PDA

View Full Version : அது..



rambal
08-04-2003, 04:02 PM
அதன் மீது ஒரு மோகம்..
அவ்வழி போம்போதும்
வரும் போதும்
எட்டிப் பார்த்துவிட்டு..
தூரத்தில் பார்க்கும்
பொழுதே
ஒரு படபடப்பு..
மீண்டும் எதுவும்
இருக்கக் கூடாதென்று..
அது ஒரு
சுமைதாங்கி..
மற்றவர் பாரத்தை
வருந்திச் சுமப்பதால்...
அதன் மீது
எப்பொழுதும்
ஒரு துர் நாற்றம்..
குளித்து பல நாட்கள்
ஆகி விட்டதால்...
யார் என்ன கொடுத்தாலும்
எதிர்கேள்வி கேட்காமல்
வாங்கிக் கொள்ளும்..
சில சமயங்களில்
அதனிடமிருப்பதையும்
சிலர் பிடுங்கிக் கொள்வார்கள்..
அப்பொழுதும் அது பேசாமலே
இருக்கும் சாதுவாய்..
அதற்கு கூட கீதை
தெரியுமோ என்னவோ..
அதனால் தான்
கடமையை மட்டும் செய்கிறது..
பலனை எதிர்பாராமல்..
பல பேருக்கு
உணவும் தரும்..
அதற்காக
அட்சயப்பாத்திரமும் இல்லை..
ஆனால்,
அந்த மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்..
எல்லோரின் வண்டவாளங்களும்
அதற்குத் தெரியும்..
இருந்தும் எப்பொழுதும்
போல் அமைதியாக..
சில சமயங்களில்
குழந்தையைக் கூட பெற்றெடுக்கும்
என்னைப் போல..
அதனால்தானோ
என்னவோ அந்தக் குப்பைத் தொட்டி
மீது ஒரு இனம் புரியா மோகம்..

madhuraikumaran
08-04-2003, 05:45 PM
அது குப்பைத் தொட்டி என்று கடைசிவரியில் தெரிந்தவுடன் மீண்டும் முதலில் இருந்து படிக்கிறேன். இப்போது ஒவ்வொரு வார்த்தையும் புது அர்த்தத்தோடு....
பின்னிட்டீங்க ராம் !!!

poo
08-04-2003, 05:58 PM
ஆரம்பத்திலேயே என்ன(எதை) சொல்ல வருகிறாய் என புரிகிறது.. சொன்னவிதம் அருமை. குப்பைத் தொட்டியை இதைவிட அழகாய் யாரும் சொல்லிட முடியாது.

பாராட்டுக்கள் ராம்!

இளசு
08-04-2003, 08:12 PM
அது குப்பைத் தொட்டி என்று கடைசிவரியில் தெரிந்தவுடன் மீண்டும் முதலில் இருந்து படிக்கிறேன். இப்போது ஒவ்வொரு வார்த்தையும் புது அர்த்தத்தோடு....
பின்னிட்டீங்க ராம் !!!

அப்படியே என் கருத்து இப்படித்தான் எழுதி இருப்பேன்.

பாராட்டு ராமுக்கு
நன்றி மதுரைக்குமரனுக்கு :)

rambal
09-04-2003, 04:20 PM
வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

குமரன்
10-04-2003, 01:45 AM
குப்பைத் தொட்டிக்கும்
காதலியுண்டு என்பதை
உணர்த்தும் கவிதை
...அருமை

-குமரன்

Narathar
10-04-2003, 06:35 AM
உம் கவி கண்டு
குப்பைத்தொட்டி விடும்
ஆனந்தக்கண்ணீர்..............

நல்ல கவிதை!!! வாழ்த்துக்கள்!!!