PDA

View Full Version : 2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா ?



ஆதி
20-12-2012, 06:30 AM
அன்பின் உறவுகளே,

2012 டிசம்பர் 21 உலகம் அழியும் என்று பல பேச்சுகள், பல கருத்துக்கள், பல விவாதங்கள் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. நம் மன்றத்தில் கூட சமீப காலமாய் அது குறித்த பல திரிகள் பூத்த வண்ணமிருக்கின்றன. நாளை நமது பண்பலையில் இது குறித்த ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாக உள்ளது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது நமது தாமரை அண்ணா.

நிகழ்ச்சி சரியாய் நாளை மாலை 7 மணி துவங்கி 9 மணி அளவில் முடியும்.

ஆதி
21-12-2012, 11:12 AM
இன்று மாலை 7 மணிக்கு மறக்காமல் அனைவரும் கேட்கவும்

பூமகள்
21-12-2012, 02:30 PM
ஆஹா.. எத்தனை மகிழ்ச்சி.. உலகம் அழியுமா என்று தாமரை அண்ணா விளக்கிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டே பதிவுடுவது..
தமிழ் மன்றத்தின் பண்பலை நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் மறு ஒலிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும். எங்களைப் போன்ற குறித்த நேரத்துக்குக்
கேட்கமுடியாத பலரும் பயன் பெறுவர்.
மன்ற பாடல், நிகழ்ச்சிகள் கேட்டுக் கொண்டே பணியைத் தொடரவும் வசதியாக இருக்கும்.
ஆலோசியுங்கள். :)
நிகழ்ச்சி குறித்த விமர்சனம் முழுசா கேட்டதுக்கு அப்புறம்.. மறு ஒலிபரப்பு எப்பங்க....??!! ;-)

மதி
21-12-2012, 03:17 PM
தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.. மன்ற நிகழ்ச்சிகள் நிறைய தயாரிக்கப்பட்டபின்.. மறுஒலிபரப்பும் சீராக இருக்கும்.
மறுஒலிபரப்பு நேரத்தை விரைவில் மன்ற முகப்பில் இடுகிறோம்.

தாமரை
21-12-2012, 03:20 PM
அமரன் உங்க உதவி இங்க தேவை... மன்றத்திற்கு வருகை அதிகம் இருக்கும் நேரத்தை துப்பு கொடுத்தால்... அந்த நேரங்களில் மன்ற நிகழ்வுகளை ஒலிபரப்ப வசதியாக இருக்கும்.

ஜானகி
21-12-2012, 03:30 PM
இசைவிழா காலமாக இருப்பதால், பண்பலை நிகழ்ச்சியைக் கேட்கமுடியவில்லை. முடிந்தால் அதன் எழுத்துவடிவம் தரமுடியுமா ? பலரும் பயனடையலாம்.

ஆதி
21-12-2012, 03:40 PM
நாளை காலை 10 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இந்த நிகழ்ச்சி மறுஒலிபரப்பாகும்

தாமரை
21-12-2012, 04:21 PM
எழுத்து வடிவம்.. கொஞ்சமில்லை.. ரொம்பவே பெருசு... திங்கள் வரை பொறுங்க...

மஞ்சுபாஷிணி
21-12-2012, 05:05 PM
ஆஹா நடக்கட்டும் நடக்கட்டும்..... கேட்க நாங்களும் ஆவலாக இருக்கிறோம்பா ஆதி...

Mano60
23-11-2016, 05:31 AM
அந்த தேதியுடன் இந்த திரி நின்றுவிட்டது. உலகம் இப்போதைக்கு அழியாது. இன்னும் பல்லாண்டு காலம் இங்கு உயிர்கள் ஜீவித்திருக்கும்.