PDA

View Full Version : நெல்லிமரத்திற்குக் கலியாணம்



tnkesaven
19-12-2012, 04:59 AM
கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை (9 டிசம்பர் 2012).

காரைக்குடி கோட்டையூர் அருகே உள்ள வேளங்குடி கிராமத்தினர் அனைவரும் ஒன்று கூடி
நெல்லிமரத்திற்குக் கலியாணம் செய்து வைக்கின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும்
நடைபெறுகிறது. ஊர்மக்கள் அனைவரும் கலியாணத்தை ஒன்று கூடிக் கொண்டாடுகின்றனர்.



நெல்லிமரத்திற்கான கலியாணம் முடிந்தவுடன் “பிராமண போஜனம்“ நடைபெறும்.
பிராமணர் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு அறுசுவைக் கறியமது
செய்விக்கின்றனர். பிராமணர்கள் விருந்து உண்ட பின்னர் மற்ற நாட்டார்
நகரத்தார் எல்லோரும் பந்தியில் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடுகின்றனர்.



இந்நிகழ்ச்சி ஒரு பெரிய திருவிழா போல், ஒரு பெரிய திருமணம் போல் நடைபெறுகிறது.

அதன்பின்னர், பிராமணர்களை அழைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் புதிதாக வேட்டி
துண்டு (வஸ்திரம்) வழங்கிச் சிறப்புச் செய்கின்றனர். பிராமணப் பெண்களுக்கு
ரவிக்கைத் துணி வழங்கிச் சிறப்புச் செய்கின்றனர். ஊரில் பலருக்கு
‘நெல்லியான்‘ என்ற பெயர் உண்டு.

கார்த்திகை மாசம் பிருந்தாவன துவாதசி என துளசி கல்யாணம் தான்
நடக்கும் என்பார்கள்.

வாழைமரத்துக்கு கல்யாணம் உண்டு தெரியுமா?


ஜாதகத்தில் களத்திர தோஷமுள்ளவர்களை முதலில் வாழை மரத்துக்கு தாலி கட்டச்
சொல்லிவிட்டு , அதன் பிறகு மணப்பெண்ணுக்கு தாலி கட்டச் சொல்லும் வழக்கம் உண்டு.

--
--

aren
19-12-2012, 05:20 AM
புதிதான விஷயம். பல விதமான பழக்கவழக்கங்கள், சில இன்றும் நடைமுறையில் இருக்கின்றன.

jayanth
19-12-2012, 07:18 AM
புதுமையான தகவல். பகிர்விற்கு நன்றி கேசவன்..

tnkesaven
20-12-2012, 03:27 AM
கன்னிப் பெண்களுக்கு மணமாக வேண்டி ஊர்மக்கள் முன்னிலையில் அரச-வேம்பு
மரத்துக்கு திருமணம்]
கவுந்தப்பாடி, ஜூன். 27-

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரி ஊராட்சி காட்டூரில் புகழ்
மிக்க சித்தி வினாயகர் கோவில் உள்ளது. இந்தகோவிலில் பல ஆண்டுகளாக அரச மரம்
ஒன்றும், வேப்ப மரம் ஒன்றும் பின்னி பிணைந்து ஒன்று போல் வளர்ந்து உள்ளது
சிறப்பம்சம் ஆகும்.

ஊரில் உள்ள மணமாகாத கன்னி பெண்களுக்கும், இதே போல திருமணம் ஆகாத
இளைஞர்களுக்கும் தடையின்றி திருமணம் நல்ல முறையில் நடக்கவும் மேலும் ஊர்
மக்கள் செழிப்பாக வாழவும் , குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம்
பெறவும் இந்த அரச-வேம்பு மரத்துக்கு திருமணம் வைபோக விழா சிறப்பாக நடந்தது.

ஊர் பொது மக்கள் திரண்டு வந்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக
அதிகாலை 5 மணிக்கு இந்த மரங்கள் முன் கணபதி ஹோமம் நடந்தது. மரங்களுக்கு பட்டு
வேட்டி, பட்டு சேலை கட்டப்பட்டு சிறப்பு அபிசேகமும் நடந்தது. புரோகிதர்
மந்திரம் ஓத அர்ச்சகர் வேப்ப மரத்துக்கு மூன்று முடிச்சு போட்டு திருமணம்
செய்து வைத்தார். அப்போது ஊர் மக்கள் ஒன்று போல் எழுந்து மணமக்களுக்கு
(அரசு-வேம்பு மரத்துக்கு) அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

திருமண வைபோகம் முடிந்ததும் ஊர்மக்களுக்கு விருந்தும்
அளிக்கப்பட்டது.ஊர்மக்களே திரண்டு வந்து இந்த திருமணத்தை நடத்தி வைத்ததால் ஊர்
திருவிழா கோலம் பூண்டிருந்தது. இதற்கான ஏற்பாட்டை ஊர் கொத்துக்காரர்
ராமலிங்கம், கோவில் கவுண்டர் கோபி, கோவிந்தன், சீரங்கன் ஆகியோர்
செய்திருந்தனர்.

பின் குறிப்பு
ஒரு குயவன் 10 முறை சக்கரம் சுற்றினால் களிமண்ணு கூட அழகான பானை ஆகுது
பல்லாயிரம் வருடமா இந்த பூமி சுத்திட்டுதான் இருக்கு

இன்னும் சில மனிதர்கள்
களிமண்ணாக தான் இருகாங்க