PDA

View Full Version : புதிரோ புதிர் எண்-571-05-06-2015

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17 18 19

pgk53
12-06-2006, 05:53 PM
நண்பர் பெஞ்சமின் அவர்களே-----இது புதிர் பகுதியில் நான் முன்பு கொடுத்ததில்லை..

மன்றம் யுனிகோட் ஆவதற்கு முன்பாக சிரிப்பு பகுதியில் கொடுத்துள்ளேன். அதைப் படித்திருக்கலாம்.

எப்படியோ இருக்கட்டும்------------- இந்தப் புதிருக்கு சரியான விடையைக் கூறிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.
மீண்டும் அடுத்த புதிரில் சந்திப்போம்.

அல்லிராணி
13-06-2006, 05:38 AM

பென்ஸூ என்றும் பழசை மறப்பதில்லை...

:D :D :D

தாமரை
13-06-2006, 05:39 AM
பென்ஸூ என்றும் பழசை மறப்பதில்லை...

:D :D :D
இது கிண்டலா இல்லை பாராட்டா??? :confused: :confused: :confused:
வஞ்சப் புகழ்ச்சியா?:confused: :confused: :confused: :confused:

மதி
13-06-2006, 05:47 AM
அதானே எந்த பழச சொல்றாங்கோ...!

pgk53
15-06-2006, 02:52 PM
புதிர் எண் 222

கேரேஜ் ஆரம்பித்து ஏகப்பட்ட நஷ்டம் ஆகியதால் மனம் உடைந்து போனார்கள் வீர்சிங்கும் அவனது நண்பர்களும்.
கேரேஜில் இருந்த உபகரணங்களையெல்லாம் விற்று கிடைத்த கணிசமான பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு வீர்சிங்கும் அவனது நண்பர்களும் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார்கள்.

இந்தப் பணத்தைப் பிரித்து எடுத்துக்கொண்டு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போவதா? அல்லது வேறு ஏதாவது ஒரு தொழில் தொடங்குவதா என்று சர்ச்சை செய்தார்கள்.

அவர்கள் அனைவருக்குமே கார் ஓட்டத் தெரியும். அதனால் கையில் உள்ள பணத்துக்கு ஒரு பழைய கார் வாங்கி , பூனே நகரில் டாக்ஸியாக ஓட்டுவது என்ற பீர்சிங்கின் யோசனையை அனைவருமே வரவேற்றார்கள்.

அவர்கள் முடிவு செய்ததுபோல் கார் வாங்கினார்கள்.
இந்த முறை முன்புபோல ஏதும் முட்டாள்தனம் செய்துவிடக் கூடாது என்று ஆளாளுக்கு எச்சரிக்கையும் செய்து கொண்டதினால், காரை ஒவ்வொரு பாகமாக ஆராய்ந்து நல்ல நிலையில் இருக்கிறதா? என்று சோதித்து வாங்கி வெற்றிப் புண்ணகை செய்தார்கள்.

மற்றவர்களைப் போல கொஞ்சம் பெட்ரோல் போட்டுக்கொண்டு ஆள் ஏறியதும் பெட்ரோல் பங்கிற்குப் போகும் பழக்கம் கூடாது என்று வீர்சிங் முடிவு செய்ததினால், டாங்க் நிறைத்து பெட்ரோல் போட்டுக்கொண்டார்கள்.

ஒரு நல்ல நேரம் பார்த்து காரை அவர்களது வாடகைக் கார் பூனே நகர தெருக்களில் வலம் வரத்தொடங்கியது.
காலை முதல் மாலை வரை வண்டு அங்கும் இங்கும் ஓடியும் யாருமே அவர்கள் காருக்கு கைகாண்பிக்கவில்லை.
ஆனால் அவர்களுக்குப் பின்னால் வந்த கார்களையெல்லாம் நிறுத்தி ஏறிப் போனார்கள்.
ஆனால் வீர்சிங்கின் காரில் யாருமே ஏறவில்லை.
அன்றுமட்டுமல்ல---- தொடர்ந்து ஒருவாரம் கார் ஓடியும் ஒரு ஆள்கூட ஏறவில்லை.

நண்பர்களே ஏன் யாருமே அந்தக் காரில் ஏறவில்லை என்று கூறுங்கள்!!!!!

தாமரை
15-06-2006, 03:12 PM

காரில் டிரைவர் மட்டும் இருந்தால் டாக்ஸி காலியாக இருக்கிரது என்று பயணிகள் வருவார்கள்... காரில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்ததினால் பயணிகள் ஏற்கனவே உள்ளனர் என்று யாரும் வரவில்லை.

ஆமாம் அவ்வளவு சமத்தாக புத்திசாலியாக இருந்த வீர்சிங் ஏன் இப்படி முட்டாளாகிப் போனார்????

எல்லாம் சேர்க்கை. சேர்க்கை சரியில்லா விட்டால் இப்படித்தான்.. இல்லையா??? சகவாசம் சரியில்லை.

றெனிநிமல்
15-06-2006, 05:03 PM
நானும் stselvan கூறியதை ஆமோதிக்கின்றேன்.

ஓவியா
15-06-2006, 05:21 PM
காரில் டிரைவர் மட்டும் இருந்தால் டாக்ஸி காலியாக இருக்கிரது என்று பயணிகள் வருவார்கள்... காரில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்ததினால் பயணிகள் ஏற்கனவே உள்ளனர் என்று யாரும் வரவில்லை.

ஆமாம் சாமி...நீங்க சொன்னா ரைட்தான் சாமி....

செல்வன் சாரின் விடையை ஆமாம் சாமியாக ஆமோதிக்கின்றேன்

மதி
16-06-2006, 03:10 AM
ச்சே...ஏதோ நமக்கும் விடை தெரியுதேன்னு பாத்தா..இந்த செல்வன்...
செல்வரே.........(நற..நற..நற..)

pgk53
19-06-2006, 03:30 PM
அன்பு நண்பர்களே----வேலை அதிகமாக இருந்ததினால் புதிர் பகுதிக்கு வர இயலாமல் போனது.

நண்பர் செல்வன் அவர்கள் சரியான பதிலைக் கூறி புதிரை விடுவித்துவிட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்

இதோ வீர்சிங்கின் புதிர்களில் இப்போதைக்கு கடைசிப் பதிர்

pgk53
19-06-2006, 03:40 PM
புதிர் எண் - 223

தாங்கள் நால்வருமே காரில் அமர்ந்துகொண்டு டாக்ஸி செலுத்திய முட்டாள்தனத்தை உணர்ந்த வீர்சிங் குழுவினர் வெட்கத்தால் குறுகிப் போனார்கள்.

இனி எந்த தொழிலையுமே செய்யவேண்டாம் என்று தீர்மானித்தவர்கள், அந்த காரை விற்றால் காசு கிடைக்கும், பிறகு அந்தக் காசு அவர்களை சும்மா இருக்க விடாது என்று நினைத்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அதாவது காரை பூனேயின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு பெரும் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு, திரும்பிப்பார்க்காமல் வந்துவிடுவது என்று அனைவரும் ஏகமனதாகத் தீர்மானித்தார்கள்.

காரை எடுத்துக்கொண்டு மலையில் பள்ளத்தாக்கு இருக்கும் இடத்துக்குச் சென்றார்கள்.எந்தக் காரியத்தைச் செய்ததலும் நால்வருமே சமபங்கு எடுப்பது என்ற கொள்கையின்படி நால்வரும் சேர்ந்தே காரைச் சாலையில் இருந்து தள்ளினனர்கள்...ஆனால் கார் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை.

நால்வரும் தங்கள் முழு சக்தியையும் பிரயோகித்து தள்ளினார்கள். ஆனால் எந்தப் பயனும் இல்லை. கார் நகரமாட்டேன் என்று அடம் பிடித்தது.

மன்ற நண்பர்களே ---அவர்கள் இன்னும் தள்ளிக்கொண்டேதான் இருக்கிறார்கள். நீங்களாவது சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்களேன்.

பென்ஸ்
19-06-2006, 04:28 PM
காருக்குள்ள இருந்து தள்ளி இருப்பாங்க....

இப்படிதான் நண்பன் ஒருவன் தண்ணியை போட்டுகிட்டு அவன் வீட்டை லேடிஸ் காலேஜ் பக்கமா
கொண்டு போகிறதுக்கு கட்டி இழுத்து கொண்டிருந்தான்.... எவ்வளவு சொல்லியும் கேக்கலை...

கடைசியில், "டேய் எதுக்குடா நம்ம வீட்டை அங்க கொண்டு போனும்,
காலேஜை இங்க இழுத்துகிட்டு வரலாம்" என்றதும் விட்டான்....

தீபன்
19-06-2006, 05:40 PM
இல்லாவிட்டால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் திசைகளில் நின்றுகொண்டு தள்ளியிருப்பார்கள்....

சுபன்
20-06-2006, 03:15 AM
தீபன் சொன்னதுதான் என்னுடைய ஊகமும்

pradeepkt
20-06-2006, 06:36 AM
காருக்குள்ள இருந்து தள்ளி இருப்பாங்க....

இப்படிதான் நண்பன் ஒருவன் தண்ணியை போட்டுகிட்டு அவன் வீட்டை லேடிஸ் காலேஜ் பக்கமா
கொண்டு போகிறதுக்கு கட்டி இழுத்து கொண்டிருந்தான்.... எவ்வளவு சொல்லியும் கேக்கலை...

கடைசியில், "டேய் எதுக்குடா நம்ம வீட்டை அங்க கொண்டு போனும்,
காலேஜை இங்க இழுத்துகிட்டு வரலாம்" என்றதும் விட்டான்....
அந்த நண்பனுக்குப் பேரு பென்ஸூதானே

aren
20-06-2006, 03:26 PM
காரின் ஹாண்ட் பிரேக்கைப் போட்டிருக்கலாம். அல்லது அந்த கார் ஆட்டோமேடிக் காராக இருக்கலாம்.

pgk53
23-06-2006, 02:01 AM
நண்பர்களே-----என்ன ஆயிற்று?
புதிர்பக்கம் அதிகமாக யாரும் வருவதே இல்லையே.

ஒருவருக்கொருவர் எதிரெதிர் திசைகளில் நின்றுகொண்டு தள்ளியிருப்பார்கள் ---என்று தீபன் அவர்கள் சரியான விடையைக் கூறிவிட்டார்.

அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
விரைவில் அடுத்த புதிர்.

தாமரை
23-06-2006, 05:02 AM
ஒருவருக்கொருவர் எதிரெதிர் திசைகளில் நின்றுகொண்டு தள்ளியிருப்பார்கள் ---என்று தீபன் அவர்கள் சரியான விடையைக் கூறிவிட்டார்.

.
அதனால்தான் வரவில்லை.:D :D :D :D :D

pgk53
25-06-2006, 01:48 PM
புதிர் எண்-224

பாஸ்கரன் ஒரு கம்பெனியில் தலைமை காரியதரிசியாகப் பணி புரிந்து கொண்டிருந்தான்.

மிகவும் ஒல்லியான உடல் வாகு கொண்டவன்,ஆனாலும் பார்ப்பதற்கு அழகாகவே இருப்பான்.

ஒருநாள் பம்பாயில் ஒரு வேலை நிமித்தம் அவனது முதலாளி செல்லவேண்டியிருந்தது. பாஸ்கரனும் உடன் வந்தால் உதவியாக இருக்கும் என்று நினைத்து அவனையும் பம்பாய்க்கு வரச்சொன்னார்.

சென்னையில் இருந்து பம்பாய் செல்ல விமானத்தில் இடம் பிடித்தார்கள். பகல் பத்து மணிக்கு புறப்படும் விமானத்தில் இடம் கிடைத்து விமானம் ஏறினார்கள்.

சென்னையில் இருந்து பம்மாய்க்கு 1 மணி நேரப் பயணம்.
சுமார் ஒரு மணி நேரம் விமானம் பறந்திருக்கும். பாஸ்கரனுக்கு இதுதான் முதல் விமானப் பயணம். எல்லாவற்றையும் ஆச்சர்யமாகப் பார்த்தான்.

ஆனாலும் விமானப் பயணத்தைப் பற்றியும் விமானங்களைப் பற்றியும் நிறைய விஷயங்களைக் கேள்விப்பட்டும் படித்தும் இருக்கிறான். அதனால் சமாளித்துக்கொண்டான்.

சுவாரஸ்யமாக வெளியே பஞ்சுப் பொதிகளளக மிதக்கும் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டே வந்தவன் கொஞ்ச தூரத்தில் பறவைக் கூட்டம் பறப்பதைப் பார்த்தான்.

சிறிது நேரத்தில் பாஸ்கரன் இறந்துவிட்டான்????!!!!!

பாஸ்கரன் ஏன் இறந்தான்? காரணம் என்ன என்று மன்ற நண்பர்களே நீங்கள் கூறுங்களேன்.

{ குறிப்பு}----------பாஸ்கரனுக்கு இருத நோயோ அல்லது வேறு எந்த உயிர் கொல்லும் நோயோ கிடையாது. ஆரோக்கியமான உடல் கொண்டவன்.

பென்ஸ்
25-06-2006, 02:42 PM
ஒருவேளை விமானத்தின் இஞ்ஜினில் பறவை மோதி அதனால்
விமானம் விபத்துகுள்ளாகி... பாஸ்கரன் இறந்து போனானோ????

pgk53
25-06-2006, 03:08 PM
எதையும் சந்தேகமாகக் கூறுபவர்களின் விடை சரியானது என்று ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது பெஞ்சமின் அவர்களே...

அதே போல் இது அல்லது இதுவாக இருக்கும் என்று அனுமானமாகக் கூறினாலும் சரியான விடையாகக் கொள்ளப்படமாட்டாது.
மன்னிக்க வேண்டுகிறேன்.
எதைக் கூறினாலும் அழுத்தம் திருத்தமாகக் கூறவும்.
நன்றி

பென்ஸ்
25-06-2006, 04:04 PM
சரி...:mad:
PGK விடமாட்டிங்களே... :p :D :D
அப்போ என்னுடைய பதில் சரி என்பதை போல் தெரியுது....:rolleyes: :rolleyes: :D :D

என்னுடைய பதில் இதோ:
விமானம் வானில் பறக்கும் போது வேளியே இருந்து காற்றை
உறிந்து , எரி பொருள் எரித்து அதை விசையாக பின் தள்ளி விமான
முன்னே செல்லும்.. (இதை சம்பந்த பட்ட பதிவு இதோ:)
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=138943&postcount=40

இந்த பதிவில் விளக்கமாக கூறிய ஒரு நியாபகம் இருந்தமையால்
விரிவான பதில் தரவில்லை)

இப்போது: பறவை விமானத்தில் இஞ்ஜினில் மோதி உன்டான விபத்தில் பாஸ்கரன் இறந்து போனான்)

மதி
26-06-2006, 04:45 AM
பெஞ்சமினுடைய பதில் சரி தான். இஞ்சின்களின் முன் பொறுத்தப் பட்டிருக்கும் ஃபேன் காற்றை இழுக்கையில் பறவைகள் மாட்டிக்கொள்ளும். இதன் மூலம் இஞ்சின்கள் பழுதடையும். ஆகையால் விமானம் விபத்துக்குள்ளாகியது.

pgk53
28-06-2006, 05:23 PM
சரி...:mad:
PGK விடமாட்டிங்களே... :p :D :D
அப்போ என்னுடைய பதில் சரி என்பதை போல் தெரியுது....:rolleyes: :rolleyes: :D :D

என்னுடைய பதில் இதோ:
விமானம் வானில் பறக்கும் போது வேளியே இருந்து காற்றை
உறிந்து , எரி பொருள் எரித்து அதை விசையாக பின் தள்ளி விமான
முன்னே செல்லும்.. (இதை சம்பந்த பட்ட பதிவு இதோ:)
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=138943&postcount=40

இந்த பதிவில் விளக்கமாக கூறிய ஒரு நியாபகம் இருந்தமையால்
விரிவான பதில் தரவில்லை)

இப்போது: பறவை விமானத்தில் இஞ்ஜினில் மோதி உன்டான விபத்தில் பாஸ்கரன் இறந்து போனான்)

இது---இது---இதைத்தான் நான் பெஞ்சமின் அவர்களிடமிருந்து எதிர்பார்த்தேன்.
சரியான விடையைத் தக்க காரணங்களுடன் கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சியடைக்றேன்.
இனி வரும் புதிர்களுக்கும் இதுபோலவே விடைகள் வரும்.

பெஞ்சமின் வழி காட்டிவிட்டீர்கள்.
வாருங்கள் பெஞ்சமின் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
28-06-2006, 05:24 PM
புதிர் எண்-225

ராமன் விதவிதமாகப் பொழுது போக்குவதில் விருப்பம் உடையவன்.

ஒருநாள் மாலைப் பொழுதில், ஒரு பூங்காவின் வெளிப்புற மதிற்சுவரின் மேல் ஓய்வாக அமர்ந்திருந்தான்.
அப்போது அந்தப் பக்கமாக ஒரு சிவப்பு நிறம் கொண்ட கார் சென்றது.

அதைக்கண்ட ராமன் ஆஹா----எத்தனை அழகான வண்ணம் அமைந்த கார் என்று மகிழ்ந்தான்.

சிறிது நேரத்தில் அடுத்த கார் அந்த வழியாகச் சென்றது.
அந்தக் காரின் வண்ணம் பாண்டா கலரில், அதாவது ஆரஞ்சுக் கலரில் இருந்தது.
அதுவும் ராமனுக்கு மிகவும் அழகாகத் தெரிந்தது.

அதை ரசித்து முடிக்கும் முன்பாகவே அடுத்து ஒரு மஞ்சள் வண்ணக் கார் அவனைக் கடந்து சென்றது.ஆஹா----இன்று எனது கண்களுக்கு சரியான விருந்துதான் என்று உற்சசகமாக எழுந்து , அடுத்து வரவிருக்கும் காரை எதிர்நோக்கியிருந்தான்.

அடுத்த காரும் வந்தது.
அந்தக் கார் எந்த வண்ணத்தில் வரக்கூடும் என்று ராமன் ஒரு விதமாக ஊகித்திருந்தானோ.அந்த வண்ணத்தில் அமைந்த அடுத்த கார் வந்ததைக் கண்டதும், ராமன் உற்சாகத்தின் எல்லைக்கே போய்விட்டான்.

ஆஹா-------- எனது எண்ணம் மிக மிகச் சரியாக அமைந்துவிட்டது வாய்விட்டுக் கூறிக்கொண்டான்.

நண்பர்களே---கடைசியாக ராமன் கண்ட காரின் நிறம் என்ன?????????

கூறுங்கள் பார்க்கலாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

mukilan
28-06-2006, 06:03 PM
பச்சை வண்ணம் தான்.

பென்ஸ்
28-06-2006, 06:50 PM
முகில்...காரனம் சொல்லனும்மில்ல... சும்மா விட மாட்டோம்....

கலர் வீலில் வரும் வரிசையில் பார்க்கும் போது மூகிலன் கூரியது சரியே.... :D :D :D

தாமரை
29-06-2006, 03:59 AM
முகில்...காரனம் சொல்லனும்மில்ல... சும்மா விட மாட்டோம்....

கலர் வீலில் வரும் வரிசையில் பார்க்கும் போது மூகிலன் கூரியது சரியே.... :D :D :D
வானவில் வண்ணம்தான் பி..கே..ஜி எண்ணம்தான்

மதி
29-06-2006, 04:16 AM
வானவில் வண்ணம்தான் பி..கே..ஜி எண்ணம்தான்
கலக்கிட்டீங்க..செல்வன்.. சரியான விளக்கம்..

mukilan
29-06-2006, 04:26 AM
முகில்...காரனம் சொல்லனும்மில்ல... சும்மா விட மாட்டோம்....

கலர் வீலில் வரும் வரிசையில் பார்க்கும் போது மூகிலன் கூரியது சரியே.... :D :D :D
அதே அதே. நான் VIBGYOR திருப்பி போட்டேன்.

மயூ
29-06-2006, 10:04 AM
இந்த பக்கத்தை சென்று பாருங்கள் நீங்கள் நினைக்கும் இலக்கத்தை அவர்களும் சொல்வார்கள்.
http://www.learnenglish.org.uk/games/magic-gopher-central.swf
இது ஒன்றும் மஜிக் இல்லை. முடியுமானால் என்னவென்று கண்டு பிடியுங்கள்.

மதி
29-06-2006, 11:13 AM

அண்ணாத்த,
இது ஒன்னும் பெரிய விஷயமே இல்ல..
நீங்க நினைக்கிற எண்ணோட கூட்டுத்தொகையிலேர்ந்து அந்த எண்ணை கழிச்சா..வரும் எண். ஒன்பதின் பெருக்கங்கள் ஆகும்.

உதா: எண் : 76 , 7 + 6 = 13
76-13 = 63 (ஒன்பதா வகுபடும்)

இப்படி இறுதியாக வரும் எண்களின் கூட்டுத்தொகையும் ஒன்பது தான். இப்போது அந்த குறியீடுகளை பாருங்கள்.
9,18,27,36,45,54,....இப்படி எல்லா எண்களின் அருகிலும் ஒரே குறி தான் இருக்கும். போதுமா இந்த விளக்கம்?

மயூ
29-06-2006, 11:17 AM

ஆம் நீங்கள் கூறியது சரி!
நான் இதப்பார்த்து குளம்பி கடைசியாக ஒரு சிங்களப் பொடியன்தான் சொல்லித்தந்தான்.

தாமரை
29-06-2006, 11:20 AM
ஆம் நீங்கள் கூறியது சரி!
நான் இதப்பார்த்து குளம்பி கடைசியாக ஒரு சிங்களப் பொடியன்தான் சொல்லித்தந்தான்.
நீயே பொடியன்.. உனக்கே பொடியன்னா அது யாரு?

மயூ
29-06-2006, 11:24 AM
நீயே பொடியன்.. உனக்கே பொடியன்னா அது யாரு?
உங்களுக்கு என்ன அவனத் தெரியுமா?:confused:
சரி அண்ணா கேட்டா தம்பி சொல்லோணும் இல்லையா???:D
அவனோட பெயர் மிகிசர

pgk53
30-06-2006, 06:28 PM
அதே அதே. நான் VIBGYOR திருப்பி போட்டேன்.

சரியான விடையைக் கூறிய முகிலன் அவர்களே---வாழ்த்துக்கள்.

விரைவில் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
02-07-2006, 04:45 PM
புதிர் எண்-226

ராமன் ஒரு பெரிய தொழில் அதிபர்
.நிறைய தொழிற்சாலைகளை நடத்தி வருபவர்.
அவர் புதியதாக ஒரு ஹைடிரஜன் வாயு தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவ விரும்பினார்.
அதனால் அதற்குறிய தொழில் நுட்பத்தை அறிந்து, தக்க பொறியாளர்களை வேலைக்கு எடுத்து, ஆலையைக் கட்டினார்.

அவரது ஆலையில் எல்லாமே சிமெண்டும் கற்களும், இரும்பும்தான்.
எந்த வகையிலும் மரம் கொண்டு எதையும் கட்டுமானம் செய்ய அனுமதிக்கவில்லை.
சன்னல்களும் கதவுகளும்கூட இரும்பு கொண்டே அமைத்தார்..
தீ விபத்து ஏற்படாமல் இருப்பதற்காகத்தான் இத்தனை ஏற்பாடுகளும்.
மேலும் கட்டிடத்துக்கு வண்ணம் பூசக்கூட அவர் அனுமதிக்கவில்லை.
வண்ணம் [பெயிண்ட்} தீப்பிடிக்கவல்லது.

இது எல்லாம் போதாதென்று ஆலையைத் தொடங்குமுன்பாக ஒரு திறமை மிக்க, பாதுகாப்பு ஏற்பாடுகளின் தொழில் நுட்பம் கொண்ட கம்பெனி ஒன்றை தனது ஆலையில் தீயனைப்பு தொழில் நுட்பத்தை நிறுவும்படி ஏற்பாடு செய்தார்.

அவர்கள் நூற்றுக்கணக்கான புகை உணரும் கருவிகளை ஆலை முழுவதும் நிறுவினார்கள்.
[smoke detector]எல்லாவற்றையும் சரியாக [ட்யூன்] சோதனை செய்து அவை சரிவர இயங்குகிறதா என்று சரி பார்த்துக்கொண்டார்கள். ஹைடிரஜன் வாயுவில் தீ ஏற்பட்டால் உடனே அக்கருவிகள் புகையை மோப்பம் பிடித்து உடனே தீ ஏற்பட்ட இடத்தில் நீரைப் பொழிந்து தீயை அனைத்துவிடும்.

ராமன் ஒரு திறமைமிக்க பொறியாளர் ஒருவரை ஆலையை சோதனை செய்ய அழைத்துவந்தார். அவர் எல்லாம் சரியாக இருக்கிறது என்று அத்தாட்சி கொடுத்தால்தான் ஹைடிரஜன் உற்பத்தியைத் தொடங்க விரும்பினார் ராமன்.

பொறியாளர் தனது சோதனையைத் தொடங்கினார்.
அந்த ஆலையில் வேறு எந்த பொருளுமே தீப்பிடிக்க வாய்ப்பு இல்லாமல் இருப்பதை அறிந்தார்.
அங்கே பணிபுரியும் ஆட்கள்கூட தீப்பிடிக்காத ஆடைகளை அனிந்திருப்பதைக் கண்டார்.
அந்த ஆலையில் தீ ஏற்பட்டால் ஹைடிரஜனால் மட்டுமே ஏற்படும் என்பதையும் உணர்ந்தார்..

தனது சோதனைகள் முடிந்ததும் ராமனைப் பார்த்து, இந்த ஆலையில் மிகப்பெரிய தவறு ஒன்று இருப்பதினால் ஆலையைத் தொடங்கக் கூடாது என்றார்.

அந்தத் தவறு என்ன என்பதையும் விளக்கினார்.

பொறியாளர்கள் அனைவருமே ஒத்துக்கொண்டார்கள்.
அந்தத் தவறை திருத்துவதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தார்கள்.

மன்ற நண்பர்களே-----நீங்கள் கூறுங்கள் .
அது என்ன தவறு????????????????????????????

தாமரை
03-07-2006, 04:04 AM

ஹைட்ரஜன் எரியும் பொழுது புகை வராது.. புகை என்பது கரிமச் சேர்க்கை. இங்கே தான் கரிமப் பொருட்களே இல்லையே.. எப்படி புகை வரும்? எனவே புகை உணரும் கருவிகளால் பயன் இல்லை. அதனால் வெப்பமுனரும் கருவிகளைக் கொண்டு தீயணைப்பு தொழில் நுட்பத்தை நிறுவ வேண்டும்.

பென்ஸூ இது சரியா என்று சொல்லவும்...:D :D :D

பென்ஸ்
03-07-2006, 11:55 AM
பென்ஸூ இது சரியா என்று சொல்லவும்...:D :D :D

100% :D :D :D

இளசு
03-07-2006, 10:51 PM
அருமையான புதிர் தந்த அன்பு பிஜிகே அவர்களுக்கு நன்றி.

நறுக் விடை தந்த செல்வனுக்கும், வழிமொழிந்த பென்ஸூக்கும் பாராட்டுகள்.

pgk53
04-07-2006, 05:04 PM
சபாஷ் செல்வன் --------------------சரியான விடையை தக்க விளக்கத்துடன் கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சி.

அடுத்த புதிரில் சந்திப்போமா????????

பென்ஸ்
04-07-2006, 05:23 PM
PGK,
இந்த புதிர்கள் அறிவுபூர்வமானவைகளாக இருப்பதோடு மட்டுமல்லாமல்
சிறு சிறு செய்திகளையும் மன்றத்தாருக்கு கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை....

வாழ்த்துக்கள் புதிர் தந்த உங்களுக்கும் ...
பதில் தந்த செல்வனுக்கும்....

தாமரை
05-07-2006, 05:23 AM

சின்ன விஷயம்தான் சன் டிவி கண்டுபிடிப்பாளர்கள் பகுதியில் ஒரு முறை நீரால் எரியும் அடுப்பு கண்டுபிடிப்பு பார்த்தேன்...

ஒரு தகடு.. முதலில் அது சிறிது குரூடாயில் நனைத்த நூல் பந்து அல்லது வறட்டி கொண்டு சூடாக்கப் படுகிறது. அது சூடானவுடன், தண்ணீர் வால்வு மெலிதாக திறக்கப்பட்டு சொட்டு சொட்டாய் தகட்டின் மேல் விழுகிறது...

அதிக சூட்டினால் தண்ணீர் ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் மாற ஹைட்ரஜன் எரியும் பொருளை அணைத்து தான் எரிகிறது... ஆக்ஸிஜன் எரியத் துணைபுரிகிறது..

இதை செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டினார் ஒரு நாட்டுப்புற விஞ்ஞானி.. அவர் காட்டிய அடுப்பு எரிய அதில் தண்ணீர் சுடவைத்து காட்டினார்...

தண்ணீரால் இது நடக்குமென்றால், கடல் நீரைக் கொண்டு அடுப்பெரிக்கும் ஒரு இயந்திரம் கண்டுபிடிக்க முடிந்தால் ஏகப்பட்ட ஏழை வீடுகளில் அடுப்பு எரியலாம்...

gragavan
05-07-2006, 09:22 AM
ஆகா.......புதிர்ல அறிவியல் விஷயங்கள்ளாம் சொல்றாங்க...நல்ல தகவல்கள்தான்.

pgk53
10-07-2006, 03:39 PM
அன்பு நண்பர்களே திடீரென்று ஏற்பட்ட வேலைப்பளு காரணமாக அடுத்த புதிரை விரைவில் தர இயலாமல் போனது.
இதோ புதிருடன் வந்துவிட்டேன்.
விடை கூறுங்கள்

pgk53
10-07-2006, 03:40 PM
புதிர் எண் 227

ஒருநாள் ரமேஷ் நள்ளிரவுக் காட்சி திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தான்.அவனது வீடு அந்த நகரின் புற நகர்ப் பகுதியில் அமைந்திருந்தது. அதனால் இரவு இரண்டு மணி சுமாருக்கு சாலையில் எந்தவித போக்குவரத்தும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது.

தெரு விளக்கும் சரியாக எரியவில்லை. ஆங்காங்கே ஒரு விளக்குக் கம்பம் மட்டுமே உயிருடன் இருந்து சொற்ப வெளிச்சத்தை வீசிக்கொண்டிருந்தது.
இருப்பினும் ரமேஷ் துணிச்சலுடன் வீடு நோக்கி நடைபோட்டுக்கொண்டிருந்தான்.

வழியில் ஒரு கார் சாலையின் ஓரமாக நின்றிருந்தது. இந்த வேளையில் இந்தக் கார் ஏன் இங்கே நிற்கிறது கேள்வி மனதில் எழ, ரமேஷ் காரின் அருகே சென்று காருக்குள் பார்த்தான்.

மெல்லிய உறுமலுடன் காரின் இயந்திரம் இயங்கிக்கொண்டிருந்தது..காருக்குள் முன் இருக்கையில் ஒரு ஆள் இறந்து கிடந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டான். அவரது நெற்றியில் இருந்து இரத்தம் வழிந்து தலை சாய்த்திருந்த ஸ்டீயரிங் வீல் மேல் உறைந்து கிடந்தது.காரின் பின் இருக்கையில் அவரது கைகளுக்கு எட்டாத அளவில் ஒரு கைத் துப்பாக்கி கிடந்தது.

திடீரென்று கண்ட அந்தக் காட்சியினால் மனம் பதறினாலும் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, காரின் கதவைத் திறக்க முயற்சித்தான். கதவு பூட்டப்பட்டிருந்ததினால் அவனால் திறக்க இயலவில்லை.காரின் சன்னல் கண்ணாடிகள் அனைத்தும் மேலே தூக்கிவிடப்பட்டிருந்தன.
அதற்கு மேல் உள்ளே செல்ல பயந்தான். எதற்கும் போலீஸில் புகார் செய்வதுதான் சரியானது என்று தீர்மானித்து, தனது செல்போனை உயிர்ப்பித்து, காவலருக்குத் தகவல் கொடுத்தான்.

காவலர்கள் விரைந்து வந்தார்கள். அங்கே இருந்த சூழ்நிலையை ஆராய்ந்தார்கள்.பிறகு ரமேஷைப் பார்த்து, நீதான் இந்தக் கொலையைச் செய்திருக்கவேண்டும். நீயே தகவல் கொடுத்து எங்களை முட்டாள் ஆக்கப் பார்க்கிறாயா???? என்று கூறியபடி அவனைக் கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

மன்ற நண்பர்களே------ நமக்குத் தெரியும் ரமேஷ் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று..
ஆனால் , காரின் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில்---- கண்ணாடிகளும் மேலே ஏற்றிவிடப்பட்ட நிலையில்-----காரில் எந்தவித சேதமும் இன்றி, காரின் உள்ளே இருந்த ஆளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது எப்படி?????

ஏன் ரமேஷின் மேல் காவலர்கள் சந்தேகப் பட்டார்கள்????????????

aren
11-07-2006, 01:53 AM
சுரேஷ் ரமேஷ் என்று இரண்டு பெயர்களைப் போட்டு குழப்புகிறீர்களே.

தாமரை
11-07-2006, 04:08 AM
புதிர் எண் 227

காருக்குள் முன் இருக்கையில் ஒரு ஆள் இறந்து கிடந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டான். அவரது நெற்றியில் இருந்து இரத்தம் வழிந்து தலை சாய்த்திருந்த ஸ்டீயரிங் வீல் மேல் உறைந்து கிடந்தது.காரின் பின் இருக்கையில் அவரது கைகளுக்கு எட்டாத அளவில் ஒரு கைத் துப்பாக்கி கிடந்தது.

திடீரென்று கண்ட அந்தக் காட்சியினால் மனம் பதறினாலும் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, காரின் கதவைத் திறக்க முயற்சித்தான். கதவு பூட்டப்பட்டிருந்ததினால் அவனால் திறக்க இயலவில்லை.காரின் சன்னல் கண்ணாடிகள் அனைத்தும் மேலே தூக்கிவிடப்பட்டிருந்தன.
அதற்கு மேல் உள்ளே செல்ல பயந்தான். எதற்கும் போலீஸில் புகார் செய்வதுதான் சரியானது என்று தீர்மானித்து, தனது செல்போனை உயிர்ப்பித்து, காவலருக்குத் தகவல் கொடுத்தான்.

காவலர்கள் விரைந்து வந்தார்கள். அங்கே இருந்த சூழ்நிலையை ஆராய்ந்தார்கள்.பிறகு ரமேஷைப் பார்த்து, நீதான் இந்தக் கொலையைச் செய்திருக்கவேண்டும். நீயே தகவல் கொடுத்து எங்களை முட்டாள் ஆக்கப் பார்க்கிறாயா???? என்று கூறியபடி அவனைக் கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

மன்ற நண்பர்களே------ நமக்குத் தெரியும் ரமேஷ் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று..
ஆனால் , காரின் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில்---- கண்ணாடிகளும் மேலே ஏற்றிவிடப்பட்ட நிலையில்-----காரில் எந்தவித சேதமும் இன்றி, காரின் உள்ளே இருந்த ஆளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது எப்படி?????

ஏன் ரமேஷின் மேல் காவலர்கள் சந்தேகப் பட்டார்கள்????????????

காவலர்கள் ரமேஷின் கைரேகைகள் காரின் கதவில் இருந்ததால் சந்தேகப்பட்டனர். சுட்ட பின்பு காரில் பிணத்தை வைத்து, கண்ணாடிகளை ஏற்றி துப்பாக்கியை உள்ளே எறிந்து பின் கதவுகளை பூட்டி, மூடி இருக்கலாம் அல்லவா? ஸ்டியரிங் மேல் சாய்ந்து கிடப்பதால் கார் பின் சீட்டிலிருந்து நெற்றியில் சுடுவது கஷ்டமானது..:) .

அதுவேறில்லாமல் ரமேஷ் சுரேஷ் என்று பெயரை மாற்றி மாற்றி சொன்னால் யாருக்குத்தான் சந்தேகம் வராது?:D :D :D

pgk53
11-07-2006, 03:06 PM
நண்பர்களே----சுரேஷ் ரமேஷ் என்ற பெயர்க் குழப்பத்தை நீக்கிவிட்டேன்.அத்துடன் ஒரு சிறு திருத்தமும் செய்துள்ளேன்.

சுரேஷ் அல்லது ரமேஷ்---எதுவாக இருந்தாலும் புதிர் பாதிக்கப்படவில்லை.

பெயர்க் குழப்பம்தான் விடையைச் சரியாக கூறவில்லை என்று செல்வன் கருதினால் இப்போது விடையைக் கூறுங்கள் செல்வன் அவர்களே.அதாவது....நீங்கள் கூறிய விடை சரியானது என்றோ தவறானது என்றோ நான் கூறவில்லல.
மறுபடியும் உங்கள் விடையைக் கூறுங்கள்.

mukilan
11-07-2006, 06:48 PM
செல்வன் கூறியது போல யாரோ ஒருவர் அக்கொலையை காருக்குள்ளேயே வைத்து செய்து விட்டு பின்னர் கதவை மூடியிருக்கலாம்.அதுதான் சாத்தியம்.

பென்ஸ்
11-07-2006, 08:08 PM
செல்வன் சொல்வது போல் பின்னால் இருந்து சுடும் போது நெற்றியில் ரத்தம் வர வாய்ப்பில்லை... அப்படியே நெற்றியை குண்டு துளைத்தாலும் அது கண்ணாடியை சேதமாக்க வாய்ப்பிருக்கிறது... எனவே யாரோ அவரை வேளியே வைத்து கொண்ரு அவரை உள்ளே வைத்திருக்க வேண்டும்....

அப்படியே கொலை செய்பவன், அதை அவன் தற்கொலையாக சித்தரிக்காதவகையில் காரின் கதவை லாக் செய்து செல்ல வாய்ப்பு இல்லை... இதை காரணமாக வைத்து போலிஸ் அவனை கைது செய்து இருக்கலாம்...

முட்டாபய .. செய்யுறது சரியா செய்ய தெரியலை...

தாமரை
12-07-2006, 04:23 AM
காவலர்கள் ரமேஷின் கைரேகைகள் காரின் கதவில் இருந்ததால் சந்தேகப்பட்டனர். சுட்ட பின்பு காரில் பிணத்தை வைத்து, கண்ணாடிகளை ஏற்றி துப்பாக்கியை உள்ளே எறிந்து பின் கதவுகளை பூட்டி, மூடி இருக்கலாம் அல்லவா? ஸ்டியரிங் மேல் சாய்ந்து கிடப்பதால் கார் பின் சீட்டிலிருந்து நெற்றியில் சுடுவது கஷ்டமானது..:) .

அதுவேறில்லாமல் ரமேஷ் சுரேஷ் என்று பெயரை மாற்றி மாற்றி சொன்னால் யாருக்குத்தான் சந்தேகம் வராது?:D :D :D

காவலர்கள் ரமேஷின் கைரேகைகள் காரின் கதவில் இருந்ததால் சந்தேகப்பட்டனர்.

இது சரி.

காருக்குள் இருந்து சுட்டிருந்தால் அது பாயிண்ட் பிளாங்க் ரேஞ்ச். எனவே கபாலத்தை துளைத்து குண்டு வெளியே வந்திருக்க வேண்டும். எனவே கொலையாளி சிறிது தூரத்தில் இருந்து தான் சுட்டு இருக்க வேண்டும். பிறகு கொலையாளி பிணத்தை காரினுள் வைத்து, துப்பாக்கியை பின் சீட்டில் கைரேகையை துடைத்து எறிந்து விட்டு, கண்ணாடிகளை ஏற்றி, கதவுகளை பூட்டி பிறகு சாத்தி இருக்கவேண்டும். இல்லாவிட்டால் காருக்குள்ளே அந்தக் குண்டு சீட்டிலோ அல்லது கீழ் பகுதியிலே சிறிதளவாவது சேதம் விளைவித்திருக்கும்.

கதவுகளை சாத்தி இருந்தால் உள்ளே கார் விளக்கு எரியாது, வெளிச்சமில்லா இரவில் எனவே காரில் என்ன இருக்கிறது என வெளியே தெரியாது. ஒரு காரின் எஞ்சின் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது சாதாரணமாக யாரும் காருக்குள் எட்டிப் பார்க்க மாட்டார்கள்.

அய்யா மூச்சு வாங்குகிறது, விட்டா கேஸை என்னையே துப்பு துலக்க சொல்வீர்கள் போல இருக்கே..

சேரன்கயல்
12-07-2006, 10:59 AM
பென்ஸும் செல்வனும் கூறியது சரியே...
சுடப்பட்ட நபர் வெளியில் எங்கோ கொலை செய்யப்பட்டு பின் காரில் வைக்கப்பட்டுள்ளார். காரின் உள்ளே வைத்து சுட்டிருந்தால் குண்டு வெளியேறி ஜன்னல் கண்ணாடி சிதறியிருக்கும் என்பதோடு ரத்தமும் காரின் மற்ற பகுதிகளில் சிதறியிருக்கும். ரமேஷ் கொலை செய்து உடலை காரில் வைத்து, (அனேகமாக) தனது கைரேகை படியாத துப்பாக்கியை காரின் சீட்டில் வைத்து, கார் எஞ்சினை ஆன் செய்துவிட்டு, ஜன்னலை ஏற்றி, கதவுகளை பூட்டிவிட்டு பின் காவல்துறைக்கு புகார் சொல்லியிருக்கவேண்டும்.
(ஸ்டியரிங்கின் மீது கொலை செய்யப்பட்ட நபரின் தலையை வெகு லாவகமாக வைத்திருக்கிறான் ரமேஷ்...இல்லைனா இஞ்சின் ஆன் செய்த நிலையில் இருப்பதால் ஸ்டியரிங்கில் தலை சாய்ந்து தொங்கினால் ஹார்ன் அடிக்காதா..??)

pradeepkt
12-07-2006, 11:55 AM
அது சரி,
இப்ப சேரனைப் பாக்குறதுக்கே புதுசா புதிர் போடணும் போல...

தாமரை
12-07-2006, 11:58 AM
பென்ஸும் செல்வனும் கூறியது சரியே...
சுடப்பட்ட நபர் வெளியில் எங்கோ கொலை செய்யப்பட்டு பின் காரில் வைக்கப்பட்டுள்ளார். காரின் உள்ளே வைத்து சுட்டிருந்தால் குண்டு வெளியேறி ஜன்னல் கண்ணாடி சிதறியிருக்கும் என்பதோடு ரத்தமும் காரின் மற்ற பகுதிகளில் சிதறியிருக்கும். ரமேஷ் கொலை செய்து உடலை காரில் வைத்து, (அனேகமாக) தனது கைரேகை படியாத துப்பாக்கியை காரின் சீட்டில் வைத்து, கார் எஞ்சினை ஆன் செய்துவிட்டு, ஜன்னலை ஏற்றி, கதவுகளை பூட்டிவிட்டு பின் காவல்துறைக்கு புகார் சொல்லியிருக்கவேண்டும்.
(ஸ்டியரிங்கின் மீது கொலை செய்யப்பட்ட நபரின் தலையை வெகு லாவகமாக வைத்திருக்கிறான் ரமேஷ்...இல்லைனா இஞ்சின் ஆன் செய்த நிலையில் இருப்பதால் ஸ்டியரிங்கில் தலை சாய்ந்து தொங்கினால் ஹார்ன் அடிக்காதா..??)

கீயே இல்லாட்டியும் ஹாரன் அடிக்கும் சேரரே!.. வேணும்னா அனிருத்தைக் கேளும்..

ஆமாம் எங்கிருந்தீர் இவ்வளவு நாட்கள்?

சேரன்கயல்
12-07-2006, 01:32 PM
இங்கதாங்க பக்கத்தில் டீ சாப்பிட போயிருந்தேன் பிரதீப்பு......
(காணாமல் போவதற்கு முன்னும், திரும்பி வந்த பின்னும் இதேதான் சொல்வது வழமை...பேச்சை மாத்தக்கூடாதில்ல)
சாவி போடாம ஹார்ன் அடிக்கிற கதை எனக்கு தெரியாது செல்வன்...
(ராசா பிரதீப்பு...எப்படிய்யா இருக்கீரு...கண்ணாலம் காச்சி எப்பய்யா...???)

தாமரை
12-07-2006, 01:38 PM
இங்கதாங்க பக்கத்தில் டீ சாப்பிட போயிருந்தேன் பிரதீப்பு......
(காணாமல் போவதற்கு முன்னும், திரும்பி வந்த பின்னும் இதேதான் சொல்வது வழமை...பேச்சை மாத்தக்கூடாதில்ல)
(ராசா பிரதீப்பு...எப்படிய்யா இருக்கீரு...கண்ணாலம் காச்சி எப்பய்யா...???)

மணிக்கணக்கா காணாமப் போய் திரும்ப வந்தா என்ன பாலக் கறந்து டீ வைச்சு குடிச்சுட்டு வந்தியான்னு கேப்போம்..

நாள்கணக்கா இருந்தா என்ன பசு வாங்கி, பாலக் கறந்து டீ வைச்சு குடிச்சுட்டு வந்தியான்னு கேப்போம்..

மாதக்கணக்கான்னா என்ன பசு வாங்கி கன்று ஈன்றபிறகு பாலக் கறந்து டீ வைச்சு குடிச்சுட்டு வந்தியான்னு கேப்போம்..

வருஷக்கணக்குன்னா என்ன பொறந்த கன்னுகுட்டியை வளர்த்து அது பால் கொடுத்த பின்னால அதுல பால் கறந்து டீ போட்டு குடிச்சுட்டு வந்தியான்னு கேட்போம்..

எப்படி வசதி?

சேரன்கயல்
12-07-2006, 01:54 PM
மாதக்கணக்குதான் செல்வன்...
ஆனால், டீ சாப்பிட்ட சுவை நாக்கில் மறைவதற்குள் மறுபடி ஒரு டீ பிரேக்...
அப்படியே ஓடிட்டுருக்கு கதை...
(ஃபிளாஸ்க் வாங்கிக்கலாமேன்னு ஐடியாலாம் தராதீங்க)

தாமரை
12-07-2006, 01:56 PM
மாதக்கணக்குதான் செல்வன்...
ஆனால், டீ சாப்பிட்ட சுவை நாக்கில் மறைவதற்குள் மறுபடி ஒரு டீ பிரேக்...
அப்படியே ஓடிட்டுருக்கு கதை...
(ஃபிளாஸ்க் வாங்கிக்கலாமேன்னு ஐடியாலாம் தராதீங்க)
அதுக்கு சொந்தமா டீக்கடையே வச்சுரலாமேன்னு ஐடியா குடுக்கலாம்னு இருந்தேன். :D

மதி
12-07-2006, 02:20 PM
ஐடியா சுரங்கம் செல்வன் வாழ்க. அதெல்லாம் இருக்கட்டும்; துப்பாக்கில இப்படி சுட்டா இப்படி ஆகும்; என்ன நடந்திருக்கும்னு சொல்றீங்களே... படிப்பறிவா..இல்ல....

தாமரை
12-07-2006, 02:27 PM
ஐடியா சுரங்கம் செல்வன் வாழ்க. அதெல்லாம் இருக்கட்டும்; துப்பாக்கில இப்படி சுட்டா இப்படி ஆகும்; என்ன நடந்திருக்கும்னு சொல்றீங்களே... படிப்பறிவா..இல்ல....

என்.சி.சி ல துப்பாக்கி சுட்டிருக்கேன்.. அப்புறம் உங்க கதை நிறைய படிச்சி இருக்கேன்..

இது ஒரு உண்மை நிகழ்ச்சி..

என் தோழி அமெரிக்காவில் கஷ்டப்பட்டு கார் லைசென்ஸ் வாங்கி இருந்தாள். அதைக் கொண்டாட செல்ல அழைத்து இருந்தாள். பையன் வந்தவன் முதல் மாடிக்கு போவதற்கு தப்பாக 3 வத் மாடி பட்டனை லிஃப்டில் அமுக்கி மூன்றாவது மாடிக்கு போய் விட்டான். அஜாக்கிரதையாய் 103 க்கு பதிலாக 303 கதவைத் தட்ட கதவைத் துளைத்துக் கொண்டு வந்த குண்டு அவனைத் துளைத்து எதிர் வீட்டுக் கதவையும் துளைத்து சென்று விட்டது. எதிர் வீட்டில் இருந்தவர் போலீஸ்காரர். பையனைக் காப்பற்றியாயிற்று.. அப்பதான் இந்தப் பாய்ண்ட் பிளாங்க் ரேஞ்ச் பத்தி அமெரிக்க போலீஸ் எங்களுக்கு எக்ஸ்பிளெய்ன் செய்தார்..

அந்த ஆள் துப்பாக்கியை கிளீன் பண்ண எடுத்தப்ப தவறுதலா வெடிச்சதுன்னு சொன்னான். கேஸ் பத்தி யாருமே கண்டுக்கலை. போலீஸே கேஸை நடத்திடுச்சி.. பையன் சிஸ்கோவில் வொர்க் பண்ணிகிட்டு இருந்தான்.

பென்ஸூ இதை நீங்க படிக்காதீங்க..

மதி
12-07-2006, 02:34 PM

ஒருத்தர் இப்போ தான் அமெரிக்கா போய்..காப்(cop)கிட்ட பேசி..ஒரு மாதிரி இருக்கார். அவர்கிட்ட போய்..துப்பாக்கி அது இதுன்னு...
ச்சே..ஒரு மனுசன கொஞ்சமாவே பயப்பட வுட மாட்டீங்க..

இதெல்லாம் படிக்காதீங்க பென்ஸ்....:cool: :cool: :cool:

தாமரை
12-07-2006, 02:40 PM
ஒருத்தர் இப்போ தான் அமெரிக்கா போய்..காப்(cop)கிட்ட பேசி..ஒரு மாதிரி இருக்கார். அவர்கிட்ட போய்..துப்பாக்கி அது இதுன்னு...
ச்சே..ஒரு மனுசன கொஞ்சமாவே பயப்பட வுட மாட்டீங்க.. அவர்..ஏகத்துக்கும் பயந்து..அவர பாத்து அந்த குழந்தையும் பயந்து.... குழந்தையோட அப்பா போலீஸ்கிட்ட சொல்ல..அவங்க இவர் வீட்டுக்கு வந்து..அவங்கள பாத்து இவர் பயந்து..இவர பாத்து....ஹாஆ...(மூச்சு முட்டுது..)

இதெல்லாம் படிக்காதீங்க பென்ஸ்....:cool: :cool: :cool:

இதே மாதிரிதான் சான் ஹோசே வில் ஒருநாள் ஒரு வீட்டிலிருந்து 911 க்கு ஃபோன் வந்ததாம். போலீஸ் துப்பாக்கியோட போய் உள்ளே காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த அந்த கிழக்காசியப் பெண்மணியை சுட்டு விட்டார்கள். காரணம் கையில் கத்தி வைதிருந்தாளாம்..

பென்ஸ் இதை கண்டிப்பா நீங்க படிக்கக் கூடாது என்ன...!!!:eek: :eek: :eek:

sarcharan
13-07-2006, 10:35 AM
இதே மாதிரிதான் ...
பென்ஸ் இதை கண்டிப்பா நீங்க படிக்கக் கூடாது என்ன...!!!:eek: :eek: :eek:
ஹ்ம்ம் புள்ள விமானம் ஏறும் முன்னே பயமுறுத்தினீங்க

இப்ப அங்க போய் சேர்ந்தப்புறமும் பயமுறுத்தறீங்க...

இனி திரும்பி வர்றப்போ என்ன செய்யறதா உத்தேசம்????

பாவம் சின்ன புள்ளய(பென்ஸூ உங்க சின்ன புள்ளய இல்லை!!!!;) கொஞ்சம் ஜாலியா இருக்கட்டும் விடுங்க....

பென்ஸூ.. landmarkku.....**** -- இது இங்க...

அவ்விட இப்ப எந்துவா நிங்களுக்க பரிவாடிகளெல்லாம், எங்கின உண்டு ??????

தாமரை
13-07-2006, 10:38 AM
அவ்விட இப்ப எந்துவா நிங்களுக்க பரிவாடிகளெல்லாம், எங்கின உண்டு ??????

இது என்ன கோயமுத்தூர் மலையாளமா?

:D :D :D :D :D :D :D :D :D :D :D

sarcharan
13-07-2006, 10:41 AM
இது என்ன கோயமுத்தூர் மலையாளமா?

:D :D :D :D :D :D :D :D :D :D :D

விடமாட்டீங்களே...கோயமுத்தூர்ல ஏது மலையாளம்?!!!!!!!!!

தாமரை
13-07-2006, 10:45 AM
விடமாட்டீங்களே...கோயமுத்தூர்ல ஏது மலையாளம்?!!!!!!!!!

நீங்க பேசினது பார்டர் மலையாளம். கோவை கேரளா பார்டராச்சே! அதான் தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன். ;) ;) .

pradeepkt
13-07-2006, 12:49 PM
நீங்க பேசினது பார்டர் மலையாளம். கோவை கேரளா பார்டராச்சே! அதான் தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன். ;) ;) .
அவனே தான் மலையாளம் பேசுறதா நினைச்சுட்டு இருக்கான்! செல்வன் நீங்க வேற அவனைத் தூண்டி விடாதீங்க. அப்புறம் ரொம்பப் பேசுவான் :D

தாமரை
13-07-2006, 12:52 PM
அவனே தான் மலையாளம் பேசுறதா நினைச்சுட்டு இருக்கான்! செல்வன் நீங்க வேற அவனைத் தூண்டி விடாதீங்க. அப்புறம் ரொம்பப் பேசுவான் :D

இனிமே பேச கூச்சப்படுவான் பாருங்க..:rolleyes: :rolleyes: :rolleyes:

pgk53
14-07-2006, 05:06 PM
அன்பு நண்பர்களே---ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சிந்தித்து இருக்கிறீர்கள்.
ஆனால் யாருமே இன்னும் சரியான பாதைக்கு வரவில்லை.

காரின் இயந்திரத்தை முடுக்கியபின் அதை நிறுத்தாமல் சாவியை எடுக்க இயலாது.
இதை யாரும் சிந்திக்கவில்லை.
இயந்திரத்தை நிறுத்திவிட்டு எடுத்தால்தான் காரின் கதவைப் பூட்ட முடியும்.
ஆனால் இயந்திரம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
இப்போது சிந்தனையைத் தொடருங்களேன்.

மிக மிக எளிய புதிர்தான் இது.

தாமரை
17-07-2006, 03:59 AM

காரின் எஞ்சினை ஆஃப் செய்யாமல் கதவை பூட்டி விட முடியும், நானும் என் மனைவியின் சகோதரரும் இருமுறை இப்படி செய்து விட்டு அவஸ்தைப் பட்டிருக்கிறோம். அதாவது டிரைவர் கதவை மட்டுமே நீங்கள் சொல்வது போல் செய்ய முடியாது.. டிரைவர் கதவை உள்ளிருந்து பூட்டி விட்டு, மற்ற கதவுகளின் வழியே வந்து அவற்றை பூட்டி மறுபடி சாத்தினால் கார் பூட்டிக் கொள்ளும்.

கார்களில் பொருத்தப்படும் சில தானியங்கிப் பூட்டுகளில், காரை ஸ்டார்ட் செய்துவிட்டு காரை சாத்திவிட்டால் தானே பூட்டிக் கொள்ளும். என் காரில் இது மாதிரி பொருத்தப்பட்டுள்ளது.

கார் கதவில் உள்ள ரப்பர் பீடிங்கை எடுத்து விட்டு ஒரு குடைக்கம்பியாலோ அல்லது ஹேங்கரினாலோ கூட காரை பூட்டி விட முடியும்.

சாண்ட்ரோ போன்ற கார்களில் காரை பூட்டிவிட்டு கார் டிக்கியை திறந்து வெளியே வந்து லாக் செய்து விட முடியும்...

உங்களுக்கு பதில் சொல்லப்போய் கிரிமினில்களுக்கு வித விதமாய் ஐடியா கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். :D :D :D

சரி உங்கள் வழியே வருவோம். ஒவ்வொரு காருக்கும் இரண்டு சாவிகள் கொடுப்பார்கள்.. எனவே சாவி வைத்திருக்கும் இன்னொருவரும் வெளியிலிருந்து காரை பூட்டி விட முடியும்...(மனைவி, நண்பர்கள்)

காருக்குள் தற்கொலை நடந்திருக்க சாத்தியமுண்டா என்று பார்த்தால் இல்லை.. ஏனென்றால் தலையில் சுட்டுக் கொள்ளும் எவரும் துப்பாக்கியை வீசி எறிந்திருக்க சாத்தியம் இல்லை... ஏனென்றால் மூளை தாக்கப்பட்ட உடனே செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை..

காரினுள் கொலை நடந்திருந்தால், தலையில் குண்டு துளைத்த இடம், குண்டு வெளியேறிய இடம் என இரு காயங்கள் இருக்கும்.. இங்கே ஒரே ஒரு காயம்தான் காட்டியிருக்கிறீர்கள்..

காரில் ஜன்னலுக்கு வெளியே தலையைத் தள்ளி துப்பாக்கியால் சுட்டு இருந்தால் காரின் பக்கவாட்டில் ரத்தம் படிந்திருக்கலாம். அதில் ரமேஷ் கை வைத்திருக்கலாம். ஆனால் இதுவும் இருதுளைகள் இருந்தால் மட்டுமே சாத்தியம்..

தாமரை
18-07-2006, 04:17 AM
சரி சரி சுற்றி வளைத்து போதும்.. காரில் சாவி இல்லை.. ஸ்டார்டிங் கண்ட்ரோல் ஒயர்கள் இணைக்கப்பட்டு எஞ்சின் உறுமிக் கொண்டு இருந்தது.. ரமேஷ் ஒரு கார் மெக்கானிக்.. அவன் கைரேகைகள் கதவில்.. வேறென்ன வேண்டும் போலீஸுக்கு இப்படி ஒரு பலிகடா மாட்டிய பிறகு..

இதை முதலிலேயே சொல்லி இருக்கலாம். ஆனால் காரில் சாவி இல்லை என்பதை நீங்கள் சொல்லவில்லை. காரில் சாவி இருக்க, எஞ்சின் ஓடிக்கொண்டிருக்க நாங்கள் பட்ட பாட்டை உலகம் அறிய வேண்டாமா???

pgk53
28-07-2006, 03:35 PM
புதிர் எண் 226
அன்பு நண்பர்களே.என்னை முதலில் மன்னிக்க வேண்டுகிறேன்.
எதிர்பாராமல் ஏற்பட்ட வேலைப் பளு காரணமாகவும், வேலையிடத்தில் தற்காலிக மாறுதல் ஏற்பட்டு வேறு இடம் சென்றதாலும், கடந்த இரு வாரங்களாக மன்றத்தில் பங்குகொள்ள இயலாமல் போனது.
புதிர் எண் 226க்கு இன்னும் யாருமே சரியான விடை கொடுக்கவில்லை.
மிகவும் எளிதான இந்தப் புதிருக்கு விடையை நான் நாளை கூறி, அடுத்த புதிரைத் தொடர்கிறேன்.
அனைவருக்கும் வணக்கம்.

மதி
28-07-2006, 03:39 PM
ஆஹா இன்னும் யாரும் சரியா விடை சொல்லலியா..
போச்சுடா?

பென்ஸ்
28-07-2006, 04:28 PM
PGK...

மன்னிப்பு என்று பெரிய வார்த்தை எல்லாம் எதற்க்கு... பணி , குடும்பம் இவற்றிக்கு போதுமான அளவு நேரம் ஒதுக்கிய பின் நேரம் கிடைத்தால் மன்றம் வரலாம்....

என்ன...... என் இந்த விடையாவது சரியா....???

யாரோ, அட தமிழ் மன்றமும் குடும்பம் தானே என்று கேப்பது புரிகிறது....

arul5318
29-07-2006, 09:18 AM
புதுமையான நிகழ்சி நண்ரே உங்களின் இப்பணி தொடர வாழ்துகிறேன்

pgk53
01-08-2006, 02:05 AM
அன்பு நண்பர்களே----இந்தப் புதிர் மிக எளிமையானது. ஆனால் பொதுவாக யாருமே இந்தக் கோணத்தைச் சிந்திக்க மாட்டார்கள்.

கொலை செய்யப்பட்டவர் பயணம் செய்த கார் டாப் ஓப்பன் வகையைச் சேர்ந்தது.அதாவது காரின் மேல் பகுதியைத் திறந்து வைத்துக்கொள்ள முடியும். அவர் கொலை செய்யப்பட்ட சமயம் அந்தப் பகுதி திறந்துதான் இருந்தது.
இதை நான் வேண்டுமென்றேதான் புதிரில் குறிப்பிடவில்லை.
அப்படிக் குறிப்பிடுவிட்டால் அது புதிராகவே இருக்காது.

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
01-08-2006, 02:05 AM
புதிர் எண் 228

ராஜேஷ் ஒரு பெண்ணைக் காதலித்தான்.அவளும் ராஜேஷைக் காதலித்தாள்

அவளையே திருமணம் செய்துகொண்டு இனிய வாழ்வு அமைத்திட மிகவும் விரும்பியிருந்தான்..

ஆனால் அவள் வேறு ஒரு ஆணுடன் அடிக்கடி பீச் சினிமா ஹோட்டல் என்று சுற்றுவதாக அறிந்தான்.

ரகசியமாக ஆராய்ந்து பார்த்ததில் அந்த ஆண் ராஜேஷைவிட பணக்காரன் என்பதும், தனது காதலி தனக்குத் துரோகம் செய்வது உண்மைதான் என்றும் கண்டறிந்த்தான்.

அவனது மனம் கொதிப்படைந்தது.தனது காதலி தனக்குத் துரோகம் செய்வதை அவனால் தாங்த இயலவில்லை. அதனால் அவளைக் கொன்றுவிட முடிவு செய்தான்.

ஆனால் எப்படிக்கொல்வது? எங்கே வைத்துக் கொல்வது? என்று ஆலோசித்து ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.அவன் ஏற்கனவே பார்த்த ஒரு திரைப்படத்துக்கு அவளை அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.

ஒருநள் மாலை அவளைச் சந்தித்து, இனிமையாகப் பேசி அவளை திரைப்படம் செல்ல அழைத்தான். அவளும் அவனுடன் அவனது காரில் புறப்பட்டு வந்தாள்.
அந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த படம் ஆகையால் திரையரங்கு கிட்டத்தட்ட நிறைந்திருந்தது. திரையரங்குக்குள் வந்தார்கள். திரைப்படம் தொடங்கியது.

அது வன்முறைகள் நிறைய உள்ள சண்டைப்படம். அதனால் திரையில் அடிக்கடி துப்பாக்கிச் சூடும் பெரும் சப்தங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.

ராஜேஷ் ரகசியமாக தனது துப்பாக்கியை எடுத்து வைத்துக்கொண்டான்.
திரைக்காட்சியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடக்கும் சம்பவக்காட்சி ஆரம்பித்தது.

ராஜேஷ் திரைப்படத்தில் வரும் துப்பாக்கிச் சப்தத்துக்கு இனையாக அவளைச் சுட ஆரம்பித்தான். தனது கைத்துப்பாக்கியில் இருந்த ஆறு குண்டுகளும் தீரும்வரை தொடர்ந்து சுட்டான்.

அவனது வெறி தனிந்தது.

பிறகு அவளுடன் திரையரங்கில் இருந்து வெளியேறினான்.

வீட்டுக்குப் போகும் வழியில் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றில் அவளைத் தள்ளிவிட்டான்.

பழிவாங்கிய மனதுடன் நிம்மதியாக ராஜேஷ் வீட்டுக்குப் போனான்.

மன்ற நண்பர்களே இது எப்படி அவனுக்குச் சாத்தியம் ஆனது?

மதி
01-08-2006, 03:59 AM
சத்தியமா நான் அவனில்லை...

pradeepkt
01-08-2006, 05:34 AM
சத்தியமா நான் அவனில்லை...
எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையாமே... :rolleyes:

மதி
01-08-2006, 06:29 AM
எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையாமே... :rolleyes:
பேர் மட்டும் ஒற்றுமையே தவிர வேற எதிலும் ஒற்றுமையில்லைனு சொல்ல வந்தேன்.:eek: :eek: :eek: :eek:

sarcharan
01-08-2006, 10:02 AM
சத்தியமா நான் அவனில்லை...

ஹ்ம்ம் சொல்லவேயில்லை....
மதி எப்படி சுட்டீர்கள்?

தீபன்
02-08-2006, 06:03 PM
அந்த திரைப்படத்தில் அவனது காதலி நடித்திருக்கிறாள். படத்திலும் அவள் சுடப்படுவதாக காட்சி அமைந்திருக்கலாம்... இந்த சந்தர்ப்பத்தில் அவன் திரையில் தெரிந்த அவளை வெறிதீர சுட்டிருக்கலாம்.. பின்னர் திரும்புகையில் அவளை பாளுங்கிணற்றில் தள்ளி விட்டிருக்கலாம்.. சரியா..?

pgk53
03-08-2006, 03:29 PM
சரி இல்லை நண்பரே

பென்ஸ்
03-08-2006, 03:53 PM
ஐயோ... நான் சரி என்று நினைத்தேனே.....
சரி.... நான் யோசித்து பாக்கிறேன்...
இது வரைக்கும் விடை கிடைக்கலை...

mgandhi
05-08-2006, 06:21 PM
இந்த விடுகதை இதர்க்கு முன் கேள்விபட்டது இல்லையோ!!!!

தாமரை
06-08-2006, 03:36 PM
டிரைவ் இன் தியேட்டரில படம் பாத்தாங்களாக்கும்..

தாமரை
08-08-2006, 03:00 AM
அன்பு நண்பர்களே----இந்தப் புதிர் மிக எளிமையானது. ஆனால் பொதுவாக யாருமே இந்தக் கோணத்தைச் சிந்திக்க மாட்டார்கள்.

கொலை செய்யப்பட்டவர் பயணம் செய்த கார் டாப் ஓப்பன் வகையைச் சேர்ந்தது.அதாவது காரின் மேல் பகுதியைத் திறந்து வைத்துக்கொள்ள முடியும். அவர் கொலை செய்யப்பட்ட சமயம் அந்தப் பகுதி திறந்துதான் இருந்தது.
இதை நான் வேண்டுமென்றேதான் புதிரில் குறிப்பிடவில்லை.
அப்படிக் குறிப்பிடுவிட்டால் அது புதிராகவே இருக்காது.

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

ஏற்கெனவே நான் விவரித்தபடி என்னதான் டாப் ஓபனிங் என்றாலும் காருக்கு சிறிதும் சேதாரமில்லாமல் சுட முடியாது. ஏனெனில் ஓட்டுனருக்கு முன்புறம், மற்றும் இரு பக்கங்களிலும் கண்ணாடிகள் இருப்பதால் தூரத்தில் இருந்த்து சுட முடியாது. பக்கமிருந்து சுட்டால் தலையை துளைத்துக் கொண்டு சென்றிருக்கும் (3 மீட்டர்).

pgk53
08-08-2006, 05:22 PM
நண்பர் செல்வன் அவர்கள்,"டிரை இன்" தியேட்டரில் படம் பார்க்கும்போது கொலை செய்தான் என்று மிகச் சரியான விடையைக் கூறிவிட்டார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.

அது சரி----இப்போதெல்லாம் புதிர்ப் பகுதியில் அதிகமாக யாரும் வருவது இல்லைபோல் தெரிகிறது.
ஒருவேளை எனது புதிர்கள் சுவாரஸ்யம் இல்லாமல் ஆகிக்கொண்டுள்ளது போலும்.

அடுத்து வரும் புதிர்களை நல்லவிதமாகக் கொடுக்க முனைகின்றேன்.

தீபன்
08-08-2006, 05:47 PM

ட்ரைவ் இன் தியட்டர் என்றாலே என்னவென்று தெரியாத நானெல்லாம் எப்படி இந்தமாதிரி புதிர்களுக்கு விடைசொல்ல முடியும் அண்ணா...

இப்பக்கம் அதிகம்யாரும் வராமைக்கு காரணம் நீங்கள் நினைப்பதுபோலிருக்காது... எல்லோருக்கும் மூளை சற்று மந்தமாகிவிட்டிருக்ககூடும்.. அதனால்தான் இப்பக்கம் வரதயங்குகிறார்களென நினைக்கிறேன்...

தீபன்
08-08-2006, 05:50 PM

09-08-2006, 01:39 AM

ஆனால் டிரைவ் இன் தியேட்டருக்குப் போனது மதி இல்லை. அவர் எங்களுடன் ஃபாரம் மாலில் இருந்தார்.. டிரைவ் இன் தியேட்டருக்கு போனது இம்சை அரசன் (அதாவது இம்சை அரசன் பார்த்தது)
ராகவன். சொல்லேன் சரவணா...!!!

மதி
09-08-2006, 05:02 AM
ஆனால் டிரைவ் இன் தியேட்டருக்குப் போனது மதி இல்லை. அவர் எங்களுடன் ஃபாரம் மாலில் இருந்தார்.. டிரைவ் இன் தியேட்டருக்கு போனது இம்சை அரசன் (அதாவது இம்சை அரசன் பார்த்தது)
ராகவன். சொல்லேன் சரவணா...!!!
நல்லவேளை..எனக்கு அலிபி இருக்கு.:D :D :D

sarcharan
09-08-2006, 06:09 AM
நண்பர் செல்வன் அவர்கள்,"டிரை இன்" தியேட்டரில் படம் பார்க்கும்போது கொலை செய்தான் என்று மிகச் சரியான விடையைக் கூறிவிட்டார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.

அது சரி----இப்போதெல்லாம் புதிர்ப் பகுதியில் அதிகமாக யாரும் வருவது இல்லைபோல் தெரிகிறது.
ஒருவேளை எனது புதிர்கள் சுவாரஸ்யம் இல்லாமல் ஆகிக்கொண்டுள்ளது போலும்.

அடுத்து வரும் புதிர்களை நல்லவிதமாகக் கொடுக்க முனைகின்றேன்.

முன்ன பின்ன செத்தாதானே சுடுகாடு தெரியும்.....

pgk53
12-08-2006, 05:02 PM
புதிர் எண்-229

லட்சுமியின் பெற்றோருக்கு நான்கு குழந்தைகள்.

முதல் பெண்ணின் பெயர் அன்ன லட்சுமி.
அடுத்த பெண்ணின் பெயர் பாக்ய லட்சுமி.
மூன்றாவது பெண்ணின் பெயர் வீர லட்சுமி.
கடைசிக் குழந்தையின் பெயர் என்ன?

{சும்மா----ஒரு இடைவெளிக்காக சிறிய புதிர். எளிமையான புதிர்.}

பாரதி
12-08-2006, 05:46 PM
லட்சுமி!

பரஞ்சோதி
13-08-2006, 05:48 AM
லட்சுமி!

ஆஹா!

பாரதி அண்ணா, மிகக்கடினமான புதிரை மிக எளிதாக சொல்லிட்டாங்களே! :D

pgk53
18-08-2006, 05:02 PM
புதிர் எண்-230

ஒரு லாரியின் டயர் தரையில் கிடந்தது.
திடீரென்று பெரும் மழை பெய்யத் தொடங்கியது.

அந்த இடம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து ஒரு நிமிடத்துக்கு ஒரு அங்குலம் வீதம் நீர் மட்டம் உயரத் தொடங்கியது.

கீழே கிடந்த டயரின் உயரம் பத்து அங்குலம்.
டயரையும் நீர் சூழ்ந்தது.

இப்போது உங்களுக்கு ஒரு எளிய கணக்குப் புதிர்.
நீர் மட்டம் அந்த டயரை முழுவதுமாக மூழ்கடிக்க எத்தனை நிமிடங்கள் ஆகும்.?????
கூறுங்களேன்.
து உங்களுக்கு ஒரு எளிய கணக்குப் புதிர்.
நீர் மட்டம் அந்த டயரை முழுவதுமாக மூழ்கடிக்க எத்தனை நிமிடங்கள் ஆகும்.?????
கூறுங்களேன்.

aren
18-08-2006, 05:06 PM
டயர் தண்ணீரில் மிதக்கும். ஆகையால் அதை முழ்கடிக்கமுடியாது.

தாமரை
19-08-2006, 03:06 AM
டயர் தண்ணீரில் மிதக்கும். ஆகையால் அதை முழ்கடிக்கமுடியாது.
டயர் வண்டி ஓட்டின நம்மளையே டயரைக் காட்டி ஓட்டப் பார்க்கிறாரே பி.கே.ஜி..

நிலா அது ஓடத்து மேல பாடல் ரசிகர்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி..:) :) :)

pgk53
20-08-2006, 04:46 PM
அன்பு நண்பர்களே யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பதற்கினங்க, அடுத்து வரவிருக்கும் ஒரு கடினமான புதிருக்கு முன்பாக எளிய புதிர்களாகக் கொடுக்கலாம் என்றுதான் இப்போது எளிமையான புதிர்களைக் கொடுத்துக்கொண்டுள்ளேன்.
சரி வாருங்கள், அடுத்து ஒரு எளிமையான புதிருக்குப் போவோம்.

pgk53
20-08-2006, 05:02 PM
புதிர் எண்-231

பேரரசர் அக்பரின் அவையில் நட்சத்திர அந்தஸ்துடன் உலவிவந்த பீர்பலை அறிவீர்கள். அவரை மையமாக வைத்து இந்தப் புதிர்.

ஒருநாள் ஒரு சிறந்த அறிவாளி ஒருவன் அக்பரின் அவைக்கு வந்தான்.
அவன் தான் பீர்பலை விட சிறந்த அறிவாளி என்றும் தன்னுடன் வாதிட பீர்பலுக்குத் துணிச்சல் உண்டா??? என்றும் சவால் விட்டான்.

பீர்பலும் அவனுடன் வாதிட ஒத்துக்கொண்டார்.

உடனே அவன் "பீர்பல் அவர்களே, நான் கேட்கும் நூறு இலகுவான கேள்விகளுக்கு விடை கூறுகிறீர்களா???? அல்லது ஒரே ஒரு கடினமான கேள்விக்கு சரியான விடை கூறுகிறீர்களா?" என்று கேட்டான்.

கொஞ்ச நேரம் ஆலோசித்த பீர்பல் ஒரே ஒரு கடினமான கேள்விக்கு மட்டும் தான் விடை சொல்வதாக ஒத்துக்கொண்டார்.

"நன்று...பீர்பல் அவர்களே....இப்போது நான் கேட்கப் போகும் கேள்விக்கு விடை கூற இயலாமல் நீங்கள் தோல்வியை ஒத்துக்கொள்வது சர்வ நிச்சயம். ஏனென்றால் இதுவரை இக்கேள்விக்கு யாரும் விடை கூறியதில்லை" என்றான் பீர்பலுடன் வாதிட வந்தவன்.

"அதை அப்புறம் பார்க்கலாம். முதலில் கேள்வியைக் கேளுங்கள்" என்றார் பீர்பல்.

அவையில் இருந்தவர்களையெல்லாம் ஒருவித ஏளனச் சிரிப்புடன் தான் வெற்றியடையப் போகிறோம் என்ற தொனியில் பார்த்தபடி, " சரி இப்போது கேள்வியைக் கேட்கிறேன்.

"கோழியில் இருந்து முட்டை வந்ததா????? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா????????எது முதலில் வந்தது????????" என்று கேட்டான்.

கொஞ்சமும் யோசிக்காமல், " கோழிதான் முதலில் வந்தது" என்றார் பீர்பல்.

அவரது இந்த பதிலைக் கேட்ட அவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் தனது தோல்வியை ஒத்துக்கொண்டு பீர்பல் சிறந்த அறிவு படைத்தவர் என்று ஒப்புக்கொண்டான்.

மன்ற நண்பர்களே அவன் ஏன் தோல்வியை ஒத்துக்கொண்டான்.

பீர்பல் கூறிய விடை சரியானதா????? நீங்கள் கூறுங்களேன்.

பரஞ்சோதி
21-08-2006, 04:33 AM
அவன் இதுநாள் வரை பயமுறுத்தியே வெற்றி பெற்றிருப்பான். அதாவது கடினமான கேள்வி என்று சொல்லி பயம் காட்டி.

அப்புறம் பீர்பால் சொன்ன கோழி தான் முதலில் வந்தது என்ற போது, அவன் அதை மறுத்து இல்லை முட்டை என்று சொல்ல வந்தால் அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும், ஆனால் அவனிடம் அதற்கான ஆதாரம் இல்லை.

ஆக பீர்பாலில் தைரியமான, புத்திசாலித்தனமான பதிலை கேட்டு உடனே சரி என்று ஒத்துக் கொண்டான்.

அண்ணா, ரொம்ப நாள் அப்புறம் விடை சொல்கிறேன், பதில் சரியா?

aren
21-08-2006, 05:29 AM
பரம்ஸ் அவர்களே, நீங்கள் சொன்ன விடை சரிதான். நம்ம பிகேஜியும் அதே மாதிரி நிலமையில்தான் இருக்கிறார். அவராலும் உங்கள் பதிலை மறுத்து பேசமுடியாது.

பரஞ்சோதி
21-08-2006, 05:34 AM
நன்றி ஆரென் அண்ணா.

அண்ணா, எப்போ இந்தியா வர இருக்கீங்க.

aren
21-08-2006, 05:36 AM
நன்றி ஆரென் அண்ணா.

அண்ணா, எப்போ இந்தியா வர இருக்கீங்க.

ஒரு வேலை இருக்கிறது பெங்களூரில். தேதிக்காக காத்திருக்கிறேன். வந்தவுடன் உங்களுக்கு செய்தி அனுப்புகிறேன். அது நீங்கள் சந்திக்கும் தினத்துடன் ஒத்துவரவேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன். பார்க்கலாம்.

பரஞ்சோதி
21-08-2006, 05:39 AM
ஆஹா ஆஹா!

அண்ணா தனிமடல் பாருங்க.

sarcharan
21-08-2006, 07:52 AM
முட்டையிலிருந்து கோழி வராது குஞ்சு தான் வரும்:) :)

பரஞ்சோதி
21-08-2006, 09:35 AM
ஆஹா, சரவணன் நீங்க புது ஆராய்ச்சி பண்ணுறீங்க, அறிஞர் இல்லாத குறை தீர்ந்தது.

pgk53
21-08-2006, 09:36 AM
பரம்ஸ் அவர்களே, நீங்கள் சொன்ன விடை சரிதான். நம்ம பிகேஜியும் அதே மாதிரி நிலமையில்தான் இருக்கிறார். அவராலும் உங்கள் பதிலை மறுத்து பேசமுடியாது.

இல்லை ஆரென் அவர்களே-------நான் பதிலை மறுக்கிறேன்.
எப்படி மறுக்கிறேன் என்பதை விளக்கினால் புதிர் அவிழ்ந்துவிடும். அதனால் மற்றவர்களும் விடை கொடுக்கட்டும்.
அதன் பிறகு எப்படி மறுக்கிறேன் என்பதை கூறுகிறேன்.

பரஞ்சோதி
21-08-2006, 09:42 AM
அண்ணா, அப்போ நான் சொன்னவிதம் தவறா? சரி, மேலும் யோசிக்கிறேன்.

ஓவியா
21-08-2006, 01:22 PM
முட்டையிலிருந்து கோழி வராது குஞ்சு தான் வரும்:) :)

ஆஹா, சரவணன் நீங்க புது ஆராய்ச்சி பண்ணுறீங்க, அறிஞர் இல்லாத குறை தீர்ந்தது.

எது..... வாத்து குஞ்சா........இப்படி சொன்ன எப்படி....:D :D :D

பரஞ்சோதி
22-08-2006, 04:13 AM
ஒருவேளை இப்படி இருக்குமே.

கேள்வி கேட்பவரே! கோழியிலிருந்து முட்டை வந்ததா என்று கேட்கிறார். ஆக அவரே அதை ஏற்றுக் கொண்டதால் தான் அப்படி கேட்கிறார் என்பதால்ற பீர்பால் கோழியிலிருந்து முட்டை என்று அடித்து, உடைத்து, ஆம்லெட் போட்டு சொல்கிறார் :)

பாரதி
22-08-2006, 08:22 AM
"கோழியில் இருந்து முட்டை வந்ததா????? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா????????எது முதலில் வந்தது????????" என்று கேட்டான்.

கொஞ்சமும் யோசிக்காமல், " கோழிதான் முதலில் வந்தது" என்றார் பீர்பல்.

அவரது கேள்வியின் படியே முதலில் வந்தது கோழிதானே..! எனவே பீர்பால் சொன்னது சரிதான்.

pgk53
22-08-2006, 09:50 AM

பாரதி அவர்களே----ஒரு வகையில் நீங்கள் கூறுவதை நானும் ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால் சரியான விடை அதுவல்ல.மன்னிக்கவும்.

pgk53
22-08-2006, 09:52 AM
ஒருவேளை இப்படி இருக்குமே.

கேள்வி கேட்பவரே! கோழியிலிருந்து முட்டை வந்ததா என்று கேட்கிறார். ஆக அவரே அதை ஏற்றுக் கொண்டதால் தான் அப்படி கேட்கிறார் என்பதால்ற பீர்பால் கோழியிலிருந்து முட்டை என்று அடித்து, உடைத்து, ஆம்லெட் போட்டு சொல்கிறார் :)

இல்லை சகோதரரே....இது சரியான விடை அல்ல.
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் விடையைக் கூறிவிடுவீர்கள் என்று நினைக்கிறேன்.

பரஞ்சோதி
22-08-2006, 09:56 AM
அடுத்து கும்சாவா யோசித்து சொன்னது

// "நன்று...பீர்பல் அவர்களே....இப்போது நான் கேட்கப் போகும் கேள்விக்கு விடை கூற இயலாமல் நீங்கள் தோல்வியை ஒத்துக்கொள்வது சர்வ நிச்சயம். ஏனென்றால் இதுவரை இக்கேள்விக்கு யாரும் விடை கூறியதில்லை" என்றான் பீர்பலுடன் வாதிட வந்தவன். //

இதுவரை யாருமே விடை (சரியோ தவறோ அது இரண்டாவது) கூறாத கேள்விக்கு கொஞ்சமும் பயப்படாமல் பீர்பால் கோழி தான் என்று விடை கூறியதால் அதை அவர் ஏற்றுக் கொண்டார்.

vckannan
22-08-2006, 10:19 AM
முட்டையிலிருந்து கோழி வராது குஞ்சு தான் வரும்:) :)
தமிழ்ல எப்பவும் கோழிக்கு அப்புறந்தான் முட்டை :confused:
நான் சொல்லல இத
பொய்யாமொழி புலவர் இப்படிதான் சொல்லுவார் :D
அவருடைய வரிசைப்படிப் பார்த்தா கோழிக்கு அப்பறம் முட்டை
இராகவரே உங்க சமாசாரம்தான் சொல்லுங்க முட்டை யாரு கோழி யாருன்னுB)

aren
22-08-2006, 02:49 PM
முட்டையிலிருந்து கோழி வராது குஞ்சு தான் வரும்:) :)

இங்கே கேள்வி, கோழியா அல்லது முட்டையா என்பதே. இங்கே குஞ்சு என்பது கோழியை குறிப்பாதகவே கருதப்படும். ஆகையால் கோழியா அல்லது முட்டையா என்று கொஞ்சம் யோசிக்கலாமே?

எனக்கு என்னவோ பிகேஜி அவர்கள் சொல்லும்பதில் கொஞ்சம் விவகாரமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

பதில் வரட்டும் பார்க்கலாம்.

aren
22-08-2006, 02:50 PM
கோழியிலிருந்துதான் முட்டை வந்திருக்கும், ஏனெனில் முட்டையிலிருந்து கோழியும் வரலாம், சேவலும் வரலாம், அல்லது காக்கையும் வரலாம்.

ஆகையால் கோழியிலிருந்து முட்டை வந்ததுதான் சரியான விடை.

பரஞ்சோதி
23-08-2006, 07:04 AM
கோழியை வெட்டினா முட்டை இருக்கலாம், ஆனா முட்டையை உடைச்சா கோழி இருக்காது - அதனால் அவர் தோல்வியை ஒத்துக் கொண்டார்.

23ம் தத்துவகேசி
பரம்ஸ்

akilarasu
23-08-2006, 09:04 AM
<< உடனே அவன் "பீர்பல் அவர்களே, நான் கேட்கும் நூறு இலகுவான கேள்விகளுக்கு விடை கூறுகிறீர்களா???? அல்லது ஒரே ஒரு கடினமான கேள்விக்கு சரியான விடை கூறுகிறீர்களா?" என்று கேட்டான்.>>

அவனுடைய நிபந்தனைபடி பீர்பால் ஒரு கேள்விக்கு விடை கூறினால் போதும். ஆகவே, பீர்பால் கூறியது தவறான விடையென்றாலும் அவனால் மறுகேள்வி கேட்கமுடியாது. அதனால் தோல்வியை ஒப்புக்கொண்டான்.

சரியா?

அன்புடன்
அரசு

pradeepkt
23-08-2006, 12:04 PM
அட அரசு... வந்தவுடனே சரியான பதிலைக் கூறிவிட்டீர்கள் போல...
அப்படியே உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தைப் போடுங்கள்.

akilarasu
24-08-2006, 04:47 AM
நன்றி பிரதீப். என் பெயர் வல்லத்தரசு. நண்பர்கள் அழைப்பது அரசு.
பணிபுரிவது சிங்கார சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில்.
வெறென்ன சொல்ல............

அன்புடன்
அரசு

பரஞ்சோதி
24-08-2006, 05:32 AM
வாங்க அரசு.

அப்படியே அறிமுகம் பகுதியில் ஒரு சிறு அறிமுகத்தை சொல்லுங்க.

நீங்க தான் வல்லரசா?

-அப்பாவி பரம்ஸ்

sarcharan
24-08-2006, 07:59 AM
நன்றி பிரதீப். என் பெயர் வல்லத்தரசு. நண்பர்கள் அழைப்பது அரசு.
பணிபுரிவது சிங்கார சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில்.
வெறென்ன சொல்ல............

அன்புடன்
அரசு

காலில் பெரிய ஷூ அணிந்திருப்பீரோ...

akilarasu
24-08-2006, 08:58 AM
காலில் பெரிய ஷூ அணிந்திருப்பீரோ...
ஏனிப்படி கேட்கிறீர்கள் சரவணன்

அன்புடன்
அரசு
-----------------
வாழ்க தமிழ்

akilarasu
24-08-2006, 09:04 AM
வாங்க அரசு.

அப்படியே அறிமுகம் பகுதியில் ஒரு சிறு அறிமுகத்தை சொல்லுங்க.

நீங்க தான் வல்லரசா?

-அப்பாவி பரம்ஸ்

அறிமுகத்தை பதிவு செய்துவிட்டேன் பரம்ஸ்.
அது நானில்லை.

நீங்கள் தான் அப்பா(ஆ)வி பரம்ஸா

அன்புடன்
அரசு

பரஞ்சோதி
24-08-2006, 10:09 AM
ஏனிப்படி கேட்கிறீர்கள் சரவணன்

அன்புடன்
அரசு
-----------------
வாழ்க தமிழ்

இந்த மாதிரி கேட்டா தானே, நீங்க கேள்வி/பதில் சொல்லுவீங்க.

akilarasu
24-08-2006, 11:04 AM
இந்த மாதிரி கேட்டா தானே, நீங்க கேள்வி/பதில் சொல்லுவீங்க.
எனக்கு பல நேரங்களில் கேட்க மட்டுந்தான் தெரியும்.

sarcharan
28-08-2006, 07:13 AM
அறிமுகத்தை பதிவு செய்துவிட்டேன் பரம்ஸ்.
அது நானில்லை.

நீங்கள் தான் அப்பா(ஆ)வி பரம்ஸா

அன்புடன்
அரசு

ஆம், சரவணன், இராகவன் இவர்களைப்போல் அப்பாவி பரம்ஸ்

பரஞ்சோதி
29-08-2006, 04:42 AM
எங்கே பிஜிகே அண்ணாவை காணோம்.

pgk53
31-08-2006, 01:55 AM
[quote=akilarasu]<< உடனே அவன் "பீர்பல் அவர்களே, நான் கேட்கும் நூறு இலகுவான கேள்விகளுக்கு விடை கூறுகிறீர்களா???? அல்லது ஒரே ஒரு கடினமான கேள்விக்கு சரியான விடை கூறுகிறீர்களா?" என்று கேட்டான்.>>

அவனுடைய நிபந்தனைபடி பீர்பால் ஒரு கேள்விக்கு விடை கூறினால் போதும். ஆகவே, பீர்பால் கூறியது தவறான விடையென்றாலும் அவனால் மறுகேள்வி கேட்கமுடியாது. அதனால் தோல்வியை ஒப்புக்கொண்டான்.

சரியா?

அன்புடன்
அரசு[/quote

சபாஷ்---அரசு அவர்களே----முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து களமிறங்கியுள்ளீர்கள்.பாராட்டுகள்.

வேலைப் பளு காரணமாக மன்றத்துக்கு வர நேரமில்லாமல் போனது.
அடுத்த புதிருடன் சந்திக்கிறேன்.]

pgk53
01-09-2006, 12:21 PM
புதிர் எண்-232

ஒரு வேலையாக வெளியே சென்று வீடு திரும்பிய ராமு, வெயிலின் உக்கிரத்தால் ஏற்பட்ட தாகத்தைத் தணிக்க விழைந்தான்.

குளிர்ச்சியாக நீர் அருந்த விரும்பிய ராமு ஒரு கண்ணாடி கிளாஸில் முக்கால் பாகம் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்து மேசை மேல் வைத்தான்.

குளிர் பதனப் பெட்டியைத் திறந்தான். மூன்று ஐஸ் கட்டிகளை எடுத்தான்.

மூன்றையுமே கிளாஸில் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டான்.
கிளாஸில் நீர்மட்டம் சரியாக விளிம்புவரை உயர்ந்தது.

இன்னும் ஒரு துளி நீர் சேர்த்தாலும் வெளியே வழியும் நிலையில் இருந்தது.
அப்போது ஹாலில் இருந்த தொலைபேசி அழைத்தது.

போய் பேசிவிட்டு வந்து நீர் அருந்தலாம் என்று நினைத்த ராமு தொலைபேசியிடம் சென்றான்.

எதிர்பாராத விதமாக நீண்ட நாள் காணாத ஒரு நண்பர் அழைத்திருக்கவே அவருடன் நிறைய விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தான் ராமு.

நேரம் ஆக ஆக ஐஸ் துண்டுகள் உருகத் தொடங்கின.

நண்பர்களே இப்போது நீங்கள் கூறுங்கள்.

ராமு பத்து நிமிடம் பேசிவிட்டு வருவதற்குள், எவ்வளவு நீர் கிளாஸில் இருந்து வழிந்து போயிருக்கும்??????????????

பாரதி
01-09-2006, 06:00 PM
ஆர்க்கிமெடீஸ்தான் பதில் சொல்லவேண்டும்..!

mukilan
01-09-2006, 06:43 PM
நீர் கொஞ்சம் கூட வெளியில் வராது. பனிக்கட்டியின் அடர்த்தி தண்ணீரை விடக் குறைவு. அது இடத்தை ஆக்ரமித்தாலும் உருகிடும் நிலையில் வருகையில் நீர் வெளியே செல்லும் அளவிற்கு எல்லாம் வராது. இதற்கும் மேல் விளக்கம் ஆர்க்கிமிடீஸ்தான் கூற வேண்டும்.

aren
04-09-2006, 06:17 AM
முகிலன் அவர்கள் சொல்வது மிகவும் சரி.

arul5318
04-09-2006, 02:55 PM
முகிலனின் கருத்து மிக சரியானது.

pgk53
11-09-2006, 02:11 AM
நீர் கொஞ்சம் கூட வெளியில் வராது. பனிக்கட்டியின் அடர்த்தி தண்ணீரை விடக் குறைவு. அது இடத்தை ஆக்ரமித்தாலும் உருகிடும் நிலையில் வருகையில் நீர் வெளியே செல்லும் அளவிற்கு எல்லாம் வராது. இதற்கும் மேல் விளக்கம் ஆர்க்கிமிடீஸ்தான் கூற வேண்டும்.

நண்பரே நீங்கள் கூறிய விடை சரியானதுதான்.
நீரில் மூழ்கிய பணிக்கட்டியால் விலக்கப்பட்ட நீரின் எடையும் பனிக்கட்டியுடைய எடையும் சரியானது என்ற ஆர்க்மிடீஸின் கொள்கைப்படி, முழுதும் உருகியபின்பும் ஒரு துளி நீர்கூட வெளியே தளும்பாது..

சரி வாருங்கள் ...அடுத்தாற்போல் ஒரு புதிர்க்கதைக்குப் போவோம்.

pgk53
11-09-2006, 02:14 AM
புதிர் எண் 233

முன்னொரு காலத்தில் நற்பண்புகள் நிறைந்த இளவரசன் ஒருவன் இருந்தான்,
அவன் பெயர் மதியழகன்.யார் துன்பம் அடைந்தாலும், அவன் உள்ளம் வருந்துவான். சிறு பூச்சி புழுவுக்குக் கூட எந்த ஒரு துன்பமும் நேரக்கூடாது என்று நினைப்பான். அப்படி யாருக்காவது துன்பம் நேர்ந்தால் அவர்களின் துன்பத்தைப் போக்கினால்தான் அவன் நிம்மதி அடைவான்.
அவன் உலக அனுபவம் பெறுவதற்காக பல நாடுகளையும் சுற்றிப் பார்க்க நினத்தான். அதனால் தன் நாட்டை விட்டுப் புறப்பட்டான். பயணத்தின்போது கொடிய காட்டு வழியே ஒருநாள் அவன் சென்றுகொண்டிருந்தான்.அங்கே ஒரிடத்தில் ஒருவன் கண்ணீர் விட்டு அழுதுகொண்டு புலம்பிக்கொண்டிருந்ததைக் கண்டான்.
அருள் உள்ளம் கொண்ட மதியழகன் இளைஞனே! நீ யார்? உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது?ஏன் இப்படி அழுகிறாய் ?. தயங்காமல் சொல் என்றான்.
ஐயா!!1இன்னும் கொஞ்ச நேரத்தில் என் உயிர் போகப் போகிறது.அது என் தலைவிதி. யாராலும் மாற்ற இயலாது என்று சொல்லி அழுதான்.
நீ நன்றாகத்தானே இருக்கிறாய்? எப்படி உனது உயிர் போகப் போகும்? என்று மதியழகன் கேட்டான்.

அதற்கு அவன், ஐயா! காசியப முனிவருக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி பெயர் காத்ரு. இன்னொருத்தி பெயர் வினதை. ஒரு சாபத்தின் விளைவாக காத்ரு பாம்புகளையும், வினதை கருடனையும் பெற்றெடுத்தார்கள். அந்தக் குழந்தைகள் பகலில் மனிதக் குழந்தைகளாகவும் , இரவில் பாம்பு, கருடனாகவும் வளர்ந்துவந்தார்கள்.
ஒருநாள் காத்ருவும், வினதையும் பல்வேறு விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சு கதிரவனைப் பற்றி வந்தது. அப்போது, கதிரவனின் குதிரைகளின் நிறம் கருப்பு என்றாள் காத்ரு. இல்லை இல்லை---- கதிரவனின் குதிரைகள் ஒளி பொருந்திய வெண்மை நிறம் கொண்டவை என்றாள் வினதை.

கோபம் கொண்ட காத்ரு, நான் கூறுவதையா மறுக்கிறாய்?சரி---யார் சொல்வது உண்மையோ அவருக்கு மற்றவர் அடிமையாக இருக்கவேண்டும். சம்மதமா? என்றாள். வினதையும் ஒப்புக்கொண்டாள்.
சரி நாம் இருவரும் விடிந்ததும் வந்து பார்ப்போம் என்று சென்றார்கள்.

கதிரவனின் குதிரைகள் வெண்மை நிறமுடையவை என்பதை காத்ரி அறிவாள். ஆனால் சூழ்ச்சியினால், வினதையை தன் அடிமையாக்கவேண்டியே இப்பந்தயத்தை அவள் கூறினாள்.அதனால் தனது பாம்பு மகனை அழைத்தாள். நீ சென்று கதிரவனின் குதிரைகளை கருமையாக்கிவிட்டு வா என்று அனுப்பிவைத்தாள்.
தாயின் கட்டளையை ஏற்ற பாம்பு மகன், கடிது சென்று, தனது கடுமையான விஷத்தை, குதிரைகளின் மீது செலுத்த அதனால் குதிரைகள் கருமை நிறம் கொண்டன.
விடிந்தது. குதிரைகள் கருமை நிறத்துடன் வந்ததைக் கண்ட வினதை ஆச்சர்யமடைந்தாள். ஆனால் சொன்ன சொல் மாறாமல் காத்ருவிடம் அடிமையானாள்.

ஆனால் வினதையின் மகன் கருடன் நடந்ததைக் கேள்விப்பட்டு கடும் கோபம் அடைந்தான்.நேராக காத்ருவிடம் வந்தான்.தனது தாயை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கும்படி வேண்டினான்.
தேவர்கள் உலகில் இருந்து அமுதத்தைக் கொண்டு வந்து எனக்குக் கொடுத்தால் உந்தாயை விடுதலை செய்கிறேன் என்றாள் அவள்.
உடனே கருடன் பறந்து சென்று தேலோகத்தை அடைந்தான். அமுதத்தை எடுக்க விடாமல் போர் செய்த காவலர்களைத் தோல்வியுறச் செய்து அமுதத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அப்போது அவனுக்குக் காட்சி தந்த திருமால், கருடா ,உன் வலிமையை மெச்சுகிறேன். தாய்ப் பாசத்தால் நீ செய்த இக்காரியத்தைப் பொறுத்துக்கொள்கிறேன்.உனக்கு என்ன வரம் வேண்டும் என்றார்.
கருடன், மகாப் பிரபோ, என் எதிரியாகிவிட்ட காத்ருவின் வயிற்றில் பிறந்த பாம்பு மகன் செய்த காரியத்தால் என் தாய் அடிமையானதால், இனிமேல் பாம்புகளே எனக்கு உணவாகவேண்டும் என்ற வரம் கொடுங்கள் என்றான்.
திருமாலும் அப்படியே ஆகட்டும் என்றார்.
அப்போது அங்கே வந்த இந்திரன், கருடனே! நீ காத்ருவிடம் கொடுக்கப்போகும் இந்த அமுதத்தை பாம்புகள் உண்டுவிட்டால் அவை சாகாத நிலையை அடைந்துவிடும். திருமாலின் வரமும் பயனில்லாமல் போகுமே? அதனால் நீ காத்ருவிடம் அமுதத்தைக் கொடுத்து உன் தாயை மீட்டதும் அதை நான் கவர்ந்து வந்துவிடுகிறேன் என்றான்.
கருடன் காத்ருவிடம் அமுதம் கொடுத்தான்.தன் தாயை மீட்டான்.பாம்புகள் அமுதம் உண்ணத் தயார் ஆயின. ஆனால் கருடன் வந்து அமுதத்தைக் கவர்ந்து சென்றான்.

அன்று முதல் கருடன் தன் கண்ணில் கண்ட பாம்புளை எல்லாம் விழுங்கத் தொடங்கினான்.இப்படிக் கூட்டம் கூட்டமாக பாம்புகளை அழித்தால் முடிவில் பாம்பினமே இல்லாமல் போய்விடும் என்று பாம்புகளின் அரசன் கருடனிடம் முறையிட்டான்.
கருடனுக்கு உணவாக தினமும் ஒரு பாம்பினை அனுப்பி வைப்பதாக கருடனுடன் ஒப்பந்தம் செய்தார்கள்.கருடனும் ஒப்புக்கொண்டான்.அந்த ஒப்பந்தப்படி இன்று கருடனுக்கு இரையாகப் போவது எனது கடமை.அதனால் இங்கே வந்து கருடனுக்காகக் காத்துக்கொண்டுள்ளேன் என்றான் அந்த பாம்பு வாலிபன்.

எப்படியும் அந்த வாலிபனைக் காப்பாற்ற என்னிய இளவரசன், வாலிபனே! கவலைப் படாதே. இன்று உனக்குப் பதிலாக நான் கருடனுக்கு உணவாகிறேன். என்றான்.

ஆனால் அதற்கு அவன் ஒப்புக்கொள்ளவில்லை. தனது தலையெழுத்தை தானே அனுபவிக்கவேண்டும் என்று கூறியவன், இன்னும் சிறிது நேரத்தில் கருடன் வந்துவிடுவான். அதற்கும் தனது தாயைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றான்.
ஆனால் அவன் திரும்பி வருமுன்பாக கருடன் வந்துவிடவே, இளவரன் கருடனின் முன் சென்றான். அவனைக் கருடன் தனது கூர்மையான அலகினால் கொத்தி, சதையைப் பிய்த்து எடுக்கத் தொடங்கியது.

ஒரு கவளம் உள்ளே போனபின்புதான் தான் உண்பது மனித இளைஞன் என்பதை கருடன் உணர்ந்தது.உடனே,? ஏன் இங்கே வந்தாய்? என்று கேட்டது.

அதற்கு இளவரசன், நான் யாராக இருந்தால் என்ன ? உனக்குத் தேவை சதைதானே. இன்று என்னையே உனது உணவாகக் கொள். என்றான்.
அதற்குள் அங்கே வந்தான் பாம்பின இளைஞன்..தனக்குப் பதிலாகக் கருடனுக்கு உணவாக, ரத்தம் சிந்திக்கொண்டிருந்த இளவரசனைப் பார்த்துப் பதறினான்.

கருடனே, இன்று உனக்கு உணவாக வேண்டியவன் நான்தான். இளவரசனை விட்டுவிடு என்றான்.

அதைக் கேட்ட கருடன், ஒரு நல்ல உள்ளம் கொண்டவனை அறியாமல் துன்பம் கொடுத்துவிட்டேனே.இப் பாவத்தை எப்படிப் போக்குவது என்று உள்ளம் வருந்தினான்.

கருடன் தன்னை உண்பதற்கு முன்பாக இளைஞன் வந்துவிட்டானே என்று இளவரசன் மிகவும் வேதனை அடைந்தான்.

யாரோ ஒரு பாம்புக்காக தன்னைத் தியாகம் செய்யத் துணிந்த இளவரசனைக் காப்பாற்ற எண்ணிய கருடன் மீண்டும் மேலுலகம் சென்று அமுதம் கொண்டு வந்து இளவரசன் மேல் தெளிக்க, அவன் பூரண பொலிவுடன் காயங்கள் எல்லாம் மறைந்து பிரகாசமாக நின்றான்.

அவனைப் பார்த்த கருடன், இளவரசனே, உன் நல்ல உள்ளம் என் பழிவாங்கும் குணத்தை மாற்றிவிட்டது. இனி நான் பாம்புகளை அழிக்கமாட்டேன்.உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் என்றது

கருடாநான் பாம்பு இளைஞனைக் காப்பாற்ற நினைத்தேன். என் எண்ணம் நிறைவேறியது. எனக்காக ஒன்றுமே வேண்டாம். நீ இதுநாள்வரை கொன்று குவித்திருக்கும் இந்த பாம்புகளின் எலும்புகள்மேல் அமுதம் தெளித்து அவைகளை உயிர் பெறச் செய். அதுவே போதும் என்றான்.

கருடனும் அவ்வாறே செய்ய, இறந்த பாம்புகள் அனைத்தும் உயிர் பெற்றன. இளவரனை வாழ்த்திச் சென்றன.

இளைஞனிடமும் கருடனிடமும் விடை பெற்று இளவரசன் தன் பயனத்தைத் தொடர்ந்தான்.

மன்ற நண்பர்களே.இக்கதையில் வரும் கருடன், பாம்பின வாலிபன், இளவரசன் அனைவருமே அருள் உள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இருப்பினும் இவர்கள் மூவர் சிறந்தவர் யார்?
கூறுங்கள்.

akilarasu
11-09-2006, 05:58 AM
சிறு பூச்சி புழுவுக்குக் கூட எந்த ஒரு துன்பமும் நேரக்கூடாது என்று நினைப்பான். அப்படி யாருக்காவது துன்பம் நேர்ந்தால் அவர்களின் துன்பத்தைப் போக்கினால்தான் அவன் நிம்மதி அடைவான்.

இப்படி கருணையுள்ளம் கொண்ட இளவரசன் அந்த பாம்பு இளைஞனிடம் இரக்கங்கொண்டு அவனுக்காக தன்னை உணவாக கருடணுக்கு அர்ப்பணித்தது ஒன்றும் பெரிய விசயமில்லை.

அடுத்தபடியாக பாம்பு இளவரசன், தனக்காக தன்னுயுரை துறக்க துனிந்த இளவரசனுக்கா பரிந்து பேசியதும் ஆச்சரியமில்லை.

ஆனால், பழியுணர்ச்சியால் கட்டுண்டு, பழிக்கு பழி வாங்குவதற்காக பாம்புகளை கொன்று உண்டு வாழ்ந்து வந்த கருடன், இளவரசன் மேல் இரக்கங்கொண்டு அவனுக்கு பழைய உருவத்தை கொடுத்ததுமல்லாமல் அதுவரை தனக்கு இரையாக்கிய பாம்புகளையெல்லாம் மீண்டும் உயிர்ப்பித்த கருடணே கருணையுள்ளங்கொண்டது.

பிஜிகே அண்ணன் தான் எனது முடிவு சரியா அல்லது இல்லையா என கூறவேண்டும்

கண்மணி
12-09-2006, 03:50 PM

ஹை.. விக்கிரமாதித்த மஹாராஜா வேதாளம் கதையெல்லாம் இங்க இருக்கே!!!:D :D :D

pgk53
15-09-2006, 02:53 PM
சபாஷ் அகிலரசு அவர்களே........இனி இதுபோன்ற சுலபமான புதிர்களை பதியவேண்டாம் போலிருக்கின்றது.
அதிரடியாக விடைகளைக் கூறிவிட்டீர்கள்.

அடுத்து ஒரு புதிரைப் போட்டுவிட்டு நான் விடுமுறையில் தாயகம் செல்லுகிறேன்.
ஒரு மாத விடுமுறை.
நாளை அடுத்த புதிரைப் பதிக்கிறேன்.

pgk53
16-09-2006, 05:28 PM
புதிர் எண் - 234

ஒரு சின்னஞ்சிறிய ஊர் அது.
அந்த ஊரில் ஒரு அம்மன் கோவில்.
அம்மன் சிலைக்கு நாள்தோரும் இளநீர் அபிஷேகம் நடக்கும்.

இதற்கான இளநீர் அந்த ஊரில் இருந்த ஒரு பண்ணையாரின் தோட்டத்தில் இருந்த ஒரு உயர் வகையான தென்னை மரத்தில் இருந்து பெரிய இளநீர் ஒன்று பறிக்கப்படும்.

அதன் மேல் முனையை மட்டும் சீவி அப்படியே அபிஷேகம் செய்வதற்காக அனுப்பி வைப்பார்கள்.

இந்த வழக்கம் பலகாலமாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
ஒருநாள் அபிஷேகத்துக்கு வந்த இளநீரை கையில் எடுத்துக்கொண்டு பூசாரி மிகவும் கோபமுடன் பண்ணையாரிடம் வந்தார்.

பன்னையார் அவர்களே! இந்த இளநீரில் இளநீருக்குப் பதிலாக தண்ணீர் உள்ளது.உங்கள் வேலைக்காரன் இளநீரைக் குடித்துவிட்டு, அதற்குப் பதிலாக தண்ணீரை ஊற்றிக் கொண்டுவந்து கொடுத்திருக்கின்றான்.இது தெய்வக் குற்றம் என்பது உங்களுக்குத் தெரிந்ததே!நீங்கள் உடனடியாக இதை விசாரித்து வேலைக்காரனுக்குத் தகுந்த தண்டனை கொடுக்கவேண்டும். அத்துடன் அம்மனுக்கு பரிகார பூசைகளும் நடத்தவேண்டும்! என்றார்.

உடனே பண்ணையார் வேலைக்காரனை அழைத்து இதுபற்றி விசாரித்தார்.
ஐயா! தெரியாமல் நான் இப்படிச் செய்துவிட்டேன்.அந்த மரத்தின் இளநீர் மிகவும் சுவையாக இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். அதனால் ஆசையை அடக்க இயலாமல் இளநீரைக் குடித்துவிட்டு, தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டேன். என்னை யாரும் கண்டு பிடிக்கமாட்டார்கள் என்று நினைத்தேன். என்னை மன்னியுங்கள். இனிமேல் இதுபோல் செய்யமாட்டேன் என்று பண்ணையாரின் காலைப் பிடித்து அழுதான்.

உன்னால் தெய்வ குற்றம் ஏற்பட்டுவிட்டது. அதைக் கண்டு பிடித்தவர் பூசாரிதான். அதனால் நீ பூசாரியின் அர்ச்சனைத் தட்டில் ஆயிரம் ரூபாய் தட்சினையாக வைத்துவிடு என்றார் பண்ணையார்..

ஐயா! என்னிடம் அத்தனை பணம் இல்லை.நான் பரம ஏழை.என்னை மன்னித்துவிடுங்கள் என்றான் வேலைக்காரன்.

அப்போது அங்கே மூத்த வயதுள்ள ஒரு அறிஞர் அங்கே வந்தார். நடந்தவற்றைக் கேள்விப்பட்டார்.பிறகு பண்ணையாரைப் பார்த்து, பண்ணையாரே வேலைக்காரன் தவறு செய்தது வாஸ்தவந்தான் என்றாலும் , நீங்கள் தவறான தீர்ப்பை வழங்கிவிட்டீர்கள்.சரியான தீர்ப்பை நான் கூறட்டுமா? என்றார்.

அந்த அறிஞர் வழங்கிய தீர்ப்பைக் கேட்டு ஊர் மக்கள் அனைவரும் அவரைப் பாராட்டினார்கள்.

மன்ற நன்பர்களே-------அறிஞர் என்ன தீர்ப்பு வழங்கியிருப்பார்.?????????????

mukilan
16-09-2006, 10:16 PM
பண்ணையாரே தனது வேலைக்காரனுக்கான அபராதத் தொகையைச் செலுத்தியிருப்பார்.

சுபன்
16-09-2006, 10:25 PM
பூசாரிக்கு எப்படி அது தண்ணீரென தெரியும் அபிஷேகம் செய்யும் போது பூசாரி இளநீரை குடித்தா அபிஷேகம் செய்வார்??? :rolleyes: :rolleyes: :rolleyes: அதனால் பூசாரியும் இளநீரை குடித்திருக்கிறாரோ?? அதனால் அவருக்கு தண்டனை விதிக்க சொல்லி அந்த அறிஞர் சொல்லி இருப்பார்

இளசு
16-09-2006, 10:27 PM
அபிஷேகம் செய்யும் போது பூசாரி இளநீரை குடித்தா அபிஷேகம் செய்வார்??? :rolleyes: :rolleyes: :rolleyes:

அதேதான் சுபன்... பாயிண்ட்டை புடிச்சுட்டீங்க.

(முகிலனும் இதை ஒப்புக்குவார்..)

விடுப்பு சுகமாய் அமைய வாழ்த்துகள் பிஜிகே அவர்களே..!

akilarasu
21-09-2006, 05:27 AM
நான் ஒரு புதிர் இடுகிறேன்

நீங்கள் ஒரு இருட்டறையில் உள்ளீர்கள். அந்த அறையில் ஒரு மெழுகுவர்த்தி, ஒரு விறகு அடுப்பு மற்றும் ஒரு எரிவாயூ விளக்கு உள்ளது. உங்களிடம் ஒரே ஒரு தீக்குச்சிதான் உள்ளது. அப்படியென்றால் முதலில் எதை நீங்கள் பற்றவைப்பீர்கள்

pradeepkt
21-09-2006, 05:43 AM
தீக்குச்சியைத்தாங்க... :)
ஹி ஹி
உங்கள் புதிர்களைத் தனியாக இன்னொரு திரியில் போடுங்களேன்...

akilarasu
25-09-2006, 09:42 AM
தீக்குச்சியைத்தாங்க... :)
ஹி ஹி
உங்கள் புதிர்களைத் தனியாக இன்னொரு திரியில் போடுங்களேன்...

இன்னொரு திரியில் இடுமளவுக்கு என்னிடம் சரக்கு இல்லை. ஆகையால் இங்கேயே ஒரு புதிரை இடலாம் என நினைக்கிறேன்

அனுமதியுண்டா?

pradeepkt
25-09-2006, 10:27 AM
அட என்னாங்க இதுக்குன்னு தனியாச் சரக்கைத் தயாரா பண்ண முடியும்... இதே திரியில் இடலாம்.. ஆனால் பிஜிகே அண்ணா பல புதிர்களை எண்ணிக்கையோடு வைத்திருக்கிறார். அதனால் எனக்கென்னவோ நீங்கள் இன்னொரு திரி துவங்கினால் நலம் என்று தோன்றுகிறது.

pgk53
25-10-2006, 02:00 AM
அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்...[.கொஞ்சம் தாமதமாக]
அனைவருக்கும் எனது ரமதான் வாழ்த்துக்கள்.
விடுமுறை இனிதாகக் கழிந்து மகிழ்வுடன் வேலையிடம் வந்தடைந்தேன்.
{சிக்கன் குனியாவிடம் இருந்து தப்பித்து வந்தோம் என்ற மகிழ்வுதான்}

இனி புதிர்களைத் தொடர்கிறேன்.

pgk53
25-10-2006, 02:02 AM
பூசாரிக்கு எப்படி அது தண்ணீரென தெரியும் அபிஷேகம் செய்யும் போது பூசாரி இளநீரை குடித்தா அபிஷேகம் செய்வார்??? :rolleyes: :rolleyes: :rolleyes: அதனால் பூசாரியும் இளநீரை குடித்திருக்கிறாரோ?? அதனால் அவருக்கு தண்டனை விதிக்க சொல்லி அந்த அறிஞர் சொல்லி இருப்பார்

வாழ்த்துக்கள் சுபன்.
சரியான கோணத்தில் சிந்தனை செய்து விடையைக் கூறிவிட்டீர்கள்.
விரைவில் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
25-10-2006, 02:04 AM
இன்னொரு திரியில் இடுமளவுக்கு என்னிடம் சரக்கு இல்லை. ஆகையால் இங்கேயே ஒரு புதிரை இடலாம் என நினைக்கிறேன்

அனுமதியுண்டா?

அகிலரசு அவர்களே உங்கள் புதிர்களையும் இங்கேயே பதிவு செய்வதில் எனக்கு மகிழ்ச்சிதான். பதிவு செய்யுங்களேன்.

pgk53
26-10-2006, 04:59 PM
புதிர் எண்:- 235

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவனது தோட்டத்தில் பூசனிக் கொடிகளை நட்டான். செழித்து வளர்ந்த கொடிகள் தோட்டம் முழுவதும் படர்ந்தன.
இந்த முறை சரியான விளைச்சல் வரும் என்று மகிழ்வுடன் இருந்தான்.

திடீரெனெ அவனது மாமியார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருக்கின்றார்கள் என்ற செய்தி வந்தது. அதனால் வெகு தொலைவில் இருந்த அவனது மாமியார் வீட்டுக்குப் போக முடிவு செய்தான்.

அந்தக் காலத்தில் இப்போதுபோல் வாகன வசதிகள் இல்லை. அதனால் அவன் மாமியாரின் ஊர் சென்று திரும்ப ஒரு மாத காலம் ஆகலாம் என்பதினால் தனது வேலைக்காரனை அழைத்து,தோட்டத்தை பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றான்.

அடுத்த வீட்டுக்காரன் ஒரு வஞ்சகன். அவன் தோட்டத்தில் பூத்து பிஞ்சாக இருந்த பூசனிக் காய்களைப் பார்த்தான். வேலைக்காரனை அழைத்து, எப்படியும் உன் எஜமான் திரும்பிவர குறைந்தது ஒருமாத காலம் ஆகிவிடும் அதுவரை விளையும் பூசணிக்காய்கள் வீணாகிவிடும் அதனால் நாம் இருவரும் அந்தக் காய்களைப் பறித்து அடுத்து உள்ள சந்தையில் விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டினான்.

வேலைக்காரனும் காசுக்கு ஆசைப்பட்டு அதற்கு ஒத்துக்கொண்டான்.

பக்கத்து வீட்டுக்காரன் தனது மாட்டு வண்டியை தோட்டத்துக்கு ஓட்டிவருவான். அதிகாலை நேரத்தில் காய்களைப் பறித்து வண்டியில் ஏற்றி பொழுது விடியும் முன்பாக ஒரு மணி நேர வண்டிப் பயணத்தில் இருக்கும் சந்தைக்குக் கொண்டு போய் பூசனிக்காய்களை விற்று வருவார்கள். அதிகாலை நேரம் என்பதினால் யாரும் அவர்கள் இவ்வாறு திருட்டுத்தனம் செய்வதை கவனிக்கவில்லை.

இப்படியே தொடர்ந்து செய்துவந்தார்கள்.

மாமியாரின் ஊர் சென்ற உழவன் , மாமியார் காலமாகிவிட்டதினால், இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்து சடங்குகளை முடித்துவிட்டு ஊர் திரும்பினான்.

ஏராளமான பூசணிக்காய்கள் காய்த்து தோட்டம் நிறைந்து கிடக்கும். உடனே அனைத்தையும் பறித்து விற்கவேண்டும் என்று ஆர்வமுடன் வந்து சேர்ந்தான்.

தோட்டத்துக்குப் போனவன் அதிர்ச்சி அடைந்தான் பூசனிக்காய்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. வேலைக்காரனை அழைத்து பூசனிக்காய்கள் எங்கே என்று கேட்டான். அவனோ தனக்கு எதுவுமே தெரியாது என்றான். அக்கம் பக்கம் உழவன் விசாரித்ததில் யாருக்குமே பூசனிக்காய்களைப் பற்ரித் தெரிந்திருக்கவில்லை.

அதனால் அவன் ஊர்ப் பஞ்சாயத்தில் இதுபற்றி முறையிட்டான். கூட்டம் கூடியது . அந்த ஊரில் இருந்த ஒரு வயது முதிர்ந்து அனுபவசாலியான ஒருவர்தான் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார்.

உழவன் தனது பக்கத்து வீட்டுக்காரன் மேலும், வேலைக்காரன் மேலும்தான் தனக்குச் சந்தேகம் இருப்பதாகக் கூறினான்.

அதனால் அவர்களை அழைத்து தலைவர் விசாரித்தார்.
தாங்கள் செய்த திருட்டை யாரும் பார்க்கவில்லை என்பதால் அவர்கள் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்தார்கள்.

இவர்கள் உண்மையானவர்களா இல்லையா என்பதை எப்படிக்கண்டு பிடிப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தார் தலைவர்.பிறகு பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்து, நாளை அதிகாலையில் நான் உனது வீட்டுக்கு வருவேன். நீ உனது மாடுகளை வண்டியில் பூட்டி தயாராக வைத்திரு என்று கூறினார்.அவனும் ஒத்துக்கொண்டான்.

அதிகாலையில் தலைவர் வந்தார். வண்டியை தயாராக வைத்திருந்தான். ஏறி அமர்ந்துகொண்டு, பூசனித் தோட்டத்துக்கு ஓட்டச் சொன்னார். ஒன்றும் புரியாமல் அவனும் தோட்டத்துக்குச் செலுத்தினான். மாடுகளை அவிழ்த்துவிடாமல் அப்படியே நிறுத்த சொன்னார்.
அங்கே உழவனையும் வேலையாளையும் நிற்கச் சொல்லியிருந்தார்.
வேலைக்காரனிடம் சில பூசனிகளைப் பறித்து வண்டியில் ஏற்றச் சொன்னார். அவனும் அதே போல் செய்தான்.

பிறகு பக்கத்து விட்டுக்காரனுடைய வாயைக் கட்டசொன்னார். கட்டப்பட்டது.

கைகளையும் காலையும் கட்டச் சொன்னார்.

அதே போல் கட்டியதும் அவனைத் தூக்கு வண்டியின் முன்பகுதியில் மாடுகளைச் செலுத்தும் இடத்தில் உட்காரவைத்து வண்டியோடு சேர்த்து கட்டச் சொன்னார்.

அதே போல் கட்டிவைத்தார்கள்.

பிறகு தலைவர் செய்த ஒரு செயலால், ஒரு மணிநேரத்திற்குள் பக்கத்துவீட்டுக்காரன் தானும் வேலைக்காரனும் சேர்ந்து பூசனிக்கய்களை திருடி விற்றதாக ஒத்துக்கொண்டான்.

மன்ற நண்பர்களே தலைவர் என்ன யுக்தியைக் கையாண்டு திருடனை, தனது திருட்டை ஒத்துக்கொள்ளும்படி செய்தார். கூறுங்களேன்.?????????????????????????????

அல்லிராணி
26-10-2006, 05:10 PM

வண்டியில உட்காத்தி வைக்கிற வரைக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை அன்பரே! அலிஉத்து களைத்துப் போய் மாட்டு வண்டியில் ஏறிப்படுத்து குறட்டை விட மாடுகள் தாமாகவே வீட்டுக்கு வந்து சேர்க்கிற அனுபவம் பெற்றவர் மத்தியில் இவ்வளவு பெரிய க்ளூவா?

மாடுகள் வண்டியை சந்தைக்கு கொண்டு செல்ல பூசணி வாங்க வந்தவர்கள் மொய்க்க.. பூசணி திருடியவனுக்கு சனி பிடித்தாட்ட..

பரஞ்சோதி
26-10-2006, 07:59 PM
பழக்கப்பட்ட மாடுகள் இருட்டான நேரத்திலும் பழக்கதோஷத்தில் சந்தையை யாரும் குரல் கொடுக்காமலேயே போயிருக்கும்.

pgk53
30-10-2006, 02:36 PM
அல்லிராணி அவர்கள் அடிதடியாக விடை கூறி அசத்திவிட்டார்.

வாழ்க---வளர்க!!!!
வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
30-10-2006, 02:38 PM
புதிர் எண்:- 236

சீன நாட்டுப் பேரறிஞராக விளங்கினார் கன்பூசியஸ். அனைவருமே அவரைப் புகழ்ந்தார்கள். அவரது அறிவாற்றலை மெச்சினார்கள்.

தன் அறிவிற்கு எல்லையே இல்லை. தன்னால் எந்தக் கேள்விக்கும் விடை அளிக்க முடியும் என்ற கர்வத்துடன் இருந்தார் அவர்.

ஒருமுறை சிறிய ஊர் ஒன்ற்றின் வழியே அவர் சென்றுகொண்டிருந்தார். அங்கே வீதியில் மக்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள்.ஏன் இப்படிக் கூடியுள்ளார்கள் என்று கன்பூசியஸ் தெரிந்துகொள்ள விரும்பினார். கூட்டத்துக்குள் சென்றார்.

அங்கே இரண்டு சிறுவர்கள் காரசாரமாக வாதிட்டுக்கொண்டிருந்தார்கள்.
இதை எதிர்பாராத கன்பூசியஸ் எரிச்சல் அடைந்தார். இரண்டு சிறுவர்களின் வாதத்தில் அப்படி என்ன பெரிய விஷயம் இருந்துவிட முடியும். அதைக் கூட்டமாக மக்கள் நின்று கேட்டுக்கொண்டிருக்கின்றார்களே என்ற கோபமும் அவருக்கு ஏற்பட்டது.

கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரிடம், ஏன் அவர்களது பிரச்சினைக்கு ஒரு முடிவு கூறாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், தன்னால் அவர்களது பிரச்சினைக்குத் தீர்வு கூற இயலவில்லை என்றார்.

இதைக் கேட்டதும் கன்பூசியஸ் அலட்சியமாகச் சிரித்தபடியே, அனைவரும் விலகுங்கள் நான் இதற்கு ஒரு முடிவு கான்கிறேன் அன்று கூறிவிட்டு அந்தச் சிறுவர்களை அழைத்தார்.

உங்களுக்குள் என்ன பிரச்சினை என்று கேட்டார்

உடனே ஒரு சிறுவன், அய்யா!!!!!நான் காலை நேரத்தில் சூரியன் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று கூறினேன். ஆனால் அவன் இல்லை, மதியம் சூரியன் உச்சிக்கு வரும்போதுதான் பூமிக்கு அருகில் இருக்கிறது என்கிறான் என்றான்.

இந்த சிறுவர்களிடம் இப்படி ஒரு பெரிய பிரச்சினை வரும் என்று கன்பூசியஸ் எதிர்பார்க்காததினால் ஒரு கனம் திகைத்துதான் போனார்.என்ன பதில் கூறுவது என்று யோசித்தார்.

பிறகு சிறுவனே , நீ கூறுவது தவறு.
அவன் கூறுவதுதான் உண்மை.
மதியம்தான் சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் என்பது அறிவியல் உண்மை என்றார்.

.
அதற்கு அவன், ஐயா!!!!அருகில் இருக்கும் பொருள்தான் பெரியதாகத் தெரியும். தொலைவில் உள்ள பொருள் சிறியதாகத் தெரியும் . காலையில் சூரியன் பெரியதாகத் தெரிவதினால், காலையில்தான் சூரியன் பூமிக்கு அருகில் இருக்கின்றது என்பதுதான் எனது வாதம் என்றான்.

இதற்கு என்ன பதில் கூறுவது என்று தினறிய கன்பூசியஸ்,சிறுவனே!!! உனது வாதமும் ஒரு வகையில் ஒத்துக்கொள்ளக் கூடியதுதான், என்றவர் மற்ற சிறுவனைப் பார்த்து,
உனது வாதம் என்ன?
ஏன் காலையில் சூரியன் பூமிக்கு அருகில் இல்லை என்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு அவன், பெரியவரே. ஒரு நிமிடம் சிந்தியுங்கள். அருகில் உள்ள பொருளிடம் இருந்துதான் வெப்பம் அதிகமாக வரும் சரிதானா? என்றான்.

கன்பூசியஸும் , அதுதான் அறிவியல் உண்மை என்று ஒத்துக்கொண்டார்.

உடனே அவன், அப்படியானால் காலையில் சூரியன் பூமிக்கு அருகில் இருப்பதினால்தான் பெரியதாகத் தெரிகிறது என்கிறானே??? அப்படியானால் காலையில்தானே வெப்பம் மிகுதியாக இருக்கவேண்டும்?இதுதான் என் வாதம் என்றான்.

இந்த இரு சிறுவர்களுடைய வாதமும் அறிவியல் உண்மைக்கு ஏற்புடையதாகவே இருக்கிறதே என்று ஆலோசித்த கன்பூசியஸ் அவர்களுடைய வாதத்துக்கு என்ன முடிவு கூறியிருப்பார்???????????????

நண்பர்களே கூறுங்களேன்.!!!!!!!!!!!!!!!!!!!!

பரஞ்சோதி
31-10-2006, 11:52 AM
ஆளை விடுங்க சாமின்னு ...

இதை சொன்னது பரம்ஸ், கன்பூசியஸ் அல்ல, அவர் பெயரிலேயே குழப்பம் இருக்குதே...

தாமரை
02-11-2006, 07:04 AM
புதிர் எண்:- 236

இந்த சிறுவர்களிடம் இப்படி ஒரு பெரிய பிரச்சினை வரும் என்று கன்பூசியஸ் எதிர்பார்க்காததினால் ஒரு கனம் திகைத்துதான் போனார்.என்ன பதில் கூறுவது என்று யோசித்தார்.

பிறகு சிறுவனே , நீ கூறுவது தவறு.
அவன் கூறுவதுதான் உண்மை.
மதியம்தான் சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் என்பது அறிவியல் உண்மை என்றார்.

.
அதற்கு அவன், ஐயா!!!!அருகில் இருக்கும் பொருள்தான் பெரியதாகத் தெரியும். தொலைவில் உள்ள பொருள் சிறியதாகத் தெரியும் . காலையில் சூரியன் பெரியதாகத் தெரிவதினால், காலையில்தான் சூரியன் பூமிக்கு அருகில் இருக்கின்றது என்பதுதான் எனது வாதம் என்றான்.

இதற்கு என்ன பதில் கூறுவது என்று தினறிய கன்பூசியஸ்,சிறுவனே!!! உனது வாதமும் ஒரு வகையில் ஒத்துக்கொள்ளக் கூடியதுதான், என்றவர் மற்ற சிறுவனைப் பார்த்து,
உனது வாதம் என்ன?
ஏன் காலையில் சூரியன் பூமிக்கு அருகில் இல்லை என்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு அவன், பெரியவரே. ஒரு நிமிடம் சிந்தியுங்கள். அருகில் உள்ள பொருளிடம் இருந்துதான் வெப்பம் அதிகமாக வரும் சரிதானா? என்றான்.

கன்பூசியஸும் , அதுதான் அறிவியல் உண்மை என்று ஒத்துக்கொண்டார்.

உடனே அவன், அப்படியானால் காலையில் சூரியன் பூமிக்கு அருகில் இருப்பதினால்தான் பெரியதாகத் தெரிகிறது என்கிறானே??? அப்படியானால் காலையில்தானே வெப்பம் மிகுதியாக இருக்கவேண்டும்?இதுதான் என் வாதம் என்றான்.

இந்த இரு சிறுவர்களுடைய வாதமும் அறிவியல் உண்மைக்கு ஏற்புடையதாகவே இருக்கிறதே என்று ஆலோசித்த கன்பூசியஸ் அவர்களுடைய வாதத்துக்கு என்ன முடிவு கூறியிருப்பார்???????????????

நண்பர்களே கூறுங்களேன்.!!!!!!!!!!!!!!!!!!!!

காலையில் சூரியன் கண்ணுக்கு அருகிலும் மதியம் சூரியன் உடலுக்கு அருகிலும் இருக்கிறது..

pgk53
03-11-2006, 01:17 PM
என்ன நண்பர்களே????????
யாருமே இந்தப் பக்கமே வரவில்லையே????/
{பரம்ஸ் மற்றும் செல்வனைத்தவிர}.

ஓவியா
03-11-2006, 03:04 PM
என்ன நண்பர்களே????????
யாருமே இந்தப் பக்கமே வரவில்லையே????/
{பரம்ஸ் மற்றும் செல்வனைத்தவிர}.

நான் வந்தேனே.
ஆனால் விடைதான் தெரியவில்லை சார்...

pgk53
05-11-2006, 08:24 AM
நண்பர்களே----கொஞ்சம் சிந்தனை செய்தால் இதற்கு ஒரு சுலபமான விடை இருக்கின்றது..

பரஞ்சோதி
06-11-2006, 04:51 PM
அண்ணா, இது தான் பிரச்சனை.

சில நேரங்களில் உங்க புதிர்களுக்கு ஓவராக மண்டை உடைத்துக் கொள்வதால் எளிமையான விடைகள் தோன்ற மாட்டேங்குது.

ஓவியா சகோதரி, சுலபமான விடையாம், நீங்க பள்ளியில் படிக்கும் போது சொல்லுகிற மாதிரி சொல்லி மார்க் வாங்கிட்டு போங்க, வேற ஏதாவது கிடைச்சா, அதுக்கு நான் பொறுப்பு அல்ல.

பென்ஸ்
06-11-2006, 05:06 PM
பிஜிகே ... நீங்களே சொல்லிருங்க....
ஆனா.... பிட்டானியா பிப்டி பிப்டி என்று சொல்ல கூடாது சரியா....

ஓவியா
06-11-2006, 05:31 PM
அண்ணா, இது தான் பிரச்சனை.

சில நேரங்களில் உங்க புதிர்களுக்கு ஓவராக மண்டை உடைத்துக் கொள்வதால் எளிமையான விடைகள் தோன்ற மாட்டேங்குது.

ஓவியா சகோதரி,
சுலபமான விடையாம்,
நீங்க பள்ளியில் படிக்கும் போது சொல்லுகிற மாதிரி சொல்லி மார்க் வாங்கிட்டு போங்க,
வேற ஏதாவது கிடைச்சா, அதுக்கு நான் பொறுப்பு அல்ல.

:D :D :D
பரம்ஸ் அண்ணா,
நானும் பல முறை இந்த பகுதிக்கு வந்து
எப்படியாவது ஒரு விடையையாவது சொல்லிவிட வேண்டும்னு முயற்ச்சி செய்த்துள்ளேன்

ஆனால் ஒவ்வொரு முறையும் கேள்வியை படித்து முடித்தவுடனே.....
நன்றி வணக்கம் சொல்லிடுவேன்

aren
13-11-2006, 11:10 AM
காலையில் சூரியன் வரும்பொழுது பூமியின் ஒரு பகுதி மறைத்துவிடுகிறது, ஆகையால் வெப்பம் குறைவாக இருக்கிறது, ஆனால் மதியம் பூமிக்கு நேர்மேலே சூரியன் இருப்பதால் சூரியனை எதுவும் மறைப்பதில்லை, ஆகையால் வெப்பம் அதிகமாக இருக்கிறது. தீப்பந்தம் ஏற்றி அதன்மூலம் இந்த ஆராய்ச்சியை செய்து காட்டி இரண்டும் ஒரே அளவுதான் உள்ளது, ஆனால் பூமியும் சூரியனும் நேரத்திற்குதகுந்தமாதிரி பெரியதாகவும் சிறியதாகவும் தெரிகிறது என்று சொல்லி சமாதானப்படுத்தியிருக்கலாம்.

பிகேஜி அவர்களே, ரொம்ப கஷ்டமாக கேட்டு ஏன் இப்படி மக்களை வாட்டுகிறீர்கள். உங்களுக்கு தெரிந்த விடையை இங்கே சொல்லி மக்களை இந்த மண்டை உளைச்சலிலிருந்து காப்பாற்றுங்கள்.

பரஞ்சோதி
14-11-2006, 08:54 AM
ஆரென் அண்ணா, விடை தான் எளிது என்று பிஜிகே அண்ணா சொல்லிட்டாரே!

பின்ன ஏன், நம்ம அறிஞர் ரேஞ்சுக்கு போய் ஆராய்ச்சி செய்து பதில் சொல்லியிருக்கீங்க.

ஏலே மன்மதா! உனக்கு வேலை வருதுலே! ஆரென் அண்ணாவின் ஆராய்ச்சி கூடத்தை படம் பிடிலே!

பரஞ்சோதி
14-11-2006, 08:56 AM
:D :D :D
பரம்ஸ் அண்ணா,
நானும் பல முறை இந்த பகுதிக்கு வந்து
எப்படியாவது ஒரு விடையையாவது சொல்லிவிட வேண்டும்னு முயற்ச்சி செய்த்துள்ளேன்

ஆனால் ஒவ்வொரு முறையும் கேள்வியை படித்து முடித்தவுடனே.....
நன்றி வணக்கம் சொல்லிடுவேன்

ஓவியா சகோதரி! அப்படியா! ரொம்ப ஆச்சரியமாக இருக்குதே!

சரி, இதோ உங்களுக்காக ஒரு புதிர்.

தமிழ்மன்றத்தில் ஒரே ஒருவர் மட்டும் புதிர் படித்த பின்னர் விடை சொல்லாமல் _____ ______ சொல்லுவார், அது என்ன?

எங்கே விடை சொல்லுங்க பார்ப்போம். இந்த சரியான விடை வருமுன்னு நம்புகிறேன்.

ஓவியா
14-11-2006, 06:15 PM

அஹ அண்ணா....எனக்கே முதல் பரிசு....

அந்த விடை..அந்த விடை
சொல்லிடுவேன்...ம்ம் சொல்லிடுவேன்....இப்ப சொல்ல போறேன்.....

தமிழ்மன்றத்தில் ஒரே ஒருவர் மட்டும்
புதிர் படித்த பின்னர் விடை சொல்லாமல் _____ ______ சொல்லுவார், அது என்ன?

அய்யோ தெரியவில்லையே.......:eek: :eek:

பேந்த பேந்த விழிக்கும்
பாச தங்கை
ஓவியா

மதி
15-11-2006, 01:24 AM
வாழ்த்துக்கள் ஓவியாக்கா..! ஹிஹி..

aren
15-11-2006, 08:20 AM
பதில் சொல்லாமல் பிகேஜி இருப்பதைப் பார்த்தால், அவருக்கே பதில் தெரியவில்லை போலிருக்கிறது.

pgk53
15-11-2006, 02:25 PM
அன்பு நண்பர்களே, நீண்ட நாட்களாக மன்றத்துக்கு வராமைக்கு பொருத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
வேலைப்பளு அதிகமாக இருந்ததினால் நேரம் கிடைப்பது அரிதாகிவிட்டது.

மேலும் எனக்கு ஒரு உத்தியோக உயர்வு கிடைத்துள்ளதினால் பொறுப்புகள் அதிகரித்து ஒட்டது. . அதனாலும் தாமதம் ஆனது.
மேலும் எனது விடுமுறை சுழற்சியும் மாறிவிட்டது.
ஒரு மாதம் வேலை செய்தால் ஒருமாத விடுமுறையில் செல்லும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.

புதிர் எண் 236 ன் விடை மிகவும் சுலபமானது.

அதாவது இதற்கு யாராலும் சரியான விடை கூற இயலாது..

இது பெரும் வல்லுனர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பாரடாக்ஸ் என்னும் வகையைச் சேர்ந்த புதிர்.

இதுபோன்ற பாரடாக்ஸ் புதிர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

ஒரு கிராமத்தில் நாவிதன் ஒருவன் இருந்தான்.அவன் ஒரு விசித்திரமான கொள்கை வைத்திருந்தான். அதாவது அவன் எந்த நாவிதனுக்கும் சவரம் செய்யமாட்டான். அவனும் நாவிதனிடம் சவரம் செய்துகொள்ளமாட்டான்.

அப்படியானால் அவன் எப்படி அவனது முகத்தை சவரம் செய்வான்????

அதனால் மூளையைக் குழப்பிக்கொண்ட நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

ஓவியா
15-11-2006, 05:21 PM
மேலும் எனக்கு ஒரு உத்தியோக உயர்வு கிடைத்துள்ளதினால் பொறுப்புகள் அதிகரித்து ஒட்டது. . .[/FONT]

வாழ்த்துக்கள் பிஜிகே ஐம்பத்தி மூன்று

மதி
16-11-2006, 02:12 AM
பிஜிகே அவர்களே தங்களது பணி உயர்வுக்கு வாழ்த்துக்கள்..!

aren
16-11-2006, 02:49 AM
அவன் தாடி வைத்துள்ளான். பின்னர் எதற்கு சவரம் செய்ய வேண்டும்.

aren
16-11-2006, 02:49 AM
பிகேஜி அவர்களின் பதவி உயர்விற்கு என் வாழ்த்துக்கள்.

தாமரை
16-11-2006, 03:00 AM
அவன் தாடி வைத்துள்ளான். பின்னர் எதற்கு சவரம் செய்ய வேண்டும்.

அதானே வச்சிருந்தா எடுத்திற வேண்டியதுதானே.:p :p :p :p . வளர்ந்தாதானே வழிக்கிற வேலை...:D :D :D
இல்லியா சரவணா:eek: :eek: :eek:

பரஞ்சோதி
16-11-2006, 06:45 AM
ஆஹா! மிகவும் மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துகள் அண்ணா.

பொதுவாக இது போன்ற மகிழ்ச்சியான செய்திகளை போனில் சொல்வீங்க, ஏன் எனக்கு சொல்லலை. :(

பரஞ்சோதி
16-11-2006, 06:50 AM
இதுபோன்ற பாரடாக்ஸ் புதிர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

ஒரு கிராமத்தில் நாவிதன் ஒருவன் இருந்தான்.அவன் ஒரு விசித்திரமான கொள்கை வைத்திருந்தான். அதாவது அவன் எந்த நாவிதனுக்கும் சவரம் செய்யமாட்டான். அவனும் நாவிதனிடம் சவரம் செய்துகொள்ளமாட்டான்.

அப்படியானால் அவன் எப்படி அவனது முகத்தை சவரம் செய்வான்????

அதனால் மூளையைக் குழப்பிக்கொண்ட நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

அண்ணா இது பாரடாக்ஸ் புதிருன்னு போட்டு வாங்கிடாதீங்க.

சரி ஒரு கடி விடை : அவன் வழக்கம் போல் கண்ணாடியை பார்த்து தான் சவரம் செய்வான். அவன் அவனை நாவிதனாகவே கருதவில்லை :)

pradeepkt
16-11-2006, 10:41 AM
வாழ்த்துகள் பிஜிகே அண்ணா

ஓவியா
16-11-2006, 02:26 PM
அஹ அண்ணா....எனக்கே முதல் பரிசு....

அந்த விடை..அந்த விடை
சொல்லிடுவேன்...ம்ம் சொல்லிடுவேன்....இப்ப சொல்ல போறேன்.....

தமிழ்மன்றத்தில் ஒரே ஒருவர் மட்டும்
புதிர் படித்த பின்னர் விடை சொல்லாமல் __________ ________சொல்லுவார், அது என்ன?

அய்யோ தெரியவில்லையே.......:eek: :eek:

பேந்த பேந்த விழிக்கும்
பாச தங்கை
ஓவியா

பரம்ஸ் அண்ணா,
உங்க கேள்விக்கு விடையை சொல்லுங்க....

sarcharan
17-11-2006, 12:32 PM
அதானே வச்சிருந்தா எடுத்திற வேண்டியதுதானே.:p :p :p :p . வளர்ந்தாதானே வழிக்கிற வேலை...:D :D :D
இல்லியா சரவணா:eek: :eek: :eek:

ஹ்ம்ம் இதுக்கு என்னைத்தான் உதாரணமா சொல்லணுமா????:mad: :mad:

sarcharan
17-11-2006, 12:33 PM
ஒரு கிராமத்தில் நாவிதன் ஒருவன் இருந்தான்.அவன் ஒரு விசித்திரமான கொள்கை வைத்திருந்தான். அதாவது அவன் எந்த நாவிதனுக்கும் சவரம் செய்யமாட்டான். அவனும் நாவிதனிடம் சவரம் செய்துகொள்ளமாட்டான்.

அப்படியானால் அவன் எப்படி அவனது முகத்தை சவரம் செய்வான்????

அவன் தலை வழுக்கையோ??? அல்லது அந்த ஊரில் அவனைத்தவிர வேறு நாவிதனே இல்லாதிருக்கும்.

பென்ஸ்
17-11-2006, 12:57 PM
ஹ்ம்ம் இதுக்கு என்னைத்தான் உதாரணமா சொல்லணுமா????:mad: :mad:

தம்பி.. நீங்க யாருங்க .. ????
உங்களை நான் இதுக்கு முன்னால எங்கயோ பாத்திருகிறேனே????

ஓவியா
17-11-2006, 01:26 PM
ஹ்ம்ம் இதுக்கு என்னைத்தான் உதாரணமா சொல்லணுமா????:mad: :mad:

அடிக்கடி வந்து தாடிய இல்லே இல்லே தலையை காட்டினா இப்படியெல்லம் நடக்காது அம்பி....:D

நல்வரவு சரவணன்

pgk53
18-11-2006, 04:42 PM
புதிர் எண்:- 237

பொய்கை நாட்டு அரசவை கூடியது.
அரியணையில் அரசன் வீற்றிருந்தான்.

பல நாடுகளுக்கும் சென்று புகழ் பெற்ற கலிங்க நாட்டு அறிஞர் ஒருவர் அரசவைக்கு வந்தார்.

அவரது அருமை பெருமைகளியும் புத்தி கூர்மையையும் அறிந்த அரசன், அவரை மரியாதையுடன் வரவேற்று அமரச் செய்தான்.

அறிஞர் அரசனை வணங்கினார்.

அரசன் உலகம் போற்றும் அறிஞரே! உம் வருகையால் பொய்கை நாடே பெருமை பெருகின்றது.இந்த வைர மாலையை எமது அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று விலல உயர்ந்த வைர மாலையை பரிசாக வழங்கினான்.

அதை ஏற்றுக்கொண்டபடியே அறிஞர், அரசே! நான் இங்கே அறிவுப் போட்டியிட வந்துள்ளேன் என்றார்.

அரசன் கொஞ்சம் திகைப்படைந்தான். பிறகு சமாளித்துக்கொண்டு, அறிஞரே! இங்குள்ள அறிஞர்கள் உம்மோடு வாதிடுவார்கள். அவர்களிடம் நீர் தோற்றுவிட்டால் , நான் உமக்களித்த இந்த வைரமாலையை வென்றவர்க்குக் கொடுத்துவிடவேண்டும். ?
சம்மதமா? என்றான்.

அறிஞரும் அதற்கு ஒத்துக்கொண்டார்.

அரசன் தனது அவையில் இருந்த அறிஞர்களைப் பார்த்தான். அனைவரும் தலையைக் குனிந்து அமர்ந்திருந்தார்கள். அரசன் புரிந்துகொண்டான்.

பிறகு அறிஞரைப் பார்த்து, அறிஞரே உம்முடன் போட்டியிட இங்கு யாருமே தயாராக இல்லை என்று நினைக்கிறேன். அதனால் வைரமாலையை நீரே வைத்துக்கொள்ளும் என்றான்.

அப்போது அவையின் ஒரு மூலையில் இருந்து அரசே! நான் போட்டியிடுகிறேன். என்ற குரல் எழுந்தது.

குரல் வந்த திசையில் அரசன் திரும்பினான்.
அங்கே அரன்மை கோமாளி ஒருவன் நின்றுகொண்டிருந்தான்.

முன்னால் வந்த கோமாளி, அரசே நான் இந்த அறிஞரை ஐந்து கேள்விகள் கேட்பேன்.அந்த ஐந்து கேள்விகளுக்கும் இந்த அறி அறிஞர் சரியான விடை கூறக்கூடாது. தவறான விடைகளையே கூறவேண்டும்.ஏதேனும் ஒரு கேள்விக்கு சரியான விடையைக் கூறிவிட்டால் அவர் தோற்றதாக ஒத்துக்கொள்ளவேண்டும்.இந்தப் போட்டி அவருக்குச் சம்மதமா என்று கேளுங்கள் என்றான்.

உடனே அறிஞர் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.
அரண்மனைக் கோமாளி ஏதோ வேடிக்கை செய்கிறான் என்று அரசன் நினைத்தான்.

போட்டி தொடங்கலாம் என்றான் அரசன்.
போட்டி தொடங்கியது.

அறிஞரே! நீர் இந்த நாட்டுக் குடிமகன்தானே?

அறிஞர் ஒருகனம் யோசித்தார். என்ன இது இவன் என்னை மடையன் என்று நினைத்துக்கொண்டானா? இப்படி வேடிக்கையாகக் கேள்வி கேட்கிறானே?.
என்று நினைத்தபடியே.. ஆமாம்..ஆமாம்இந்த நாட்டுக் குடிமக்களும் நானும் ஒருவன் என்றார்.

சரி அடுத்த கேள்வி. இந்த பொய்கை நாட்டை மகத நாட்டு மன்னன் ஆளுகிறான்.. சரிதானா?

அறிஞர் அதற்கு ஆமாம் ..ஆமாம் மகத நாட்டு மன்னந்தான் இந்த நாட்டை ஆளுகிறான் என்றார்.

சரி அடுத்த கேள்வி. உமக்கு பரிசாகக் கொடுத்தது வைமாலை சரிதானா?

இல்லைஇல்லை இது முத்து மாலை.என்று கூறி, ,தவறான பதிலை சரியாகக் கூறிவிட்டோம் என்று தன்னைத் தானே மெச்சிக்கொண்டார் அறிஞர்.,இன்னும் இரண்டு கேள்விகளையும் சமாளித்துவிட்டால் இந்தப் பொய்கை நாட்டையும் வென்றுவிடலாம் என்று கணக்குப் போட்டார்.

இப்போது குறுஞ்சிரிப்புடன் அறிஞரைப் பார்த்த கோமாளி அடுத்தாற்போல் ஒரு மிக மிகச் சாதாரணமான கேள்வியைக் கேட்டான்.

அறிஞன் தவறான பதிலைக் கூறி போட்டியில் தோற்றுவிட்டான்.

அப்படி அறிஞன் தோற்கும் அளவுக்கு கோமாளி என்ன கேள்வியைக் கேட்டிருப்பான்.???????

மன்ற நண்பர்களே நீண்ட நாட்களுக்ப் பிறகு வரும் இந்தப் புதிருக்கு சரியான விடைக் கூறுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் ----

உங்கள் அன்பன்.
கோபாலகிருஷ்ணன்

பென்ஸ்
19-11-2006, 11:42 AM
பிஜிகே.. கொஞ்சம் நேரம் எடுத்து கொள்ளுகிறென்....
எதோ தெரியிறமாதி இருக்கு... ஆனா தெரியலை...
கொஞ்சம் தெரியுது... கொஞ்சமும் தெரியலை...

kathalan
19-11-2006, 07:11 PM
பிஜிகே.. கொஞ்சம் நேரம் எடுத்து கொள்ளுகிறென்....
எதோ தெரியிறமாதி இருக்கு... ஆனா தெரியலை...
கொஞ்சம் தெரியுது... கொஞ்சமும் தெரியலை...
முதல் எனக்கு கொஞ்சம் தெரிந்ததும் உங்கள் பதிலை பார்த பின் ஒன்றும் தெரியவில்லை

பரஞ்சோதி
20-11-2006, 04:27 PM
அறிஞரே! உங்களுக்கு பரிசு கொடுத்தவர் பொய்கை நாட்டு மன்னர் தானே என்று கேட்டிருப்பான்.

(பின்ன என்ன, எல்லோரும் தெரியலை தெரியலைன்னு சொன்னா எப்படி, சும்மா கும்சா அடிச்சா தானே, நாமும் வேற வழியில் விடை காண முடியும்).

மதி
21-11-2006, 01:50 AM
"இந்த போட்டியில் நீர் தானே வெற்றி பெற போகின்றீர்?"...

சுபன்
22-11-2006, 01:11 AM
இந்த போட்டியில் நீர் வெற்றி பெற மாட்டீர்தானே??!! என கேட்டு இருப்பார்!

pgk53
24-11-2006, 04:11 PM
அன்பு நண்பர்களே...........

நாளை நான் விடுமுறையில் தாயகம் செல்ல உள்ளேன்.
இந்த புதிருக்கான விடையை பதிவு செய்து வையுங்கள்.
தாயகத்தில் வாய்ப்பிருந்தால் மன்றம் வருகிறேன்.

அதுவரை அனைவருக்கும் வணக்கம்.

ஓவியா
24-11-2006, 04:17 PM
அன்பு நண்பர்களே...........

நாளை நான் விடுமுறையில் தாயகம் செல்ல உள்ளேன்.
இந்த புதிருக்கான விடையை பதிவு செய்து வையுங்கள்.
தாயகத்தில் வாய்ப்பிருந்தால் மன்றம் வருகிறேன்.

அதுவரை அனைவருக்கும் வணக்கம்.

மன்னிக்கவும் நான் அப்பீட்டு

நன்பர்கள் கட்டாயம் விடைகான முயற்ச்சி செய்வார்கள்

சந்தோஷமாக தாயகம் போய் வரவும் அண்ணா....

வாழ்த்துக்கள்

pgk53
25-12-2006, 12:51 AM
அன்பு நண்பர்களே ....அனைவருக்கும் எனது கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

நேற்றுதான் விடுமுறை முடிந்து பணியிடம் திரும்பினேன்.
புதிருக்கான விடையை யாருமே கூறவில்லை என்பதைக் கண்டேன்.அதனால் நானே கூறிவிடுகிறேன்.
------------------------------------

அறிஞரே, இது நான் உங்களிடன் கேட்கப் போகும் மூன்றாவது கேள்வி.தவறான பதில் கூறத் தயாரா? என்றான்.

அறிஞர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். ஏற்கனவே மூன்று கேள்விகள் முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு கேள்விகளுக்கும் தவறான பதிலைச் சொல்லி போட்டியில் வெற்றிபெறலாம் என்று கணக்குப் போட்டிருந்த அவர் தன்னையும் அறியாது. இல்லைஇல்லைஇது நான்காவது கேள்வி என்று சரியான பதிலைக் கூறிவிட்டார்.

கோமாளி புன்சிரிப்புடன் அரசனைப் பார்த்தான். அவையில் கூடியிருந்தோரும் கோமாளி வெற்றி பெற்றதை உணர்ந்து பலத்த கரகோஷம் செய்தார்கள். அறிஞன் தோல்வியை ஒத்துக்கொண்டு சபையை விட்டு வெளியேறினான்.

பரஞ்சோதி
25-12-2006, 05:08 AM
கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான். கோமாளி படுபயங்கரமான ஆளாக இருக்கார். ஒருவேளை நான் இதை சரியாக சொல்லியிருந்தால் என்னையும் கோமாளின்னு நீங்க கிண்டல் பண்ணியிருப்பீங்க சொல்லலைன்னு சொல்லி தப்பிச்சிக்கிறேன்.

அண்ணா, அடுத்த கேள்வி கேளுங்க?

gayathri.jagannathan
29-12-2006, 10:39 AM
பிஜிகே அவர்களே

கடந்த ஒரு வாரமாக தங்களுடைய புதிர்களை படித்து வருகிறேன்... அனைத்தும் மிகவும் அருமை.... இனி நீங்கள் போடப்போகும் புதிர்ககளுக்கு விடை கூற முயற்சிக்கிறேன்... மன்ற மக்களின் பங்களிப்பும் பதில்களும் மிகச்சுவையாய் இருந்தன...

pgk53
31-12-2006, 02:03 PM
அன்பு நண்பர்களே அனைவருக்கும் எனது இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சரி வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்.

pgk53
31-12-2006, 02:05 PM
புதிர் எண்:- 239

ஒரு ஊரில் உழவன் ஒருவன் இருந்தான் அவனுக்குச் சோம்பேறியான மனைவி ஒருவள் இருந்தாள்.
நாள்தோரும் அவன் காலையில் வயலுக்குச் செல்வான்.நண்பகல் உணவை அவனது மனைவி எடுத்து வருவாள்.
சோம்பேறியான அவள் நேரத்துக்கு உணவை ஒருநாளும் எடுத்துச் சென்றதில்லை.
சில நாட்களில் உணவே எடுத்துவரவும் மாட்டாள்.
ஒருநாள் மாலை நேரம் வேலைகள் முடிந்து வீடு திரும்பிய உழவன், தான் வாங்கி வந்திருந்த கோழியை மனைவிடம் கொடுத்தான்.

இதோ பார் எனக்குக் கோழிக்கறி என்றால் மிகுந்த விருப்பம். அதனால் நாளைக்கு ஒரு படி அரிசி போட்டு சோறாக்கி, அத்துடன் இந்தக் கோழியையும் நன்றாகச் சமைத்து நண்பகல் நேரம் வயலுக்குக் கொண்டுவா.கொஞ்சம் தாமதம் ஆனால்கூட உன்னைக் கொன்றுவிடுவேன். ஜாக்கிரதை என்று எச்சரிக்கை விடுத்தான்.
மறுநாள் எப்போதும்போல் அவன் வயலுக்குக் காலையில் போய்விட்டான்.அவன் சென்றபிறகு அவள் மறுபடியும் படுக்கையில் படுத்து உறங்கினாள்.
நேரம் போனதே தெரியாமல் உறங்கிவிட்டாள்.
நண்பகல் நேரத்தில்தான் அவள் கண்விழித்தாள்.
தனது கணவன் விடுத்த எச்சரிக்கை அவள் நினைவுக்கு வந்தது.
ஐயோ..அவருக்குக் கோபம் வந்தால் சொன்னதுபோலவே செய்துவிடுவாரே?
இனி எவ்வளவு வேகமாகச் சமைத்தாலும் நண்பகல் உணவு நேரத்துக்குக் கொண்டு செல்லமுடியாதே?என்று மிக்க கவலை அடைந்தாள்.
கொஞ்ச நேரம் சிந்தித்தாள்.
ஒரு வழி அவளுக்குப் புலப்பட்டது.

ஒரு கூடையை எடுத்தாள்.
அதற்குள் இரண்டு பாத்திரங்களை வைத்தாள்.
ஒரு பாத்திரத்தில் கோழியை வைத்தாள். அடுத்த பாத்திரத்தில் அரிசியை கொட்டிவைத்தாள்.
பிறகு அந்தக் கூடையை நன்றாக மூடினாள்.
கூடையைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு வயலை நோக்கி நடந்தாள்.
வேகமாக நடக்கவில்லை .ஆடி அசைந்து மெதுவாகவே நடந்தாள்.

உழவனுக்கோ , கோழிக்கறியை நினைத்தபடியே வேலை செய்ததினால் சீக்கிரமே பசி எடுத்துவிட்டது. அத்துடன் அவள் வரத் தாமதம் ஆனதால் அவள்மீது மிகுந்த கோபம் ஏற்பட்டது.

பொறுமை இழந்த அவன், சோம்பேறிக்கழுதை. அவளுக்கு இன்று தகுந்த பாடம் கற்ற்பிக்கவேண்டும் என்று கருவியபடியே அவளுக்காகக் காத்திருந்தான்.
அவள் ஆடி அசைந்து வந்ததைக் கண்டு தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் மேல் பாய்ந்தான்.
ஏய் .நீ என்னடி நினைத்துக்கொண்டிருக்கின்றாய்?உன்னை நாலு அடி அடித்தால்தான் என் மனம் அமைதியுறும் என்று கடுமையாகத் திட்டினான்.

உடனே அழுதாள். பிறகு அவனைப் பார்த்து சில வார்த்தைகளைக் கூறினாள்.

பிறகு அவன் கூடையைத் திறந்து பார்த்தான்.
அதற்குள் அரிசியையும் கோழியையும் பார்த்தான்.
இருந்தும் அவன் கோபம் கொள்வதற்குப் பதில் மகிழ்ச்சியே அடைந்தான்.

பிறகு மனைவியைப் பார்த்து, என் தங்கமே!!!! இனி நான் உன்னை அடிக்கவோ கோபமாகப் பேசவோ மாட்டேன். என்றான்.

மன்ற நன்பர்களே..உழவன் உயிருள்ள கோழியையும், அரிசியையும் கண்டபின்னும் தனது பசியையும் மறந்து, கோபம் கொள்ளாமல், அவளை ஏன் பாராட்டி அன்புடன் பேசினான்.????????????????????

இளசு
31-12-2006, 05:41 PM
பிஜிகே அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்..

விடுப்பு சுகமாய்க் கழிந்ததா?

---------------------

''நான் நெறியுள்ள மனைவி என்பது சத்தியமானால், சமைத்தவை மீண்டும் அரிசி, கோழியாய் மாறட்டும்..'' என்றாளோ ?!!!!

ஆதவா
01-01-2007, 10:09 AM
அன்பர்களே!! ஏதோ எனக்குத் தெரிந்த ஒரே ஒரு புதிரை இங்கே காட்டுகிறேன்.

3 கோடுகள் போட்டு ஒரு சதுரம் போட முடியுமா?

விடை சொல்லுங்கள்..

pgk53
08-01-2007, 01:19 PM
புதிர் எண்- 240

ஓடிக்கொண்டிருந்த ஒரு ரயிலில், முதல் பெட்டியிலும், கடைசி பெட்டியிலும் கொலைகள் நடந்தது. போலீஸ் வந்தது.

ஓடும் ரயிலில் நடந்த இரட்டைக் கொலைகளை காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தினார்.

மொத்தம் அந்த இரயிலில் 20 பெட்டிகள் இனைக்கப்பட்டிருந்தன.

இஞ்சினில் இருந்து பத்தாவது பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் ஆய்வாளரின் விசாரனைக்கு வந்தார்.

அவரை ஆய்வாளர் உனக்கு என்ன தெரியும் என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பரிசோதகர், ஐயா..இரயில் மணிக்கு 100 மைல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. சரியாக எட்டு மணியளவில் ஒரே ஒரு வெடிச்சத்தம் பலமாக எனக்குக் கேட்டது. . அதனால் எட்டு மணியளவில் அந்தக் கொலை நடந்துள்ளது. ஆனால் இரயிலின் எந்தப் பக்கம் நடந்த கொலை என்று எனக்குத் தெரியாது.அத்துடன் இரண்டாவது கொலை எப்போது நடந்தது என்றும் எனக்குத் தெரியாது என்றார்.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி இரண்டு கொலைகளுமே அரை நிமிட இடைவேளையில் நடந்துள்ளது என்றுள்ளது. ஆனால் உங்களுக்கு ஒரு வெடிச்சப்தமே கேட்டுள்ளது. அதனால் இரண்டாவது கொலை எப்படி நடந்தது. என்று கூறியபடியே ஆய்வாளர் தலையைப் பிடித்துக்கொண்டார்.

அப்போது அங்கே வந்த சிறப்பு ஆய்வாளர் வீர்சிங், பரிசோதகர் சரியாகத்தான் கூறியுள்ளார்.அரை நிமிட இடைவேளையில் இரண்டு பெட்டிகளில் நடந்த கொலை பரிசோதகரது வாக்குமூலத்தில் இருந்து நிரூபணம் ஆகிவிட்டது என்றார்.

ஆய்வாளருக்கு ஒன்றும் புரியவில்லை.

வீர்சிங் ஏன் அப்படிச் சொன்னார். மன்ற நண்பர்கள் ஆய்வாளருக்கு விளக்கம் கூறுவார்களா?????????

pgk53
08-01-2007, 01:21 PM
பிஜிகே அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்..

விடுப்பு சுகமாய்க் கழிந்ததா?

---------------------

''நான் நெறியுள்ள மனைவி என்பது சத்தியமானால், சமைத்தவை மீண்டும் அரிசி, கோழியாய் மாறட்டும்..'' என்றாளோ ?!!!!

நண்பர் இளசு அவர்களே.....விடுமுறை நல்லபடியாகக் கழிந்தது.மிக்க நன்றி.
அத்துடன் நீங்கள் சரியான விடையைக் கூறி அசத்திவிட்டீர்கள்.

ஆதவா
08-01-2007, 02:22 PM
புதிர் எண்- 240

ஓடிக்கொண்டிருந்த ஒரு ரயிலில், முதல் பெட்டியிலும், கடைசி பெட்டியிலும் கொலைகள் நடந்தது. போலீஸ் வந்தது.

ஓடும் ரயிலில் நடந்த இரட்டைக் கொலைகளை காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தினார்.

மொத்தம் அந்த இரயிலில் 20 பெட்டிகள் இனைக்கப்பட்டிருந்தன.

இஞ்சினில் இருந்து பத்தாவது பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் ஆய்வாளரின் விசாரனைக்கு வந்தார்.

அவரை ஆய்வாளர் உனக்கு என்ன தெரியும் என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பரிசோதகர், ஐயா..இரயில் மணிக்கு 100 மைல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. சரியாக எட்டு மணியளவில் ஒரே ஒரு வெடிச்சத்தம் பலமாக எனக்குக் கேட்டது. . அதனால் எட்டு மணியளவில் அந்தக் கொலை நடந்துள்ளது. ஆனால் இரயிலின் எந்தப் பக்கம் நடந்த கொலை என்று எனக்குத் தெரியாது.அத்துடன் இரண்டாவது கொலை எப்போது நடந்தது என்றும் எனக்குத் தெரியாது என்றார்.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி இரண்டு கொலைகளுமே அரை நிமிட இடைவேளையில் நடந்துள்ளது என்றுள்ளது. ஆனால் உங்களுக்கு ஒரு வெடிச்சப்தமே கேட்டுள்ளது. அதனால் இரண்டாவது கொலை எப்படி நடந்தது. என்று கூறியபடியே ஆய்வாளர் தலையைப் பிடித்துக்கொண்டார்.

அப்போது அங்கே வந்த சிறப்பு ஆய்வாளர் வீர்சிங், பரிசோதகர் சரியாகத்தான் கூறியுள்ளார்.அரை நிமிட இடைவேளையில் இரண்டு பெட்டிகளில் நடந்த கொலை பரிசோதகரது வாக்குமூலத்தில் இருந்து நிரூபணம் ஆகிவிட்டது என்றார்.

ஆய்வாளருக்கு ஒன்றும் புரியவில்லை.

வீர்சிங் ஏன் அப்படிச் சொன்னார். மன்ற நண்பர்கள் ஆய்வாளருக்கு விளக்கம் கூறுவார்களா?????????

விடையா? ஆய்வாளர் செல் நம்பர் கொடுத்தீங்கன்னா வசதி...

அறிஞர்
08-01-2007, 02:45 PM
புதிர் எண்- 240

ஆய்வாளருக்கு ஒன்றும் புரியவில்லை.

வீர்சிங் ஏன் அப்படிச் சொன்னார். மன்ற நண்பர்கள் ஆய்வாளருக்கு விளக்கம் கூறுவார்களா????????? முதல் கொலை கடைசி பெட்டியில் நடந்துள்ளது. இரண்டாம் கொலை முதல் பெட்டியில் நடந்துள்ளது. ரயில் 100 மைல் வேகத்தில் செல்லும் போது, இரண்டு கொலைகளால் ஏற்பட்ட சப்தம் (ஒலி) ஒரே நேரத்தில் 10வது பெட்டியில் கேட்டுள்ளது.

pgk53
17-01-2007, 12:52 AM
அன்புள்ள நண்பர்களே அனைவருக்கும் எனது பொங்கள் வாழ்த்துக்கள்.

வேலைப் பளு அதிகமாக இருந்ததினால் மன்றத்துக்கு வர இயலாமல் போனது.

240தாவது புதிருக்கு சரியான விடை கூறிய அறிஞருக்கு எனது வாழ்த்துக்கள் .

சரி வாருங்கள் அடுத்த புதிரைப் பார்ப்போம்

pgk53
17-01-2007, 12:53 AM
புதிர் எண்- 241.

அக்பர் சக்கரவர்த்திக்கு, தனது அரசவையில் மிகவும் புத்திசாலி யார் என்று தெரிந்துகொள்ள ஆசை வந்தது.
பீர்பல் ஏற்கனவே பலமுறை தான்தான் அரசரின் சபையிலேயே சிறந்த புத்திசாலி என்று நிரூபித்துள்ளார். இருப்பினும் அக்பர் மீண்டும் ஒருமுறை அதை பரிசோதிக்க நினைத்தார்.

ஒரு இடுப்பில் கட்டும் துண்டு{டவல்} ஒன்றைக் கொண்டு வந்தார். அரசவையில் கூடியிருந்தோரைப் பார்த்து, இந்தத் துண்டினால் எனது தலைமுதல் பாதம்வரை ஒரே சமயத்தில் மூடவேண்டும் என்று சொன்னார்.யார் இதைச் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்கப்படும் என்றும் கூறினார். பிறகு ஒரு கட்டிலை வரவழைத்து அதில் படுத்துக்கொண்டார்.

ஒவ்வொருவராக வந்தார்கள் துண்டை எடுத்து போர்த்த முயற்சி செய்தார்கள்.
எவ்வளவுதான் முயன்றாலும் தலையில் இருந்து முழங்கால் வரைதான் அந்தத் துண்டின் நீளம் இருந்தது.

முயற்சி செய்த அனைவரும் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பினார்கள்.

அனைவரும் முயற்சி செய்தபின்பு பீர்பல் வந்தார். அதே துண்டை ஒருகணம் யோசனையுடன் பார்த்துவிட்டு, அரசரின் தலைமுதல் பாதம்வரை மறைக்கும்படி போர்த்திவிட்டார்.

அனைவரும் இதைக் கண்டு கரகோஷம் செய்து பாராட்டினார்கள்.

அரசரும் மகிழ்ந்து, பீர்பலுக்கு பொற்கிழி பரிசளித்துப் பாராட்டினார்.

மன்ற நண்பர்களே-------பீர்பலால் மட்டும் அதே துண்டை வைத்து எப்படி அக்பர் கேட்டுக்கொண்டபடி போர்த்திவிட முடிந்தது???????????

pgk53
24-01-2007, 09:14 AM
அன்பு மன்ற நண்பர்களே.
என்ன ஆனது யாருமே இந்தப் புதிருக்கு விடை கூறவோ அல்லது விமர்சனம் செய்யவதற்காவது வரவில்லையே???????

மிகவும் கடினமான புதிரும் அல்லவே!!!!!!!!

ஆதவா
24-01-2007, 09:26 AM
புதிர் எண்- 241.

அக்பர் சக்கரவர்த்திக்கு, தனது அரசவையில் மிகவும் புத்திசாலி யார் என்று தெரிந்துகொள்ள ஆசை வந்தது.
பீர்பல் ஏற்கனவே பலமுறை தான்தான் அரசரின் சபையிலேயே சிறந்த புத்திசாலி என்று நிரூபித்துள்ளார். இருப்பினும் அக்பர் மீண்டும் ஒருமுறை அதை பரிசோதிக்க நினைத்தார்.

ஒரு இடுப்பில் கட்டும் துண்டு{டவல்} ஒன்றைக் கொண்டு வந்தார். அரசவையில் கூடியிருந்தோரைப் பார்த்து, இந்தத் துண்டினால் எனது தலைமுதல் பாதம்வரை ஒரே சமயத்தில் மூடவேண்டும் என்று சொன்னார்.யார் இதைச் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்கப்படும் என்றும் கூறினார். பிறகு ஒரு கட்டிலை வரவழைத்து அதில் படுத்துக்கொண்டார்.

ஒவ்வொருவராக வந்தார்கள் துண்டை எடுத்து போர்த்த முயற்சி செய்தார்கள்.
எவ்வளவுதான் முயன்றாலும் தலையில் இருந்து முழங்கால் வரைதான் அந்தத் துண்டின் நீளம் இருந்தது.

முயற்சி செய்த அனைவரும் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பினார்கள்.

அனைவரும் முயற்சி செய்தபின்பு பீர்பல் வந்தார். அதே துண்டை ஒருகணம் யோசனையுடன் பார்த்துவிட்டு, அரசரின் தலைமுதல் பாதம்வரை மறைக்கும்படி போர்த்திவிட்டார்.

அனைவரும் இதைக் கண்டு கரகோஷம் செய்து பாராட்டினார்கள்.

அரசரும் மகிழ்ந்து, பீர்பலுக்கு பொற்கிழி பரிசளித்துப் பாராட்டினார்.

மன்ற நண்பர்களே-------பீர்பலால் மட்டும் அதே துண்டை வைத்து எப்படி அக்பர் கேட்டுக்கொண்டபடி போர்த்திவிட முடிந்தது???????????

அய்யோஒ தெரியலயே@!!!! ரெம்ப யோசிச்சும் தெரியாமத்தான் போகுது

ஆதவா
24-01-2007, 09:29 AM
மண்டை குழம்புதுப்பா!!! சீக்கிரம் சொல்லுங்க.............

மனோஜ்
24-01-2007, 12:22 PM
புதிர் எண்- 241.

அக்பர் சக்கரவர்த்திக்கு, தனது அரசவையில் மிகவும் புத்திசாலி யார் என்று தெரிந்துகொள்ள ஆசை வந்தது.
பீர்பல் ஏற்கனவே பலமுறை தான்தான் அரசரின் சபையிலேயே சிறந்த புத்திசாலி என்று நிரூபித்துள்ளார். இருப்பினும் அக்பர் மீண்டும் ஒருமுறை அதை பரிசோதிக்க நினைத்தார்.

ஒரு இடுப்பில் கட்டும் துண்டு{டவல்} ஒன்றைக் கொண்டு வந்தார். அரசவையில் கூடியிருந்தோரைப் பார்த்து, இந்தத் துண்டினால் எனது தலைமுதல் பாதம்வரை ஒரே சமயத்தில் மூடவேண்டும் என்று சொன்னார்.யார் இதைச் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்கப்படும் என்றும் கூறினார். பிறகு ஒரு கட்டிலை வரவழைத்து அதில் படுத்துக்கொண்டார்.

ஒவ்வொருவராக வந்தார்கள் துண்டை எடுத்து போர்த்த முயற்சி செய்தார்கள்.
எவ்வளவுதான் முயன்றாலும் தலையில் இருந்து முழங்கால் வரைதான் அந்தத் துண்டின் நீளம் இருந்தது.

முயற்சி செய்த அனைவரும் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பினார்கள்.

அனைவரும் முயற்சி செய்தபின்பு பீர்பல் வந்தார். அதே துண்டை ஒருகணம் யோசனையுடன் பார்த்துவிட்டு, அரசரின் தலைமுதல் பாதம்வரை மறைக்கும்படி போர்த்திவிட்டார்.

அனைவரும் இதைக் கண்டு கரகோஷம் செய்து பாராட்டினார்கள்.

அரசரும் மகிழ்ந்து, பீர்பலுக்கு பொற்கிழி பரிசளித்துப் பாராட்டினார்.

மன்ற நண்பர்களே-------பீர்பலால் மட்டும் அதே துண்டை வைத்து எப்படி அக்பர் கேட்டுக்கொண்டபடி போர்த்திவிட முடிந்தது???????????
துண்டை இரண்டா கிழுச்சு போத்திருப்பாருனு நினைக்கிறோன்

ஷீ-நிசி
24-01-2007, 03:09 PM
துண்டை இரண்டா கிழுச்சு போத்திருப்பாருனு நினைக்கிறோன்

இது சரியான விடைனு நினைக்கிறேன். மனோஜ் எப்படிபா இப்படியெல்லாம் யோசிக்கிற. இது மட்டும் சரியா இருந்துட்டா நீங்க தான் தமிழ் மன்றத்தின் பீர் பால்.

gragavan
24-01-2007, 03:39 PM
இது சரியான விடைனு நினைக்கிறேன். மனோஜ் எப்படிபா இப்படியெல்லாம் யோசிக்கிற. இது மட்டும் சரியா இருந்துட்டா நீங்க தான் தமிழ் மன்றத்தின் பீர் பால்.சொல்லவேயில்லை!

pgk53
25-01-2007, 04:12 PM
அன்பு நண்பர்களே, இதுவரை யாருமே சரியான விடைக்கு அருகில்கூட வரவில்லை.
பரவாயில்லை. முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமே இல்லை.
நான் நாளை ஒரு மாத விடுமுறையில் தாயகம் புறப்பட உள்ளேன்.
அத்துடன் மேலும் ஒரு சிறிய புதிரையும் போட்டுவிட்டே செல்கிறேன்.
அதற்கும் சேர்த்து விடையைக் கண்டுபிடித்து வைகவும்.

ஆதவா
25-01-2007, 04:16 PM
ஒருவேளை கட்டிலில் அக்பரை உட்கார வைத்திருப்பாரோ/????

pgk53
25-01-2007, 04:17 PM
புதிர் எண் 242

தெற்கு ஆப்பிரிக்க நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் நீக்ரோக்களைப் பற்றி நீங்கள் அனைவருமே அறிவீர்கள்.

பளபளக்கும் கருப்பு நிறம் கொண்டவர்கள்..

கருப்பும் ஒரு அழகென்று கூறுவார்கள்.
இப்போது புதிர் அதுவல்ல.

அந்தக் கன்னங்கரிய நீக்ரோ தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தையின் பற்கள் என்ன வண்ணத்தில் இருக்கும்????????????

கூறுங்களேன்.

ஆதவா
25-01-2007, 04:24 PM
ஹி ஹிஹ்ஹீஈ.... நான் ரொம்ப புத்திசாலிங்கோ.... பிறந்த குழந்தைக்கு பற்களேது?????

tamil81
27-01-2007, 02:58 PM
ஹி ஹிஹ்ஹீஈ.... நான் ரொம்ப புத்திசாலிங்கோ.... பிறந்த குழந்தைக்கு பற்களேது?????

ஆதவரே அதுங்காட்டியும் உடைச்சிட்டீங்களே
போங்க

மனோஜ்
27-01-2007, 04:31 PM
இது சரியான விடைனு நினைக்கிறேன். மனோஜ் எப்படிபா இப்படியெல்லாம் யோசிக்கிற. இது மட்டும் சரியா இருந்துட்டா நீங்க தான் தமிழ் மன்றத்தின் பீர் பால்.
பதவி நல்லா இருக்கும் ஷீ-நிசி ஆனா மன்றத்து உறுப்பினர்கள் எல்லா என்ன சோதிக்க வேன்டி வரும் அதா கஷ்டமா இருக்கு:D :D :D

புதிர் எண் 242

தெற்கு ஆப்பிரிக்க நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் நீக்ரோக்களைப் பற்றி நீங்கள் அனைவருமே அறிவீர்கள்.

பளபளக்கும் கருப்பு நிறம் கொண்டவர்கள்..

கருப்பும் ஒரு அழகென்று கூறுவார்கள்.
இப்போது புதிர் அதுவல்ல.

அந்தக் கன்னங்கரிய நீக்ரோ தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தையின் பற்கள் என்ன வண்ணத்தில் இருக்கும்????????????
ஆதவன் செல்வது சரியான விடை

lenram80
27-01-2007, 06:01 PM
புதிர் எண்- 241.

அக்பர் சக்கரவர்த்திக்கு, தனது அரசவையில் மிகவும் புத்திசாலி யார் என்று தெரிந்துகொள்ள ஆசை வந்தது.
பீர்பல் ஏற்கனவே பலமுறை தான்தான் அரசரின் சபையிலேயே சிறந்த புத்திசாலி என்று நிரூபித்துள்ளார். இருப்பினும் அக்பர் மீண்டும் ஒருமுறை அதை பரிசோதிக்க நினைத்தார்.

ஒரு இடுப்பில் கட்டும் துண்டு{டவல்} ஒன்றைக் கொண்டு வந்தார். அரசவையில் கூடியிருந்தோரைப் பார்த்து, இந்தத் துண்டினால் எனது தலைமுதல் பாதம்வரை ஒரே சமயத்தில் மூடவேண்டும் என்று சொன்னார்.யார் இதைச் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்கப்படும் என்றும் கூறினார். பிறகு ஒரு கட்டிலை வரவழைத்து அதில் படுத்துக்கொண்டார்.

ஒவ்வொருவராக வந்தார்கள் துண்டை எடுத்து போர்த்த முயற்சி செய்தார்கள்.
எவ்வளவுதான் முயன்றாலும் தலையில் இருந்து முழங்கால் வரைதான் அந்தத் துண்டின் நீளம் இருந்தது.

முயற்சி செய்த அனைவரும் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பினார்கள்.

அனைவரும் முயற்சி செய்தபின்பு பீர்பல் வந்தார். அதே துண்டை ஒருகணம் யோசனையுடன் பார்த்துவிட்டு, அரசரின் தலைமுதல் பாதம்வரை மறைக்கும்படி போர்த்திவிட்டார்.

அனைவரும் இதைக் கண்டு கரகோஷம் செய்து பாராட்டினார்கள்.

அரசரும் மகிழ்ந்து, பீர்பலுக்கு பொற்கிழி பரிசளித்துப் பாராட்டினார்.

மன்ற நண்பர்களே-------பீர்பலால் மட்டும் அதே துண்டை வைத்து எப்படி அக்பர் கேட்டுக்கொண்டபடி போர்த்திவிட முடிந்தது???????????

இதற்கு 3 விடைகளைச் சொல்லுவேன். சரியா, தவறா தெரியாது.

விடை 1:-
துண்டின் நிழலின் மூலம் தலை முதல் கால் வரை மூடி இருக்கலாம்.
ஒரு விளக்கை அக்பர் முன்னால் வைத்து, துண்டை இருவருக்கும் நடுவில் பிடித்து, அதன் நிழலை வைத்து மூடி இருக்கலாம்.

விடை 2:-
அக்பரின் தலையில் உள்ள் க்ரிடத்தையும், அவரது செறுப்பையும் எடுத்து, இது இரண்டையும் துண்டை வைத்து மூடி இருக்கலாம்.

விடை 3:-
"அக்பர்" என்று சிலெட்டிலே, ஓலையிலே எழுதி, அதை மூடி இருக்கலாம்.

இதைத் தான் நான் பண்ணியிருப்பேன். அது என்ன பண்ணிச்சோ? யாருக்குத் தெரியும்? :)
(காமெடிக்குத் தான், 'அவர்'க்குப் பதில் 'அது' என்ற சொல்லை பயன் படுத்தி இருக்கிறேன். தவறெனப் பட்டால் சொல்லுங்கள். அழித்து விடுகிறேன்)

மதுரகன்
28-01-2007, 05:19 PM
புதிர் எண்- 241.
என்பதிலும் அஃதே..
துண்டை விரித்து தலைக்கு மேலே பிடித்தால்
ஒட்டமெத்த உடலும் மூடப்படுமே....

மதுரகன்
28-01-2007, 05:21 PM
புதிர் எண் 242

புதிர் எண் 242

ஆதவன் விடையை வழிமொழிகிறேன்...

பரஞ்சோதி
29-01-2007, 10:11 AM
ஹி ஹிஹ்ஹீஈ.... நான் ரொம்ப புத்திசாலிங்கோ.... பிறந்த குழந்தைக்கு பற்களேது?????

நல்லவேளை, என் மானத்தை காப்பாத்தினீங்க.

நான் வெள்ளைன்னு சொல்ல இருந்தேன்.

ஷீ-நிசி
29-01-2007, 11:11 AM
ஹி ஹிஹ்ஹீஈ.... நான் ரொம்ப புத்திசாலிங்கோ.... பிறந்த குழந்தைக்கு பற்களேது?????

மன்றத்தின் ரெண்டாவடு பீர் பாலுங்கோ,

pgk53
08-02-2007, 01:43 PM
இதற்கு 3 விடைகளைச் சொல்லுவேன். சரியா, தவறா தெரியாது.

விடை 1:-
துண்டின் நிழலின் மூலம் தலை முதல் கால் வரை மூடி இருக்கலாம்.
ஒரு விளக்கை அக்பர் முன்னால் வைத்து, துண்டை இருவருக்கும் நடுவில் பிடித்து, அதன் நிழலை வைத்து மூடி இருக்கலாம்.

விடை 2:-
அக்பரின் தலையில் உள்ள் க்ரிடத்தையும், அவரது செறுப்பையும் எடுத்து, இது இரண்டையும் துண்டை வைத்து மூடி இருக்கலாம்.

விடை 3:-
"அக்பர்" என்று சிலெட்டிலே, ஓலையிலே எழுதி, அதை மூடி இருக்கலாம்.

இதைத் தான் நான் பண்ணியிருப்பேன். அது என்ன பண்ணிச்சோ? யாருக்குத் தெரியும்? :)
(காமெடிக்குத் தான், 'அவர்'க்குப் பதில் 'அது' என்ற சொல்லை பயன் படுத்தி இருக்கிறேன். தவறெனப் பட்டால் சொல்லுங்கள். அழித்து விடுகிறேன்)
அன்பு நண்பரே........மற்றும் மன்றத்தில் அனைவரும் நலமா????

நான் ஒருமாத விடுமுறையில் தாயகம் வந்து...விடுமுறை வெகு வேகமாகச் சென்று கொண்டுள்ளது.

இப்போது எனக்குக் கணினி வசதி ஏற்படுத்திக்கொண்டேன். அதனால் இனி விடுமுறையிலும் அனைவருடனும் கலந்துரையாட முயற்சிக்கிறேன்.

நண்பரே...நீங்கள் கொடுத்துள்ள மூன்று விடைகளுமே தவறானவை என்று சொல்ல வேண்டியதாகிறது.
அதனால் சரியான விடைக்கு மேலும் முயற்சி செய்யுங்களேன்.

பென்ஸ்
08-02-2007, 01:49 PM
வாங்க பிஜிகே...
விடுமுறை நலமாக வேகமாக சென்றது என்றால் அருமை என்று புரிந்து கொள்கிறென்...

அட... விடை தவறா...???
மன்றத்து பீர்பால்களே வாருங்கள்...
பதிலை தாருங்கள்...

pgk53
08-02-2007, 01:52 PM
என்ன பெஞ்சமின் அவர்களே...........பெங்களூரில் நலமுடன் இருக்கிறீர்களா??????
சூழ்நிலை எப்படி உள்ளது????????

gragavan
08-02-2007, 02:11 PM
என்னய்யா விடை? அதைச் சொல்லுங்கள். பிறகுதான் எதையும் நான் சொல்வேன்.

aren
08-02-2007, 02:13 PM
அதானே. ஒரு மாதம் வரை நம் மக்கள் சரியான விடையை சொல்லவில்லை. இப்பொழுதாவது பிகேஜி அவர்கள் விடையை சொல்லிவிடலாமே

மன்மதன்
08-02-2007, 06:55 PM
புதிர் எண்- 241.

அக்பர் சக்கரவர்த்திக்கு, தனது அரசவையில் மிகவும் புத்திசாலி யார் என்று தெரிந்துகொள்ள ஆசை வந்தது.
பீர்பல் ஏற்கனவே பலமுறை தான்தான் அரசரின் சபையிலேயே சிறந்த புத்திசாலி என்று நிரூபித்துள்ளார். இருப்பினும் அக்பர் மீண்டும் ஒருமுறை அதை பரிசோதிக்க நினைத்தார்.

ஒரு இடுப்பில் கட்டும் துண்டு{டவல்} ஒன்றைக் கொண்டு வந்தார். அரசவையில் கூடியிருந்தோரைப் பார்த்து, இந்தத் துண்டினால் எனது தலைமுதல் பாதம்வரை ஒரே சமயத்தில் மூடவேண்டும் என்று சொன்னார்.

காலை மடக்கி படுக்க சொல்லி போர்த்தி இருப்பாரோ..:rolleyes: :rolleyes:

சேரன்கயல்
26-02-2007, 09:33 AM
காலை மடக்கி படுக்க சொல்லி போர்த்தி இருப்பாரோ..:rolleyes: :rolleyes:
நல்ல யோசனை...;) ;) :D :D B)

pradeepkt
26-02-2007, 02:03 PM
அல்லது ரெண்டாக் கிழிச்சு தலையையும் காலையும் மூடிருந்தா என்ன இப்ப? :D

மன்மதன்
26-02-2007, 06:21 PM
அஆன்பா.. :D :D

சேரன்கயல்
27-02-2007, 02:37 AM
அல்லது ரெண்டாக் கிழிச்சு தலையையும் காலையும் மூடிருந்தா என்ன இப்ப? :D

அப்படி போடு அருவாள...

pradeepkt
27-02-2007, 05:03 AM
அப்படி போடு அருவாள...
அதானே.... அருவாளால ஒரேயடியாப் போட்டு துண்டு துண்டா ஆக்கி, ஒரே துண்டுல போத்திரலாமே...

ஏய்யா இந்த கொலைவெறி??? :D
வன்முறையை அறவே வெறுப்பவன் நான்! ஹி ஹி:D

சேரன்கயல்
27-02-2007, 10:18 AM
அதானே.... அருவாளால ஒரேயடியாப் போட்டு துண்டு துண்டா ஆக்கி, ஒரே துண்டுல போத்திரலாமே...

ஏய்யா இந்த கொலைவெறி??? :D
வன்முறையை அறவே வெறுப்பவன் நான்! ஹி ஹி:D

இரு மாப்ளே...
வருது அருவா...
"திமிரு" படம்தான்...

pgk53
28-02-2007, 01:05 AM
காலை மடக்கி படுக்க சொல்லி போர்த்தி இருப்பாரோ..:rolleyes: :rolleyes:

அனைவருக்கும் வணக்கம்.
விடுமுறை முடிந்து பணியிடம் திரும்பிவிட்டேன்..
ஊரிலே கணிணி ஏற்படு செய்தும் நேரமின்மை காரணமாக மன்றத்தில் உலவ இயலவில்லை.

மன்மதன் அவர்கள் சரியான விடைகூறிட்டார்.
மற்றவர்கள் அனைவரும் சிறிய துண்டை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் விழிக்க பீர்பால் ஒருவர்தான் அரசரை காலை மடக்கிப் படுக்கும்படி கேட்டுக்கொண்டு உடலை முழுமையாகக்ப் போர்த்திவிட்டார்..
மன்மதனுக்கு எனது வாழ்த்துக்கள்.

வாருங்கள் அடுத்த புதிருக்குப் போகலாம்.

pgk53
28-02-2007, 01:08 AM
புதிர் எண்- 243

ஐரோப்பிய நாடுகளில் இரண்டுக்கிடையே கடுமையான யுத்தம் நடந்தது. அதில் ஒரு நாட்டு ராணுவத்தினர் எதிரி நாட்டைச் சேர்ந்த கொஞ்சம் ராணுவத்தினரை சிறைபிடித்துக் கொண்டு வந்தார்கள்.

அவர்களை தினமும் ஒவ்வொருவராகச் சுட்டுக் கொன்றார்கள்.
அந்தக் கைதிகளுள் மிகவும் புத்திசாலிகளான மூன்றுபேர் இருந்தார்கள்.
அவர்களையும் இதே போல சுட்டுக் கொல்வதற்கு முன்பு எப்படியாவது அங்கிருந்து தப்பித்துவிடவேண்டும் என்று சிந்தித்தார்கள்.கடைசியாக ஒரு வழியும் அவர்களுக்குப் புலப்பட்டது.

அந்த நாட்டிலே அடிக்கடி இயற்கையின் அழிவுகள் ஏதாவது ஒன்று நடந்துகொண்டே இருக்கும்.{ உதாரணமாக, பூகம்பம், சூறாவளி , பேய்மழையால் வெள்ளப் பெருக்கு, திடீரெனப் பரவும் காட்டுத் தீ }

இவர்களில் யாராவது ஒருவரை சுடுவதற்காகக் கொண்டு சென்று மைதானத்தில் நிறுத்தி, சுடுவதற்கு முன்பாக இந்த இயற்கையின் ஆபத்து ஏதாவது ஒன்றினை உரத்த குரலில் கூவி அதனால் ஏற்படும் அமளியில் இலகுவாகத் தப்பித்துவிடலாம் என்று பேசி வைத்துக்கொண்டார்கள்.

அன்றையதினம் அவர்களில் ஒருவனைப் பிடித்துக்கொண்டுபோய் மைதானத்தில் நிறுத்தி
ஒரே சமயத்தில் ஐந்து துப்பாக்கிவீரர்கள், அவனைக் குறிவைத்து கட்டளைக்காகக் காத்திருந்தார்கள்.
மேலதிகாரி சுடு என்ற கட்டளையை கொடுக்கும் முன்பாக அந்தக் கைதி, ஐயோ பூகம்பம்.பூகம்பம் என்று கத்தினான்.

அவனது அலறலைக் கேட்டதும், அனைவரும் உயிர் பிழைக்கவேண்டி அங்குமிங்கும் ஓடத்தொடங்கினார்கள்.
துப்பாக்கி வீரர்களும் துப்பாக்கியைப் போட்டுவிட்டு ஓடினார்கள். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அந்தக் கைதி தப்பித்து கூட்டத்தோடு கலந்து ஓடித் தப்பித்துவிட்டான்.

இரண்டு நாட்கள் கழித்து மற்றும் ஒரு கைதியைக் கொண்டுவந்தார்கள். அவனைச் சுடுவதற்கு முன்பாக அவன், ஐயோ சூறாவளி வருகிறது என்று அலற மீண்டும் அதே போனற அமளி. அதைப் பயன்படுத்தி அவனும் தப்பிவிட்டான்.

மீண்டும் இரண்டு தினங்கள் கழிந்தன. மூன்றாவது கைதியை அன்று சுட்டுக் கொல்லவேண்டும் என்று பிடித்து இழுத்துப் போய் மைதானத்தில் நிற்கவைத்தார்கள்.
அந்தக் கைதி, தான் எந்தவிதமான அமளியை ஏற்படுத்தித் தப்பிக்கலாம் என்று யோசித்தான். ஏற்கனவே அவனது நண்பர்கள் கூறிய அதே பேரழிவுகளை மீண்டும் தான் கூறினால் சரிவராது என்று நினைத்து, அவர்கள் கூறாத ஒரு இயற்கை அழிவை அவன் திடீரென உரத்த குரலில் கூவினான்.

ஆனால் யாருமே அவன் கூறியதால் குழப்பம் அடைந்து ஓடவில்லை.
அதற்கு மாறாக துப்பாக்கிவீரர்களின் உயர் அதிகாரி சுடு என்று ஆனையிடுவதற்கு முன்பாகவே அவனைச் சுட்டுக் கொன்றார்கள்.

மன்ற நண்பர்களே..முதல் இரண்டு கைதிகளும் இயற்கை அழிவுகளின் பெயரைக் கூறியதும் அலறியடித்துக்கொண்டு ஓடியவர்கள், மூன்றாவது கைதியின் கூக்குரல் கேட்டும் ஏன் ஓடாமல் அவனைச் சுட்டுக்கொன்றார்கள்??????????????????????????????

நண்பர்களே இது நடந்தது ஐரோப்பிய நாட்டில். மறந்துவிடவேண்டாம்.

aren
28-02-2007, 01:22 AM
ஐயோ பயங்கரமாக பனி மலையிலிருந்து சரிக்கி வருகிறது என்று கூறியிருக்கவேண்டும், ஆனால் அப்பொழுது ஜீலை மாதம் போல் கோடை காலமாக இருக்கலாம்.

சேரன்கயல்
28-02-2007, 01:52 AM
சுனாமின்னு சொல்லியிருப்பானோ...??

மன்மதன்
28-02-2007, 05:35 PM
.

மன்மதன் அவர்கள் சரியான விடைகூறிட்டார்.
மன்மதனுக்கு எனது வாழ்த்துக்கள்.

எல்லோரும் ஓடியாங்க... கடைசியா 242வது சுற்றில் வெற்றிபெற்றுட்டேன்.....................;) ;) நம்பமுடியவில்லை.....வில்லை..வில்லை....:D :D

அறிஞர்
28-02-2007, 08:51 PM
எல்லோரும் ஓடியாங்க... கடைசியா 242வது சுற்றில் வெற்றிபெற்றுட்டேன்.....................;) ;) நம்பமுடியவில்லை.....வில்லை..வில்லை....:D :Dவாழ்த்துக்கள் மன்மதா.. 243வது சுற்று என்ன ஆனது.

அறிஞர்
28-02-2007, 08:54 PM
ஆரென் சொல்வது போல் ஜூலை மாதம்... கோடைகாலம், ஐரோப்பா சிந்திக்க வைக்கிறது.

pgk53
04-03-2007, 12:40 AM
வணக்கம் நண்பர்களே.................
என்ன ஆனது.?
மிகவும் சுலபமான இந்தப் புதிருக்குக் கூடவா இத்தனை யோசனை??????

மன்மதன்
04-03-2007, 07:24 AM
தீ பற்றிக்கொண்டது என்பதற்காக
Fire..Fire என்று கத்தியிருப்பான்..

அங்கே Fire என்றால் சுடு என்று கூட அர்த்தமாகும்..

ஆகவே அவனை மேலதிகாரி fire சொல்வதற்கு முன்னரே அனைவரும் சுட்டிருப்பார்கள்..

எப்படி அறிஞரே?? :D

சேரன்கயல்
05-03-2007, 10:30 AM
தீ பற்றிக்கொண்டது என்பதற்காக
Fire..Fire என்று கத்தியிருப்பான்..
அங்கே Fire என்றால் சுடு என்று கூட அர்த்தமாகும்..
ஆகவே அவனை மேலதிகாரி fire சொல்வதற்கு முன்னரே அனைவரும் சுட்டிருப்பார்கள்..
எப்படி அறிஞரே?? :D

நல்லாத்தான் யோசிக்கிறீங்க...:rolleyes:
நியாயமான பதில்...
சரியா என்பதை பி. ஜி. கே உறுதிபடுத்துவாராக...:)

ஷீ-நிசி
05-03-2007, 10:43 AM
சரியான பதில் என்றே நினைக்கிறேன்... மன்மதன்

மன்மதன்
05-03-2007, 04:57 PM
நல்லாத்தான் யோசிக்கிறீங்க...:rolleyes:
நியாயமான பதில்...
சரியா என்பதை பி. ஜி. கே உறுதிபடுத்துவாராக...:)

ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டேன்.. ஹாலிவுட் படங்கள் நிறைய பார்த்திருந்ததால் அந்த ஃபயர் மேட்டர் தோணியது.. ;) ;)

சரியான விடைதான் ஷீ.. இதை தவிர வேறொன்று இருக்கமுடியாது. நம்ம pgk கடைசி வரியில் க்ளூ கொடுத்து இருக்கிறார்..

pgk53
06-03-2007, 12:45 AM
ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டேன்.. ஹாலிவுட் படங்கள் நிறைய பார்த்திருந்ததால் அந்த ஃபயர் மேட்டர் தோணியது.. ;) ;)

சரியான விடைதான் ஷீ.. இதை தவிர வேறொன்று இருக்கமுடியாது. நம்ம pgk கடைசி வரியில் க்ளூ கொடுத்து இருக்கிறார்..

வாழ்த்துக்கள் மன்மதன்.
243வது சுற்றிலும் நீங்களே வெற்றிவாகை சூடிவிட்டீர்கள்.
அப்படியே 244வது சுற்றிலும் வெற்றிவாகை சூடினால் ஹாட்டிரிக் அடித்த பெருமை உங்களைச் சேரும்.
முயற்சிக்கவும்.
விரைவில் அடுத்த புதிருடன் வருகிறேன்.
வணக்கம்.