PDA

View Full Version : மகாகவியின் வரிகள்



கும்பகோணத்துப்பிள்ளை
15-12-2012, 04:23 PM
கடவுளை உபாஸனை செய்தற்குரிய வழி எங்கனமெனில் ஶ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறான்:- நான் எல்லாவற்றுக்கும் பிதா. என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்தடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள், (கீதை 10 ஆம் அத்தியாயம்; 8 ஆம் சுலோகம்)
எந்த ஜந்துக்கும் இம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார். எந்த ஜீவனையுங் கண்டு வெறப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருதத் தகார். மாமிச போசனம் பண்ணுவோர் கடவுளுக்கு மெய்த்தொணடராகார். முட்டைப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ்வதை செய்வோரேயாவார்.
அகிம்ஸா பரமோ தர்ம – கொல்லாமையே முக்கிய தர்மம் என்பது இந்து மதத்தின் கொள்கைகளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத்தன்மையிலே சேர்க்காது. மற்றொருயிரைக்கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்கமாட்டார். இயற்கை கொலைக்கு கொலை வாங்கவே செய்யும்
இயற்கை விதியை அனுசரித்து வாழவேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்தமாட்டாது. எனவே சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை ஆங்கிலேயர் ‘Common sense’ என்பர். சுத்தமான மாசுபடாத கலங்காத அஞ்சாத பிழைபடாத சாதாரண அறிவே பரம மெய்ஞானமாகும்
சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொன்னமாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின் படி நடக்க எல்லோரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்கவொட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதாதிகள் தடுக்கின்றன சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில் நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால் நாம் மற்றோரை நேசிக்க வேண்டுமென்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது அன்பே அன்பை விளைகிக்கும்.
நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக்காட்டிலும் நம்மிடம் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கையாக இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றி விட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது.
நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்தவேண்டும் அதனால் உயிர் வளரும். அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக் கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும் ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு மனத்தாலும் செயலாலும் தீங்கு இழைத்துக் கொண்டும் இருப்போமாயின் அதாவது பிறரை வெறுத்துக் கொண்டும் பகைத்துக்கொண்டும் சாபமிட்டுக்கொண்டும் இருப்போமாயின் – நாம் அழிந்து விடுவோமென்பதில் ஜயமில்லை.

- பாரதியாரின் பகவத்கீதை முன்னுரை

ஜான்
22-12-2012, 02:01 PM
முன்னுரை எனினும் சர்வமத இணக்கக் கருத்துகளுடன் திகழ்கிறது!!!

கும்பகோணத்துப்பிள்ளை
23-12-2012, 01:52 AM
முன்னுரை எனினும் சர்வமத இணக்கக் கருத்துகளுடன் திகழ்கிறது!!!
ஆம் எல்லா மதங்களின் கரு அல்லது உட்பொருள் நோக்கம் எல்லாம் ஒரே நோக்காக மனிதகுலத்தின் தனிமனித மற்றும் சமுக ஒழுக்க மேம்பாடு நோக்கியே என்பதில் மிகவும் நம்பிக்கைகொண்டவர் பாரதி. கீதையின் முன்னுரை ஆரம்பம்பிக்கும் போதே
"நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி, மோக்*ஷராஜ்யத்தை எய்த மாட்டீர்கள்" என்று ஏசு கிறிஸ்து சொல்லியதை குறிப்பிட்டிருப்பதிலிருந்து இதையறியலாம்

நன்றி ஜான்

ஜான்
23-12-2012, 04:15 AM
"நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக்காட்டிலும் நம்மிடம் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கையாக இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றி விட வேண்டும்".....இந்தக் கருத்துதான் பைபிளில் இருந்து எடுத்ததாக இருக்கும் என்று குறிப்பிட்டேன்

திரியை தொடர்ந்து எடுத்து செல்லுங்கள் ,பிள்ளை ........உடன் வருகிறேன்

கும்பகோணத்துப்பிள்ளை
31-12-2012, 05:44 PM
எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்


புன்னகையு மின்னிசையு மெங்கொளித்துப் போயினவோ
இன்னலொடு கண்ணீரிருப்பாகி விட்டனவே!

ஆணெலாம் பெண்ணாய் அரிவையரெலாம் விலங்காய்
மாணெலாம் பாழாகி மங்கிவிட்டதிந் நாடே!

ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநா டென்பதுபோய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே!

வீமாதி வீரர் விளித்தெங்கு போயினரோ!
ஏமாறி நிற்கு மிழிஞர்களிங் குள்ளாரே!

வேதவுப நிடத மெய்ந்நூல்க ளெல்லாம்போய்
பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே!

ஆதி மறைக்கீதம் அரிவையர்கள் சொன்னதுபோய்
வீதி பெருக்கும் விலையடிமை யாயினரே!

செந்தேனும் பாலும் தெவிட்டி நின்ற நாட்டினிலே
வந்தே தீப்பஞ்ச மரமாகி விட்டதுவே!

மாமுனிவர் தோன்றி மணமுயர்ந்த நாட்டினிலே
காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே!

பொன்னு மணியுமிகப் பொங்கிநின்ற விந்நாட்டில்
அன்னமின்றி நாளு மழிவார்க ளெத்தனைபேர்? 9

-மகாகவி