கொஞ்சம் சிந்தனை செய்தான்.

கையில் கொண்டு வந்த பொருட்களை கீழே வைத்துவிட்டு எடைபார்க்கும் கருவியில் ஏறி எடைபார்த்தான்.
89 கிலோ எடை காட்டியது.

பிறகு கையில் கொண்டுவந்திருந்த கிருணிப்பழங்கள் இரண்டையும் தனித்தனியாக எடை பார்த்தான்.
ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை இருந்தது.

அதனால் ஒரு கிருணிப்பழத்தை அங்கேயே விட்டுவிட்டுப் போகலாம் என்று நினைத்தான்.

ஆனால் அவனது மனைவிக்கு கிருணிப்பழம் என்றால் கொள்ளை ஆசை.அதனால் தூக்கிப்போட மனம் வரவில்லை.

அதை மட்டுமல்ல வேறு எதையுமே அவன் விட்டுவிட்டுப் போக விரும்பவில்லை.

என்ன செய்வது கொஞ்ச நேரம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

அதன்படி செயல்பட்டு பாதுகாப்பாக பாலத்தைக் கடந்து தனது கிராமத்தை அடைந்தான்.

நண்பர்களே அவன் எப்படி பாலத்தைக் கடந்தான்?????????????

vijima
12-12-2008, 08:47 AM
புதிர் எண்-313

ஒரு கிர்ணி பழத்தை பாலத்துக்கு அந்த பக்கம் வைத்து விட்டு மீண்டும் ஒரு முறை பாலத்தை கடந்து இந்த பக்கம் வந்து அடுத்த கிர்ணி பழத்தை எடுத்து போய்விடுவான்.

அக்னி
12-12-2008, 12:01 PM
பழங்களை மாறி மாறி மேல்நோக்கி எறிந்து பிடித்தபடி போய் இருப்பான்.
இதனால், அவனது கரத்தில் ஒரு பழம் இருக்கையில், அடுத்த பழம் அந்தரத்தில் இருக்கும்.
எடை 90kg ஆகவே இருந்திருக்கும்.
பிரச்சினையில்லாமற் கடந்திருப்பான்.

lenram80
12-12-2008, 03:14 PM
1.பழத்தை உடைத்து உள்ளிருக்கும் தேவையில்லதா விதை மற்றும் வெளியில் இருக்கும் தோல்களை எடுத்திருப்பான். (கிருணி பழத்தை எப்படி இருக்கும் என்றே தெரியாது எனக்கு. இருந்தாலும் ஒரு ஊகத்தில் சொல்கிறேன். )

2.தன் சொந்தக் கழிவுகளை (1 மற்றும் 2 பாத்ரூம்) வெளியேற்றிருப்பான். :)

pgk53
19-12-2008, 05:05 AM

மெய் சிலிர்க்க வைத்துவிட்டதய்யா????????//உங்கள் பதில்.
தவறு நண்பரே.

pgk53
19-12-2008, 05:07 AM
பழங்களை மாறி மாறி மேல்நோக்கி எறிந்து பிடித்தபடி போய் இருப்பான்.
இதனால், அவனது கரத்தில் ஒரு பழம் இருக்கையில், அடுத்த பழம் அந்தரத்தில் இருக்கும்.
எடை 90kg ஆகவே இருந்திருக்கும்.
பிரச்சினையில்லாமற் கடந்திருப்பான்.

மன்றத்தின் சுடரே..........அக்னி அவர்களே.....சபாஷ் சரியான பதில்.
வாழ்க....வளமுடன்.

pgk53
10-01-2009, 02:36 PM
அன்பார்ந்த மன்ற நண்பர்களே,

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் தொடங்குகின்றேன்.
இன்றுதான் விடுப்பு முடிந்து பணியிடம் திரும்பினேன்.

நாளை புதிய ஒரு புதிருடன் வருகின்றேன்.
அனைவருக்கும் வணக்கங்கள் பல.

அக்னி
10-01-2009, 07:19 PM
இனிய வாழ்த்திலும், மீள் வரவிலும் மிகவும் மகிழ்வடைகின்றேன்.
நன்றிகளுடன் வரவேற்கின்றேன்...

pgk53
11-01-2009, 01:17 PM
புதிர் எண்-314

ராகவன் 3 தினங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர் கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
அதனால் வேறு வழியின்றி ராகவன் மருத்துவமனையில் இருக்கவேண்டியதாயிற்று.

மூன்று நாட்கள் கழிந்தது.
மருத்துவர் ராகவனை செக்கப் செய்தார்.
பிறகு புண்முருவலுடன் அவனைப் பார்த்து அவன் பூரண நலத்துடன் இருப்பதாகக் கூறினார்.

இருந்தாலும் ராகவனை வீட்டுக்குத் தூக்கித்தான் சென்றார்கள்.
ஏன் என்று நண்பர்களே….நீங்கள் கூறுங்கள்.

கண்மணி
11-01-2009, 04:33 PM
ஹி ஹி

குழந்தைத்தனமான புதிர்.

ஹி ஹி

Mathu
11-01-2009, 05:07 PM
ஹி ஹி

குழந்தைத்தனமான புதிர்.

ஹி ஹி

அப்படி இல்ல கண்மணி, விடுமுறைக்கு பிறகும் எல்லோரும் நல்ல
ஃபோமில் தான் இருக்கீங்களா என்று pgk டெஸ்ட் பண்றார்
:icon_rollout: :icon_rollout:

நிரன்
11-01-2009, 08:01 PM
என்னங்கையா இது நம்ம மதுவும் கண்மணியும்
கழுவுற மீன்ல நளுவிறது போல ஓடிட்டாங்க:)
சரி சரி நாமெல்லாம் இதுக்குப் புதுசுங்க ஒரு முயற்ச்சி செய்து செய்யிறன்..

ஆகா அவங்க ஓடல்லையா விடையைத்தான் சொல்லி இருக்காங்க
ஆமால்ல ராகவன்:icon_rollout:ல்ல

ராகவன் குழந்தைன்னா துாக்கிக் கொண்டுதானை போகனும்:icon_rollout:

(ஒரே விடைதான் கண்மணி.... மது)

அக்னி
11-01-2009, 08:28 PM
ராகவன் குழந்தைன்னா துாக்கிக் கொண்டுதானை போகனும்:icon_rollout:)
பார்ரா...
கண்மணி கோடு போட்டா, இவரு ரோட்டப் போட்டுப் பேரத் தட்டப் பார்க்கறாரே...

pgk53
12-01-2009, 02:07 PM
அப்படி இல்ல கண்மணி, விடுமுறைக்கு பிறகும் எல்லோரும் நல்ல
ஃபோமில் தான் இருக்கீங்களா என்று pgk டெஸ்ட் பண்றார்
:icon_rollout: :icon_rollout:

ஹி ஹி

குழந்தைத்தனமான புதிர்.

ஹி ஹி

அருமை அருமை....
{சாலமன் மன்னிக்கவும்}
கண்மணி மூடு மந்திரமாக பதிலைப் போட்டு நாங்கள் குழந்தை இல்லை இல்லை என்று புரிய வைத்துவிட்டார்.

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
12-01-2009, 02:09 PM
புதிர் எண்-315

திருமதி அபிதகுஜாம்பாள் ஒரு பெரும் கோடீஸ்வரி.
அவள் ஒரு வைர நகைகள் விற்பனை செய்யும் கடை ஒன்று நடத்திவந்தாள்.

அவளிடம் விலை மதிப்பிடர்கரிய ஒரு வைரமாலை இருந்தது.
அந்த மாலை அந்த வட்டாரத்திலே யே மிக்க புகழ் கொண்டதாகும்.
அதனால் அந்த வைர மாலையைக் கவர்ந்துசெல்ல பலபேர் முயற்சி செய்வார்கள் என்று திருமதி அபிதகுஜாம்பாள் அறிவாள்.

அதனால் ஒரு பாதுகாப்புக்கருதி, உண்மையான வைரமாலையைப் போன்றே தோன்றும் ஒரு கண்ணாடி மாலையைச் செய்து வைத்திருந்தாள்.
திருமதி அபிதகுஜாம்பாளின் வைரக்கடைக்கு வந்து வைரமாலையைப் பார்க்க விரும்பும் ஆட்களுக்கு முதலில் கண்ணாடிப் பெட்டிக்குள் கவனமாக வைக்கப்பட்டிருந்த கண்ணாடி நகல் மாலையைத்தான் அபிதகுஜாம்பாள் காட்டுவாள். உண்மையான மாலை பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டப்பட்டிருக்கும்.
நகல் மாலையைப் பார்த்தே வியந்து செல்வோரும் ஏராளம்.

சில சமயம் அபித குஜாம்பாள் அசலை வெளியே கண்ணாடிப் பெட்டியிலும், நகல் மாலையை பாதுகாப்புப் பெட்டகத்திலும் வைத்திருப்பாள்.

எது அசல் எது நகல் என்பதை அவள் மிக மிக ரகசியமாகவே வைத்திருந்தாள்.

ஒருநாள் நன்கு திட்டமிட்டு வந்திருந்த இரு கொள்ளையர்கள், காவலரை ஏமாற்றி வெளியே கண்ணாடிப் பெட்டியில் இருந்த மாலையையும், உள்ளே பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த மாலையையும் கவர்ந்துகொண்டு தப்பிச் செல்ல முயற்சித்தார்கள்.

ஆனால் காவலர்கள் எச்சரிக்கை அபாய மணியை அடித்துவைக்க அதுவும் அலறத்தொடங்கியது.
அடுத்திருந்த காவல்துறையையினரும் கொள்ளையர்களைப் பிடிக்க பாய்ந்து வந்தார்கள்.

திருமதி அபிதகுஜாம்பாளும் பக்கத்தில் இருந்த தனது வீட்டில் இருந்து விரைந்து வந்தாள்.

அப்போது கொள்ளையர்கள் ஒருகையில் இருந்த வைரமாலைகள் இரண்டையும் உடம்போடு ஒட்டியிருந்த ஒரு பைக்குள் போட முயற்சித்தபடி ,அடுத்த கையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியபடி ஓடிக்கொண்டிருந்தார்கள்.

பையில் போடப்பட்ட மாலைகளில் ஒன்றைச் சரியாகப் போடாததினால், பையில் இருந்து நழுவி கடையின் முற்றத்தில் போடப்பட்டிருந்த பளிங்குத் தரையில் விழுந்தது.

அதைக் கண்ட திருமதி அபிதகுஜாம்பாள், காவலர்களுக்குச் சைகை செய்து கொள்ளையர்களைப் பின் தொடரவேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

காவல்துறைத் தலைவர் அபித குஜாம்பாளிடம் வந்து, அம்மணி……இரு மாலைகளில் எது நகல் எது போலி என்று தெரியாது.
அப்படியிருக்க அவர்கள் கையில் இருந்து ஒரு மாலை நழுவி விழுந்ததுமே…..தாங்கள் அவர்களைப் பின்தொடர வேண்டாம் என்று ஏன் கூறினீர்கள்” என்று கேட்டார்.

அபித குழாம்பாள் குனிந்து கீழே கிடந்த மாலையை எடுத்தபடி இதுதான் அசல்மாலை என்றார்.

திருமதி அபிதகுஜாம்பாள் மாலையைக் கையில் எடுத்து பரிசோதனை செய்யாமலேயே, நழுவி விழுந்த மாலைதான் அசல் மாலையென்று எப்படிக் கூறினார்??????????????????????????

Mathu
12-01-2009, 02:55 PM
புதிர் எண்-315

திருமதி அபிதகுஜாம்பாள் ஒரு பெரும் கோடீஸ்வரி.
அவள் ஒரு வைர நகைகள் விற்பனை செய்யும் கடை ஒன்று நடத்திவந்தாள்.

அவளிடம் விலை மதிப்பிடர்கரிய ஒரு வைரமாலை இருந்தது.
அந்த மாலை அந்த வட்டாரத்திலே யே மிக்க புகழ் கொண்டதாகும்.
அதனால் அந்த வைர மாலையைக் கவர்ந்துசெல்ல பலபேர் முயற்சி செய்வார்கள் என்று திருமதி அபிதகுஜாம்பாள் அறிவாள்.

அதனால் ஒரு பாதுகாப்புக்கருதி, உண்மையான வைரமாலையைப் போன்றே தோன்றும் ஒரு கண்ணாடி மாலையைச் செய்து வைத்திருந்தாள்.

நகல் மாலையைப் பார்த்தே வியந்து செல்வோரும் ஏராளம்.

அபித குழாம்பாள் குனிந்து கீழே கிடந்த மாலையை எடுத்தபடி இதுதான் அசல்மாலை என்றார்.

திருமதி அபிதகுஜாம்பாள் மாலையைக் கையில் எடுத்து பரிசோதனை செய்யாமலேயே, நழுவி விழுந்த மாலைதான் அசல் மாலையென்று எப்படிக் கூறினார்??????????????????????????

நகல் மாலை கண்ணாடியால் செய்தது, அது கீழே விளுந்திருந்தால்
உடைந்திருக்கும்.
இங்கே விளுந்த மாலை உடையாமல் இருந்திருக்கும். அதனால் தான்
உடனே கண்டு பிடித்துவிட்டார்
:D :D

நிரன்
12-01-2009, 03:04 PM
பார்ரா...
கண்மணி கோடு போட்டா, இவரு ரோட்டப் போட்டுப் பேரத் தட்டப் பார்க்கறாரே...

சீ சீ அக்னி கண்மன் கோடு போட்டாங்க மது றோடு நான் வெறும் பெயின்டிங்:D

pgk53
16-01-2009, 02:03 AM
நகல் மாலை கண்ணாடியால் செய்தது, அது கீழே விழுந்திருந்தால்
உடைந்திருக்கும்.
இங்கே விழுந்த மாலை உடையாமல் இருந்திருக்கும். அதனால் தான்
உடனே கண்டு பிடித்துவிட்டார்
:D :D

நண்பரே...........வாழ்த்துக்கள்.
மிகவும் கூர்மையாகச் சிந்தித்து சரியான விடையைக் கூறியுள்ளீர்கள்.

அடுத்த புதிர் விரைவில்.

pgk53
17-01-2009, 11:52 AM
புதிர் எண்-316

ஒரு தேசிய நெடுஞ்சாலை அது.

பெரிய வாகன விபத்து நடந்துள்ளதாக தகவல் வரவே, காவல் துறையும், ஆம்புலன்ஸும் விரைந்து அங்கே போனார்கள்.

அங்கே இரண்டு லாரிகளும், ஆறு கார்களும் விபத்தில் சிக்கிக் கிடந்தது.

காவலர்கள் இரண்டு லாரிகளை ஓட்டிய டிரைவர்களை மட்டுமே அங்கே கண்டார்கள்.

அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதைக்கண்டு, உடனே அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

விபத்தில் சிக்கி கிடந்த ஆறு கார்களின் ஓட்டுனர்கள் ஏன் அங்கே இல்லை.
அவர்களுக்கு என்ன ஆனது??????????????/

அக்னி
17-01-2009, 12:14 PM
ஏன்னா...
அந்த லாரிகள்தானே, அந்தக் கார்களை ஏற்றிச் சென்றன...
:auto003::auto003::auto003::auto003::auto003::auto003:

aren
19-01-2009, 12:58 AM
அக்னி அவர்கள் சொல்வது சரியென்றே எனக்கும் படுகிறது.

pgk53
20-01-2009, 01:18 PM
ஏன்னா...
அந்த லாரிகள்தானே, அந்தக் கார்களை ஏற்றிச் சென்றன...
:auto003::auto003::auto003::auto003::auto003::auto003:

நன்று...நன்று....அக்னி அவர்களே....மிக மிக நன்று.
வாழ்த்துக்கள்.

நாளை அடுத்த புதிர்.

pgk53
21-01-2009, 10:42 AM
புதிர் எண்-317

ராமுவிடம் ஒரு லாரி இருந்தது.

அதில் கட்டிட வேலைக்குத் தேவையான மணல் ஏற்றிச் சென்று சப்ளை செய்வதுதான் அவனது தொழில்.

மறுநாள் காலை ஒரு லோடு மணல் சப்ளை செய்வதாக ராமு ஒப்புக்கொண்டிருந்தான்.

அன்று மாலை முதலே மேகம் கறுத்து, எந்த நேரமும் மழை வரலாம் என்பதுபோல் இருந்தது.

அதனால் ராமு மறுநாள் காலையில் சென்று லாரியில் மணல் நிரப்புவதற்குப் பதிலாக மாலையிலேயே சென்று மணல் ஏற்றிக்கொண்டான்.

தொலைதூரம் போகவேண்டியதினால் லாரியின் டீசல் டாங்கை நிறப்பிக்கொண்டான்.

பிறகு நேராக ஒரு எடைபார்க்கும் மேடை சென்று எடையைச் சோதித்தான்…
4 டன் எடை இருந்தது…

4 டன் எடைதான் அவனது லாரிக்கு அனுமதிக்கப்பட்ட அதிக பட்ச எடை. அதனால் ராமு திருப்தியுடன் லாரியை தனது வீட்டுக் காம்பவுண்டில் நிறுத்தி வைத்தான்.
உறங்கப்போகும் முன்பாக காம்பவுண்ட் கேட்டை ஞாபகமாகப் பூட்டி வைத்தான்.
இல்லையென்றால் யாராவது வந்து டீசலை திருடிவிடலாம் அல்லவா?

மறுநாள் காலை எழுந்தான்.
லாரியை கிளப்பிக்கொண்டு புறப்பட்டான்.
பிரதான சாலைக்கு வந்தடைந்தான்.
அங்கே ஒரு டிராபிக் போலீஸ் ராமுவின் லாரியை மடக்கினார்.
பக்கத்தில் இருந்த எடைபார்க்கும் மேடையில் எடை போடச் சொன்னார்.

ராமு எந்தக் கவலையும் இல்லாமல் எடை போடும் இடத்தில் நிறுத்தினான். ஆனால் எடையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

ஏனென்றால் எடை 4 டன்னைவிட அதிகமாகக் காட்டியது.
அதனால் போலீஸ் அவனுக்கு அபராதம் விதித்தார்.

நண்பர்களே ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை.

தான் முதல் நாள் சரியான எடை போட்டு நிறுத்திய லாரியில் மறுநாள் காலை எப்படி எடை அதிகம் ஆனது என்று இன்னுமும் குழம்பியபடி இருக்கின்றான்.

நீங்கள்தான் அவனுடைய குழப்பத்தைத் தீர்க்கவேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!

aren
21-01-2009, 12:05 PM
அன்று இரவு மழை பெய்ததால் மணல் மழையில் நனைந்தது. அதனால் மணலின் எடை கூடியது. அதை அறியாமல் 4 டன் என்ற நம்பிக்கையில் ராமு லாரியை ஓட்டிச் சென்றான்.

அக்னி
21-01-2009, 12:11 PM
முதலில் ராமுவே எடையைப் பரிசீலித்தமையால், லாரியில் ராமு இருந்திருக்கமாட்டான். அதனால் அவனது எடை சேர்க்கப்பட்டிருக்காது.
அடுத்தநாள் எடை மேடையில் லாரியுடன் ராமுவும் இருந்தமையினால், அவனது எடையும் சேர்ந்து அதிகரித்துக் காணப்பட்டிருக்கும்.

நிரன்
21-01-2009, 12:44 PM
ராமு எடை நிறுத்து விட்டு தொலை துாரம் செல்ல வேண்டுமென்பதால்
டீசலை நிரப்பினார்.... பின்பு பொலீசார் மடக்கிய ராமுவின் லாறியில்
டீசல் எடையையும் காட்டியதால் எடை அதிகமாக இருந்திருக்கும்

அக்னி
21-01-2009, 01:06 PM
ராமு எடை நிறுத்து விட்டு தொலை துாரம் செல்ல வேண்டுமென்பதால்
டீசலை நிரப்பினார்.... பின்பு பொலீசார் மடக்கிய ராமுவின் லாறியில்
டீசல் எடையையும் காட்டியதால் எடை அதிகமாக இருந்திருக்கும்

தொலைதூரம் போகவேண்டியதினால் லாரியின் டீசல் டாங்கை நிறப்பிக்கொண்டான்.

பிறகு நேராக ஒரு எடைபார்க்கும் மேடை சென்று எடையைச் சோதித்தான்…
4 டன் எடை இருந்தது…
என்னங்க நிரன்...
நிரலை மாத்துறீங்க...
:icon_ush:

நிரன்
21-01-2009, 02:40 PM
என்னங்க நிரன்...
நிரலை மாத்துறீங்க...
:icon_ush:

ஆமால்ல அக்கு:rolleyes::rolleyes: பிறகுதான்லலல:D
சரி சரி நாம :icon_p:
:D:D

அடுத்த முறை முந்தீடுவன் நீங்கெல்லாம் விடை குடுக்க முதல்ல:D
விடையெல்லாம் குடுத்திட்டா நாங்க என்னத்தக் கொடுப்பது:traurig001:
கொடுத்தாலும் கொப்பி என்டுறாங்கையா!!!:traurig001:

Mathu
21-01-2009, 03:03 PM
அன்று இரவு மழை பெய்ததால் மணல் மழையில் நனைந்தது. அதனால் மணலின் எடை கூடியது. அதை அறியாமல் 4 டன் என்ற நம்பிக்கையில் ராமு லாரியை ஓட்டிச் சென்றான்.

இம்முறை அரேன் எல்லோரையும் முந்தி விட்டார்.

pgk53
24-01-2009, 01:02 PM
இம்முறை அரேன் எல்லோரையும் முந்தி விட்டார்.

அன்று இரவு மழை பெய்ததால் மணல் மழையில் நனைந்தது. அதனால் மணலின் எடை கூடியது. அதை அறியாமல் 4 டன் என்ற நம்பிக்கையில் ராமு லாரியை ஓட்டிச் சென்றான்.

சபாஷ் ஆரென்.....அருமையான பதிலைக் கூறி அனைவரையும் முந்திவிட்டது வாஸ்தவம்தான்.வாழ்த்துக்கள்.

அடுத்த புதிர் விரைவில்.

pgk53
25-01-2009, 02:10 PM
புதிர் எண்-318

ராமு அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.
அன்று ஒரு கனவு கண்டான்.
கனவில் ராமு கடற்கரை மணலில் நடந்து செல்கிறான்.
ஒரு ஜோடி கால் சுவடு அவனைத் தொடர்ந்து மணலில் அவனது கால்சுவடுகளுக்குப் பக்கத்திலேயே பதிந்துகொண்டே வருகின்றது.

விழித்துக்கொண்ட ராமு காலடிச் சுவடிகளுக்கு இனையாக வந்த மற்ற சுவடு யாருடையது என்று தெரிந்துகொள்ளவிரும்பினான்.

பழுத்த ஞானி ஒருவரை சந்தித்தான்.
தனது கனவைக் கூறி விளக்கம் கேட்டான்.
அதற்கு அவர் , “ ராமு…..அது இறைவனுடைய காலடிகள்.
இறைவன் யாரையுமே, எப்போதுமே தனியாக விடுவதில்லை.
அவர் எப்போதும் நம்முடனேயே இருக்கின்றார்” என்று விளக்கம் கூறினார்.

ராமு மகிழ்வுடன் வீடு திரும்பினான்.

கொஞ்ச நாட்கள் கழிந்தது.
ராமுவுக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தது.
மிகவும் துயரமான, கடினமான நாட்கள்.
அப்போதும் ராமு ஒரு கனவு கண்டான்.
கனவில் அவன் முன்புபோலவே கடற்கரை மணலைக் கண்டான்.
மணலில் அவனது காலடிச் சுவடுகள் மட்டுமே இருக்கக் கண்டான்.

மறுநாள் அதே ஞானியிடம் ராமு விரைந்து சென்றான்.
“ சுவாமி……தாங்கள் முன்பு என்னிடம் கூறியிருந்தீர்கள்.
இறைவன் எப்போதும் நம்முடன் வருவார் என்று….ஆனால் இப்போது எனக்கு மிகவும் கஷ்டமான நேரம். நிறைய பிரச்சினைகள். நேற்று நான் கண்ட கனவில் ஒரே ஒரு ஜோடி காலடி சுவடுகள் மட்டுமே நான் கண்டேன்.
எனது துன்பமான நேரத்தில் இறைவன் என்னை விட்டு விலகிவிட்டாரா?” என்று கேட்டான்.

அதைக் கேட்ட ஞானி சிரித்தார்.
ராமுவை அன்புடன் தட்டிக்கொடுத்தார்.

பிறகு ஞானி கூறிய விளக்கத்தைக் கேட்டு ராமு மிக்க மன நிறைவுடன் வீடு திரும்பினான்.

நண்பர்களே…….ஞானி ராமுவுக்கு என்ன விளக்கம் கூறியிருப்பார்??????????????

மதி
25-01-2009, 02:15 PM
கனவில் ராமு பார்த்த காலடி சுவடு இறைவனுடையது. துன்பம் வந்த வேளையில் அவர் ராமுவை தாங்கி நடக்கிறார். அதனால் ஒரு ஜோடி காலடி சுவடு மட்டுமே தென்பட்டது

ரங்கராஜன்
25-01-2009, 02:23 PM
கனவில் ராமு பார்த்த காலடி சுவடு இறைவனுடையது. துன்பம் வந்த வேளையில் அவர் ராமுவை தாங்கி நடக்கிறார். அதனால் ஒரு ஜோடி காலடி சுவடு மட்டுமே தென்பட்டது

சூப்பர் மதி, உன்னுடைய பதிலை கண்டு அசந்து விட்டேன்

சிவா.ஜி
25-01-2009, 02:41 PM
உண்மையாகவே சூப்பர் பதில் மதி. அசத்தல்.

அக்னி
25-01-2009, 03:09 PM
கனவில் ராமு பார்த்த காலடி சுவடு இறைவனுடையது. துன்பம் வந்த வேளையில் அவர் ராமுவை தாங்கி நடக்கிறார். அதனால் ஒரு ஜோடி காலடி சுவடு மட்டுமே தென்பட்டது
:icon_b::icon_b::icon_b:

எவ்வளவு அழகான ஒரு தத்துவம்...
பாராட்டுகள் மதி...
இந்த பதிலைத் பெற்றுத்தரக் காரணமான, புதிர்களின் நாயகனுக்கு எனது சிறப்புப் பாராட்டுகள்...

மன்மதன்
25-01-2009, 10:50 PM
கனவில் ராமு பார்த்த காலடி சுவடு இறைவனுடையது. துன்பம் வந்த வேளையில் அவர் ராமுவை தாங்கி நடக்கிறார். அதனால் ஒரு ஜோடி காலடி சுவடு மட்டுமே தென்பட்டது

அழகான கேள்வி..

அருமையான பதில்..

வாழ்த்துகள் மதி,,,:icon_b: