PDA

View Full Version : பண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்அமரன்
08-12-2012, 12:18 PM
அன்புடையீர்!

நமது தமிழ்மன்றத்தின் பண்பலை ஆர்ப்பாட்டமாகத் துவங்கி விட்டு ஆரவம் இல்லாமல் போய்விட்டதே என்ற எண்ணப்பாடு உங்களுக்கு இருக்கும். மன்றப் பண்பலை அடங்கிடவிடவில்லை. அடக்கமாகத் தன் அடுத்த பாய்சலுக்குத் தயாராகி விட்டது. ஆம்! இதுவரை காலமும் குறிப்பிட்ட சில நண்பர்கள் மாறி மாறி நேரம் ஒதுக்கி ஒலிபரப்பை மேற்கொண்டிருந்தனர். அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை நன்றியுடன் நினைவுகூரும் இவ்வேளையில், ஆதியின் அயராத முயற்சி பண்பலையின் தடையின்றிய பாயச்சலுக்குப் பாதையைத் திறந்து விட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

ஆம்!

சர்வர் மூலம் தன் ஒலிபரப்பை தொடர இருக்கும் பண்பலையில் இனி நிகழ்ச்சிகள் சீராகவும் சிறப்பாகவும் ஒலிவீச வேண்டும். அந்த இனிய தருணம் மலருவதற்காக உங்கள் உதவிக் கரங்களை இறுகப் பற்றிக்கொள்கின்றோம்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வினாச்சிமிழ்களில் உங்கள் பதில்களை நிரப்புங்கள். விபரமாகச் சொல்ல விரும்பினால் கீழே அறியத் தாருங்கள்.

கதம்பம் என்ற நிகழ்ச்சிக்குள் இருக்கும் பல சுவைகளைப் பற்றியே கருத்துச் சாவிகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன என்றாலும் அவ்வெல்லைக்கு அப்பாலிருந்தும் கருத்துப் பகிரல் வரவேற்கப்படுகிறது.

கருத்துகள் உருவாகும் போது புதிய குருத்துகள் உருவாகின்றன. பசுமைக்கு வழி பிறக்கின்றன. எனவே உங்கள் மனச்சிந்தல்களை இங்கே சிதற விடுங்கள்.

விரைவில் புதிய முகவரியில் நமது பண்பலை வாயிலாக மீண்டும் சந்திப்போம்.

நன்றி.

ஆதி
11-12-2012, 06:03 AM
வணக்கம் உறவுகளே,

பண்பலை குறித்த விமர்சனங்களை, தங்கள் எதிர்ப்பார்ப்புக்களை, கருத்துக்களை இந்த திரியில் பதிவிடுங்கள் உறவுகளே. மன்றத்தின் மேற்பரப்பில் நிரந்தரமாய் 24 மணி நேரமும் பாடும் வகையில் பண்பலை இணைக்கப்படுள்ளது. பண்பலை கேட்பதில் தங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருப்பின் இங்கே தெரிவியுங்கள்.

அன்புடன்
தமிழ்மன்றப் பண்பலை குழு

கீதம்
11-12-2012, 08:46 AM
internet explorer பயன்படுத்துகிறேன். அதில் பண்பலை இயங்கவில்லையே.

ஆதி
11-12-2012, 09:05 AM
internet explorer பயன்படுத்துகிறேன். அதில் பண்பலை இயங்கவில்லையே.

இரவு சோதித்துப் பார்த்து சொல்கிறேன் அக்கா

கலையரசி
11-12-2012, 11:50 AM
Mozilla Firefox ல் மன்றம் என்பதற்குக் கீழ் பண்பலையின் சிறிய பெட்டி இருக்கிறது. வேலையும் செய்கிறது. ஆனால் ஒவ்வொரு முறை மன்றத்தலைப்புகளை நாம் வாசிக்க கிளிக் செய்யும் போது பாட்டு நின்று நின்று சிறிது நேரம் கழித்து வருகிறது.

internet explorer ல் அந்த இடத்தில் பண்பலை பெட்டியைக் காணோம். ஆனால் தலைப்பில் உள்ள பண்பலைப்பெட்டி என்பதைக் கிளிக் செய்தால் தனி விண்டோ திறந்து பண்பலை பெட்டி வருகிறது.

தாமரை
12-12-2012, 02:55 AM
தப்புதான்.. தமிழ் நாட்ல இருந்து பாட்டு கேட்க நினைச்சது தப்புதான். முதல் முறையா சொடுக்கும் போதே ரேடியோ ஆஃப்லைன் அப்படின்னு வருதே.. 24 மணி நேர ஒலிபரப்புன்னு ஆதி சொன்னாரே!!!

மதி
12-12-2012, 03:00 AM
பண்பலைப்பெட்டியில் மாற்றவில்லை என்று நினைக்கிறேன். முகப்பில் பாடுமே..?

ஆதி
12-12-2012, 05:36 AM
internet explorer பயன்படுத்துகிறேன். அதில் பண்பலை இயங்கவில்லையே.

அக்கா internet explorerல் இன்னும் பிரச்சனை இருக்கா

ஆதி
12-12-2012, 05:47 AM
தப்புதான்.. தமிழ் நாட்ல இருந்து பாட்டு கேட்க நினைச்சது தப்புதான். முதல் முறையா சொடுக்கும் போதே ரேடியோ ஆஃப்லைன் அப்படின்னு வருதே.. 24 மணி நேர ஒலிபரப்புன்னு ஆதி சொன்னாரே!!!

பண்பலை பெட்டி, இராஜகுமாரன் அண்ணா வந்துதான் சரி செய்யனும் அண்ணா, மற்றபடி பண்பலை 24 மணி நேரமும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது

பண்பலை hosting செய்யப்பட்டுவிட்டது

கீதம்
12-12-2012, 07:12 AM
அக்கா internet explorerல் இன்னும் பிரச்சனை இருக்கா

ஆமாம் ஆதி. எக்ஸ்ப்ளோரரில் பாடவில்லை.

மஞ்சுபாஷிணி
13-12-2012, 04:16 AM
அருமையான மெலோடியஸ் பாட்டுகள் எல்லாம் கேட்க மனம் நிறைவாக இருக்கிறதுப்பா..

ஆனால் பாட்டு சத்தம் முகப்பில் மட்டும் தான் ஒலிக்கிறது.. எந்த திரியில் சென்றாலும் பாட்டும் நம்மை தொடர்ந்தால் நலமாக இருக்குமேப்பா....

Mano.G.
13-12-2012, 07:00 AM
தற்போதைய வானொலி , பாடல்கள் விட்டு விட்டு வருகின்றன, பிரவுசர் மாற்றும் பொழுது பாடல்கள் தடைப்படுகின்றன


புது வானொலியில் எதோ கோளாரு போல
பழைய வானோலியில் அதாதவது தீபாவளி
நேரத்தில் நிகழ்ச்சிகள் தெளிவாகவும் தடங்கள்
இன்றியும் கேட்க முடிந்தது, அப்போதும் சரி இப்போதும் சரி குகல் க்ரோம் பிரவுசர் உபயோகிக்கிரேன்

ஆதி
14-12-2012, 08:34 AM
அருமையான மெலோடியஸ் பாட்டுகள் எல்லாம் கேட்க மனம் நிறைவாக இருக்கிறதுப்பா..

ஆனால் பாட்டு சத்தம் முகப்பில் மட்டும் தான் ஒலிக்கிறது.. எந்த திரியில் சென்றாலும் பாட்டும் நம்மை தொடர்ந்தால் நலமாக இருக்குமேப்பா....

மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து ஒருமித்த முடிவொன்று எடுப்போம் அக்கா

ஆதி
14-12-2012, 08:37 AM
தற்போதைய வானொலி , பாடல்கள் விட்டு விட்டு வருகின்றன, பிரவுசர் மாற்றும் பொழுது பாடல்கள் தடைப்படுகின்றன


புது வானொலியில் எதோ கோளாரு போல
பழைய வானோலியில் அதாதவது தீபாவளி
நேரத்தில் நிகழ்ச்சிகள் தெளிவாகவும் தடங்கள்
இன்றியும் கேட்க முடிந்தது, அப்போதும் சரி இப்போதும் சரி குகல் க்ரோம் பிரவுசர் உபயோகிக்கிரேன்

அண்ணா, பண்பலையில் எந்த கோளாரும் இல்லை, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து பாடி கொண்டிருக்கிறது, உங்களின் இணைய வேகம் என்று என்று சொல்ல முடியுமா ?

bufferingகிற்கு நேரம் எடுக்கிறது என்று நினைக்கிறேன்

வேறு யாருக்கும் இந்த பிரச்சனை இருந்தால் சொல்லவும்

Keelai Naadaan
14-12-2012, 02:59 PM
Internet Explorer-ல் கேட்க முடியவில்லை. Firefox-ல் கேட்க முடிகிறது.

சில சமயம் மட்டும் இரண்டு வானொலி பாடுவது போல் ஒவ்வொரு வரியும் இரண்டு முறை ஒலிபரப்பாகிறது. (எதிரொலி கேட்பது போல)

Mathu
14-12-2012, 04:02 PM
முதலில் ஆதிக்கு நன்றி,
என்னாலும் விரைவில் பழையதை மறக்க முடிவதில்லை அதனால் இன்னும் I E தான் பாவிக்கிறேன் கேட்க முடியவில்லை
ஆனால் கூகிளாண்டவனில் கேட்க முடிகிறது.
இந்த உளைப்பை வளங்கும் நண்பர்களுக்கு நன்றி.

கும்பகோணத்துப்பிள்ளை
16-12-2012, 12:22 AM
திரியில் உள்நுழையும்போது பாடல் நின்றுவிடுகிறது முடியுமானால் எங்கு உலாவினாலும் பின்னனியில் பண்பலை கேட்க ஏற்பாடு செய்யுங்கள்.


இந்த உளைப்பை வளங்கும் நண்பர்களுக்கு நன்றி.
'ழ' வை தட்டச்சு செய்ய பழகவில்லை போலிருக்கிறது?!
பாமினியில் ஆங்கில எழுத்தில் 'ஓ' வைத்தட்டினால் 'ழ' பதியும்.

எனக்கும் 'கமா' வை தட்டத்தெரியவில்லை? என்ன செய்ய?

தாமரை
22-12-2012, 12:48 AM
பண்பலை ஒலிபரப்பு பற்றி பூமகளின் சிந்தனை யோசிக்கத்தக்கது. தமிழ்மன்றம் சொந்தப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் என்று சொல்கிறோம்.

இரண்டு வாரத்துக்கு ஒரு முறைதான் நம்மால் ஒரு நிகழ்ச்சி புதிதாக ஒரு நிகழ்ச்சி செய்ய முடிகிறது. அதுவும் ஒண்ணரை மணி நேரம். இதை ஒரே ஒரு முறை மறு ஒலிபரப்பு செய்கிறோம்.

14 x 24 = 336 மணி நேரம்.. இதில் 3 மணி நேரம் என்பது ஒரு சதவிகிதம் கூட இல்லை. ஆனால் நிகழ்ச்சியைக் நேரப் பிரச்சனையால் கேட்க முடியவில்லை என பல நண்பர்கள் சொல்கிறார்கள்.

தோராயமாக எடுத்துக் கொண்டால் இரண்டு மணி நேரம் வரையே ஒரு நாளிற்கு மன்றத்தில் செலவிட முடியும் என்பது என் கருத்து. அது எந்த இரண்டு மணி நேரம் என்பதை நாம் முடிவு செய்ய இயலாது.

அதனால் என் கருத்து இப்படியானது.

1. சிறப்பு நிகழ்ச்சி செய்யும் பொழுது 24 மணி நேரம் அதையே சுழல் மறு ஒலிபரப்பு செய்யலாம்.
2. அந்த நாளில் கேட்க முடியாதவர்களுக்கு என்ன செய்வது? ஒரு ஒலிப்பெட்டகம் இருந்தால் அதில் நிகழ்ச்சிகளைக் கேட்க முடிந்தால் வசதியாக இருக்கும்.

கார்த்திகை தீப சிறப்பு நிகழ்ச்சி : தாமரையின் "தீப ஞானம்" (http://snd.sc/T3ma3Z)

அதே போல் தற்போது உள்ள கோப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பாட்டுக்கும் இடையில் மன்றப்படைப்புகளில் நுழைத்தால் மக்களும் நிறைய படைப்புகளை அனுப்புவார்கள் என்பது என் கருத்து.

மஞ்சுபாஷிணி
22-12-2012, 04:48 AM
ஆஹா அற்புதமான யோசனைப்பா.... செயல்படுத்தினால் எல்லோருக்குமே நிகழ்ச்சியை கேட்கும் வாய்ப்பும் கிடைக்கும்பா....

ஜானகி
23-12-2012, 03:02 PM
தாமரை அவர்களது அரிய முயற்சியால், இன்று அவரது ' தீப ஞானம் ' தொகுப்பினைக் கேட்டு ரசிக்கிறேன்.

கார்த்திகை நட்சத்திரத்துடன் உலகமே சுற்றிவருவது போன்ற பிரமையும் பிரமிப்பும் ஏற்படுகிறது....

பாடல்களின் தொகுப்பும் ஏற்றமுடையதாக இருக்கிறது...உழைத்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....தொடரட்டும் பணி...