PDA

View Full Version : கமல் ஹாசனின் ;;விஸ்வரூபம்'' பாடல் துவக்க விழா



tnkesaven
08-12-2012, 05:47 AM
"] (http://[URL="http://ttp://dinamani.com/edition_madurai/madurai/article1371288.ece)ttp://dinamani.com/edition_madurai/madurai/article1371288.ece-இங்கு கர்சரை கொண்டு செலுத்தி வலது பக்கம் சொடுக்கி தகவல் அறியவும்




எனது வெற்றிக்கு ரசிகர்கள் தான் காரணம், அவர்கள்தாம் எனது பலம் என "விஸ்வரூபம்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

ஜனவரி 11-ல் திரைக்கு வர இருக்கும் கமல்ஹாசனின் "விஸ்வரூபம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இருவேடங்களில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகிகளாக பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவ் விழாவில், பங்கேற்பதற்காக விழா நடைபெற்ற வளாகத்துக்கு ஹெலிகாப்டரில் கமல்ஹாசன் வந்தார். விஸ்வரூபம் இசை சி.டி.யை கமல்ஹாசன் வெளியிட, அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவரும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரருமான பத்ரிநாத் பெற்றுக் கொண்டார். பின்னர், கமல்ஹாசன் பேசியது:
சென்னையில் இருந்து எனது சொந்த ஊருக்கு ரயில் மற்றும் பஸ்களில் வந்து சென்ற நான், இன்று ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறேன்.
எனது வாழ்நாளில் இப்படி நடக்கும் என ஒருநாளும் நினைத்துப் பார்க்கவில்லை. இன்று அது நடப்பதற்கு ரசிகர்களாகிய நீங்கள்தாம் காரணம். நீங்கள் கொடுத்த வெற்றிதான்.
என்ன ரூபம் என்று தெரியாமலே, இந்த படத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளேன்.
படத்தின் இசையமைப்பாளர்கள் சங்கர் மகாதேவன், எஷான் மற்றும் லாஸ் ஆகியோருடன் நானும் இணைந்து இசையமைத்துள்ளேன். இந்த மூவரும் பல வருடங்கள் இணைந்து பணியாற்றி வருவது சாதனை. படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வழக்கம்போல் முக்கியப் பிரமுகர்களாக என் நண்பர்களை அழைப்பது போல், இந்த முறையும் முக்கியப் பிரமுகராக என் ரசிகர்களிலிருந்து ஒருவரைத் தேர்வு செய்துள்ளோம். பல திறமைகள் நிறைந்த பேட்மிண்ட்டன் விளையாட்டு வீரரான பத்ரிநாத்தைத் தேர்வு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
மேடையில் சங்கர் மகாதேவனுடன் இணைந்து, விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் மேடைக்கு வருவதற்கு முன்னர், அவரைப் பற்றி, அவரது நண்பரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியது:
கமல்ஹாசன் நடிப்பதோடு நின்று விடாமல், திரைக்கதை இயக்குநர், நடன இயக்குநர், இசையமைப்பாளர் என திரைத் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணிபுரியக் கூடிய சகலகலா வல்லவன். சிறந்த நகைச்சுவைத் திறன் உடையவர். தமிழின் மீது அவருக்குப் பிரியம் அதிகம்.
அதனால் கவிதை எழுதுவதிலும் சிறந்தவராக விளங்குகிறார். படத்துக்குப் படம் அவருடைய உழைப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிகச் சிரமத்துடன் சோதனைகளை, சாதனைகளாக மாற்றுவதில் அவருக்கு நிகர் அவரே. செய்யுளாக இருந்தாலும், கருத்துகளாக இருந்தாலும் ஒருமுறை கேட்டவுடன், அதை உடனடியாக மனதில் பதிய வைக்கும் ஆற்றல் கமல்ஹாசனிடம் அதிகம். வீட்டில் பெரிய நூலகத்தை வைத்திருக்கிறார். அந்த அளவுக்குப் புத்தகப் பிரியர்.
எங்கு சென்றாலும் இரண்டு புத்தகங்களை வாங்கும் பழக்கம் அவரிடமும், என்னிடமும் உண்டு. ஒன்று அவருக்கு மற்றொன்று எனக்கு. வட்டார வழக்கில் தமிழ் மொழியைச் மிகச் சிறப்பாக பேசக் கூடியவர் என்றார்.
படத்தின் நாயகிகள் பூஜா குமார், ஆன்ட்ரியா, இசையமைப்பாளர்கள் சங்கர் மகாதேவன், எஷான் மற்றும் லாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
யார் அந்த பத்ரிநாத்?
ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசத்தைக் கொடுப்பதைப்போல, விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் வித்தியாசமாக ஏற்பாடு செய்திருந்தார் கமல்ஹாசன். மதுரை, கோவை, சென்னை என ஒரேநாளில் 3 இடங்களில் விழாவை நடத்திய அவர், 3 இடங்களுக்கும் ஹெலிகாப்டரில் சென்றார்

.
இசை சி.டி.யை ஏதாவதொரு பிரபலம் பெற்றுக் கொள்வார் என்றிருந்தால், தனது ரசிகரும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரருமான பத்ரிநாத்தை தேர்வு செய்திருந்தார் கமல்ஹாசன்.
பல்வேறு நாடுகளில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வென்றுள்ளார். மேடை ஏறிச் சென்ற அவரை கமல்ஹாசன் கட்டி அணைத்து வரவேற்றார். விளையாட்டில் மேலும் பல வெற்றிகளைப் பெறுவதற்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.



http://www.deccanchr...icle/kamal-song (http://http://www.deccanchr...icle/kamal-song)


6http://www.deccanchronicle.com/121208/entertainment-kollywood/article/kamal-song (http://http://www.deccanchronicle.com/121208/entertainment-kollywood/article/kamal-song)-இங்கு கர்சரை கொண்டு செலுத்தி வலது பக்கம் சொடுக்கி தகவல் அறியவும்

Kamal Haasan and his two lead ladies Andrea Jeremiah and Pooja Kumar of his upcoming magnum opus 'Vishw*a*r*oopam' shared a light moment at the audio launch of the movie in the city on Friday.

Earlier in the day, the CD of songs was released in Ma*d*urai as well.

The actor, who arrived at Velammal Medical College Complex by helico*pter, said he was not aware of the Roopam (form) of the trilingual movie. “But we have shown all our skills in producing the film, reposing faith in you (fans). You should add greatness, pomp and grandeur to the film by seeing it,” he said.

Haasan also sang a song from the film along with Shankar Mahadevan at the function, during which the trailer was screened.

One of the actor's fans Badrinath, an alternatively-abled sportsman, accepted the first copy of the CD.


http://www.thehindu....icle4177403.ece (http:///www.thehindu....icle4177403.ece)இங்கு கர்சரை கொண்டு செலுத்தி வலது பக்கம் சொடுக்கி தகவல் அறியவும்