PDA

View Full Version : நட்பூ.....



மஞ்சுபாஷிணி
13-12-2012, 04:38 AM
http://www.dreamstime.com/handshake-of-friendship-thumb21248173.jpg

நட்பு கிடைப்பது அரிதில்லை
ஆனால் நல்நட்பு கிடைப்பது அரிது
அதனினும் அரிது
உண்மையான நட்பு

தன் தேவைக்கென கேட்பது
காரிய நட்பு
அவசியத்துக்கு மட்டும்
நட்பு நாடுவது சுயநல நட்பு

ஏதோ என்று நட்பு கொள்ளுவது
பொழுதை போக்கும் நட்பு
எனக்கும் உண்டு பார் இத்தனை நட்பு
என்று கொள்வது தற்பெருமை நட்பு

உல்லாச நட்பு, ஊர் சுற்ற ஒரு நட்பு
காசுக்காக நட்பு, அலட்டிக்கொள்ளும் நட்பு
வேண்டாத நட்பு அவசியமற்ற நட்பு

உண்ணும் போது உடனிருந்து
உள்ளத்தை அன்பாய் பகிர்ந்து
கலங்கும்போது அணைத்து
துன்பம் வரும்போது காத்து

தோல்வியில் துவளும்போது
வெற்றிக்காய் ஊக்குவித்து
நீயே அறியாது நன்மை செய்து
உண்மை உரக்க உரைக்கும் நட்பே
உன்னதமான உயிர் நட்பு...

மற்றதெல்லாம் காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும் காகிதப்பூ....

பாலகன்
16-12-2012, 03:17 PM
அருமை அக்கா..... சபாஷ்

M.Jagadeesan
16-12-2012, 03:42 PM
எத்தனை நட்புகள் ! அலசியவிதம் அருமை! வாழ்த்துக்கள் சுபாஷிணி !

குணமதி
17-12-2012, 01:00 AM
நட்புகள் பலவகை - ஒவ்வொன்றும் ஒரு வகை!
திருவள்ளுவரே ஐந்து அதிகாரங்களில் 50 குறள்களில் நட்புபற்றிக் கூறுகிறாரே!
நட்பூ சிறப்பூ

ஜான்
19-12-2012, 03:59 AM
http://www.dreamstime.com/handshake-of-friendship-thumb21248173.jpg



உண்ணும் போது உடனிருந்து
உள்ளத்தை அன்பாய் பகிர்ந்து
கலங்கும்போது அணைத்து
துன்பம் வரும்போது காத்து

தோல்வியில் துவளும்போது
வெற்றிக்காய் ஊக்குவித்து
நீயே அறியாது நன்மை செய்து
உண்மை உரக்க உரைக்கும் நட்பே
உன்னதமான உயிர் நட்பு...

....

நட்பு சுயநலமற்றதாய் ஆகிவிட்டால் நட்பூ!!!

நன்று மஞ்சு

மஞ்சுபாஷிணி
28-12-2012, 04:29 PM
அருமை அக்கா..... சபாஷ்

அன்பு நன்றிகள் பாலகா....

மஞ்சுபாஷிணி
28-12-2012, 04:30 PM
எத்தனை நட்புகள் ! அலசியவிதம் அருமை! வாழ்த்துக்கள் சுபாஷிணி !

அன்பு நன்றிகள் ஜகதீசன் ஐயா...

மஞ்சுபாஷிணி
28-12-2012, 04:43 PM
நட்புகள் பலவகை - ஒவ்வொன்றும் ஒரு வகை!
திருவள்ளுவரே ஐந்து அதிகாரங்களில் 50 குறள்களில் நட்புபற்றிக் கூறுகிறாரே!
நட்பூ சிறப்பூ

அன்பு நன்றிகள் குணமதி ஐயா...

மஞ்சுபாஷிணி
28-12-2012, 04:47 PM
நட்பு சுயநலமற்றதாய் ஆகிவிட்டால் நட்பூ!!!

நன்று மஞ்சு

அன்பு நன்றிகள் ஜான்....