PDA

View Full Version : வெள்ளம் -''கம்பர் ஒரு கணக்காச் சொல்கிறார்.''



tnkesaven
20-12-2012, 03:39 AM
.





வெள்ளம் என்று அடிக்கடி கம்பர் ஒரு கணக்காச் சொல்கிறார்.

. பள்ளத்தூர் பழ பழனியப்பன் எழுதிய கிஷ்கிந்தா காண்ட உரை நூல் அது. (இவர் ஒரு வங்கி அதிகாரியாம்). இதில் வெள்ளம் என்பதற்கு விளக்கம் வருது.

1 யானை + 1 தேர் + 3 குதிரைகள் + 5 காலாள் = ஒரு பத்தி

3 பத்திகள் = ஒரு சேனாமுகம்
3 சேனா முகங்கள் = ஒரு குடமம்
3 குடமங்கள் = ஒரு கணம்
3 கணங்கள் = ஒரு வாகினி
3 வாகினிகள் = ஒரு பிரதனை
3 பிரதனைகள் = ஒரு சமூ
3 சமூக்கள் = ஓர் அனீகினி
10 அனீகினீக்கள் = ஓர் அக்குரோணி
8 அக்குரோணிகள் = ஓர் ஏகம்
8 ஏகங்கள் = ஒரு கோடி
8 கோடிகள் = ஒரு சங்கம்
8 சங்கங்கள் = ஒரு விந்தம்
8 விந்தங்கள் = ஒரு குமுதம்
8 குமுதங்கள் = ஒரு பதுமம்
8 பதுமங்கள் = ஒரு நாடு
8 நாடுகள் = ஒரு சமுத்திரம்
8 சமுத்திரங்கள் = ஒரு வெள்ளம்..

ஆதாரம்/நன்றி ;பள்ளத்தூர் பழ பழனியப்பன் எழுதிய கிஷ்கிந்தா காண்ட உரை நூல் அது. (இவர் ஒரு வங்கி அதிகாரியாம்).
அப்பாடா.. பேசாமெ ஒரு விளம்பர இடைவெளி விட்றலாமோ!!!!
ராமாயண சீன்லெ எங்கே வருதுன்னும் பாக்கலாமே.

கிஷ்கிந்தையில், அனுமன் சொல்கிறான்..
வள்ளலே, இந்த வாலியிடம் 70 வெள்ளம் சேனைகள் இருக்கிறது என்கிறார்.
மறுபடியும்
அதே சிக்கலான கேள்வி?
ஒரு வெள்ளம் என்றால்..?
பதில் 5.87 லட்சம் கோடி யானைகள்,
அதே அளவு தேர்கள்.
17.61 லட்சம் கோடி குதிரைகள்.
29.35 லட்சம் கோடி வானரங்கள். (அப்பா…இப்பவே கண்ணெக் கட்டுதா???)
வெள்ளம் ஏழு பத்து உள்ள;
மேருவைத்தள்ளல் ஆன தோளரியின் தானையான்;உள்ளம் ஒன்றி எவ்வுயிரும் வாழுமால்வள்ளலே! அவன் வலியின் வண்மையால்.

ஆதாரம்/நன்றி http://andamantamilnenjan.wordpress.com/2012/12/19/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/

தாமரை
20-12-2012, 04:16 AM
இப்படிப் பார்த்தால் மஹாபாரதப் போர் ரொம்ப சிறுசு போல இருக்கே. மஹாபாரதத்தில் வருகின்ற புள்ளி விவரப்படி 11 அக்குரோணி சேனைகள் கவுரவரிடமும், 7 அக்குரோணி சேனைகள் பாண்டவரிடமும் இருந்தன.

ஒரு அக்குரோணி என்பது 3x3x3x3x3x3x3x10x18 = 393660 பத்திகள்

அதாவது அதாவது 3,93,660 ரதங்கள், 3,93,660 யானைகளும், 11,80,980 குதிரைகளும், 19,78,300 வீரர்களும், போர்க்களத்தில் அணிவகுத்து நின்றிருக்கலாம்.

இது மகாபாரதக் கணக்கு. இராமயணக் கணக்கு அப்படி அல்ல.

வானரப் படையிடம், குதிரை, யானை, தேர் எதுவும் கிடையாது.

5.87 லட்சம் கோடித் தேரை வச்சுகிட்டா இராமனும் இலட்சுமணனும் தரையில் நின்று போர்புரிந்தார்கள்? அப்புறம் ஆஞ்சனேயர் தேரில் ஏறி????

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

aren
20-12-2012, 04:54 AM
இதெல்லாம் கொஞ்சம் அதிகமாக எனக்குப் படுகிறது. கவிஞர்கள் கொஞ்சம் அதிகப்படுத்தியே எழுதுவார்கள் கற்பனைகளையும் கலந்து. அந்த மாதிரி கம்பனும் செய்திருக்கலாம் என்று தெரிகிறது. அப்படியில்லையென்றால் இந்த கணக்கே தப்பாகவும் இருக்கலாம்.

jayanth
20-12-2012, 06:38 AM
இந்த "வெள்ளம்" இன்று இருந்தால்......இந்தியா வல்லரசாகியிருக்கும்....

தாமரை
20-12-2012, 07:25 AM
இதெல்லாம் கொஞ்சம் அதிகமாக எனக்குப் படுகிறது. கவிஞர்கள் கொஞ்சம் அதிகப்படுத்தியே எழுதுவார்கள் கற்பனைகளையும் கலந்து. அந்த மாதிரி கம்பனும் செய்திருக்கலாம் என்று தெரிகிறது. அப்படியில்லையென்றால் இந்த கணக்கே தப்பாகவும் இருக்கலாம்.

இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை 120 கோடி. 5.87 லட்சம் கோடி யானைகள் இருந்திருந்தால் அது எவ்வளவு சாப்பிட்டு இருக்கும் என்று யோசிச்சா தலை சுத்தனுமே ஆரென்... அப்புறம் காடு எப்படி இருந்திருக்கும்????

சொ.ஞானசம்பந்தன்
21-12-2012, 04:39 AM
ஆரென் அவர்களின் கருத்தை நூற்றுக்கு நூறு ஆதரிக்கிறேன் . பழங் காலத்தில் தமிழர் மட்டுமல்ல பிறரும் மிகைப்படுத்தியே எழுதியிருக்கிறார்கள் .