PDA

View Full Version : உறங்கா நாட்கள் .......!!!!



manivannan samikkannu
14-12-2012, 08:23 AM
மலர்ந்த நினைவுகள் மறைக்கப்பட்ட
கனவுகள்............!!!!!
உறைந்துகிடக்கும் உறை பனியாக...
உணர்வுகள் ......!!!!!
உறங்கியும் உறங்கா கண்கள் ...........
உறங்கா நினைத்து உருளும் போது உலகத்தையே .....
சுற்றிவரும் நினைவுகள்..........
என்னில் என்னை தொலைத்து ...........
என்னில் தேடி கொண்டுருகீறேன் ...!!!!

கும்பகோணத்துப்பிள்ளை
14-12-2012, 11:59 PM
என்னில் என்னை தொலைத்து ...........
என்னில் தேடி கொண்டுருக்கின்றேன் ...!!!!
பல ஆண்டுகளாக என் டைரியிலும் என் மனதிலும் உலாவந்த வரிகள்!
இத்தேடலே என் வாழ்க்கையின் ஒவ்ஓரு கட்டத்திலும் ஒவ்ஒரு விதமாக எற்பட்ட அனுபவங்களுக்கு பல விளக்கங்களை எனக்கு தருவித்து கொடுத்தது
காதல் வசப்படும்போது அக்காதலை தனிமையில் அசைபோடும்போதுதான் தன்னைத்தானே தன்னில் தேடுவது நடக்கிறது!
ஆன்மீகத்தேடுதலிலும் அஃதே நிலை!

உள்ளத்தே எமுந்த உணர்வுகளை இங்கே பதித்த உங்களுக்கு பாராட்டுகள்!

ஜானகி
15-12-2012, 12:22 AM
பரவாயில்லை, தேடுவது எதனை என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டீர்கள் பாக்கியசாலிதான் ! பதில் தானே கிடைக்கும்...விரைவிலேயே.....

jayanth
15-12-2012, 02:48 AM
உங்களுள் உங்களைதானே தொலைத்தீர்கள்...
நல்ல வேளை,
உங்களவரிடம் தொலைத்திருந்தால் தேடுவது சிரமமாகியிருக்கும்...!!!

மஞ்சுபாஷிணி
15-12-2012, 06:11 AM
தேடுதல் என்னும்ஞானம் பெற தொலைப்பது இயல்பாகிவிடுகிறது....

இழப்பதைப்பற்றி சிந்திப்பதை விட்டு தேடுதலில் “ நான் “ தொலைத்து அதுவாகும்போது தேடுதல் நின்றுவிடும் ஞானம் ஒளிர்ந்துவிடும்....

அருமையான கவிதை பகிர்வு... அன்பு வாழ்த்துகள்...

HEMA BALAJI
28-12-2012, 06:02 AM
காதல்/கடவுள் எதுவாயினும் தேடுவது மேம்பட்டு முழுமையாய் கிடைக்க வாழ்த்துக்கள்.

manivannan samikkannu
02-01-2013, 05:20 PM
காதல்/கடவுள் எதுவாயினும் தேடுவது மேம்பட்டு முழுமையாய் கிடைக்க வாழ்த்துக்கள்.

ungal parattu nantrigal ................