PDA

View Full Version : முத்துக் குவியலில் முத்துக் குளியல்



ஜான்
22-12-2012, 01:55 PM
ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என இருக்கிறேன்


நம்மில் ஒருவர் பழந்தமிழ், பைந்தமிழ் நூல்களில் (என்றால் 1950 க்கு முன்னர் என்று கொள்வோம்) ஒரு வரி அல்லது சில வரிகள் கொடுக்க வேண்டும்.....


கண்ணுறும் மற்ற உறுப்பினர்கள் அது எந்த நூலில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்



யார் வேண்டுமானாலும் இங்கே தாங்களறிந்தவற்றைக் கொடுத்து கேள்விகள் கேட்கலாம்(இங்கே பொருத்தமில்லை எனில் நடத்துனர்கள் விளையாட்டுப் பகுதிக்கு கடத்தி விடவும்)

ஜான்
22-12-2012, 01:59 PM
முதலில் பள்ளிப் பாடப் புத்தகத்திலிருந்து

தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி
வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்
வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
மறப்பருங் கேண்மையோ டறப்பரி சாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
வுரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன விற்பெருங் கிழைமயிற்
காண்டகு சிறப்பின்.................

கும்பகோணத்துப்பிள்ளை
23-12-2012, 02:32 AM
மனையறம்படுத்த காதை!
நிலைமனண்டில ஆசிரியப்பா!
அய்யா ஜானு நாவரலப்பா இந்த விளையாட்டிற்க்கு!
பெருங்கடலில் முத்தெடுக்க என்னாலாகாதய்யா!
நீச்சலே இப்பத்தான் பழகுகிறேன்!
ஆனாலும் பார்க்க ஆசை!
முழ்கி முத்தெடுங்கள் நான் பார்வையாளனாகவே இருக்கிறேன்!

ஜான்
23-12-2012, 04:17 AM
நன்றி ,kumbakonaththupillai .....நான் பழகுவதும் நீச்சல்தான் !!!

தொடர்ந்து வாருங்கள்