PDA

View Full Version : அடையாளமற்ற அம்மா



nandagopal.d
08-12-2012, 04:24 AM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS8pdsVOAbaB8gLL7X8hGmEGsIn-VkGbheUCiPIGqraJL2o-TKB

வீடு முழுவதும் நிரம்பி கிடக்கிறது
அதிகாரத்தின் கோப குரல்
பார்ப்பவர்கள் எல்லாம் பார்த்து சொல்லுகிறார்கள்
என் முகத்தில்
அப்பாவின் அடையாளத்தை,
பிடிக்காத
நான் கூட
அவரின் முதல் எழுத்தை பிடித்து கொண்டு
ஒவ்வொரு கையெப்பத்திலும்,
ஒரு உடைந்து நசிந்து போன
சைக்கிள்,செருப்பு, நாற்காலி,கைக்கடிகாரம்
இன்னும் கூட சொல்கிறது
அந்த அறை
அப்பாவின் அடையாளத்தை,
பொம்மையாக்கபட்ட
அம்மாவின் அடையாளத்தை
சொல்லி அழுகிறது
அடுப்படி இன்னும்........

கீதம்
08-12-2012, 05:18 AM
வீட்டைத்தாங்கும் அஸ்திவாரம் அவள்!
விருட்சம் தாங்கும் ஆணிவேர் அவள்!
அடுப்படியோடு நின்றுவிட்டாலும்
அடையாளங்களை இழந்துவிட்டாலும்
அன்றாடக் குடும்பநலனின்
அடிப்படையாய் அமைந்தவள் அவள்!
கரிபடர்ந்த முகத்திலும் தன்னில்லம் பற்றிய
கர்வம் சுமப்பவள் அவள்!
மூலையில் முடக்கப்பட்டாலும்
முன்னிலும் அதிகமாய்
முதுகிலே பாரம் சுமப்பவள்!

அத்தகையவள் அனுபவிக்கும் ஒரு அவல நிலையை ஆழ்ந்துணரவைக்கும் அருமையான வரிகள். பாராட்டுகள் நந்தகோபால் அவர்களே.

மஞ்சுபாஷிணி
08-12-2012, 07:57 AM
நந்தகோபால், கீதம் இருவரின் வரிகளும் அம்மாவின் தன்னலமில்லாத மனதை பறைசாற்றுகிறது..

இருவருக்குமே அன்பு வாழ்த்துகள்....