PDA

View Full Version : வயதான குழந்தை



nandagopal.d
10-12-2012, 01:41 PM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT9A6e7uaRiEiGszhxLdF1cZxiXxlSAf5srbYMyUhxWQZQ7ft1IUg


படிப்பாளிகள்,
பைத்தியம் என்கிறார்கள்,
பட்டாம் பூச்சி,
பிடித்து கொண்டிரூந்தவனை பார்த்து,
ஆனாலும்,பைத்தியம் ஆவதற்க்கு,
கொடுத்து வைப்பதில்லை,
நம் எல்லோருக்கும்

jayanth
12-12-2012, 01:46 PM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123'))

மஞ்சுபாஷிணி
13-12-2012, 04:40 AM
உண்மையேப்பா...

பைத்தியங்களின் உலகம் வெறுப்புகள், கோபங்கள், பொறாமைகள், தீய எண்ணங்கள் இல்லாதது.....

அன்பு வாழ்த்துகள்....

கீதம்
13-12-2012, 07:08 AM
அதீதமாய் வேலைகொடுக்கும்போது தன்னைத் தற்காத்துக்கொள்ள மூளை எடுத்துக்கொள்ளும் ஓய்வுதான் மனம் பிறழ்ந்த நிலையாம். கவிதையில் குறிப்பிட்டதுபோல் கொடுத்துவைத்தவர்கள் அவர்கள். தலைப்பைப் பார்த்தால், கவிதை வயோதிகம் பற்றியது என்று எண்ணத் தோன்றியது. வயதான குழந்தைகள் என்பதற்கு பதில் வளர்ந்த குழந்தைகள் என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்குமென்று தோன்றுகிறது. அருமையானதொருக் கவிதைக்குப் பாராட்டுகள் நந்தகோபால்.

M.Jagadeesan
13-12-2012, 10:02 AM
திடீரென்று ஏற்படும் பொருள் இழப்பு, குடும்பத்தில் ஏற்படும் திடீர் மரணம் , காதல் தோல்வி ஆகியவையும் பைத்தியம் பிடித்து அலைவதற்குக் காரணங்களாக அமைகின்றன.

கும்பகோணத்துப்பிள்ளை
16-12-2012, 12:00 AM
அதுசரி அய்யா! பைத்தியக்காரர்கள் (பாக்கியசாலிகள்) கொடுத்துவைத்தவர்கள் நானும் ஒத்துக்கொள்கிறேன்!
ஆனால் பலநேரங்களில் உண்மையை ஓங்கிச் சொல்பவர்களையும்
மாற்றுக்கருத்துச் சொல்பவர்களையும் பைத்தியக்காரர்கள் எனப்பே(ஏ)சுகிறார்களே!
இங்கே யார் கொடுத்துவைத்தவர்?
இச்சமுகத்தில் எத்தனையோபேர் நிலை பிறழ்ந்த நடையுடையவராயிருக்கிறார்கள்!
இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் 'பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு!"
என்றே கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்! அவர்களும் கொடுத்துவைத்தவர்கள்தான்!

ஜான்
19-12-2012, 03:57 AM
கவிதையும் அதற்கான பின்னூட்டங்களும் சிறப்பு

"நியாயங்கள் தெளிவாக நாளாகலாம் ..நான் யாரென்று அப்போது நீ காணலாம்" என்ற திரைப் பாடலையும் சேர்த்துக் கொள்ளவும்

ஆதி
21-12-2012, 08:19 AM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT9A6e7uaRiEiGszhxLdF1cZxiXxlSAf5srbYMyUhxWQZQ7ft1IUg


படிப்பாளிகள்,
பைத்தியம் என்கிறார்கள்,
பட்டாம் பூச்சி,
பிடித்து கொண்டிரூந்தவனை பார்த்து,
ஆனாலும்,பைத்தியம் ஆவதற்க்கு,
கொடுத்து வைப்பதில்லை,
நம் எல்லோருக்கும்

கவிதை ஏதோ ஒரு உனர்வை சுருக்கென விட்டு செல்கிறது, ஒரு குளத்தில் எரியப்பட்ட கட்டையை போல சலனத்தை உண்டாக்கி, மிதக்கவும் செய்கிறது

பைத்தியம் எனும் வார்த்தை மனப்பிறழ்வு என்று எடுத்துக் கொள்ளவில்லை அதில் ஒரு விழிப்பு இருக்கிறது

வாழ்த்துக்கள்

HEMA BALAJI
02-02-2013, 12:07 PM
ஆதியின் கருத்தை வழிமொழிகிறேன். பகிர்வுக்கு நன்றியும் பாராட்டுகளும் நந்தகோபால்.