PDA

View Full Version : விஷ்ணுபுரத்தில் நான்



கௌதமன்
18-12-2012, 03:46 PM
முன்பு ஒரு சமயம் (10 வருஷத்துக்கு மேல இருக்கும்) நாகர்கோயில் முத்து திரையரங்கில் Iron Monkey (என நினைக்கிறேன்) என்கிற சீன மொழிமாற்ற படத்துக்குப் போன போது ஒருவரை சற்றுத் தொலைவில் இருந்து பார்க்க நேர்ந்தது. அவர் எழுத்தாளர் ஜெயமோகன் போலத்தெரிந்தார்.. ஆனாலும் சந்தேகமாகவே இருந்தது... இருந்தாலும் அருகில் சென்றுப் பார்க்கவில்லை




பிறகு சமீபத்தில் அதே நாகர்கோயில் ராஜாஸ் திரையரங்கில் (பழைய சுவாமி தியேட்டர்) மனைவி குழந்தைகளோடு ' அங்காடித்தெரு' படத்துக்குச் சென்றிருந்தேன். சுவரோட்டியில் படத்தின் வசனம் 'ஜெயமோகன்' என்றிருந்தது. மனைவிக்கு சுட்டிக்காட்டி இவர் பெரிய எழுத்தாளர் , நம்ம ஊர்க்காரர் என்றேன். சொல்லி விட்டு திரும்பிப்பார்த்தால் அதே ஜெயமோகன் அவரது குடும்பத்தோடு சற்றுத்தள்ளி நின்றிருந்தார். அவரை மனைவிக்கு காட்டிக் கொடுத்தேன்.




ஆனாலும் அருகில் சென்று பேசவில்லை. அது வரை அவரது புத்தகங்கள் எதையும் படித்ததில்லை. அவரது கட்டுரைகளை அவரது தளத்தில் படித்திருக்கிறேன். இருந்தாலும் அவரது புத்தகங்களை முழுமையாக படிக்காமல் அவரிடம் சென்று அறிமுகம் செய்து கொள்வதென்பது கொஞ்சம் கூச்சமாக இருந்தது.




அதன்பின் அவரது புத்தகத்தைப் படிப்பதற்கு ஆயத்தமாக நவீன இலக்கிய அறிமுகம் குறித்தப் புத்தகம் உடுமலை தளத்தில் வாங்கிப்படித்தேன்... கொஞ்சம் த்லை கிர்ரென்றது... சொல்லப்போனால இனிமேலும் அவரது புத்தகத்தை வாங்கிப் படிக்கத்தான் வேண்டுமா என்ற எண்ணம் தான் வந்தது...




ஆனாலும் வாசிப்பை நேசிக்கிற எல்லாரும் ஜெயமோகனை ஆஹா ஓஹோ என்கிறார்களே... அப்படி என்னத்தான் எழுதியிருக்கிறார்.. என்பதையறிய வாங்கிய நூல் தான் 'விஷ்ணு புரம்'..


அதனைப் படிக்க ஆரம்பித்தப் பிறகு உள்ளுக்குள் ஏதோ திறந்து கொண்ட அனுபவம் கிடைத்தது என்பது தான் உண்மை. இந்திய தத்துவங்களை ஆழ்ந்து படித்திருந்தால் அதையும் ஒரு வேள்வி போல் உள்ளுக்குள் வளர்த்திருந்தால் மட்டுமே அப்படி ஒரு புத்தகத்தை எழுத முடியும். ஒருமுறை அல்ல பலமுறை வாசிக்கத் தோன்றும் ஒரு விதமான ஈர்ப்புத்தன்மை அதில் இருந்தது... ஒவ்வொரு முறையும் புது விதமான புரிதலைத் தந்ததும் உண்மை.


அதன் உள்ளர்த்தைப் புரிவதற்காக அவரது புத்தகமான இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புத்தகத்தை வாங்கி ஒரு மூச்சு வாசித்து முடித்தேன்....




இனி அவரைப் பார்க்க முடிந்தால்... அருகில் போய் பேச முடியுமா? முடியும் ...

ஆனால் அவரது எழுத்தைப் பற்றி அவரிடம் பேச முடியுமா? அதுவும் விவாதிக்க முடியுமா?


ம்ஹூம்.... அதற்கான தகுதி எனக்கில்லை..

அன்புரசிகன்
19-12-2012, 01:06 AM
நீர்ப்பறவை வந்திருக்கு. வரப்போற கடல் படமும் அவரோட வசனம் என்று நினைக்கிறேன். ஏதாச்சும் ஒன்றில் அவரை சந்திக்க வாழ்த்துக்கள். ஆனால் அதுக்கு இன்னமும் 3 வருசம் ஆகும் போல. காரணம் உங்களுக்கும் அவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு பாருங்க... இப்பதான் அங்காடித்தெரு பார்த்திருக்கிறீங்கள்... :D

அவர் சிறந்த எழுத்தாளர் என்பதால் நிச்சயம் உங்கள் கருத்துக்களை கருத்தில் கொள்வார் என்றே நினைக்கிறேன்....