PDA

View Full Version : பாரதி...கலைவேந்தன்
11-12-2012, 02:29 PM
பாரதி


http://pothikai.files.wordpress.com/2012/04/barathiyar-e0aeaae0aebee0aeb0e0aea4e0aebfe0aeafe0aebee0aeb0e0af8d-tamil-e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8de0aeaee0af8ae0aeb4e0aebf.jpg

அந்த ஆகாயத்தையே
வளைத்து குடிசையாக்கிவிடும்
வல்லமை கொண்டவன் நீ!

தமிழ்ப் புலவர்கள் எல்லோரும்
மன்னர்களின் மோவாய்க்கட்டையின்
நீள அகலத்தைப் புகழ்ந்தபோது
நீ மட்டுமே
தாயகத்தின் தாரகமந்திரம் தந்து
தமிழன்னையின் சுப்ரபாதம் வாசித்தாய்!

புல்லாங்குழலால் அடுப்பூதிய
புல்லுருவிப் புலவர்களுக்கு மத்தியில்
நீ மட்டுமே அதில்
தமிழ் ராகங்கள் வாசித்தாய்!

வடமொழிக்கு வால் பிடித்த
வல்லவராயன்களுக்கு மத்தியில்
சொற்சமர் நடத்தி
தமிழன்னைக்கு மகுடம் ஏற்றிய
சொல்லவராயன் நீ!

அடுப்பூதிய பெண்களின்
இடுப்பொடிந்த நிலையை மாற்றி
தலை நிமிரச் செய்தவன் நீ!

மனிதர்களிலும் பறவைகளிலும்
விலங்குகளிலும் புற்களிலும்
வித்தியாசம் கண்டதில்லை நீ!
தேடிதேடிச் சமத்துவம் சமைத்து
பறிமாறிக் களைக்காத
பகுத்தறிவுப் பரிசாரகன் நீ!

உனது கவிக்கனிகளால்
பல சுதந்திரப் பறவைகள்
உயிர் ஜனித்தன!

முப்பத்தொன்பது வருடங்களை
முத்தமிழுக்களித்துவிட்டு
மீதிச் சதங்களைத்
தமதவைக்குச் சேர்த்துக்கொண்ட
இறைவன் ஒரு சுய நலக்காரனே!

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள். அவருக்கு எனது சிறிய அஞ்சலிக்கவிதையாக இதைப் பதித்துள்ளேன்.

M.Jagadeesan
11-12-2012, 04:30 PM
பாரதிக்கு அஞ்சலிக் கவிதையைப் படித்து ரசித்தேன். பாராட்டுக்கள் கலைவேந்தன்!

கோபாலன்
11-12-2012, 05:00 PM
மகாகவிக்கு கவிதாஞ்சலி :)

ஜான்
11-12-2012, 05:02 PM
பாரதியாரை நினைவுகூறும் இம்மன்றம் நல்மன்றம்

Keelai Naadaan
11-12-2012, 06:38 PM
1882-டிசம்பர்-11ல் மலர்ந்து இன்று 2012-டிசம்பர்-11-லும் உயிர்வாழும் அமர மகாகவியை நினைவுபடுத்தி கவிதை தந்தமைக்கு நன்றிகள் பல.

lenram80
11-12-2012, 06:49 PM
என்றும் நான் வியக்கும் சொற்படைத் தளபதி அவன். நான் எங்கு சென்று வேலைக்கு அமர்ந்தாலும் என் மேஜையில் நாற்காலிக்கு எதிரே, தினமும் கண்ணில் படும் படி வைப்பது "தேடிச் சோறு... " கவிதை. என்னுடைய பெயர் "பாரதி" என்று இருந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். முண்டாசுக் கவிஞனுக்கு என்றும் பிறந்த நாள் தான் என்னைப் பொருந்த வரையில்..!

கீதம்
11-12-2012, 09:49 PM
மகாகவியைப் போற்றும் மகத்தானக் கவியைப் போற்றுகிறேன். பாரதியின் தாக்கம் இல்லையெனில் இன்று நமக்குள் கவிதைகளின் தாக்கம் இல்லை. அம்மாபெரும் கவிக்கு என் வந்தனம். அவரை நினைவுகூர்ந்து நெகிழ்ந்த கவிதைக்குப் பாராட்டுகள் கலைவேந்தன்.

ஜானகி
12-12-2012, 01:03 AM
சஞ்சீவியான பாரதிக்கு வந்தனங்கள் !

" சிலுவையிலே அடியுண்டு ஏசு செத்தான்;

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;

பலர் புகழும் ராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;

பார்மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர் !"

பாரதியார்....சுயசரிதை

இராஜேஸ்வரன்
12-12-2012, 09:42 AM
சரியான நேரத்தில் பதித்த அஞ்சலி கவிதை. பாராட்டுக்கள்.

கலைவேந்தன்
26-01-2013, 07:39 AM
பாராட்டிய நண்பர்கள் ஜகதீசன் கோபாலன் ஜான் கீழை நாடான் லெனின் கீதம் ஜானகி மற்றும் ராஜேஸ்வரன் அனைவருக்கும் மிக்க நன்றி.

arun karthik
26-01-2013, 03:42 PM
பாரதியின் கவிதைகளை நான்
விரும்பி படிக்க இரண்டு காரணங்கள் :

இரண்டாவது காரணம் அவர் மொழி வளம் மற்றும் கையாண்ட
இலக்கண இலக்கியங்கள்

முதல் காரணம் அவைகளை எழுதியவர் பாரதி!

rema
27-01-2013, 03:37 AM
பாரதியை நினைவுக்கூர்ந்து கவிதை படைத்தமைக்கு நன்றி கலை அண்ணா !!