PDA

View Full Version : அதிசய தகவல்கள்



tnkesaven
10-12-2012, 05:34 AM
சென்னையின் பிறந்த நாள் எது தெரியுமா?
ஆகஸ்ட் 4, 1639. அன்றுதான் சென்னப்ப நாயக்கன் நம் சென்னை மாநகரை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்ததாக, "சென்னை வரலாறு' நூல் கூறுகிறது.


* சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில், 21 ஆயிரம் பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கின்றனர். நாம் தினம் 21 ஆயிரம் தடவை மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது

.
* தமிழகத்தின் எல்லைகள் முன் காலத்தில் வட வேங்கடம் — குமரியாக இருந்தது. வட வேங்கடம் (திருப்பதி) ஆந்திராவோடு சேர்ந்து விட்டதால், தற்போது திருத்தணி வட எல்லையாக இருப்பதால், தமிழ் நாட்டில் வடக்கே குமரனும் (முருகன்), தெற்கே குமரியும் (கன்னியாகுமரி) எல்லை தெய்வங்களாக இருந்து, தமிழகத்தை காத்து வருகின்றனர். வடக்கே குமரனும், தெற்கே குமரியும் இருப்பது பொருத்தமல்லவா?

* சென்னை பிராட்வே சாலையை அமைத்தவர் பாபம்ஸ் பிராட்வே என்பவர். அவர் பெயரால் அது பாபம்ஸ் பிராட்வே என்று அழைக்கப்பட்டு வந்தது. இப்போது பாபம்ஸ் தொலைந்து வெறும் பிராட்வேயாகக் காட்சி தருகிறது.

* திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் - கும்பினிப்பேட்டை. ஆனால், இந்த ஊருக்கும், பிரிட்டிஷாருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தெருவின் ஒரு பக்கமோ, ஆந்திராவைச் சேர்ந்தது; மறுபக்கம், தமிழ்நாட்டைச் சேர்ந்தது. இந்த விசித்திர ஊர் அரக்கோணத்திலிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ளது.

* மதுரை மாவட்டத்தில் சில வட்டாரங்களில், மாந்தோப்புகளில் மாம்பழங்களை விலைக்கு எண்ணிப் போடும்போது, "போலீஸ் மாங்காய்-5' என்று கொசுறு போடுவது வழக்கம். மாம்பழம் ஏற்றிச் செல்லும் போது வழியில் தென்படும் போலீஸ்காரர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு இந்த மாங்காய்களாம்!

* காரைக்குடியில் ஒரு கோவில் நுழைவாயிலில், "நடையன்கள் இங்கே பாதுகாக்கப்படும்' என்று எழுதப்பட்டுள்ளது. காலணி, மிதியடி என்ற வழக்கமான சொல்லுக்குப் பதிலாக, புதுமையாக இப்படி நடையன்கள் என்று எழுதியுள்ளதாக நினைக்க வேண்டாம்... செட்டி நாட்டில், காலணிகளை, நடையன்கள் என்றும் சொல்வராம்!

* வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய ஐந்து ஆறுகள் இங்கே பிரிவதால், இவ்வூர் திரு+ஐ (ஐந்து)+ஆறு என்றாகி, அது திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் நாத பிரம்மம் தியாகராஜர் சமாதி உள்ளது.

* நெல்லை மாவட்டத்தில் தான் எத்தனை சமுத்திரங்கள். ஆனால், அவற்றில் ஒன்றில் கூட அலைகளைக் காண முடியாது. அனைத்தும் ஊரின் பெயர்கள்...
அம்பா சமுத்திரம். கோபால சமுத்திரம். வடமலை சமுத்திரம். ரவண சமுத்திரம். ரங்க சமுத்திரம்.
http://http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13219&ncat=2
***